புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Poll_c10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Poll_m10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Poll_c10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Poll_m10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian

2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Page 2 of 29 Previous  1, 2, 3 ... 15 ... 29  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 15, 2016 4:03 pm

First topic message reminder :

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.

இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.

இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.

நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.

இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.

இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.

ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 16, 2016 11:36 am

T.N.Balasubramanian wrote:ஏற்கனவே ஒரு பதிவில் ,
செய்த ,செய்கின்ற காரியம் , வயது வந்தவர் செய்கின்ற காரியம் என்றால் ,
சிறியவனாக இருந்தாலும் பெரியவனாகவே கருதப்பட வேண்டும் என்று எந்தன் அபிப்பிராயத்தை
கூறி இருந்தேன் . அதில் மாற்றமில்லை .

கோதை லக்ஷ்மி --ஆசிரியை
அவருக்கு அறிவு எங்கே போயிற்று

ரமணியன்

மிகவும் சரி ... ஆசிரியைக்கு எங்கு போயிற்று அறிவு ... அதான் ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க .... வயசுக்கு தகுந்த சகவசாம் வேண்டும் என்று

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 16, 2016 11:44 am

T.N.Balasubramanian wrote:ஏற்கனவே ஒரு பதிவில் ,
செய்த ,செய்கின்ற காரியம் , வயது வந்தவர் செய்கின்ற காரியம் என்றால் ,
சிறியவனாக இருந்தாலும் பெரியவனாகவே கருதப்பட வேண்டும் என்று எந்தன் அபிப்பிராயத்தை
கூறி இருந்தேன் . அதில் மாற்றமில்லை .

கோதை லக்ஷ்மி --ஆசிரியை
அவருக்கு அறிவு எங்கே போயிற்று

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197754

ஆசிரியை என்றாலும் அடிப்படையில் மனுஷிதானே ! உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை . தவறு செய்துவிட்டார்.

இனி செய்யவேண்டியது என்ன ? இருவரையும் சேர்த்து வைப்பதுதான் . பிரித்து வைப்பதால் நடக்கப் போவது என்ன ? இருவருடைய வாழ்க்கையும் பாழ் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 6:11 pm

M Jagadeesan wrote:இனி செய்யவேண்டியது என்ன ? இருவரையும் சேர்த்து வைப்பதுதான் . பிரித்து வைப்பதால் நடக்கப் போவது என்ன ? இருவருடைய வாழ்க்கையும் பாழ் !

இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடாதா ?
60 வயது முதியவர் ,தனது பக்கத்து வீட்டு3 வயது குழந்தையை சாக்லேட் வாங்கி கொடுத்து
பாலியல் கொட்டுமைக்கு உட்படுத்தினார் போன்ற செய்திகள் நாம் படித்து உள்ளோமே .
முதியவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவில்லை , மனுஷன் தானே என்று ,மன்னித்து
மேற்கொண்டு குழந்தையை தாரை வார்க்க வேண்டியதுதானா ?கூடாது கூடாது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 16, 2016 7:42 pm

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1197920

ஐயா !

தாங்கள் குறிப்பிடுவது பொருந்தாக் காமம் . இதனை இலக்கண நூலார் , " பெருந்திணை " என்று குறிப்பிடுவர் . பொருந்தாக் காமம் மன்னிக்க முடியாத குற்றம் . தண்டனைக்குரியது .

ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு அப்படிப்பட்டதல்ல ! இருவருமே தவறு செய்துள்ளனர் . அதில் சந்தேகம் இல்லை ! ஆனால் கர்ப்பிணிப் பெண்ணின் எதிர்காலம் ? பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் ? சிவசுப்பிரமணியனின் எதிர்காலம் ?

இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 8:47 pm

M.Jagadeesan wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1197947

பெருந்திணை பற்றி எல்லாம் நானறியேன் .
மாதா பிதா குரு தெய்வம் நானறிவேன்
பெண் குரு தாயுக்கு சமானம்
தன்னிடம் படிக்கும் மாணவர்கள் , தன் குழந்தைக்கு சமானம் .
அந்த காலத்திய குருகுல வாசத்தில் இந்த உறவுதான் கற்பிக்கப்பட்டது .

மாணவனே , தன் குரு மீது கவர்ச்சியால் ,தவறு செய்ய நினைத்தாலும் ,
அந்த குரு , அவன் தவறை எடுத்துக் கூறி திருத்தவேண்டாமா ?
படிக்கலாமா என்று மாணவன் கேட்க ,
படுக்கலாமா என்று அந்த அம்மா காதில் விழுமோ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 17, 2016 7:03 am

ஒரு தவறு நடந்துவிட்டது. இந்தத் தவறுக்கு யார் காரணம் ?யாரைக் குற்றவாளி ஆக்குவது ?

பாதை மாறிப்போன கோதைநாயகி செய்த குற்றமா? அல்லது வயது 23 ஆனபின்பும் திருமணம் செய்யாமல் வைத்திருந்த பெற்றோர் செய்த குற்றமா ?

கல்வி கற்கும் வயதில் கலவியிலே ஈடுபட்டது சிவசுப்பிரமணியன் செய்த குற்றமா ? அல்லது அவனைக் கலவி செய்யத் தூண்டிய சீரியல்கள் மற்றும் வலைத் தளங்களின் குற்றமா ?

நீதிபோதனை வகுப்புகளை நடத்தாதது பள்ளிகளின் குற்றமா ? அல்லது பால் கல்வியை பாடத்திட்டங்களில் புகுத்தாதது அரசின் குற்றமா ?

யார் செய்த குற்றம் இந்தத் தவறுக்கு வித்திட்டது ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 17, 2016 6:08 pm

M.Jagadeesan wrote:ஒரு தவறு நடந்துவிட்டது. இந்தத் தவறுக்கு யார் காரணம் ?யாரைக் குற்றவாளி ஆக்குவது ?

பாதை மாறிப்போன கோதைநாயகி செய்த குற்றமா? அல்லது வயது 23 ஆனபின்பும் திருமணம் செய்யாமல் வைத்திருந்த பெற்றோர் செய்த குற்றமா ?

கல்வி கற்கும் வயதில் கலவியிலே ஈடுபட்டது சிவசுப்பிரமணியன் செய்த குற்றமா ? அல்லது அவனைக் கலவி செய்யத் தூண்டிய சீரியல்கள் மற்றும் வலைத் தளங்களின் குற்றமா ?

நீதிபோதனை வகுப்புகளை நடத்தாதது பள்ளிகளின் குற்றமா ? அல்லது பால் கல்வியை பாடத்திட்டங்களில் புகுத்தாதது அரசின் குற்றமா ?

யார் செய்த குற்றம் இந்தத் தவறுக்கு வித்திட்டது ?

மேற்கோள் செய்த பதிவு: 1197999

ஏணி  தோணி அண்ணாவி  என்று சொல்வார்கள்
(அண்ணாவி ---ஆசிரியர் )
ஏணி ==தரையில் இருந்து கொண்டு , மற்றவர்கள் உயர உதவும்
தோணி ===நீரிலேயே இருந்து கொண்டு மற்றவர்களை கரையேற்றும்
அண்ணாவி ==வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகள் அடுத்த வகுப்பு போக , இவர் மட்டும் அதே வகுப்பில் இருப்பார் .
எனக்கு , நான் கற்றறிந்த ஆசிரியர்கள்பால் தனி மதிப்பு உண்டு .
அந்த தொழிலின் மீது தனி மரியாதை உண்டு . தொழில் என்பதை விட சேவை என்பதே மிகவும் பொருந்தும் .
அந்த பெண் ஆசிரியரிடம் இதை எதிர்ப்பார்க்கவில்லை .
தகாத உறவு பிரிவில் சேர்க்கவேண்டிய அசிங்கம்தான் அது. அல்லது அந்த சிவசுப்ரமணியன் பணக்கார புள்ளியோ என்னவோ ? பணம் பண்ணும் உத்தியாகவும் இது இருக்கலாம் .இதுவும் பெருந்திணையில் சேர்க்கவேண்டிய சங்கதிதான்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 17, 2016 8:44 pm

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிற்ப்பானும் தன்னை
தலையாகச் செய்வானும் தான்

இதைத்தாவிர என்ன சொல்வது?

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Aஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Aஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Tஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Hஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Iஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Rஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Aஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 17, 2016 10:09 pm

ஆதிரா என்ன சொல்றாங்க?

நல்லகண்ணு இருக்கறவன் நிப்பான்
நொள்ளகண்ணு இருக்கறவன் விழுவான்னா புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 17, 2016 10:26 pm

எங்கேடா இந்த ஆளை காணோமே எல்லாரும் கேட்க ,
ஏடாகூடமா ஒரு சமாசாரம் போட்டால் , வந்துடுவார் என்றேன் !
நலமா யினியவன், நீண்ட நாட்களாய் காணோமே ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 29 Previous  1, 2, 3 ... 15 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக