புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
251 Posts - 52%
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
18 Posts - 4%
prajai
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
5 Posts - 1%
Barushree
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை யமகவந்தாதி யுரை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:57 pm

மதுரை யமகவந்தாதி யுரை-1


மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்

மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்

மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற

மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே

இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்

நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 9:03 pm

மதுரை யமகவந்தாதி யுரை-2

திருக்கையி லாயத் திருந்தெழிற் கூடலிற் சென்றுமையார்

திருக்கையி லாளை மணந்தா னருட்புணை சேர்ந்துதத்தந்

திருக்கையி லாமற் றொலையாரைக் கூற்றுவன் செக்கிலிட்டுத்

திருக்கையி லார்வந்து மீட்பா ரவன்கழல் சேர்மின்களே

தெய்வத்தன்மையுடைய கைலாசமலையினின்று அழகு பொருந்திய மதுரையை
யடைந்து, வேல்போன்ற மையணிந்த கண்களையுடைய தடாதகைப்பிராட்டியாரை திருமணமுடித்த சிவபெருமானுடைய வருட்கலத்தையடைந்து, தங்கள் தங்களுடைய குற்றங்களைப் பற்றறப்
போக்கடியார்களை,இயமனானவன் வலிமையாகிய செக்கிற்புகுத்தி யாட்டும்போது யாவர்வந்து விலக்குதல் செய்வார்?இல்லையாகலின், அந்தச்சிவபெருமானுடைய திவ்விய சரணாரவிந்தத்தைச்
சேர்ந்துய்யுங்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 9:15 pm

மதுரை யமகவந்தாதி யுரை-3

களங்கனந் தாவளை கஞ்சனை யேய்க்குங் கௌரிபங்கன்

களங்கனந் தாது புனைந்தானென் னுள்ளங் கவர்ந்திடுமே

களங்கனந் தாவர வென்றான் மதுரையிற் கண்ணுதனங்

களங்கனந் தாமரைத் தாளே நமக்குக் கதியிடமே


கண்டமும் கபோலமும் வலிமையுள்ள சங்குக்கும் கண்ணாடிக்கும் பொருந்துகின்ற உமாதேவியாரை வாமபாகத்திலே வைத்தவரும், சந்திரனைத் துன்பத்தினின்று நீக்கி யெடுத்துத் தன்சடாமுடியில்வைத்தவரும்,அடியேனுடையஹிருதயத்தைக்கவர்ந்துகொண்டகுற்றமில்லாதவரும், (திருநாளைப்போவாரை நோக்கி) நந்தாவருவாயாகவென்றழைத்தவரும்,மதுரையிலெழுந்தருளிய நெற்றிக்கண்ணையுடையவரும் நம்முடைய சரீரமானவருமாகிய சிவ பெருமானுடைய அழகிய தாமரைமலர் போன்ற திருவடிகளே நமக்கு மோக்ஷஸ்தானமாகும்.

நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 9:19 pm

மதுரை யமகவந்தாதி யுரை-4

கதம்பந்தந் தாவர மாக்கொளும் வானைக் கடக்குமெழிற்

கதம்பந்தந் தாவளக் கானத்தை யூரெனக் கண்டுயர்பா

கதம்பந்தந் தாமம் பெறவைத்த கூடற் கயற்கணிபா

கதம்பந்தந் தாண்மறை தேடுமுன் பாதத்தைப் கண்டிடவே


ஆகாயத்தை யூடுருவுங் கடப்பமரங்கள் தமதுஇடமாகக் கொண்டதும், அழகிய மேகங்கள்போன்ற யானைக்கூட்டங்கணிறைந்ததுமான வனத்தை, நகரமாகவுண்டாக்கி மகிமையுள்ள எல்லாநாட்டு மேலோர் மொழிகளையும் முறைமைகளையும் அழகுபெறவமைத்த மதுரைமாநகரில் எழுந்தருளிய மீன்போலுங் கண்களையுடைய உமாதேவியாருக்கு நாயகரே!,சுருதிகள் தேடுகின்ற உம்முடைய சரணாரவிந்தத்தைத் தரிசித்தென்னை யொப்புக்கொடுக்கப் பற்றுக்கோடுதந்து இரக்ஷிப்பீராக.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 11:34 am

நல்ல திரி....நீங்கள் தொடருங்கள்  ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 11:54 am

krishnaamma wrote:நல்ல திரி....நீங்கள் தொடருங்கள்  ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180146
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:06 pm

மதுரை யமகவந்தாதி யுரை-5

கண்டனந் தந்தங் கயனாக முத்தங் கருங்குழற்கற்

கண்டனந் தந்த மொழிநடை நூண்ணிடைக் கன்னிகறைக்

கண்டனந் தந்தனை வானெயிற் கூடற் கடிநகரிற்

கண்டனந் தந்தரம் போற்றியென் றுன்பங் கடந்தனனே

திருக்கண்களும் ஸ்தனபாரங்களும் பற்களும்,(முறையே) மச்சத்துக்கும் மலைக்கும்
முத்துக்கும் உவமையாக உள்ளவளும், கரியகூந்தலை உடையவளும், கற்கண்டுக்கும்
அன்னத்துக்கும் நூலுக்கும் உவமை காட்டுகின்ற அழகிய சொற்களை நடையையும்,
நுண்மையான மருங்குலை உடையவளுமாகிய, மீனாம்பிகையின் தேஜஸையும்,
விஷந்தங்கிய திருக்கண்டத்தையுடைய சிவபெருமான் அழகையும், விண்ணளாவிய
மதிள் சூழ்ந்த மதுரை என்னுங் காவல் நிறைந்த நகரத்திற் றெரிசித்து, அனேகந்தரம்
வணங்கி அடியேன் துன்பத்தினின்றும் நீங்கினேன்
நன்றி-பூ.ஆறுமுகப் பிள்ளை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:11 pm

மதுரை யமகவந்தாதி யுரை-6

தனக்கடங் காட்டித் தனமீட்டி வஞ்சந் தழுவியக்க

தனக்கடங் காதுவர் சொற்கேட்டு வாழ்த றவிர்த்தயனார்

தனக்கடங் காவளர் சோதியைச் சார்மினைந் தாருநிகர்த்

தனக்கடங் காநிறை கூடற் றலத்தினிற் றானடைந்தே


குடம்போலு முலைகளைத் தெரியும்படி காண்பிவித்துப் பொருளை சம்பாதித்து,
வஞ்சகத்தையும் அந்தக் கொலையையும் ஆதரித்து நீதியைக் கொல்லுகின்ற
மாதர்களுடைய, வார்த்தையைக் கேட்டு வாழும் வாழ்க்கையைத் தொலைத்து,
அழகிய கற்பகதருவுக்கொப்பான ஆகாயத்தையளாவிய சோலைகணெருங்கிய
மதுரையென்னும் திவ்விய க்ஷேத்திரத்தைச் சேர்ந்து, பிரமாவுக்கு அடங்காமல்
அக்கினிப் பிழம்பாகி நின்ற சிவபெருமானை அடைக்கலம் புகுதுங்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:16 pm

மதுரை யமகவந்தாதி யுரை-7

தானந் தவம்பல செய்துமென்னா மறை சாற்றியநி

தானந் தவறின்றிக் கூடற் றலத்திலென் றாயுடனே

தானந் தவம்பலத் தாடிய சோதியைச் சார்ந்துமன

தானந் தவல்வினை தீர்ப்பவ ரேமுத்தி தங்குவரே


மதுரையென்னுந் திவ்விய க்ஷேத்திரத்தில் எனது மாதாவாகிய உமாதேவியாருடன்
தானும் அழகுள்ள வெள்ளியம்பலத்திற் றிருநடனஞ் செய்தருளிய சிவபெருமானை,
சுருதிகளிற் சொல்லியபடி (நிக்ஷயமாய்) குற்றகணீங்கி யடைந்து, வலிமையாகிய
வினைகளை மனதாரக் கெடும்படி தீர்ப்பவர்கள் மோக்ஷஸாதன மடைவர்,
(பிறர்மதிக்கும்படி) தருமங்களையும் தவங்களையும் பலவாறாகச் செய்வதினால்
யாது பிரயோஜனம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 6:26 pm

மதுரை யமகவந்தாதி யுரை-8

தங்கத் தனத்தங் கயற்கண்ணி பாகனந் தாமரைமேற்

தங்கத் தனத்த னறியான் மதுரைத் தலத்தினுளார்

தங்கத் தனத்தந் தலையா னுருவந் தவளத்துமா

தங்கத் தனத்தந் தவிர்த்தான் பதங்கதி தந்திடுமே.


தேமற்படர்ந்த ஸ்தனபாரங்களையும் அழகிய மீன் போன்ற விழிகளையுடைய உமாதேவியாரை வாம பாகத்திலே வைத்தவரும்,அழகிய தாமரைப்புஷ்பத்தின் மேல் வீற்றிருக்கின்ற பிரமாவும் விஷ்ணுவும் காணக்கூடாதவரும், மதுரை ஸ்தலத்தில் வசிப்பவர்களுக்குக் கர்த்தாவும், கையிலே பிரம கபாலத்தை வைத்திருப்பவரும், வெள்ளை நிறமுள்ள யானையினுடைய சாபத்தைத் தீர்த்தவருமாகிய சிவபெருமானது, திவ்வியசரணாரவிந்தம் மோக்ஷத்தைக் கொடுத்தருளும். (ஆதலின் மனமே, அத்திருவடியை விரும்புவாயாக).


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக