புதிய பதிவுகள்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
60 Posts - 42%
ayyasamy ram
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
57 Posts - 40%
T.N.Balasubramanian
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
4 Posts - 3%
prajai
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
423 Posts - 48%
heezulia
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
76 Posts - 9%
T.N.Balasubramanian
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
29 Posts - 3%
prajai
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)


   
   

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sun Aug 07, 2016 10:42 pm

First topic message reminder :

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)

உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
            ஊரார்கண் படட்டும் படட்டும்
            உற்றார்கண் படட்டும் படட்டும்
            ஆடவர்கண் படட்டும் படட்டும்
            உண் கண்ணே பட ட்  டும்
                       
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது.      (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்)  பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா  சீயக்காய்  நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................                     (ஃபாரவர் ( forever)  இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு  இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு,  மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும்  இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே  மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.

கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8)  மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.

நரை கூந்தல் - முதுமை

தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ………………………                                                         (நற். 10: 1-4)

என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல்  முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை

அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)

என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.

புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.


கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்

முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.

……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)

என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)

சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக்  கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது

அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே          (நற். 141 ; 11 – 12)

என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ  - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)

மேற்குறித்த பாடல்கள்  பொருள்வயிற் பிரிந்தால்  தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.

பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று  கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)

வணர்ந்து  ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்                 (நற். 139; 7- 8)

நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு     ( நற். 197 :5>6)

இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.

கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்

திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில்  ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்

நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)

எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு

                      நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)

தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம்  ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.


முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sun Aug 14, 2016 4:04 pm

நற்றிணையின் தொடர்ச்சி

திருமணத்திற்கு முன்னும் பின்னும் கூந்தல் நிலை

திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்களை நன்கு அழகுபடுத்திக் கொண்டதனைக் கூறும் பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று

தலைவிக்குத் தலைவன் தன்னை விரும்புகிறான் என்று நன்றாகவே தெரியும். தன்னைக் காண்பதற்காகத்தான் அவன் இங்கு வந்துள்ளான் என்பதை அறிந்த நிலையிலும் ஏதும் அறியாதவள் போன்று தலைவனைக் கடந்து தன் தோழியர் கூட்டத்துடன் செல்கிறாள். அதைக் காணும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்வதாக வரும் பாடல் இது.

கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறுகோல்இணரபெருந்தண் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரி
புலர்விடத்து உதிர்த்து துகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம் உவப்ப ……………..
………………………………………………………………….
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும்……………. (நற்.140:1-8)

இப்பாடலில் பெண்கள் கூட்டம் குளிர்ச்சி பொருந்திய சந்தனத்துடன் பலவித நறுமணப் பொருள்களையும் சேர்த்தரைத்த குழம்பினைக் கூந்தலில் பூசி ஐவகையாகப் பகுத்து அழகாக வாரியிருக்கின்றனர். கூந்தலில் பூசப்பட்ட நறுமணச் சாந்தம் உலர்ந்து துகள்களாக உதிர்ந்திருப்பதனைப் பாடல் குறிப்பிடுகின்றது.

பின்னிய குளிர்ந்த கூந்தலை உடையவளாக இருந்ததனை பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ! (நற். 227: 4) என்ற பாடலும் ஐம்பால் வகுத்த கூந்தல் (நற். 160:6) எனக் கூந்தல் ஐவகையாகப் பாகுபாடு செய்யப்பட்டிருந்ததையும் தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல் (நற். 137:1) மெல்லிய மணம் உடையதாய் தாழ்ந்து விளங்கும் கரிய கூந்தல் எனவும் மயிலின் தோகையுடன் ஒப்பிட்டு இருபாடலும் (நற். 264 : 1- 6, 265: 7 – 9 )

புறம்தாழ்பு இருண்ட கூந்தல் (நற். 284:1) வான்முகை, இரும்போது கமழும் கூந்தல் (நற். 298: 10,11) தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே (நற். 301:9) பிற்றை, வீழ்மா மணிய புனை நெடுங் கூந்தல் (நற். 374:5,6) விரும்பத்தக்க கரிய மணிபோலும் அலங்கரிக்கப்பெற்று கரிய கூந்தல் எனவும் வெறிகமழ் துறுமுடி தயங்க….. (நற். 308: 6) நறுமணம் வீசுகின்ற நெருங்கிய குழல் முடித்த கொண்டையுடன் இருப்பவள் என்றும் கூந்தல் நிலையைப் பாடல்கள் காட்டுகின்றன.

பெண்கள் நீண்ட கூந்தலை உடையவர்களாய் எப்பொழுதும் தங்கள் கூந்தலை மணமுடையதாகவே வைத்திருக்க விரும்புபவர்களாய் பாடல்களில் காட்டப்படுகின்றனர். திருமணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கையில் தலைவி தன்னை அலங்கரித்துக் கொள்வதும் அலங்காரத்தில் கூந்தல் சிறப்பிடம் பெறுவதும் சுட்டப்படுகிறது.

தலைவன் தலைவியை நினைக்குந்தோறும் அவன் நினைவில் தங்குவது அவளுடைய மணமுடைய கூந்தல் என்பதைப் பதிவுகளால் அறியமுடிகிறது. கூந்தல் மகிழ்ச்சியால் அவிழ்ந்து குலைதலையும் துக்கத்தில் கூந்தலை விரித்துப் போடுவதையும் பாடல்கள் பதிவுசெய்துள்ளன. இப்படி மகிழ்ச்சி,துக்கம் என உணர்வுகளை வெளிப்படுத்த கூந்தலைப் பயன்படுத்தியதைப் போன்றே ஒருவரை இழிவுபடுத்தவும் பயன்படுத்தியிருப்பதனை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.


முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sun Aug 14, 2016 4:06 pm

கூந்தல் அறுத்தல் – இழிவு

நற்றிணையின் 270ஆவது பாடலில் பரணர் பரத்தையிற் பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் தலைவியை நாடி வருகின்றான். அவனைத் தலைவியுடன் எதிர்கொள்ளும் தோழி அவனை நோக்கி நறுமணம் மிகுந்த இருளொத்து விளங்கும் செறிந்த கூந்தலை உடைய தலைவி வருந்துமாறு நீ பிரிந்து சென்றது எப்படி இருக்கிறது என்றால் நன்னன் எனும் மன்னன் தன் பகை மன்னர்களைத் தோற்றோடச் செய்தது மட்டுமல்லாமல் அவர்களுடைய மகளிர்தம் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரித்த செயல் அன்று கொடுமையாகக் கருதப்பட்டது. அக்கொடுமையை விட பெருங்கொடுமையாக உன் செயல் இருப்பதாகக் கூறுகின்றாள். அப்பாடல் வருமாறு

……………………………………பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே
மறப்பல் மாதோ, நின் விறற் தகைமையே. (நற். 270:7 – 11)

இதில் தோழி கூறும் நன்னன் செயல் கவனித்தற்குரியது. மன்னர் இருவர் போர் செய்யும் போது வென்றோர் தோற்றோரை இழிவுபடுத்த செய்த செயல்கள் அக்கால்த்தில் பல. அவற்றுள் சில இங்கே

 தோற்றோர் நாட்டின் நிலங்களைப் பயனற்றதாக்குதல்
 கலைச்செல்வங்களைச் சிதைத்தல்
 செல்வங்களைக் கொள்ளையடித்தல்
 பெண்களை அடிமையாக்குதல்

போன்றவை. இவற்றினும் மிக இழிவானதாகக் கருதப்படுவது தோற்றவன் தலைமயிரையும் ஒருபக்கத்து மீசையையும் எடுப்பது. ( கண்ணன் ருக்மணியை அவள் விருப்பத்தின் பேரில் அழைத்துச் செல்லும் போது ருக்மணியின் தமையன் ருக்மி கண்ணனுடன் போரிடுகின்றான். போரில் தோற்கும் ருக்மியை இழிவுபடுத்த கண்ணனின் தமையன் பலராமன் ருக்மியின் ஒருபக்கத்து மீசையையும் தலையின் ஒருபக்கத்து மயிரையும் எடுக்கிறான் என்பது பதிவு) அந்த வரிசையில் தோற்ற பகை மன்னன் நாட்டு மகளிரின் கூந்தலை அறுத்துக் கயிறாகத் திரித்த நன்னன் செயல் மிக இழிவானதாகத் தோன்றுகிறது.

வரலாற்றில் மயிர் எனும் உறுப்பைக் கொண்டு நடந்தேறிய இது போன்ற இழிசெயல்கள் அநேகம். அவற்றை அறிய ஆர்வமா? காத்திருங்கள் அடுத்த தொடரில் சந்திப்போம். வணக்கம்.

நற்றிணைப் பதிவுகள் நிறைவுற்றன.

தொடர் – 2 புறநானூற்றிலிருந்து


avatar
Guest
Guest

PostGuest Sun Aug 14, 2016 4:35 pm

பூச்சூடுதலும் சூடாதிருத்தலும் பெண்களுக்கு துன்பம்தானா. தலைவியின் சந்தேகம்- ஏன் இந்தச் சந்தேகம் எப்போதும் பெண்களுக்கு?
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

பூவீழ்ந்தது வண்டேமதி போல்வீழ்ந்தது வண்டே
நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே ….........இதுவும் துன்பம் தான்.
கூந்தல் விரித்தலும் கூழை விரித்தலும் ஒன்றா?

கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள்நோக்கே ….... பின்னிய கூந்தல், தமிழர் பண்பாட்டில் குறிப்பிட்ட வயதிற்கு பின்னரே பூச் சூடலாம் என்றும், அந்த வயதிற்கு முன்னர் பூச் சூடுவது இல்லை என்று சொல்லப்படுவது உண்மையா? இன்றல்ல அன்று.

ஒரு குடும்பப் பெண் வாசனைப் பொருள், பூ, புடவை போன்றவற்றைப் பற்றி அந்நிய ஆடவனிடம் விசாரிப்பது விரசம் என்கிறார் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி. தலைவனிடம் இருந்து பூவைப் பெற தலைவி பூ வாடியும் அவனுக்காக காத்திருக்கிறாள் அதுவும் துன்பம் தான்.பூவிற்குள் பண்பாட்டை வைத்த தமிழனின் உயரிய பண்பாடு இன்று எங்கே போயிற்று?

விடை தெரியாத பல கேள்விகள் . நன்றி.


முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Mon Aug 15, 2016 12:41 am

தோழமைக்கு வணக்கம்

கூழை – பெண்டிர் தலைமயிர் (கூழை விரித்தல் தொல்.பொ.262) நீண்டு வளராத பெண்ணின் தலைமயிர் கூழை என்று அழைக்கப்படுகிறது.

கூழை – கூந்தல் இரண்டும் ஒன்றுதான். மயிர் எனும் உறுப்பைக் குறிக்க வருகின்றன. மேலும் தாங்கள் எழுப்பியுள்ள

பின்னிய கூந்தல், தமிழர் பண்பாட்டில் குறிப்பிட்ட வயதிற்கு பின்னரே பூச் சூடலாம் என்றும், அந்த வயதிற்கு முன்னர் பூச் சூடுவது இல்லை என்று சொல்லப்படுவது உண்மையா? இன்றல்ல அன்று.
என்ற கேள்விகளுக்கான பதிலை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் தம் தமிழ்க்காதல் நூலில் எடுத்துக்காட்டியுள்ள கருத்துக்களை அப்படியே ஏற்பதில் எனக்குச் சிரமம் இருக்கின்றது. (பக்.132 – 140,இரண்டாம் பதிப்பு 2005,மெய்யப்பன் பதிப்பகம்) என்றாலும் சரியான ஆதாரங்களைத் தேடிக்கொண்டும் திரட்டிக் கொண்டும் இருக்கிறேன். காரணம் செவ்விலக்கியங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் போது பல புதிய கருத்துக்கள் வெளிப்படும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஒருவேளை மாறாமலும் இருக்கலாம். கருத்து எதுவாயினும் நம் தமிழ்ப் பண்பாட்டிற்குக் குறைவு ஏற்படாது என்பது உறுதி.

இதுவரை செவ்விலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகிய ஐந்து நூல்களை முழுமையாகப் படித்து தகவல்களைத் திரட்டியிருக்கிறேன். தரவு திரட்டுதல் தொடர்கிறது. தரவுத் தொகுப்பு முடிவடையும் போது உறுதியாகத் தமிழறஞர் கருத்துக்கள் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் பல புதிய வெளிச்சங்களை மீள்வாசிப்பு ஏற்படுத்தும்.

மேற்குறித்த கேள்விகளை மனதில் இருத்தியே இத்தொடர் பயணிக்கும். உங்கள் கேள்விகள் என் கருத்தோட்டத்திற்கு வலிவு சேர்க்கும்.

தோழமைக்கு நன்றி.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 15, 2016 9:23 am

singai wrote:
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள்நோக்கே ….... பின்னிய கூந்தல், தமிழர் பண்பாட்டில் குறிப்பிட்ட வயதிற்கு பின்னரே பூச் சூடலாம் என்றும், அந்த வயதிற்கு முன்னர் பூச் சூடுவது இல்லை என்று சொல்லப்படுவது உண்மையா? இன்றல்ல அன்று.

[You must be registered and logged in to see this link.]

கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடை யாய்உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடையாள் மணவாளா திருவரங் கத்தே கிடந்தாய்
மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்.

பிள்ளைத் தமிழ் பாடிய பெரியாழ்வார் , கண்ணனுக்கு மல்லிகைப் பூச்சூட்டி மகிழ்கின்றார் . ஆழ்வார்கள் காலம் கிபி 600 முதல் கிபி 900 வரை சொல்லப்படுகிறது. எனவே அக்காலத்திலேயே குழந்தைகளுக்கும் பூச்சூடும் வழக்கம் இருந்ததுஎன்பது தெரியவருகிறது .

singai அவர்களுக்கு ஒரு விண்ணப்பம் .

தாங்கள் மேற்கோள் காட்டும் செய்யுள் பற்றிய விவரங்களை தெரிவித்தால் , தேடுவதற்கு எளிதாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 15, 2016 2:43 pm

மூதறிஞர் மாணிக்கனார்  தனது பாட நூலில் அகத்திணை தோற்றம் பற்றி விளக்கம் கொடுக்கும் போது,  சங்ககாலத்தில் ஒருபெண் திருமணமாகும்போது, முதலில் சிறுபிள்ளைப்பருவம் முதலாக அணிந்திருந்த ஒருவகைச் சிலம்பு நீக்கப்பட்டு, கூந்தலில் மலர்சூடுவது ஓர் அடையாளம் ஆனது என்றும், பெண் மணமானவள் என்பதைக் காட்ட இந்த முறை வந்தது என்றும்,திருமணத்திற்கு முன்னர் மலர் சூடும் வழக்கம் இல்லை என்றும் விளக்கம் கூறுகிறார். இதற்கு அவர் அகநானூற்றுப்  பாடலையும், கலித்தொகை,குறுந்தொகை பாடலையும்  எடுத்துக் காட்டுகிறார்.அத்துடன் திருமணமான பெண் ஒருவர் தலையில் பூச் சூடி இருந்தாள் என்றால் அவள் காதலிக்கிறாள் எனவும்,காதலன் சூட்டிய பூவே அது என்றும் விளக்கம் தருகிறார்.

இதே போல் பேராசிரியர் பாலசுப்பிரமணியனார் தனது பாட நூலில்,யார் கொடுத்தது இப்பூ?  என்பதில் ஒரு வயதிற்கு முன்னர் பெண்கள் பூ வைப்பதில்லை என்பது பண்டைய மரபு என்றும், கூந்தலை பின்னி விடுவது மட்டுமே எனவும் பூச் சூடுவது இல்லை எனவும் விளக்கி இருந்தார்.

இதே போல் முனைவர்  இரா குணசீலன் அவர்கள்,(கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி) பெண்களும் மலரணிதலும் என்ற அவர் கட்டுரையில்,சங்க காலத்தில் குமரிப்பெண்கள் தலையில் பூச் சூடுவதில்லை என விளக்கம் தருகிறார்.

இவை நான் படித்தவை. செய்யுள் வரிகளை வேண்டுமானால் அவர்கள் கட்டுரைகளை தேடிப் படித்து பின்னர் தருகிறேன்.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Mon Aug 15, 2016 4:08 pm

தோழமைக்கு வணக்கம்

தாங்கள் எடுத்துக்காட்டிய நூல்களையும் கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன் அனைவரின் கருத்திலும் ஏதோ ஒருநிலையில் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்களின் கருத்தையே அடிப்படையாகக் கொண்டிருப்பதை அறியமுடிகிறது. இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்தின் மீதான ஐயம் நம்மிடையே இன்றும் நிலவி வருகின்றது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணப்படவேண்டும். ஆம் என்றால்ஆம். இல்லை என்றால் இல்லை. இது சாத்தியமா? என்பது ஒருபக்கம். என்றாலும் முயற்சி செய்யலாமே.

பெண்கள் கூந்தலில் பூச்சூடுவது மட்டுமன்று கூந்தலைப் பின்னுதல், கூந்தல் விரித்தல், கூந்தல் முடிதல், கூந்தல் களைதல் என அவ்வுறுப்பு சார்ந்த ஒவ்வொரு செயல்பாட்டிலும் நம் முன்னோர் பொதிந்து வைத்த பண்பாட்டை முதலில் நாம் உணர்ந்து பின் உலகோர்க்கு உணர்த்த வேண்டியது அவசியம். அதற்கு அறிஞர் பெருமக்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ள தகவல்கள் மட்டும் போதுமானவை அல்ல என்பது என் கருத்து.

பண்டைக்காலத்தில் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு அல்லது வழக்கம் திடீரென மறைவது சாத்தியமில்லை. அதைப்போன்றே திடீரென தோன்றுவதும் சாத்தியமல்ல. நம் வரலாறு முறைப்படி எழுதிவைக்கப்பட வில்லை. கிடைக்கும் இலக்கியங்கள், கல்வெட்டுகள்,செப்பேடுகள் என யாவற்றிலிருந்தும் தகவல் திரட்டுவேன்.

என் தொடரின் மீதான தங்கள் விவாதங்களைக் கருத்துக்களை என்றும் வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.


முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Mon Aug 15, 2016 4:17 pm

சமூக விழுமியம் – மயிர் தொடர் – 2 (புறநானூற்றிலிருந்து)

முன்தொடர் சுருக்கம்

பெண்கள் நீண்ட கூந்தலை உடையவர்களாய் எப்பொழுதும் தங்கள் கூந்தலை மணமுடையதாகவே வைத்திருக்க விரும்புபவர்களாய் பாடல்களில் காட்டப்படுகின்றனர். திருமணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கையில் தலைவி தன்னை அலங்கரித்துக் கொள்வதில் கூந்தல் சிறப்பிடம் பெறுவதும் சுட்டப்படுகிறது. தலைவன் தலைவியை நினைக்குந்தோறும் அவன் நினைவில் தங்குவது பெரும்பாலும் அவளுடைய கூந்தல் என்பதைப் பதிவுகளால் அறியமுடிகிறது. பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது அவர்களின் கூந்தல் அவிழ்ந்து குலைந்திருத்தலையும் துக்கத்தில் கூந்தலை விரித்து முகம் புதைப்பதையும் பாடல்கள் பதிவுசெய்துள்ளன. இப்படி மகிழ்ச்சி, துக்கம் என உணர்வுகளை வெளிப்படுத்த கூந்தலைப் பயன்படுத்தியது போன்றே ஒருவரை இழிவுபடுத்தவும் பயன்படுத்தியிருப்பதனை நற்றிணையிலிருந்து கண்டோம்.

இனி தொடர்ந்து ஒவ்வொரு செவ்விலக்கிய நூல்களில் இருந்தும் இவ்வுறுப்பு தொடர்பான பதிவை இத்தொடர் முன்வைக்கும்.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9766
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 15, 2016 5:24 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 15, 2016 9:10 pm

singai wrote:பூச்சூடுதலும் சூடாதிருத்தலும் பெண்களுக்கு துன்பம்தானா. தலைவியின் சந்தேகம்- ஏன் இந்தச் சந்தேகம் எப்போதும் பெண்களுக்கு?
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
[You must be registered and logged in to see this link.]


சங்ககாலத்தில் ஆண்கள் பூச்சூடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் .  கலித்தொகையில் ஆண்கள் பூச்சூடும் பாடல்கள் உண்டு .இக்குறள் அக்கருத்தை உறுதிப்படுத்துகிறது .

கோடு என்றால் கிளை என்று ஒரு பொருளுண்டு . கோட்டுப்பூ என்றால் மரக்கிளையிலே பூத்த பூ என்றும் , கொம்பிலே பூத்த பூ என்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் உரை எழுதுகிறார்கள் . ஆனால் பரிமேலழகரோ கோட்டுப்பூ என்றால் பூ மாலை என்று பொருள்கொள்கிறார்.

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. ( புலவிநுணுக்கம் -1313 )

தோழியை நோக்கித் தலைவன் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது . புலவிநுணுக்கம் என்றால் நுட்பமாகப் பொய்ச்சினம் கொள்ளுதலாம் .

" நான் என்ன செய்தாலும் தலைவி அதிலே குற்றம் காண்கிறாள் . வழக்கமாக நான் சூடுகின்ற   பூவுக்கு மாறாக , மரக் கொம்பிலே பூத்த பூவைச் சூடினாலும் சினம்கொண்டு , " எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்காகவே இப்பூவைச் சூடியுள்ளீர்கள் " என்று சொல்கிறாள் . நான் என்ன செய்வேன் ? " என்று தோழியிடம் தலைவன் கேட்கிறான் .

தலைவன், மற் றொருத்தி பார்க்கவேண்டும் என்பதற்காக மலர் சூடுகிறானே என்று எண்ணி தலைவி வருத்தம் கொள்கிறாள் .ஆகவே அவனைப் " பரத்த " என்று அழைக்கிறாள் .

பரத்தை என்னும் சொல்லுக்கு ஆண்பால்  பரத்த  என்பதாகும் .வள்ளுவரின் புதிய சொல்லாக்கங்களுள் இதுவும் ஒன்று .வள்ளுவர் கூறும் பரத்தை பொருட் பெண்டிர் அல்லர்; வரைவின் மகளிர் அல்லர்; இருமனப் பெண்டிர் அல்லர் . பரத்தையர் தொடர்பு அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் . மாதவியின் தொடர்பால்  கண்ணகி வருத்தமுற்றாலும் , கோவலனை வெறுத்து ஒதுக்கவில்லை .திரும்ப வரும்போது அவனை ஏற்றுக் கொள்கிறாள் . " போற்றா ஒழுக்கம் புரிந்தீர் " என்றுமட்டும் சொல்லி அத்தோடு நிறுத்திக் கொண்டாள் .

ஆகவே அக்காலப் பெண்கள் தலைவன் பூச் சூடுகிறானே என்று கவலை கொள்ளவில்லை ; யாரை எண்ணி பூச்சூடுகிறான் என்பதில் மட்டுமே கவலை கொண்டனர் என்பது இக்குறளால் தெரிய வருகிறது .

காமத்துப்பால் முழுவதும் கற்பனை  களஞ்சியமாக விளங்குகிறது . ஆனால் துளியும் விரசமில்லாத காமம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக