புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
3 Posts - 2%
Manimegala
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
420 Posts - 48%
heezulia
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 28, 2014 10:17 am

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
ரமணி


இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம்.

01. Pantoum: பாண்டி
Pantoum - Wikipedia, the free encyclopedia


இந்த வடிவத்தைத் தமிழில் ’பாண்டி’ என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள்
தம் ’சந்தவசந்தம்’ மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w

இந்த pantoum--’பாண்டி’ வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:

Stanza 1 A B C D
Stanza 2 B E D F
Stanza 3 E G F H
Stanza 4 G I (or A or C) H J (or A or C)

This pattern continues for any number of stanzas, except for the final stanza,
which differs in the repeating pattern. The first and third lines of the last stanza
are the second and fourth of the penultimate; the first line of the poem
is the last line of the final stanza, and the third line of the first stanza
is the second of the final. Ideally, the meaning of lines shifts when they
are repeated although the words remain exactly the same: this can be done
by shifting punctuation, punning, or simply recontextualizing.

Ref: Pantoum - Wikipedia, the free encyclopedia

அதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்
அதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.
இதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்
அதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்
அடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,
முதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.

pantoum உதாரணங்கள்:
Pantoum Poems | Examples of Pantoum Poetry - PoetrySoup

*****

இனி, நான் எழுதிய சில ’பாண்டி’க் கவிதைகள்:

வேலை எனவோ?
(ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,
சந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)


காலை நேரம் கதிர்வரும் போதில்
மேலைக் காற்றில் மேனியும் குளிர
சாலை வாகனம் சற்றே குறைய
காலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1

மேலைக் காற்றில் மேனியும் குளிர
சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
காலை வீசிக் கடற்கரை சென்றாள்
வாலைக் குமரி வயதில் இளையாள். ... 2

சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
வாலைக் குமரி வயதில் இளையாள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3

சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள்
வேலை எனவோ? வியந்தேன் நானே! ... 4

மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை வாகனம் சற்றே குறைய
வேலை எனவோ வியந்தேன் நானே
காலை நேரம் கதிர்வரும் போதில்! ... 5

--ரமணி, 26-27/12/2014

*****

வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்!
(நாற்சீர்ப் ’பாண்டி’)

’பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’*
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்!

’நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’
பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்!

பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்!

யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
தேரும் வாழ்வில் தேடியே ஞானச்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்!

தேரும் வாழ்வில் தேடியே ஞான
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்
’பாரத பூமி பழம்பெரும் பூமி’!

--ரமணி, 27/12/2014

குறிப்பு:
முதற் செய்யுளின் முதலிரண்டு அடிகள் மகாகவி பாரதியாரின் ’சத்ரபதி சிவாஜி’
என்னும் பாடலில் இருந்து கொண்ட மேற்கோள் ஆகும்.

*****

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்!
(மழலையர் பாட்டு: நாற்சீர்ப் பாண்டி)

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்
வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்! ... 1

வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்! ... 2

உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே! ... 3

துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்! ... 4

புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்ப்
பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்! ... 5

--ரமணி, 27/12/2014, கலி.12/09/5115

*****

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 28, 2014 11:24 am

அன்புடன் ஐயா

இதற்கு நானும் என் பங்கில் அன்று கவிதை எழுதினேன் அந்த இழையில் சேர்க்கவில்லை . இதோ என் கவிதை

விதியும் வாழ்வும்

நினைவெங்கும் துயர் தந்ததென்ன
நிலையெண்ணி ஏங்குதே உள்ளம்
வினை செய்து உளம் நொந்ததென்ன
விலையற்றதோ வெறும் வாழ்வும்

நிலையெண்ணி ஏங்குதே உள்ளம்
நெஞ்சத்தில் கீறிடும் காயம்
விலையற்றதோ வெறும் வாழ்வும்
வெஞ்சினம் கொள்வதோ வீணும்

நெஞ்சத்தைக் கீறிடும் காயம்
நிலையோடித் தொலைபோகுமின்பம்
வெஞ்சினம் கொள்வதோ வீணும்
வலையினுள் மீனன்றோ நானும்

நிலையோடித் தொலைபோகும் இன்பம்
தலைமேவிப் பாயுதோ வெள்ளம்
வலையினுள் மீனன்றோ நானும்
வறுமைக்கு விலையாகிப் போகும்

தலைமேவி பாயுமோர் வெள்ளம்
தருகின்ற துன்பங்கள் மிஞ்சும்
வறுமைக்கு விலையாகிப் போகும்
வருகின்றதோ எல்லை தானும்

