புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_lcap கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_voting_bar கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
 கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_lcap கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_voting_bar கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
 கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_lcap கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_voting_bar கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
 கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_lcap கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_voting_bar கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_lcap கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_voting_bar கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
 கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_lcap கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_voting_bar கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
 கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_lcap கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_voting_bar கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
 கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_lcap கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_voting_bar கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 18, 2016 5:14 pm

 கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் ! XhkwNL6GTbOn8jBPVYmy+12
-
ரொம்ப காலமாய் நம் பாக்கெட்டுக்கு பழுதில்லாமல்
பலசரக்கு விற்ற அண்ணாச்சி தான்...
இப்போது முன்னேறி சூப்பர் மார்க்கெட் வைத்து
விட்டார்.

‘உள்ளே போகலாமா? வேண்டாமா?’ - இதுதான் கூகுள்
விசிறிகளின் இன்றைய இன்றியமையா கேள்வி.
‘ஹார்டுவேரும் நானே சாஃப்ட்வேரும் நானே’ என ஆரம்பம்
முதலே அடம் பிடிக்கும் ஆப்பிளுக்கு போட்டியாக, பல்வேறு
ஹார்டுவேர் நிறுவனங்களுடன் கைகோர்த்து தனது
ஆண்ட்ராய்டை முன்னேற்றியது கூகுள்.

இப்போது அதே கூகுள் ஆப்பிள் வழிக்கே திரும்பி முழுக்க
முழுக்க தனது தயாரிப்பாக வெளியிட்டிருக்கும் போன்,
‘பிக்சல்’. இந்த போனின் விலை, நம்மூர் மதிப்பில் சுமார்
60 ஆயிரம் ரூபாய். சமீபத்திய ஆப்பிள் 7 மற்றும் 7 ப்ளஸ்களுக்கு
கொஞ்சமும் குறைவில்லா ரேட்!

‘அட, ஆண்ட்ராய்டின் சிறப்பம்சமே விலைதானே.
ஆப்பிள் சீன் பார்ட்டிகளுக்கு மத்தியில் ஏழைக்கு ஏற்ற இலந்தைப்
பழமாக இருந்தது அதுதானே’ என டென்ஷன் ஆகாதீர்கள்.
விலைக்கு ஏற்ற விஷயத்தை இதில் வைத்திருக்கிறது கூகுள்.
பல நாட்களாக பரிசோதித்து உருவாக்கப்பட்ட கூகுளின் செயற்கை
நுண்ணறிவு முதன்முதலாக இந்த போனில்தான் ஊட்டப்
பட்டிருக்கிறது.

‘ஓகே கூகுள்’ என்ற ஒற்றை மந்திரம்தான்... அதைச் சொல்லி
இந்த போனை வைத்து நீங்கள் எதையும் செய்யலாம்.

வெறும் இணையத் தேடல் மட்டுமில்லாமல், இந்த கூகுள்
அசிஸ்டன்ஸ் நமது அன்றாடப் பணிகளை ஒரு மேனேஜர் போல
நினைவுறுத்தும், குரல் கட்டளையை வைத்தே புகைப்படங்களைத்
தேடும், நம் பயணத் தடங்களை பதிவு செய்து வைக்கும்,
மொழிபெயர்ப்பைக் கூட மில்லி செகண்டில் தரும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 18, 2016 5:15 pm


சரி, வேறென்ன பிக்சலில் ஸ்பெஷல்? சந்தேகமில்லாமல் கேமரா.
‘உலகில் இதுவரை வந்த செல்போன் கேமராக்களிலேயே இதுதான்
பெஸ்ட்’ என சத்தியம் செய்கிறது கூகுள்.
இதுவரை நாம் மெகா பிக்சல்களை வைத்துதானே கேமராவை தரம்
பிரித்தோம்.

அதை மாற்றிவிட்டது கூகுள். ‘எங்கள் கேமரா 12.3 மெகா பிக்சல்தான்.
ஆனால், ஒவ்வொரு பிக்சலும் 1.55 மைக்ரோமீட்டர் அளவு கொண்டது.
அதனால் எந்த வெளிச்சத்திலும் இது சிறந்த போட்டோவைத் தரும்’
என்கிறது கூகுள்.

இனி போன் வாங்கும் போது பிக்சல்களின் அளவையும் பரிசோதிக்கத்
தொடங்கிவிடும் யூத் வர்க்கம். பிக்சல், பிக்சல் எக்ஸ்.எல் என இரண்டு
அளவுகளில் இந்த போன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த போன்களுடன் தனது கிளவுட் நினைவகத்தையும் இணைத்து,
வரம்பில்லாமல் தகவல் சேமித்துக்கொள்ள வழி செய்திருக்கிறது
கூகுள்.

ஏற்கனவே எல்.ஜி., சாம்சங் என ஏதாவது ஒரு கம்பெனியுடன் இணைந்து
தனது நெக்சஸ் போன்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தது
கூகுள். அதையே மேம்படுத்தி இந்த வசதிகளைக் கொடுத்திருக்கலாம்.
எதற்காக முழு முதலாய் இப்படி ஒரு புதிய போன்?

எல்லாம் ஆப்பிளாக மாறிவிடும் ஆசைதான். கூகுள் எப்போதும்
பி, சி ஆடியன்ஸை திருப்திப்படுத்தி வசூலை அள்ளிக் கொண்டிருந்தாலும்,
ஆப்பிள் தன் இடத்தில் இருந்து இறங்கி வரவே இல்லை.

அது தன் வாடிக்கையாளர்களையும் இழக்கவில்லை. மாறாக,
ஆண்ட்ராய்டு பயன்படுத்திப் பழகியவர்கள் அடுத்த கட்ட கெத்து தேடி
ஆப்பிளிடமே சரணடைகிறார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 18, 2016 5:15 pm


‘என்ன பெரிய ஆண்ட்ராய்டு... 3 ஆயிரம் போன்ல கூடத்தான்
அது இருக்கு’ என்ற இமேஜ், கூகுளுக்கு பெரும்தடை. கடைசி வரை
மேல்தட்டு பீட்டர்களை தான் கவராமலே போய்விடுவோமோ என்ற
கூகுளின் கவலைக்கு விடைதான் பிக்சல்.

ஆப்பிள் 7 வெளியாகட்டும் என பதுங்கிப் பாய்ந்திருப்பதிலேயே இந்த
நோக்கம் வெட்ட வெளிச்சம். இனி அடுத்த ஏழெட்டு மாதத்துக்கு ஆப்பிளிடம்
அப்டேட் இருக்காது. அதுவரை மார்க்கெட்டின் சிறந்த போன் பிக்சல்தான்.
இதுதான் கூகுள் வைத்த குறி.

இதுநாள் வரை கூகுள் சம்பாதித்து வைத்திருந்த ரசிகர்கள்,
இப்போது செம கடுப்பில் இருக்கிறார்கள். காரணம், காலம் காலமாய்
ஆண்ட்ராய்டின் புதிய பதிப்புகளை அள்ளி வந்த நெக்ஸஸ் போன்கள்
இனி அவ்வளவு தான் என்ற நிஜம். ஓரளவு நடுத்தர பட்ஜெட் போனான
நெக்ஸஸை கைவிட்டுத்தான் பிக்சலைக் கையில் எடுத்திருக்கிறது
கூகுள் என்கிறார்கள்.

‘இனி நெக்ஸஸ் போன்கள் இரண்டாம் பட்சமாகிவிடுமே...
வழக்கமான அப்டேட்கள் கிடைக்காதே... மாற்றாந்தாய்
மனப்பான்மையுடன்தானே கூகுள் அதைப் பார்க்கும்...’ இப்படிப்பட்ட
கடுப்புகள் அவர்களிடம்.

ஆனால், கூகுள் இது பற்றி அலட்டிக்கொண்டதாய் தெரியவில்லை.
தனது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஆப்பிள் வாடிக்கையாளர்கள்
அளவுக்கு தரம் உயர்ந்துவிட்டதாகவே அது உறுதியாக நம்புகிறது.
குறிப்பாக, இந்தியர்கள். ஆப்பிள் ஐபோன் 7க்கு இந்தியாவில் குவிந்த
ஆர்டர்களைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறது கூகுள்.

அதனாலேயே பிக்சல் முதல் கட்டமாக வெளியிடப்படும் முக்கிய நாடுகள்
பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

அவ்வளவு ஏன், உலகத்துக்கே ‘இதுதான் பிக்சல்’ எனக் காட்டும்
விளக்கப்படத்தில் கூட, ‘மும்பையில் இன்று வானிலை எப்படி?’
என கூகுள் அசிஸ்டன்ஸிடம் கேள்வி கேட்பது போலத்தான் டெமோ
காட்டப்படுகிறது. ஆக, ‘இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டது.
அதற்கு ஏற்ப நாமும் உயர வேண்டும்’ என நினைத்து இறங்குகிறது கூகுள்.

இது நிஜமான கணிப்பா இல்லை மத்திய, மாநில அரசுகளின் தம்பட்டத்தை
கூகுள் நம்பி மோசம் போகிறதா என்பது பிக்சலின் வெற்றி, தோல்வியில்
தெரிந்துவிடும்.
-
---------------------------------------------------
- அற்சிரன்
குங்குமம்

Pasupathi_K
Pasupathi_K
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 28/10/2016

PostPasupathi_K Wed Nov 23, 2016 10:11 pm

அருமையான பதிவு... நன்றி ஐயா... உலக அரசியலையும் (ஆப்பிள் 7 வெளியாகட்டும் என பதுங்கிப் பாய்ந்திருப்பதிலேயே இந்த நோக்கம் வெட்ட வெளிச்சம்) உள்ளூர் அரசியலையும் (மத்திய, மாநில அரசுகளின் தம்பட்டத்தை கூகுள் நம்பி மோசம் போகிறதா என்பது பிக்சலின் வெற்றி, தோல்வியில் தெரிந்துவிடும்) கலந்த பதிவு... எந்த அரசியலாக இருந்தாலும் அடிபட போவது சாமானியன் தான்...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக