புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
155 Posts - 79%
heezulia
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
1 Post - 1%
Pampu
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
320 Posts - 78%
heezulia
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)


   
   

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Mon 8 Aug 2016 - 0:12

First topic message reminder :

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)

உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
            ஊரார்கண் படட்டும் படட்டும்
            உற்றார்கண் படட்டும் படட்டும்
            ஆடவர்கண் படட்டும் படட்டும்
            உண் கண்ணே பட ட்  டும்
                       
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது.      (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்)  பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா  சீயக்காய்  நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................                     (ஃபாரவர் ( forever)  இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு  இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு,  மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும்  இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே  மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.

கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8)  மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.

நரை கூந்தல் - முதுமை

தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ………………………                                                         (நற். 10: 1-4)

என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல்  முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை

அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)

என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.

புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.


கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்

முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.

……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)

என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)

சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக்  கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது

அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே          (நற். 141 ; 11 – 12)

என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ  - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)

மேற்குறித்த பாடல்கள்  பொருள்வயிற் பிரிந்தால்  தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.

பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று  கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)

வணர்ந்து  ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்                 (நற். 139; 7- 8)

நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு     ( நற். 197 :5>6)

இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.

கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்

திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில்  ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்

நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)

எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு

                      நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)

தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம்  ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 16 Aug 2016 - 23:44

புலவி நுணுக்கம் என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறட்பாக்களுக்கும் உரைவிளக்கம் தந்த முனைவர் அவர்களுக்கு மிக்க நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed 17 Aug 2016 - 0:49

தொடர் – 2

புறநானூற்றில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கிறது.

மன்னர் வீரமும் பெண்கள் கூந்தல் நிலையும்

போர் நடைபெறும் காலத்தில் மன்னன் பகை மன்னனை எதிர்த்துப் போரிடாமல் மதில் அடைத்து உள்ளிருந்தால் மக்கள் அடிப்படை பொருள்களைப் பெற இயலாமல் வருந்துவர் என்பதைக் கூறவரும் இடைக்காடனார் தம் பாடலில்

அலமரல் யானை உருமென முழங்கவும்
பால் இல் குழவி அலறவும்,மகளிர்
பூஇல் வறுந்தலை முடிப்பவும், நீர்இல்
வினைபுனை நல்இல் இனைகூஉக் கேட்பவும்
இன்னது அம்ம, ஈங்கு இனிது இருத்தல் (புறம். 44: 6 – 9)

என்று குறிப்பிடுகிறார். இதில் யானைகள் உணவின்றி இடியேறு போல பிளிறவும் குழந்தைகள் பாலின்றி வருந்தவும் பெண்கள் பூவின்றி வெறுங்கூந்தல் முடிவதும் குடிநீரின்றி வீட்டினர் வருந்தவும் என்று வருகின்றது. புலவர் வருத்தம் தரும் பற்றாக்குறையுடைய உணவு, பால், நீர் ஆகியவற்றுடன் பூவையும் ஒன்றாகச் சேர்த்திருப்பதால் அதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது.

எந்த நாட்டில் மன்னன் பெருவீரனாகவும் இரக்க குணம் உடையவனாகவும் இருக்கின்றானோ அவனுடைய நாட்டு மக்கள் மட்டுமல்ல அவன்தாள் பணிந்த பகைநாட்டு மக்களும் வளமாக வாழ்வர். அப்படிப்பட்டவன் சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய இளஞ்சேட்சென்னி என்று அவன் பெருமையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் எனும் புலவர் தம் பாடலில் சிறப்பித்துச் சொல்லுகிறார். அப்பாடலின் தொடக்கத்தில் மகிழ்ச்சியில் சோழநாட்டு உழத்தியர் எப்படி இருக்கின்றனர் என்பதைக் கூறும்போது

கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்
சிறுமான் நெய்தல் ஆம்பலொடு கட்கும்                 (புறம். 61:1,2)

என்கிறார். மருதவளம் மிகுந்த சோழன் சென்னியின் நாட்டில் வாழும் உழத்தியர் தங்கள் கொண்டைகளில் தழையை அணிந்து வயலில் பயிர்களுக்கிடையே உள்ள ஆம்பலையும் நெய்தலையும் களைந்து ஒதுக்குகின்றனர் என்று கூறுவதனால் மன்னன் சிறப்புற ஆளும் நாட்டில் பெண்கள் மகிழ்ச்சியினால் கூந்தலில் மலரல்லாத சிறுதழைகளையும் அணிவதை அறியமுடிகிறது.

வேறொரு பாடலில் சோழன் நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி படையெடுத்து வருவதனை அறிந்து பணிந்தால் உயிரையும் தருவேன் உள்ளத்தை இகழ்ந்தால் அவன் பிழைத்தல் அரிது. ஒருவேளை நான் அவ்வாறு செய்யாமல் போனால் என் மாலை பொதுப்பெண்டிரைத் தழுவுவதில் குழைவதாகுக என்று இப்படி

………………………………………….பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்இருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக என்தாரே!          (புறம். 73:11 – 14)

என்று வஞ்சினம் கூறுகின்றான். இப்பாடலில் பொதுமகளிரைக் குறிக்கும்போதும் அவர்கள் அன்பற்றவர்களாக இருந்தாலும் பலவாகிய கரிய கூந்தலை உடையவர்களாக இருக்கின்றனர் என்று காட்டப்படுகிறது.

அதியமான் நெடுமான் அஞ்சிக்குத் திரை செலுத்தாமல் அவன்மீது போர் தொடுக்கக் கருதிய மன்னர்கள் அதியனின் பெருமையை உணரவேண்டும் என்பதற்காக ஔவை அவனுடைய பெருமைகளை எடுத்துக்கூறி இதை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்றால்

சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்
கழற்கனி வகுத்த துணைச்சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடுமினே.    (புறம். 97:22 – 25)

என்று பாடுகிறார். இதில் வரும் மெல்லிய இயல்புடையவளும் கழற்கனியால் கூறுசெய்து சுருட்டப்பெற்று இனமாகிய சிலவாக அமைந்த கூந்தலை உடையவரும் சிறிய வளையலணிந்தவருமான நும் உரிமை மகளிர் தோளினை விட்டுப் பிரிந்துறைதல் வியப்புக்குரியதன்று (புறநானூறு,தொகுதி – 1 பக். 235 என். சி. பி. எச் வெளியீடு) என்பது அதியனின் பெருமையை உணராது போருக்கு எழும் அரசர்களுக்கு ஔவை விடும் இறுதி எச்சரிக்கையாக இருக்கின்றது.

மேற்கூறப்பட்ட பாடலில்உரிமை மகளிரின் கூந்தலின் தன்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. துணைச்சில் ஓதி என்பதற்கு ஔவை க. துரைசாமிப்பிள்ளை அவர்கள் இனமாகிய சிலவாகிய பனிச்சையையும் என்றும் பனிச்சை என்பதற்குத் தலைமயிரை முடிக்கும் ஐவகையுள் ஒன்று என்றும் விளக்கம் தருகின்றார்.(புறநானூறு,தொகுதி – 1 பக் 226 கழக வெளியீடு)

அரச மகளிர் தங்கள் கூந்தலைப் பலவகையாகப் பிரித்து அழகுபடுத்திக் கொண்டனர் என்று தெரிகின்றது. ஏனென்றால் புறநானூற்றில் மக்களைக் குறித்து வரும் இடங்களில் வெகுசாதாரணமாகவே பூஇல் வறுந்தலை முடித்தனர் என்றும் உழத்தியர் கொண்டையிட்டிருந்தனர் என்றும் பொதுமகளிர் பல்இருங் கூந்தலுடையவராக இருந்தனர் என்றும் வருகின்றது. ஆகையினால் கூந்தல் ஒப்பனையின் மூலம் அக்காலச் சமூக, பொருளாதார நிலையினைக் கண்டறிய முடியுமா? என்பதைப் பதிவுகள்வழி அறிய முயற்சி செய்வோம்

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed 17 Aug 2016 - 0:53

வணக்கம்
நன்றி  ஐயா. அவ்விளக்கங்கள் யாவும் கலைஞரின் கைவண்ணம். நான் எளிய பொருள் கருதி எடுத்துக் கொடுத்தேன். என் பணி அவ்வளவே.
நன்றி.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed 17 Aug 2016 - 12:13

தொடரட்டும்

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed 17 Aug 2016 - 21:04

தொடர் – 2 புறநானூற்றின் தொடர்ச்சி

விறலியர் கூந்தல்

வறுமையுற்ற காலத்தும் பாணனுடன் மன்னர்களைக் காணச் செல்லும் விறலியர் தங்கள் இன்முகம் மாறாது மணக்கும் கூந்தல் உடையவர்களாக இருப்பதைக் கோவூர் கிழார்
பாதிரி கமழும் ஓதி ஒள்நுதல்
இன்நகை விறலி …………………… (புறம். 70:14, 15)
என்று தம்பாடலில் சுட்டிக் காட்டுகின்றார். அதைப்போன்றே கபிலர் தம்பாடலில் விறலியர் பற்றிக் கூறும்போது

விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின்வர (புறம். 109:16)

என மணம்பொருந்திய கூந்தலை உடையவர்கள் என்று குறிப்பிடுவதனைக் காணலாம். மேலும் ஆய் அண்டிரனிடம் விறலியை ஆற்றுப்படுத்தும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனும் புலவர் தம் பாடலில் விறலியை

………………………………… மாண்ட நின்
விரைவளர் கூந்தல் வரைவளி உளரக்
கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி
மாரி யன்ன வண்மைத்
தேர்வே ளாயைக் காணிய சென்மே (புறம். 133:3 – 7)

மழையைக் கண்ட மயிலானது மகிழ்வது போல ஆய் எனும் மன்னனைக் காண மகிழ்ந்து செல் என்று கூறுவதாக வருகின்றது. விரைவளர் கூந்தல் வரைவளி உளர என்ற தொடரினை விளக்க ஔவை துரைசாமிப்பிள்ளை கொண்டை மேற் காற்றடிக்க என்பதொரு வழக்கு பற்றி நின்றது என்றும் வளியுளரப்பட்ட கூந்தல் மயிற்தோகை போல் காட்சியளிப்பதால் மயில் போல் செல்க என்றார் என்றும் கொடிச்சி கூந்தல் போலத் தோகை யருஞ்சிறை விரிக்கும் (ஐங்.300) என்று சான்றோர் கூறுதல் காண்க என்றும் கூறுகின்றார். (புறநானூறு,தொகுதி – 1, பக். 281 கழக வெளியீடு)

கொண்டை மேற் காற்றடிக்க என்பதொரு வழக்கு பற்றி நின்றது எனும் தொடருக்கான விளக்கம் அல்லது வழக்கம் எவ்விடத்தது என்பது பற்றி அறிந்தோர் கூறலாம். விளக்கம் தொடராசிரியராலும் தேடப்படுகிறது.



முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu 18 Aug 2016 - 0:05

தொடர் – 2 புறநானூற்றின் தொடர்ச்சி

கூந்தலைத் தீண்டுதற்குரியர் யார்?

பெண்ணின் கூந்தலைத் தீண்டுதற்கு உரிமை உடையவர் அவள் கணவனே என்பதைக் கபிலர் பாடல்கள் உறுதிசெய்கின்றன. வேள்பாரி மூவேந்தர்களின் சூழ்ச்சியால் இறந்தபோது அவனுடைய இருபெண்களையும் அழைத்துக்கொண்டு பார்ப்பாரிடம் அடைக்கலமாக ஒப்புவிக்கப் பறம்பு மலையை விட்டுக் கபிலர் புறப்படுகிறார். அப்போது பறம்பு நோக்கி பின்வருமாறு பாடிச் செல்கிறார்.

………………………………பெரும்பெயரப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே (புறம்.113:7 – 9)

இப்பாடலில் தாம் பறம்பை விட்டுச் செல்லுதற்குரிய காரணத்தைக் குறிப்பிடுகின்றார். அதாவது, மகளிர்க்குரிய கிழவரைப்படர்ந்து என்றால் மணந்த கணவனாலன்றி மகளிர் கூந்தல் பிறரால் தீண்டப்படாததாகலின் அம்மரபு நோக்கி மணம் கமழும் கூந்தலைத் தீண்டுதற்குரிய தலைவனை நினைத்துச் செல்கின்றோம் எனும் பொருள்படும்படி இவ்விதம் கூறப்பட்டிருப்பதாக ஔவை க. துரைசாமிப்பிள்ளை குறிப்பிடுகின்றார். (புறநானூறு,தொகுதி – 1 பக். 249 கழக வெளியீடு)

இக்கருத்துடைய பாடல் குறுந்தொகையிலும் (பாடல் 225)கலித்தொகையிலும் (பாடல் 101) இடம்பெற்றுள்ளன. மேலும் பாரிமகளிர் கூந்தல் பற்றிச் சொல்லும் போது பொதுப்பட இரும்பல் கூந்தல் மடந்தையர் (புறம்.120: 17) என்றும் கூறுகின்றார்.

வேறொரு பாடலில் பாணனை நாஞ்சில் வள்ளுவனிடம் ஆற்றுப்படுத்தும் மருதநில நாகனார் நாஞ்சில் வள்ளுவனின் பல்வேறு சிறப்பு கூறி அறிமுகப்படுத்துவதோடு

ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் (புறம். 138:8)

என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது, அவனது சிறப்புக்களுள் ஒன்றாகத் தழைத்த கரிய கூந்தலையுடைய ஆயிழைக்கு இவன் தலைவன் என்பதும் எண்ணப்படுவதை இங்குக்காணலாம். கணவனைச் சுட்டி அறிதலில் பெண்ணும் பெண்ணைச் சுட்டி அறிதலில் கூந்தலும் அடையாளமாக இருப்பதை அறியமுடிகிறது.

இல்லறத்தின் மகிழ்வைப் பெண்ணின் கூந்தல் புனைவைக் கொண்டு அறிந்து கொள்ளமுடியும் என்பதை அரிசில்கிழார் பாடல் தெரிவிக்கின்றது. பேகன் தன் மனைவியைப் பிரிந்து வாழ்வதாகக் கேள்வியுறும் புலவர் மனைவியுடன் அவனைச் சேர்த்துவைப்பதற்காக காணச் செல்கிறார். தன் அவைக்கு வருகை தந்த புலவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பேகன் பரிசளிக்கின்றான். அதை மறுக்கும் புலவர் நான் இங்கு வந்த காரணம் நீதரும் இப்பரிசிலைப் பெற்றுச்செல்வதற்காக அன்று உன் பிரிவாலும காண்போரின் இரக்கத்தாலும் வருந்தி மெலிந்து கூந்தல் பொலிவழிய வாடியிருக்கும் உன் மனைவி மகிழ்ச்சியினால் மயிற்தோகை ஒத்த தன் கூந்தலை முடித்து மணமூட்டும் விதமாகப் பூச்சூட்டிக் கொள்ள வேண்டும். ஆகவே நீ அவள் வீட்டிற்குச் செல்ல உன் தேரைப் பூட்டுக அதுவே நான் விரும்பும் பரிசில் என்று கூறுவதாகப் பாடல் வருகின்றது. அப்பாடல் வருமாறு,

………………………………………………… நீ
நல்காமையின் நைவரச் சாஅய்
அருந்துயர் உழக்கும் நின்திருந்து இழை அரிவை
கலிமயில் கலாவம் கால் குவித்தன்ன
ஒளிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇ
தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே (புறம்.146:5 – 11)

மற்றொரு பாடலில் பெருங்குன்றூர் கிழார் எனும் புலவர் கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள் தங்களைப் புனைந்து கொள்ளாதிருப்பதையும் அவர்களின் கூந்தல் நெய் பூசப்படாது இருத்தலையும் கணவன் வரவு அறிந்தால் மகிழ்ச்சியில் தங்களைப் புனைந்து கொள்வதில் ஈடுபாடு காட்டுதலையும் கூந்தல் கழுவப்பெற்று புதுமலர் சூட்டப்படுவதையும் எடுத்துரைக்கின்றார். அப்பாடல் வருமாறு,

கார்வான் இன்னுறை தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்
புதுமலர் கஞல இன்று பெயரின்
அதுமன் எம் பரிசில் ஆவியர் கோவே! (புறம். 147: 3 – 10)

இப்பாடலில் கணவன் மனைவி மகிழ்ச்சியினைக் காட்டுவதில் கூந்தல் முக்கிய இடம்பிடிப்பதை அறியமுடிகிறது. கணவருடன் கூடியிருக்கும் பெண்கள் பூச்சூடுவதும் கணவரைப் பிரிந்த பெண்கள் வருத்தத்துடன் கண்களில் கண்ணீர் சொரியக் கலங்குவதுமாக இவ்வுலகம் படைக்கப்பட்டுள்ளது. அதில் நாம் இனியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக இயல்பைப் பக்குடுக்கை நன்கணியார் தம் பாடலில்

ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்தண் முழவின் பாணிததும்பப்
புணர்ந்தோர் புவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்! (புறம். 194: 1 – 5)

என்று உரைக்கின்றார்.

(தொடரும்)


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 18 Aug 2016 - 10:30

கூந்தலைத் தீண்டும் உரிமை கணவனுக்கு மட்டுமே உண்டு என்ற கருத்து கபிலரின் பாடல்களில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் . குறுந்தொகை (225) , கலித்தொகை (101) ஆகிய பாடல்களிலும் இக்கருத்து காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் .

பின்வரும் பாடலைப் பாருங்கள் .


சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே;
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே;
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே;
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே;
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே;
.............................................................( புறம்- 235 )

என்ற புறப்பாடலில் அதியமான் தன் தலையைத் தடவிக் கொடுப்பதாக அவ்வைக் குறிப்பிடுகிறார். தலையைத் தடவுதலும் , கூந்தலைத் தொடுவதும் ஒன்றுதானே ! கூந்தலைத் தீண்டும் உரிமை கணவனுக்கு மட்டுமே உண்டு என்றால் , அதியன் தீண்டியது சரியா ? தவறா ?






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri 19 Aug 2016 - 1:35

தோழமைக்கு வணக்கம்.


புறப்பாடலில் அதியமான் தன் தலையைத் தடவிக் கொடுப்பதாக அவ்வைக் குறிப்பிடுகிறார். தலையைத் தடவுதலும் , கூந்தலைத் தொடுவதும் ஒன்றுதானே ! கூந்தலைத் தீண்டும் உரிமை கணவனுக்கு மட்டுமே உண்டு என்றால் , அதியன் தீண்டியது சரியா ? தவறா ?

உங்கள் கேள்வி நன்று ஐயா

தலையைத் தடவிக்கொடுக்கின்றான் என்று வருகின்றதே அன்றி அதியன் ஔவை கூந்தலின் வாசம் முகர்ந்தான் என்றோ கூந்தலில் படுத்துறங்கினான் என்றோ,  படுத்துறங்க விரும்பினான் என்றோ, ஔவையை நினைக்குந்தோறும் அவள் கூந்தலும் கூந்தல் மணமும் நினைவுக்கு வருகின்றது என்றோ பாடல் பதிவு இல்லை. தொடரில் எடுத்துக்காட்டப்பட்ட பதிவுகள் யாவும்   ஆணுக்குத் தன் பெண்ணின் மீதான உரிமை உணர்வைக் காட்டப் பயன்படுத்தப்பட்டவை.  

தோழமையுடன் தலையைத் தடவ தந்தைக்கு, உடன்பிறந்தானுக்கு, நண்பனுக்கு , ஆன்றோருக்கு உரிமை   உண்டு. அதியனுக்கு ஔவை தோழியாவாள்.

சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன்
றீகுநரு (மில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
றீயாது வீயு முயிர்தவப் பலவே.         (புறம்.235)

தாங்கள் எடுத்துக்காட்டியது கையறுநிலைப்பாடல். அப்பாடலை ஊன்றிக் கவனித்தால் அவர்களுக்கு இடையே இருந்த தோழமை தெரியும்.

அதியன் இறந்தபோது அவனின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல்  அவன்                                          செயல்களை யெல்லாம் பட்டியலிட்டு வரும்போது

ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன்
றீகுநரு (மில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
றீயாது வீயு முயிர்தவப் பலவே.  

என்று ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ எமக்குத் தந்தையாக இருந்தவன்  எங்கே உள்ளான். இனிப்பாடுவார்க்கு ஒன்று தருவாரும் இல்லையே நீர்த்துறையின்கண் உள்ள பகன்றைப் பெரும்பூ எவர்க்கும் பயன்படாது கழிவது போல,வறிதே மாய்ந்து போகும் உயிர்களே இனி பலவாகும் என்று இரவலர்களைப் புறப்பதில் அவன் தந்தையாக இருந்தான் என்கிறார் ஔவை. மேலும் பாடலின் வேறொரு இடத்தில்

நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே

என்கிறார். இவ்வடிகளுக்கு உரைதரும் ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தான் காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலான், நரந்தப்பூ நாறும் தன்னுடைய  கையால் தான் அருளுடைமையின் புலால் நாறும் எம்முடைய தலையைத் தடவுவன் அது
கழிந்தது என்கிறார்.

இதில் அறிவது அதியன் தன் காதலியருக்கு மணமுடைய மலர்களைச் சூட்டுவதனால் அவன் கை எப்பொழுதும் மணமுடையதாகவே இருக்கின்றது. அத்தகு மணமுடைய கைகளைக் கொண்டு என் மீது கொண்டிருந்த அருளினால் புலால் நாறும்  என் தலையைத் தடவி விடுவான். இனி அது இருக்காது என்று ஔவை குறிப்பிடுவதை அறியமுடிகிறது. ஆதலின் ஔவையிடம் அதியன் கொண்டிருந்தது காதல் அல்ல. அவன் காதலியரை ஔவைச் சுட்டிக்காட்டுகிறபோது அவர்களுள் ஒருவராகத் தன்னை அடையாளம் காட்டவில்லை. அதியனை அருளுடையவனாக எந்தை (எந்தை – எம் தந்தை) என்றே குறிப்பிடுவதைக் காணலாம். ஆகவே அதியன் தோழனாக, புரவலனாக, தந்தையாக, ஔவையின் தலையைத் தொட்டது தவறில்லை ஐயா.

        என் படிப்பின் தொடர்ச்சியில் இதற்குரிய இலக்கியப் பதிவுகள் வேறு இருப்பின் பதிவுசெய்கிறேன்.  

நன்றி.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri 19 Aug 2016 - 1:53

தொடர் – 2 புறநானூற்றின் தொடர்ச்சி

பூவிற்கும் பெண் வேறிடம் செல்லுதல் (புறம்.293)

நொச்சி நியமங் கிழார் எனும் புலவர் பூக்கோட்காஞ்சி எனும் துறையை விளக்கவரும் தம் பாடலில்,நாட்டில் போர் தொடங்குகிறது என்பதை அறிவிக்க மன்னன் முதலில் போர்ப்பறையும் பின்னர் பூக்கோட்பறையும் கொட்டுவான் என்று கூறுகிறார். தொடர்ந்து படை வீரர்கள் அடுத்து ஒலிக்கும் பூக்கோட்பறை கொட்டுமளவிற்கு காலந்தாழ்த்தாது முதல் பறைஒலி கேட்டவுடனேயே போருக்கு ஆயத்தமாவார்கள். அவ்வாறன்றி காலம்தாழ்த்துவாரை நாணுடை மாக்கள் என்று சொல்லுகிற வழக்கம் உண்டென்பதைப் புலவர் பதிவு செய்கிறார்.

மேலும் இப்பாடல் நாட்டில் போர்ப்பூவைச் சூடுமாறு போர்ப்பறை முழங்கிய உடனே அங்கு வாழும் மனைமகளிர் இனி தனித்திருந்து வருந்துவர் பூவைச் சூடார் என்று கருதிப் பூ விற்கும் பெண் எம் போன்ற மனைமகளிர் வாழும் பகுதியைத் தவிர்த்துப் போருக்கு ஆகார் எனத் தவிர்க்கப்பட்ட பார்ப்பார், நோயாளி, குழந்தைகளற்றார் ஆகியோர் வாழும் பகுதிக்குச் சென்று விட்டாளோ என்று அவளின் நிலைக்கு வருந்திக் கூறுவதாக வருகின்றது. இக்கருத்துணர்த்தும் பாடல்

எம்மினும் பேர்எழில் இழந்து வினை எனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே பூவிலைப் பெண்டே! (புறம். 293:4 – 7)

என்பதாகும். தன் தனிமைத் துயரினும் பூவிற்கும் பெண்ணின் விற்பனைக் குறைவால் அப்பெண்ணுக்கு ஏற்படும் பொருளாதாரக் குறைவே மிகுதி என்பது தோன்றக் காட்டுவதன் மூலம் கணவனுடன் உள்ள பெண்கள் கூந்தலில் பூச்சூடி மகிழ்ச்சியாகவும் மற்றவர் வருத்தத்துடன் இருப்பதையும் தெளிவாக ஆசிரியர் பதிவுசெய்கிறார்.
(தொடரும்)

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 19 Aug 2016 - 12:25

ஒளவையின் மீது அதியன் அளப்பரிய நட்பு பாராட்டினான் . அதனாலேயே ஒளவையின் தலையைத் தடவும் அளவுக்கு உரிமை பெற்றிருந்தான் என்பதை அறிந்துகொண்டேன் . விளக்கத்திற்கு மிக்க நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக