புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 9:59 pm

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! 3XvmbqQOTY2Q7ENBsvh0+ilingam

இந்து கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையை வலியுறுத்தி கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்துவதாக 1970ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழக சட்டசபையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 1972ஆம் ஆண்டு மார்ச் 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அர்ச்சகர்களை நியமிப்பது என்று வகுப்பு வேறுபாடு அல்லாத நடவடிக்கை; அதில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு எனக் கூறியதுடன் தமிழக அரசின் சட்ட திருத்தம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில் சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த தீர்ப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்ற சட்டம் நிறைவேறியிருக்கும்.

ஆனால் அப்படி ஒரு சட்ட திருத்தத்துக்கு தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. உரிய அழுத்தங்கள் தரப்படாததால் மத்திய அரசும் அந்த திருத்தத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனைக் கண்டித்து 1973ஆம் ஆண்டு மீண்டும் போராட்டம் நடத்துவதாக தந்தை பெரியார் அறிவித்திருந்தார். ஆனால் அவர் காலாமாகிவிட்டார். இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் என்பது தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாகவே இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட கட்சி, இயக்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்தும் கூட அந்த சட்ட திருத்தத்தை கொண்டுவர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதே நேரத்தில் 2006ஆம் ஆண்டு மே 23-ந் தேதியன்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகியவை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தன. அதில், ஆகம விதிகளின்படி பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.கே. தாக்கெர், அல்டமாஸ் கபீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இதனிடையே அனைத்து சாதியை சேர்ந்த 207 மாணவர்கள் தமிழக அரசின் ஆகம பயிற்சிகளையும் முடித்து அர்ச்சகர் நியமனத்துக்காக காத்திருந்தனர். சிவாச்சாரியார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பராசுரனும் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும் இவ்வழக்கை நடத்தி வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:10 pm

இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

எனக்கு இந்த தீர்ப்பு புரியலையே.............எல்லோரும் ஆகலாம் என்கிறார்களா?..........இல்லை பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்கிறார்களா?....விளக்குங்கள் பிளீஸ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 10:34 pm

krishnaamma wrote:இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

எனக்கு இந்த தீர்ப்பு புரியலையே.............எல்லோரும் ஆகலாம் என்கிறார்களா?..........இல்லை பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்கிறார்களா?....விளக்குங்கள் பிளீஸ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180946

1) ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் போட்டிருந்த ஆணையை (G .O.) இந்த தீர்ப்பில் தள்ளுபடி செய்யவில்லை. ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

2) எந்தவொரு ஆகமத்திலும் பிராமணர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்று சொல்லப்படவில்லை.

ஆக இந்த தீர்ப்பின்படி ஆகமவிதிகள் முறையாக பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:36 pm

சாமி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1180957

நல்லது....குட் புன்னகை............. சூப்பருங்க.............இந்த செய்தி எங்கிருந்து எடுத்தீர்கள் என்று போடலையே சாமி, அதை எல்லா பதிவிலும் குறிப்பிடவேண்டுமே............பார்த்து போட்டுடுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:55 pm

அர்ச்சகர் நியமன தீர்ப்பு: மேல் முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! G_rராமேஸ்வரம்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்யவேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டது. 

இதனால் தமிழகத்தில் உள்ள 36000 கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணியாற்றும் வாய்ப்பு உருவானது. இதனை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆதி சைவ சிவாச்சாரியர்கள் நலச்சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில்கள் பரிபாலன சபையின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதையடுத்து தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் இந்த வழக்கில், திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும், எனவே தமிழக வெளியிட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘‘தமிழகத்தில் சமூக நீதிக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் விளைவாக தலித் சமுதாயத்தினர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

தற்போது அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்க கூடிய தீர்ப்பாகும். இந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்யவேண்டும்’’ என்றார். 

- இரா.மோகன்

நன்றி விகடன் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 11:03 pm

krishnaamma wrote:அர்ச்சகர் நியமன தீர்ப்பு: மேல் முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!
தற்போது அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்க கூடிய தீர்ப்பாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1180961

தீர்ப்பை சரியாக படிக்காமல் சொல்லியுள்ள கருத்து! தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை.

அதேபோல் ஆகமம் என்ன சொல்கிறது என்பதை பற்றியும் இவர்களுக்குத் தெரிவதில்லை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 11:04 pm

சாமி wrote:
krishnaamma wrote:அர்ச்சகர் நியமன தீர்ப்பு: மேல் முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!
தற்போது அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்க கூடிய தீர்ப்பாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1180961

தீர்ப்பை சரியாக படிக்காமல் சொல்லியுள்ள கருத்து! தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1180963

ம்ம்.. தெரியலை சாமி, இன்னும் 2 பேப்பரிலும் அப்படித்தான் போட்டிருக்காங்க .............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 4:33 am

ஆண்டவனை வணங்குவதிலும், அர்ச்சிப்பதிலும் வேறுபாடு இருக்கக் கூடாது,
உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது என்பதிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
அழுத்தமான கொள்கை உண்டு.

அந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை ஆராய்ந்து பார்த்து ஆவன செய்வோம்''
என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 7:06 am

ஆகம பூஜா விதி
இந்த  சந்நிதியில்   ஸ்ரீ பாஞ்சராத்ரா  ஆகம முறை  படி  பூஜைகள் நடைபெறுகின்றன .

1. பாஞ்சராத்ர  ஆகமம்  என்றால் என்ன ?
.பகவான்  ஸ்ரீ  வாசுதேவன்  ஐந்து  ராத்திரிகளில் ஐந்து  நித்ய சூரிகளுக்கு உபதேசம் செய்ததால்  இதற்கு பாஞ்சராத்ர  ஆகமம்  என்று  பெயர் .

2. நித்ய சூரிகள்  என்பவர் யாவர் ?
ஸ்ரீ வைகுண்டத்தில் நித்யம்  (ஓம்) பிரணவத்தை சொல்லி கொண்டு பகவானை  சேவித்து  கொண்டிருபவர்  நித்திய சூரியாவர்

3. ஓம்  என்றால் என்ன ?
 அ    காரம்     , உ   காரம் , ம    காரம்   இதில் அ  + உ+ ம  = ஓம்   ஆகும் 

4   அ. உ. ம . என்பது  எதை  குறிக்கும் ?

 அ    காரம்   என்பது      ஸ்ரீமன் நாராயணனையும்
  உ   காரம்   என்பது      ஸ்ரீ மகாலக்ஷ்மியையும்   
 ம    காரம்   என்பது       ஜீவ கோடிகளையும்     குறிக்கும்.

5.  நித்ய  சூரிகள்    ஐவரின்  பெயர்கள் என்னென ?  
     1 . அனந்தன்  ,  2   கருடன்  , 3. சேனை  முதல்வர்                                                               4 , வேத சாதுக்கள்  5 . சிவன். 

6. பாஞ்ச ராத்ர      ஆகமம்  எதனை   சுலோகம்  கொண்டது ?
     பாஞ்ச ராத்ர  ஆகமம்  மொத்தம் 5 ,00 ,000   சுலோகம்  கொண்டது  ஆகும் .

7 . அதற்கு விபரம் உண்டா ?
      உண்டு ,  ஆகமம் (நான்கு வேதம்)  , பரதம் , சில்பம் ,வைத்யம் , ஜோதிஷம்  ஆகியவை பற்றி  கூறப்பட்டுள்ளது    . அதில்     
  1 ,  ஆகமம் (நான்கு வேதம்)   -   1 ,00 ,000   சுலோகம்
, 2 ,   பரதம்                                       -    1 ,00 ,000   சுலோகம்
  3 ,  சில்பம்  -   வைத்யம்          -    2 ,00 ,000   சுலோகம்
  4,  ஜோதிஷம்                             -    1 ,00 ,000   சுலோகம்.

இது வைஷ்னவர்கள் கூறும் ஆகம விதிகள்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 7:12 am

அர்ச்சகர் மாணவர்களுக்கான சங்கம், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், வழக்கறிஞர் ராஜு[5], ரெங்கநாதன்,……………..இவர்கள் எல்லோரும் யார்-யார் எனபார்த்தால், ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், அவர் சொன்னதாக உள்ளதிலிருந்தே, அதிலுள்ள ஒளிந்துள்ள சித்தாந்திகளின் சதிவேலை தெரிகிறது. உண்மைகளை மறைத்து பொய்யான பிரச்சாரம் நடப்பதும் தெரிகிறது[6]. ஏனெனில் சட்டம் தெரிந்த, நீதிமன்றத்தில் அனுபம் உள்ள அல்லது தீர்ப்புகளை படித்து வரும் வக்கீல், அல்லது அத்கைய பழக்கமுள்ள ஒரு சாதாரணமான மனிதன் கூட இவ்வாறு பேச மாட்டான், எழுத மாட்டான். ஆனால், அவ்வாறுள்ளதால், தெரிந்து கொண்டே தெரியாதது மாதிரி நடித்துள்ள போக்கும் காணப்படுகிறது! இனி அவரது “குற்றச்சாட்டுகளை / வாதங்களை” அலசுவோம்:

1.     வழக்கு போட்டுள்ள பிராமணர்கள்: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைப் பார்க்கும் போது, அதிகமான வழக்குகளைப் போட்டுள்ளது சைவப் பிள்ளைமார்கள், வேளாளர்கள் தாம் அதாவது, பிராமணர்கள் அல்லாதவர்கள்[7]. இதிலிருந்தே மற்றவர்களின் தன்னிலை விளக்கங்களைக் கூட படித்திருக்கவில்லை (Affidavit / counter-affidavit) என்று நன்றாகவே தெரிகிறது. மேலும், நாத்திக அரசு ஊக்குவித்து சில கூட்டங்களும் “ஆத்திக” போர்வையில் (ஐந்தாம் படை, எட்டப்பன், விபீஷண ஆழ்வார்கள் முதலியோர்) வழக்குகள் போட்டுள்ளன[8]. ஆக இதில் யாருக்கு “சமாசாரத்தில்” ஆசை அதிகமாக இருக்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். ஆக, இதில் “வழக்கு போட்ட பிராமணர்கள்” எங்கே என்று தெரியவில்லை. உண்மையில், ஸ்ரீரங்கத்தில் அர்ச்சகர் பயிற்சி ஆரம்பித்து வைத்ததே ஸ்ரீ ரங்கநாத ஜீயர்[9] என்பவர் தாம்[10]!

2.     தீர்ப்புக் கொடுத்த நீதிமன்றம்: நீதிமன்றங்கள் உள்ள சட்டம், எற்படுத்தப் பட்டுள்ள நீதி (established law) என்றமுறையில் தான் தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. எந்த ஒரு கத்துக்குட்டி வக்கீலும் இதை அறிய வேண்டும். இல்லையென்றால் “சீனியரிடம்” கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அதுவும் இல்லையென்றால், சட்டப்புத்தகங்கள், தொடர்ந்து வரும், சஞ்சிகைகளை (Law Journals) மற்றும் வழக்குக்களை(Case laws)ப் படித்தறிய வேண்டும், இதெல்லாம் செய்யாமல், மேடைப்பேச்சாளர் மாதிரி பேசுவது, ஒன்றும் பிரயோஜனப்படாத விஷயமாகி விடும். மேலும் அத்தகைய established lawவையே சிக்கலாக்க ஈடுபட்டால், மற்றவர்கள் ஒன்றும் செய்யமுடியாது. தமிழ்-தமிழ் என்று பேசிக்கொண்டு “சத்தியவேல் முருகன்”[11], சைவர்களுக்கு எதிராகத்தான் வழக்குப் போட்டிருக்கிறார்!

3.     எல்லோரும் ஆகமவிதி… ஆகமவிதி என்கிறார்கள்: ஆமாம், உள்ளதைப் பற்றிதான் சொல்வார்கள். இங்கும் எதையும் படிக்காமல் உளறியிருப்பது தெரிகிறது. முன்னமே குறிப்பிட்டபடி Affidavit / counter-affidavitகளில் “ஆதரிப்பவர்களே” ஆகமங்fகளைக் குறிப்பிட்டுதான் எதிர்திருக்கிறார்கள்! உதாரணத்திற்கு தமிழ் வழிபாட்டு பயிற்சி மையத்தின் Affidavitஐப் பார்க்கவும்.

4.     அது என்ன ஆகமம்? வைணவத்தில் 2, சைவத்தில் 28  என  30  ஆகமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்: இப்படி சொல்வதே, இவருக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று தெரிகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளைப் படித்திருந்தாலே, இவ்வாறு பேசியிருக்கமாட்டார். பாவம், பட்டை-கொட்டைகளுடன் இருக்கும் ரெங்கநாதனாவது இவருக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம்!

5.     இந்து மதத்தைக் கட்டுப்  படுத்துவதாகச்  சொல்லப்படும்  இந்த  ஆகமங்களைப்  பெரும்பான்மையான  இந்துக்கள்  கண்ணால் பார்த்ததே கிடையாது: இவருக்கு தெரியவில்லை, அதாவது வழக்குப் போட்டுள்ளவருக்கே சட்டம் தெரியவில்லை எனும் போது, மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்பது இவர் கவலைப்படத் தேவையில்லை. பாவம், இவரை நியமித்தவர்தாம், இவரது சட்ட அறிவைப் பற்றி கவலைப்படவேண்டும். பாவம் ரெங்கநாதன் கோஷ்டி!

6. இவற்றை எழுதியது யார்,  அச்சிட்டவர்கள் யார்,  எங்கு விற்கப் படுகின்றன? பாவம், இத அளவிற்கு தனது அறியாமையை கேவலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு வக்கீல் இப்படி கேட்பது IPC, CrPc, Constitution………..இதெல்லாம் எங்கு கிடைக்கும் என்று கேட்பது போல இருக்கிறது! சத்தியவேல் முருகனார், வீரமணி, அல்லது வேறு யாரோ இவர்களுக்கு சரியாக உதவவில்லை அல்லது வேறு யாரோ இயக்குகிறார்கள் போலும்!

7.     எதுவும் தெரியாது. ஆனாலும்,  அதன் பெயரால்தான் தீண்டாமை கடைபிடிக்கப் படுகிறது. ஓஹோ, இவரே நீதிபதியாகி தீர்ப்பையே வழங்கி விட்டார்! இனி யாரும் ஒன்றும் கேட்கமுடியாது! இவர்களை என்னவென்று சொல்வது? தமது கருத்ததகளை / பொய்களை வலுக்கட்டாயமாக அடுத்தவர் / மற்றவர் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்ற நிலையில் இருப்பவரை “பாசிஸ்ட்டுகள்” என்பர். இப்படி “பாசிஸ்ட்டுகளை” விட மோசமான சித்தாந்திகளை குறிப்பிட புதிய வார்த்தையைக் கண்டு பிடிக்கவேண்டும்.

8.     கேட்டால், எல்லோரும் இந்து என்கிறார்கள்.  அப்படியானால்,  வா, ரெண்டு பேரும் சேர்ந்து சுடலை மாடன் கோயிலில் ஒற்றுமையா சாமி கும்பிடுவோம்.  இல்லையா,  பெருமாள் கோயிலில் சேர்ந்து பூஜை பண்ணுவோம். இவையெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி நடப்பதை தடுக்கத்தான் இந்த புல்லுருவி எட்டப்பன் கும்பல்கள் கிளம்பியுள்ளன. உண்மையாக தனது வாதி/பிரதிவாதி நலனிற்காக வாதிடும் எந்த வக்கீலும் இப்படி பொய் பேச மாட்டான்.  இங்கு நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட நபரின் “ஸ்டைல்” தெரிகிறது. அதாவது, இப்படி பட்டை-கொட்டை போட்டு, வேடம் தரித்து இந்து-விரோதிகள் தாம் செயல்படுகின்றனர் என நன்றாகவே தெரிகின்றது.

9.     இரண்டுமே முடியாது. இறுதி தீர்ப்ப்பும் கொடுத்தாகி விட்டது, அதாவது, இனி அப்பிலே ககடையாது! உண்மையைச் சொல்லப் போனால், இவரது நிலை அப்படித்தான் உள்ளது. அதுமட்டுமல்ல, நாத்திகர்கள், கருணாநிதி, போலி அர்ச்சகர்கள், “அர்ச்சகர்” வேடமிட்டு வந்துள்ள புல்லுருவிகள்,……….எல்லொருமே உள்ள சட்டமுறையில் வெற்றிப்பெற முடியாது, இதையெறிந்தே தேவையில்லாது, போலி சட்டத்தை உருவாக்கி அடிவாங்கி இருக்கின்றன.

10. ஆனால், நீயும் நானும் இந்து என்றால்,  இது மோசடி இல்லையா? ஆஹா, இங்குதான் இவரது உண்மையான உருவம் வெளிப்படுகிறது போலும். அதாவது, உண்மையாக தனது வாதி/பிரதிவாதி நலனிற்காக வாதிடும் எந்த வக்கீலாகத்தான் இல்லை என்றால், “நாங்கள் எல்லோருமே” இந்துக்கள் இல்லை, இந்துக்களின் எதிரிகள் என்று ஒப்புக்கொண்டது மாதிரி பேசியுள்ளார். அப்படியென்றால், எத்தகைய இந்தத விரோதி இந்த வக்கீல் அல்லது அவரை நம்பும் வாதி/பிரதிவாதி?

நன்றி வேதபிரகாஷ்

திராவிட ஏத்திசம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக