புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
25 Posts - 51%
heezulia
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
7 Posts - 2%
prajai
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாயோ.... அஞ்சுகமே .....

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 7:24 pm

First topic message reminder :

அறியாயோ.... அஞ்சுகமே .....

மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன  பொண்ணே  தெரியாதா..??

உன் மூக்குகீழ  தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???

பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??  

ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??

கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா  அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??

ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??

வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??

வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??

                கே.செந்தில்குமார்

மெய்பொருள் காண்பது அறிவு

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 13, 2016 7:46 am

போனாலும் போன மக்கா
ரோசம் பொத்துக்கிட்டு போனாரே
ஆனாலும் அந்த மக்கா
பாசம் ஒத்துக்கிட்டு நிக்கலையே.
இதுவரைக்கும்
என் மொவத்த பாக்காம ஒரு நாள உட்டதில்ல
என் பேச்ச கேக்காம ஒரு வார்த்த தட்டவில்ல

எப்படித்தான் இருக்காரோ இந்த
சிறுக்கி மவள மறந்தபுட்டு
இத்தனநாளு இருக்காரே –இந்த
கிறுக்கி சொல்ல மிதிச்சுகிட்டு

ஆகாரம் நேரத்துக்கு அங்கத்தான் கெடைகாதே
அதுக்காக அந்தமனிசன் அரநிமிசம் பொறுக்காதே
ஆறு மாசம் நெஞ்சு முள்ளகொண்டு குத்துதே
அவரோட நெனப்பு கள்ளகொண்டு அடிக்குதே

அன்பு மச்சானு கடுதாசி வருமுன்னு –நான்
உறக்கம் மறந்துபுட்டு ஒரு வழியா காத்திருந்தேன்
அழவு மச்சான ஒருதாட்டி பாக்கனுன்னு –நான்
உண்ண மறந்துபுட்டு உருதேஞ்சு போயிருந்தேன்

தெரியுமா மச்சானே தெரியுமா மச்சானே –நான்
தேம்பி தேம்பி அழுவதுந்தான் தெரியுமா மச்சானே ..
ஆறுமாசமா நான் அழகொளிஞ்சு போயிருந்து –ஒன்
அழவு மொகத்த கான கொடல்சுருங்கி காத்திருந்தேன்

கண்ணால கவலையில கலை எழந்தா மவராசி
ஆத்தாவும் அய்யாவும் அந்நாடும் அதபேசி –பின்ன
மாமங்காரன் வந்து என்ன மருவூட்டு மொறபேசி –பருசம்
மால போட்டு போயிட்டான்ய்யா மிடுக்காக கைவீசி

கண்கலங்கி நிக்கிறேன் கதிகலங்கி நிக்கிறேன் –என்
கண்ணான மச்சானே கொஞ்சம் காதுகொடுத்து கேட்டிடுங்க
கடுதாசி பாத்துபுட்டு ஒருதாட்டி வந்துடுங்க
கண்ணாலம் பண்ணி எனக்கு கருகமணி போட்டுடுங்க..

மானமுள்ள மச்சானே மானமுள்ள மச்சானே
மருவாத கொடுதிதுக்கு மறுபதில போடுமைய்யா –நான்
மருவூடு வாரதுக்கும் இல்ல சுடுகாடு போறதுக்கும்
மறக்காம நீ எனக்கு கடுதாசி போடுமைய்யா ..

ஒருமாசம் இருந்துக்குவேன் ஒன்பதில எதிர்பாத்து –அததான்டி
ஒருநாளு போனாலும் என் உசுர மாச்சுக்குவேன்
மானமுள்ள மச்சானே மசெறங்கி வாருமைய்யா
மருவாத கொடுத்தென்ன உசுரோட காக்குமைய்யா ...

மெய்பொருள் காண்பது அறிவு
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 13, 2016 8:57 am

// கண்கலங்கி நிக்கிறேன் கதிகலங்கி நிக்கிறேன் –என்
கண்ணான மச்சானே கொஞ்சம் காதுகொடுத்து கேட்டிடுங்க
மருவாத கொடுதிதுக்கு மறுபதில போடுமைய்யா –நான்
மருவூடு வாரதுக்கும் இல்ல சுடுகாடு போறதுக்கும்....//
- பலே...! சூப்பருங்க மனம் கலங்க செய்யும் வரிகள்.

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:32 am

செந்தில் குமார் ,
அருமையாக போகிறது
இதில் பதிவிட்டுள்ள கவிதைகள்
கிராமத்து குயில்களிலும் திரும்பப் பதிவாகிறதே .????

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 13, 2016 1:21 pm

T.N.Balasubramanian wrote:செந்தில் குமார் ,
அருமையாக போகிறது
இதில் பதிவிட்டுள்ள கவிதைகள்
கிராமத்து குயில்களிலும் திரும்பப் பதிவாகிறதே .????

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1187357

ஐயா
அறியாயோ... அஞ்சுகமே அது தனி கவிதை அதன் பின்னூட்டத்தில் விளையாட்டாக பிறந்ததுதான் கிராமத்து குயில்கள் ..இது பின்னூட்டத்தில் மறைந்து கொண்டு இருப்பதால் பதிவை மட்டும் படித்து பின்னூட்டம் படிக்காதவர்களுக்கு கவிதை இருப்பது தெரியாமலேயே போய்விடும், ஆகவே தனி தலைப்பு கொடுத்து தனிதிரியில் பதிவிட்டு வருகிறோம்.
இருவரது பதிவு மற்றும் இரு காதலர்களின் உரையாடல் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காகவே வண்ணம் கொடுத்து பதிவிட்டுவருகிறோம். வண்ணம் கொடுப்பதில் கார்த்திக் பல வண்ணங்களை பயன்படுத்துவதால் நான் இங்கு பதிய சொல்லி பின் இங்கிருந்து எடுத்து இரு சீரான வண்ணங்களில் பதிவிட்டு வருகிறோம். இதில் தங்களுக்கு மாற்று கருத்து மாற்று ஆலோசனை இருப்பின் அவ்வாறே செய்து விடலாம் ஐயா..

மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 13, 2016 2:20 pm

உன் கடுதாசி கிடைசிதடி கண்ணான கண்மணியே .
உன் கனவெல்லாம் கண்டெடுத்தேன் பொன்னான பொன்மணியே .
உன்னோட வலியெல்லாம் வார்த்தையால சொல்லிபுட்ட .
உன் இதயம் கலங்குவது உனக்கு அங்கு தெரியாதா ?
உன்னை பிரிஞ்சி நானும் இங்கு வாடுறேண்டி ரஞ்சுதமே
உன் நெனப்பு மனசுக்குள்ள வாட்டுதடி அஞ்சுகமே

மாடன் ஊட்டு திண்ணையில மயிலே நான் உறங்கையில
மஞ்ச தண்ணி ஊத்தியது நெனப்பு இருக்கு
மயில காள ஓட்டிவர  மந்தையில நீ இருக்க
மறஞ்சி நின்னு சிரிச்சி பேசியது நெனப்பு இருக்கு
மந்தகர ஓடையில மஞ்ச தெட்சி நீ குளிக்க
மறஞ்சி நின்னு பாத்ததும் நெனப்பு இருக்கு .

பக்கத்து நாட்டோட பக ஒன்னு வந்திருக்கு .
பட்டாளத்து படைகொரு வேல ஒன்னு காத்திருக்கு .
படு பாவி பகையோட சண்ட ஒன்னு நடக்கிருக்கு.
பாவிகளை அழிசிடவே நானும் அங்க போறேண்டி .

கருமருந்து நாத்தம் கூட உன் வாசம் வீசுதடி
கன்னி வெடி சத்தம் கூட உன் பேச்சு கேக்குதடி  
கடுதாசி பாக்ககூட பல நாலா ஆச்சிதடி.
கன நிமிஷம் கூட கல்லறையா போகுதடி .
கருகமணி போட்டிடுவேன் கூர சேல தந்திடுவேன் .
கலங்காதே பொன்மணியே கருத்த மச்சான் நானிருக்கேன் .

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 6:03 pm

sendhil wrote:இருவரது பதிவு மற்றும் இரு காதலர்களின் உரையாடல் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காகவே வண்ணம் கொடுத்து பதிவிட்டுவருகிறோம். வண்ணம் கொடுப்பதில் கார்த்திக் பல வண்ணங்களை பயன்படுத்துவதால் நான் இங்கு பதிய சொல்லி பின் இங்கிருந்து எடுத்து இரு சீரான வண்ணங்களில் பதிவிட்டு வருகிறோம். இதில் தங்களுக்கு மாற்று கருத்து மாற்று ஆலோசனை இருப்பின் அவ்வாறே செய்து விடலாம் ஐயா..

வித்தியாசம் தெரியவேண்டும் என்றுதானே ,முதலில் நாந்தான் தலைப்பிலேயே பெயரில் இரு மாற்று கலர் கொடுத்து இருந்து பதிவும் இட்டு இருந்தேனே .

கிராமத்து குயில்கள் , முதல் பதிவு # 1, போட்டவுடன் ,
உடன் நான் போட்ட # 2, பதிவில் நான் கூறியுள்ளேனே.

தாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை போலும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 13, 2016 6:20 pm

T.N.Balasubramanian wrote:
தாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை போலும் .

ரமணியன்

கிராமீயக் காதல் குளத்தில் மூழ்கியதில் கவனிக்கலயாம் அய்யா

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 13, 2016 8:04 pm

T.N.Balasubramanian wrote:
sendhil wrote:இருவரது பதிவு மற்றும் இரு காதலர்களின் உரையாடல் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காகவே வண்ணம் கொடுத்து பதிவிட்டுவருகிறோம். வண்ணம் கொடுப்பதில் கார்த்திக் பல வண்ணங்களை பயன்படுத்துவதால் நான் இங்கு பதிய சொல்லி பின் இங்கிருந்து எடுத்து இரு சீரான வண்ணங்களில் பதிவிட்டு வருகிறோம். இதில் தங்களுக்கு மாற்று கருத்து மாற்று ஆலோசனை இருப்பின் அவ்வாறே செய்து விடலாம் ஐயா..

வித்தியாசம் தெரியவேண்டும் என்றுதானே ,முதலில் நாந்தான் தலைப்பிலேயே பெயரில் இரு மாற்று கலர் கொடுத்து இருந்து பதிவும் இட்டு இருந்தேனே .

கிராமத்து குயில்கள் , முதல் பதிவு # 1, போட்டவுடன் ,
உடன் நான் போட்ட # 2, பதிவில் நான் கூறியுள்ளேனே.

தாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை போலும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1187482

இல்லை ஐயா ..

அதை நான் அப்பொழுதே கவனித்தேன் . அதன் பிறகுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன் . ஏனென்றால் செந்தில் எழுதிய பாடலுக்கு கார்த்திக் மூன்று வேறுபட்ட வண்ணங்களை கொடுத்திருந்தார் ,
பிறகு தாங்கள் பெயருக்கு வண்ணம் கொடுக்கும் பொழுது செந்தில் பெயருக்கு கொடுக்க வேண்டிய வண்ணத்தை மாறாக கார்த்திக்கு கொடுத்துவிட்டீர்கள் . இந்த இரு குழப்பங்களும் , படிப்பவர்களை பெரும்குழப்பத்தில் கிடத்திவிடகூடாது என்பதற்காகவே

கிராமத்து குயில்கள் பதிவு #3 லிருந்து இரு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்தியிருப்பேன் ..
அதுதான் காரணம் ஐயா..

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 13, 2016 8:11 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
தாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை போலும் .

ரமணியன்  

கிராமீயக் காதல் குளத்தில் மூழ்கியதில் கவனிக்கலயாம் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1187497
K.Senthil kumar wrote:
யினியவன் wrote:தை பொறந்தா வழி பொறக்கும்ன்னு சொன்னியளே மாமா
மயிலக் காள உம்ம சல்லிக் கட்டுக்கு ஓட்டிட்டு போயிட்டாவளே
மாட்ட அடக்கி வீரத்த காட்டிபுட்டு எங் கழுத்துல மஞ்சக் கயித்த
கட்டிபுட வந்துடு மாமோய் உன்ன நான் அடக்கி காட்டிடுதேன் மாமோய்  
மேற்கோள் செய்த பதிவு: 1186814

ஜல்லிகட்டு மல்லுகட்ட என் மாமன் போவாண்டி
என் மாமன் பேச்சு இப்ப ஒனக்கு எதுக்கு வேனுண்டி
என் மாமன் மனசுக்குள் நான் மட்டும் இருப்பேண்டி –தாலிய
என் கழுத்துல மட்டுந்தான் என் மாமன் கட்டுவாண்டி  
........... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி...........
மேற்கோள் செய்த பதிவு: 1186820

அண்ணே...... இனியவன் அண்ணே...
உங்க பாட்டுக்கு  எதிர்பாட்டு பாடியாச்சு  நீங்க அதை கவனிச்சு மாறுபட்டு போடலையே....??? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 8:49 pm

sendhilkumar wrote:பிறகு தாங்கள் பெயருக்கு வண்ணம் கொடுக்கும் பொழுது செந்தில் பெயருக்கு கொடுக்க வேண்டிய வண்ணத்தை மாறாக கார்த்திக்கு கொடுத்துவிட்டீர்கள் . இந்த இரு குழப்பங்களும் , படிப்பவர்களை பெரும்குழப்பத்தில் கிடத்திவிடகூடாது என்பதற்காகவே

தலைப்பில் கலர் கொடுத்து கோடி காண்பித்தேனே தவிர , மற்ற கலர்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக