புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
120 Posts - 76%
heezulia
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
285 Posts - 77%
heezulia
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_lcap.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_voting_bar.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

. திருமந்திரம் என்னும் தேன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri 16 Sep 2016 - 17:38

First topic message reminder :

தெரிந்துகொள்வோம்  தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்)

ஓர் அறிமுகம்:

திருமந்திரம் என்னும்  நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு  யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம்.  அந்த யோகமும் ஞானமும்  பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும்  ஆக்கும் வகையில்  அமைக்கப்படுவதே, “தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -  திருமந்திரம் என்னும் தேன்” என்னும்  ஈகரை தமிழ் களஞ்சியப் பதிவு.  

திருமந்திரம் – ஒரு யோகமும் ஞானமும் நவிலும் நற்றமிழ் காவியம் என்பதே நமது நோக்கம். இந்நோக்கம் சைவ பக்திக்கு   மாறானதோ   அல்லது எதிரானதோ அல்ல. திருமந்திரம் பக்தி மார்க்கத்தைக் கூறுவது என்பது ஒருவழி – அதுவே ஞானமும் யோகமும் ஆகிறது என்பது  நமது இன்னுமொரு பார்வைப் பரிமாணமாகும்  பிறிதொரு வழி என்றே கொள்ளவேண்டும். இதனை நவில்தொரும் நூல் நயம் என்றும் கொள்ளலாம். தோண்டச் சுரக்கும் மணற்கேணிதான் நம் உலகப் பொதுமறை திருமந்திரம்- தமிழ்மறை
திருக்குறள் போலவே.

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சாரம் உபநிஷதங்கள் எனப்படும் வேதாந்தம். உபநிஷத்களின் சாரம் பிரம்ம சூத்திரம் எனப்படும் வேதாந்த சூத்திரம்( வியாசர் அருளியது) . பிரம்ம சூத்திரத்தின் சாரம் ஸ்ரீமத் பகவத் கீதை ( இதுவும் வியாசர் அருளியது) . பகவத் கீதையின் சாரம்தான் திருமந்திரம் என்னும் தேன் என்பது யோகியர் வாக்கு. இது மானுடத்திற்கு ஞானமும் யோகமும் புகட்டி மேன்மைப் படுத்தும் ஓர் அற்புதம்.


சைவ சமயத்திற்குத் திருமந்திரம் பக்தி நூலாக இருந்து சைவபக்தியை ஊட்டி வளர்க்கட்டும். கூடவே உலக மக்கள் யாவருக்கும் - ஜாதி, மதம், மொழி, இனம், நாடு மற்றும் கலாச்சரம் ஆகியனவற்றை எல்லாம் கடந்த -  அவரவர் உடம்பு, உயிர், மனம் மற்றும் ஆன்மாவை மேம்படுத்தும் யோக நூலாகவும் இருக்கட்டுமே. உலக மக்கள் யாவருக்கும் பயனளிப்பது நன்மை தானே!

உலக மானுடம் யாவையும் பிறப்பு, இறப்பு, உடம்பு, உயிர், மனம் ஆகிய ஐந்தாலும் ஒன்று படுகின்றது. அதுவே நாடு, மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய ஐந்தாலும் வேறுபட்டு வீணாகிறது. நாம் இந்த பதிவின் மூலம்  ஒன்றுபடும் ஐந்தையும் அறிந்துகொண்டு, அவற்றை மேன்மைப்படுத்தும் நெறியையும் திருமந்திரத்தில் கிடைக்கக் கண்டு , அவற்றை முயன்றுப் பயின்று - பழகி மேன்மையை  அடைவோம். அதன்  விளைவாக “வாழும்போதும் இன்பம் – வாழ்விற்குப் பிறகும் இன்பம்” பெறுவோம்.

மானுட உலகம் , ஒற்றுமை நீங்கி தாழ்ச்சியை அடையாமல், திருமந்திரம் புகட்டும் மானுட ஞானத்தால்- யோகத்தால், யாவரும்  ஒன்றுபடுவோம் – உயர்வடைவோம். ஆத்மஞானம் அறிந்து அனைவரும் அமரனாக ஆகுவோம்.


பரம்பொருளே ! உலக மானுடத்தை:

“ அழிவிலிருந்து அழியாமைக்கு அழைத்துச் செல் . . .

அஞ்ஞானமாகிய இருளில் இருந்து அறிவுடைமை என்னும் ஒளியைநோக்கி அழைத்துச் செல் . . .

மாயை என்னும்   மயக்கத்திலிருந்து  உண்மை  என்னும்     தெளிவிற்கு அழைத்துச் செல்  . . .”
- சாந்தோக்கிய உபநிஷத் .



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri 23 Sep 2016 - 23:41

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .

351. தினம் தினம் திருமந்திரம் – 09.09.2016
மூன்றாம் தந்திரம் – கலைநிலை - திருமந்திரம் – 713.

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே

பதப்பொருள் :

காத்தல் – பாதுகாத்தல் ; விலக்குதல்;

கரணம் நான்கு – ஜீவாத்மனின் துய்த்தலுக்குக் கருவியாக வினைப்படும் உடம்பு, உயிர், மனம், நான்-
எனது என்னும் ஆணவமாகும் அந்தக்கரணங்கள் நான்கு.

கலை – சுத்த தத்துவம் எனப்படும் பரமாத்மா;

பதினாறு – புருவ மத்தி என்னும் நெற்றிப்பொட்டில் விளங்கும் சித்ரிணி, தந்திரிணி , வஜ்ரிணி, அபூர்விணி என்னும் அமிர்தகலை நாடிகளில் விளங்கும் 16 தத்துவங்கள்.

கலத்தல் – ஒன்றோடொன்று சேர்தல்.

வாயு – பிராணாயாம சுவாசக்காற்று.

கருத்து – விவேகம் > ஞானம் >ஆத்மா.

உற – அடைய; கிடைக்க; கிட்ட.

நில் – நிலை நிற்றல்.

அடிதோறும் பொருளுரை:

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
- மானுட தேகத்தை இருப்பிடமாகக்கொண்டு ஜீவாத்மனின் துய்த்தலுக்குக் கருவியாக வினைப்படும் உடம்பு, உயிர்,மனம் மற்றும் நான்-எனது என்னும் ஆணவம் எனப்படும் அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களையும் நீக்கவேண்டும்.

காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
- புருவ மத்தி என்னும் நெற்றிப்பொட்டில் விளங்கும் - அமிர்த ரசத்தைச் சுரப்பிக்கும் - சித்ரிணி, தந்திரிணி , வஜ்ரிணி, அபூர்விணி ஆகிய அமைர்தகலை நாடிகளில் விளங்கும் 16 தத்துவங்களும் போற்றி வளர்க்கப்படவேண்டும்.


காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
- அதுபோலவே இடகலை , பிங்கலை சுவாசங்களும் பிராணாயாம சாதகத்தால் அவைகளுக்குக் குறைவு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு அக்னிகலையில் அவற்றைக் கலக்கவிட வேண்டும்.

காக்கலு மாகுங் கருத்துற நில்லே
- இவை அனைத்தையும் பிறவாநிலை நோக்கிய ஆத்ம வளர்ச்சிக்காகும் சாதனைகள் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து நிறைவேற்றுதல் வேண்டும்.



தெளிவுரை :

மானுட தேகத்தை இருப்பிடமாகக்கொண்டு ஜீவாத்மனின் துய்த்தலுக்குக் கருவியாக வினைப்படும் உடம்பு, உயிர்,மனம் மற்றும் நான்-எனது என்னும் ஆணவம் எனப்படும் அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களையும் நீக்கவேண்டும்.

புருவ மத்தி என்னும் நெற்றிப்பொட்டில் விளங்கும் - அமிர்த ரசத்தைச் சுரப்பிக்கும் - சித்ரிணி, தந்திரிணி , வஜ்ரிணி, அபூர்விணி ஆகிய அமைர்தகலை நாடிகளில் விளங்கும் 16 தத்துவங்களும் போற்றி வளர்க்கப்படவேண்டும்.

அதுபோலவே இடகலை, பிங்கலை சுவாசங்களும் பிராணாயாம சாதகத்தால் அவைகளுக்குக் குறைவு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு அக்னிகலையில் அவற்றைக் கலக்கவிட வேண்டும்.

இவையெல்லாம் பிறவாநிலை நோக்கிய ஆத்ம வளர்ச்சிக்காகும் சாதனைகள் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து நிறைவேற்றுதல் வேண்டும்.


விளக்கவுரை :

ரிக் வேத ஐத்ரேய உபநிஷத், சாம வேத சாந்தோக்கிய உபநிஷத், அதர்வண வேத ப்ரஸ்னோபநிஷத் ஆகியவற்றில் புருஷன் எனப்படும் ஆத்மா பதினாறு கலைகளை உடையவன் எனப்படுகிறது. ஐத்ரேய உபநிஷத் மூன்றாவது அத்தியாயம் இரண்டாவது மந்திரத்தில் (ஐத்ரேய உபநிஷத் 3.2) இந்த பதினாறு கலைகள் என்னென்ன என்பதும் சொல்லப்பட்டுள்ளன. மொத்தத்தில் பிரபஞ்சத்தில் 16 கலைகள் தான் உள்ளனவா - ஆத்மாவிடம் இல்லாத கலைகள் என வேறு எவையேனும் உள்ளனவா என்பன போன்ற ஐயங்களுக்குத் தீர்வு காண இயலவில்லை. கலைகள் அனைத்துமே பரம்பொருளாகும் போது, அதற்கென்று தனியான கலைகள் இருக்க முடியுமா என்பதும் ஒரு ஐயம்!

எதுவாகவும் இருக்கட்டும். நமது இந்த திருமந்திரப்பாடலுக்கும் அங்கே சொல்லப்படும் 16 கலைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் இது வாலறிவாகிய யோகம். அது மூதறிவாகிய ஞானம் . வாலறிவு என்பது மூதறிவினும் முதிர்ந்தது. ஆகையால் இங்கு வாலறிவாகிய யோகரீதியிலாகும் 16 தத்துவங்களே எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதை நாம் சிந்திக்கலாம்




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat 24 Sep 2016 - 11:56


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .

மூன்றாம் தந்திரம் – தியானம் -திருமந்திரம் - 603.

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

பதப்பொருள்:

கண்- அறிவு; ஞானம்.
ஒளி – அறிவுத்தெளிவு
நாடி – ஊன்; உடம்பு.

பதவுரை:

எண்ணா யிரத்தாண்டு – எண்ணிக்கையில் அடங்காத வகையில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ;
யோகம் இருக்கினும் – பல்வேறு வகையில் (கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், இராஜயோகம்
- இங்கு இராஜயோகம் என்பது தியானம் மற்றும் சமாதிசாதகம் தவிர்த்தவர்கள்
என்று பொருளில் கொள்ளவேண்டும் )என்னும் எந்தமாதிரியான தவ
ஒழுகலாறுகளை மேற்கொண்டு பழகினாலும்;
கண்ணார் அமுதினை – அறிவே வடிவான அமுதமாகிய நிலைத்தன்மையை உடைய பரம்பொருளை;
கண்டறி வாரில்லை - தம் சாதாரண அறிவால் உணர்ந்து தெளியக் கூடியவர்கள் எவரும் இருக்க முடியாது.
உள்நாடிக் குள்ளே – ஆனால் இந்த மானுட உடம்பிற்குள்ளாக;
ஒளியுற நோக்கினால் – அறிவுத் தெளிவுகொண்டு பார்த்தால் (தியான சாதகத்தில் காணமுயன்றால் ),
கண்ணாடி போலக் கலந்துநின் றானே- கண்ணாடி முன் வைக்கப்பட்டிருக்கும் பொருளின் பிம்பம் போல
இந்த மானுட உடலில் அப்பரம்பொருள் கலந்து இருப்பதை தியான சாதகர்கள் உணரலாம்.

தெளிவுரை:

எண்ணிக்கையில் அடங்காத வகையில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பல்வேறு வகையில் (கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், இராஜயோகம் - இங்கு இராஜயோகம் என்பது தியானம் மற்றும் சமாதிசாதகம் தவிர்த்தவர்கள் என்று பொருளில் கொள்ளவேண்டும்) என்னும் எந்தமாதிரியான தவ ஒழுகலாறுகளை மேற்கொண்டு பழகினாலும் , அறிவே வடிவான அமுதமாகிய நிலைத்தன்மையை உடைய பரம்பொருளைத் தம் சாதாரணமான அறிவால் உணர்ந்து தெளியக் கூடியவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் இந்த மானுட உடம்பிற்குள்ளாக அறிவுத் தெளிவுகொண்டு பார்த்தால் (தியான சாதகத்தில் காணமுயன்றால் ), கண்ணாடி முன் வைக்கப்பட்டிருக்கும் பொருளின் பிம்பம் போல இந்த மானுட உடலில் அப்பரம்பொருள் கலந்து இருப்பதை தியான சாதகர்கள் நன்கு உணரலாம் என்பது பொருள்.

“ஊனுக்குள் நீ நின்று உளவினதை அறியாமல்
கானம் மலை கடந்து கால் அலுத்தேன் பூரணமே - பட்டினத்தார் பாடல்” ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat 1 Oct 2016 - 18:00


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .

தினம் தினம் திருமந்திரம்
மூன்றாம் தந்திரம் – கலைநிலை - திருமந்திரம் – 714.

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியிது வாமே.

பதப்பொருள்:

நிலை - உறுதி
பெறுதல் -அடைதல்
நிற்றல் -அமைதல்
நேர்- உடன்பாடு.
தருதல் – கொடை; கொடுத்தல்.
சிலை -ஒளி
தீபம் –விளக்கு.
ஒத்தல் –ஒற்றுமைப்படுதல்.
கலை –அறிவு; கல்வி.
வழி –நெறி; ஒழுக்கம்; காரணம்.
கலப்பு – சேர்ப்பு; நன்மைதருதல்.
மலை – ஈட்டம்; மிகுதி.
வறவு – அமைதியாதல்.

அடிதோறும் பொருளுரை :

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
- பிராணாயாம சாதகத்தினால் சுவாசம் சீராகி சுவாசித்த காற்று உறுதித் தன்மை பூண்டு நன்மை பயப்பதாக ஆகி ஜீவாத்மாவின் முன்னேற்றத்திற்கு உடன்படுகிறது;

சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
- அதன் விளைவாக ஜீவாத்மாவும் அத்தகைய சுவாசக் காற்றுடன் ஒற்றுமைப்பட்டு விளக்கம் பெறுகிறது.

கலைவழி நின்ற கலப்பை அறியில்
- அவ்வாறாகிய ஜீவாத்மா என்னும் அறிவு அவ்வொற்றுமையால் ஆத்ம விடுதலையாகிய நன்மையை அடைகிறது.

மலைவற வாகும் வழியிது வாமே
- ஜீவாத்மனின் மிகுதியான சுக துக்கங்களுக்கு அமைதிகாணும் வழி இத்தகைய பிரணாயமம் என்பது தான்

தெளிவுரை:

பிராணாயாம சாதகத்தினால் சுவாசம் சீராகி சுவாசித்த காற்று உறுதித் தன்மை பூண்டு நன்மை பயப்பதாக ஆகி ஜீவாத்மாவின் முன்னேற்றத்திற்கு உடன்படுகிறது;
அதன் விளைவாக ஜீவாத்மாவும் அத்தகைய சுவாசக் காற்றுடன் ஒற்றுமைப்பட்டு விளக்கம் பெறுகிறது.
அவ்வாறாகிய ஜீவாத்மா என்னும் அறிவு அவ்வொற்றுமையால் ஆத்ம விடுதலையாகிய நன்மையை அடைகிறது.
ஜீவாத்மனின் மிகுதியான சுக துக்கங்களுக்கு அமைதிகாணும் வழி இத்தகைய பிரணாயமம் என்பது தான்.

விளக்கவுரை :

ஜீவாத்மனின் சுகதுக்கங்களுக்கு வடிகாலாகி அது அமைதி என்னும் பிறவாநிலையை அடைய பிராணாயாமமே சரியான பாதை என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun 2 Oct 2016 - 15:14

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .
இரண்டாம் தந்திரம் – மறைத்தல் – திருமந்திரம் .440.

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.

பதப்பொருள்:

கலம் – பாத்திரம்
யோனி - பிறவி; காரணம்.

அடிதோறும் பொருளுரை :

மண் ஒன்றுதான் பல நற்கலம் ஆயிடும்

- எல்லா பாத்திரங்களும் மண் என்ற ஒரே மூலப்பொருளாலேயே செய்யப்படுகின்றன;

உள் நின்ற யோனிகளுக்கு எல்லாம் ஒருவனே

- உயிரனங்களாகிய எல்லா பிறவிகளுக்கும் அவற்றின் உள்ளே இருந்து சுக துக்கங்களை அனுபவிப்பது ஜீவாத்மா என்னும் ஒரே பரம்பொருளின் அம்சமே.

கண் ஒன்றுதான் பல காணும் தனைக்காணா

- காணப்படும் காட்சிகள் பலவாக இருப்பினும் அவற்றைக் காணும் கண்கள் தம்மையே தாம் காண்பதில்லை.

அண்ணலும் இவ்வண்ணம் ஆகி நின்றானே

- அவைபோலவே என்வாழ்வில் சுவைக்கும் இன்பம்-துன்பம் ; உயர்வு-தாழ்வு; காட்சி-மறைவு; ஆகிய எல்லாவற்றிலும் எனக்கு என் ஸ்ரீகுருதேவரே தென்படுகிறார். வேறு பிற எதனையும் தான் அறிவதில்லையே.

தெளிவுரை:

எல்லா பாத்திரங்களும் மண் என்ற ஒரே மூலப்பொருளாலேயே செய்யப்படுகின்றன; உயிரனங்களாகிய எல்லா பிறவிகளுக்கும் அவற்றின் உள்ளே இருந்து சுக துக்கங்களை அனுபவிப்பது ஜீவாத்மா என்னும் ஒரே பரம்பொருளின் அம்சமே. காணப்படும் காட்சிகள் பலவாக இருப்பினும் அவற்றைக் காணும் கண்கள் தம்மையே தாம் காண்பதில்லை. அவைபோலவே என்வாழ்வில் சுவைக்கும் இன்பம்-துன்பம் ; உயர்வு-தாழ்வு; காட்சி-மறைவு; ஆகிய எல்லாவற்றிலும் எனக்கு என் ஸ்ரீகுருதேவரே தென்படுகிறார் வேறு பிற எதனையும் தான் அறிவதில்லையே.

விளக்கவுரை :

திருமூலருக்கு உலகில் அனைத்துக் ஸ்ரீ குருதேவரே ஆகிறார்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue 4 Oct 2016 - 8:48


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)

மூன்றாம் தந்திரம் – இயமம் – திருமந்திரம் 554

இயமம் (அஷ்டாங்க யோகத்தின் முதல் நிலை)

கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே


பதப்பொருள்:

1.கொல்லான் –வருத்தம்; பிற உயிர்களைச் சிந்தனை, சொல், மற்றும் செயல்களால் வருத்தாமல் இருப்பவன்.
2.பொய் கூறான்- உண்மையல்லாதது ; உண்மை அல்லாததைக் கூறாதவன்.
3.களவிலான் களவு- திருட்டு; வஞ்சனை- கள்ளவொழுக்கத்தில் ஈடுபடாதவன்.
4.எண்குணன் – ஆடம்பரமில்லாத எளிமையோடு கூடிய குணநலன்களைக் கொண்டவனாய் இருப்பவன்.
5.நல்லான் – அனைவரும் மகிழும் வகையில் நல்லவனாக இருப்பவன்.
6.அடக்க முடையான் – எல்லோரிடத்திலும் பணிவுடையவனாக இருப்பவன்.
7.நடுச்செய்ய வல்லான் – எப்போதும் நடுவுநிலைமையோடு இருப்பவன்.
8.பகுந்துண்பான்- தன்னிடம் இருப்பதை முடிந்தவரை அனைவருக்கும் கொடுத்து வாழ்பவன்.
9.மாசிலான் – எதிலும் எப்போதும் குற்றமற்றவைகளையே செய்பவன்.
10.கள் இல்லான் – மதுப்பழக்கம் இல்லாதவன்.
11. காமம் இல்லான்- பேராசை இல்லாதவன்.
இயமத் திடையில்நின் றானே – ஆகிய நெறிகளில் வாழ்பவன் இராஜ யோக நெறியில் முதலாவதாகும் இயமத்தைக் கடைப் பிடிப்பவன் ஆகிறான்.

விளக்கவுரை:

ஆத்மவித்யா எனப்படும் அஷ்டாங்க யோகத்தைக் கற்க விழைபவர்கள் மேற்கண்ட 11 பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும் . இவைகளே இயம நெறிகளாவன எனப்படுகின்றன்.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed 5 Oct 2016 - 21:09


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)

மூன்றாம் தந்திரம் – இயமம் – திருமந்திரம் 553.

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே"

பதப்பொருள் :

எழுதல் – மிகுதல்.
நீர் – மழைநீர்; வெள்ளம்> பிரளயம்> அழிவு.
பெய்தல் – பொழிதல்.
எட்டு திசை - எல்லாதிசைகளிலும்.
கொழுந்தன் – அன்புமிக்கவன்; அளியன்.
பவளம் – செம்மை ; சூரியன்.
குளிர் – குளுமை; சந்திரன்.
சடை – கடவுள்.
அழுத்துதல் – சேர்ந்திருத்தல்.
நால்வர் - நந்தியடிகளின் சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகமாமுனி , திருமூலர் ஆகியோர்.

அடிதோறும் பொருளுரை:

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
- எல்லாப் பக்கங்களிலும் இருந்தும் அழிவு தொடர்ந்து ஏற்பட்டாலும்;

செழுந்தண் நியமங்கள் செய்மிந் என்று அண்ணல்
- நன்மைதரக்கூடியதும் உயர்வானதும் ஆகிய நற்செய்கை என்படும் இராஜயோக நெறிகளைத் தவறாமல் செய்து கொண்டிருங்கள் என்று என் ஸ்ரீகுருதேவர்;

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
- மிக்க அன்புடையவரும் சூரியனைப்போன்று ஞானப்பிரகாசமும், சந்திரன் போன்ற இனிமையான தண்மையைக் கொடுப்பவரும் பரம்பொருளே ஆகுபவருமானவருடன்;

அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே
- சேர்ந்து இருந்து ஞானபோதனையைக் கற்ற சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோக மாமுனி , திருமூலர் ஆகியோருக்கு தன்னுடைய அருளால் இராஜயோக வித்தையைக் கற்பித்தார்.

தெளிவுரை:

எல்லாப் பக்கங்களிலும் இருந்து பல்வகையான இன்னல்களுடன் கூடிய அழிவு தொடர்ந்து ஏற்பட்டாலும்;

நன்மையைத் தரக்கூடியதும் உயர்வானதும் ஆகிய நற்செய்கை என்படும் இராஜயோக நெறிகளைத் தவறாமல் செய்து கொண்டிருங்கள் என்று என் ஸ்ரீகுருதேவராகிய நந்தியடிகள்;

அனைவரிடமும் மிக்க அன்புடையவரும் சூரியனைப்போன்று ஞானப்பிரகாசமும், சந்திரன் போன்ற இனிமையான தண்மையைக் கொண்டவரும் பரம்பொருளேஆகுபவராகும் அவர் தன்னுடன்;

சேர்ந்து இருந்த சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோக மாமுனி , திருமூலர் ஆகியோருக்கு தன்னுடைய அருளால் இராஜயோக வித்தையைக் கற்பித்தார்.

விளக்கவுரை :

எத்துணை இடர் வரினும் இராஜயோகம் என்னும் ஆத்ம வித்யா தொடர்ந்து பழகப்பட வேண்டிய ஓர் அற்புத ஞானம் என்று குருதேவராகிய நந்தியடிகள் அவரது மலரடி பணிந்து எந்நாளும் உடனேயே இருந்து ஞானம் பயின்ற சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகமாமுனி , திருமூலர் ஆகிய நால்வருக்கும் தன்னுடைய அருளால் இராஜயோக வித்தையைக் கற்பித்தார் என்பது பொருள்.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu 6 Oct 2016 - 10:56

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)
மூன்றாம் தந்திரம் – சிவவேடம் – திருமந்திரம் 552

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே

பதப்பொருள் :

1.இயமம்- தீயன மனத்தால் சிந்தியாமை;

2.நியமம் – தீயன சொல்லாலும், செயலாலும் செய்யாமை;

3.ஆதனம் > ஆசனம் – உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் (இருப்பில்) குறிப்பிட்ட நேரம் வைத்திருத்தல்;

4,பிராணாயாமம்- சுவாசங்களை உள்ளிழுத்தல், வெளித்தள்ளுதல், உள்ளும் புறமும் நிறுத்திவைத்தலின் நெறிமுறை;

5.பிரத்தியாகரம் – ஏதாவது ஓர் உருவப் பொருளின் மீது மனதை நிலைநிறுத்த முயற்சித்தல்;

6.தாரணை - அதே பொருளை மட்டுமே மனதில் 12 நொடிப்பொழுது நிறுத்தி நிலைபெறச்செய்தல்;

7.தியானம் – தாரணைக்காலத்தில் மனதில் நிறுத்திய அதே பொருளை 12 தாரணைக்காலம்  தொடர்ந்து
மனதில்   நிலைக்கவைத்தல் (அதாவது   12 x 12  நொடிகள் = 2 நிமிடம், 24 நொடி நேரம்)

8.சமாதி – தியான காலத்தில் மனதில் நிறுத்திய அதே பொருளை 12 தியான காலம்  தொடர்ந்து மனதில்
  நிலைக்கவைத்தல் (அதாவது   12 x 12 x 12 நொடிகள் =  28நிமிடம், 48நொடி நேரம்)

நயம் - இன்பம்; மேன்மை; போற்றுகை;   நற்பயன்.
சயம் – வெற்றி.
அயம் – நல்வினை.
அட்டாங்கம் – எட்டுநிலைக் கல்வி, இராஜயோகக் கல்வி

அடிதோறும் பொருளுரை :

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
- இயம நியமம் என்னும் அடிபடை ஒழுகலாறுகளோடு கணக்கில் அடங்காத ஆசனநிலைகள்;

நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
- நன்மையைத் தரக்கூடிய  பிராணாயாமம், பிரத்தியாகாரம் போன்றவைகள்;

சயமிகு தாரணை தியானஞ் சமாதி
- ஆத்ம முன்னேற்றத்தில் வெற்றியைத் தரக்கூடிய  தாரணை, தியானம், மற்றும் சமாதி சாதகம்  ஆகையவைகள் கூடிய எட்டு நிலைகளும்

அயமுறும் அட்டாங்க மாவது மாமே
- நற்செய்கை என்னும் அஷ்டாங்க யோகம்  எனப்படுவன.

தெளிவுரை :

இயமம் நியமம் என்னும் அடிபடை ஒழுகலாறுகளோடு கணக்கில் அடங்காத ஆசனநிலைகள்;
நன்மையைத் தரக்கூடிய  பிராணாயாமம், பிரத்தியாகாரம் போன்றவைகள்;
ஆத்மமுன்னேற்றத்தில் வெற்றியைத் தரக்கூடிய  தாரணை, தியானம், மற்றும் சமாதி சாதகம்  ஆகையவைகள் கூடிய எட்டு நிலைகளும் நற்செய்கை என்னும் அஷ்டாங்க யோகம்  எனப்படுவன.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon 10 Oct 2016 - 8:35

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)
மூன்றாம் தந்திரம் – இயமம் – திருமந்திரம் 553.

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே"

பதப்பொருள் :
எழுதல் – மிகுதல்.
நீர் – மழைநீர்; வெள்ளம்> பிரளயம்> அழிவு.
பெய்தல் – பொழிதல்.
எட்டு திசை - எல்லாதிசைகளிலும்.
கொழுந்தன் – அன்புமிக்கவன்; அளியன்.
பவளம் – செம்மை ; சூரியன்.
குளிர் – குளுமை; சந்திரன்.
சடை – கடவுள்.
அழுத்துதல் – சேர்ந்திருத்தல்.
நால்வர் - நந்தியடிகளின் சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகமாமுனி , திருமூலர் ஆகியோர்.

அடிதோறும் பொருளுரை:

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
- எல்லாப் பக்கங்களிலும் இருந்தும் அழிவு தொடர்ந்து ஏற்பட்டாலும்;

செழுந்தண் நியமங்கள் செய்மிந் என்று அண்ணல்
- நன்மைதரக்கூடியதும் உயர்வானதும் ஆகிய நற்செய்கை என்படும் இராஜயோக நெறிகளைத் தவறாமல் செய்து கொண்டிருங்கள் என்று என் ஸ்ரீகுருதேவர்;

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
- மிக்க அன்புடையவரும் சூரியனைப்போன்று ஞானப்பிரகாசமும், சந்திரன் போன்ற இனிமையான தண்மையைக் கொடுப்பவரும் பரம்பொருளே ஆகுபவருமானவருடன்;

அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே
- சேர்ந்து இருந்து ஞானபோதனையைக் கற்ற சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோக மாமுனி , திருமூலர் ஆகியோருக்கு தன்னுடைய அருளால் இராஜயோக வித்தையைக் கற்பித்தார்.

தெளிவுரை:

எல்லாப் பக்கங்களிலும் இருந்து பல்வகையான இன்னல்களுடன் கூடிய அழிவு தொடர்ந்து ஏற்பட்டாலும்;

நன்மையைத் தரக்கூடியதும் உயர்வானதும் ஆகிய நற்செய்கை என்படும் இராஜயோக நெறிகளைத் தவறாமல் செய்து கொண்டிருங்கள் என்று என் ஸ்ரீகுருதேவராகிய நந்தியடிகள்;

அனைவரிடமும் மிக்க அன்புடையவரும் சூரியனைப்போன்று ஞானப்பிரகாசமும், சந்திரன் போன்ற இனிமையான தண்மையைக் கொண்டவரும் பரம்பொருளேஆகுபவராகும் அவர் தன்னுடன்;
சேர்ந்து இருந்த சீடர்களாகிய பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோக மாமுனி , திருமூலர் ஆகியோருக்கு தன்னுடைய அருளால் இராஜயோக வித்தையைக் கற்பித்தார்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri 14 Oct 2016 - 19:10

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)
மூன்றாம் தந்திரம் – கலைநிலை - திருமந்திரம் – 716.

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே

பதப்பொருள் :

இருத்தல் – உயிர்வாழ்தல்.
காலம் -வாழ்நாள்
ஏதும் - எதுவும் .
அறிதல் –உணர்தல்; தெரிதல்.
பெருக்கல் –விரிவாக்கல்; மிகுதியாக்கல்.
பெருமை –மட்சிமை; அருமை; வல்லமை; பெருமை; மிகுதி
ஒருத்தல் –அழித்தல்.
வாயு – சுவாசக் காற்று.
நிற்றல்- நிலைத்திருத்தல்; பின்பற்றுதல்; ஒழுகுதல்.
தருக்கு – வலிமை; களிப்பு.
ஒன்றுதல்- சார்ந்திருத்தல்.
சாதகன் – பயிலுவோன்.

அடிதோறும் பொருளுரை :

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
- அஞ்ஞானிகளாகிய மனிதர்கள் தாம் இவ்வுலகில் உயிர்வாழும் காலத்தில் தம் ஆத்ம முன்னேற்றத்திற்கான வழிவகைகள் எதனையும் அறிந்து தெரிந்து கொள்ள மாட்டார்கள்.

பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
- வாழ்நாளை அதிகரித்து நீட்டித்துக் கொள்ளும் உயர்வான வழியையே மனதில் குறிக்கோளாகக் கொண்டு ;
ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்
- வாழ்நாளைக் குறைக்கச் செய்யும் சுவாசங்களைப் பிராணாயாம சாதகத்தால் சிறப்புறும் வகையில் வளர்த்துப் பிரகாசிக்கச் செய்தலால்;

தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே
- வாழ்நாளைக் கூட்டுவதற்கான வல்லமையும் அதனால் விளையும் மகிழ்ச்சியையும் அந்த பிராணாயாம சாதகன் பெற்று நீடித்த ஆயுளில் நிலைபெறுகிறான்.

தெளிவுரை:

அஞ்ஞானிகளாகிய மனிதர்கள், தாம் இவ்வுலகில் உயிர்வாழும் காலத்தில் தம் ஆத்ம முன்னேற்றத்திற்கான வழிவகைகள் எதனையும் அறிந்து தெரிந்து கொள்ள மாட்டார்கள். வாழ்நாளை அதிகரித்து நீட்டித்துக் கொள்ளும் உயர்வான வழியையே மனதில் குறிக்கோளாகக் கொண்டு , வாழ்நாளைக் குறைக்கச் செய்யும் சுவாசங்களைப் பிராணாயாம சாதகத்தால் சிறப்புறும் வகையில் வளர்த்துப் பிரகாசிக்கச் செய்தலால், வாழ்நாளைக் கூட்டுவதற்கான வல்லமையும் அதனால் விளையும் மகிழ்ச்சியையும் அந்த பிராணாயாம சாதகன் பெற்று நீடித்த ஆயுளில் நிலைபெறுகிறான்.

விளக்கவுரை:

மானுட வாழ்வில் இயல்பாக நடைபெறும் சுவாசங்களால் மானுட வழ்நாள் குறையும் தன்மைக்கு உட்படுகிறது. ஆனால் முறையான பிராணாயாம சாதகத்தால், அந்த பிராணாயாம சாதகன் நீட்டித்த ஆயுளைப் பெறுகிறான் என்பது கருத்து.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue 18 Oct 2016 - 9:36


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)

மூன்றாம் தந்திரம் – கலைநிலை - திருமந்திரம் – 712.

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்கலு மாமே.


பதப்பொருள் :

காதல் – அன்பு;பக்தி; ஆசை; விருப்பம்.
வழி – நெறி; ஒழுக்கம்;முறைமை; கழுவாய்.
கண்-அறிவு; ஆன்மா.
நுதல் – நெற்றி; தலை;மேலிடம்.
அண்ணல் –பெருமை; பெருமையுடையவர்; குரு; பரம்பொருள்.
உற –கிடைக்க; கிட்ட.
நோக்குதல் –அருளுதல்; பாதுகாத்தல்.
கங்கை – பற்று; ஆசை.
தருதல் –கொடுத்தல்; கொடை.
காத்தல் –பாதுகாத்தல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.
ஆமே – ஆகுமே.

அடிதோறும் பொருளுரை:

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலை
- ஆத்ம வித்யா என்னும் அமரவித்தையின்பால் விருப்பம் ஏற்படும் வகையில் அடியனுக்கு அருள்செய்து அதன் விளைவாய் ஆத்மனை அடையாளம் காண்பித்த மேன்மைமிகு ஸ்ரீ குருதேவரை;
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
- அவர்பால் பக்தி செலுத்தி மெய்யறிவால் மிகக்கவனமுடனும் பொறுப்புடனும் வணங்கி வழிபட்டால்;
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
- ஸ்ரீகுருதேவரும் அத்தகைய தம் சீடன்பால் தனக்கு ஏற்படும் அன்புப் பெருக்கால் அவனது உலகப் பொருட்களின்மீது உண்டாகும் ஆசைக்குக் கழுவாயாகி, ஆசைகளை வற்றவைப்பார்.
காதல் வழிசெய்து காக்கலு மாமே
- அதற்கு மேலும் தன் சீடன்பால் மிகு அன்புகொண்டு அவனைப் பிறவித் துயர்களில் இருந்து காப்பாற்றி அவரே ஆன்ம முக்தி தந்து அருள்பவருமாகிறார்.


தெளிவுரை :

ஆத்ம வித்யா என்னும் அமரவித்தையின்பால் விருப்பம் ஏற்படும் வகையில் அடியனுக்கு அருள்செய்து அதன் விளைவாய் ஆத்மனை அடையாளம் காண்பித்த மேன்மைமிகு ஸ்ரீ குருதேவரை,
அவர்பால் பக்தி செலுத்தி மெய்யறிவால் மிகக்கவனமுடனும் பொறுப்புடனும் வணங்கி வழிபட்டால், ஸ்ரீகுருதேவரும் அத்தகைய தம் சீடன்பால் தனக்கு ஏற்படும் அன்புப் பெருக்கால் அவனது உலகப் பொருட்களின்மீது உண்டாகும் ஆசைக்கு கழுவாயாகி ஆசைகளை வற்றவைப்பார். அதற்கு மேலும் தன் சீடன்பால் மிகு அன்புகொண்டு அவனைப் பிறவிதுயர்களில் இருந்து காப்பாற்றி அவரே ஆன்ம முக்தி தந்து அருள்பவருமாகிறார்.








+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக