புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் சொத்து கடவுளுக்கே...


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 29, 2016 7:36 pm

ஜூன், 3 - கழற்சிங்கர் குருபூஜை

கோவில் சொத்தை இன்று எப்படி யெல்லாமோ
பயன்படுத்துகின்றனர்.

ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன், கோவிலில்
பூத்த பூ கூட, கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்
பட்டது. மற்றவர்கள் அதை தொட்டால் கூட, கொடிய
தண்டனை விதிக்கப்பட்டது.

பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர், கழற்சிங்கர்.
இவர் சிறந்த சிவபக்தர்; நீதிமான்; திருவாரூர்
தியாகராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
ஒருமுறை, தன் பட்டத்து ராணியுடன், திருவாரூர்
வந்தார். அங்கே புற்றிடங்கொண்ட பெருமான்
சன்னிதியில். பெருமானை வணங்கி, பிரகாரத்தை வலம்
வந்தார், கழற்சிங்கர்.

சற்று முன்னதாகவே, ஏவலர்கள், தாதியர் புடைசூழ
பிரகாரத்திற்குள் நடந்து சென்றாள், ராணி. அப்போது,
ஓரிடத்தில், இறை சிந்தனையுடன், 'நமசிவாய' எனும்
மந்திரத்தை சொல்லியபடி, இறைவனுக்கு மாலை
தொடுத்துக் கொண்டிருந்தனர், சிவனடியார்கள்.

அந்த பூக்களின் நறுமணம் ராணியைக் கவர, அவர்கள்
முன், கொட்டிக் கிடந்த பூக்களில் ஒன்றை எடுத்து
முகர்ந்து பார்த்தாள்; இது கண்டு முகம் சுளித்தனர்,
சிவனடியார்கள்.

அப்போது, வேகமாக எழுந்த ஒரு சிவனடியார், 'ராணி
என்ற ஆணவத்தில், சிவனுக்கு சூட்டும் பூவை முகர்ந்து,
அபச்சாரம் செய்து விட்டாயே...' என்று கத்தியபடியே,
தன் கையில் இருந்த குறுவாளால் ராணியின் மூக்கை
அறுத்து விட்டார்.

'ஐயோ... பூவை முகர்ந்ததற்காக இப்படி செய்து விட்டாரே...'
என்று கதறினாள் ராணி. இவ்விஷயம் சன்னிதானத்தில்
நின்ற கழற்சிங்க மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது. அவர் பதைபதைப்புடன் ஓடி வந்தார்.
மூக்கை பிடித்தபடி, ரத்தம் ஒழுக, தரையில் அமர்ந்து
அரற்றிய ராணியைப் பார்த்தார்.

'இந்த கொடுமையை செய்த கொடியவன் யார்?' என்று
கர்ஜித்தார், கழற்சிங்கர்.

'மகாராஜா... இந்தச் செயலைச் செய்தவன் நான் தான்;
என் பெயர் செருத்துணையார்...' என்றார், ராணியின்
மூக்கை அறுத்தவர்.

பக்திப்பழமாக நின்ற செருத்துணையாரைக் கண்ட
கழற்சிங்கருக்கு, 'இந்த அடியவர் ராணிக்கு துன்பம்
செய்துள்ளார் என்றால், ஏதோ காரணம் இருக்க வேண்டும்...'
என்று நினைத்து, 'ஏன் இப்படி செய்தீர்?' என்று கேட்டார்.

'மகாராஜா... இந்தப் பூக்கள் திருவாரூர் ஈசனுக்கு உரியவை.
இதை, இவர் எடுத்து முகர்ந்து அபச்சாரம் செய்தார்;
எனவே தான் மூக்கை வெட்டினேன். தவறு என்றால்,
எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்...'
என்றார்.

'தவறு தான் செய்து விட்டீர் செருத்துணையாரே... இவள்
மூக்கை மட்டும் அரிந்தது பெரிய தவறு; கையையும்
அல்லவா வெட்டியிருக்க வேண்டும்...' என்றவர், வாளை
எடுத்து, அவளது கையையும் வெட்டி விட்டார்.

அப்போது, வானத்தில் சிவ, பார்வதி காட்சி அளித்து,
'என் தீவிர பக்தர்களான உங்கள் இருவரின் பெருமையை
வெளிக்கொணரவே இத்தகைய நாடகத்தை நடத்தினேன்.

இருவரும் என் திருவடி நிழலில் கலந்து, பிறவாநிலை
பெறுவீர்கள்...' என்று வாழ்த்தினர். கழற்சிங்கரும்,
செருத்துணையாரும் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர்.

கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.
-
-----------------------------------------

- தி.செல்லப்பா
தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 29, 2016 8:18 pm

"சிவன் சொத்து குலநாசம் " என்று சொல்லுவார்கள்



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 29, 2016 10:00 pm

பூவை முகர்ந்ததற்கே மூக்கை வெட்டினால், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளுக்கு என்ன தண்டனை கொடுப்பது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 30, 2016 12:05 am

M.Jagadeesan wrote:பூவை முகர்ந்ததற்கே மூக்கை வெட்டினால், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளுக்கு என்ன தண்டனை கொடுப்பது ?
அதானே?



கடவுள் சொத்து கடவுளுக்கே... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகடவுள் சொத்து கடவுளுக்கே... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கடவுள் சொத்து கடவுளுக்கே... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 9:43 am

கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.


கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் ! ...........அருமையான பகிர்வு ராம் அண்ணா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 9:47 am

M.Jagadeesan wrote:பூவை முகர்ந்ததற்கே மூக்கை வெட்டினால், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளுக்கு என்ன தண்டனை கொடுப்பது ?
மேற்கோள் செய்த பதிவு: 1209200

என்ன ஐயா இது ? ஸ்வாமிக்கு பூ தொடுக்கும்போது முகர்ந்து பார்க்கலாமா? தான் ராணி என்பதாலேயே அல்லவா அவங்க அங்கு போய் கை வைத்து எடுக்க முடிந்தது.......நாம் யாராவது அப்படி செய்வோமா?.............அந்த ஆணவத்திர்க்கான பதில் தான் அவர் தந்த தண்டனை.............
.
.
.
ஆண்டாள் கதையே வேறு, சிறு குழந்தை , அறியாமல் செய்தாள், அன்பால் செய்தாள், அதுவும் தான் ரங்கனுக்கு ஈடா என்று பார்க்க செய்தாள் புன்னகை........இரண்டையும் ஒன்றாக்கி விட்டீங்களே? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 30, 2016 11:03 am

அவள் குழந்தை என்பது பெரியாழ்வார்க்குத் தெரியாதா ? பிறகு ஏன் ஆண்டாளை அவர் கண்டித்தார் ? அங்கு பெரியாழ்வார் செய்ததும் தவறுதானே ?

நான் சொல்ல வருவது என்னவென்றால் ராணி செய்ததும் தவறல்ல; ஆண்டாள் செய்ததும் தவறல்ல !
தவறெல்லாம் நாம் பார்க்கின்ற கோணத்தில்தான் இருக்கிறது .

தான் வேட்டையாடிக் கொண்டுவந்த பன்றிக் கறியைத் , தான் சுவைத்துப் பார்த்த பின்னரே , சுவை மிகுந்த கறித் துண்டுகளை இறைவனுக்குக் கண்ணப்பர் படைத்தார் . அது தவறென்று இறைவனே சொல்லவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 12:21 am

M.Jagadeesan wrote:அவள் குழந்தை என்பது பெரியாழ்வார்க்குத் தெரியாதா ? பிறகு ஏன் ஆண்டாளை அவர் கண்டித்தார் ? அங்கு பெரியாழ்வார் செய்ததும் தவறுதானே ?

நான் சொல்ல வருவது என்னவென்றால் ராணி செய்ததும் தவறல்ல; ஆண்டாள் செய்ததும் தவறல்ல !
தவறெல்லாம் நாம் பார்க்கின்ற கோணத்தில்தான் இருக்கிறது .

தான் வேட்டையாடிக் கொண்டுவந்த பன்றிக் கறியைத் , தான் சுவைத்துப் பார்த்த பின்னரே , சுவை மிகுந்த கறித் துண்டுகளை இறைவனுக்குக் கண்ணப்பர் படைத்தார் . அது தவறென்று இறைவனே சொல்லவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1209273

அவள் குழந்தை என்று தெரிந்து தான் அவளுக்கு , 'இப்படி செய்யக் கூடாது ' என்று பெரியாழ்வார் சொல்லிக்கொடுத்தார்.............தண்டிக்கலை...........கண்டிக்க மட்டுமே செய்தார்.............

ஆனால் , ஒரு நாட்டின் ராணி அடக்கமின்றி, ஆணவமாய்  அப்படி செய்தது தவறு அதனால் தண்டிக்கப்பட்டாள்.....

அடுத்தது,   கண்ணப்பர் ..............இவர் போல  சபரி போல  நிறைய பேர் இருக்கிறார்கள் ............ஆண்டவனிடம்  அன்பு வயப்பட்டவர்கள்............ அவர்களின் செயல்களில் இருந்து அவர்களின் தீவிர அன்பைத்தான் பார்க்கிறோமே தவிர அந்த ராணி போல ஆணவமாய் யாருமே நடக்கலை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue May 31, 2016 6:15 am

கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.
-
-----------------------------------------தற்காலத்தவர் செய்ய நினைப்பாவது வருமா? சொத்தையே அபகரிக்க அல்லவோசட்டம் கொண்டு வருவேன் என்றனர். நல்ல பக்தி பதிவுங்க .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 31, 2016 8:48 am

இயற்கையிலேயே பெண்களுக்குப் பூக்களின்மீது அலாதி பிரியம் உண்டு . எனவே அந்த ராணி ஒரு பூவை எடுத்து முகர்ந்து பார்த்திருக்கிறாள் . இதிலே தெய்வ நிந்தனை எங்கு வந்தது ? இறைவனைக் கல்லால் அடித்தாளா அல்லது காலால் உதைத்தாளா ? அப்படிக் கல்லால் அடித்த சாக்கிய நாயனாருக்கே இறைவன் அருள் புரிந்தானே ! " பித்தா ! " என்று சொல்லால் அடித்த சுந்தரனின் தமிழில்தான் இறைவன் சொக்கிப் போனார் .

பிள்ளையாருக்குப் படைத்த பின்தான் , கொழுக்கட்டைகளைச் சாப்பிடவேண்டும் என்று குழந்தைகளை மிரட்டுவதும் தவறுதான் ; குழந்தைகளே தெய்வம்தானே ! அவர்கள் முதலில் சாப்பிட்டால் என்ன தவறு ?
மூட பக்தியை இறைவனே விரும்புவதில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக