புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 9:59 pm

First topic message reminder :

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 4 3XvmbqQOTY2Q7ENBsvh0+ilingam

இந்து கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையை வலியுறுத்தி கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்துவதாக 1970ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழக சட்டசபையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 1972ஆம் ஆண்டு மார்ச் 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அர்ச்சகர்களை நியமிப்பது என்று வகுப்பு வேறுபாடு அல்லாத நடவடிக்கை; அதில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு எனக் கூறியதுடன் தமிழக அரசின் சட்ட திருத்தம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில் சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த தீர்ப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்ற சட்டம் நிறைவேறியிருக்கும்.

ஆனால் அப்படி ஒரு சட்ட திருத்தத்துக்கு தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. உரிய அழுத்தங்கள் தரப்படாததால் மத்திய அரசும் அந்த திருத்தத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனைக் கண்டித்து 1973ஆம் ஆண்டு மீண்டும் போராட்டம் நடத்துவதாக தந்தை பெரியார் அறிவித்திருந்தார். ஆனால் அவர் காலாமாகிவிட்டார். இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் என்பது தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாகவே இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட கட்சி, இயக்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்தும் கூட அந்த சட்ட திருத்தத்தை கொண்டுவர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதே நேரத்தில் 2006ஆம் ஆண்டு மே 23-ந் தேதியன்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகியவை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தன. அதில், ஆகம விதிகளின்படி பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.கே. தாக்கெர், அல்டமாஸ் கபீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இதனிடையே அனைத்து சாதியை சேர்ந்த 207 மாணவர்கள் தமிழக அரசின் ஆகம பயிற்சிகளையும் முடித்து அர்ச்சகர் நியமனத்துக்காக காத்திருந்தனர். சிவாச்சாரியார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பராசுரனும் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும் இவ்வழக்கை நடத்தி வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 21, 2015 11:19 am

கார்த்திக் செயராம் wrote:சரியாக சொன்னீர்கள் ஐயா,
உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பை தவறாக புரிந்துக் கொண்டு அரசியல் லாபம் தேடி வீன்விதன்டா வாதம்புரிகின்றனர்.
தீர்ப்பில் என்னக்கூறப்பட்டது "யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் ஆகம விதிகளை முறையாக பயின்று பின் அர்ச்சகர் களாகக் ஆகலாம்.

ஒரு MBBS மட்டும் படித்த மருத்துவர் இருதய அருவை சிகிச்சை செய்ய அவர் மூன்று ஆண்டுகளுக்கு இருதயஅருவை சிகிச்சை பற்றி படித்து வர வேண்டும்.

அதேபோல் ஒவ்வொரு துறையிலும் தகுதி மற்றும் படிப்பு போன்றவை இருந்தால் மட்டும் அந்த துறையில் இருக்க முடியும்.

இதில் என்ன தவறு உள்ளது.
என்னை பொருத்தவரையில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு சரியே
மிகச்சரி கார்த்திக்




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 21, 2015 10:58 pm

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை கோவில்களில் நியமிக்க வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை, டிச.19-

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்துக்கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் தகுதி அடிப்படையில் என்பதை வலியுறுத்தி தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய சட்டத்தின் பேரில் உச்சநீதிமன்றத்தில் அப்போதும் அச்சட்டம் செல்லுபடியாகும் என்றும், அந்தப்படி அர்ச்சகராக நியமிக்கப்படுவது நியமனத்தைப் பொறுத்த வரை அது அரசுக்கு அதிகாரம் உள்ள ஒரு உரிமை மற்றபடி அந்த அர்ச்சகர்களால் நடத்தப்பட வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் இவைகளை தலைகீழாக மாற்றி ஏதோ “ஒரு புரட்சி” செய்து விடுவார்கள் என்றும் நாங்கள் கருதவில்லை.

அப்படி ஏதாவது நடக்கும் என்று இன்று அச்சப்படும் மனுதாரர்கள், அப்போது நீதிமன்றங்களை நாடி, பரிகாரம் தேட உரிமையுண்டு, எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் (தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை திருத்தச் சட்டம்) செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பில் எழுப்பப்பட்ட அச்சங்களை போக்கி, சமூக சீர்திருத்த அடிப்படையில் தான் தி.மு.க. அரசு இந்த திருத்தத்தைக் கொணர்ந்து நடைமுறைப்படுத்த முற்படுகிறதே தவிர, “மத சீர்திருத்த அடிப்படையிலோ, மத விஷயங்களில் தலையிட்டு தலைகீழ் நடைமுறைகளைச் செய்யவோ முயற்சிக்கவில்லை” என்று தெளிவுபடுத்தும் வகையில், 2006-ல் அமைந்த தி.மு.க. அரசு, முதலில் தனியே ஓர் ஆணை போட்டது; (23.5.2006) அதன்படி தேவைப்படும் தகுதியும், பயிற்சியும் பெற்ற இந்துவான எந்த நபரும், கோயில்களில் அர்ச்சகராக நியமனம் பெறலாம் என்று கூறியது.

அவசரச்சட்டமும், அதன்பிறகு கைவிடப்பட்டு, தனிச்சட்டமாகவே சட்டத்திருத்தமாக கொண்டு வரப்பட்டது. இதனை சரியாக அமுல்படுத்த பரிந்துரைக்க செய்ய உயர்நிலைக்குழு ஒன்றை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் தலைமையில் கீழ்க்கண்ட இந்து சமயத்துறை வல்லுநர்களைக் கொண்டு நியமித்தது. அந்தக்குழுவில், த.பிச்சாண்டி (அறநிலையத் துறை ஆணையர்) உறுப்பினர், செயலாளர் (பதவி வழி), தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக அடிகளார் (குன்றக்குடி ஆதீனம், உறுப்பினர்), பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் (உறுப்பினர்), ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் (உறுப்பினர்), பிள்ளையார்பட்டி முனைவர் பிச்சை சிவாச்சாரியார் (உறுப்பினர்), திருப்பரங்குன்றம் கே.சந்திரசேகர பட்டர் (உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றனர். அந்தக்குழுவினர் பரிந்துரைகளை அளித்தனர். (ஆணை 23.5.2006 நியமனம் 10.6.2006). அக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக தந்ததை தமிழ்நாடு அரசு ஏற்று (ஆணை எண் 1, 2007) ஆணையாகவும் வெளியிட்டது! இன்றும் அது செயல்பட எந்தத்தடையும் இல்லை.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தி.மு.க. அரசு 2006-ல் நியமித்த அர்ச்சகர் நியமனம்பற்றிய (23.5.2006) ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் (அது ஆணையாகப் போடப்பட்ட உடனேயே அவசரமாக) ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கமும் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த ஆணைக்கு எதிராக வழக்குப் போட்டு, தடை ஆணையும் பெற்றனர். அந்த ஆணை பிறகு தனிச்சட்டமாக போடப்பட்டது; அதற்காகத் காத்திருக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து, வழக்குப்போட்டனர். அதை உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப்பின் 16.12.2015-ல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

54 பக்கங்களைக் கொண்ட அத்தீர்ப்பில், மனுதாரர்களான ஆதி சைவ சிவாச்சாரியார்களின் சங்கத்தினரும், மற்றவர்களும் தமிழ்நாடு அரசின் 2006-ம் ஆண்டு அர்ச்சகர் நியமன ஆணை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற அவர்களின் முக்கிய கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இந்த தீர்ப்பின்படி திமுக அரசு கொண்டு வந்த அர்ச்சகர் நியமன அரசு ஆணை செல்லும் என்றே விளங்கி விட்டது. இந்தஆணையை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரிய, மனுதாரர்களின் மூன்று முக்கிய வாதங்களை தக்க விளக்கத்துடன் கூறி, ஏற்க மறுத்துள்ளது.

அரசியல் சட்ட அடிப்படை உரிமையான மதச்சுதந்திர உரிமை என்பது, தங்கு தடையற்ற, குறுக்கிடப்பட முடியாத உரிமை அல்ல. அவைகளில் உள்ள முன்பகுதியில் தெளிவாக்கப்பட்டுள்ள என்று உள்ளதைச்சுட்டிக் காட்டியுள்ளனர். ஆகமங்களே தெரியாத அர்ச்சகர்கள் பலர் உள்ளதையும், பல ஆகமங்கள் தெளிவு இன்றி குழப்பமாக உள்ளது என்றும் உயர்நிலைக்குழுவின் பரிந்துரையையொட்டிய ஆணையையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர் வாதங்களும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

வைணவ திவ்ய தேசங்கள் 108-ல், 106-க்கு சென்று வந்துள்ள வ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார், அந்த 106 திவ்யதேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகராக உள்ளனர்; பெரும்பாலான கோயில்களில் ஆகமங்கள் தெரியாதவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர்.

1972-ல் வந்த அரசியல் சட்ட ஆய்ந்து நீதிபதிகள் அமர்வு, பாரம்பரிய அர்ச்சகர் நியமன முறை ஒழிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. சாதி, பிறப்பு அடிப்படையில்தான் அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும் என்பதையும் ஏற்கவில்லை.

‘சேஷம்மாள் வழக்கின்படி, தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களை நியமனம் சாதி அடிப்படை இல்லாது என்பதை ஏற்று மேலும் அதில் கூறியுள்ள ஒரே நிபந்தனை பூசை செய்வதில், சடங்குகளில் தீவிர மாற்றம் ஏதும் செய்து விடக்கூடாது என்பதுதானே தவிர, வேறில்லை.

அதை அனுசரித்து தான், தமிழ்நாடு அரசு உயர்நிலைக்குழுவை நியமனம் செய்து அனைத்து சாதியினரிடமிருந்தும் பார்ப்பனர் உட்பட 69 சதவிகிதப்படி நியமனம் செய்து அவர்களுக்கு வைணவ ஆகமம், சிவ ஆகமம் ஆகியவைகளில் தனித்தனியே வகுக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, பயிற்சிகளை வைணவக் கோயில்களுக்குத் தனி, சிவன் கோயில்களுக்குத் தனிப் பயிற்சி என்று தீட்சையும் பெற்று, தயாராக உள்ள 200 பேர்களுக்கு மேல் உள்ளவர்களை, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறைக் கோயில்களில் அர்ச்சகர்களாக உடனடியாக நியமிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

இந்த அரசு ஆணை மீதிருந்த தடை இத்தீர்ப்பு வெளியானதன் மூலம் நீக்கப்பட்டு விட்டது. மேலும் உயர்நிலைக் குழு தந்த அரசு ஆணை எண் 1, 2007 என்பது அமுலாக்கப்பட்டுள்ளது. அதன்மீது எந்த வழக்கும், தடையும் கிடையாது. அந்த ஆணைபற்றி இந்தத்தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சேஷம்மாள் வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவைகளை நிறைவேற்றியதுதான் அரசு ஆணை 1, 2007 என்பதாகும். எனவே இத்தீர்ப்பு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படல் வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக