புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
181 Posts - 77%
heezulia
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
10 Posts - 4%
prajai
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
1 Post - 0%
Shivanya
#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_m10#படித்ததில்_அதிர்ந்தது!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

#படித்ததில்_அதிர்ந்தது!!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 11:40 am

சில வருடங்களுக்கு முன்னால் என் நண்பரின் மாமா ஒருவர் காரில் ஈரோட்டில் இருந்து கோவை வந்து கொண்டு இருந்தார்.

அவர் கோவையில் ஒரு பவர் full மருத்துவர். அப்போது இரவு ஒரு மணி.

வரும் வழியில் ரோட்டில் ஒரு வாலிபர் உடல் இருந்தது. எல்லா வண்டியும் மெதுவாக அந்த உடலை தாண்டி சென்றது.

இவர் டாக்டர் என்பதால் உடனே வண்டியை பிரேக் போட்டு நிருத்தி ஓடிச் சென்று அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்து இருக்கிறார்.
உயிர் இல்லை. இப்போதுதான் போய் இருக்கிறது. மண்டையில் அடி. சில மணி நேரமாக ரத்தம் கசிந்துதான் இறந்து உள்ளார். யாருமே உதவவில்லை போலும். இருட்டில் பார்த்த போது மண்டையில் பலத்த அடி. உடம்பு எல்லாம் சிராய்ப்பு. அவரால் என்ன நடந்தது என்று யூகிக்க முடியவில்லை. ரத்தம் கசிவதை தடுத்து இருந்தால் அவர் உயிர் காப்பாற்றபட்டு இருக்கும் என்று மட்டுமே அவரால் யோசிக்க முடிந்தது.

துடிதுடித்த டாக்டர் அவர் சடலத்தை நடு ரோட்டில் இருந்து நகர்த்தி சாலையின் ஓரம் வண்டிகள் சடலத்தின் மீது ஏராமல் இருக்கும்படி வைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு அருகே உள்ள ஒரு காவல் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். நடந்தவற்றை கூறி உள்ளார். உடனே duty யில் இருந்த inspector, டாக்டரின் எல்லா தகவல்களையும் வாங்கி வைத்துக் கொண்டு அவர் மனிதாபிமானத்தை பாராட்டிவிட்டு அவருக்கு ஒரு காபி
வரவழைத்து குடிக்க வைத்து உள்ளார்.

டாக்டருக்கு ஆதங்கம். ஸார் அடிபட்டு எப்படியும் ஒரு ரெண்டு மூணு மனி ஆகியிருக்கும். முன்னாடியே யாராவது help செய்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்... சே ..யாருமே நிருத்தவில்லை ஸார் ... என்று நொந்து கொண்டார். Inspector அதுக்கு...நீங்க வந்து சொன்னதே ஒரு பெரிய உதவி ஸார் ... நன்றினு சொல்லிவிட்டு அவர் spot க்கு கிளம்பிவிட்டார்.

Wireless அலறும் காவல் நிலையத்தில் கேட்க ஆரம்பித்தது. டாக்டர் கோவை. வரும் வரை அந்த உயிரை காப்பாற்றி இருக்கலாம் எந்த எண்ணம் மனதில் ஓடிக் கொண்டே இருந்து... இந்த சமுதாயம் சீர் கெட்டு விட்டது. ஏன் இப்படி எல்லாரும் வண்டியை நிறுத்தாமல் சென்றார்கள் என்ற கேள்வி அவரை துளைத்து எடுத்தத்து" என்றார்

இந்த சம்பவத்தை அவர் என்னிடம் சொன்ன போது நானும் அவரின் நல்ல உள்ளத்தை பாராட்டினேன். விடுங்க சார்...எல்லோரும் உங்களை போல் இருக்க மாடடார்கள். நீங்கள் டாக்டர். ஒரு சமுதாயத்தின் பார்வை உங்களுக்கு வேறு மாதிரி இருக்கிறது. டாக்டர்கள் எப்பவும் கடவுளுக்கு அடுத்து உயர்வானவர்கள். உயிரை காப்பாறும் கடவுள் போன்றவர்கள் என்றேன்.

உடனே அவர் " நீங்க வேற ஸார் ... நான் part -1 மட்டும் தான் சொன்னேன்". மீதியை கேளுங்கள் என்றார்.

Part 2:

ஒரு மாதம் கழித்து இவருக்கு ஒரு போன் கால்.
அதே inspector த்தான் கூப்பிட்டார். ஸார் ஒரு சின்ன formality. நீங்க நாளைக்கு பத்து மணிக்கு வரனும் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
ஒரு மாசம் கழித்து ஏன் போன் என்று ஒரே குழப்பம் டாக்டருக்கு.

டாக்டர், தன் எல்லா appointment களையும் cancel செய்துவிட்டு அந்த காவல் நிலையம் மீண்டும் சென்றார்.
இரவில் பார்த்த காவல் நிலையம் வேறு..பகலில் பார்க்கும் காவல் நிலையம் வேறு.

அங்கு அதே இன்ஸ்பெக்டர்...சாருக்கு ஒரு சூடான காபி என்று ஒரு அதட்டு அதட்டினார்.

காபி டாக்டரின் தொண்டையில் இறங்கும் போது ... இன்ஸி ...ஒரு குண்டை தூக்கி போட்டார்.
ஸார், அன்னிக்கி நீங்க பார்த்தது அது கொலை case ஸார்.
யாரோ மண்டியில் கடபாரையில் அடித்து போட்டு இருப்பாங்க போல. Postmortem சொல்லுது.
யாருனு ஒரு மாசமா தேடுறோம் ஆளே கண்டுபிடிக்க முடியல.

பைய்யன் பிஹாரி. கூலி தொழில் செய்ய வந்தவன்னு trace செய்துட்டோம்.

நாங்க யார் கொலையாளினு கண்டுபிடிக்க முடியல. மேல இருந்து ஏகப்பட்ட pressure.

கேசை முடிக்கனும். உங்க உதவி தேவை என்றார்.
டாக்டர் உஷாராகி... ஸார் நான் என் வக்கீலோடு வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வர பார்த்து உள்ளார்.

ஸார், பயப்படாதீங்க. நான் சொல்வதை மட்டும் நீங்க சொல்லுங்க..மீதியை நாங்க பாத்துக்குறோம்.
இதுக்கு உங்க லாயர் எல்லாம் வேண்டாம் என்றார். அப்படியே லாயர் வந்தாலும் இதே procedure தான்.
உங்களுக்குத்தான் காசு விரயம்....

இன்ஸி ...சார் ..சார் tension ஆகாதீங்க.

இது கொலை caseன்னு postmortem செய்த டாக்டர் சொன்னாலும்நாங்க FIR report ல் accident னு தான் நாங்க பதிவு செய்து இருக்கோம்.

ஆளை நேரில் பார்த்த ஒரே சாட்சி நீங்கதான். கோர்ட்டுக்கு வந்து ஒரே வரி சொன்னா போதும்.
என்னனு சொல்லனும் ஸார்? என்று டாக்டர் கேட்டு உள்ளார்.

அதுக்கு inspector.....வெரி சிம்பிள் சார்.
" வண்டி வரும் போது ரோட்டில் ஒருத்தன் இருட்டில் தள்ளாடிகிட்டே வந்தான். திடீர்னு ஒரு காருக்கு முன்னாடி தள்ளாடி வந்து விழுந்ததை பார்த்தேன்.
எவ்வளவு அழுத்தி பிரேக் போட்டும் அந்த காரை நிருத்த முடியல. நான் இறங்கி போய் பார்த்தேன் ..ஆள் ஸ்பாட் அவுட். சாராய வாடை ..." ... அவ்வளவுதான் ஸார்.

Doctor அதுக்கு...சார் accident ஓக்கே. நான் எந்த வண்டியும் அவரை மோதினதை பார்க்கவில்லையே சார்..நீங்க எந்த வண்டியை சொல்றீங்க " என்றார்.

அதுக்கு இன்ஸ்பெக்டர் " சார், அந்த காரை ஓட்டினது நீங்க தான். அது உங்க கார்தான்...டாக்டரின் கார் நம்பரை inspector ஒப்பித்தார்."...

ஜஸ்ட் இது ஒரு பார்மாலிட்டி. நீங்கதான் சம்பவத்தை பார்த்த ஒரே ஆள். செத்தவனும் பீஹாரி. ஆல்ரெடி பாடியை எரிச்சாச்சு.

ஒரு பிரச்சனையும் வராது சார். நான் பாத்துக்குறேன் என்றார்.

உடனே டாக்டர்..சாரி இன்ஸ்பெக்டர்... இதுக்கு நான் ஒதுக்க மாட்டேன். நீங்க வேற ஆள் பாருங்க நான் வரேன் என்றவரிடம்...

சார், நோ பிராப்லம் சார் ...இப்போ போங்க .... monday வந்தா போதும். ஏட்டய்யா போன் செய்வாரு என்றவுடன்...மீண்டும் டாக்டர் அடங்கி போனார்.

டேய் ....டாக்டருக்கு ஒரு பிரியாணி சொல்லு என்று சவுண்டு அந்த காவல் நிலையத்தில் தானே ஒலித்தது.

இன்ஸி ..பேச ஆரம்பித்தார். சார் இது ஒரு சிம்பிள் கேஸ். ஜுட்ஜ் எல்லாம் கரெக்ட் செய்தாச்சு. ஒரே கேள்வி கேட்பார். அரசு வக்கீல் அறிவழகன்தான்.
ஒன்னும் அதிகமா குறுக்கால கேட்கமாட்டார். இதுக்காக நான் ஒரு புது ஆளை கூட்டிட்டு வந்து செட் செய்தால் நல்லா இருக்காது சார்.

ஒரு டாக்டர் வந்து சாட்சி சொன்னா கேஸ் ஹெவியா இருக்கும்... அதான். நாளைக்கு பிரச்சனை எதுவும் வந்தாலும் ஈஸியா முடிச்சிடலாம். கேஸ் கட்டில் எல்லாம் எழுதியாச்சு. உங்க signature மட்டும் பாக்கி. போட்டுட்டு போயிடுங்க. Hearing வரும் போது வந்தா போதும். வந்து போற செலவு, சாப்பாடு எல்லாம் நாங்க பாத்துக்குறோம்.

ஏட்டு, சார் கிட்ட ஒரு சைன் வாங்கிக்கிட்டு அனுப்பி வைய்யா என்றார்.

ஆறு மாதம் இழுத்து இழுத்து எட்டு முறை கோர்ட் சென்று உயிரை காப்பாற்ற போன ஒரு டாக்டர் ஒரு கொலையாளியாய் அந்த case ல் இருந்து கதற கதற வெளியே வந்தார்.

அன்று முதல் அவர் உச்சா வந்தால் கூட காரை நடு வழியில் நிருத்துவதில்லை.
தானே போய் ரோட்டில் எந்த உதவியையும் செய்வதில்லை.

டாக்டர் தொழிலிலும் தன் வரம்பை மீறி accident case களை தொடுவதில்லை.

ஒரு மனிதன் மிருகமாக மாற ஒரு சமுதாய கட்டமைப்புதான் காரணம்.

சென்னையில் அந்த பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் மனம் எல்லாம் கல் இல்லை. மனிதாபிமானம் இல்லா மக்களும் இல்லை.

தண்ணீரில் மூழ்கியவனை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியவர்கள் தான் சென்னை மக்கள்.

ஒரு காலத்தில் எல்லோரும் டாக்டரை போல காப்பாற்றி கொண்டுதான் இருந்தார்கள்.

அவர்களை சிலை ஆகியது இந்த அரசியல்வாதிகள்தான்.

அரசியல்வாதிகள் சட்டத்தை கையில் எடுத்து இன்று எது கொலை, எது தற்கொலை எது விபத்து என்பதை அவர்களே முடிவு செய்ய பழக்கி விட்டார்கள். இதை வேடிக்கை பார்த்து, பார்த்து மக்களும் பழகிவிட்டார்கள். இவர்கள் கல்லால் செதுக்கப்பட்ட ஒரு சமுதாயம். நின்றவர்கள் நம்மை போன்ற சிலைகள்.

ஒரு ரயில் நிலயமே இரண்டு மணி நேரம் எதுவும் செய்யாமல் இருக்கிறது என்றால் தப்பு அன்று மட்டும் நடக்கவில்லை.

இது பல ஆண்டுகளாக நடந்துகொண்டு கொண்டுதான் இருக்கிறது.

ரயில்வே ஸ்டேஷனில் எத்தனை எத்தனை டாக்டர்கள்.

எல்லோரையும் டாக்டருக்கு படிக்க வைத்த பெருமை நம் அரசியவாதிகளுக்கே போய் சேரும்.

#படித்ததில்_அதிர்ந்தது!!!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 30, 2016 11:58 am

சுவாதி விவகாரத்தில் மக்கள் பின்வாங்கியது இதற்காகத்தான் . போலீசிடம் மாட்டிக்கொண்டால் , அவன் குடும்பம் அதோகதிதான் !

இதைத்தான் வள்ளுவர் ,

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை .

பொருள் : ஒவ்வொருவர் இயல்பையும் அறிந்து அவர்க்குத் தக்கவாறு செயலாற்றுதல் வேண்டும் .இல்லாவிட்டால் நன்மை செய்வது கூடத் தவறாகிவிடும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:01 pm

M.Jagadeesan wrote:சுவாதி விவகாரத்தில் மக்கள் பின்வாங்கியது இதற்காகத்தான் . போலீசிடம் மாட்டிக்கொண்டால் , அவன் குடும்பம் அதோகதிதான் !

இதைத்தான் வள்ளுவர் ,

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை .

பொருள் : ஒவ்வொருவர் இயல்பையும் அறிந்து அவர்க்குத் தக்கவாறு செயலாற்றுதல் வேண்டும் .இல்லாவிட்டால் நன்மை செய்வது கூடத் தவறாகிவிடும் .
மேற்கோள் செய்த பதிவு: 1213440

அவன் நல்லா 10 நிமிடங்கள் பேசிவிட்டுத்தான் கொன்று இருக்கான் என்று ஒரு பேப்பரில் போட்டிருக்காங்க ஐயா, பேசி விட்டு, பிறகு அவளின் செல்போனையும் எடுத்துக்கொண்டு போயிருக்கான், ஒரு மாதமாய் அவளை follow செய்து இருக்கான்.........அவள் சிநேகிதி இப்போ சொல்கிறாளாமே....ஏதோ கொஞ்சம் குழப்பம் இருக்கு......ஆனாலும், இவங்க (போலீஸ் ) மெத்தனத்தை பார்க்கும்போது, YG மகேந்துரு சொல்வது போல இருக்கவும் சான்ஸ் இருக்கே ! .... அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
நாம ஒண்ணும் சொல்வதற்கு இல்லை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 30, 2016 12:20 pm

YGM ஜாதிசாயம் பூசுகிறார் . நம்முடைய முதல்வரே , அப்பெண்ணின் ஜாதியைச் ( அய்யங்கார் ) சேர்ந்தவர்தான் . போலீஸ் துறை முதல்வரின் பொறுப்பில் உள்ளது . அப்படி இருக்கும்போது போலீஸ் மெத்தனம் காட்ட விடமாட்டார் .

கொலையாளி படுகில்லாடியாக இருப்பான்போல தெரிகிறது . எந்தத் தடயத்தையும் விட்டுவைக்கவில்லை .எனக்கு ஒரு சந்தேகம் ! அவன் இந்தியாவில்தான் இருக்கிறானா அல்லது மல்லையா போல் வெளிநாட்டுக்குத் தப்பி சென்றுவிட்டானா என்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:48 pm

M.Jagadeesan wrote:YGM ஜாதிசாயம் பூசுகிறார் . நம்முடைய முதல்வரே , அப்பெண்ணின் ஜாதியைச் ( அய்யங்கார் ) சேர்ந்தவர்தான் . போலீஸ் துறை முதல்வரின் பொறுப்பில் உள்ளது . அப்படி இருக்கும்போது போலீஸ் மெத்தனம் காட்ட விடமாட்டார் .

கொலையாளி படுகில்லாடியாக இருப்பான்போல தெரிகிறது . எந்தத் தடயத்தையும் விட்டுவைக்கவில்லை .எனக்கு ஒரு சந்தேகம் ! அவன் இந்தியாவில்தான் இருக்கிறானா அல்லது மல்லையா போல் வெளிநாட்டுக்குத் தப்பி  சென்றுவிட்டானா என்று .
மேற்கோள் செய்த பதிவு: 1213443

அப்படிக்கூட ஓடமுடியுமா என்ன?.........சினிமா போல இருக்கே! ............தோண்டத்தோண்ட விஷயம் விஸ்வரூபம் எடுக்கும் போலிருக்கே ! ........... ஒன்னும் புரியல



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 30, 2016 1:26 pm

YGM:- அய்யயோ அதை நான் சொல்லல ! பின்வாங்கி விட்டாரே!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 30, 2016 2:47 pm

நடு  ரோடில்  இருவர் அடிதடி சண்டையில் ஈடுபட்டிருந்தால் , அதை தடுக்க பலர் முன் வருவார்கள் .ஏனென்றால் அவர்கள் கையில் கத்தியோ துப்பாக்கியோ இருக்காது .
ஆனால் கையில் ஒரு சிறு கத்தி இருந்தால் கூட , தடுக்க யாரும் முன் வரமாட்டார்கள் . தங்கள் உயிருக்கு
ஆபத்து வந்து விடுமோ என்ற பயம் .
வீராவேசமாக ,சினிமாவில் கிளர்ந்து எழும் கதாநாயகர்கள் /நாயகிகள் கூட இது மாதிரி சமயத்தில் , வாய் மூடி டம்மியாகத்தான் நிற்பார்கள் .
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி தப்பிக்க காரணம் அவனிடம் இருந்த கத்திதான் .ரெயில்வே போலீசும் இருந்திருந்தாலும்  இது நடந்திருக்க கூடும் .
சாதாரண விஷயம் . 95 %  ஜனங்கள் கையில் மொபைல் போன் உள்ளது   போட்டோ என் எடுக்கவில்லை ?
அந்த காமன் சென்ஸ் கூட இல்லையா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 30, 2016 5:43 pm

சுவாதியின் மொபைலை கொலையாளி எடுத்துச் சென்றுவிட்டான். இந்த நிலையில் வேறு யாராவது மொபைலில் போட்டோ எடுத்திருந்தால் , அவர்களையும் அவன் போட்டுத் தள்ளியிருப்பான் . அந்தக் கோரக் காட்சியைப் பார்த்த முதியவர் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்துள்ளதே ! எனவே அந்தப் பயங்கரமான சூழலில் போட்டோ எடுக்க யாருக்கும் தோன்றாது ; தப்பிக்கத்தான் பார்ப்பார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 10:14 pm

எல்லோரும் பயத்தில் உறைந்து இருப்பார்கள் என்று எண்ணுகிறேன் ..........ஆனால் அப்புறமாவது அந்த பெண்ணுக்கு என்ன ஆச்சு என்று கிட்டே போய் பார்த்திருக்கலாம்.....பாவம் சோகம் .....ரயில்வே ஸ்டேஷன் லிருந்து கூட யாரும் வந்து பார்க்கலை பாருங்கோ அது தான் ரொம்ப மோசமாய் தெரிகிறது எனக்கு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 01, 2016 1:41 pm

யார் யார் என்ன ஜாதியென்று இங்க யாரும் கேட்கலையே அப்புறம் நீங்க எதுக்கு முந்திகிட்டு சொல்லுறீங்க க்ரிஷ்ணாம்மா ,

இந்த பதிவை , குப்பைக்கு நகர்த்திடலாம்னு நினைக்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக