புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_m10ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 9:59 pm

First topic message reminder :

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 3XvmbqQOTY2Q7ENBsvh0+ilingam

இந்து கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையை வலியுறுத்தி கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்துவதாக 1970ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழக சட்டசபையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 1972ஆம் ஆண்டு மார்ச் 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அர்ச்சகர்களை நியமிப்பது என்று வகுப்பு வேறுபாடு அல்லாத நடவடிக்கை; அதில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு எனக் கூறியதுடன் தமிழக அரசின் சட்ட திருத்தம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில் சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த தீர்ப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்ற சட்டம் நிறைவேறியிருக்கும்.

ஆனால் அப்படி ஒரு சட்ட திருத்தத்துக்கு தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. உரிய அழுத்தங்கள் தரப்படாததால் மத்திய அரசும் அந்த திருத்தத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனைக் கண்டித்து 1973ஆம் ஆண்டு மீண்டும் போராட்டம் நடத்துவதாக தந்தை பெரியார் அறிவித்திருந்தார். ஆனால் அவர் காலாமாகிவிட்டார். இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் என்பது தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாகவே இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட கட்சி, இயக்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்தும் கூட அந்த சட்ட திருத்தத்தை கொண்டுவர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதே நேரத்தில் 2006ஆம் ஆண்டு மே 23-ந் தேதியன்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகியவை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தன. அதில், ஆகம விதிகளின்படி பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.கே. தாக்கெர், அல்டமாஸ் கபீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இதனிடையே அனைத்து சாதியை சேர்ந்த 207 மாணவர்கள் தமிழக அரசின் ஆகம பயிற்சிகளையும் முடித்து அர்ச்சகர் நியமனத்துக்காக காத்திருந்தனர். சிவாச்சாரியார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பராசுரனும் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும் இவ்வழக்கை நடத்தி வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 8:32 am

கார்த்திக் செயராம் wrote:ஆகம பூஜா விதி
இந்த  சந்நிதியில்   ஸ்ரீ பாஞ்சராத்ரா  ஆகம முறை  படி  பூஜைகள் நடைபெறுகின்றன .

1. பாஞ்சராத்ர  ஆகமம்  என்றால் என்ன ?
.பகவான்  ஸ்ரீ  வாசுதேவன்  ஐந்து  ராத்திரிகளில் ஐந்து  நித்ய சூரிகளுக்கு உபதேசம் செய்ததால்  இதற்கு பாஞ்சராத்ர  ஆகமம்  என்று  பெயர் .

2. நித்ய சூரிகள்  என்பவர் யாவர் ?
ஸ்ரீ வைகுண்டத்தில் நித்யம்  (ஓம்) பிரணவத்தை சொல்லி கொண்டு பகவானை  சேவித்து  கொண்டிருபவர்  நித்திய சூரியாவர்

3. ஓம்  என்றால் என்ன ?
 அ    காரம்     , உ   காரம் , ம    காரம்   இதில் அ  + உ+ ம  = ஓம்   ஆகும் 

4   அ. உ. ம . என்பது  எதை  குறிக்கும் ?

 அ    காரம்   என்பது      ஸ்ரீமன் நாராயணனையும்
  உ   காரம்   என்பது      ஸ்ரீ மகாலக்ஷ்மியையும்   
 ம    காரம்   என்பது       ஜீவ கோடிகளையும்     குறிக்கும்.

5.  நித்ய  சூரிகள்    ஐவரின்  பெயர்கள் என்னென ?  
     1 . அனந்தன்  ,  2   கருடன்  , 3. சேனை  முதல்வர்                                                               4 , வேத சாதுக்கள்  5 . சிவன். 

6. பாஞ்ச ராத்ர      ஆகமம்  எதனை   சுலோகம்  கொண்டது ?
     பாஞ்ச ராத்ர  ஆகமம்  மொத்தம் 5 ,00 ,000   சுலோகம்  கொண்டது  ஆகும் .

7 . அதற்கு விபரம் உண்டா ?
      உண்டு ,  ஆகமம் (நான்கு வேதம்)  , பரதம் , சில்பம் ,வைத்யம் , ஜோதிஷம்  ஆகியவை பற்றி  கூறப்பட்டுள்ளது    . அதில்     
  1 ,  ஆகமம் (நான்கு வேதம்)   -   1 ,00 ,000   சுலோகம்
, 2 ,   பரதம்                                       -    1 ,00 ,000   சுலோகம்
  3 ,  சில்பம்  -   வைத்யம்          -    2 ,00 ,000   சுலோகம்
  4,  ஜோதிஷம்                             -    1 ,00 ,000   சுலோகம்.

இது வைஷ்னவர்கள் கூறும் ஆகம விதிகள்.
அருமை........அருமை...........அருமை.............ரொம்ப சரி புன்னகை................. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 8:45 am

உண்மையில், ஸ்ரீரங்கத்தில் அர்ச்சகர் பயிற்சி ஆரம்பித்து வைத்ததே ஸ்ரீ ரங்கநாத ஜீயர்[9] என்பவர் தாம்!


இது தெரிந்ஞ்சா சரி புன்னகை.......................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
.
பகிர்வுக்கு நன்றி கார்த்திக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Dec 17, 2015 9:16 am

இதெல்லாம் பேசுபவர்கள் ,தீர்ப்பு பாமரனுக்கும் புரியும் படி குடுக்க ஏன் வலியுறுத்த மாட்டீர்கள் .எல்லா இடத்திலும் நுழையும் இந்த நீதிமன்றத்தை கேள்வி கேட்க யாருமில்லையா ?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் போன்ற அனுபவமிக்கவ்ர்களுக்கே இந்த தீர்ப்பை தவறாக புரிந்துகொண்டிருக்கிறார் என்கிறீர்கள்.அப்படி என்றால் பாமரன் எப்படி புரிந்துகொள்வான்? எல்லா டிவியிலும் நேத்து இதைப்பற்றிய சர்ச்சை இருந்தது .இதை ஆதரிப்பவர்களும் இந்த தீர்ப்பை வரவேற்கிறார்கள் ,இதை எதிர்ப்பவர்களும் இதை வரவேற்கிறார்கள்.இதிலிருந்து பாமர மக்கள் இந்த தீர்ப்பை எப்படி புரிந்துகொள்வது ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 9:21 am

anikuttan wrote:இதெல்லாம் பேசுபவர்கள் ,தீர்ப்பு பாமரனுக்கும் புரியும் படி குடுக்க ஏன் வலியுறுத்த மாட்டீர்கள் .எல்லா இடத்திலும் நுழையும் இந்த நீதிமன்றத்தை கேள்வி கேட்க யாருமில்லையா ?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் போன்ற அனுபவமிக்கவ்ர்களுக்கே இந்த தீர்ப்பை தவறாக புரிந்துகொண்டிருக்கிறார் என்கிறீர்கள்.அப்படி என்றால் பாமரன் எப்படி புரிந்துகொள்வான்? எல்லா டிவியிலும் நேத்து இதைப்பற்றிய சர்ச்சை இருந்தது .இதை ஆதரிப்பவர்களும் இந்த தீர்ப்பை வரவேற்கிறார்கள் ,இதை எதிர்ப்பவர்களும் இதை வரவேற்கிறார்கள்.இதிலிருந்து பாமர மக்கள் இந்த தீர்ப்பை எப்படி புரிந்துகொள்வது ?
மேற்கோள் செய்த பதிவு: 1181029


ஆமாம் தீர்ப்பு  point  blank  ஆக இல்லை............ஆளாளுக்கு குழப்பறாங்க  சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 9:48 am

தினமலரில்  வந்துள்ள ஒரு பின்னூட்டம் புன்னகை

தமிழ் செல்வன் 
17-டிச-201502:14:28 


ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 No_imageயார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்டம் தமிழ் நாட்டில் இயற்றியிருக்கிறார்கள் இந்த திராவிடர்கள்? அதாவது யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று?..... அதாவது எந்த சாதி இனரும் அர்ச்சகர் ஆகலாம் என்று?..... 

ஆம், அவர்கள் ஆட்டுக்கறி சாப்பிடுபவர்களாவும் இருக்கலாம், மாட்டுக்கறி சாப்பிடுபவர்களாவும் இருக்கலாம், ஏன் பன்றிக்கறி சாப்பிடுபவர்களாவும் இருக்கலாம்??. அது எல்லாம் ஒரு தடையே இல்லை. ஏன் என்றால் 3% வாக்குகள் அவர்களுக்கு முக்கியம் அல்ல 97% வாக்குகள் தான் அவர்களுக்கு முக்கியம்...... 

சரி, அதற்கு முன்பு இந்த பிரமணர்கள் (ஆரியர்கள்) யார் என்றும், இந்த திராவிடர்கள் யார் என்றும் நாம் ஒரு சிறு பார்வை பார்த்து விடலாம்???...... இந்து மதத்தில் மொத்தம் நான்கு பெரும் சாதி பிரிவுகள் உள்ளது. 

அது 1). பிரமணர்கள் - கடவுள் சேவை செய்பவர்கள் - மன்னர்களுக்கு நீதி நெறி மற்றும் சாணக்கியத்தனத்தை மன்னனுக்கு போதிக்கும் சாணக்கியர்கள், அறிவை மக்களுக்கு போதித்து அந்த அறிவை ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு கடத்துவது, அறிவு சார்ந்த தலைமுறைகளை உருவாக்குவது - அய்யர்கள் (சைவம்), அய்யங்கார்கள் ( வைணவம் ) 

2). சத்ரியர்கள் - ஆட்சியாளர்கள் - மன்னர்கள் - வன்னியர்கள் ( வடக்கு தமிழ் நாடு ), தேவர்கள் ( தெற்கே ) 

3). வைசியர்கள் - வணிகர்கள் - செட்டியார்கள் 

4). சூத்திரர்கள் - மக்கள் சேவை செய்பவர்கள் - தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள்.... இதில் மற்ற சாதி பிரிவுகளும் இந்த நான்கில் ஒன்றில் தான் அடங்கும்.... 

இந்த கட்டமைப்புதான் 15,000 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள ஒன்று இந்து மதத்தில். இந்த கட்டமைப்புதான் இத்தனை ஆண்டுகளாக இந்து மதத்தில் யாரும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு மிக நுட்பமாக இருந்தது. ஆனால் இன்று உங்க மதத்தவரே உங்களை மதிப்பதில்லை என்று கூறி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்ககிறார்கள் இன்று இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் எல்லோரும்.... 

அதற்கு உச்ச கட்டம்தான் எங்களுள் ஒருவனையே எங்களுக்கு எங்களுக்கு எதிராக சதி செய்வது, சதி செய்ய வைப்பது அனைத்தும்????.....சாதி பிரிவுகள் அனைத்தும் ஏற்படுத்தியதன் நோக்கம் எந்த ஒரு தொழிலிலுல் ஒரு சிறந்த நேர்த்தி முறையை உருவாக்குவதுதான்.... 

அதாவது ஒரு CORPORATE COMPANY-ல் SALES REPRESENTATIVE -ஆக தம் பணியை தொடங்கியவர் பின்பு ஒரு SALES TEAM LEADER ஆகி, பின்பு SALES TEAM -களுக்கு SALES HEAD -ஆகி, பின்பு SALES MANAGER - ஆக PROMOTION ஆகிறார் அந்த CORPORATE COMPANY-ல்.... 

ஒரு வேலை SALES HEAD -ஆக இருந்த அவர், ACCOUNTS DEPARTMENT -க்கு MANAGER -ஆக PROMOTION ஆகி இருந்தால் அந்த CORPORATE COMPANY-ன் எதிர்காலம் இறந்த காலம் ஆகி இருக்கும் என்று ஒரு சின்ன குழந்தைக்கு கூட தெரியும்..... அப்படித்தான் இந்து மதத்தில் சாதி என்பதும்????..... அப்படி என்றால் யார் இந்த பிரமணர்கள் உண்மையில்????... 

பிரமணர்கள் என்பவர்கள் அறத்தின்பால் நின்றவர்கள் என்று பொருள், பிற உயிர்களை தம் உயிர்கள் போல் எண்ணி அதை கொன்று உண்ணாதவர்கள் என்று பொருள், சத்தியத்தை உயிராக போற்றுபவர்கள் என்று பொருள், பிறர் மனை நோக்கதவர்கள் என்று பொருள்.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பிரமணர்களுக்கான இலக்கணத்தை????. 

இதை இப்படி சொன்னது 1300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இஸ்லாம் மதமோ இல்லை, 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கிறிஸ்தவ மதமோ இல்லை???. அதை அப்படி சொல்லியது 2500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய புத்த மதமே அது.... ஏன் என்றால் அது இந்தியாவில் தோன்றிய மதம். 

அது இந்து மதத்தை அழிக்க வந்ததல்ல, ஏன் என்றால் அது இந்து மதத்தில் இருந்து பிறந்த மதம்..... ஒரு வேளை இப்படி இந்து மதத்தில் இதை சொல்லி இருந்தால்.....ஆம், ஆரியர்களின் சூழ்ச்சி என்றோ, இல்லை பார்பனர்களின் சதி என்றோ சொல்லி இருப்பார்கள்.

இதனை இந்த திராவிடர்கள் உடனே.....திராவிடர்கள் என்ற ஒரு கூட்டம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த சிந்து சமவெளி நாகரிக மக்கள்தான் ( INDUS VALLEY CIVILISATION PEOPLE ) அவர்கள் என்று.... அப்படி என்றால் யார் இந்த ஆரியர்கள்??? ஆரியர்கள் என்பவர்கள் எங்கிருந்தோ இங்கு பஞ்சம் பிழைக்க வந்த நாடோடி கூட்டம்தான் அது. 

திராவிடர்களே இந்த மண்ணின் மைந்தர்கள் (INDIGENOUS PEOPLE OF GREAT BHARATH)-ஆம்.... இதை முதலில் கண்டு பிடித்தது அயர்லாந்தில் இருந்து திருநெல்வேலி வந்து கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த தென்னிந்திய திருச்சபை (CHARCH OF SOUTH INDIA - CSI) - தோன்ற முதுகெலும்பாக இருந்தவராம் - BISHOP MR. ROBERT CALDWELL அவர்கள். 

அதை அவர் கண்டு பிடித்தார் என்று கண்டு பிடித்து இந்த உலகத்துக்கு சொல்லி இந்த திராவிடத்துக்கு உயிர் கொடுத்தது அந்த ஒரு ஊருக்கு காவேரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வந்த கன்னடத்தவரமாம், இந்த திராவிடத்துக்கு உரம் போட்டு வளர்த்தது தென்னகத்து தெலுங்கரமாம்.....

அப்படி என்றால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தில் ஒரு வெள்ளைக்காரர் தொப்பி அணித்து இருப்பவர் அந்த ஆரியர்களை பற்றி அன்று சொல்லி, அதை அன்று ஆண்ட தமிழன் ராஜா ராஜா சோழனால் கண்டுப்பிடிக்க முடியாததைத்தான், இன்றைய தெலுங்கு ராஜா ராஜா சோழன் கண்டுப்பிடித்து விட்டாராமாம் இந்த ஆரியர்கள் யார் என்று???. 

அதனால்தான் ராஜா ராஜா சோழனும், ராஜேந்திர சோழனும் கட்டிய கோவில்களை சோழர்கள் கட்டடக்கலை என்று சொல்லாமல், தமிழர்கள் கட்டடக்கலை என்று சொல்லாமல், திராவிடர்கள் கட்டடக்கலை (DRAVIDIAN ARCHITECTURE) என்று சொல்லுகிறீர்களோ???.... அப்படி என்றால் அந்த ஆரியர்கள் யார் என்று அந்த கன்னடத்தவர்களிடம் அந்த கன்னடத்தவர் சொல்லி இருக்கலாம், இல்லை என்றால் இந்த ஆரியர்கள் யார் என்று இந்த தெளுங்கர்களிடம் இந்த தெலுங்கர் இதனை சொல்லி இருக்கலாம். 

அதை விட்டு விட்டு, தமிழ் நாட்டில் இங்கு பஞ்சம் பிழைக்க வந்து விட்டு இதனை எங்களிடம் சொல்லுவது ஏன்???....ஏன் என்றால் சென்னை மாகாணம் என்றும், மைசூர் மாகாணம் என்றும், மலபார் மகாணம் என்று இருந்ததை அன்று அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்று மொழி வரியாக மாநிலத்தை பிரித்து பங்காளியாக இருந்த எங்களை பகையாளிகளாக மாற்றி இருக்க மாட்டிர்கள் அன்று, அண்ணன் தம்பியாக வாழ்ந்த ஆந்திரா-வை ஆந்திரா & தெலுங்கான என்று பிரித்து கூட்டு குடும்பமாக இருந்த எங்களை தனி குடும்பமாக பிரித்து இருக்க மாட்டிர்கள் இன்று……. 

இல்லை என்றால் பிரமணர்கள் ஏதாவது கட்சி வைத்து அவர்களுடன் யார் ஏனும் கூட்டணி வைத்தால் அதை மதவாத கூட்டணி என்றும், எங்கிருந்தோ இந்தியாவுக்கு இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைத்தால் அதை மத சார்பற்ற கூட்டணி என்றும் இங்கு கட்டுக்கதை கட்டி இருக்க மாட்டிர்கள்.... இல்லை மத்த மதத்தில் சொல்லுவது போல சூரியன் மாலையில் குட்டையில் மறைந்து விட்டு, பின்பு அவர் ஆணை இட்டவுடன் குளித்துவிட்டு குட்டையில் இருந்து உதிக்கிறார் மறுநாள் காலையில் என்று சொல்லி இருந்தால், எங்களை திராவிடர்கள் என்றோ, ஆரியர்கள் என்றோ பிரித்து இருக்க மாட்டார்கள் அவர்கள்????.... 

எப்படி சொன்னார்கள் என்றால், அமெரிக்காவின் ஒரு செயற்கை கோள் (SATELLITE) விண்ணில் பறந்து கொண்டு இருக்கிறது, தீடிர் என்று அந்த செயற்கை கோள் ஒரு ஈர்ப்பு விசையின் (SATELLITES PETRIFY) 2-3 நிமிடங்கள் அப்படியே நின்று பின்பு பறக்கிறது. பின்பு அந்த இடம் எது என்று NASA விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள் அந்த இடம்தான் திருநள்ளார் சனி பகவன் இருக்கும் இடம் என்று. 

ஆக அப்படி ஒரு துல்லியமான மதிநுட்பம். திருநள்ளார் குளத்தில் குளிக்கும்போது அந்த குளத்தில் சனி கோளின் பார்வை படுவதினால்தான் தோஷம் விலகுகிறது என்று, வெறும் குளத்தில் குளித்து விட்டு துணியை விட்டு விட்டு வருவதனால் அல்ல என்று. அப்படி ஒரு துல்லியமான கணிப்பு. இப்படிப்பட்ட ஒரு அறிவு சார்ந்த மதத்தை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி பிரிவினை என்பது மட்டுமே. 

ஆம், ஆரியர்கள் திராவிடர்கள் என்ற இரு பிரிவினையைத்தான், எப்படி இன்று சகோதரர்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு கொல்லுகிறார்களே பிரிவு என்ற ஒன்றை காரணம் காட்டி, அது போலத்தான்????..... சரி இப்பொழுது விசயத்துற்கு வருகிறேன்.... 

ஆகம விதிப்படி யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம், மந்தரம் சொல்லுவது என்பது மட்டும் போதும் என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் வாதம் என்றால் அன்று அந்த தமிழன் ராஜா ராஜா சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் அவ்வளவு பெரிய கோவில்களை 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியவர்களுக்கு தெரியாததைத்தான், இன்று இங்கு பஞ்சம் பிழைக்க வந்த தெலுங்கு ராஜா ராஜா சோழனும், ராஜேந்திர சோழனும் கண்டுப்பிடித்து விட்டர்களமாம் பெரிய பகுத்தறிவையும், ஆகம விதிகளையும்????.............




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 9:52 am

மற்றும் ஒன்று புன்னகை


சேகரன் 


17-டிச-201504:46:01 


ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 450_095700980பக்தி இல்லாத கூட்டத்தின் புலம்பல் அதிகம் இருக்க காணலாம். கடவுளே இல்லை என்கிறார்கள்..பின்னர் இவர்களுக்கு எதற்கு யார் அர்ச்சகராக ஆனால் என்ன ஆகப்போகிறது?இப்போதெல்லாம் தட்டில் விழுகின்ற காசுகளை கூட கோவில் உண்டியல்களில் போடசொல்லி உத்தரவு..கொடுக்கப்படும் சம்பளமோ மிக குறைவே..அர்ச்ச்சர்கர்கலாக இருந்தவர்கள் இப்போதெல்லாம் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வேறு வேலைகளுக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்..இனி கருணாவும்..திமுகவினரும்..வீரமணியோடு சேர்ந்து அர்ச்ச்சர்கர் பயிற்சி முடித்துவிட்டு அர்ச்சகர்கள் ஆகலாமே..இன்னம் சில காலத்துக்கு இந்த செய்தி போதும்..போராட கோஷமிட..மீண்டும் கருப்பு சட்டை அணிய..நல்லா வேஷம் போடும் இந்த கூட்டங்கள் ஏன் அர்ச்சகர் பயிற்சிக்கு சென்று படித்து அர்ச்சகர்கள் ஆகிட கூடாது? யோசியுங்கள் வீரமணி கருணா கோஷ்டிகளே




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Dec 17, 2015 10:08 am

krishnaamma wrote:தினமலரில்  வந்துள்ள ஒரு பின்னூட்டம்: [size=13]தமிழ் செல்வன் / யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்டம் தமிழ் நாட்டில் இயற்றியிருக்கிறார்கள் இந்த திராவிடர்கள்? அதாவது யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று?..... அதாவது எந்த சாதி இனரும் அர்ச்சகர் ஆகலாம் என்று?

....................... .................................
....................... .................................

ஆகம விதிப்படி யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம், மந்தரம் சொல்லுவது என்பது மட்டும் போதும் என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் வாதம் என்றால் அன்று அந்த தமிழன் ராஜா ராஜா சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் அவ்வளவு பெரிய கோவில்களை 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியவர்களுக்கு தெரியாததைத்தான், இன்று இங்கு பஞ்சம் பிழைக்க வந்த தெலுங்கு ராஜா ராஜா சோழனும், ராஜேந்திர சோழனும் கண்டுப்பிடித்து விட்டர்களமாம் பெரிய பகுத்தறிவையும், ஆகம விதிகளையும்????
மேற்கோள் செய்த பதிவு: 1181040

நான் நாத்திகன் அல்ல. கடவுள் நம்பிக்கை உடையவன். முறையாக வேத ஆகமங்களை பயின்றவன்.

இந்த அன்பர் சொல்லியிருப்பது மகாஉளறல். இவர் சொல்லியுள்ளவற்றை தக்க சான்றுகளுடன் மறுக்க முடியும். இவரைப் போல பலர்தான் இன்று ஊடகங்களில் இருந்து வருகிறார்கள்.

உளறல் என்பதை விட மற்ற சமூகத்தின் மேல் தங்களுக்கு உள்ள ஆதிக்கத்தை பக்குவமாக உண்மை போல காட்ட முயல்கிறார்.

பல ஆண்டுகள் பொய்யைச் சொல்லிக்கொண்டே இருந்தால் உண்மையாக்கிவிடலாம் என்ற நினைப்பு இவரைப் போன்றவர்களுக்கு.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Dec 17, 2015 10:16 am

krishnaamma wrote:மற்றும் ஒன்று புன்னகைசேகரன் 
17-டிச-201504:46:01 

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!! - Page 2 450_095700980பக்தி இல்லாத கூட்டத்தின் புலம்பல் அதிகம் இருக்க காணலாம். கடவுளே இல்லை என்கிறார்கள்..பின்னர் இவர்களுக்கு எதற்கு யார் அர்ச்சகராக ஆனால் என்ன ஆகப்போகிறது?இப்போதெல்லாம் தட்டில் விழுகின்ற காசுகளை கூட கோவில் உண்டியல்களில் போடசொல்லி உத்தரவு..கொடுக்கப்படும் சம்பளமோ மிக குறைவே..அர்ச்ச்சர்கர்கலாக இருந்தவர்கள் இப்போதெல்லாம் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வேறு வேலைகளுக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்..இனி கருணாவும்..திமுகவினரும்..வீரமணியோடு சேர்ந்து அர்ச்ச்சர்கர் பயிற்சி முடித்துவிட்டு அர்ச்சகர்கள் ஆகலாமே..இன்னம் சில காலத்துக்கு இந்த செய்தி போதும்..போராட கோஷமிட..மீண்டும் கருப்பு சட்டை அணிய..நல்லா வேஷம் போடும் இந்த கூட்டங்கள் ஏன் அர்ச்சகர் பயிற்சிக்கு சென்று படித்து அர்ச்சகர்கள் ஆகிட கூடாது? யோசியுங்கள் வீரமணி கருணா கோஷ்டிகளே
மேற்கோள் செய்த பதிவு: 1181042

நான் கருப்புச் சட்டைக்காரனல்ல. அவர்களுடைய கருத்துக்களை கொள்கைகளை நான் ஏற்றுக் கொள்வது கிடையாது. அவர்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்வதே முதலில் தவறு.

ஒருபுறம் ஆதிக்க சக்திகளிடம் இன்னொருபுறம் நாத்திகவாதிகளிடமும் சிக்கிக்கொண்டு தமிழனின் கடவுள் கொள்கை படாதபாடு படுகிறது.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 10:33 am

இதில் தேவையில்லாமல் பிராமண சமுதாயத்தை இழுப்பது.வருந்த தக்கது.

என்னை பொருத்தவரையில் அவர்கள் சுடலை மாட சுவாமி கோவில்,முனியான்டி கோவிலில் அர்ச்சகர் களாக இல்லை.
அங்கே அந்த அந்த சமுதாயத்தை சார்ந்தவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர்.

பகுத்தறிவு பாவலர்கள் திராவிட மூடர்கள் அரசியல் லாபம் தேடுவதற்காக வீன் விதன்டா வாதம் புரிகின்றனர்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 10:43 am

கார்த்திக் செயராம் wrote:இதில் தேவையில்லாமல் பிராமண சமுதாயத்தை இழுப்பது.வருந்த தக்கது.

என்னை பொருத்தவரையில் அவர்கள் சுடலை மாட சுவாமி கோவில்,முனியான்டி கோவிலில் அர்ச்சகர் களாக இல்லை.
அங்கே அந்த அந்த சமுதாயத்தை சார்ந்தவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர்.

பகுத்தறிவு பாவலர்கள் திராவிட மூடர்கள் அரசியல் லாபம் தேடுவதற்காக வீன் விதன்டா வாதம் புரிகின்றனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1181051


வாஸ்த்தவம்  கார்த்திக், தினமலரில் போட்டுள்ளார்கள் தமிழகத்தில் 36000 கோவில்கள் இருக்காம், அதில் வெறும் 6000 இல் தான் பிராம்மணர்கள் அர்ச்சகர்களாக இருக்காங்களாம்............அது பொறுக்கலையா இந்த ஆட்களுக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக