உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 10:03 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 10:00 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 9:50 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 9:44 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 9:44 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 9:41 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 9:30 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 6:40 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 6:19 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 10:17 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 10:13 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:40 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 9:32 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 9:17 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 9:03 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:58 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 8:17 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:56 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:54 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:37 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:35 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:29 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:28 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:27 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 3:14 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 2:54 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 2:52 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 2:49 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 2:48 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 2:47 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 1:58 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:54 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:51 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:48 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:47 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 1:34 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 1:31 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:57 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:56 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:55 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Mon Aug 15, 2022 12:24 am
» சினி செய்திகள்
by ayyasamy ram Mon Aug 15, 2022 12:22 am
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:53 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:50 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:48 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
+9
K.Senthil kumar
ayyasamy ram
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
ayyamperumal
ஜாஹீதாபானு
ராஜா
Hari Prasath
விமந்தனி
13 posters
கொடைக்கானல் வரை....!
First topic message reminder :

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை
இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –

இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!

‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை

என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கொடைக்கானல் வரை....!
//இதோ இது தான் கிருஷ்ணர் இந்திரலோகத்தில் இருந்து பாமாவுக்கு கொண்டுவந்து கொடுத்த பாரிஜாத மலர் செடி...//
பவழ மல்லியைத்தான் அப்படி சொல்லுவா விமந்தினி
.....இதுவரை தான் இன்று படித்தேன்.........படித்ததே நான் போய் வந்தது போல டயர்டாக இருக்கு..so கொஞ்சம் ரெஸ்ட் இப்போ...........மீதி பின்னுட்டம் நாளை.............
.
.
.
அருமையான கட்டுரை.....கூட போடும் படங்களும் புகை படங்களும் சூப்பர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கொடைக்கானல் வரை....!
நன்றி கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கொடைக்கானல் வரை....!
இங்கிருந்தே தேயிலை தோட்டங்கள் ஆரம்பித்து விட்டது. தேயிலை தோட்டங்கள் பார்க்க, பார்க்க மனதில் பரவசத்தை ஏற்படுத்தியது.

எங்கு பார்த்தாலும், கண்ணுக்கு எட்டியவரை தேயிலை தோட்டங்களே மலையெங்கும் நிரம்பி வழிந்தது.

பச்சை பசேலென்ற மரகத பச்சை விரிப்பில் விழி மூடாது மனம் அந்த அழகில் லயித்து போயிற்று

எங்கு பார்த்தாலும், கண்ணுக்கு எட்டியவரை தேயிலை தோட்டங்களே மலையெங்கும் நிரம்பி வழிந்தது.
பச்சை பசேலென்ற மரகத பச்சை விரிப்பில் விழி மூடாது மனம் அந்த அழகில் லயித்து போயிற்று

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கொடைக்கானல் வரை....!
வால்பாறை;
கோவை மாவட்டத்தின் ஒரே கோடை வாசஸ்தலமாக உள்ளது வால்பாறை. 7வது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மரங்கள், எங்கு பார்த்தாலும் தேயி, காபி தோட்டங்கள், ஆங்காங்கே வெள்ளி கம்பியை நீட்டியது போல் ஒலைடி வரும் அருவிகள், ஆற்று தண்ணீரை சேமிக்கும் பிரமாண்ட அணைகள் என்று வால்பாறை சுற்றுலா ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

வால்பாறை என்ற ஒரு இடம் இருப்பது 1880ம் ஆண்டு காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
1920ல் காட்டு பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசிகளின் உதவியுடன் புதர் காடுகளை அகற்றி நடை பாதைகள் ரோடுகளாக மாற்றப்பட்டன, மேலும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டது.
வால்பாறை மலைப்பகுதியில் அரியவகை மூலிகைகளும் ஆட்களே நுழைய முடியாத அடர்ந்த காடுகளும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகள், பசுமை படர்ந்த புல்வெளிகளும் உள்ளது.
இது ஆனைமலை புலிகள் காப்பகமாக வால்பாறைக்கு சேர்க்கிறது. மற்ற மலைவாசல் ஸ்தலங்களைவிடவும் வால்பாறையில் இயற்கை எழில் அமைதியாக கொட்டிக்கிடக்கிறது.

வால்பாறை நகரத்தை அடைந்து விட்டோம். அன்றிரவு அங்கு தங்குவதாய் திட்டம். ஆனால் எங்கள் துரதிர்ஷ்டம் அடுத்தடுத்து வந்த நான்கு நாட்கள் லீவில் விடுதிகளும் நிரம்பி வழிந்தது. அதனால் எங்களுக்கு அறைகள் ஏதும் கிடைக்கவில்லை.
ஒரு நாள் தங்கி சோலையாறு ஆணை மற்றும் அதிரப்பள்ளி அருவி பார்க்கலாம் என்றிருந்தோம். தங்கும் அறை கிடைக்காததினால், நல்லமுடி பூஞ்சோலை (பள்ளத்தாக்கு) மட்டும் பார்த்துவிட்டு வால்பாறையை விட்டு கிளம்ப முடிவு செய்தோம்.

மணி பத்தரை தான் ஆகியிருந்ததால் நல்லமுடி பார்த்துவிட்டு மதியத்திற்கு மேல் சாப்பிட்டுவிட்டு கீழிறங்க சரியாக இருக்கும் என்று நினைத்து எங்கள் பயணத்தை துவக்கினோம்.

வேறு வானம் இருண்டு கொண்டு வந்தது, இப்பவோ. அப்பவோ மழை மழை பெய்வது போல.

ஒரு நாள் தங்கி சோலையாறு ஆணை மற்றும் அதிரப்பள்ளி அருவி பார்க்கலாம் என்றிருந்தோம். தங்கும் அறை கிடைக்காததினால், நல்லமுடி பூஞ்சோலை (பள்ளத்தாக்கு) மட்டும் பார்த்துவிட்டு வால்பாறையை விட்டு கிளம்ப முடிவு செய்தோம்.
மணி பத்தரை தான் ஆகியிருந்ததால் நல்லமுடி பார்த்துவிட்டு மதியத்திற்கு மேல் சாப்பிட்டுவிட்டு கீழிறங்க சரியாக இருக்கும் என்று நினைத்து எங்கள் பயணத்தை துவக்கினோம்.
வேறு வானம் இருண்டு கொண்டு வந்தது, இப்பவோ. அப்பவோ மழை மழை பெய்வது போல.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கொடைக்கானல் வரை....!
நல்லமுடி வந்துவிட்டது.

வாகனங்களை இங்கேயே நிறுத்திவிட்டு உள்ளே சற்று தொலைவு நடக்கவேண்டுமாம்.

சற்று தொலைவு தானே என்று பார்த்தால்...... அம்மாடியோவ்...! இங்கிருந்து பார்த்தால்.... எனக்கு இப்போதே மூச்சு வாங்கியது.

சேருமிடமே தெரியவில்லை. அதிலும் மிகவும் நெட்டாக இருந்தது. அவ்வளவு தூரம் போகமுடியுமா என்னால் என்று சந்தேகமாய் இருந்தது. ஆனா, வரலன்னு சொன்னா நிச்சயமா விடப்போறதில்ல.... அதனால் எப்படியாவது மெதுவாக உருட்டிக்கொண்டு போய்வந்து விடலாம் என்று முடிவு செய்து அம்மாவையும், மாமனாரையும் மட்டும் இங்கேயே இருக்கச்சொல்லி விட்டு நாங்கள் மூவரும் கிளம்பினோம்.

ஏற முடியுமா என்று நான் பயந்த அளவிற்கு சிரமமாக இல்லை. பள்ளத்தாக்கு கிட்டத்தில் மட்டும் பாதை உயர்ந்து இருந்ததால் சற்று சிரமமாய் இருந்தது.

இது ஒரு அழகான பள்ளத்தாக்கு. பனி சூழ்ந்திருந்ததால் சற்றே புகை மண்டலமாவே தெரிந்தது. ஆங்காங்கே விழும் அருவிகள் இங்கிருந்து பார்க்க வெள்ளிக்கம்பிகளாய் நீண்டிருந்தது.
அங்கு நிலவிய சீதோஷணம் மற்றும் காட்சி விருந்துகள்..... வார்த்தைகளாய் சொல்லமுடியாது. உடலுக்கும், கண்ணுக்கும் மிக, மிக இதமாக இருந்தது.
மொத்தத்தில் மிக அழகான பிரதேசம்.
கண் குளிர, குளிர ரசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். உடன் வந்தவர்கள் அனைவருமே போய்விட்டார்கள்.
அம்பு குறியிடப்பட்டுள்ள இடம் தான் வாகனங்கள் நிறுத்தியுள்ள இடம்.
அங்கு தான் நாங்கள் செல்லவேண்டும்.

வழியில் ஆங்கங்கு யானைகள் வந்து சென்றதன் அடையாளமாக அதன் எச்சம் மிச்சமிருந்தது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட மூன்று குட்டியானைகள் உள்பட பதினொரு யானைகள் இங்கே முகாமிட்டு இருந்ததாம். நியுசில் பார்த்தேன்.
என்னை விட்டு,விட்டு அப்பாவும், பெண்ணும் எவ்வளவு தூரத்தில் போகிறார்கள் பாருங்கள். திடீர்ன்னு யானை, கீணை வந்தால் என் நிலைமை....????? என்னால ஓடக்கூட முடியாது.......
இது ஒரு அழகான பள்ளத்தாக்கு. பனி சூழ்ந்திருந்ததால் சற்றே புகை மண்டலமாவே தெரிந்தது. ஆங்காங்கே விழும் அருவிகள் இங்கிருந்து பார்க்க வெள்ளிக்கம்பிகளாய் நீண்டிருந்தது.
அங்கு நிலவிய சீதோஷணம் மற்றும் காட்சி விருந்துகள்..... வார்த்தைகளாய் சொல்லமுடியாது. உடலுக்கும், கண்ணுக்கும் மிக, மிக இதமாக இருந்தது.
மொத்தத்தில் மிக அழகான பிரதேசம்.
கண் குளிர, குளிர ரசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். உடன் வந்தவர்கள் அனைவருமே போய்விட்டார்கள்.
அம்பு குறியிடப்பட்டுள்ள இடம் தான் வாகனங்கள் நிறுத்தியுள்ள இடம்.
அங்கு தான் நாங்கள் செல்லவேண்டும்.

வழியில் ஆங்கங்கு யானைகள் வந்து சென்றதன் அடையாளமாக அதன் எச்சம் மிச்சமிருந்தது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட மூன்று குட்டியானைகள் உள்பட பதினொரு யானைகள் இங்கே முகாமிட்டு இருந்ததாம். நியுசில் பார்த்தேன்.
என்னை விட்டு,விட்டு அப்பாவும், பெண்ணும் எவ்வளவு தூரத்தில் போகிறார்கள் பாருங்கள். திடீர்ன்னு யானை, கீணை வந்தால் என் நிலைமை....????? என்னால ஓடக்கூட முடியாது.......

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கொடைக்கானல் வரை....!
ஒரு வழியாக வாகனங்கள் நிறுத்துமிடம் வந்து சேர்ந்து வால்பாறை நோக்கி கிளம்பினோம்.

அது மதிய உணவு இடைவேளையானதால் வழியில் அங்காங்கே தேயிலை தோட்டத்தொழிலார்கள் உணவருந்திக்கொண்டிருந்தார்கள்.

இடையில் தென்பட்ட சில வித்தியாசமான பெயருடைய ஊர்கள். நல்லகாத்து, ரொட்டிக்கடை போன்றவை.

வால்பாறை வந்தடைந்ததும் மதிய உணவை லக்ஷ்மி செட்டிநாடு ஓட்டலில் முடித்துக்கொண்டு வால்பாறையிலிருந்து கீழிறங்கினோம்.

கொடைக்கானலில் வாங்கிய சோப் வாட்டர் பபுள் வால்பாறையில் பறப்பதை பாருங்கள்.

அது மதிய உணவு இடைவேளையானதால் வழியில் அங்காங்கே தேயிலை தோட்டத்தொழிலார்கள் உணவருந்திக்கொண்டிருந்தார்கள்.
இடையில் தென்பட்ட சில வித்தியாசமான பெயருடைய ஊர்கள். நல்லகாத்து, ரொட்டிக்கடை போன்றவை.

வால்பாறை வந்தடைந்ததும் மதிய உணவை லக்ஷ்மி செட்டிநாடு ஓட்டலில் முடித்துக்கொண்டு வால்பாறையிலிருந்து கீழிறங்கினோம்.

கொடைக்கானலில் வாங்கிய சோப் வாட்டர் பபுள் வால்பாறையில் பறப்பதை பாருங்கள்.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கொடைக்கானல் வரை....!
இங்கே சிங்கவால் குரங்குகள் மிக அதிக அளவில் காணப்படுகிறது. அப்படி இருக்கும் இடங்களில் எல்லாம் காட்டிலாக்காவை சேர்ந்தவர்கள் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி, சிங்கவால் குரங்குகளை காட்டுகிறார்கள். இங்கிருக்கும் மொத்த சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கையே இரு நூறுகள் தான் இருக்கும் என்கிறார்கள்.

படவுதவி-இணையம்.
நாட்டுக்குரங்கு எங்கு வேண்டுமானலும் வாழும், ஆனால் சிங்கவால் குரங்கு அப்படி இல்லை. அவை வாழ தனித்தன்மை வாய்ந்த மழைகாடுகள் அல்லது சோலைக்காடுகள் தேவை. இங்குதான் ஆண்டு முழுவதும் அவற்றிற்கு தேவையான உணவு கிடைக்கும்.
ஒருகாலத்தில் சிங்கவால் குரங்குகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியெங்கும் பரவி இருந்தன. தோட்டப்பயிர்களுக்காக அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தற்போது மஹராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் இவை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது.
எஞ்சியுள்ள இக்குரங்குகளின் எண்ணிக்கை தோட்டப்பயிர்கள் மற்றும் மனிதர்களால் சூழப்பட்ட காட்டுப்பகுதிகளிலேயே வாழ்கிறது. இச்சிறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குரங்குகளும் வெகுவாக வேட்டையாடப்படுகின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளைத் தவிர உலகில் வேறெங்கும் இச்சிங்கவால் குரங்குகள் காணப்படுவது இல்லை.
இங்கும் சுமார் 3500 முதல் 4000 சிங்கவால் குரங்குகளே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை மிகவும் கூச்சசுபாவம் உள்ளவை. சில வேளைகளில் மனிதர்களை கண்ட மாத்திரத்தில் ஓடிச்சென்று விடும்.
தலையைச் சுற்றி பிடரியுடன், சிறிய வாலின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பை வைத்து நீண்ட வாலைக் கொண்ட இதனை இனம் பிரித்து அறியலாம். இதனாலேயெ ஆங்கிலத்தில் Lion-tailed Monkey என்று பெயர். இதன் தமிழாக்கமே சிங்கவால் குரங்கு, ஆனால் இதனை மலைவாழ் மக்கள் சோலைமந்தி என்றழைக்கின்றனர்.

மஞ்சள் வட்டத்திற்குள் இருப்பது சிங்கவால் குரங்கு.

அவை ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு செல்ல இடையில் கயிற்று பாலம் பாருங்கள்.

வழியில் தென்பட்ட அழகான இடங்களையெல்லாம் வண்டியை நிறுத்தி, இறங்கி பார்த்துக்கொண்டே வந்தோம்.

அடுத்து,
குரங்கு அருவி.
வால்பாறை மலையின் துவக்கத்திலேயே இந்த மங்க்கி பால்ஸ் உள்ளது. பெரிய அருவி இல்லையென்றாலும் குளித்து ஆனந்தம் கொள்ளும் அனுபவத்தை தரக்கூடிய வகையில் தான் இருந்தது.
வழியில் இருக்கும் தகவல் பலகைகள் ‘குரங்குகளுக்கு எக்காரணம் கொண்டும் உணவளிக்க கூடாது’ என்று உறுதியாக அறிவுருத்திக்கொண்டு வந்தது.
அங்கே சில படங்கள்.

அங்கே ஒரு தகவல் பலகை என்னை ஈர்த்தது மட்டுமல்லாமல் மனதை கொஞ்சம் சங்கடப்படுத்தவும் செய்தது.
அந்த பலகையில் இருந்த வாசகம் இது தான். குரங்குகளே நம்மிடம் சொல்வது போல.....
“உணவு கொடுத்து என்னை ஊனமாக்காதே!
உன் வாகனத்தின் பின்னே என்னை அலைய விடாதே!!”

அடுத்தது ஆழியார் அணை;

தண்ணீர் அணையில் நிறையவே இருந்தது. கொஞ்சம் சோர்வாக இருந்ததினால் நான் மேலேறிப்போகவில்லை. அப்பாவும், பெண்ணும் மட்டும் போய்வந்தார்கள். நாங்கள் மூவரும் கீழே பூங்காவிலேயே அமர்ந்து விட்டோம்.
ஒரே வருத்தமான விஷயம் என்னவென்றால்... பூங்கா குப்பை கூளங்களுடன் படு மோசமாய் இருந்தது. பராமரிப்பும் சரியில்லை. வந்து போகும் நம் ஜனங்களுக்கும் அக்கறையில்லை.

மாலை நேரம் ஆகிவிட்டபடியால் ஆனைமலையில் அன்றிரவு தங்கினோம்.

மறுநாள் டாப் ஸ்லிப் நோக்கிய பயணம்.

சற்றே கரடு முரடான பாதை. ஆளரவமில்லாத காட்டுவழிப்பயணம் என்னை கொஞ்சம் மிரட்சி அடையத்தான் செய்தது.

நபர் ஒருவருக்கு ரூபாய் 120/- வசூலிக்கிறார்கள். காட்டிலாக்கா வாகனத்திலேயே நம்மை அழைத்து செல்கிறார்கள்.
புலிகள் சரணாலயம் என்றாலும் புலிகள் ஏதும் தென்படவில்லை. (நல்லவேளை)
அங்கேயே மணி ஒன்பது ஆகிவிட்டிருந்தது. அவர்களது வாகனத்தில் ஏறிய போதே சொன்னார்கள் இந்த நேரத்தில் யானைகள் ஏதும் இருக்காது என்றும், அவை காட்டிற்குள் சென்று விட்டிருக்கலாம் என்றும் சொன்னார்கள்.

வழியில் எங்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்து வேறு ஏதேனும் மிருகங்களை பார்க்கவும் வாய்ப்பிருக்கலாம் என்றும் சொன்னார்கள்.

படவுதவி-இணையம்.

பட உதவி இணையம்.
வெகு தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த யானைகள்.

அவர்கள் சொன்னது போலவே அங்கே ஒரு யானையும் இல்லை. யானைத்தொழுவம்(!) காலியாக இருந்தது.

பட உதவி-இணையம்

தங்கள் பயண அனுபவம் அருமை
உங்களுடைய அனுபவத்தை போல்
எனக்கும் டாப்சிலிப்,பரம்பிக்குளம்
ஆழியார்,திருமூர்த்தி,அமராவதி,
குரங்கு அருவி,மூணாறு ஆகிய
பயணம் அலாதி.
தங்கள் பகிர்வுக்கு நன்றி
உங்களுடைய அனுபவத்தை போல்
எனக்கும் டாப்சிலிப்,பரம்பிக்குளம்
ஆழியார்,திருமூர்த்தி,அமராவதி,
குரங்கு அருவி,மூணாறு ஆகிய
பயணம் அலாதி.
தங்கள் பகிர்வுக்கு நன்றி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கொடைக்கானல் வரை....!
மிக்க நன்றி! மலைப்பயணம் என்பதே அலாதியானது தானே ஐயா.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கொடைக்கானல் வரை....!
அங்கிருந்து பரம்பிக்குளம் சென்றோம். மறுமடியும் மேல் நோக்கிய கரடுமுரடான காட்டுவழிப்பயணம்.

இங்கும் அவர்களது வாகனத்திலேயே தான் கூட்டிச்சென்று காண்பிக்கிறார்கள். நபர் ஒருவருக்கு ரூபாய் 200/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாம் பார்க்கவேண்டிய இடங்கள் கீழ்கண்ட மேப்பில் இருக்கிறது பாருங்கள்.
மூன்று பிரிவாக கூட்டிச்செல்கிறார்கள். காலை 9 மணியளவில் ஒரு batch. 12 மணிக்கு ஒன்று. அத்தோடு பிற்பகல் 3 மணிக்கு ஒரு முறை.
வரைபடத்தில் உள்ள இடங்களை பார்வையிட்டு வர குறைந்தது மூன்று மணிநேரம் ஆகிறது. இந்த முறை நாங்கள் மூன்று மணி batch-ல் சென்றோம். நாங்கள் பத்தரை மணியில் இருந்து மூன்று மணி வரை காத்திருந்தோம்.

அத்தனையையும் பார்த்துவிட்டு திரும்ப மணி 6 ஆகிவிட்டது. நாங்கள் மலையை விட்டு கீழே இறங்கும் போது நிறையவே இருட்டிவிட்டது.
மான் கூட்டங்களுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லை.

அடுத்து மாசாணியம்மன் கோவில். கோவிலுக்கு வர இரவு மணி 7 ஆகிவிட்டிருந்தது.

இங்கும் அவர்களது வாகனத்திலேயே தான் கூட்டிச்சென்று காண்பிக்கிறார்கள். நபர் ஒருவருக்கு ரூபாய் 200/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாம் பார்க்கவேண்டிய இடங்கள் கீழ்கண்ட மேப்பில் இருக்கிறது பாருங்கள்.
மூன்று பிரிவாக கூட்டிச்செல்கிறார்கள். காலை 9 மணியளவில் ஒரு batch. 12 மணிக்கு ஒன்று. அத்தோடு பிற்பகல் 3 மணிக்கு ஒரு முறை.
வரைபடத்தில் உள்ள இடங்களை பார்வையிட்டு வர குறைந்தது மூன்று மணிநேரம் ஆகிறது. இந்த முறை நாங்கள் மூன்று மணி batch-ல் சென்றோம். நாங்கள் பத்தரை மணியில் இருந்து மூன்று மணி வரை காத்திருந்தோம்.

அத்தனையையும் பார்த்துவிட்டு திரும்ப மணி 6 ஆகிவிட்டது. நாங்கள் மலையை விட்டு கீழே இறங்கும் போது நிறையவே இருட்டிவிட்டது.
மான் கூட்டங்களுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லை.
அடுத்து மாசாணியம்மன் கோவில். கோவிலுக்கு வர இரவு மணி 7 ஆகிவிட்டிருந்தது.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மதிப்பீடுகள் : 2606
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|