புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
2 Posts - 3%
jairam
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
1 Post - 1%
சிவா
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
1 Post - 1%
Manimegala
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
13 Posts - 4%
prajai
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
4 Posts - 1%
jairam
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_m10இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் ஹைக்கூ – புதிய தொடர்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Sep 15, 2015 9:43 am

1990ல் அகில உலக ஹைக்கூப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஹைக்கூ இது.

புயலுக்குப் பிறகு,
சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான்,
மேசைகளின் மீதிருந்து! – டார்கோ பிளாஸனின்

மேசைகளின் உயரம் போதுமா, ஏறி நின்று வானத்தைத் துடைக்க?

அந்தச் செயல் அல்ல, நிகழ்ந்தது; புயலின்போது, வானமே இடிந்து விழுந்தது போல் மழை, காற்று… ஆகாயப் பொழிவுகள் மேசைகளின் மீது! மேகங்கள் அல்லவா துகள்களாய்ச் சிதறி விழுந்தன… புயலின் வன்மையைக் கலைநயத்தோடு மறைமுகமாய்ச் சுட்டியிருக்கும் தன்மை வியக்கத்தக்கது.

மேசைகள் வெளியே இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவை வீட்டுக்குள்ளேதான் இருந்திருக்க வேண்டும். ஆயினும், சன்னல்களும், கதவுகளும், தாழ்ப்பாள்களுக்கு அடங்காமல் புயலில் அடித்துக் கொண்டதனால்தான், மேசைகளின்மீது புயலின் சின்னங்கள்.

சிறுவன் துடைக்கிறான் என்பதனால், இது உணவு விடுதியாயிருக்கலாம். மேசைகள் என்னும் பன்மை வெளிப்பாடு, இதனை உறுதிப்படுத்தும்.
நன்றி – நிர்மலா சுரேஷ், ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்,



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Sep 16, 2015 6:51 am

இதுதான் ஹைக்கூ – தொடர் (விளக்கம்) 2

சீனா நடைமுறைத்தன்மை, ஜப்பானிய எளிமையும் தெளிவும், கொரியசுதந்திர உணர்வு, இந்தியாவின் தன்முனைப்பற்ற தன்மை இவற்றின் சங்கமமே கீழ்த்திசைஞானம். இத்தகைய ஞானத்தின் மீதான ஸென் குறித்தான கலையாக்க நுட்பமே ஹைக்கூ.

உலகமெல்லாம் விழிகள்
உறங்கித்தான் போனது
காத்திருக்கும் கதவு

இந்த ஹைக்கூவின் புரிதல் கடைசி வரியான காத்திருக்கும் கதவு என்ற வரியிலேயே ஊடாடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மா என்னும் கதவு இருக்கிறது. உலகத்தின் மீதான இன்பம், துன்பம் என பல்வேறு வழிகள் உலகத்திற்கு உள்ளது. அத்தகைய பதிவுகள் நிரந்தரமாக விலகுவதில்லை என்பதைப் போன்றே, தூக்கமும் நிரந்தரம் கிடையாது என முதல் இரண்டு வரிகளுக்கான ஒப்புமை கட்டமைப்பு, கடைசிவரியில் ஹைக்கூவிற்கான ஞானவிசாரணையை தருவித்து, ஊக்குவித்துப் பயணிக்கிறது.

நன்றி – செல்லம்மாள் கண்ணன், ஓஷோ - தமிழ் ஹைக்கூவில் புரிதல்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Sep 17, 2015 7:12 am

இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 3

பயணத்தில் நோய்
என் கனவு அங்குமிங்கும் அலைகிறது
வறண்ட வயல்கள் மீது – பாஷோ

பாஷோ 1094 ஆம் ஆண்டு பத்தாவது திங்கள், பன்னிரண்டாம் நாள் தனது ஐம்பத்தொன்றாம் வயதில் இறந்தார். மாபெரும் ஹைக்கூக் கவிஞரின் கடைசிக் கவிதை இது. ஒரு பயணத்தின்போது பாஷோ கடுமையான நோய்க்கு உள்ளானார். அவருடைய மாணவர்கள் அவரிடம் விடைபெறு கவிதை (மரணத்திற்கு முன் எழுதுவது) எழுதச் சொன்னார்கள். என்னுடைய எந்தக் கவிதையும் மரணக் கவிதையாக இருக்க முடியும் என்று கூறி அவர்களுக்காக மேலேயுள்ள இறுதி ஹைக்கூ எழுதினார். பின்னர் நான்கு நாட்கள் உயிரோடிருந்தார். அவருடைய கனவுகள் அலைந்து திரிய வறண்ட வயல்களே கிடைத்தன. ஆனால் அவருடைய ஹைக்கூக் கவிதைகள் ஆயிரம் பல்லாயிரம் நெஞ்சங்களில் இன்னும் பசுமையாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நன்றி – ஈரோடு தமிழன்பன், ஜப்பானிய ஹைக்கூ 100 குறிப்புரையுடன்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Sep 18, 2015 7:39 am

இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 4

காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்பது மக்களிடையே ஓர் எதிர்பார்ப்பு. விருந்தினர் வரவு எனில் பணம் செலவு. அதே போல் சேமிப்பு என்று வரும் சமயம் குருவிபோல சேமிப்பு என்பர். இவ்விரண்டும் வழக்கத்திலுள்ள ஒன்று. கவிஞர் சி.சண்முகம் இவ்விரண்டையும் இணைத்து மூன்றாவது ஒரு வரி சேர்த்து ஆக்கியுள்ள ஹைக்கூ இது.

கரைகிறது காகம்
குருவிபோல் சேமித்த பணம்
உறவுகளினால் செலவு

நன்றி – பொன். குமார், ஹைக்கூ அனுபவங்கள்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Sep 19, 2015 7:06 am

இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 5

ஹைக்கூவின் வெளிப்பாடு

கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்தி விடுவதில்லை. கவிதையின் மிகச் சிறிய வடிவமே, இதற்குக் காரணம் என்று கருதுதல் சரியன்று. ஹைக்கூ முழுப்பொருளையும் வெளியிட விரும்புவதில்லை என்பதே உண்மை.

“கருத்துப் பொருண்மையின் அளவில் எழுபது அல்லது எண்பது விழுக்காட்டை வெளியிடும் ஹைக்கூ நன்று. ஐம்பதிலிருந்து அறுவது விழுக்காட்டை மட்டுமே வெளியிடும் ஹைக்கூ மிக விழுமியது.” – என்று ஆர்தர் இ. கிறிஸ்டி தொகுத்த நூல் கூறுகிறது.

மழை வந்து செல்கிறது
ஒளி மயமாக கோடை நிலவைப்
புற்களின்மேல் விட்டுவிட்டு – ஷோயு

இதில் உள்ள இயற்கைப் பின்னணி, நாமே உய்த்துணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஓடும் மேகங்களால் ஏற்படும் கோடை மழை; இரவு நேரம்; மழையின் செல்வாக்குச் சிறிது நேரத்திற்கே! விடை பெற்றுச் செல்லும் மழையினால், மீண்டும் சந்திரன் வானில் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. மாறாகப் புல்லின் மீதுள்ள மழைத்துளிகளில் எல்லாம் நிலவின் பிம்பங்கள்! கோடை மழையின் அற்ப விளம்பர வாழ்வினை, உலகியலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்! நிரந்தரமான இருட்டடிப்பு, நிலையான பொருள்களுக்கில்லை. இவற்றையெல்லாம் கவிஞர் விரிவாக எடுத்துக் கூறவில்லை. உட்குறிப்பால் உணர்த்துகிறார். நாம் எழுதும் ஒவ்வொரு ஹைக்கூவும் இவ்வாறுதான் பயணிக்க வேண்டும்…

நன்றி – நிர்மலா சுரேஷ் – ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Sep 19, 2015 8:20 am

நன்றி நண்பரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Sep 19, 2015 10:46 am

மகிழ்ச்சி நட்புறவே...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 19, 2015 10:59 am


மழை வந்து செல்கிறது
ஒளி மயமாக கோடை நிலவைப்
புற்களின்மேல் விட்டுவிட்டு – ஷோயு

-
ஹைக்கூ - விளக்கம்... இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் 3838410834
-
இதுதான் ஹைக்கூ – புதிய தொடர் ICPoEVTH6JxuyMntX8Og+165679_129401163789338_100001583665947_211267_1758740_n


முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Oct 07, 2015 6:55 am

ஏற்றத்தில் அம்மா
கமலையில் நீரிரைக்கும் அப்பா
பாத்திகள் திருப்பும் சிறுவன் – ம. ரமேஷ்

(இதை வாசிக்க – சிந்திக்க… பையன் பள்ளிக்குப் போவானா? அல்லது இங்கேயே வேலை செய்வானா.. இவன் யார்? கூலியா? அல்லது மகனா? என்கிற பல கேள்விகள் எழும்... கமலையில் நீர் இரைத்தால்தானே ஏற்றத்தில் அம்மாவால் நீரிரைக்க முடியும்? அப்படியென்றால் கமலையில் நீரிரைக்கும் அப்பா என்ற இரண்டாம் அடி முதலடியாகத்தானே வரவேண்டும்? – வர தேவையில்லை. யாரோ காணும் காட்சி அது. முதலில் ஏற்றமிரைக்கும் அம்மாவைக் கண்டிருக்கலாம். பின்னர் அப்பாவைக் கண்டிருக்கலாம். மேட்டில்தானே இருக்கும் ஏற்றம். அதனாலும் இருக்கலாம். பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்ற சிந்தனையும் – ஆண்களின் கண்ணில் முதலாவதாகப்படுவது பெண்ணாகத்தானே என்ற உளவியலும் காரணமாகலாம். இதை எழுதியவர் ஆண் என்பதால் இது சரியாகவும் இருக்கலாம். சரி பார்த்தவர் யாராக இருக்கும்? உங்கள் சிந்தனை மேலும் விரிவடையட்டும்…




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Oct 08, 2015 7:13 am

நன்றி - காவனூர் சீனிவாசன்.

இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க. -மகிழ்நன் மறைக்காடு.

இதை இரண்டு மூன்று முறை வாசிப்புக்கு உட்படுத்துங்கள்.
ஒவ்வொரு வரியாய் மனதிற்குள் வாசித்து நிறுத்தி அடுத்த வரிக்கு செல்லுங்கள்.
இலைகள் உதிர்த்தமரம்...
அடுத்தவரி வினாக்குறியீடுடன்-
வந்தமருமா பறவைகள் ? ..
பொருள் மிகச்சாதரணமாக உள்ளதா?
ஒரு சாதாரணவரிபோல் தொடர்கிறதா?
ஏதேனும் சொல்ல வருகிறதா?
இலைகள் உதிர்த்தமரம் - என்பது ஒரு காட்சிப்பதிவை உணர்த்தவருகிறதென்றால் அடுத்தவரி வினாக்குறி மிகச்சரியாக பொருந்தவேண்டும். நீங்கள் மூன்றாவது வரிக்கு செல்லும்முன் நீங்கள் யூகிப்பதை கவிஞர் தரும்வரி இறுதியில் மாற்றிப்போட்டு ஒரு அதிர்வை அல்லது சிறு சலனத்தை நிகழ்த்தவேண்டும்.
இப்போது முதல் இரண்டுவரிகளை வாசியுங்கள்.
முதல்வரி வாசித்ததும் கொஞ்சம் இடைவெளி கொடுத்து பொறுமையாக..பொறுமையாக..
இலைகள் உதிர்க்கும் மரம்
வந்தமருமா பறவைகள் ?..
உங்களுக்குள் மூன்றாவது வரி தோன்றவேண்டும்.அதேவரி கவிஞருக்கும் வாசகனாய் மாறியிருந்தால் தோன்றும். வாசகனாய் அல்லாமல் கவிஞனாய் நின்று அதை கவிஞன் மாற்றிப்போடவேண்டும்.
மாற்றிப்போடும் தன்மை கொண்டதாய் இருந்தால் அது ஹைக்கூ ஆகிறது. மிகச்சாதரணமாக இருந்தால் அது கவித்துவமிக்கவரிகளாய் புதுக்கவிதை வகைமையிலோ அல்லது நவீனத்தன்மை வடிவிலோ உட்படுகிறது.
மூன்றுவரிகள் கொண்ட உரைநடை பலர் ஹைக்கூவாகவே கருதிக்கொள்வதால் ஹைக்கூக்கள் அடையாளமிழக்கின்றன.
சரி இப்போது மூன்றாவது வரிக்கு வருவோம்.
இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள் ? -என்றவினாக்குறியோடு இரண்டுவரிகள் கவிஞர் முடித்துள்ளார்.
என்ன காடசிப்பதிவை மூன்றாவது வரி மாற்றிப்போடும் ? வாசகனைவிட இங்குதான் கவிஞன் அதிகம் நுட்பமாகதீவிரமாகயோசிக்கவேண்டும்.
அமரும் அல்லது அமராது எனசாதரணமாக பதில் தந்துவிடக்கூடியதாகஇது அமைந்தால் இது ஒரு உரைநடைத்தன்மை கொண்டதாய் ஆகிவிடும். திருப்பம் இல்லாமல் போனால் இதை ஹைக்கூவாக ஏற்கவும் இயலாது.
மேலும் அழகாக்க - என்றவரியை இறுதியில் வைத்துள்ளார்.
இப்போது சேர்த்து படியுங்கள்:
இலைகள் உதிர்த்தமரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க.
-மூன்றாவது வரி ஒரு சாதாரண திருப்பத்தை தந்து ஒரு கவித்துவத்தைமட்டும் உணர்த்திப்போகிற ஒரு தொடர்வரியாகத்தானே இருக்கிறது?
என்னஅதிர்வை இது தருகிறது?
இதே வார்த்தைகள்; இதே மூன்று வரிகள் கொஞ்சம் நுட்பமாய் சிந்தித்தால் ஒரு அதிர்வை சிறிதேனும் தரும்படி அமைத்து ஹைக்கூவாக தரலாம்.
எழுதி முடித்தபின் கொஞ்சம் மாற்றிப்போட்டு மாற்றிப்போட்டு சிந்தியுங்கள்.
முதல் வரியை இறுதியில் போட்டு இதே கவிதையை வாசித்துப் பாருங்கள் :
' வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க
இலைகள் உதிர்த்தமரம் '
இப்போது இது ஹைக்கூவாக நன்கு அடையாளம் காட்டலாம்.
எழுதிய உங்கள் கவிதைகளை மீளவாசித்துப்பார்த்து ஹைக்கூவாக அடையாளம் காட்டுங்கள் . ஹைக்கூவாக்க முடியாத வரிகளை வேறு வடிவ கவிதைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- காவனூர் சீனிவாசன்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக