புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
63 Posts - 41%
heezulia
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
47 Posts - 30%
Dr.S.Soundarapandian
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
314 Posts - 50%
heezulia
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
194 Posts - 31%
Dr.S.Soundarapandian
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
21 Posts - 3%
prajai
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
'கயா' யாத்திரை !  Poll_c10'கயா' யாத்திரை !  Poll_m10'கயா' யாத்திரை !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கயா' யாத்திரை !


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 7:48 pm

'கயா' யாத்திரை !
'கயா' யாத்திரை !  KXNVXwN6RWqJUFE6krT9+download

தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் புன்னகை
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 

வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு சோகம் மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.

எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,

" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.

'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.

"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி சோகம் )

'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.

உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.

ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 07, 2014 7:56 pm

கிருஷ்னாம்மா கயா கயா புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 8:48 pm

என்ன ஷாக் என்றால், பெங்களுரு மற்றும் சென்னை லிருந்து பாட்னாவுக்கு நேரடி பிளைட் கிடையாது..............அப்படியே பாட்னா போய்த்தான் ஆகவேண்டும் என்றாலும், டெல்லி போய் அல்லது பாம்பே போய் அல்லது கல்கத்தா போய் பிறகு பாட்னா போகணும். அதுவும் பலமணி நேரங்கள் காத்திருக்கணும் சோகம் ரொம்ப சோகமாய் போச்சு எனக்கு. என்னடா இது சோதனை என்று. train பயணம் பற்றி என்னால் யோசிக்கவே முடியாது.

'கயா' யாத்திரை !  EKh8nUg2RmSb8CMYdNFY+download(1)

ரொம்ப நேரம் எல்லா ஏர்லைன்ஸ் ம் தேடி கடைசியாய் ஒரு flight கண்டுபிடித்தேன். ஒரு Indigo flight அது காலை 6.30க்கு பெங்களுரிலிருந்து புறப்பட்டு கல்கத்தா போய்விட்டு அரைமணி இல் மீண்டும் கிளம்பி 10.35 க்கு பாட்னா சென்றுவிடும் என்று பார்த்தேன். ஜாலிஜாலிஜாலி ரொம்ப சந்தோஷமாய் போய்டுத்து எங்களுக்கு. 'இவர்' உடனே டிக்கெட் புக் செய்து விட்டார்.

25ம் தேதி காலை flight , அது 10.35 க்கு பாட்னா போய் சேரும். பிறகு அங்கிருந்து டாக்ஸி வைத்துக்கொண்டு 'கயா' போய்விடலாம் என்று நினைத்தோம். கயா அங்கிருந்து 115 கிலோமீட்டர் தொலைவு இருந்தது. 26ம் தேதி அங்கு ஸ்ரார்தம் பண்ணனும், பிறகு மீண்டும் 27ம் தேதி flight இல் பெங்களூர் வந்துவிடணும் என்று முடிவு செய்தோம்.

தொடரும்.......................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 8:49 pm

யினியவன் wrote:கிருஷ்னாம்மா கயா கயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1072757

'கயா கயா ' இல்லை இனியவன்................'கயா அவுர் வாபஸ் ஆயா ' புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 07, 2014 8:59 pm

மிக்க மகிழ்ச்சி அக்கா ,

தர்ப்பணம்/சிரார்த்தம் செய்வதற்கு நான் சொன்னது திலதர்ப்பனபுரி என்ற கோவில் இங்கு தர்ப்பணம் செய்வது காசி , கயா,திருவேணி சங்கமம் இவற்றில் பலமுறை செய்வதற்கு சமம் என்று சொல்வார்கள்.

இந்த சுட்டியை பாருங்கள்
http://cinema.maalaimalar.com/2012/05/21142259/thilatharpanapuri-temple.html

இன்னுமொரு சிறப்பு , இங்கு உள்ள ஆதிவிநாயகர் . இவர் மனித தலையுடன் காட்சியளிப்பார்




சிறிய ஞாபகபடுத்தலுக்காக தான் பகிர்ந்தேன்
உங்கள் கட்டுரையை தொடருங்கள் அக்கா

ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 9:05 pm

//திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. //

நீங்கள் கொடுத்துள்ள லிங்க் பார்த்தேன் ராஜா, நன்றி. 7 இடங்களில் 2 அதாவது கயா மற்றும் ஸ்ரீ வாஞ்சியம்
போயிட்டு வந்துட்டோம். மற்றது ஒவ்வொன்றாக போகணும் புன்னகை பார்க்கலாம் !

வீடியோ வும் பார்த்தேன்; பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 08, 2014 11:16 am

மேற்கொண்டு தொடரும் முன் 'கயா' பற்றிய செய்திகள், கதைகள் பார்ப்போம்.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான  பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்ததிருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். அங்கு நம் பித்ருக்களுக்கு  மட்டும் இல்லை.............. தாய், தந்தை, உறவினர், வம்சத்தில் நற்கதி பெறாதவர், துர்மரணம் எய்தவர், தனிஷ்டா பஞ்சமி இன் போது இறந்தவர்கள் , விபத்தில் இறந்தவர்கள்,  பல் முளைத்திடாத சிசுக்கள், வன விலங்குகளால் மரணமுற்றவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், பசி- தாகம் இவற்றால் மரித்தவர்கள், நண்பர்கள், வேலையாட்கள், வளர்ப்பு பிராணிகள், இன்னலுற்றபோது உதவியோர், நிழல் கொடுத்த மரங்கள், வழி காட்டியவர்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மொத்தத்தில் யார் வேண்டுமானாலும், இறந்த எவருக்காகவும்

ஸ்ரார்தம் /திவசம் செய்ய ஏதுவான ஒரே தலம் கயா மட்டுமே!

இந்த ஊருக்கு இந்த பேர் வந்ததற்கு ஒரு கதையே இருக்கு. நாம் கட்டும் வீட்டுக்கு ஒரு பேர் வெச்சாலே அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கும் தானே ? புன்னகை

கிருதயுகத்தில், "கயாசுரன்' என்றொருவன் இருந்தான். பிரும்மாவின் மானஸ புத்திரன் அவன். மிகப் பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருந்தான் கயன். இதுவரை எவரும் கேட்டிராத வரமொன்றை வேண்டித் தவமிருந்தான் அந்த அசுரன். அது என்ன வரம் என்றால்,
""தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும்'' என்று திருமாலிடம் வரம் கேட்டான் கயாசுரன். அந்த வரமும் பெற்றுவிட்டான். இதனால் என்ன ஆச்சு என்றால், பாவிகளும் தீயவர்களும் அவனைத்தொட்டு புனிதமடைந்து சொர்க்கம் சென்றார்கள். இதனால்  சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. யம தருமனுக்கே வேலை இல்லாது போகுமோ என்ற நிலை! நரகம் என்ற சொல்லுக்கே இடமில்லாது போனது. சிருஷ்டியின் நியதியே குளறும்படி ஆகிவிடுமோ என்ற பயம், விண்ணவர்களுக்கு ஏற்பட்டது.

எனவே, தேவர்கள் கூடி, வரம் தந்த மகாவிஷ்ணுவிடமே சென்றனர். விண்ணையும் மண்ணையும் தனது திருவடியால் அளந்த ஆற்றலுடைய பரந்தாமன், ஓரு  யோசனையைக் கூறினார். "ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தப்போகிறோம். ஏழுலகிலும் மிகவும் புனிதமான இடம் அதற்குத் தேவை! அந்தப் புனிதமான இடம் உனது உடல்தான்! அதனைத் தருவாயா?'' என்று கேட்கசொன்னர். பிரும்மாவும்  திருமால் தந்த ஆலோசனைப்படி அசுரனிடம் கேட்டார். இதைக்கேட்டதும் கயாசுரன் மெய்மறந்து போனான். "இதைவிட எனக்குப் பெரிய பெருமை எப்படிக் கிட்டும்? தந்தேன் எனது உடலை" என்றான்.

உடனே, கயாசுரன் வடக்கே தலை வைத்துப் படுத்திட, அவனது உடல் மீது பிரம்மாதி தேவர்கள் வேள்வியைத் துவங்கினர். அவனிடம் அசையாமல் படுக்கும்படி வேண்டிக்கொண்டனர். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அந்த சூட்டினால் அசுரன் அசைந்தான்.

பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் யம தருமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. அனைத்துத் தேவர்களின் முயற்சியும் பயனற்றுப்போக, மகாவிஷ்ணு கதாயுததாரியாக தனது வலது பாதத்தால் அசுரனின் மார்பை அழுத்திட, ஆட்டம் நின்றது; வேள்வியும் நிறைவு பெற்றது.

அசுரனின் தியாகத்தால் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்த பெருமாள் கயாசுரனைப் பார்த்து, "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்'' என்றார். "தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் கயாசூரன் வேண்டுவான் என்று  அனைவரும் எண்ணினர். ஆனால் கயாசுரனோ அத்தனைப் பேரையும் திகைக்க வைத்தான்.

தொடரும்.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 08, 2014 11:28 am

அவன் 2 வரங்கள் கேட்டான்.

1. "முப்பத்து முக்கோடி தேவர்களும், சூரிய- சந்திர- நட்சத்திரங்கள் அனைவரும் இப்பூவுலகம் இருக்கும் வரை உருவமாகவோ, அருவமாகவோ, இங்கேயே என் உடல் கிடந்த இடத்தில், உமது பாதம் பதிந்த இடத்தில் உறைய வேண்டும்."

2. "இங்கு வருகை தரும் மாந்தர்கள், உங்கள் பாதம் ஏற்படுத்திய தடத்தில் தம் முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து நீத்தார் கடன் நிறைவேற்றும்போது, அவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க அருள வேண்டும்'' என்று திருமாலிடம் வேண்டினான் கயாசுரன். அவன் கேட்ட அரிய வரம், அனைவரையும் மெய் சிலிர்க்கச் செய்தது.

முன்றாவதாக பெருமாளே அவனுக்கு அவன் ராக்ஷசன் என்பதால், அங்கு தரும் பிண்டங்கள் மட்டும் அவனுக்கு போறாது என்பதால் கண்டிப்பாக தினமும் பிணங்கள் வந்து எரிந்து அவனுக்கு நரமாமிசமும் தினமும்  கிடைக்கும் என்று அருளினார். ஆனால் அவ்வாறு ஒருநாள் இல்லாமல் போனாலும் அந்த அசுரனுக்கு மீண்டும்  உயிர் தர வேண்டும் என்று அவன் வேண்டினானாம். அதற்கும் பெருமாள் சம்மதித்தாராம்.

ஆனால் கடந்த 3 யுகங்களிலும் மற்றும் இன்று வரை, அதற்கு வாய்ப்பே இல்லாமல் தினமும் பிண்டம்  போடுவதும் கோவிலுக்குப்பின்னே உள்ள இடுகாட்டில்  பிணம் / பிணங்கள்  எரிவதும் தினமும்  நிகழ்ந்து கொண்டே தான் இருக்காம். வாத்தியார் சொன்னார் புன்னகை


(ஆச்சரியம் தானே !....நாங்கள் போனபோது கூட 2 - 3 பிணங்களை எடுத்துப் போனார்கள் இடுகாட்டுக்கு....அங்கு எதற்கும் தீட்டே இல்லையாம் புன்னகை )


"கயை' என்றும் "கயா' என்றும் அழைக்கப்படும் அந்தப் புனிதத் தலமே, கயாசுரனின் உடலாகக் கருதப்படுகிறது. "இத்தலத்தில் 48 இடங்களில் நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்' என்று தல புராணம் உரைக்கிறது. ஆனால், தற்போது பல்குனி நதி, விஷ்ணுபாதம், அட்சய வடம் (அழியாத ஆலமரம்) ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே திதி கொடுக்கிறார்கள்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 08, 2014 11:55 am

கயா சென்று வந்தீர்களா?  மிக்க மகிழ்ச்சி க்ருஷ்ணாம்மா. கயாவின் பெயர் காரணம் அருமை. தொடருங்கள் . படிக்க காத்திருக்கிறேன்.  புன்னகை 




'கயா' யாத்திரை !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 08, 2014 1:10 pm

விமந்தனி wrote:
கயா சென்று வந்தீர்களா?  மிக்க மகிழ்ச்சி க்ருஷ்ணாம்மா. கயாவின் பெயர் காரணம் அருமை. தொடருங்கள் . படிக்க காத்திருக்கிறேன்.  புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1072863

ஆமாம் மா புன்னகை நல்லபடி சென்று கடமையை செவ்வனே செய்தோம் புன்னகை
.
.
மிகுதியையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன் புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக