புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
21 Posts - 70%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
6 Posts - 20%
viyasan
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
213 Posts - 42%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 5 of 34 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 19 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 19, 2016 1:31 pm

போதல்;செல்லுதல் இரண்டிற்கும் சிறிய வேறுபாடுண்டு.
போவது என்பது மீண்டும் வராமல் போகிறான்.வற்புறுத்தலுடனும் சந்தேகத்துடன் நிகழ்வது? இன்று போய் நாளை வாராய்,என் கண் முன் நிற்காதே போய்த் தொலை
செல்லுதல்-செல்கிறான் அப்படியல்ல. திரும்பி வருவான்.

காலம்பெற- காலம் பெற - மருவிய சொல் அல்ல. நல்ல தமிழ் சொல்லாகும்.காலையை பெறுதல் என்பது குறிப்புவினைஎச்சமாக வந்து காலம்பெற ஆயிற்று.பெறுதல் என்பது பெற்றுக் கொள்ளுதல் எனப் பொருள்படும். குழந்தை பெறுதல்,பரிசு பெறுதல்.காலம் என்பதற்கு காலை,பருவம் நேரம் எனப் பொருள்படுகிறது. ஏன் காலம் பெறுதல் என்றும் அது காலம்பெற என்றும் ஆயிற்று ?

இன்று சர்வதேச முறையில் நள்ளிரவில் இருந்து நள்ளிரவு வரை ஒரு நாளென கணக்கிடுகிறார்கள்.ஆனால் முன்பு உலகில் மூன்று முறையாக நாளை கணக்கிட்டார்கள். மேற்கத்தியர்கள் நள்ளிரவில் இருந்து மறுநாள் நள்ளிரவு வரை ஒரு நாளாகவும்,இஸ்லாமியர்கள் மாலை ஆறில் இருந்து மறுநாள் மாலை ஆறு வரை ( நோன்பு காலத்தைக் கவனிக்கலாம்-பிறையை வைத்து) ஆகவும், தமிழர்கள் காலையில் இருந்து மறுநாள் காலை வரை ஒரு நாளாகவும் நாளை கணக்கிட்டார்கள்.

இப்படி காலையை அதிகாலை பிறந்து வருவதால் காலையை பெறுதல் -காலம் பெறுதல் என்றும் -அது காலம்பெற என்ற குறிப்புவினை எச்சமாகியது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 2:03 pm

மூர்த்தி அவர்களின் விளக்கத்திற்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 3:13 pm

சிறப்புப் பேருந்துகள் , தனிப் பேருந்துகள் - எது சரி ?

மகாமகத்தையொட்டி சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் விடப்படும் என்று பத்திரிகைகளில் படிக்கிறோம்.

இது சரியா ?

சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு வழக்கமாகச் செல்லும் பேருந்துகளைவிட , அதிக எண்ணிக்கையில் விடப்படும் பேருந்துகளை " சிறப்புப் பேருந்துகள் " என்று சொல்கிறார்கள் .

ஆனால் உண்மையில் " சிறப்புப் பேருந்துகள் " என்றால் என்ன ? சாதாரணப் பேருந்துகளைவிட அதிக வசதிகளைக் கொண்ட பேருந்துகளையே , " சிறப்புப் பேருந்துகள் " என்று அழைக்கவேண்டும் .

ஆகவே

மகாமகத்தையொட்டி கும்பகோணத்திற்குத் " தனிப் பேருந்துகள் " விடப்படும் என்பதே சரி .

சாதா தோசையைக் காட்டிலும் அதிக சுவையாக இருப்பதையே நாம் Special Dosai என்கிறோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 3:33 pm

பண்டகசாலையா ? பண்டசாலையா ? - எது சரி ?

பண்டம் என்றால் பொருள் . எனவே பொருட்கள் வைக்குமிடம் " பண்டசாலை " என்றே அழைக்கப்படுதல் வேண்டும்.

பண்டகசாலை என்பது தவறு.

பண்டகன் என்ற சொல்லுக்கு அலி என்று பொருள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 5:44 pm

காக்காய் வலிப்பா ? கால்கை வலிப்பா ?- எது சரி ?

கால்கை வெட்டிவெட்டி இழுப்பதையே கால்கை வலிப்பு என்று சொல்கிறோம். இதை ஆங்கிலத்தில்
EPILEPSY என்று அழைப்பர் .

கால்கை வலிப்பு என்ற சொல்லானது மருவி காக்காய் வலிப்பு என்று ஆகிவிட்டது .

இதேபோல ஒரு காரியம் ஆகவேண்டி அவன் கால்கை பிடிக்கிறான் என்பதையே , காக்காய் பிடிக்கிறான் என்று சொல்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Jun 19, 2016 6:04 pm

அருமை ஐயா..
மிக எளிமையாக புரிந்துகொள்ளும் விதமாக உள்ளது.




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Jun 19, 2016 6:05 pm

இந்த திரியின் தலைப்பை ஒரு பொதுவான தலைப்பாக மாற்றலாமே ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 7:05 pm

ஆம் நீங்கள் சொல்வது சரிதான் ! என்ன தலைப்பு வைப்பது ? நீங்களே சொல்லுங்களேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 7:21 pm

எண்ணை , எண்ணெய் - எது சரி ?

எள் + நெய் = எண்ணெய்

அதாவது எள்ளிலிருந்து எடுக்கப்படுவது நல்லெண்ணெய் என்று சொல்கிறோம் . எண்ணெய் என்றாலே அது நல்லெண்ணெய்தான் . தற்போது எண்ணெய் என்ற சொல் பொதுச் சொல்லாக மாறிவிட்டது .

கடலை + நெய் = கடலை நெய்
ஆனால் கடலெண்ணெய் என்று சொல்கிறோம் .இதுபோல தேங்காய் நெய் என்று சொல்வதற்குப் பதிலாக தேங்காயெண்ணெய் என்று சொல்கிறோம் .

கொட்டைகள் , வித்துக்களிலிருந்து எடுக்கப்படும் திரவம் நெய் எனப்படும் . இப்போது நெய் என்ற பொதுப்பெயர் , தன் உண்மைப் பொருளை இழந்து , பாலிலிருந்து எடுக்கப்படும் பொருளைக் குறிக்கின்ற சிறப்புப் பெயராக மாறிவிட்டது .

கேழ்வரகிலிருந்து நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்பவனுக்குப் புத்தி எங்கே போயிற்று ? என்ற பழமொழி வாயிலாகவும் நெய் என்பது பொதுப்பெயர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 19, 2016 7:42 pm

கடலை நெய்,தேங்காய் நெய் நல்ல தகவல்கள் .
திருத்திக்கொள்ள உதவுகிறது .
நடை முறையில் கடலை நெய் ,தேங்காய் நெய் என்று எழுதினால் ,
நம்மை முட்டாளாக பார்ப்பார்கள் .

நன்றி ,Jagadeesan .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 5 of 34 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 19 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக