புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் தமிழை முறையாக அறிவோமே !
Page 14 of 34 •
Page 14 of 34 • 1 ... 8 ... 13, 14, 15 ... 24 ... 34
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?
நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்
இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.
இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.
மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .
இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.
எடுத்துக் காட்டு:
கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.
நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.
பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .
பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.
கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.
பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.
மேல் + படிப்பு - மேற்படிப்பு
மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று
கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.
பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.
இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.
காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.
எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.
உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
அப்படிச் சொல்லவில்லை ஐயா. பித்தலாட்டம் அதாவது அறிவற்று மாற்றிச் செய்யும் என்ற பொருளுடன் பித்தர்-பித்தன்-பித்தல் என்ற சொற்கள் சங்க நூல்களில் பாவிக்கப்பட்டுள்ளன.அகம்,குறுந்தொகை,நாலடியார் போன்ற நூல்களிலும் காணலாம்.
சிவனை பித்தா-பித்தா பிறைசூடி- என்றுதான் பாடினாரே தவிர பித்தலாட்டக்காரன் என்று சொல்லவில்லை.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பித்தன் என்று அழைப்பதாலும், தாண்டவம் ஆடுவதாலும், பித்தலாட்டக்காரன் என்றும் சொல்லலாமோ?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பித்தலாட்டம் என்ற சொல்லுக்கு கூகுளில் தேடியபோது கிடைத்த விளக்கத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .
Deception, fraud, as in passing brass for gold
Tamil-lexicon
ஒன்றை மற்றொன்றாகக் காட்டி வஞ்சிக்கை
Deception, fraud, as in passing brass for gold
Tamil-lexicon
ஒன்றை மற்றொன்றாகக் காட்டி வஞ்சிக்கை
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கண்றாவியா ? கண்ணராவியா ? - எது சரி ?
பேச்சில் பெரிதும் புழங்கும் சொல் இது. இதில் முதலில் உள்ளது "கண்" என்பது. இது தெளிவு.
அடுத்து வருவது அராவி. இது அராவுதல் என்னும் சொல்லினின்று உருவானது.
அராவு ஆங்கிலத்தில் ஃபைலிங் (filing) என்பர். அரத்தினால் தேய்த்தல்.
கண்ணராவி எனின் கண்ணை அரம்போட்டுத் தேய்த்தல் போன்ற துன்பத்தினைத் தரும் காட்சி என்று பொருள்.
கண்ணை வருத்தும் காட்சி.
கண்ணராவி > கண்றாவி.
எனவே கண்ணராவி என்பதே சரி .

திருக்கடையூரா ? திருக்கடவூரா ? - எது சரி ?
திருக்கடவூர் என்பதே சரி .
"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழு பிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே." (அபிராமியம்மைப்பதிகம்)

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212412M.Jagadeesan wrote:திருக்கடையூரா ? திருக்கடவூரா ? - எது சரி ?
திருக்கடவூர் என்பதே சரி .
"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழு பிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே." (அபிராமியம்மைப்பதிகம்)
இதேபாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் குரலில் கேட்டு இன்புறுங்கள்
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 661
இணைந்தது : 19/06/2016
மேற்கோள் செய்த பதிவு: 1212405யினியவன் wrote:பித்தன் என்று அழைப்பதாலும், தாண்டவம் ஆடுவதாலும், பித்தலாட்டக்காரன் என்றும் சொல்லலாமோ?
நன்றாக "மாற்றி யோசிக்கிறீர்கள்"!
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 661
இணைந்தது : 19/06/2016
பித்தலாட்டம்
2005தில் வெளியிடப்பட்ட “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - A Comprehensive Etymological Dictionary of the Tamil Language” இல் இருந்து.
அதில் குறிப்பிடப்படும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் இருந்து.
பித்தலாட்டம் pittal-āṭṭam
n. prob. pittalā+hāṭaka. [T. pitalāṭakamu K. pittalāṭa M. pittalāṭṭam.]
Deception, fraud, as in passing brass for gold;
ஒன்றை மற்றொன்றாகக்காட்டி வஞ்சிக்கை.
(இது உறுதியாகக் கூறவில்லை. இருக்கலாம் (probably) என்றுதான் கூறுகிறது).
சமஸ்கிரததில் “பித்தல” என்றால் பித்தளை / பித்தமுள்ள என்றும், “ஹாடக” என்றால் பொன் என்றும் சமஸ்கிரத அகராதி கூறுகிறது.
Sanskrit word Transliteration Grammar English word
पित्तल pittala n. brass
पित्तल pittala adj. bilious
पित्तल pittala adj. secreting bile
पित्तला pittalA f. Water primrose [ Ludwigia hexapetala - Bot. ]
पित्तल pittala n. Himalayan birch [ Bhojpatra, Betula - Bot. ]
पित्तल pittala n. gunmetal
पित्तल pittala n. bell-metal
पित्तल - भाण्ड pittala - bhANDa n. brassware

हाटक hATaka n. gold

சிவனைப் பித்தன் என்று சுந்தரர் தவிர மற்றவர்கள் அழைத்ததாக நினைவில்லை . அதுவும் தன்னிடம் வழக்காட வந்திருப்பவர் இறைவன் என்று அறியாமல்தான் " பித்தன் " என்று சொல்கிறார்.
பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடலைப் பாருங்கள் .
மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார்
ஆகவே இறைவனைப் பித்தலாட்டக்காரன் என்று அழைப்பது தவறு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முட்டாளா ? முற்றாளா ? - எது சரி ?
சிந்திக்காமல் செயல்படுபவனை " முட்டாள் " என்கிறோம் . இதை ஆங்கிலத்தில் Fool , Idiot , Stupid என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறோம் .
ஆனால் " முட்டாள் " என்பது தமிழ் வார்த்தையா ? அகராதியில் தேடிப் பார்த்தபோது , அப்படி ஒரு வார்த்தை கிடைக்கவில்லை . நம்முடைய தமிழ் இலக்கியங்களிலும் " முட்டாள் " என்ற வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை . திருக்குறளில் அறிவிலியைப் " பேதை " என்று குறிப்பிடுகிறார் .
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை .
" நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க !
நானொரு முட்டாளுங்க ! "
என்று நடிகர் சந்திரபாபு , ஒரு திரைப்படத்தில் பாடியிருப்பார் .
"முட்டாள் " என்ற வார்த்தை தமிழ்மொழியில் எப்படி வந்தது ?
இலக்கியச்சாரல் என்ற தமிழ் சஞ்சிகையில் இதற்கு விடை கிடைத்தது .
முற்றாள் என்ற சொல்லின் திரிபே " முட்டாள் " என்ற வார்த்தையாகும் .அதாவது முற்றாள் என்றால் முழுவதும் ஆளாக இருப்பவன் . எலும்பும் , தோலும் சேர்ந்த சதைப் பிண்டமாக இருப்பவன் ; ஆனால் மூளை மட்டும் இல்லாதவன் என்று விளக்கம் கொடுத்திருந்தார்கள் .
இது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாகவே எனக்குப் பட்டது .

- Sponsored content
Page 14 of 34 • 1 ... 8 ... 13, 14, 15 ... 24 ... 34
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 34
|
|