தருகின்ற துன்பங்கள் மிஞ்சும்
தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர்
வருகின்றதோ எல்லை தானும்
வண்ணங்கள் தொலைகின்றதாகும்

தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர்
தான் கண்டதோ தெய்வம் தானும்
வண்ணங்கள் தொலைகின்றபோது
வான் வந்ததே ஏழுவண்ணம்

தான் கண்டதோ தெய்வந்தானும்
தந்ததே அன்பினை பக்கம்
வான் வந்ததோ ஏழுவண்ணம் கண்டு
வந்திடும் இன்பங்கள்மீண்டும்

தந்ததே அன்பினைப் பக்கம்
தாகமும் கொண்டங்கு நிற்க
வந்திடும் இன்பங்கள் மீண்டும்
வேகம் கொண்டே வீழ்த்தக் கண்டேன்

தாகமும் கொண்டங்கு நிற்க
தவித்திட துன்பங்கள் சூழ்ந்தே
வேகம் கொண்டே வீழ்த்தக் கண்டேன்
வெடித்தே நல் உணர்வுகள்நோகும்

தவித்திட துன்பங்கள் சூழ்ந்தே
நினைவெங்கும் துயர் தந்ததென்ன
வெடித்தே நல்லுணர்வுகள் நோகும்
வினை செய்து உளம் நொந்துப்போகும்

(மீண்டும்)
நினைவெங்கும் துயர் தந்ததென்ன
நிலையெண்ணி ஏங்குதே உள்ளம்
வினை செய்து உளம் நொந்துபோகும்
விலையற்றதோ வெறும் வாழ்வும்


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 28, 2014 12:18 pm

பாண்டி வடிவில் அமையாவிடினும்,
சொற்பொருள் ஒலியில் சிறக்கும் கவிதை வரிகள் மிக அழகு!

ரமணி

[quote="kirikasan"]அன்புடன் ஐயா

இதற்கு நானும் என் பங்கில் அன்று கவிதை எழுதினேன் அந்த இழையில் சேர்க்கவில்லை . இதோ என் கவிதை

விதியும் வாழ்வும்

நினைவெங்கும் துயர் தந்ததென்ன
நிலையெண்ணி ஏங்குதே உள்ளம்
வினை செய்து உளம் நொந்ததென்ன
விலையற்றதோ வெறும் வாழ்வும்


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 29, 2014 5:21 am

============================================================
02. Nonet: ஒன்பான் ஓரசை
http://en.wikipedia.org/wiki/Nonnet
============================================================
A Nonnet is a type of poem which has the following requirements:
* It has nine lines
* The first line has 9 syllables, the second 8 syllables, the third 7 syllables until the ninth line which has one syllable.
* Has an iambic meter (stress every other syllable)

Example: A Bereft Mother
http://www.poetrysoup.com/poem/a_bereft_mother_628022

children grew and left the nest empty
the rooms are vacant and silent
the table made for one
she feels deserted
no room to smile
worrying
about
them

தமிழ் வடிவம்: ஒன்பான் ஓரசை
01. Nonet என்பதைத் தமிழில் ’ஒன்பான் ஓரசை’ எனலாம்.


சீர்க் கணக்கு இல்லாமல் முதலடியில் ஒன்பதில் தொடங்கி ஒவ்வோர் அடியிலும் ஓரசை
குறைவாக வரவேண்டும். இரண்டு அடிகளிடை ஓரெதுகை யாகவும், இறுதி
மூன்று அடிகளிலும் ஒரே எதுகை வருமாறும் அமைக்கலாம்.

உதாரணங்கள்
இல்லம்


வீடே கலகல வென்றந் நாட்களிலே
ஊடாடும் கூட்டம் குடும்பமென
பின்னர் பிள்ளை தனிக்குடும்பம்
இன்றோ ஓர்பிள்ளை பெண்
நரைமுது பெற்றோர் தனி
திரைகடல் தாண்டிக்
கல்விவேலை
இல்லம்
இல்.

பணம்

மழைப்பொழிவு மும்மாரி அந்நாளில்
விழைபொருள் பணமென வீணர் இந்நாள்
கொலையும் கொள்ளையும் கொள்கையென
நிலையிலா மாந்தராய் வாழ்க்கை
கனவின் இலக்கு பணம்
நனவின் நன்மை
பணப் பற்று
பணமுதல்
பணம்.

--ரமணி, 27/12/2014

*****

சிவன்
(nonet: ஒன்பான் ஓரசை)

அஞ்செழுத்தில் நின்று ஆற்றுப் படுத்திப்
பஞ்ச பூதத் தண்ட மாயவை
கொள்ளும் உயிரினங்கள் அனைத்திலும்
உள்ளுறைந் தியங்கும் உண்மையாய்
உள்ளம் எட்டாத
வேதப் பரம்பொருள்
நாதபிந்து
சிவையாய்ச்
சிவன்.

--ரமணி, 28/12/2014

*****


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 29, 2014 5:57 am

நல்ல கவிதை அன்பரே....சிவனவன் என் சிந்தையுள்......
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 30, 2014 9:17 am

============================================================
03. Monorhyme: ஒற்றை இயைபு
http://en.wikipedia.org/wiki/Pantoum
============================================================
அளவொத்த அடிகளாக அமைந்து, அடிகளின் இறுதியில் ஒற்றை இயைபு வரவேண்டும்.
இரண்டு அடிகளுக்கு ஓரெதுகையும் சீர்களிடை பொழிப்பு மோனையும் அமைவது சிறப்பு.

காலைக் கால்நடை
(monorhyme: ஒற்றை இயைபு)

காலைத் தென்றல் காற்றலை யோடும்
சோலைக் கொடிகள் சொகுசாய் ஆடும்
மரமும் செடியும் மலரைச் சூடும்
சுரும்பர் அவற்றைச் சுற்றியே ஓடும்
கொழுமரம் பின்னும் கொடிகள் கூடும்
கொழுமரக் கிளையமர் குயில்கள் பாடும்
குருகின் நடையில் குஞ்சுகள் ஓடும்
குருகின் இரையைக் குஞ்சுகள் நாடும்
மாமரக் கிளைகள் வானைத் தேடும்
மாவிழு நிழலை மணியொளி யூடும் ... 10 ... [மணி = சூரியன்]
அலவும் உள்ளம் அமைதியை நாடும்
மலரும் பூக்களின் வண்ணம் நேடும் ... [நேடும் = விரும்பும்]
நழுவும் காலம் நன்றென ஓடும்
விழுமனம் அன்றைய வேலையை நாடும்.

--ரமணி, 28/12/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Dec 31, 2014 8:18 am

============================================================
04. Cinquain ஐம்பொருள் கட்டு
============================================================
ஐந்து விஷயங்களை ஐந்து வரிகளில் கட்டும் (ஹைக்கூவை ஒத்த) ஒரு கவிதை வடிவம்.
அந்த வரிகள் இவ்விதம் அமையவேண்டும்.

முதல் வரி: உரிப்பொருள் (ஒரு சொல்)
இரண்டாம் வரி: வருணனை (இரு சொற்கள்)
மூன்றாம் வரி: இயக்கம் (மூன்று சொற்கள்)
நான்காம் வரி: தாக்கம் (நான்கு சொற்களில் உரிப்பொருள் பற்றிய கவிஞன் உணர்வு)
ஐந்தாம் வரி: முடிவு (ஒரு சொல்)

ஆங்கிலக் கவிதை இலக்கியத்தில் இவ்வைந்து வரிகள் சொற்களாகவோ (1-5 சொற்கள்), அல்லது
அசைகளாகவோ (2-4-6-8-2அசைகள்) எழுதப் படுவன.

English Examples: word-based:

Dinosaurs
Lived once,
Long ago, but
Only dust and dreams
Remain

Syllable-based:

Snow
Lovely, white
Falling, dancing, drifting
Covering everything it touches
Blanket

தமிழில் பொதுவாக சொற்கள் அமைப்பில் எழுதினால் சொல்ல வந்ததை நன்றாகச் சொல்லலாம்.

உதாரணங்கள்
குழந்தை
தொட்டில் உயிர்
கைகால் ஆட்டும் விழிக்கும்
பூச்சுமை களிப்பு தெய்வீகம் பாடு
என்பின்

காலம்
கடிகாரம் நாட்காட்டி
நழுவும் நிற்கும் விரையும்
பேராசை எதிர்பார்ப்பு பயம் விரக்தி
காலன்

தெய்வம்
உருவ அருவாற்றல்
படைத்தல் காத்தல் அழித்தல்
கண்காட்சி வாய்முணுப்பு உள்ளச்சுமை நம்பிக்கை
மனிதன்

--ரமணி, 29/12/2014

*****

மேலை நாட்டில் இந்த Cinquain ’ஐம்பொருள் கட்டு’ உத்தியை வைத்து பள்ளிக் குழந்தைகளைச் சின்னஞ்சிறு
சித்திர வருணனை உணர்வுக் கவிதைகள் எழுதப் பழக்குகின்றனர். அவ்வாறு குழந்தைகள் எழுதியவை சில:

Watermelon
Juicy, sweet
Dripping, slurping, smacking
So messy to eat
Yummy

Ice cream.
Cold and yummy.
I love its sweet richness
as it finds its way into my
tummy

My room
is such a mess.
Toys all over the place.
Mom says, 'Clean up!' But I like it
like this.

நம் குழந்தைகளையும் வீட்டில் எளிய தமிழில் இவ்வாறு எழுதப் பழக்கலாம்.

யானை
பேருடல் துதிக்கை
தலையாட்டும் தின்னும் பிளிறும்
அழகு ஆவல் பிரமிப்பு பயம்
பிள்ளையார்

பாயசம்
வெல்லம் முந்திரி
வழியும் சொட்டும் தித்திக்கும்
சூடு வாசனை மகிழ்ச்சி கசகச
அம்மா!

--ரமணி, 30/12/2014

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jan 11, 2015 7:26 am

============================================================
05. Clerihew: வாழ்நகை
============================================================
பிரபல புனைகதை எழுத்தாளராகவும் நகைச்சுவையாளராகவும் இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் விளங்கிய
Edmund Clerihew Bentley என்ற ஆங்கிலேயர் முதலில் புனைந்த நகைச்சுவைக் கவிதை வடிவம் Clerihew.

ஒருவர் அல்லது ஓர் உரிப்பொருள் பற்றி முற்றிலும் எதிர்பாராத கோணத்தில் நகைச்சுவை ஒலிக்க எழுதப்படும்
இந்த நாலுவரி வடிவத்தைத் தமிழில் வாழ்நகை எனலாம். இந்த வடிவின் தேவைகள்:

1. முதல் வரியில் உரிப்பொருள் சுட்டப்பட வேண்டும்..

2. நான்கு வரிகளின் இயைபுத் திட்டம் AA BB.
இயைபுகள் பொதுவாக வலுவில் அமைவதாக இருக்கும்.

3. ஒவ்வொரு வரியிலும் எத்தனை வேண்டுமாயினும், எவ்வகையிலும் (ஓரசைச் சீர் உட்பட) இருக்கலாம்.

4. தளை, தொடைக் கட்டில்லை; இறுதியில் வரும் இயைபே முக்கியம்.

5. பிரபல மனிதர்கள் அல்லது உரிபொருட்களை நகைச்சுவையாகச் சீண்டுவதே இந்த வடிவின் நோக்கம்.

Some Clerihew Examples

Sir Christopher Wren
Said, "I am going to dine with some men.
If anyone calls
Say I am designing St. Paul's."

John Stuart Mill,
By a mighty effort of will,
Overcame his natural bonhomie
And wrote Principles of Political Economy.

The Art of Biography
Is different from Geography.
Geography is about Maps,
But Biography is about Chaps.

தமிழில் Clerihew: வாழ்நகை உதாரணங்கள்:

நடிகை அம்சவல்லி
வாயெல்லாம் பல்லி
நடிக்கச் சென்ற கார் வாடகை
கிடைத்த வேடம் தாடகை!

நாயர் கடை ராயர் கடை
சூடான தேநீர் இட்லி வடை
பரபர விற்பனையா? காரணம் நீர்!
ஆம், நீரையா நீர்!

(ஓர் சமஸ்க்ருத நகைச்சுவைச் செய்யுள் தமிழில்)

உடையே உயர்வென்று சும்மாவா சொல்வது?
கடைந்த பாற்கடல் தந்த செல்வமெது?
அரிசனப் பட்டணிந்த அரிக்கோர் நாரி
அரையில் கோவணத்தான் அரனுக்கோ காரி!

--ரமணி, 10/01/2015

*****


முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Jan 11, 2015 8:10 am

சுவையாகவும் ரசனைக்கு விருந்தாகவும் சிந்தனைக்கு வழிகாட்டியாகவும் உள்ளது... 

புது வடிவம்... புது முகம் பெற்றும் மிளிர்கின்றது... அழகு...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jan 11, 2015 9:11 am

(ஓர் சமஸ்கிருத நகைச்சுவைச் செய்யுள் தமிழாக்கம்)

வணங்குவனே மருத்துவரே!
இயமனின் தம்பியாக உம்மை நெஞ்சில் இருத்துவனே!
உயிரைக் கொள்வது இயமனின் குணம்
நீர் கொள்வதோ உயிருடன் பணம்!

--ரமணி, 11/01/2015

*****


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக