புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Sep 15, 2015 9:43 am

First topic message reminder :

1990ல் அகில உலக ஹைக்கூப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஹைக்கூ இது.

புயலுக்குப் பிறகு,
சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான்,
மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின்

மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க?

அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது.

மேசைகள் வெளியே இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவை வீட்டுக்குள்ளேதான் இருந்திருக்க வேண்டும். ஆயினும், சன்னல்களும், கதவுகளும், தாழ்ப்பாள்களுக்கு அடங்காமல் புயலில் அடித்துக் கொண்டதனால்தான், மேசைகளின்மீது புயலின் சின்னங்கள்.

சிறுவன் துடைக்கிறான் என்பதனால், இது உணவு விடுதியாயிருக்கலாம். மேசைகள் என்னும் பன்மை வெளிப்பாடு, இதனை உறுதிப்படுத்தும்.
நன்றி – நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்,



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2015 7:46 am

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 103459460 இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 3838410834

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 08, 2015 8:29 am

இயற்கையை நேசித்தவரின் படைப்பு.அருமை

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Oct 09, 2015 6:57 am

"ஹைக்கூ பயிற்சிக்குரிய சிறு விளக்கம்..!" - நன்றி - கொள்ளிடம் காமராஜ்

இரா. கவிமலை, து. வெள்ளாளவிடுதி.
கேள்வி: ஐயா, ஒரு சிறு சந்தேகம்:
"விவவசாயம் குறைந்து வருவதால் விலையேறின உழுத மாடுகள் கசாப்பு கடையில்..!"

இது ஹைக்கூவாக ரசிக்கப்படுமா?

இதற்கு என் விளக்கம்:-
இச் சொற்றொடரில் ஹைக்கூவிற்கான மையக்கரு உள்ளது..!
ஆனால் ஹைக்கூ வடிவம் இல்லை..!

பயிற்சி விளக்கம்:-
பொதுவாக ஒரு சிறந்த ஹைக்கூ என்பது மூன்று காட்சிகளை வாசகனுக்கு உணர்த்த வேண்டும்..! முதல் இரண்டு காட்சிகளில் மேலோட்மாகவும் மூன்றாவது காட்சியில் (அதாவது இறுதி வரியில்) ஆழமாகவும் மிகவும் அழுத்தமாகவும் சொல்ல வேண்டும்..!

இப்பொழுது அன்புத்தோழமைக் கவிச் சகோ இரா. கவிமலையின் ஹைக்கூவைக் காண்போம்..!

"விவசாயம் குறைந்து வருவதால் விலையேறின உழுத மாடுகள்
கசாப்பு கடையில்..!"

வார்த்தைகளை வடிவமைக்கும் முயற்சியில் கொஞ்சமும் தளரக் கூடாது..!

இன்னும் சரியான வார்த்தைகளைச் சேர்க்கும் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டீர்களென்றால் தங்களின் ஹைக்கூ முயற்சியில் வெற்றி கிட்டும்..!

உழுதமாடுகள் - எருதுகள் அல்லது மாடுகள்.
கசாப்பு கடையில் இறைச்சி விற்கப்படுகின்றது.

இப்பொழுது பாருங்கள்:

அமோக விற்பனை
மாட்டிறைச்சி
கசாப்பு கடையில்..!
இது முதல் நிலைப் பயிற்சி..!

இரண்டாவதாக.!
மாட்டிறைச்சி
அமோக விற்பனை
கசாப்பு கடையில்..!

மூன்றாவது (இறுதி) இறுதி நிலை..!
கசாப்பு கடையில்
அமோக விற்பனை
மாட்டிறைச்சி..!
இதுபோன்று புதிதாக எழுதுபவர்கள் முயற்சியுங்கள்..! என் இதயப்பூர்வ நல்வாழ்த்துகள்..!
என்றும் அன்புடன்:-
கொள்ளிடம் காமராஜ்,
திருச்சிராப்பள்ளி - 621 216.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Oct 10, 2015 8:13 am

போட நீயும் உன் காதலும்...
ஹைக்கூவா? சென்ரியுவா? - பார்ப்போம்
தங்க மோதிரம்
பித்தளை ஆனது
காதலி ஜூட். - Baalamirdhan Murthy
சென்ரியுதான்.. ஏன் பித்தளையானது என்ற சிந்தனையை முதலிரண்டு அடிகள் சிந்திக்க வைக்கிறது. வரதட்சணை அதிகம் கேட்டதால் இப்படி திருட்டுத்தனமாக போட வேண்டியிருந்ததா? அல்லது சாலையில் கிடந்த அந்த மோதிரத்தை தங்கமென்று எண்ணி எடுத்தவருக்குப் பித்தனையானதா? இப்படிப் பொருள் விரிய...விரிய…. சரி அப்படி என்னத்தான் பித்தளையானது என்று பார்க்க 3 அடியைப் படிக்கிறோம்.
கடைசி வரி ஹைக்கூவுக்கான திருப்பமாக (சென்ரியுக்கும் இந்த திருப்பம் - ஹைக்கூ அமைப்பு முறை பொருந்தும்) அமைந்திருக்கிறது. காதலி ஏன் ஜூட் என்ற சிந்தனைக்குப் பல பொருள் விரியலாம்.
இப்போதும் எப்போதும் காதல் எல்லாம் புனிதம் - ஒருத்தரையொருத்தரே நினைத்திருப்பது என்ற சப்பைக்கட்டெல்லாம் உடைய... இன்றைய நவீன காதலின் பிரச்சினையை- பழகிய பின் பிடிக்காமை, காமம் தீர்ந்ததும் விலகுதல் - பிறரைப் பிடித்துப்போதல் - பெற்றோர் ஏற்காமை - அல்லது அல்லது அல்லது என்று சொல்லிக்கொண்டே போகலாம் அந்த 3 வது அடிக்கு. இன்றைய காதலர்களின் பிரச்சினையைப் பேசுவதால் இது சென்ரியு என்று எடுத்துக்கொள்வோம்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Oct 12, 2015 7:48 am

எச்சில் இலையை விட்டு
கலையும் காகங்கள்
தூரத்தில் ஓடிவரும் நாய் - பட்டியூர் செந்தில்குமார்


எச்சில் இலையை விட்டு - கலையும் காகங்கள் – எந்த எச்சில் இலை? எந்த இடத்தில் இருக்கும் எச்சில் இலை என்றும் கலையும் காகங்கள் என்பது எச்சில் இலையில் என்ன இருந்தது… அது சுவையாக இருந்ததா? இல்லையா? முழுவதும் சாப்பிட்டு விட்டு கலைகின்றனவா? எச்சில் இலையில் இருப்பது பிடிக்காமல் கலைகின்றனவா? என்று பொருள் விரியும்… கடைசி வரி படிக்கும்போது அந்த நாய் வருவதால் பயந்து பறக்கிறது – அந்த நாய் அந்த எச்சில் இலைக்குதான் வருகிறதா? எதேச்சையாக அந்தப் பக்கம் வருகிறதா என்று பொருள் விரியும்… - கவியருவி ம. ரமேஷ்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Oct 14, 2015 6:54 am

ஹைக்கூ புரிதல். – நா. விச்வநாதன்

*****
ஹைக்கூ எளிய ஒரு கவிதை வடிவம்தான். இன்னொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது புதிதல்ல. புதிருமல்ல. மரபு சார்ந்தது. நம் சங்கப்பாடல்கள் போலத்தான். குள்ள வடிவம்.
ஜப்பானிய மொழி சித்திரவடிவத்திலுள்ளது. இது ஒரு வசதி. ஒவ்வொரு எழுத்துக்கும் பொருளுண்டு. ஹைக்கூவை நடிக்கும் வரிகள் என்பர். நர்த்தனமிடும் வரிகள். இயற்கையழகும் பருவகால மலர்ச்சியும் இதனால் கிளர்ந்த மனதும் இணைய இது பிறந்தது. 'புள்ளெல்லாம் நான்' என்ற நம் பாரதியின் மனநிலை. துயரத்தையும் இன்பமாக மாற்றும் கலை. நல்ல கவிமனதும் வாழ்வை உற்றுப் பார்க்கும் மனநிலையைப் பேணும் பழக்கமும் வேண்டும். நம் சித்தர்மரபு தத்துவ மரபென்பர். கவிமரபும் கூட. கட்டற்ற சுதந்திரம்தான். சித்தர் பாடல்களில் ஹைக்கூ கூறுகளை நன்கு உணரலாம்.

நம் வள்ளுவர் சொல்வார்:
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

இதன் மொழி பெயர்ப்பு போல பாஷோ பாடுவார்:
"வார்த்தை விழுந்தபின்
உதடுகள் உறைந்தன
முன் பனிக் காற்று"

- நன்றி - https://www.facebook.com/viswanathannaa



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Dec 19, 2015 4:29 pm

https://www.facebook.com/groups/TamilHaikuClub/
ந.க.துறைவன்

எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு.

VathilaiPraba அவர்களின் விளக்கம்
பல்வேறு விரிவுகளை விழிகளில் விரியச் செய்யும் கவிதையிது. முதல் வரியின் முதல் வார்த்தையை நீக்கி
"காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு."
என்று வாசிக்கும்போது கவிதை ஒரு வெறுமையை சுட்டுகிறது. யாரும் வராத சூழலில் இருக்கிறது இந்த பெஞ்சு.. பயன்பாடற்ற நிலையில் இருக்கிறதா எனவும் தோன்றுகிறது. விட்டுச் சென்ற உரையாடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்குமே.. எப்படி தனிமை வரும்? பூக்கள் சொரிந்து கிடக்குமே.. எப்படி தனிமை வரும்? ஒரு இணக்கமான சூழலை இந்த பெஞ்சுகள் தரும்தான்.. அவர்களுக்கான காத்திருத்தல்தான் இந்த காலியான பெஞ்சு.. வாருங்கள் நாமும் இந்த பெஞ்சில் உட்காரலாம்.. கவிதைகள் கூட நம்மில் .உரையாடலாம்..
ஆனால், கவிஞர்.. இப்படி எழுதுகிறார்...
"எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு."
முதல் வரியில் எல்லோருக்காகவும் என எழுதுகிறார்.. இந்த காலி பெஞ்சுக்குக்கூட ஒரு தாயன்பு இருக்கிறது பாருங்கள்... வெறுமையோ, தனிமையோ, குறியீடாக பெஞ்சு .இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வரலாம். அமரலாம்.
- நன்றி வதிலைபிரபா.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:07 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:
அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது.
மேற்கோள் செய்த பதிவு: 1162564
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 3838410834 இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 103459460 இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் - Page 2 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:09 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:
எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு.
மேற்கோள் செய்த பதிவு: 1181559
அருமையான கவிதை விளக்கம்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 23, 2015 7:39 am

மார்கழிப் பனி
விளக்குடன் விளையாடும்…
சிறு தும்பியொன்று – ம. ரமேஷ்

வதிலை பிரபா அவர்களின் விளக்கம். –
யாரிவன்? யாத்ரிகனா..? மார்கழிப் பனி வேறு.. பசியோடிருக்கலாம்.. ஆனால் அவன் மனம் தும்பியை அல்லவா ரசிக்கிறது. விளக்குடன் விளையாடும் தும்பி அல்லவா அது.. கணநேரம் இவன் மனசு அந்த விளக்கொளிக்குச் சென்று மீண்டும் திரும்பலாம். சிறு சலனம்.. அதில் மகிழ்ச்சி.. பழையபடி மனதில் அவன் கவலைகள் சேரும்.. மனம் இருளில் மூழ்க நேரிடும்.. ஒவ்வொருவருக்கும் இச் சிறு தும்பி வேண்டும்தான். ஒரு சலனம்.. 'பளிச்' சென்ற ஒரு மகிழ்ச்சி.. வாருங்கள்.. விளக்குடன் விளையாடும் சிறு தும்பியைத் தேடிச் செல்லலாம்.. ஒரு யாத்ரிகனாக.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக