புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 2


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 27, 2016 10:51 pm



பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
பசுகரணம் ஈங்கசுத்த
பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
பதியோக நிலைமைஅதனான்
மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
வந்துணர்வு தந்தகுருவே
துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
துரிசறு சுயஞ்சோதியே
தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
சொல்லரிய நல்லதுணையே
ததிபெறும் சென்னையில்  கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழுமூடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
றியம்புபா தகனுமாம்இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப்பற்றி டாமல்அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

ஞான சற்குரு  முருகன் வள்ளலாருக்கு  தெளிந்த  உணர்வை  கொடுத்தாராம் . என்ன  தெளிவு ?

வள்ளல்பிரான்  சைவமார்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர் . குடும்ப சூழலில் அந்த  சித்தாந்தம் அவருக்கு  தெரிந்திருக்கும் .

நல்ல குரு ஏற்கனவே  வளர்ந்ததை அழித்து விடு ; மார்க்கம் மாறிவிடு ; இனம் மாறி வேறொரு இனத்தினரின் பெயரை வைத்துக்கொள் ; உன் தாத்தன் பூட்டன் பெயரை மறந்து விட்டு யாரென்றே தெரியாத ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு என யூதர்களின் பெயரை தாத்தன் பூட்டனாக சொல்லு என்றெல்லாம் சொல்லமாட்டார்

இருக்கிற இடத்திலிருந்தே கடவுளை நோக்கி பாதை காட்டி அருளுவார்

சைவமரபிலே பசு பதி பாசம் என்பதை சொல்லித்தந்திருப்பார்கள்

பசுவாகிய மனிதர்களை மனித ஆத்மாக்களை பாசம் என்னும் பிறவிக்கடலில் இருந்து  ரட்சித்து கடவுளை காட்டியருளும் குருவாக சிவனை பதியாக பற்றிக்கொள்

உலக பாசத்திலிருந்து சிவகுருவின் மீது பாசத்தை வளர்த்துக்கொண்டால் பாசம் என்னும் பந்தத்திலிருந்து விடுபடுவாய் என்பார்கள்

வள்ளல்பிரானிடம் சிவகுருவாக வந்த  முருகன் ; நிலைக்கண்ணாடியில் தன்னை காட்டியருளிய முருகன் பசு பதி பாசத்திலிருந்தே உபதேசத்தை தொடங்கினாராம்

பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
பசு சுத்த பாவனை ஆகும் கரணம் ஈங்கமாகும்  

பதியாகிய சிவபூஜை செய்வதால் மனம் என்னும் பசு சுத்தமாகும் . மனதோடு சேர்ந்து இயங்கும் மனதை கெடுக்கும் ஐம்புலன்கள் ஈங்கமாகும் .

ஞானிகள் பேசுகிற பாஷையால் தமிழ் விளங்கும் . தங்கம் வலிவு இல்லாதது . நகையாக அணியமுடியாது . நகை செய்யவேண்டுமானால் அதில் ஈயத்தை அளவோடு கலக்கவேண்டும் . அப்படி கலந்த தங்கத்தை தங்கநகை ஆபரணம் என்கிறோம் . ஆனால் ஆபரணத்தை ஈங்கம் என்கிறார் வள்ளலார்

தங்கம் ஈயம் கலந்தால் ஈங்கம் . இந்த ஈங்கம் வலிமை பெற்று ஆபரணமாக மகிமை அடைகிறது . அதுபோல மனமது செம்மையாகும் போது சுத்த பாவனையும் உடலும் பொன்னைப்போல பிரகாசமடைகிறது . பொழிவடைகிறது

ஆனால் ஆனால் பதியானவரோ அந்த சுத்த பாவனையையும் கடந்தவர் .

மனிதன் முதலில் சுத்த பாவனை அடையவேண்டும் . பிறகோ அந்த பாவனையையும் கடந்து விடவேண்டும்

தீமையிலிருந்து நன்மைக்கு மாறவேண்டும் பிறகோ நன்மை தீமை என்பதையும் கடந்துவிடவேண்டும் இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் . நன்மையையும் கூட  ஒரு இருளே .

இறைதூதர்களோ அவதாரங்களோ தீய இயல்புள்ளவர்களை வெறுத்ததோ விலகி நின்றதோ இல்லை . அவர்களிலிருந்து தங்களை மேம்பட்டவர்களாக வித்தியாசப்படுத்தியும் காண்பித்ததில்லை

என்னை பாவிகளின் தோழன் என்கிறார்கள் ; மனம் திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களைக்காட்டிலும் மனம் திருந்துகிற ஒரே ஒரு பாவியின் நிமித்தம் பரலோகம் மிகுந்த சந்தோசமடையும் என்றார் சற்குரு இயேசு . தேவ அன்பை ருசி பார்த்தவர்கள் யாரும் தீயவர்களை அருவெறுக்க மாட்டார்கள்

இறைவன் நல்லோர்க்கும் பொல்லோர்க்கும் நடு நிற்பவர்

சுத்த பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
பதி
சுத்தம் அந்த சுத்தத்தையும் கடந்த நிலை பரிகரித்த நிலை பரிசுத்தம்

நன்மை தீமை என உணர்ந்து நன்மையில் நின்றால் அது சுத்தம் நன்மை தீமையையும் கடந்து விட்டாலோ பரிசுத்தம் மதி பாசம் அற்று அடங்கிய நிலை

மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
வந்துணர்வு தந்தகுருவே

இருமையை கடந்த நிலை வரவு போக்கற்ற நிலை எதனாலும் பாதிப்பில்லாத நிலை கைகூடினால்  மெய்ஞானம் விளங்கும்

அது குன்றின் மீது ஒளிரும் விளக்கை போல தனக்கும் சமூகத்திற்கும் பலனளிக்க கூடியது

மத்தேயு 5

1. அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:

3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
என்பது இயேசுவின் உபதேசமாகும்  

முருகன் வள்ளலாருக்கு சைவ சித்தாந்தம் முதல் இயேசுவின் உபதேசம் வரை காட்டுக்கொடுத்தார் என்பதே இங்கு சுட்டப்படுகிறது


பஞ்சமாபாதகம் என்று கேள்விப்பட்டிருப்போம் . ஆனால் வள்ளலோ ஏழு சப்தபாதகம் என்கிறார் . காமம் கோபம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் ; இவைகளுடன் கொலை ஆகிய ஏழு பாதகங்கள் மற்றும் இவைகளோடு கூடிய அநேக தீய இயல்புகள் எனைப்பற்றிடாமல் முருகன்  காத்துக்கொள்ளவேண்டுமாம் . ஏனெனில் தீயோரை தள்ளாது அவர்களையும் அன்பு செழுத்தி முன்னோக்கி இழுக்க வேண்டும் என்ற உபதேசத்தை கடைபிடிக்கும்போது அதில் நானே விழுந்துபோகாதபடி குருவருளும் திருவருளுமே காக்க முடியும்

சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே

சேமத்தை அளிக்கும் மா மறைகள் பல உலகம் முழுதும் பகுதி பகுதியாக ஆங்காங்கு வெளியாக்கப்பட்டுள்ளன .வேற்றுமை போல தெரியும் அவை ஏமத்தை ஏக இறை நெறியை மறுக்கும் மதங்களாக நின்று மாச்சரியம் என்னும் வம்புகளை இழுத்துவிடுகின்றன . அவைகளின் ஊடாக  நின்று இலங்கும் அருட்பதமே ஓம் .

அந்தோ அந்த ஓமின் அர்த்தத்தை சிவன் முதலான அனைத்து மனிதர்களும் மறந்தல்லவோ போனார்கள் . மலை முனிவன் சிவனுக்கு முருகனல்லோ ஓம் என்ற பதத்தின் அர்த்தத்தை உபதேசித்தார்  

இன்றைய மனிதர்களும் ஓம் என்பதன் அர்த்தம் அறியாமல் ஏதோதோ பிதற்றுவார் . அல்லது சிவனுக்கு முருகன் உபதேசித்து விட்டார் என்பதை தெரிந்திருப்பதையே ஓம் க்கு அர்த்தம் அறிந்ததுபோல நம்பிக்கொள்வார் .

ஓம் என்ற பதத்தின் அர்த்தம் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் என்பதாம் ஓரிறைவனையே துதிக்கிறோம் என்பதாம்

வானமண்டலத்திலும் பால்வெளியிலும் அனைத்து தேவர்களும் படைப்புகளும் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் ஓரிறைவனையே துதிக்கிறோம் என்று மனதாலும் உணர்வாலும் துதிக்கும் சத்தமே பிரணவ மந்திரமாக சுற்றி சுழன்று வருகிறது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 28, 2016 11:23 pm

ஈங்கம் என்ற கருத்தில் சிறு மாற்றம் :

ஞானிகள் பேசுகிற பாஷையால் தமிழ் விளங்கும் . தங்கம் வலிவு இல்லாதது . நகையாக அணியமுடியாது . நகை செய்யவேண்டுமானால் அதில் செம்பை அளவோடு கலக்கவேண்டும் . அப்படி கலந்த தங்கத்தை தங்கநகை ஆபரணம் என்கிறோம் . அது சாதாரண பயன்பாட்டுக்கு உரியது ஆனால் கோவிலில் பயன்படுத்தப்படும் திருமேனிகள் ஐம்பொன்னால் செய்யப்படும் . ஏனெனில் அவைகள் அருளை உள்வாங்கி வெளியிடவும் வேண்டும் அந்த ஐம்பொன் பயன்படுத்த பயன்படுத்த சுத்தம் செய்ய சுத்தம் செய்ய மெருகேறும் தீர்த்தவாரியின் போதும் திருமஞ்சனத்தின் போதும் மெருகேறும் இந்த ஐம்பொன்னை ஈங்கம் என்கிறார் வள்ளலார்

இந்த ஈங்கம் ஐம்புலனுக்கும் அடையாளமானது ஐம்புலன்கள் சுத்தமடைய சுத்தமடைய திருமேனியாக மகிமை அடைகிறது

அதாவது மனமது செம்மையாகும் போது சுத்த பாவனையும் உடலும் பொன்னைப்போல பிரகாசமடைகிறது . பொழிவடைகிறது திருமேனியாகிறது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக