புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
ரமணி
இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம்.
01. Pantoum: பாண்டி
Pantoum - Wikipedia, the free encyclopedia
இந்த வடிவத்தைத் தமிழில் ’பாண்டி’ என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள்
தம் ’சந்தவசந்தம்’ மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w
இந்த pantoum--’பாண்டி’ வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:
Stanza 1 A B C D
Stanza 2 B E D F
Stanza 3 E G F H
Stanza 4 G I (or A or C) H J (or A or C)
This pattern continues for any number of stanzas, except for the final stanza,
which differs in the repeating pattern. The first and third lines of the last stanza
are the second and fourth of the penultimate; the first line of the poem
is the last line of the final stanza, and the third line of the first stanza
is the second of the final. Ideally, the meaning of lines shifts when they
are repeated although the words remain exactly the same: this can be done
by shifting punctuation, punning, or simply recontextualizing.
Ref: Pantoum - Wikipedia, the free encyclopedia
அதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்
அதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.
இதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்
அதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்
அடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,
முதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.
pantoum உதாரணங்கள்:
Pantoum Poems | Examples of Pantoum Poetry - PoetrySoup
*****
இனி, நான் எழுதிய சில ’பாண்டி’க் கவிதைகள்:
வேலை எனவோ?
(ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,
சந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)
காலை நேரம் கதிர்வரும் போதில்
மேலைக் காற்றில் மேனியும் குளிர
சாலை வாகனம் சற்றே குறைய
காலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1
மேலைக் காற்றில் மேனியும் குளிர
சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
காலை வீசிக் கடற்கரை சென்றாள்
வாலைக் குமரி வயதில் இளையாள். ... 2
சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
வாலைக் குமரி வயதில் இளையாள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3
சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள்
வேலை எனவோ? வியந்தேன் நானே! ... 4
மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை வாகனம் சற்றே குறைய
வேலை எனவோ வியந்தேன் நானே
காலை நேரம் கதிர்வரும் போதில்! ... 5
--ரமணி, 26-27/12/2014
*****
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்!
(நாற்சீர்ப் ’பாண்டி’)
’பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’*
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்!
’நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’
பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்!
பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்!
யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
தேரும் வாழ்வில் தேடியே ஞானச்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்!
தேரும் வாழ்வில் தேடியே ஞான
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்
’பாரத பூமி பழம்பெரும் பூமி’!
--ரமணி, 27/12/2014
குறிப்பு:
முதற் செய்யுளின் முதலிரண்டு அடிகள் மகாகவி பாரதியாரின் ’சத்ரபதி சிவாஜி’
என்னும் பாடலில் இருந்து கொண்ட மேற்கோள் ஆகும்.
*****
பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்!
(மழலையர் பாட்டு: நாற்சீர்ப் பாண்டி)
பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்
வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்! ... 1
வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்! ... 2
உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே! ... 3

புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்! ... 4

பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்ப்
பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்! ... 5
--ரமணி, 27/12/2014, கலி.12/09/5115

சமஸ்கிருத நகைச்சுவை
அம்புயம் பிரமனும் பாற்கடல் அரியும்
வெண்பனி அரனும் உறங்குதல் தெரியும்
மஞ்சம் துஞ்சாதவர் அஞ்சுவதேன் ஆச்சி?
காரணம் மூட்டைப் பூச்சி!
வறுமையே!
உன்னால் எனக்கோர் அதிசய சக்தியுறும் பெருமையே!
உலகில்நான் காண்பதென எல்லாரும்
உலகில் என்னைக் காண்பதில்லை யாரும்!
கிழி துணியை! குடத்தை உடை!
கழுதைமேல் செல்வாய் நடை!
ஏடா கூடமாக ஏதோ செய்து
நீடுலகில் புகழை எய்து!
--ரமணி, 11/01/2015

06. Couplet இயைபுக்-குறள்-வெண்செந்துறை
ஆங்கிலக் கவிதை யாப்பிலக்கணத்தில் Couplet என்பது:
A pair of lines of metre in poetry.
Couplets usually comprise two lines that rhyme and have the same metre.
Couples can be closed, where the meaning stops with a grammatical pause at the end of each line;
or run-on (or open), where the meaning of the first line continues to the second.
இங்ஙனம், Couplet என்பது நம் தமிழ் யாப்பிலக்கணத்தில் குறள் வெண்பாவின் இனமாகிய
குறள் வெண்செந்துறையே அன்றி வேறல்ல. குறள் வெண்செந்துறையில் அளவொத்த
இரண்டு அடிகள் எவ்வகைத் தளையும் சீரும் பெற்றுப் பொருள் முடிவுறும் ஓர் பாவினம்.
(அளவொத்த என்பது இரண்டு அடிகளிலும் சீர் எண்ணிக்கை ஒன்றுபோல் அமைதலாகும்).
ஆங்கிலக் Couplet-ஐத் வடிவில் தமிழில் எழுதும் போது இரண்டு அடிகளும் ஒரே இயைபைப் பெறுதல் வேண்டும்.
எனவே, Couplet வடிவைத் தமிழில் ’இயைபுக்-குறள்-வெண்செந்துறை’ என்போம்.
*****
பயன்பாடு
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கவிஞர் Alexander Pope, couplet வடிவினைத் தம்
கவிதைகளில் பெரிதும் பயன்படுத்தினார். சில உதாரணங்கள்:
True wit is nature to advantage dress'd;
What oft was thought but ne'er so well expressed.
Nature and Nature's laws lay hid in night;
God said, "Let Newton be!" and all was light.
Good-Nature and Good-Sense must ever join;
To err is Humane; to Forgive, Divine.
Nay, fly to Altars; there they'll talk you dead;
For Fools rush in where Angels fear to tread.
Closed Couplet வடிவைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் Epigram எனப்படும்
அங்கதப் பொன்மொழிகள் எழுதினர்.
What is an Epigram? a dwarfish whole,
Its body brevity, and wit its soul.
--Samuel Taylor Coleridge ("Epigram", 1809)
Here lies my wife: here let her lie!
Now she's at rest -- and so am I.
--John Dryden
I'm tired of Love: I'm still more tired of Rhyme.
But Money gives me pleasure all the time.
--Hilaire Belloc
ஆங்கிலக் Couplet-ஆன இயைபுக்-குறள்-வெண்செந்துறையில் நாம் இதுபோன்ற Epigrams--அங்கதப் பொன்மொழிகள் அமைக்கலாம்.
ஞானம்
கானம் அதிர்வது பூமி
வானம் மோனச் சாமி!
சிவமென வெண்ணொளிக் கதிராம்
சிவையென வெம்மைக் கதிராம்.
மூச்சின் இயக்கம் மேனி
மூச்சை இயக்குவன் ஞானி.
கண்ணில் வெறுமனே காட்சி
கண்பின் உறுமே மாட்சி!
இரையைத் தேடுதல் குன்ற
இறையைத் தேடுதல் ஒன்றும்.
தன்னில் தனதைப் பிரிக்க
மின்னும் ஞானம் புரிக்கும்.
--ரமணி, 12/01/2015
*****
அல்லது இது போன்று ஓர் உரிப்பொருள் பற்றிப் பல இணையடிகளில் ஓடும் கவிதையாக அமைக்கலாம்.
காதல்
முன்பின் தெரியா முகத்தில் எழுந்தது
அன்பின் விதையாய் அகத்தில் விழுந்தது.
ஒருவிதை யிருவரின் உள்ளம் விளைக்கும்
கருவது எழுந்தே கனவில் திளைக்கும்.
கனவின் கிளர்ச்சி கண்களில் தெரியும்
தினவுறும் மேனி தீண்டிச் சொரியும்.
இன்னும் இன்னும் என்றே விழுங்கும்
அன்பின் மொழியில் அறிவது மழுங்கும்.
தன்னை இழக்கத் தணலுறும் வேள்வியில்
அன்னை தந்தை அருளது கேள்வியில்.
கனவாய் நனவாய்க் காதல் ஆமோ
மனமுறிந் தேதான் மாயமாய்ப் போமோ?
--ரமணி, 12/01/2015
*****
மேலுள்ளவை முறையே மூன்று, நான்கு சீர்களில் அமைந்த இணையடிகள்.
இவற்றை ஐந்து அல்லது அதற்கு மேற்படும் சீரடிகளாகவும் எழுதலாம்.
சீர்கள் அதிகம் வரும் போது ஒலிநயத்துக்கு இடையே பொழிப்பு மோனைகள் சிறக்கும்.

மேற்கோள் செய்த பதிவு: 1114705ரமணி wrote:(ஓர் சமஸ்கிருத நகைச்சுவைச் செய்யுள் தமிழாக்கம்)
வணங்குவனே மருத்துவரே!
இயமனின் தம்பியாக உம்மை நெஞ்சில் இருத்துவனே!
உயிரைக் கொள்வது இயமனின் குணம்
நீர் கொள்வதோ உயிருடன் பணம்!
--ரமணி, 11/01/2015
*****
-
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
=========================
07. Sestina: பின்னல்
=========================
செஸ்டினா எனப்படும் ஆங்கிலப் பாவடிவத்திற்குத் தமிழில் ’பின்னல்’ என்று அழகாகப் பெயரிட்டு,
கவிமாமணி இலந்தை இராமசாமி யவர்கள் இந்த வடிவைத் தமிழில் நிறுவுவதற்காக இலக்கணத்தைத்
தம் சந்தவசந்தம் கூகுள் குழுமத்தில் கொடுத்துள்ளார்.
மேல்விவரம்:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/6DX9G1nt7aA
செஸ்டினா என்னும் ஆங்கிலப் பாவடிவம் மொத்தம் 39 அடிகள் கொண்டு இலங்குவது.
இதன் இலக்கணம் பின்வருமாறு:
1. ஆறடி கொண்ட ஆறு செய்யுட்களும், மூன்றடி கொண்ட ஈற்றுச் செய்யுளுமாக
மொத்தம் 39 அடிகள். ஈற்றுச் செய்யுளுக்கு envoi--முடிப்பு என்று பெயர்.
2. ஆங்கில மரபில் முதற் செய்யுளின் அடியீற்றில் வரும் ஆறு இயைபுகளும் மற்ற
செய்யுட்களில் ஒரு பின்னலாகக் கீழ்வரும் முறையில் அமையும்.
செய்யுள் 1: 123456
செய்யுள் 2: 615243
செய்யுள் 3: 364125
செய்யுள் 4: 532614
செய்யுள் 5: 451362
செய்யுள் 6: 246531
செய்யுள் 7: 12-34-56 (envoi) (முடிப்பு: மூன்று அடிகள், அடிகளுக்குள் இயைபு)
இப்படிப் பின்னல் 123456 என்று தொடங்கி மீண்டும் அதே நிரலில்
ஈற்றடியில் முடிவது காண்க.
பின்னலைத் தமிழ் மரபில் புனையும் போது:
1. அடிகள் எல்லாம் அளவொத்து, மூன்று முதல் பல சீர்கள் வருமாறு அமைக்கலாம்.
அடிகளின் இயல்பைப் பொருத்து பாடலை இவ்வாறு பெயரிடலாம்:
வஞ்சி விருத்தப் பின்னல்: சீர்கள் 3
அகவற் பின்னல்: சீர்கள் 4
கலித்துறைப் பின்னல்: சீர்கள் 5.
ஆசிரிய விருத்தப் பின்னல்: சீர்கள் 6-ம் அதற்கு மேலும்
2. அடிகளின் ஈற்றில் வரும் இயைபுகளுக்கு பதில் அடிகளின் முதலில் ஒரே
எதுகையாக வந்து இவை மற்ற அடிகளில் பின்னலாக வருமாறு அமைக்கலாம்.
3. ஈற்றடியின் இறுதித் சீர் ஏகாரத்தில் முடியும்.
செஸ்டினாவின் ஆங்கில உதாரணங்களுக்குக் கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கவும்:
Sestina - Wikipedia, the free encyclopedia
பின்னலின் தமிழ் உதாரணங்களுக்கு இந்த சுட்டி:

இனி, வஞ்சி விருத்தப் பின்னலாக அடியேன் புனைந்த பாடல் கீழே:
கண்ணன் வண்ணம்
(வஞ்சி விருத்தப் பின்னல்)
மூலச் சொற்கள்
அரித்தான், சரித்தான், வரித்தான், பிரித்தான், விரித்தான், சிரித்தான்
1. குழந்தை
வெண்ணை கேட்டே அரித்தான்
வெண்ணைக் கலயம் சரித்தான்
வெண்ணையை வாயில் வரித்தான் ... [வரித்தான் = பூசினான்]
வெண்ணைக் கையைப் பிரித்தான்
வன்னம் காட்டியே விரித்தான்
சின்னக் கண்ணன் சிரித்தான்! ... 123456
2. கனவு நாயகன்
ராதை அருகில் சிரித்தான்
மாதவள் நெஞ்சினை அரித்தான்
வண்ணக் கனவுகள் விரித்தான்
கண்ணில் பிரிந்தே சரித்தான் ... [சரித்தான் = வசித்தான்]
நனவில் கனவைப் பிரித்தான்
மனதில் அவளை வரித்தான்! ... 615243
3. சிறுவன்
கோகுலந் தன்னை வரித்தான்
ஆகுலம் நீங்கச் சிரித்தான் ... [ஆகுலம் = மனக்கலக்கம்]
உரியினில் வெண்ணையைப் பிரித்தான்
திருடியே நெஞ்சினை அரித்தான் ... [அரித்தான் = கவர்ந்தான்]
கவலை யாவும் சரித்தான்
உவந்தோர்க் குள்ளம் விரித்தான்! ... 364125
4. சாரதி
அருநெறி இஃதென விரித்தான்
அருச்சுனன் தோழமை வரித்தான்
அருச்சுனன் தேரைச் சரித்தான்
வருவதைக் கண்டவன் சிரித்தான்
கன்னன் புண்ணியம் அரித்தான்
பின்னர் அவனுயிர் பிரித்தான்! ... 532614
5. உலகவேந்தன்
கனியும் காயும் பிரித்தான்
மனிதர் எல்லை விரித்தான்
இருளின் மயலாய் அரித்தான்
மரணம் இயல்பென வரித்தான் ... [வரித்தான் = எழுதினான்]
இயற்கை அழகில் சிரித்தான்
செயற்கை ஆளுமை சரித்தான்! ... 451362
6. பரம்பொருள்
வானை பூமியில் சரித்தான்
ஞானம் மாயை பிரித்தான்
அறிந்தேன் என்றால் சிரித்தான்
அறிவது வேண்டில் விரித்தான்
தத்துவம் தானென வரித்தான்
பத்தியில் மனதை அரித்தான்! ... 246531
7. ஆசான்
மனதை அரித்தான் மமதை சரித்தான் ... 12
தனிமை வரித்தான் தானைப் பிரித்தான் ... 34
முனைவது விரித்தான் மோனமாய்ச் சிரித்தானே! ... 56
--ரமணி, 31/01/2015, கலி.17/10/5115

09. Balliol rhyme: நகைத்துளி
Ref: Balliol rhyme - Wikipedia, the free encyclopedia
1875-ஆம் வருடம் Balliol College, Oxford-இல் அறிமுகமான
இந்த ஆங்கில பாவடிவம் ஒருவரைப் பற்றி நாலே வரிகளில்
நகைச்சுவையாக எழுதப்படும் பாடல்.
தமிழ் மரபில் இதன் வடிவமைப்பு இவ்வாறு இருக்கலாம்:
01. நான்கு அடிகள், AABB இயைபில்.
ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள்.
02. முதலிரு அடிகள் இணையில் ஒருவரது பெயர் வரும்.
03. மூன்று-நான்கு அடிகள் இணையில் அவரது இயல்பைக்
குறைகூறும் விதமாக ஒரு நகைச்சுவைக் குறிப்பு இருக்கும்.
04. இவ்வகைப் பாக்கள் பொதுவாக ஒருவர் தன்னைப் பற்றி
ஹாஸ்யமாகச் சொல்லுவதுபோல் அமையும். படர்க்கையில் குறித்தும்
எழுதலாம். பாடலில் ஒருவரைப் பற்றிய நையாண்டி இருப்பது முக்கியம்.
05. சீர்களிடையே தளைக் கட்டுப்பாடு இல்லை.
இரண்டடிக்கு ஓரெதுகை வருவது முக்கியம்.
சீர்கள் ஒன்றிலும் மூன்றிலும் வரும் பொழிப்பு மோனை மேலும் மெருகூட்டும்.
Examples in English
My name is George Nathaniel Curzon,
I am a most superior person.
My cheeks are pink, my hair is sleek,
I dine at Blenheim twice a week.
My name is Michael Andrew Gove
At private school I found I throve
And so all children must agree
To learn Latin by rote like me.
*****
Clerihew: வாழ்நகை என்று முன்னர் நாம் கண்ட யாப்பு வடிவத்திற்கும்
Balliol rhyme: நகைத்துளி-க்கும் உள்ள வேறுபாடு என்னவெனில்
உரிப்பொருள் எதுவாகவும் இருந்து முற்றிலும் எதிர்பாராத கோணத்தில்
நகைச்சுவை ஒலிக்க அளவொத்த அடிகள் நான்கில் எழுதப் படுவது,
Clerihew: வாழ்நகை.
ஒருவர் தன்னைப் பற்றியோ அல்லது கவிஞர் ஒருவரைப் பற்றியோ
நகைச்சுவையாக எழுதப்படும் நாற்சீர் அடிகள் நான்கில் அமைவது,
Balliol rhyme: நகைத்துளி
*****
தமிழில் உதாரணங்களாக நான் புனைந்தது கீழே.
Balliol rhyme: நகைத்துளி: தமிழில்
(ரமணி)
எளிதில் காண்பதல்ல என்பெயர், ஏடகம்
களித்தே நான்மேடையில் காண்பது நாடகம்
அருமை நண்பர்கள் அழைக்கும்பேர் ஏடாகூடம்
ஒருமையில் நானுமென் உபயமாக வாடாபோடா!
*****
ஏடு சொல்லும் என்பெயர் அந்தோணி
வீடு என்றுபோய் வீழத்திருத் தந்தோணி
சங்கத் தமிழ்ப்பாக்கள் சகலமும் பிடிக்கும்
சிங்கப் பல்லவை செப்புதல் தடுக்கும்!
*****
அழகிய தமிழ்மகள் அமரா வதியாள்
பழகியும் ஆடலிற் பாதம் பதியாள்
அடவு முத்திரை அபிநயம் நவரசம்
நடையில் குறையும் நளினமோர் அவசரம்!
*****
கோலுடன் வருவாள் கோமுப் பாட்டி
ராமு-அவள் பையனுக்கு ராதா பெண்டாட்டி!
வாயைக் கொடுத்து வம்பை வாங்காது
பாயில் பாட்டி படுத்துத் தூங்காது!
*****
என்றும் இளமை என்றன் ரகசியம்
இன்றே அறிவீர் இதுமிக அவசியம்
ஒருவன் எனக்கு ஒருத்தி இல்லை
வருமுன் காத்தேன் வந்திலை தொல்லை!
*****
அரசியல் வாதி அய்யா சாமி
பரிசிலாய்க் கேட்பது ’பையைக் காமி’!
வாயைத் திறந்தால் வசைமாரி பொழிந்தார்
நோயில் படுத்து நொந்தே அழிந்தார்.
*****
கதையெழுத் தாளர்நான் காசி நாதன்
எதையும் கதையாய் எழுதும் தூதன்
கட்டைப் பேனாவில் கற்பனை வந்தது
தட்டும் விசைகளில் தயங்கி நின்றது.
--ரமணி, 27-28/02/2015

எனக்கு புரியவில்லை, ஆனால் கவிதைகள் படிக்க நன்றாக உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
10. Sonnet: சானட்
பதினான்கு அடிகளில் அமையும் சின்னப் பாடலான சானட் ஆங்கில யாப்பின்
முக்கிய வகைகளில் ஒன்றாக அது தோன்றிய நாள்தொட்டு விளங்கி வருகிறது.
இத்தாலிய இலக்கியத்தில் 12-13-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி Petrarch என்ற
கவிஞரால் பிரபலமான இந்த சானட் வடிவத்தை ஆங்கிலத்தில் Sir Thomas Wyatt
என்பவர் 15-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அறிமுகப் படுத்தினார். ஆங்கில
இலக்கியத்தில் இன்று வரை, புகழ் பெற்ற கவிஞர்களில் பெரும்பாலோர் சானட்
வடிவத்தில் கவிதைகள் புனைந்துள்ளனர்.
இத்தாலிய சானட் வடிவத்தைக் கொஞ்சம் மாற்றி William Shakespeare
ஆங்கிலத்தில் தம் புகழ்பெற்ற 154 சானட்களை எழுதினார். இப்படியாக, சானட்
ஆங்கிலத்தில் இரண்டு வடிவங்களில் எழுதப் படுகிறது: Italian or Petrarchan format,
and English or Shakespearean format.
சானட் யாப்பு வடிவின் புகழுக்கு முக்கிய காரணம், அந்த வடிவத்தில் கவிதை
புனைவதில் உள்ள சவால்தான். பதினாலு வரிகளில் கவிஞன் தன் கருத்தை,
உள்ளுணர்வை, இயற்கை சார்ந்த உருவகங்களோடு வாசகரிடம் கொண்டு
சேர்க்கவேண்டும். சானட் கவிதைக் கருத்தாகக் காதல், போர், மரணத்துவம்,
மாற்றம், துன்பம் போன்றவை அமையலாம். இந்த உரிப் பொருள்களில் கவிஞன்
பொதுவாக ஒரு தனிமை உணர்வு எழுமாறு கவிதைகள் புனைவான். (இதனால்
தான் தமிழில் பாரதியார் தமிழில் தான் எழுதிய சானட் கவிதைக்குத்
’தனிமை இரக்கம்’ என்று தலைப்பிட்டார் போலும்.)
முதலில் ஆங்கில சானட் வகைகளின் இலக்கணத்தைப் பார்ப்போம்.
பின்னர் இவற்றைத் தமிழ் மரபில் அறிமுகப்படுத்தும் முறைகளை ஆராய்வோம்.
இரண்டு வடிவத்திற்கும் பொதுவில் உள்ள கூறுகள் இவை:
1. ஐந்து (லகு-குரு) சீர் கொண்ட அடிகள், அதாவது iambic pentameter
2. முதல் எட்டு அடிகளில் கவிதையின் மையக் கருத்து இயற்கை உருவகங்களுடனும்
மற்ற கவிதை அணிகளுடனும் அறிமுகப் படுத்தப்பட்டு விவரிக்கப்படும்.
3. ஒன்பதாம் அடியில் volta (turn) என்னும் திருப்பம் இருக்கும்.
இந்தத் திருப்பம் கவிதைக் கருத்திலோ, செய்தியிலோ, காட்சியிலோ,
ஒலியிலோ அல்லது வேறொரு கூறிலோ இருக்கலாம்.
4. முடிவுரையாக ஒரு செய்தி வாசகனுக்கு அறிவுறுத்தப்படும்.
அது பொதுவாக முதற் சொன்ன உரிப்பொருள்/உணர்வின்
இப்போதைய நிலையெனக் கவிஞன் கருதுவதாக இருக்கும்.
Italian or Petrarchan sonnet
1. Octave எனப்படும் முதல் எட்டு அடிகள் கவிதைக் கருவை
விதைத்து வளர்க்கும், .
2. Sestet எனப்படும் இறுதி ஆறு அடிகள் மேற்சொன்ன
திருப்பத்தை ஏற்படுத்திக் கவிதையை முடித்துவைக்கும்.
3. Rhyme scheme for ocatave: abba, abba
4. Rhyme scheme for the sestet: cde, cde or cdc, dcd
English/Shakespearean/Elizebethan sonnet
1. Quartrains எனப்படும் நான்கு அடிகளை உடைய பத்திகள்
மூன்றுடன் இறுதியாக ஒரு rhyming couplet என்னும் இயைபுடன்
கூடிய இரண்டு அடிகள்.
2. Quartrain 1 மையக் கருத்தைத் தொடங்கிவைக்கும்.
Quartrain 2 அதனை விரிக்கும்.
Quartrain 3 -இன் முதல்வரியில் முன் சொன்னதற்கு
மாறாக ஒரு திருப்பம் தொடங்கிச் சொல்லப்படும்.
Final rhyming couplet முடிவுரையாக அமையும்.
3. Rhyme scheme: abab, cdcd, efef, gg
ஆங்கில சானட் உதாரணங்கள்
ஆங்கில இலக்கியத்திலுள்ள இரண்டு சானட்களைக் கொஞ்சம் ஆராய்வோம்.
முதலில், ஸ்டெல்லா என்ற தன் (உருவகக்) காதலிக்காக
ஒரு கவிதை எழுத முயல்வதில் தாம் படும் பாட்டை விவரிக்கும்
Sir Philip Sidney-யின் இத்தாலிய வகை சானட்.
இந்தப் பாடலின் ஒன்பதாம் அடியில் வரும் திருப்பத்தையும்
அதன் பின் முடிவாக வரும் இறுதி அடியையும் நோக்குக.
Sir Philip Sidney: Italian sonnet form
"Loving in truth..."
Loving in truth, and fain in verse my love to show,
That the dear she might take some pleasure of my pain,
Pleasure might cause her read, reading might make her know,
Knowledge might pity win, and pity grace obtain,
I sought fit words to paint the blackest face of woe:
Studying inventions fine, her wits to entertain,
Oft turning others' leaves, to see if thence would flow
Some fresh and fruitful showers upon my sunburned brain.
But words came halting forth, wanting Invention's stay;
Invention, Nature's child, fled stepdame Study's blows;
And others' feet still seemed but strangers in my way.
Thus, great with child to speak, and helpless in my throes,
Biting my truant pen, beating myself for spite:
"Fool," said my Muse to me, "look in thy heart, and write."
ரத்தினச் சுருக்கமாகப் பாடல் உரைநடை வடிவில் கீழே:
Sidney - Astrophil and Stella - Sonnets 1-27
Loving, and wishing to show my love in verse,
So that Stella might find pleasure in my pain,
So that pleasure might make her read, and reading make her know me,
And knowledge might win pity for me, and pity might obtain grace,
I looked for fitting words to depict the darkest face of sadness,
Studying clever creations in order to entertain her mind,
Often turning others’ pages to see if, from them,
Fresh and fruitful ideas would flow into my brain.
But words came out lamely, lacking the support of Imagination:
Imagination, nature’s child, fled the blows of Study, her stepmother:
And the writings (‘feet’) of others seemed only alien things in the way.
So while pregnant with the desire to speak, helpless with the birth pangs,
Biting at my pen which disobeyed me, beating myself in anger,
My Muse said to me ‘Fool, look in your heart and write.
*****
கவிஞன் தன்னுள் பார்த்தே எழுதினால்தான் அது கவிதையாகும்
என்று ஸிட்னி சொன்னாரா? கீழ்வரும் பாடலில் ஷேக்ஸ்பியர்
தாம் எழுதும் கவிதை என்றும் நிற்கும் அதை ’நீவிர்’
என்றும் படிப்பீர்கள் என்று (செருக்குடன்?) சொல்கிறார்.
William Shakespeare: English/Shakespearean sonnet form
Shall I compare thee to a summer’s day?
Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer’s lease hath all too short a date:
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimm’d;
And every fair from fair sometime declines,
By chance, or nature’s changing course untrimm’d;
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow’st,
Nor shall death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou grow’st;
So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.
இந்தப் பாடலில் வரும் ’நான்’ என்பவர் பாடல் வரிகளைச் சொல்லும் ஸ்பீக்கர்,
பாடல் வரிகளை எழுதியவர், அதாவது கவிஞர் என்ற இரு நோக்கிலும்,
பாடல் குறிக்கும் ’நீ/நீவிர்’ என்பவர் ஒரு பெண் (கவிஞரின் காதலி?) அல்லது
ஆண் (கவிஞரின் புரவலர்) அல்லது வாசகர்களாகிய நாம் என்ற மூன்று
நோக்கிலும் கவிதையைப் படித்துப் பார்த்தால், புதுப்புது அர்த்தங்கள் தோன்றும்.
அதுதான் ஷேக்ஸ்பியர்.
இந்தப் பாடல் பற்றி ஆராயும் விளக்கத்தை இங்கே காண்க:
Sonnet 18
ஆங்கிலத்திலோ, தமிழிலோ சானட் எழுத முயல்வோர் அவசியம் இந்த இரு
பாடல்களையும் படித்துப் புரிந்துகொண்டு இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு
எழுதவேண்டும்.
சானட்களுக்கென்றே ஓர் வலைதளம்:
Sonnet Central
Shakespeare's Sonnets
Analysis of Shakespeare's Sonnets and Paraphrase in Modern English
தமிழில் இந்த சானட் வடிவத்தை அமைப்பது பற்றி இனி ஆராய்வோம்.

தமிழில் சானட்
முதல் முயற்சிகள்
’பரிதிமாற் கலைஞர்’ என்று அறியப்படும் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்
அவர்களும் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை யவர்களும் சேர்ந்து ’ஞானபோதினி’
என்னும் இதழை 1897-ஆம் ஆண்டில் தொடங்கி, அதை 1904 வரை வெளியிட்டனர்.
இந்த இதழில் சாஸ்திரியார் தனிப்பாசுரங்களாக நேரிசை ஆசிரியப்பா வடிவில்
பதினாலடிப் பாடல்களை எழுதி வெளியிட்டுவந்தார். இவை பின்னர் அவரால்
’தனிப்பாசுரத்தொகை’ என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன.
இந்தப் பாசுரங்களைக் கண்ட ஜி.யு.போப் அவர்கள் அவற்றை ஆங்கிலத்தில்
சானட் வடிவில் அமைத்தார். தமிழ்ப் பாசுரங்களும் போப்பின் ஆங்கில அமைப்பும்
1901-ஆம் ஆண்டில் 'TANI-PACURA-TOGAI: A Book of Sonnets in Tamil with English Echoes'
என்னும் தலைப்பில், முன்வந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டன.
இந்தப் புத்தகத்தை இங்கே தரவிறக்கலாம்:
http://www.scribd.com/doc/60952750/A-Book-of-SONNETS-in-TAMIL-and-English-by-Suriya-Narayana-Sastri-Rare-TAMIL-Book
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் ’தனிமை இரக்கம்’ என்ற பெயரில்
தன் மனைவிக்கு எழுதிய பதினாலடிக் கவிதை மதுரை விவேகபாநு இதழில்
1904-ஆம் ஆண்டு வெளிவந்தது.
பாரதியின் பாடலும் சாஸ்திரியாரின் முதற் பாடலும் கீழே:
தனிமை இரக்கம்
(நேரிசை ஆசிரியப்பா)
குயிலனாய்! நின்னொடு குலவியின் கலவி
பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்துபின்
இன்றெனக் கிடையே எண்ணில் யோசனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்
பாவியென் நெஞ்சம் பகீரெனல் அரிதோ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர்யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயலையென் இயம்புவல் சிவனே!
மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?
--பாரதியார்
*****
1. கடவுள்
(நேரிசை ஆசிரியப்பா)
எங்கணும் விளங்குறு மிறைவனே! எண்குணந்
தங்கிய வொருபெருந் தலைவனே! ஒப்புயர்
வில்லா தோங்கிய வீசனே! என்றும்
எல்லாந் தானா யிலகிடும் பொருளே!
இன்பமொ டெழிலு மன்புட னருளும்
நண்ணிய நாதனே! புண்ணிய முதலே!
உருவுடை யாயோ? உருவிலி யேயோ?
உருவரு விலாயோ? உடையையோ? உணர்கிலேன்.
என்னண மெளியே னின்னை யண்முகோ?
உன்னுமா றறியேன்; உணருமா றறியேன்.
பண்ணுமா றறியேன்; பாடுமா றறியேன்.
வணங்குமா றறியேன்; வாழ்த்துமா றறியேன்;
இணங்கி மென்னையு மெடுத்துக்
காத்தல் வேண்டும் பூத்துநின் னருளே.
--’பரிதிமாற் கலைஞர்’
1. GOD
(English rendition in sonnet form)
My God! filled with Thy glorious Majesty
Are earth and heaven; Thy loving saints declare
Thine eight-fold attributes. Beyond compare,
Lord of the Universe exalted, Thee
In every creature immanent, I see!
All bliss, all love, all grace, all beauty fair,
Flow forth from Thee, Fount of all virtue rare!
Thy Form,--Thy formless Self--reveal to me!
How may I, faint and frail, approach Thy feet?
How worshipping in lowly homage bow?
Beyond my struggling thought's conception Thou!
How utter Thee? How sing Thy praises meet?
O let Thy grace reveal'd around me shine!
Draw near to take and guard me ever thine!
--G.U.Pope
*****
சானட் வடிவின் தமிழ்ப் பெயர்
தமிழில் சானட் வடிவத்திற்கு உகந்த பெயரென்ன?
பாரதியாரும் சாஸ்திரியாரும் தம் பதினான்கடிக் கவிதையை சானட் உருவில்
எழுதினாலும், அந்த வடிவத்திற்குத் தமிழில் பெயரிடவில்லை.
சானட் என்பததற்குத் தமிழ்ப் பெயராக ’ஈரேழ்வரிப்பா’ என்றொரு பெயரை
இணையத்தில் உள்ள தமிழ் அகராதிகளில் காணலாம்:
http://tamilagarathi.our24x7i.com/english-tamil-dictionary-search-word_s_1736.jws
http://www.tamillexicon.com/define/S:621
கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள், சானட்டின் இத்தாலிய, ஆங்கில வடிவம்
இரண்டையும் குறிப்பதாக ’இருநான்கிருமூன்று’ என்னும் பெயரைப் பரிந்துரைக்கிறார்.
’இருபா இருபஃது’ என்பதுபோல் எண்ணிக்கை வைத்துப் பெயர் தரும் வழக்கம்
தமிழில் இருப்பதால், இந்தப் பெயரை அவர் பரிந்துரைக்கிறார்.
சானட் என்னும் ஆங்கிலப் பெயரின் மூலம் sonetto என்னும் இத்தாலியச் சொல்லாகும்.
இந்தச் சொல்லின் பொருள் ’ஒரு சிறிய பாடல்’ என்பதே.
http://www.etymonline.com/index.php?term=sonnet
’ஈரேழ்வரிப்பா, இருநான்கிருமூன்று’ போன்ற பெயர்கள் தம்மளவில் சிறப்பாக இருந்தாலும்
அவை சானட் உருவின் பதினான்கு அடிகளைக் குறிப்பதாக உள்ளனவே தவிர, அவற்றில்
சானட் என்னும் பெயரில் உள்ளதுபோல் அது ஒரு சிறிய பாடல் என்ற குறிப்பு இல்லை.
எனவே, sonetto என்னும் இத்தாலியச் சொல்லை ஆங்கிலத்தில் எடுத்தாண்ட போது
அவர்கள் அதை fourteen-line-song போன்ற பெயரில் குறிக்காமல் சானட் என்றே
எடுத்தாண்டதால், நாமும் இந்தப் பெயரை ஓர் திசைச்சொல்லாகக் கருதி, தமிழில்
சானட் என்றே அழைக்கலாம். மற்றவிரு பெயர்களையும் விழைவோர் பயன்படுத்தலாம்
எனக் கொள்வோம்.
*****
தமிழ் மரபில் சானட் அமைப்பு
ஆங்கில மரபு இலக்கணக் கூறுகளாகிய அடியிறுதி இயைபுகளையும், அளவொத்த அடிகளையும்,
தமிழ் மரபின் அடி-தளை-தொடை-வாய்பாடு யாப்பிலக்கணக் கூறுகளையும் உள்ளடக்கியே
தமிழ் சானட் எழுத வேண்டும்.
அங்ஙனம் எழுதும் அடிகளில் ஆங்கில மரபில் உள்ள கவிதை மையக்கரு அறிமுகம்,
விரிப்பு, திருப்பம், இயற்கை சார்ந்த உருவகம் போன்ற அணிகள் முதலிய இலக்கியக்
கூறுகளைத் தவறாமல் குறிப்பிட்ட இடங்களில் அமைக்கவேண்டும்.
தமிழ் சானட் எழுதப் பயன்படும் மரபுப் பா/பாவின வகைகள்
(ஏதேனும் விட்டுப்போயிருந்தால் அன்பர்கள் சேர்க்கவும்)
இரண்டடிச் செய்யுள்
குறள் வெண்செந்துறை (அளவொத்த அடிகள்)
மூன்றடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)
ஆசிரியத் தாழிசை (அளவொத்த அடிகள்)
நான்கடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)
தரவு கொச்சகக் கலிப்பா (அளவடி)
கலிவிருத்தம் (அளவடி)
கலித்துறை (நெடிலடி)
கட்டளைக் கலித்துறை (நெடிலடி)
ஆசிரிய விருத்தம் (ஆறு சீரும் அதற்கு மேலும்)
கட்டளைக் கலிப்பா (எட்டு சீர்கள்)
ஆறடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)
எட்டடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)
தரவுக் கொச்சகக் கலிப்பா (அளவடி)
மேற்சொன்ன விவரங்களைக் கொண்டு தமிழ் சானட் வகைகளை இப்படி அமைக்கலாம்.
தமிழ் மரபில் குறித்த இடங்களில் எதுகை-மோனைகள் அடிகளில் அமையவேண்டும்.
*****
இத்தாலிய சானட் வகை
முதல் எட்டடிகளின் இயைபுத் திட்டம்: abba, abba
இறுதி ஆறடிகளின் இயைபுத் திட்டம்: cde-cde/cdc-dcd
திருப்பம் ஒன்பதாம் அடியில் (ஆறடிச் செய்யுளின் முதல் அடியில்)
இத்தாலிய சானட் வகையைக் கூடியவரை ஒரே பா/பாவின வகை பயிலுமாறு
கீழ்வரும் சேர்க்கைகளில், அமைக்கலாம்.
அளவியல் இத்தாலிய சானட் (அளவொத்த நாற்சீர் அடிகள்)
1. எட்டடி நிலைமண்டில ஆசிரியப்பா + ஆறடி நிலைமண்டில ஆசிரியப்பா
2. எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா
3. இரண்டு நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா
4. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை
5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
6. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை
நெடிலடி இத்தாலிய சானட் (அளவொத்த ஐந்து சீர் அடிகள்)
1. இரண்டு கலித்துறை + ஒரு கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
2. இரண்டு கட்டளைக் கலித்துறை + ஒரு கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
3. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை
4. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை
விருத்த இத்தாலிய சானட் (அளவொத்த ஆறு/ஆறின் மேற்பட்ட சீர் அடிகள்)
1. இரண்டு ஆசிரிய விருத்தம் + ஒரு ஆசிரிய விருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
2. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை
3. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை
4. இரண்டு கட்டளைக் கலிப்பா + ஒரு கட்டளைக் கலிப்பா + ஒரு குறள் வெண்செந்துறை
*****
ஆங்கில சானட் வகை
முதல் மூன்று நாலடிச் செய்யுளின் இயைபுத் திட்டம்: abab, cdcd, efef
இறுதி இரண்டடியின் இயைபுத் திட்டம்: gg
திருப்பம் ஒன்பதாம் அடியில் (மூன்றாம் நாலடிச் செய்யுளின் முதல் அடியில்)
முடிவுரை இறுதி இணையடிச் செய்யுளில்.
ஆங்கில சானட் வகையைக் கூடியவரை ஒரே பா/பாவின வகை பயிலுமாறு
கீழ்வரும் சேர்க்கைகளில், அமைக்கலாம்.
அளவியல் ஆங்கில சானட் (அளவொத்த நாற்சீர் அடிகள்)
1. மூன்று நாலடி நிலைமண்டில ஆசிரியப்பா + குறள் வெண்செந்துறை
2. மூன்று நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை
3. எட்டடித் தரவு + நாலடித் தரவு + குறள் வெண்செந்துறை
4. நான்கு ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை
5. மூன்று கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
6. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை
நெடிலடி ஆங்கில சானட் (அளவொத்த ஐந்து சீர் அடிகள்)
1. முன்று கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
2. மூன்று கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
3. முதல் பன்னிரண்டிகள் ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை
4. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை
விருத்த ஆங்கில சானட் (அளவொத்த ஆறு/ஆறின் மேற்பட்ட சீர் அடிகள்)
1. மூன்று ஆசிரிய விருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
2. முதல் பன்னிரண்டிகள் ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை
3. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை
4. மூன்று கட்டளைக் கலிப்பா + ஒரு குறள் வெண்செந்துறை
*****
மேலே கொள்கையளவில் உருவாக்கிய சானட் வகை வடிவங்களை அறிஞர்களும் அன்பர்களும்
செயலளவில் முயன்று பார்த்து உதாரணங்கள் தந்து இந்த வடிவம் தமிழில் முறைப்படி
அமைய வலிமை கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் என்னளவில் முடிந்ததை முயல்கிறேன்.

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
1. எட்டடி நிலைமண்டில ஆசிரியப்பா + ஆறடி நிலைமண்டில ஆசிரியப்பா
இ1. காலம் என்னும் குழந்தை
(இத்தாலிய சானட்: நிலைமண்டில ஆசிரியப்பா
இயைபு: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)
கையில் உள்ளதைக் கைவிடும் முன்னம்
பையில் எட்டிப் பார்க்கும் பழக்கம்
இன்றே வேண்டும் என்றும் முழக்கம்
இன்னமும் குழந்தை யென்றே உன்னும்!
சொக்கும் வானிருள் சொப்புகள் மின்னும்
இக்கணம் உள்ளது இன்றைய வழக்கம்!
உலகினில் உயிர்மெய் ஒலியின் முழக்கம்
பலவகை யாகப் பரிபவச் சின்னம்!
கோலம் என்றும் குழந்தை யென்றே
காலம் ஆடும் கானம் பண்டே!
ஞாலம் பயிலும் ஞானம் சிரித்தே
வண்ணத் துயிர்மெய் வளியை மென்றே
மண்ணை யுண்டே மரத்தை யுண்டே
உண்ணும் எண்ணமும் உண்மை விரித்தே.
--ரமணி, 12/03/2015
குறிப்பு:
சொக்கும் வானிருள் ... பரிபவச் சின்னம்!
வானில் உள்ள மீன்கள் முதல் மண்ணில் மெய்யில் வாழும் உயிர்கள் வரை
எல்லாவிதமான, இறுதியில் அவமானம்/இகழ்ச்சி என்றே கைவிடப்படும்
சின்னங்கள் யாவும் காலக் குழந்தையின் விளையாட்டுச் சொப்புகள்.

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
1. மூன்று நாலடி நிலைமண்டில ஆசிரியப்பா + குறள் வெண்செந்துறை
ஆ1. மழலைச் செல்வம்
(அளவியல் ஆங்கில சானட்: நிலைமண்டில ஆசிரியப்பா)
செந்நெல் இதழ்கள் செப்பும் மழலை!
என்னை மறந்தே இறைவச மானேன்!
கரும்பு வண்ணக் கருவிழிச் சுழலை
விரும்புதல் கொள்ளும் வெகுளி யானேன்.
வண்ணப் பூச்சியின் மலர்தா வல்போல்
கண்கள் அலையக் கண்துளிர்த் தேநான்
என்னுள் கொண்டேன் ஏக்கம்: என்மேல்
மின்னல் வீழ்ந்துள் விழிப்புறு வேனோ?
என்னிடம் குறையிலை இல்லைய வரிடம்
சின்னக் குழந்தை சிறுமியோ சிறுவனோ
இருவரும் விழைந்தே சென்றன வருடம்
கருவரம் உண்டெனக் கணித்தது வெறுமனோ?
என்னுள் உயிரொன் ரேறும் காலம்
இன்றோ என்றோ வென்றெம் ஓலம்!
--ரமணி, 07/03/2015

- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4