புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
Page 7 of 12 •
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
First topic message reminder :
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)
உடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
ஊரார்கண் படட்டும் படட்டும்
உற்றார்கண் படட்டும் படட்டும்
ஆடவர்கண் படட்டும் படட்டும்
உண் கண்ணே பட ட் டும்
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது. (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்) பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா சீயக்காய் நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................ (ஃபாரவர் ( forever) இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு, மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும் இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.
கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8) மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.
நரை கூந்தல் - முதுமை
தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ……………………… (நற். 10: 1-4)
என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல் முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை
அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)
என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.
புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.
கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்
முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.
……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)
என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு
மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)
சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக் கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141 ; 11 – 12)
என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)
மேற்குறித்த பாடல்கள் பொருள்வயிற் பிரிந்தால் தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.
பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் (நற். 139; 7- 8)
நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு ( நற். 197 :5>6)
இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.
கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்
திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில் ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்
நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)
எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு
நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)
தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம் ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மீனைக் கவர்ந்து உண்கின்ற கொக்கின் இறகைப்போல தலையானது வெளுத்துவிட்டது அவளுக்கு . அந்த முதிய மகளுக்கு ஒரு மகன் . அந்த மகனை அவள் போருக்கு அனுப்புகிறாள் . அந்த வீரமகன் போரிலே பல சாகசங்களைச் செய்கிறான் . தன்னை எதிர்த்துவந்த யானையைக் கொன்று தானும் இறக்கிறான் . இந்தச் செய்தியை அவள் கேட்டவுடன் கழிபேருவகை கொள்கிறாள் . அவனைப் பெற்ற காலையினும் பெருமகிழ்வு அடைகிறாள் . அவள் கண்கள் நீரைச் சொரிகின்றன. அவள் சொரிந்த கண்ணீர்த் துளிகள் , மூங்கில் இலைமேலே தூங்கும் பனித் துளிகளைவிடப் பலவாகும் .
இதோ அந்தப் பாடல் :
===================
மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
பூங்கண் உத்திரையார் - புறம் – 277
சிறப்புரை :
=========
இந்தப் பாடலால் முதிய வயதிலும் அக்காலத்தில் குழந்தை பெற்றுக்கொண்டனர் என்பது தெரிய வருகிறது .
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் . ( மக்கட்பேறு - 69 )
என்ற குறள் நினைவுக்கு வருகிறது . இதனால் வள்ளுவர் சங்க இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர் என்பதும் புலனாகிறது .
" ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே " என்ற பொன்முடியார் பாடலும் ஈண்டு நினைவு கூறத்தக்கது .
இக்காலத்தில் " ஈன்றாள் " என்னும் சொல் வழக்கிலிருந்து அறவே அற்றுப் போயிற்று . " பெற்றாள் " என்றே சொல்கிறோம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தலைவாரி பூச்சூடி உன்னைப் - பாட சாலைக்குப்
...போவென்று சொன்னாள் உன்அன்னை !
- பாரதிதாசன் .
காலையில் எழுந்து பெற்றமகளைக் குளிப்பாட்டி , தலைவாரிப் பூச்சூடி , பள்ளிக்கு அனுப்புவது அன்னையின் கடமைகளில் ஒன்று . ஆனால் அக்காலத்தில் தலை முடியிலே எண்ணெய் தடவி சீவி , பெற்ற மகனைப் போருக்கு அனுப்புவதில் பெருமிதம் கொண்டாள் வீரத்தாய் .
முதல்நாள் நடந்த போரில் ,இவளுடைய தந்தையானவன் யானையைக் கொன்று தானும் வீழ்ந்து பட்டான் . நேற்று உண்டான போரில் , இவளுடைய கணவன் ,பெரிய பசு மந்தைகளை பகைவர் கவர்ந்து செல்லாதவாறு தடுத்துநின்று போரிட்டான் .அந்தப் போரிலே அவன் மாண்டான் . இன்றும் போர்ப்பறையின் ஒலியைக் கேட்டு , ஒரே மகனையுடைய இவள் , அம்மகனின் கையிலே வேலைக்கொடுத்து , வெண்மையான ஆடையை இடையில் உடுத்தி , குடுமியில் எண்ணெய் தடவிச் சீவி " போர்க்களம் நோக்கிச் செல்வாயாக ! " என்று சொல்லி விடுக்கின்றாள் .
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தகுமே:
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்,
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!
திணை வாகை; துறை மூதில் முல்லை.
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
சிறப்புரை :
=========
ஒரேமகன் உள்ளான் எனத்தெரிந்தும் , அவனைப் போருக்கு அனுப்பும் இவள் துணிவு கொடியது ! அந்தத் துணிவைத் தரும் இவளது சிந்தை கெட்டு ஒழியட்டும் என்பன போன்ற உரைகள் இகழ்வதுபோலப் புகழ்ந்து கூறப்பட்டவையாம் .
ஒரேமகன் உள்ளான் எனத் தெரிந்தும் , அவன் ஒரு பசுவின் கன்றைக் கொன்றுவிட்டான் என்பதனால் , அவனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று அறத்தின் வழியே நின்றான் ஒரு மன்னன் .
ஒருமைந்தன் தன்குலத்துக்
குள்ளான்என் பதும்உணரான்
தருமம்தன் வழிச்செல்கை
கடனென்று தன்மைந்தன்
மருமம்தன் தேராழி
உறவூர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி
அரிதோமற் றெளிதோதான்
-பெரியபுராணம் - சேக்கிழார்.
.
ஒரேமகன் உள்ளான் எனத் தெரிந்தும் அவனைப் போருக்கு அனுப்பி மறத்தின் வழியே நின்றாள் இந்த மறவர்குலப் பெண் .
அக்காலத்தில் ஆண்களின் தலை முடிக்கு " குடுமி " என்றும் ஒரு பெயருண்டு . இக்காலத்தும் " அவன் குடுமி என் கையில் " என்ற வழக்கு இருப்பது காண்க .

- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மிக அருமையான பதிவு. ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவாக இருக்கிறது. மிக்க நன்றி முனைவர் அவர்களுக்கு. முழுவதுமாக விரைவில் படித்து விடுகிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தோழமைக்கு நன்றி.
படித்துவிட்டுத் தங்களின் கருத்துக்களைப் பகிரவும். தங்களைப் போன்றோரின் கருத்துக்களே எம்போன்றோருக்கு ஊக்கமளிக்கும்.
நன்றி.

ஜெகதீசன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் கேள்விகள் என் தேடலை மேருகேற்றுகின்றன. மேலும் தாங்கள் தரும் தொடருக்குத் தொடர்புடைய பதிவுகளைக் காணும் போது மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி.
தங்களின் கேள்விகள் என் தேடலை மேருகேற்றுகின்றன. மேலும் தாங்கள் தரும் தொடருக்குத் தொடர்புடைய பதிவுகளைக் காணும் போது மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தொடர் – 2 புறநானூற்றின் தொடர்ச்சி
இவ்வாறு கணவனுடன் இருக்கும்போது அழகுப்படுத்திக் கொள்வதாக இருந்தாலும்சரி பிரிந்துறையும் காலத்தில் வருந்தியிருப்பதாக இருந்தாலும் சரி பெண்கள் ஒப்பனையில் அவர்களின் கூந்தல் சிறப்பிடம் பெறுவதனைப் பாடல்கள் பதிவு செய்துள்ளதைக் கண்டோம். இந்நிலையில் கணவன் இறக்கும்போது பெண்கள் இதுவரை பாதுகாத்துவந்த கூந்தலைக் களைந்து கைம்மை நோன்பு நோற்பதைப் புறநானூறு மூன்று பாடல்களில் பதிவு செய்கின்றது.
கைம்மையும் கூந்தல் களைதலும்
பாண்டியன் நெடுஞ்செழியனின் அருளுள்ளத்தைப் பாடும் கல்லாடனார் தம் பாடலில் போரில் இறந்துபடும் வீரர்களின் மனைவியர் கணவனை இழந்த துயரினைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தன் மார்பகங்கள் வருந்த , அடித்துக் கொண்டும் அறிவு மயங்கியும் அழுது ஆரவாரம் செய்வதோடு ஆற்றின் கருமணலை ஒத்ததும் மென்மையானதும் கற்றையானதுமான கூந்தலினைக் கைம்மையினை ஏற்கும் போது களைகிறார்கள் என்பதனை
முலை பொலி ஆகம் உருப்ப நூறி
மெய்ம் மறந்துபட்ட வரையாப் பூசல்
ஒள்நுதல் மகளிர் கைம்மைக் கூர
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே (புறம்.25:10 – 14)
என்று குறிப்பிடுகின்றார். (கொய்தல் என்பதற்கு அகராதிகள் தரும் பொருள் பறித்தல், அறுத்தல், கத்தரித்தல், தெரிந்தெடுத்தல், சிலிர்த்தல் என்பனவாகும். (கோனார் தமிழ் அகராதி பக். 247) மேலும் மகளிரின் இத்துயர் உணர்ந்ததாலேயே மன்னன் கைப்பிடியிலிருந்த வேல் உயிர்களைக் கொல்லாமல் தன்னிச்சையாக நின்றதாகக் கூறுகிறார்.
மற்றொருபாடலில் தாயங்கண்ணியார் எனும் புலவர் கணவனை இழந்த பெண்களின் துயர்கூறும் தாபதநிலை எனும் துறையில் தலைவன் இருக்கும் காலத்தில் சிறப்புற்றிருந்த நகரமும் மனையும் இன்று வெறிச்சோடி இருப்பதைப் பார்ப்பதற்குக் கணவரை இழந்து கைம்மை நோன்பில் துயருறும் மனைவியின் பொலிவின்மையைப் போன்றிருப்பதாகக் குறிப்பிடுகிறார். அப்பாடல் வருமாறு
குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர் தடுத்த தண்ணறும் பந்தர்க்
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு, இனியே
புல்என் றனையால் – வளங்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே (புறம்.250)
இப்பாடலில் கணவனை இழக்கும் பெண்கள் கைம்மை ஏற்கும்போது தனக்கு அழகு சேர்க்கின்ற கூந்தலைக் கொய்வதோடு கைவளையல்களை நீக்குவதாகவும் சுவையற்ற அல்லியரிசியினை உணவாக்கிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் தந்தை தான் மட்டும் தனித்து புறங்காட்டிற்குச் சென்றுவிட (இறந்துவிட) அவனுக்குப் பின்னேயே அவனுடைய பால்குடி மாறாத புதல்வர்களும் வான்சோறு கொண்டு சென்றதாகக் கூறப்படுவதால் இப்பெண் கணவனை இழந்து கைம்மையை ஏற்றிருக்கும் துயரத்துடன் மக்களையும் இழந்துவிட்டாளோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம் புதல்வர்கள் இல்லாததால்தான் நகரம் மட்டுமல்ல மனையும் பொலிவிழந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. தாபதநிலை – காதலனை இழந்த தாபத நிலை(தொல். புறம். நூற்பா. 24:29) அதாவது , கைம்மை நோன்பு.
அடுத்து மாறோக்கத்து நப்பசலையார் எனும் புலவர் பொதுவியல் திணையில் ஆனந்தப் பையுள் எனும் துறையினை விளக்கவரும்போது கைம்மை நோன்பின் தன்மையினைச் சுட்டிக்காட்டுகிறார். அப்பாடல் வருமாறு,
துடிய பாண பாடுவல் விறலி
என்ஆகுவிர் கொல்? அளியிர் நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்
மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல
வழிநினைந்து இரத்தல், அதனினும் அரிதே. (புறம். 280: 8 – 15)
இப்பாடலில் வீரனின் மனைவி ஒருத்தி போர்க்களத்தில் பெரும்புண்ணுற்று வந்திருக்கும் தன் கணவனை எவ்வகையிலாவது காக்கவேண்டும் என்பதற்காக பெருமுயற்சிகள் செய்யும் சூழலில் பிழைப்பிற்கு உண்டான நிமித்தங்கள் ஏற்படாத போது அவனை நம்பியிருக்கும் பாணர் விறலியரை நோக்கி தலைவன் இறந்துபடுவது உறுதியான சூழலில் இனி நீங்கள் இங்குத் தங்கி வாழ்வது என்பது அரிதானது என்று கூறுவதோடல்லாமல் கணவனை இழந்தவர்கள் மேற்கொண்டொழுகும் மொட்டை அடித்தல், அல்லியரிசி உண்ணுதல், அணிகலன்களைக் களைதல் ஆகிய வழக்கத்தை ஏற்று வாழ்வது என்னாலும் இயலாதது. ஆகையினால் தலைவன் இறந்தால் நானும் இறந்துபடுவேன். ஆதலால் நீங்கள் வேறு இடத்திற்குச் சென்றுவிடுங்கள் என்று கூறுவதாக வருகின்றது. கைம்மை நோன்பு நோற்பவர்களைப் புலவர் கழிகல மகளிர் என்று குறிப்பிடுகின்றார்.
புறநானூற்றில் பூதப்பாண்டியன்தேவி பெருங்கோப்பெண்டு பாடலில் இருந்தும் (246) கணவன் இறந்ததும் மனைவி தானும் கணவன் சிதையுடன் சேர்ந்து உயிர் துறந்த பெருங்கோப்பெண்டுவின் அன்பைக் கூறும் மதுரைப் பேராலவாயர் பாடலிலிருந்தும்(247) ஓக்கூர் மாசாத்தியார் பாடலிலிருந்தும் (248) கைம்மை நோன்பு மேற்கொள்வோர் யதார்த்த வாழ்வில் பின்பற்றும் நடைமுறை வழக்கம் எவ்வளவு துன்பம் நிறைந்தது என்பதை அறியமுடிகிறது. அதனால்தான் இளம்பெண்கள் அக்காலத்தில் உடன்கட்டை ஏறியுள்ளனர்.
கணவன் இறந்ததும் கைம்மையை ஏற்காது கணவன் சிதையுடன் தானும் உடன்கட்டை ஏறிய பெண்கள் முடியினைக் களையாது தீப்பாய்ந்த செயலை மதுரைப் பேராலவாயர் கூறும் பெருங்கோப்பெண்டுவின் செயலிலிருந்து அறியமுடிகிறது.
யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரும் அம்ம தானே …………………. (புறம்.247: 1-7)
இப்பாடலுக்கு விளக்கம் தரும் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் பூதபாண்டியன் இறந்தபோது அவன் தேவி தீப்புகுந்தாளாக, ஆங்கிருந்த சான்றோர்களுள் மதுரைப் பேராலவாயாரென்னும் சான்றோரும்
ஒருவர். இவர் பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்புகுந்ததை நேரிற் கண்டவர். அக் காட்சி அவர் நெஞ்சில் நன்கு பதிந்திருந்தது அதனை அவர் இந்த அழகிய பாட்டின்கண்
பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்தவிடம், காட்டிடத்தே காடுகிழாள் கோயிலுக்கு முன்பாகும். கோயில் திருமுன் அரசமாதேவி தீப்புகுதற்குத் தீ மூட்டப் பட்டிருந்தது; தீ நன்கு எரியத் தொடங்கியதும், அவள் நீராடிக் கூந்தலைப் பிழிந்துகொண்டு புறங்காட்டை நோக்கி வந்தாள். தன் பெருமனைக்கண் கணவனாகிய பூதபாண்டியன் சிறிதுபோது பிரியினும் பிரிவாற்றாது வருந்தும் இயல்பினளாகிய அவள் “தனித்துப் புறங்காடு நோக்கி நடந்தது காண்பார்க்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. புறங்காட்டில் காடுகிழாள் கோயில் திரு முன்றிலில் எரிந்துகொண்டிருந்த தீயை, நீர் துளிக்கும் கூந்தல் முதுகிடத்தே கிடைந்தசையக் கண்களில் நீர் பெருகிச் சொரிய வலம் வந்தாள்; பின்பு தீயுட்குளித்து மாண்டாள்,”
என்று குறிப்பிட்டுள்ளார். மேற்குறித்த பாடல்களிலிருந்து உடன்கட்டை ஏறிய பெண்கள் முடி களையவில்லை என்பதையும் கைம்மையை ஏற்றவர்கள் முடிகளைந்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.
மேல் இடம்பெற்றிருக்கும் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து கணவனை இழக்கும் பெண்கள் மேற்கொள்ளும் அக்கால வழக்கங்களுள் ஒன்றாக மொட்டை அடித்தல் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. இவ்வழக்கம் இன்று எல்லாச் சமூகத்தினரிடையேயும் இல்லை. பிராமணச் சமூகத்துப் பெண்களிடம் மட்டும் காணமுடிகிறது.
கணவனை இழக்கும் பிராமணப் பெண்கள் மயிர்களைந்து காவி உடுத்தி கைம்மையை ஏற்கும் வழக்கம் இருந்தது. இன்று இச்சூழல் மாறிவருவதையும் காணமுடிகிறது. ஆனால் பொதுவில் எல்லா சமூகத்துப் பெண்களிடையேயும் கணவனை இழக்கும்போது மொட்டை அடிக்கும் வழக்கம் இருந்ததா என்பது ஆய்விற்குரியது? இதிலிருந்து நமக்குள் எழும் கேள்வி கணவனை இழக்கும் பெண்கள், கைம்மையை ஏற்கும்போது மொட்டை அடிக்கும் வழக்கம் பண்டைக்காலத்தில் எல்லோராலும் பின்பற்றப்பட்டதா? பின்பற்றப்பட்டது என்றால் எப்பொழுது? ஏன்? எதற்காக? நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்டதற்கான பதிவும் உரிய காரணங்களும் அறிய இலக்கியப் பதிவுகள் போதுமானவையா?
தொடர்ந்து தேடுவோம்…………….

கைம்மையும் கூந்தல் களைதலும் என்ற தலைப்பில் ஒரு சிறந்த கட்டுரை தந்தமைக்கு நன்றி . பூதபாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு தன்னுடைய பாடலில் ( புறம் - 246 ) கைம்மை நோன்பின் கொடுமைகளைப் பற்றியே அதிகம் பேசுகிறாள் . தான் கணவனோடு வாழ்ந்த நாட்களின் நினைவுகளைப்பற்றி அந்தப் பாடலில் எந்தக் குறிப்பும் காணோம். மனைவியை இழந்த மன்னன் மாக்கோதை , தம்பாடலில் காட்டிய ( புறம் - 245 ) துன்பத்தைக்கூட , பெருங்கோப்பெண்டுவின் பாடலில் காண முடியவில்லை .தந்தை இழந்த சோகத்தைக் காட்டும் பாரிமகளிரின் பாட்டு நெஞ்சைப் பிழிவதாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
"உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; உபத்திரவம் பண்ணாதே' என்று சொல்கிற வழக்கம் இப்போதும் உள்ளது. இந்தக் கருத்து சங்க காலத்திலேயே முளைவிட்டுவிட்டது. இந்தப் பாடலில் முன்னிலைப்படுத்தப் பட்டிருப்போர் மூத்தக் குடிமக்கள்.
மீன் முள்ளைப்போல் வெள்ளை நிற நரை முடியையும் அலை அலையாய் சுருக்கங்கள் விழுந்த கன்னங்களையும் உடைய சான்றோர்களே! அதுவும் பயனுள்ள செயல் எதுவும் செய்யாமல் மூப்பெய்தியுள்ள சான்றோர்களே! கையிலே கூர்மையான மழுவாயுதத்தைக்கொண்ட ஒருவன்(எமன்) உங்களைப் (பாசக் கயிற்றால்) பிணித்து இழுத்துச் செல்லும் போதுதான் வருந்துவீர்கள்!
உங்களால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை; கெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பாதுகாத்திடுவீர்கள். அந்தச் செயல்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது. அதுமட்டுமல்ல, உங்களை நல்வழிப்படுத்துவதும் அதுவாகவே இருக்கும் என்று அறிவுரை கூறுகிறார்.
"பல்சான்றீரே! பல்சான்றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே''
நரிவெரூஉத்தலையார் (புறம்-195)
சிறப்புரை :
=========
பல்சான்றீரே ! பல்சான்றீரே ! என்று விளித்த பிறகு
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்
என்று கூறுவது தகுமா ? அருங்குணங்களால் நிரம்பப்பெற்ற சான்றோர்கள் தீமை பயக்கும் செயல்களைச் செய்வார்களா என்ற கேள்வி எழுகிறதல்லவா ? என்ன செய்வது ! சிலசமயங்களில் மதிக்கண் பட்ட மறு போல சான்றோர்களும் குற்றம் இழைத்துவிடுகிறார்கள் .
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு . ( வாய்மை - 299 )
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற விளக்கு . ( பிறனில் விழையாமை - 148 )
என்ற குறட்பாக்கள் உணர்த்துவது என்ன ? பொய் பேசலும் , பிறன்மனை நயத்தலும் சான்றோர்மாட்டும் நிகழ்கின்ற குற்றங்கள் என்பது தெரிகிறதல்லவா !
அறத்தைச் சொல்லும் முறையிலே இரண்டு வகையுண்டு .
" அதைச் செய் ; இதைச் செய் " என்று ஆணையிட்டுச் சொல்வது ஒருமுறை. " அதைச் செய்ய முடியாவிட்டால் இதையாவது செய் " என்று இறங்கிவந்து கேட்டுக்கொள்வது மற்றோருமுறை .
" நல்லது செய்தல் ஆற்றுக " என்று சொல்வது ஆணையிட்டுச் சொல்வதாகும்.
மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் பேசாமல் இருங்கள் ; அதனால் தவறு ஒன்றுமில்லை ;ஆனால் தீங்கு பயக்கும் செயல்களை மட்டும் செய்துவிடாதீர்கள் என்பதைத்தான்
நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்
என்று சொல்கிறார் . இது இறங்கிவந்து கேட்டுக் கொள்வதாகும் .
இந்த உத்தியை வள்ளுவரும் கையாளுகிறார்.
" கற்க கசடற " என்று கற்றலின் அவசியத்தை ஆணையிட்டு வலியுறுத்தும் வள்ளுவர் , கல்லா மாந்தர்பால் இரக்கம் கொண்டு " கற்றிலனாயினும் கேட்க " என்று சொல்லுவார் .
' ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து " என்று கூறும் வள்ளுவர் , அது முடியாதபோது நாக்கையாவது அடக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்ற கருத்துப்பட " யாகாவாராயினும் நா காக்க " என்று கூறுவார் .

தொடர்ச்சி
நரை முதுமையின் அடையாளமா?
பெரும்பான்மையான இலக்கியப் பதிவுகள் உடல் தளர்வையும் நரையையும் முதுமையின் அடையாளமாகக் காட்டுகின்றன. புறநூற்றில் பெருஞ்சித்திரனார் (புறம். 159), கழாத்தலையார் (புறம். 270) மதுரைப்பூங்கண் உத்திரையார் (புறம். 277) ஆகியோர் பாடல்களில் இப்பதிவு இடம்பெற்றிருந்தாலும் பிசிராந்தையார் நரைக்குப் புதிய விளக்கம் ஒன்றைத் தருகிறார். அப்பாடல் வருமாறு,
யாண்டு ஆகியர்? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே (புறம்.191)
இப்பாடலில் அவர் தனக்கு வீட்டிலோ, ஊரிலோ, நாட்டிலோ எவ்விடத்திலாயினும் கவலை தருகிற நிகழ்வுகள் நடப்பதில்லை. அதனால் எனக்கு வயது முதிர்முந்துதிருந்மைதாலும் நரை தோன்றவில்லை.நரை தோன்றுவதற்கு முக்கியக் காரணம் முதுமையன்று மனக்கவலையே என உறுதிபடக் குறிப்பிடுகின்றார். ஆண்கள் இளமையில் குடுமி வைத்திருத்தலும் பின்னர் குமரப்பருவத்தில் குடுமி களைதலும் நடக்கும் என்பது போன்ற பதிவுகளும் புறநானூற்றில் இடம்பெறுகின்றன. (புறம். 77, 273,279) இந்நிகழ்விற்குச் சமூகக் காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதைக் கிடைக்கும் பதிவுகள் கொண்டு உறுதிசெய்ய முயற்சிக்கின்றேன்.
சமூக விழுமியம் : மயிர் தொடர் – 3
(பதிற்றுப்பத்திலிருந்து)
முன்தொடர் சுருக்கம்
மன்னன் நல்லாட்சி நடத்தும் நாட்டிலும் அவன் ஆதரவுடைய நாட்டிலும் அவன் ஆதரவுடைய நாட்டிலும் வாழும் பெண்கள் கூந்தலில் பூச்சூட்டி கணவரோடு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றும் போர்ப்பயம் உள்ள பாதுகாப்பற்ற சூழலில் வாழும் பெண்கள் இருக்கும் வீதிகளில் பூ விற்கும் பெண்கள் கூட செல்வதில்லை என்றும் அறியமுடிந்தது. மேலும் நரையினை முதுமையின் அடையாளமாகப் பெரும்பாலான இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்க, புறநானூறு அது மனத்தின் தன்மையைப் பொறுத்தது என்று சுட்டிக்காட்டுகிறது. அதோடு கணவனை இழக்கும் பெண்கள் உடன்கட்டை ஏறும்போது கூந்தலைக் களைவதல்லை என்றும் கைம்மையை ஏற்கும்போது அவர்கள் இதுவரை பாதுகாத்துவந்த கூந்தலினைக் களைகிறார்கள் என்றும் பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் கண்டோம். இனி………….

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் . ( கூடாவொழுக்கம்- 278 )
இந்தக் குறளில் வந்துள்ள " மாண்டார் "என்ற சொல்லும் ,மேலே கண்ட புறப்பாடலிலே வந்துள்ள " மாண்ட "
என்ற சொல்லும் ஒரே பொருளினதா அன்றி வேறுபாடு கொண்டதா என்பதை விளக்கவும் .
மறைந்தொழுகு மாந்தர் பலர் . ( கூடாவொழுக்கம்- 278 )
இந்தக் குறளில் வந்துள்ள " மாண்டார் "என்ற சொல்லும் ,மேலே கண்ட புறப்பாடலிலே வந்துள்ள " மாண்ட "
என்ற சொல்லும் ஒரே பொருளினதா அன்றி வேறுபாடு கொண்டதா என்பதை விளக்கவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 12