புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
. திருமந்திரம் என்னும் தேன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
தெரிந்துகொள்வோம் தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்)
ஓர் அறிமுகம்:
திருமந்திரம் என்னும் நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம். அந்த யோகமும் ஞானமும் பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும் ஆக்கும் வகையில் அமைக்கப்படுவதே, “தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - திருமந்திரம் என்னும் தேன்” என்னும் ஈகரை தமிழ் களஞ்சியப் பதிவு.
திருமந்திரம் – ஒரு யோகமும் ஞானமும் நவிலும் நற்றமிழ் காவியம் என்பதே நமது நோக்கம். இந்நோக்கம் சைவ பக்திக்கு மாறானதோ அல்லது எதிரானதோ அல்ல. திருமந்திரம் பக்தி மார்க்கத்தைக் கூறுவது என்பது ஒருவழி – அதுவே ஞானமும் யோகமும் ஆகிறது என்பது நமது இன்னுமொரு பார்வைப் பரிமாணமாகும் பிறிதொரு வழி என்றே கொள்ளவேண்டும். இதனை நவில்தொரும் நூல் நயம் என்றும் கொள்ளலாம். தோண்டச் சுரக்கும் மணற்கேணிதான் நம் உலகப் பொதுமறை திருமந்திரம்- தமிழ்மறை
திருக்குறள் போலவே.
ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சாரம் உபநிஷதங்கள் எனப்படும் வேதாந்தம். உபநிஷத்களின் சாரம் பிரம்ம சூத்திரம் எனப்படும் வேதாந்த சூத்திரம்( வியாசர் அருளியது) . பிரம்ம சூத்திரத்தின் சாரம் ஸ்ரீமத் பகவத் கீதை ( இதுவும் வியாசர் அருளியது) . பகவத் கீதையின் சாரம்தான் திருமந்திரம் என்னும் தேன் என்பது யோகியர் வாக்கு. இது மானுடத்திற்கு ஞானமும் யோகமும் புகட்டி மேன்மைப் படுத்தும் ஓர் அற்புதம்.
சைவ சமயத்திற்குத் திருமந்திரம் பக்தி நூலாக இருந்து சைவபக்தியை ஊட்டி வளர்க்கட்டும். கூடவே உலக மக்கள் யாவருக்கும் - ஜாதி, மதம், மொழி, இனம், நாடு மற்றும் கலாச்சரம் ஆகியனவற்றை எல்லாம் கடந்த - அவரவர் உடம்பு, உயிர், மனம் மற்றும் ஆன்மாவை மேம்படுத்தும் யோக நூலாகவும் இருக்கட்டுமே. உலக மக்கள் யாவருக்கும் பயனளிப்பது நன்மை தானே!
உலக மானுடம் யாவையும் பிறப்பு, இறப்பு, உடம்பு, உயிர், மனம் ஆகிய ஐந்தாலும் ஒன்று படுகின்றது. அதுவே நாடு, மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய ஐந்தாலும் வேறுபட்டு வீணாகிறது. நாம் இந்த பதிவின் மூலம் ஒன்றுபடும் ஐந்தையும் அறிந்துகொண்டு, அவற்றை மேன்மைப்படுத்தும் நெறியையும் திருமந்திரத்தில் கிடைக்கக் கண்டு , அவற்றை முயன்றுப் பயின்று - பழகி மேன்மையை அடைவோம். அதன் விளைவாக “வாழும்போதும் இன்பம் – வாழ்விற்குப் பிறகும் இன்பம்” பெறுவோம்.
மானுட உலகம் , ஒற்றுமை நீங்கி தாழ்ச்சியை அடையாமல், திருமந்திரம் புகட்டும் மானுட ஞானத்தால்- யோகத்தால், யாவரும் ஒன்றுபடுவோம் – உயர்வடைவோம். ஆத்மஞானம் அறிந்து அனைவரும் அமரனாக ஆகுவோம்.
பரம்பொருளே ! உலக மானுடத்தை:
“ அழிவிலிருந்து அழியாமைக்கு அழைத்துச் செல் . . .
அஞ்ஞானமாகிய இருளில் இருந்து அறிவுடைமை என்னும் ஒளியைநோக்கி அழைத்துச் செல் . . .
மாயை என்னும் மயக்கத்திலிருந்து உண்மை என்னும் தெளிவிற்கு அழைத்துச் செல் . . .”
- சாந்தோக்கிய உபநிஷத் .

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்லதோர் ஆரம்பம் . தொடருங்கள் , நன்றி
திருமந்திரம் என்னும் தேன் .
இந்து ஆன்மிகம் பகுதிக்கு மாற்றி விடலாமா ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஐயா !
திருமந்திரம் ஒரு பக்தி நூலுக்கு அப்பாற்பட்ட யோக நூல் என்பதே நமது தெளிவு. அதனை இந்து ஆன்மிகம் பகுதிக்கு மாற்றினால் பக்தி சாயம் பூசப்பட்டு அனைத்து மதத்தைச் சார்ந்த மானுடரும் கற்க இயலாமல் போக வாய்ப்புள்ளது.
தெய்வீக பக்திக்கே இடமில்லாத யோக ஞானம் போதிக்கும் அந்த யோக தத்துவ அற்புதம் இலக்கியத்தில் தொடருமானால் யாவருக்கும் பயன்படும் என்பது அடியனேனின் பணிவான விண்ணப்பம். முதலில் நம் தமிழ்கூறும் நல்லுலகம் யோகம் கற்றால் அது மானுடம் முழுமைக்கும் ஆகலாம் என்பதே எண்ணம்.
திருமந்திரத்தில் முழுவதும் நிறைந்தவை இராஜயோக போதனைகளே. முதலில் நம் தமிழினம் யோக அறிவைப்பெற்று (Theory) பின்பு பயிற்சியும் (Practical ) பெற்றார்களானால் உலக மனிதர்கள் யாவரும் தேவராகலாம்.
நம் ஈகரை தமிழ்ப்பாலம் அந்த நோக்கத்திற்குப் பாலமானால் அதனை விட ஒரு மாபெரும் மனித நேய சேவை வேறு பிறிதொன்று இருக்க முடியாதே. திருமூலரே திகைத்துப் போவார். அவர்காலத்தில் இல்லாத தொழில் நுட்பம் நம் காலத்தில்தானே இருக்கிறது. அன்னாரது யோகக் கல்வி அனைவருக்கும் ஆகவேண்டும்.
வணக்கம் . நன்றி ஐயா.

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே. திருமந்திரம் 63
வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .
ஏழாம் தந்திரம் – இதோபதேசம் (ஹித உபதேசம்)- திருமந்திரம்-2104.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே -
பதப்பொருள் :
ஒன்று –ஒப்பற்றது; தனித்தன்மை வய்ந்தது
குலம் - சாதி ; இனம்> மானுட இனம்.
தேவன் - வழிநடத்துபவன் ;
நன்று வாழ்வின்நோக்கம்; துறக்கம் > அவாவின்மை
நமன் - யமன் > இறப்பு > மயக்கம்.
நாணம் - வெட்கம் >அறிவு.
ஆமே – ஆகுமே.
கதி - போக்கு> வழி > சாதனம்> புகலிடம்.
சித்தம் -மனம் ; முடிவான மனக்கொள்கை ; திண்ணம் ;
நிற்றல் – நிற்கை
நிலை - உறுதி ; பூமி ;
உய்தல் – உயிர்வாழ்தல்; ஈடேறுதல்;.
பதவுரை :
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
- மனித குலம் ஒப்பற்ற உயர்வானது; அதனை வழிநடத்துபவர் ஞானம் போதிக்கும் ஸ்ரீகுருதேவரே ஆகிறார்.
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
- வாழ்வின் நோக்கமாக பேராசை இல்லாமையை நினைவில் கொள்ளுங்கள்; அவ்வாறாகில் வாழ்வில் அறியாமையாகிய உண்மை அல்லாதனவற்றை உண்மை என்று நினைக்கும் மயக்கம் ஏற்படாது. அதுவே தெளிந்த அறிவாகும் .
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
- அத்தகையத் தெளிந்த அறிவின் துணைகொண்டு ஸ்ரீகுருதேவரை அடைக்காலமாக அடைந்து ஆத்மஞானம் பயில வேண்டும் என்னும் நினைவு உங்கள் மனத்தில் உண்டாகவில்லையே!
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே
- தான் இந்த உடம்பு என்பதல்ல , ஆனாலும் இந்த உடம்பில் இருந்தும் இயங்குவதுமாகும் பரம்பொருளின் அம்சமாகும் ஜீவாத்மாவே என்ற கருத்தில் உறுதியாக இருந்துகொண்டு, நீங்கள் ஸ்ரீகுருதேவர் கற்பிக்கும் ஆத்ம வித்யா( இராஜயோகம்)வை எப்போதும் மறவாமல் பயின்று பழகி உயிர்வாழ்ந்துகொண்டு ஈடேற்றம் பெறுங்கள்.
தெளிவுரை:
மனித குலம் ஒப்பற்ற உயர்வானது. அதனை வழிநடத்துபவர் ஞானம் போதிக்கும் ஸ்ரீகுருதேவரே ஆகிறார். வாழ்வின் நோக்கமாக பேராசையைத் தவிர்க்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அவ்வாறாகில், வாழ்வில் உண்மை அல்லாதனவற்றை உண்மை என்று நினைக்கும் மயக்கமாகிய அறியாமை உங்களுக்கு ஏற்படாது. அதுவே தெளிந்த அறிவு என்பதாகும் .
அத்தகையத் தெளிந்த அறிவின் துணைகொண்டு ஸ்ரீகுருதேவரை அடைக்காலமாக அடைந்து அவர் போதிக்கும் ஆத்மஞானம் பயில வேண்டும் என்னும் நினைவு உங்கள் மனத்தில் உண்டாகவில்லையே!
தான் இந்த உடம்பு என்பதல்ல என்றும், ஆனாலும் இந்த உடம்பில் இருந்தும் இயங்குவதுமாகும் பரம்பொருளின் அம்சமாகும் ஜீவாத்மாவே என்னும் கருத்தில் உறுதியாக இருந்துகொண்டு, நீங்கள் ஸ்ரீகுருதேவர் கற்பிக்கும் ஆத்ம வித்யா( இராஜயோகம்)வை எப்போதும் மறவாமல் பயின்று,அதனை அனுதினமும் பழகி உயிர்வாழ்ந்துகொண்டு ஆன்மவிடுதலையாகிய ஈடேற்றம் எனப்படும் மீண்டும்பிறவா நிலையைப் பெறுங்கள்.
விளக்கவுரை:
வாழ்வில் பேராசையைத் தவிர்த்து, ஸ்ரீகுருதேவரைப் புகலிடமாகக் கொண்டு, அவர் கற்பிக்கும் ஆத்மவித்யா எனப்படும் உடம்பு, உயிர், மனம் ஆகியனவற்றை மேன்மைப்படுத்தி, மீண்டும் பிறவாமை என்னும் அமரநிலையை ஒப்பற்றதாகிய மனித குலம் அடையவேண்டும் என்பது திருமூலரின் கருத்து.
யோகசனங்களால் நோயற்ற ஆரோக்கியமான நிலையான உடல் நலமும்;
பிராணாயாமங்களால் நீடித்த ஆயுளும் (உயிர் வளமும்);
தியான சாதகத்தால் நிறைவான மனதின் நிம்மதியையும்;
கொடுக்க வல்லது இராஜயோகம் என்னும் ஆத்ம வித்யாவே. இந்த அமர ஞானத்தை ஸ்ரீகுருதேவரிடம் ஒவ்வொரு மனிதனும் பயின்று பழகி வாழ்வில் மேன்மை அடையவேண்டும் என்பது பொருள்.

முதல் தந்திரம் – தன்வரலாறு கூறல் -திருமந்திரம். 85.
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
பதப்பொருள்:
யான் - நான் .
வான் – வானம் ; மூலப்பகுதி ; ஆகாயம் என்னும் பெருவெளி ;
பெறுதல் –அடைதல் ; அறிதல் ;
பற்று – ஊன்று : பிடி ; கைக்கொள்..
மறை - இரகசியம்; அறிவு
ஊன் – உடம்பு.
உணர்வு - அறிவு ; தெளிவு ; ஆன்மா ;
உறுதல் - சேர்தல் ; பொருந்தல்.
மந்திரம் - ஆலோசனை ; எண்ணம் ; உறைவிடம் ;
தலைப்படு –தெரியத்தோன்றல்
அடிதோறும் பொருளுரை:
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
- எங்குமாகிய பரம்பொருள் என்உடம்பினுள்ளும் உள்ளது என்பதை அறிந்து கொண்டதால் நான் அடைந்த அந்த அற்புத ஆனந்தத்தை இவ்வுலக மக்கள் யாவரும் பெற்று இன்புற வேண்டும்.
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
- தனக்கும் அப்பலாய்ப் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்திலும் உறையும் அறிவே வடிவாகிய அப்பரம்பொருளைச் சொல்ல வேண்டுமானால்;
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
- பிரபஞ்சத்தில் இருப்பனவற்றினுடைய ஒவ்வொரு உடலையும் பற்றிக் கொண்டு ஆன்மா என்னும் உறைவிடமாக அவற்றுடன் பொருந்தியே இருக்கும் இரககியமாக அது உள்ளது.
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே
- மானுடனால் மட்டுமே அறிந்து கொள்ள முடிவதான அப்பரம்பொருள், ஒவ்வொருவரும் தாமாக முயன்று ஆத்ம வித்யா ஒழுகலாறுகளால் தொடர்ந்து பழகிவந்தால் தெரியத் தோன்றும்.
தெளிவுரை:
அங்கு இங்கு என்று சொல்ல இயலாதவாறு எங்குமாகிய பரம்பொருள் என் உடம்பினுள்ளும் உள்ளது என்பதை அறிந்து கொண்டதால் நான் அடைந்த அந்த அற்புத ஆனந்தத்தை இவ்வுலக மக்கள் யாவரும் பெற்று இன்புற வேண்டும்.
மேலும் தனக்கும் அப்பலாய்ப் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்திலும் உறையும் அறிவே வடிவாகிய அப்பரம்பொருளைச் சொல்ல வேண்டுமானால்;
அது பிரபஞ்சத்தில் இருப்பனவற்றினுடைய ஒவ்வொரு உடலையும் பற்றிக் கொண்டு ஆன்மா என்னும் உறைவிடமாக அவற்றுடன் பொருந்தியே இருக்கும் இரககியமாக அது உள்ளது.
மானுடனால் மட்டுமே அறிந்து கொள்ள முடிவதான அப்பரம்பொருள், ஒவ்வொருவரும் தாமாக முயன்று ஆத்ம வித்யா ஒழுகலாறுகளைத் தொடர்ந்து பழகிவந்தால் தெரியத் தோன்றும்.
விளக்கவுரை:
எங்குமாகிய பரம்பொருள் எல்லோருடைய உடலிலும் இருக்கின்றது. அறிவே வடிவாகிய அந்த பரம்பொருளை, இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியனம், சமாதி ஆகியவற்றைக் கொண்டுள்ள இராஜயோக நெறிகள் எனப்படும் ஆத்மவித்யாவைத் தகுந்த குருதேவர் மூலமாகப் பயின்று அவற்றைத் தொடர்ந்து பழகினால், அப்பரம்பொருள் அறியத் தோன்றும் என்பது கருத்து.

எட்டாம் தந்திரம் – அவாஅறுத்தல் – திருமந்திரம். 2615
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.
பதப்பொருள்:
ஆசை – கவர்தல்; அபகரித்தல்; தனக்கே வேண்டும் என்று விரும்புதல்
அறுத்தல் – நீக்குதல்; இல்லாமற்செய்தல்
ஈசன் – குரு
ஆய்தல் – அசைதல். ஆய்மறியே (திருக்கோ.125, உரை)
துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி
ஆனந்தம் – பேரின்பம்
அடிதோறும் பொருளுரை:
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் – எதுவும் தனக்கே வேண்டும் என்னும் விருப்பத்தை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள் – நீக்கிவிடுங்கள்;
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் – நீங்கள் விரும்புவது உங்களுடைய ஸ்ரீகுருதேவரே ஆனாலும் அதுபோன்ற விருப்பத்தை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்;
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்-அவ்வாறு நீங்கள் விருப்பப்பட – விருப்பப்பட ,கெடுதல்கள் உங்களை நோக்கி மெல்ல மெல்ல அசைந்து வந்து சேரும்;
ஆசை விடவிட ஆனந்த மாமே - நீங்கள் உங்கள் விருப்பத்தை விட்டுவிட – விட்டுவிட ,பேரின்பம் உங்களுக்குள் உண்டாகுமே.
தெளிவுரை:
எதுவும் தனக்கே வேண்டும் என்னும் விருப்பத்தை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள் – நீக்கிவிடுங்கள்;
நீங்கள் விரும்புவது உங்களுடைய ஸ்ரீகுருதேவரே ஆனாலும் அதுபோன்ற விருப்பத்தை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்;
அவ்வாறு நீங்கள் விருப்பப்பட – விருப்பப்பட ,கெடுதல்கள் உங்களை நோக்கி மெல்ல மெல்ல அசைந்து வந்து சேரும்;
நீங்கள் உங்கள் விருப்பத்தை விட்டுவிட – விட்டுவிட ,பேரின்பம் உங்களுக்குள் உண்டாகுமே
Life is sorrow; Cause is desire; Destruction od desire is the way of escape – உண்மைதானே.

முதலாம் தந்திரம் – அன்புடைமை – திருமந்திரம் -274.
என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே .
பதப்பொருள் :
என் - அளவில்லாத
அன்பு – தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம்; பக்தி; நன்மை.
உருக்குதல் – மனம்நெகிழ்த்துதல்.
இறைவன்- ஸ்ரீகுருதேவர்
ஏத்துதல் – துதித்தல்; வாழ்த்துதல்; புகழ்கை; உயர்த்திக்கூறுதல்.
மின் -முன்னிலையேவற்பன்மைவிகுதியுள்ஒன்று
முன் – இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; பழைமை; மனக்குறிப்பு; முன்றோன்றல்.
முதல்வன் – தலைவன்; குருதேவர்.
பின் – பிறகு.
தகை- அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை;
தலை – சிரம்; முதல்; சிறந்தது; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; முடிவு; ஒப்பு.
நிற்றல் – நிற்கை.
ஆறு - நதி; வழி; பக்கம்; சமயம்; அறம்; சூழச்சி; விதம்; இயல்பு.
அடிதோறும் பொருளுரை :
என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
- அளவில்லாத பக்தியால் மனம் நெகிழ்ச்சியோடு ஸ்ரீகுதுதேவரைத் துதியுங்கள்.
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
- அதற்கும் முன்பாக( காலத்தால்) அவரால் நன்மை அடையவேண்டி மனநெகிழ்சியோடு ஸ்ரீகுருதேவரிடம் சென்று அவரைச் சரண அடையுங்கள்.
பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
- பிறகு பெருமை பொருந்திய ஸ்ரீகுருதேவரும் நேயத்தோடு ;
தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே
- அவருடைய அருளாகும் இராஜ யோகக் கல்வியை நல்கி உங்களை உயர்த்தி வைப்பார்.
தெளிவுரை:
அளவில்லாத பக்தியால் மனம் நெகிழ்ச்சியோடு ஸ்ரீகுதுதேவரைத் துதியுங்கள்.அதற்கும் முன்பாக (காலத்தால்) அவரால் நன்மை அடையவேண்டி மனநெகிழ்சியோடு ஸ்ரீகுருதேவரிடம் சென்று அவரைச் சரண அடையுங்கள். பிறகு பெருமை பொருந்திய ஸ்ரீகுருதேவரும் நேயத்தோடு அவருடைய அருளாகும் இராஜ யோகக் கல்வியை நல்கி உங்களை உயர்த்தி வைப்பார்.
விளக்கவுரை:
அன்பும் பக்தியும் பெருக ஸ்ரீ குருதேவரை நாடினால், அவரும் அன்போடு அரவணைத்து இராஜயோகக் கல்வியை நல்கி உங்களை உயர்த்தி வைப்பார் என்பது பொருள்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அருமை அருமை . தேனினும் இனிய பதிவுகள் அன்பரே...பாராட்டுகின்றேன்.
தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .
எட்டாம் தந்திரம் - அறிவுதயம் - திருமந்திரன் 2317
அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.
பதப்பொருள் :
அறிவு வடிவு - மானுட உடம்பிற்குள் இருந்தும் இயங்குவதும் ஆகும் ஜீவாத்ம ஆகிய நான் அறிவே வடிவானவன்.
அடிதோறும் பொருளுரை :
அறிவு வடிவென்று அறியாத என்னை
- இதுநாள் வரையில், எனது உடம்பிற்குள் இருப்பதும் அதனுள் இயங்குவதும் அறிவே வடிவாகும் ஜீவாத்மா என்பதுதான் ‘நான்’ என்று அறிந்து கொள்ளாமல் , இந்த உடம்புதான் நான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
- ஆனால் ஸ்ரீகுருதேவரை அடைந்தபின், அந்த மாதவன் எனக்கு இராஜயோக ஞானபோதனையைப் பயிற்றுவித்து, ‘நான்’ என்பது என்பது மானுட உடம்பு அல்ல என்றும் , உடம்பிற்குள் இயங்கும் அறிவே வடிவான ஜீவாத்மாவே என்றும் தன்னுடைய அருட்பிரவாகத்தால் எனக்குப் போதித்தார்.
அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
- அவ்வாறான அருளாலனால் ஆத்ம ஞானம் போதிக்கப்பட்ட பின் நானும், “நான்” அறிவு வடிவான ஆத்மாவே என்று உணர்ந்து கொண்டேன்.
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே
- அதன் பயனாய் நான் மட்டும் அல்லாமல், இவ்வுலகில் உள்ள அனைத்தும் அறிவே வடிவாகிய பரம்பொருளின் வெளிப்பாடுகளே என்று அறிந்து உணர்ந்து கொண்டு அனைத்திலும் பரம்பொருளைக் கண்டு களித்து வாழ்கின்றேன்.
தெளிவுரை:
இதுநாள் வரையில், எனது உடம்பிற்குள் இருப்பதும் அதனுள் இயங்குவதும் அறிவே வடிவாகும் ஜீவாத்மா என்பதுதான் ‘நான்’ என்று அறிந்து கொள்ளாமல் , இந்த உடம்புதான் ‘நான்’ என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
ஆனால் ஸ்ரீகுருதேவரை அடைந்தபின், அந்த மாதவன் எனக்கு இராஜயோக ஞானபோதனையைப் பயிற்றுவித்து, ‘நான்’ என்பது என்பது மானுட உடம்பு அல்ல என்றும் , உடம்பிற்குள் இயங்கும் அறிவே வடிவான ஜீவாத்மாவே என்றும் தன்னுடைய அருட்பிரவாகத்தால் எனக்குப் போதித்தார்
அந்த அருளாலனால் அவ்வாறான ஆத்ம ஞானம் போதிக்கப்பட்ட பின் நானும், “நான்” என்பது அறிவு வடிவான ஆத்மாவே என்று உணர்ந்து கொண்டேன்.
அதன் பயனாய் நான் மட்டும் அல்லாமல், இவ்வுலகில் உள்ள அனைத்தும் அறிவே வடிவாகிய பரம்பொருளின் வெளிப்பாடுகளே என்று அறிந்து உணர்ந்து கொண்டு அனைத்திலும் பரம்பொருளைக் கண்டு களித்து வாழ்கின்றேன்.
கருத்துரை :
1. நான் மறைகளுள், ரிக் வேத வேதாந்தமாகிய ஐத்ரேய உபநிஷத் , ‘ப்ரக்ஞானாம் பிரம்மம்’ என்று ‘பரம்பொருள் அறிவே வடிவானது’ என்கிறது.
2. இந்த பரம்பொருளே ‘நானாக இருக்கின்றேன்’ – ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்கிறது, யஜுர்வேத ப்ருஹதாரண்யக உபநிஷத்.
3. அந்த பரம்பொருள், ‘நீயாக இருக்கிறாய்’ – ‘தத் துவம் அஸி’ என்று சாமவேத சாந்தோக்ய உபநிஷத் உபதேசம் செய்கிறது.
4. அதர்வண வேத மாண்டூக்கிய உபநிஷத் , ‘இங்கு இருப்பவை யாவும் பரம்பொருளே’ – ‘அயம் ஆத்மா ப்ரம்மம்’ என்று தெளிவுறுத்துகின்றது.
இந்த அற்புத ததுவத்தைத் தனக்கு ஸ்ரீ குருதேவர் தன் அருட்பிரவாகத்தால் தனக்குப் பயிற்றுவித்ததால், தான் பரம்பொருளே என்பதை உணர்ந்து கொண்டதாகவும், அதுபோலவே இவ்வுலகத்தில் இருப்பவை யாவும் பரம்பொருளின் வெளிப்பாடுகளே என்பதையும் அறிந்து ஆனந்தித்து இருப்பதாகவும் திருமூஅலர் தெரிவிக்கின்றார்.
“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் --- ” கம்பராமாயணம்- கடவுள் வாழ்த்து ஈண்டு ஒப்பு நோக்கற்கு உரியது.

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3