புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய ஈடுபாடு மூன்று ஆண்டுகள்தான்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 11, 2015 9:24 pm

First topic message reminder :

1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து பாராட்டினார். முடிந்தால் அதை குமுதத்தில் வெளிவருவதற்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.

எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன். மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 19, 2015 7:31 am

உலகப் புகழ்பெற்ற ‘தாய்’ நாவலை எழுதிய மார்க்ஸிம் கார்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது. செருப்பு தைப்பது, மூட்டைத்தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக்காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி. வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும்.


இவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத் தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று அர்த்தம்.


அன்றைய செண்ட்பீட்டர்ஸ் பார்க் என்ற ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.


தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டு கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்கியால் எழுதப்பட்டது தான் உலகப்புகழ்பெற்ற தாய் நாவல். கார்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான்.

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 0fEKBg27QpaXYjRDu8VM+karki_3501


நன்றி : இணையம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 05, 2015 1:37 pm

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 O5VYnybTWiHUZFxADHfM+sholokhov_postcard
மிகயீல் ஷோலக்கோவ்
ருஷ்யப் புரட்சி பற்றி நிறைய எழுதப் பட்டுள்ளன. ஆனால் ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ [And Quiet Flows the Don ] என்ற நாவல் நிலைத்திருக்கும். அது வெறும் புரட்சியின் விவரணை அல்ல. புரட்சியின் கருத்தியலும், உணர்ச்சிகளும் மட்டும் கொண்டது அல்ல. அது மனிதர்களின் கதை. தான் வாழும் காலம் ஒட்டு மொத்தமாக புரட்டிப் போடப் படுகையில் மனிதர்கள் எப்படியெல்லாம் அதை எதிர் கொள்கிறார்கள், எப்படி மாறிக் கொள்கிறார்கள், எப்படி உடைந்து அழிகிறார்கள் என்பதைக் காட்டும் மகத்தான மானுட ஆவணம் அது. ஆகவே அது என்றும் இருக்கும். ருஷ்யப் புரட்சி வெறும் வரலாறாக ஆனப் பின்னரும் வாழும்.

அப்படி நோக்கினால் புரட்சி என்பது அந்நாவலுக்கு தேவையே இல்லை. அது அந்நாவலின் புனைவின் பின்னணி மட்டுமே. அந்த வாழ்க்கை நாடகம் நிகழும் அரங்கு மட்டுமே. அந்த படிமங்களை உருவாக்கும் வயல் மட்டுமே. அந்தப் பின்னணியை நாம் எப்படியும் கற்பனை செய்துக் கொள்ளலாம். இருநூறு முந்நூறு வருடங்கள் கழித்து உலகு தழுவிய ஒரு தொழில் நுட்பச் சிக்கலால் மானுட சமூகம் அதன் அடிப்படைகள் புரட்டப் பட்டு சவால்களைச் சந்திக்கும் என்றால் அந்தச் சித்திரத்தை நாம் டான் நதி அமைதியாக ஓடுகிறது நாவலில் பொருத்தி வாசிக்க முடியும்

நன்றி   இணையம்

இந்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு
வெற்றி முரசு என்ற தலைப்பில்  வெளிவந்துள்ளது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 05, 2015 1:59 pm

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 CwUEaFwzQlUTNtMc2GOY+250px-John_Reed_journalist
ஜான் ரீட்
உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்


ஜான் சிலாசு "ஜாக்" ரீட் (John Silas "Jack" Reed) (அக்டோபர் 22, 1887 – அக்டோபர் 17, 1920), ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும், கவிஞரும், சோசலிசவாதியும் ஆவார். 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற போல்செவிக் புரட்சி குறித்த நேரடி அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்னும் நூல் தொடர்பில் இவர் பெரிதும் அறியப்படுகிறார். இவர் எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான லூய்சி பிரையன்ட் என்பவரை மணந்தார். ரீட் 1920ல் உருசியாவில் காலமானார். இவரது உடல் முக்கியமான உருசியத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மதிப்பு இவர் உட்பட இரண்டு அமெரிக்கர்களுக்கு மட்டுமே கிடைத்தது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 12, 2015 3:46 pm

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 C25evGPQxiCC88zDhWQK+download

சே குவேரா

போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம். சே குவேரா எனும் அற்புத போராளியின் புகழ் அவர் வாழ்ந்த நிலங்களை தாண்டி உலகின் திசையெங்கும் அறியப்பட்ட காரணம் அந்த மகத்தான் மனிதரின் வாழ்க்கையும் அதில் படிந்திருக்கும் ரத்தக் கறையுடனான உண்மைகளும்தான். லத்தீன் அமெரிக்க புரட்சியில் க்யூபாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையை உருவாக்க உருதுணையாக சே குவேரா ஏந்திய துப்பாக்கியின் தோட்டாக்கள் புரட்சியின் வடிவமாக அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. எர்னெஸ்டோ ‘சே குவேரா – மனிதர்களை பெரும் துயர்களிலிருந்து விடுவிக்க ஆசைப்பட்ட ஒரு மனிதன்

மனித குல விடுதலைக்காகத்தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதன் வரலாற்றில்: 09,அக்டோபர்,1967: பிற்பகல் 3.30, காலில் குண்டடிபட்ட நிலையில் பொலிவிய படையினரால் சே குவேரா கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் 10,அக்டோபர் 1967:காலை 10.00,உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது

பிற்பகல் 1.10 மணி உலகத்தை விட்டு விடை பெற்ற கடைசி நாள் ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. கண்கள் திறந்தபடியேதான் அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்தது.

சே குவேராவின் வாழ்க்கை வரலாறு நான் வாசித்த நூல்களில் என்னைப் பெரிதும் கவர்ந்த ஒன்றாகும்.






http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 12, 2015 5:23 pm

சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் பகுதி ஒன்று

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 OvPdwJM2QJ6eaMMrN0mL+2-thirai

ஆவணப்படம் துவங்குகிறபோது படப்பிடிப்பு வாகனம் தெருப்புழுதியை எழுப்பியபடி பொலிவியாவின் வெலிகிரண்டா நகரத்தினுள் நுழைகிறது. சக்கரநாற்காலியில் அமர்ந்தபடியிருக்கும் புகைப்படக் கலைஞர் ரெனே கார்டிமோ ஒரு பழைய கட்டிடத்தின் முன் அழைத்து வரப்படுகிறார். ஆவணப்படம் 1967 அக்டோபர் 10 ஆம் திகதி வெலிகிரண்டாவில்  சேகுவேராவின் உடல் கிடத்தப்பட்டிருந்த மருத்துவச் சாலையின் சிமெண்டுக் கல்லினை திரை அகன்ற காட்சியில் நிறைத்தபடி துவங்குகிறது. கொல்லப்பட்ட பின்பு குவேரா குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே உயிரோட்டமுள்ள புகைப்படம் எனக் குறிப்பிடப்படும், குவேராவின் கண்கள் திறந்த நிலையிலான புகைப்படத்தினை அவர் எடுக்க நேர்ந்த சந்தரப்பத்தினை புகைப்படக் கலைஞர் ரெனே கார்டிமோ விவரிக்கத் துவங்குகிறார்.

1967 அக்டோபர் 8 ஆம் திகதி பொலிவிய ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, ஹிகுவாரா மலைக்கிராமப் பள்ளிக்கூடத்தில் வைத்து 9 ஆம் திகதி பிற்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டு, பிற்பாடாக அங்கிருந்து 30 மைல் தொலைவிலுள்ள வெலிகிரண்டாவுக்கு ஹெலிகாப்டரில் கொண்டவரப்பட்டபோது சே குவேராவின் உயிரற்ற உடலின் கண்கள் மூடுண்டுதான் இருந்தன என்கிறார் புகைப்படக் கலைஞர் ரெனே கார்டிமோ. அழுகி துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக பார்மாலின் திரவும் குவேராவின் உடலினுள் ஊசியினால் செலுத்தப்பட்டு, குவேராவின் உடல் சலவைக்கல் படுக்கையின் மீது புகைப்படத்திற்குத் தோதாக தலைநிமிர்த்தி வைக்கப்பட்டபோது, ‘குவேராவின் கண்கள் எனக்காகத் திறந்தன’ என்கிறார் புகைப்படக் கலைஞர் கார்டிமோ. சிமெண்டுக் கல்லில் கால்கள் விரித்தநிலையில் நின்றபடி, மிக அருகிலிருந்து செங்குத்தாகத் தான் எடுத்த புகைப்படங்களில் ‘தன்னை நோக்கியபடியே குவேரா இருந்தார்’ என்கிறார் கார்டிமோ.

சே குவேராதான் கொல்லப்பட்டார் என்பதனை உலகுக்கு உறுதியாகத் தெரியப்படுத்த விரும்பிய பொலிவிய ராணுவமும் அரசும், சே குவேராவின் பத்து விரல் ரேகைகளையும் பதிந்து கொண்டபின், அவரது இரண்டு கைகளையும் துண்டித்துக் கண்ணாடிக்குடுவையில பார்மால்டிஹைட் திரவத்தில் இட்டு, அதனை மறைப்பதற்காக அல்லது அழித்துவிடுவதற்காக அதனைக் கண்காணாத இடத்திற்கு அனுப்பிவைத்தது. கைகளைத் துண்டித்தது போலவே குவேராவின் தலையையும் துண்டிப்பது என்பதே அன்று பொலிவிய அரசின் திட்டமாக இருந்தது. இரண்டு காரணங்களுக்காக இதனைச் செய்ய பொலிவிய அரசு விரும்பியது. கொல்லப்பட்டது சே குவேராதான் என்று அன்று உலகின் புரட்சியாளர்கள் நம்பவில்லை. குவேரா  எவராலும் தொடமுடியாதவொரு மந்திரமனிதன் போல அன்றைய புரட்சியாளர்களின் மனங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

சந்தேகத்திற்கிடமின்றி கொல்லப்பட்டது குவேராதான் என நிரூபிப்பதற்காகத் துண்டிக்கப்பட்ட கைகள், துண்டிக்கப்படவிருந்த குவேராவின் தலை போன்ற சான்றுகளைப் பயன்படுத்த பொலிவிய அரசு விரும்பியது. தலை துண்டிக்கப்பட்ட குவேராவின் உடம்பை எங்கேனும் புதைத்தாலும் கூட பின்னாளில் எவரும் அடையாளம் காணவோ அல்லது அடையாளம் கண்டு அந்த இடத்தினை நினைவிடமாகக்  கொண்டாடவோ இல்லாமல் செய்துவிட, அவரது தலையற்ற வெறும் முண்டத்தைப் புதைத்துவிட, பொலிவிய அரசு விரும்பியது. கைகளைத் துண்டிப்பதற்கு ஒப்புக்கொண்ட குவேராவின் உடலுக்குப் பொறுப்பான பொலிவிய ராணுவ உயர் அதிகாரி, தாம் ஒரு தூய்மையான கத்தோலிக்கனாக இருப்பதால், மரணமுற்றவரின் உடம்பைச் சிதைக்கவோ அல்லது தலையை உடம்பிலிருந்து துண்டிக்கவோ மறுத்துவிட்டதால், பிற்பாடாக பொலிவிய அரசு குவேராவின் தலையைத் துண்டிக்கும் தனது திட்டத்தைக் கைவிட்டது. எனினும், துண்டிக்கப்பட்ட கைகள் தவிர பிறிதொரு சான்றுக்காக குவேராவின் முகத்தினது மெழகு அச்சுப்பிரதியொன்றினை (மாஸ்க்) உருவாக்கி, அதனையும் குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளுடன் சேர்த்து பொலிவியாவின் கண்காணாத இடத்துக்கு அனுப்பி வைத்தது



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 12, 2015 5:31 pm

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 FwtcCpINSXqVlqtTG4d5+sa-01

சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் பகுதி இரண்டு

1967 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள், அமெரிக்க உளவுத்துறை அதிகாரியான ரோபர்ட் ரோட்ரிக்சின் முன்னிலையில், தெரான் என்கிற பொலிவிய ராணுவத்தினனால் ஒன்பது ரவைகள் துளைக்க, பொலிவியாவின் ஹிகுவரா மலைக்கிராமத்தின் பள்ளிக்கூட அறையொன்றின், கதவு சாத்தப்பட்ட இருளில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட குவேராவின் உடல், பிற்பாடு ஹெலிகாப்டரின் அடியில் கட்டப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காகவும் பிரதேசப் பரிசோதனைக்காகவும் வெலிகிராண்டா பொது மருத்துவமனைச் சலவைச் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிமெண்டுக் கல்லின்மீது மீது அவரது உடல் கிடத்தப்பட்டது. அக்டோபர் 10 ஆம் திகதியன்று அவரது கைகள் அங்குள்ள மருத்துவமனையில் துண்டித்து எடுக்கப்பட்டது. அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள், கறுத்த இரும்புப் பெட்டியொன்றினுள் பொலிவியத் தேசியக் கொடியினால் சுற்றிக்கட்டப்பட்ட கண்ணாடிக் குடுவையொன்றினுள் பார்மால்டிஹைட் திரவத்தில் மிதந்தபடி, பொலிவியாவினுள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்த குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள், 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் ஆண்டு ரஸ்யத் தலைநகரான மாஸ்க்கோவினை அடைந்து, அங்கு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, 1970 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி கியூப ஜனாதிபதியும், சே குவேராவின் உற்ற தோழனுமான பிடல் காஸ்ட்ரோவின் கைகளை அடைந்தது. கைகளுடன் சே குவேராவின் முகப்பிரதி அச்சும் பிடலின் கைகளை அடைந்தது.

குவேராவின் கைகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க விரும்பிய பிடல் காஸ்ட்ரோ அதனை எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பது குறித்த நிச்சயமின்மையால், குவேரா இறந்து முப்பது ஆண்டுகள் வரையிலும் குவேராவின் துண்டிக்கப்பட் கைகளையோ, மரணத்தின் பின் இரு நாட்களில் எடுக்கப்பட்ட குவேராவின் முகப்பிரதி அச்சினையோ பரவலாக அறியாதவர்களாகவே கியூப மக்கள் மட்டுமல்ல உலகின் புரட்சியாளர்களும் இருந்து வந்தார்கள்.

ஹிகுவாரா மலைகளில் நடந்த பொலிவிய ராணுவத்துடனான சமரில் சே குவேரா கொல்லப்பட்டார் என்பதுதான் அன்று பொலிவிய அரசினது முதல் அறிக்கையாக இருந்தது. மருத்துவப் பரிசோதனைகளும் பொதுமக்கள் பார்வைக்கான காட்சிப்படுத்தலும் முடிந்தபின் குவேராவினதும் அவரோடு கொல்லப்பட்ட பிற ஆறு போராளிகளினதும் உடல்களை எரித்துவிடுவதுதான் முதலில் ராணுவத்தின் திட்டமாக இருந்தது. அன்றைய தினம் ஹிகுவரா மலைகளில் மிகுந்த குளிர்காற்று இருந்ததால், அன்றைய இரவில் ஏழு போராளிகளினதும் உடல்களின் தோராயமான 400 கிலோ தசையை ஒரே இரவுக்குள் எரித்து முடிப்பது என்கிற சாத்தியமின்மையால், ரொட்டி சுடும் சுடுகலனில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இரவோடு இரவாக வெலிகிரண்டா மலைப் பிரதேசத்தின் கைவிடப்பட்ட பழைய விமான ஒடு பாதையில், குவேராவுடன் அவரது ஆறு தோழர்களின் உடல்களையும் ஒரு பொதுக்குழியில் புதைப்பது என ராணுவம் முடிவெடுத்து அதனைச் செய்து முடித்தது. முப்பது ஆண்டுகளாக பொலிவிய ராணுவமும் அமெரிக்க உளவுத் துறையும் மறைத்த வரலாறு இது.

முப்பது ஆண்டுகள் குவேராவின் உடலுக்கு நிஜத்தில் என்ன நேர்ந்தது என எவருக்கும் தெரியாது. குவேரா கொல்லப்பட்டபோது 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் திகதி அங்கு இருந்த இலண்டன் கார்டியின் பத்திரிக்கை நிருபர் ரிச்சர்ட் கோட் ‘மருத்துவமனை சலவைச் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் உடலை நாம் கண்கானித்துக் கொண்டே இருக்க வேண்டும்’ எனத் தமது சக பத்திரிக்கையாளரிடம் எச்சரித்துக் கொண்டே இருந்திருக்கிறார். பொலிவிய சர்வாதிகாரி பரியோண்டாஸ் குவேராவின் உடலைப் பாரக்க அடுத்த நாள் அக்டோபர் 11 ஆம் திகதி அங்கு வருவதாக பொலிவிய ராணுவ அதிகாரிகள் ரிச்சர்ட் கோட்டுக்கு அறிவித்தபடி, அடுத்த நாள் பரியோண்டாஸ் அங்கு வந்தபோது சே குவேராவின் உடல் அங்கிருக்கவில்லை. குவேராவின் உடல் அக்டோபர் 10 ஆம் திகதி இரவோடிரவாக ராணுவத்தினால் அங்கிருந்து அகற்றப்பட்டது. அதன் பின் குவேராவின் உடலுக்கு என்ன நேர்ந்தது என்பதனை முப்பதாண்டு காலம் உலகம் அறியவே முடியவில்லை. குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் குறித்தும் எவரும் பின்தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் இல்லை. இந்த முப்பது ஆண்டுகளில் குவேராவின் உடல் தனது ஆறு தோழர்களினோடு வெலிகிரண்டா விமான ஒடுபாதையினடியில் புதைந்து கிடந்தது போலவே, குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளும் அவரது மரணத்தின் பின்னான மெழகுமுக அச்சும் கியூபாவில் எங்கோ அடையாளமற்று, கியூப அரசின் கட்டிட வைப்பகத்தின் இருளில் மறைந்து கிடந்தது.




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 12, 2015 5:34 pm

சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் பகுதி மூன்று

குவேரா கொல்லப்பட்ட வேளையில் ராணுவ அதிகாரியாக இருந்த மரிய வர்கஸ் சலினஸ் உடனான நேர்காணல், 1995 ஆம் ஆண்டு அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் ஜோன் லீ ஆண்டர்சனின் முன்முயற்சியில் நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியானது. (New York Times : 21,1995). 1997 ஆம் ஆண்டு சே குவேரா மறைந்த 30 ஆவது ஆண்டு நினைவையொட்டி ஜோன் லீ ஆண்டர்சனின் சே குவேரா வாழ்க்கை வரலாறு (1997) வெளியானது. சே குவேரா குறித்த கொச்சைப்படுத்தல்களும் அவதூறுகளும் நிறைந்த ஜோர்ஜ் காஸ்டநாடாவினால் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூலை ஒப்பிடுகிறபோது, சே குவேரா குறித்து வெளியான வாழ்க்கை வரலாறுகளிலேயே மிகுந்த ஆதாரத்தன்மையும் ஆய்வுத்தன்மையும் சமநிலையும் கொண்ட வரலாற்று நூல் ஜோன் லீ ஆண்டர்சனின் நூல்தான். அது கருதியே அமெரிக்கத் திரைப்பட இயக்குனர் சோடர்பர்க் தன்னுடைய சே குவேரா குறித்த ஐந்து மணிநேரத் திரைப்படத்திற்கு ஆதாரமான நூலாக ஜோன் லீ ஆண்டர்சனின் நூலைத் தேர்ந்து கொண்டார்.

பொலிவியாவின் வெலிகிரண்டா விமான ஓடு பாதையில் புதைக்கப்பட்ட குவேராவினதும் அவரது ஆறு தோழர்களினதும் புதைக்கப்பட்ட இடம் குறித்த விவரங்களும் ஜோன் லீ ஆண்டர்சனின் எழுத்துக்களின் வழிதான் உலகிற்குத் தெரியவந்தன. குவேரா கொல்லப்பட்டபோது, நெஞ்சிலும் கழுத்திலும் தோளிலும் கால்களிலுமாக ஒன்பது துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டார் எனவும், இரத்த வெள்ளத்திலேயே கைகள் கட்டப்பட்ட நிலையில் எழுந்து நிற்கவைக்கப்பட்டு அவர் நேருக்குநேர் சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும், மரிய வர்கஸ் சலினஸ் தெரிவித்தார். ‘சுடு, கோழையே சுடு. ஓரு மனிதனை நீ கொல்லப் போகிறாய்’ என குவேரா தன்னைக் கொன்றவனை நோக்கிச் சொன்னதுதான் அவரது இறுதி வார்த்தைகள் எனவும் மரிய வர்கஸ் சலினஸ் தெரிவித்திருக்கிறார். பிறிதொரு பொலிவிய ராணுவ அதிகாரியான கேரி பிராடோ சல்மோன், குவேராவினதும் அவரது பிற ஆறு தோழர்களினதும் உடல்கள் சிதைக்கப்பட்டு, அன்றைய இரவில் அரைகுறையாக எரிந்த நிலையில் வெலிகிரண்டா விமான ஒடு பாதையில் புதைக்கப்பட்டன என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலத்தைப் பிற்பாடு வழங்கினார்.

1997 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி பொலிவியாவில் வெலிகிரண்டா விமான ஒடு பாதையில் புதைகுழி கண்டுபிடிக்கும் வேலை துவங்கியது. வெலிகிரண்டா நகரத்தின் மேயரான ஹவர் கப்ரேரா தலைமையில் ஒன்றுகூடிய அந்நகரத்தின் 3,000 பொதுமக்கள் குவேராவினதும் அவரது தோழர்களினதும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை அங்கிருந்து அகற்றாமல், தமது நகரத்திலேயே ஒரு நினைவகம் அமைத்து வைத்துக் கொள்ளவதற்காக போராளிகளது உறவினர்களும் கியூப அரசும் அனுமதிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். 1997 ஆம் ஆண்டு ஜூலைமாதம் சே குவேராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. துண்டிக்கப்பட கை எலும்புகளையும், அவரது சட்டைப் பையில் இருந்த சுருட்டுப் புகையிலையையும், அவரது காங்கோ விடுதலைப் போராட்ட நாட்களில் எடுக்கப்பட்ட பல்வரிசை அச்சு மாதிரி ஒன்றினையும் ஆதாரமாக வைத்து, சே குவேரா அடையாளம் காணப்பட்டார். 1998 செப்டம்பர் 21 ஆம் திகதி சே குவேரா குழுவின் ஒரேயொரு பெண் கெரில்லாவும் அர்ஜன்டீனப் பிரஜையுமான தமாரா அல்லது தானியாவின் உடலும் அடையாளம் காணப்பட்டது. மீளவும், 2009 ஆகஸ்ட் மாதம் குவேராவின் குழுவிலிருந்த மற்றும் ஆறு தோழர்களின் உடல்கள் பொலிவியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரது உடலும் கியூபாவுக்கு அனுப்பப்பட்டு, கியூபாவின் சாந்தா கிளரா நகரத்திலுள்ள சே குவேரா நினைவகத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.

சே குவேராவின் உடல் புதைக்கப்பட்ட விவரங்களோடு பிறிதொரு முக்கியமான விவரத்தையும் ஜோன் லீ ஆண்டர்சன் தெரிவித்தார். சே குவேரா எரிக்கப்பட்டு புதைக்கப்படும் முன்னால் அவரிலிருந்து ஒரு மெழுகு முகப்பிரதி எடுத்துக் கொண்டு, தம்மிடமுள்ள சே குவேராவின் விரல்ரேகைகளோடு அர்ஜன்டீன உளவாளிகள் ஒப்பிட்டுப்பார்க்கவென சே குவேராவின் இரண்டு கைகளையும் சோதனைக்காக வெட்டி எடுத்தனர் எனும் விவரத்தையும் ஜோன் லீ ஆண்டர்சன் வெளியிட்டார். இந்தத் தகவல்களைத் தனக்கு வழங்கியவர் குவேரா கொல்லப்பட்டபோது பொலிவிய உள்துறை அமைச்சராக இருந்த அன்டோனியா ஆர்குடஸ் என்பதனையும் ஜோன் லீ ஆண்டர்சன் தெரிவித்தார்.

அந்தோனிய ஆர்குடஸ் இடதுசாரிச் சிந்தனையும் நேர்மையும் கொண்டவர் என அவரது மனைவியும் மகனும் தெரிவித்திருக்கிறார்கள். இதே அந்தோனியோ ஆர்குடஸ்தான் பொலிவியாவில் குவேராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட சே குவேராவின் ‘பொலிவியன் நாட்குறிப்புகளின் புகைப்படப் பிரதியின் மைக்ரோ பிலிமினை பிடல் காஸ்ட்ரோவுக்கு அனுப்பி வைத்தவர். பிற்பாடு அக்குறிப்புகள் உலகெங்கிலும் ‘பொலிவியன் டைரி’ எனும் பெயரில் புகழ்பெற்ற நூலாக வெளியானது. இது மட்டுமல்ல பொலிவிய உயர் இராணுவ அதிகாரியால் அழித்துவிடவெனத் தன் வசம் ஒப்புவிக்கப்பட்ட குவேராவின் மெழுக முகஅச்சையும், அவரது துண்டிக்கப்பட்ட கைகளையும் கியூபா கொண்டு சென்று சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டவரும் அவர்தான். இந்தக் காரணத்திற்காக அந்தோனியோ ஆர்குடஸ் ராணுவக் கொடுங்கோலான் பரியாண்டிசினால் வேட்டையாடப்பட்டதைத் தொடர்ந்து அவர் மெக்சிக்கோவிற்குத் தப்பி அங்கு அடைக்கலம் தேடினார். குவேராவினை வேட்டையாடிக் கொன்றதில் அமெரிக்க உளவமைப்பான சிஐஏவின் ஈடுபாட்டை அம்பலப்படுத்தியதற்காக பிற்பாடு அவர் நடுத்தெருவில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 12, 2015 5:36 pm

சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் பகுதி நான்கு

மெக்சிக்கோவில் இருந்தபோது அந்தோனியோ ஆர்குடஸ் தனது பொலிவிய வீட்டின் படிப்பறையில் இரண்டு சுவர்களுக்கு அப்பால் நிலவறையில் மறைத்து வைத்திருந்த குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளையும் முகஅச்சையும் கியூபாவுக்குக் கொண்டு செல்லவும் முயற்சிகளை மேற்கொண்டார். தனது மனைவியையும் தனது மகனையும் இதற்காக அவர் கேட்டுக் கொண்டதன்படி, துண்டிக்கப்பட்ட கைகளும் ஆர்கடஸின் மரணத்தின் முன்பாக தனது நெருங்கிய நண்பரான விக்டர் ஜென்னியர் வசம் ஒப்படைக்கச் செய்தார். விக்டர் ஜென்னியர் இடதுசாரி எண்ணம் கொண்டவர். அவர் பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருக்கவில்லை. மேலும் அப்போது பொலிவியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. கியூபாவுக்கு இதனைக் கொண்டு சேர்க்கும் வழிவகை அறியாத நிலையில் அவர் தனக்கு அறிமுகமான ஜேவியர் சட்டாரி எனும் பொலிவிய கம்யூனிஸ்ட் நண்பரிடம் ஆலோசனை கேட்டார்.

அந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்ட ஜேவியர் சட்டாரி பொலிவிய அரசினால் அதிகமும் சந்தேகிக்கப்படுபவர் எனும் காரணத்தினால், சே குவேராவின் மெழுகுமுக அச்சினையும் துண்டிக்கப்பட்ட கைகளையும் விக்டர் ஜென்னியரிடமிருந்து ஜேவியர் சாட்டரியுடன் கையேற்ற பிறிதொரு பொலிவிய கம்யூனிஸ்ட்டான ஜூவானிடம் அவைகளைக் கியூபாவுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு வந்து சேர்ந்தது. 1969 டிசம்பர் 31 ஆம் திகதி விக்டர் ஜென்னியரின் கோரிக்கையை ஏற்று அவரையும் அழைத்துக் கொண்டு ஒரு கைப்பையில் முகஅச்சையும் துண்டிக்கப்பட்ட கைகளையும் எடுத்துக் கொண்டு தாம் மாஸ்க்கோ சென்று அடைந்ததாகத் தெரிவித்தார் ஜூவான். 1970 ஆம் ஆண்டு ஜனவரி 3 அல்லது 4 ஆம் திகதி ரஸ்ய உளவுத்துறை அதிகாரிகள் குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளைப் பரிசோதித்து புகைப்படமெடுத்துக்கொண்ட பின்னால், கியூப தூரதரக அதிகாரியும் விக்டர் ஜென்னியரும் அதனை கியூபாவுக்கு எடுத்துச் சென்றனர் எனத் தெரிவித்தார் ஜூவான். 1970 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளும் அவரது மெழுகு முகஅச்சும் பிடல் காஸ்ட்ரோவிடம் சென்று அடைந்த வரலாறு இது.

பொலிவியக் கம்யூனிஸ்ட் உறுப்பினரான ஜூவான் தரப்பு விளக்கத்தை கற்பனைகளும் பொய்களும் நிறைந்தது என்கிறார், குவேராவின் கைகளையும் முகஅச்சையும் முதலில் அந்தோனியா ஆர்குடஸ் குடும்பத்தவரிடமிருந்து பொறுப்பேற்ற விக்டர் ஜென்னியர். ஜூவான் ‘ஒரு கைப்பையில் அதனை விமானத்தின் மூலம் மாஸ்க்கோவுக்கு கொண்டு சென்றேன்’ என்று சொல்வது பொய் எனும் ஜென்னியர், மாறாக ‘ரஸ்யத் தூதரக வழியிலான அதிகாரபூர்வத் தபால் மூலமாகவே அது மாஸ்க்கோவை அடைந்தது’ எனவும் சொல்கிறார். 1969 டிசம்பர் 31 ஆம் திகதி இரவு விக்டர் ஜென்னியரும் ஜூவானும் மாஸ்க்கோவை அடைந்தனர் என்றும், அடுத்த நாள் புத்தாண்டு என்பதால் 2 ஆம் திகதி ரஸ்ய அதிகாரிகள் குவேராவின் கைகளைப் பரிசோதித்து புகைப்படம் எடுத்தனர் என்றும். ‘ஜனவரி 3 அல்லது 4 ஆம் திகதி மாஸ்க்கோவிலிருந்து விமானத்தில் புறப்பட்டு கியூபா சென்று, தனது கைகளால் நேரடியாக அதனைப் பிடல் காஸ்ட்ரோவிடம் கையளித்தேன்’ என்றும் சொல்கிறார் விக்டர் ஜென்னியர்.

இருவரதும் மாறுபட்ட விளக்கங்களின் பின்னணியில் ஒரு அரசியல் துரோகமும், கெரில்லா யுத்தத்திற்கு எதிராக அன்றைய ரஸ்ய ஜனாதிபதி கோசிஜின் ஆற்றிய துரோகமும் ஆவணப்படத்தில் அலசப்படுகிறது. ‘அந்தோனியோ ஆர்குடஸ் சே குவேராவின் கைகளையும் முகஅச்சையும் கியூபாவுக்குத்தான் அனுப்பக் கேட்டார். ஜூவான் ஏன் ரஸ்யாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்?’ எனக் கேட்கிறார் விக்டர் ஜென்னியர். அதற்கான விளக்கத்தையம் அவர் தெரிவிக்கிறார். 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ரஸ்ய ஜனாதிபதி கோசிஜின் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான லிண்டன் ஜான்சனைச் சந்தித்து, அமெரிக்காவுடன் ரஸ்யா இனி சமாதான சகவாழ்வுக் கொள்கையை கடைப்பிடிக்கும் என்பதனை முன்வைக்கிறார். இலத்தீனமெரிக்காவில் கொரில்லா போராட்டத்தைத் தாம் ஆதரிப்பதில்லை எனும் நிலைபாட்டையும் அவர் முன்வைக்கிறார். 1965 ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் நடந்த கூட்;டமொன்றில் மூன்றாம் உலக நாடுகளுக்கு வட்டியுடன் கடன் வழங்கும் ரஸ்யாவின் பொருளாதார அணுகுமுறையைக் குறித்து சே குவேரா கடுமையாக விமர்சித்துப் பேசியதன் பின், ரஸ்யா சேகுவராவினையும் அவரது அரசியலையும் விரும்பியிருக்கவில்லை. பொலிவியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தாம் தலைமையேற்காத ஒரு போராட்டத்தில், சோவியத் யூனியனின் ஆலோசனையின் பெயரில், குவேராவை ஆதரிக்க மறுத்தது. பொலிவியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற்றுத் தருவதாகக் கூறிய பிடல் காஸ்ட்ரோவினாலும் அதனை நிறைவேற்ற முடியவில்லை. பிடல் காஸ்ட்ரோவின் மாறுபட்ட கருத்தையும் மீறி பொலிவியப் பயணத்தை குவேரா தேர்ந்த போது, குவேராவின் புரட்சிகரக் கடப்பாடு பற்றித் திட்டவட்டமாக அறிந்திருந்த பிடல் காஸ்ட்ரோ, அதனைத் தடுத்துநிறுத்தக் கூடிய நிலையிலும் இல்லை. இந்த நிலையில், இலத்தீனமெரிக்காவில் கொரில்லா யுத்தத்தை விரும்பாத ரஸ்யா, சேகுவேராவின் மரணத்தை ஆதராபூர்வமாகவும் அறிவியல்பூர்மாகவும் உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றது. அந்த வகையிலேயே அது குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் முதலில் தன்னிடம் வரவேண்டும் என விரும்பியது என்கிறார் விக்டர் ஜென்னியர்.

சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளை நேரடியாக கியூபாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதற்கு மாறாக, அன்றைய அரசியல் சூழலில் ரஸ்யாவுக்கு அதனை அனுப்பியது ஜூவானின் துரோகம் என்கிறார் விக்டர் ஜென்னியர். கம்யூனிஸ்ட் கட்சி பொலிவியாவில் தடைசெய்யப்பட்டிருந்த அன்றைய நிலையில் பல சந்தர்ப்பங்களில் தனது உயிரைப் பணயம் வைத்து தான் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கும் ஜூவான், அன்று இருந்த சூழ்நிலையில் இந்தவழிமுறையில் அல்லாமல், குவேராவின் கைகளை நேரடியாக கியூபாவுக்கு அனுப்புவது சாத்தியமேயில்லை என்கிறார். இந்த முரண்பாடான இரண்டு விளக்கங்களுக்கு மத்தியில்தான் சேகுவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளைத் தொடர்ந்து செல்கிறது நெதர்லாந்து நாட்டின் ஆவணப்படமான ‘சே குவேராவின் கைகள்’.

1995 ஆம் வருட இறுதியிலான நியூயாரக் டைம்ஸ் நேர்முகம், 1997 ஆம் ஆண்டு ஜூலையில் கண்டுபிடிக்கப்பட்ட சே குவேராவினதும் அவரது தோழர்களதும் உடல்கள், அதன் பின்பு 1997 இல் வெளியான ஜேன் லீ ஆண்டர்சனின் சே குவேரா பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் போன்றவற்றின் வழி குவேராவின் பொலிவியக் கெரில்லாப் போராட்டம் பற்றிய நுண்ணிய ஆய்வுகள் வரத் தொடங்கின. எண்ணற்ற வகையிலான குவேராவினது தோழர்களினது நினைவுகளும், அவர்தம் போராட்ட வரலாறுகளும் பதியப்பட்டன. ஆவணப்படங்களும் திரைப்படங்களும் குவிந்தன. சே குவேரா கொல்லப்பட்ட சூழல் குறித்து பல்வேறு ஆவணப்படங்களில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டன. உலகெங்கிலும் வெளியான அத்தகைய ஆவணப்படங்கள் நூற்றுக் கணக்கிலானவை. அத்தகைய ஆவணப்படங்களில் மிக மிக விசேஷமான ஒரு அற்புதமான ஆவணப்படம், குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளுக்கு என்ன ஆனது என்பதனைத் தேடிச் சென்று பதிவு செய்த நெதர்லாந்து நாட்டின் ஆவணப்படம். சே குவேராவின் கைகள் (The Hands of Che Guevara 2005) எனும் இந்த ஆவணப்படத்தை நெதர்லாந்து திரைப்படக் கழகத்தின் நிதி ஆதாரத்துடன் இயக்கியிருப்பவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் டீகாக் ஆவார்.





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 12, 2015 5:41 pm

சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் பகுதி ஐந்து


சே குவேராவின் மரணத்தின் பின்பு, அடுத்த நாள், 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அவரைப் புகைப்படமெடுத்த பகைப்படக்கலைஞர் ரெனே கார்டிமோ சே குவேராவின் குவேராவின் உடல் கிடத்தப்பட்ட வெலிகிரண்டா மருத்துவமனை சலவைச் சாலைக்குள் நுழைவதுடன் ‘சே குவேராவின் கைகள்’ ஆவணப்படம் துவங்குகிறது. சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளைப் பார்த்தவர்களின் அனுபவங்களாக ஆவணப்படத்தின் திரைக்கதை விரிகிறது.

சே குவேராவின கைகளை வெட்டியெடுத்த மருத்துவர் மார்ட்டினஸ் காஸோ, சேவின் கைகளை வெட்டியெடுத்த நொடியில் ‘அதுவரையிலும் மூடியிருந்த தமது கைகளை விரித்து சே குவேரா தன்னிடம் இறுதியாக விடைபெற்றுக் கொண்டார்’ என விழிகளில் கண்ணீர் வழியத் தெரிவித்தார் என்கிறார், பொலிவியப் பத்திரிக்கையாளர் எல்தாரியோ ரெஜினால்டோ அர்சே. எல்தாரியோ தாம் வழக்கமாகச் செல்லும் விடுதிக்குச் சென்ற வேளையில், அந்த விடுதியின் உரிமையாளர், ‘மருத்துவர் மார்டினஸ் என்னவோ சேவின் கைகளை வெட்டியெடுத்ததாக குடிவெறியில் உளறிக் கொண்டிருக்கிறார், என்னவென்று கேளுங்கள்’ எனத் தெரிவித்திருக்கிறார். அடுத்த நாள் ஒரு போத்தல் சரக்கை வாங்கிக் கொண்டு மார்டினஸைச் சந்திக்கிறார் எல்தாரியோ. சரக்கு வேலை செய்கிறது. போதை ஏறியவுடனேயே மார்டினஸ் உணரச்சிவசமாகத் தான் சே குவேராவின் கைகளை வெட்டியதனை விளக்கத் துவங்க, மேசையின் கீழ் ஒளித்து வைத்த ஒலிப்பதிவு நாடாவில் அதனைப் பதிவு செய்து கொள்கிறார் எல்தாரியோ. ஆவணப்படத்தில் அந்த ஒலிப்பதிவு நாடாவை நமக்கு முன் வைக்கிறார் எல்தாரியோ.

சே குவேராவின் கைகளை பொலிவிய உள்துறை அமைச்சரான அந்தோனியோ ஆர்குடசிடமிருந்து முதலில் பெற்ற ஜேவியர் சட்டாரியின் குழந்தைகள், இப்போது வளர்ந்து பெரியவர்களாகி விட்ட விளாதிமிர் மற்றும் ரோக்சேனா தமது அனுபவத்தைச் சொல்கிறார்கள். அவர்கள் அப்போது எட்டு வயதும் ஆறுவயதுமான குழந்தைகள். சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் அவர்களது வீட்டுக்குவந்தபோது அது கிறிஸ்துமஸ் கொண்டாட்டக் காலம். கண்ணாடிக் குடுவையில் பத்திரப்படுத்தப்பட்ட சே குவேராவின் கைகள் அவர்களது தந்தையான சட்டாரியின் படுக்கையறையிலுள்ள ஒரு அலமாரியில் வைத்து இறுகச் சாத்தப்பட்டிருக்கிறது. தங்களுக்குத் தருவதற்காக கிறிஸ்துமஸ் கொண்டாட்டப் பரிசைத் தமது தந்தை அங்கே மறைத்து வைத்திருப்பதாகக் கருதுகிறார்கள் குழந்தைகள்.

தமது தந்தை இல்லாத நேரத்தில் குறுகுறுப்புடன் படுக்கையறைக்குள் நுழையும் குழந்தைகள், அலமாரியைத் திறந்து வெட்டுண்ட கைகளைப் பார்த்த நொடியில் பயந்து போகிறார்கள். அவர்களுக்கு அப்போது மெக்சிக்கத் திரைப்படங்களில் பார்த்த திகிலூட்டும் வெட்டுண்ட கைகள் ஞாபகம் வருகிறது. ‘கறுப்புக் கைகள்’ மற்றும் ‘கொலைகாரக் கைகள்’ எனப் பெயர் கொண்ட அந்தத் திரைப்படங்களில் வெண்டுண்ட இரண்டு கைகள் நகரத்தின் தெருக்களிலும் கானகங்களிலும் வீடுகளின் மீதும் ஊர்ந்து செல்கின்றன. பெண்களை அது தேடித் தேடித் தேடிக் கொலை செய்கிறது. ‘அச்சத்தில் உறைந்த போன நாங்கள், ஒன்றையொன்று நோக்கியபடி நிமிர்ந்து நின்ற அந்த நீலநிறக் கைகளைப் பார்த்ததை எமது தந்தையிடம் சொல்லவேயில்லை. அந்தப் பயங்கரத்திலிருந்தும் நீண்ட நாட்கள் நாங்கள் மீளவேயில்லை’ என குழந்தைகளாக சே குவேராவின் வெட்டுண்ட கைகள் ஏற்படுத்திய பயங்கர அனுபவத்தை புன்னகையுடன் பகிர்ந்து கொள்கிறார் இப்போது வளர்ந்து மத்தியதரவயதை அடைந்திருக்கும் விளாதிமிர். லெனினது பெயரால் அவரது பொலிவிய கம்யூனிஸ்ட்டான தந்தை மகனுக்கு இட்டபெயர் அது.

சே குவேராவின் கைகளைப் பார்த்த பிறிதிருவர் பொலிவிய உள்துறை அமைச்சரின் மனைவியும் புதல்வருமான கிளாடியாவும் கார்லோசும் என்கிறது ஆவணப்படம். சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அறை அப்போது கார்லோசின் படிப்பறையாக இருந்தது. பொலிவிய அரசின் வேட்டைக்குத் தப்பி மெக்சிக்கோவிலிருந்த கால்லோசின் தந்தை அறையின் கீழ்புறத்தில் இரண்டு சுவர்களுக்கு அப்பால் ஒரு இரும்பப் பெட்டியில் பொதிந்து வைக்கப்பட்டிருந்த துண்டிக்கப்பட்ட கைகளையும் மெழுகுமுக அச்சையும் தோண்டியெடுக்குமாறு பணிக்கிறார். வெளியே சத்தம் கேட்டுவிடும் எனும் அச்சத்தில் மூன்று நாட்கள் இரவில் மெதுவாக தோண்டும் வேளை நடக்கிறது. பொலிவியக் கொடியில் சுற்றிக் கட்டப்பட்ட, கண்ணாடிக் குடுவையினுள் நீலம் பாரித்த நிலையில் பார்மால்டிஹைடு திரவத்தில் ஊறிக் கொண்டிருக்கிறது சேவின் வணங்கிய நிலையில் நிமிர்ந்த வெட்டுண்ட கைகள். சேவின் கைகள் பிற்பாடு தந்தையின் நண்பரான விக்டர் ஜென்னியரிடம் ஒப்புவிக்கப்படுகிறது. பிற்பாடு விக்டர் ஜென்னியர் அதனை பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜேவியர் சட்டாரியிடமும் ஜூவானிடமும் வந்து சேர்கிறது சேவின் துண்டிக்கப்பட்ட கைகள்.

பொலிவிய கம்யூனிஸ்டான ஜூவான் ஆவணப்படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரையிலும் கைகளின் வேறுபட்ட பயணங்களை விவரித்துச் சொல்பவராக இருக்கிறார். இன்று பொலிவிய அரசினால் கட்டுமான நிலையில் இருக்கும் வெலிகிரண்டா விமான ஒடுபாதையிலுள்ள சே குவேரா நினைவில்லத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் ஜூவான். அவருடன் அவரது பேரக் குழந்தையும் பிற குழந்தைகளும் பெரியவர்களும் இருக்கிறார்கள். சேவின் கைகள் பற்றி அவர் விளக்கத் துவங்கும் போது உயிர்ப்புள்ள அழகான குழந்தைகளின் கைகள் நமக்கு நெடுநேரத்திற்கு அருகாமைக் காட்சிகளாக நிலைத்திருக்கின்றன.

சட்டாரி தீவிரமான போலீஸ் கண்காணிப்புக்கு இலக்காகி இருப்பதால் ஜூவான் சேவின் கைகளைப் பொறுப்பேற்கிறார். தமது நண்பர் சட்டாரி எண்பதுகளில் மரணமுற்றதை நினைவுகூரும்போது, பூங்கொத்துகளை ஏந்தியபடி அவர் நண்பரது கல்லறை நோக்கிச் செல்லும் காட்சி விரிகிறது. கல்லறைப் பாடல்களும் சடங்குகளும் காட்சிளாகின்றன. தமது மூதாததையரை, அன்பான உறவுகளை, இணையை நினைவு கூரும் மனிதர்கள் காட்சிகளாகிறார்கள். இவர்களை மேவியபடி கித்தாரை இசைத்தபடி ஒரு பொலிவியப் பாடகன் குவேராவின் நினைவாக ஒரு பாடலை இசைத்தபடி கல்லறை வெளியெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான்.

ஜூவன் மற்றும் விக்டர் இருவரும் பிற்பாடு மாஸ்க்கோ செல்ல, சேவின் துண்டிக்கப்பட்ட கைகள் மாஸ்க்கோவை அடைந்து அங்கிருந்து விக்டர் அதனை கியூபாவுக்கு எடுத்துச் சென்று பிடலிடம் ஒப்படைக்கிறார். இப்போது ஆவணப்படம் நம்மை, ஒரு அழகிய ஸ்பானிய மத்தியதரவயதுப் பெண்ணை புகைப்படமெடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படக் கலைஞரிடம் அழைத்துச் செல்கிறது. சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளைப் பற்றி பிடல் தன்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை விவரிக்கிறார் புகைப்படக் கலைஞரான ரோபர்ட்டோ சலாஸ். 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் பிடலையும் சேவையும் சந்தித்துப் புகைப்படம் எடுத்ததை விவரிக்கிறார் சலாஸ். பிடலின் சுருட்டு வெளிச்சத்தில் பிடலும் சேவும் முகம் நெருங்கிப் பேசும் காட்சியினது புகழ்வாய்ந்த திரைப்படம் நமக்கு காண்பிக்கப்படுகிறது. ரோபர்ட்டோ சலாஸை பிடல் 1971 ஆம் ஆண்டு தம்மை வந்து சந்திக்குமாறு கோருகிறார். சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளை எந்தவிதத்தில் காட்சிப்படுத்தலாம் என ஆலோசனை கேட்கிறார் பிடல். குவேராவின் கைகள் தான் நின்ற இடத்திலிருந்து வெகுதூரத்தில் வைக்கப்பட்டிருந்தன என்கிறார் சலாஸ். கைகளை ராணுவ உடையில் இருப்பதான நிலையில் காட்சிப்படுத்தலாமா, அல்லது தனியாகவே காட்சிப்படுத்தலாமா என்கிற சாத்தியங்கள் விவாதிக்கப்படுகிறது. எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. அதற்குப் பிறகு அதைப் பற்றி நான் மறந்துவிட்டேன் என்கிறார் ஸலாஸ்.

சேகுவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் இருக்கிறது. அநேகமாக அது அரச கட்டுப்பாட்டில் ஏதேனும் ஒரு அலமாரியில் பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கலாம். அதனைக் காட்சிப்படுத்த பொறுத்தமான இடம் சே குவேரா நினைவகம்தான் என்கிறார் சலாஸ். ஆவணப்படம் நம்மை சே குவேரா நினைவகத்துக்கு அழைத்துச் செல்கிறது. அங்குள்ள விரிவுரையாளர் நமக்கு சே குவேரா உபயோகப்படுத்திய புகையிலைச் சிலும்பியைக் காண்பிக்கிறார். சிலும்பியில் கியூப விடுதலைலாப் போராட்டத்தின் தாக்குதல் விவரங்களை சேகுவேரா செதுக்கி வைத்திருப்பதை நமக்குக் காண்பிக்கிறார். அவர் மரணத்தின் முன்பு அணிந்திருந்த அங்கியின் கிழிசல் துண்டுகள் நமக்குக் காண்பிக்கப்படுகிறது. அவரது அடர்ந்த தாடியிலிருந்து வெட்டப்பட்ட முடிக்கற்றைகள் நமக்கு முன் இருக்கிறது. எனினும் அவரது துண்டிக்கப்பட்ட கைகளின் சுவடுகள் கூட அந்த நினைவகத்தில் இல்லை. அறுதியில், சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகளுக்கு என்னதான் நேர்ந்தது எனும் கேள்வி நம்மைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது.

விக்டர் ஜென்னியர் கியூபத் தலைநகர் ஹவானாவுக்கு வருகிறார். தான் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து பிடல் காஸ்ட்ரோவுக்கு தமது முன்னைய சந்திப்பை நினைவுகூர்ந்து கடிதம் எழுதுகிறார். சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் குறித்து பிடலிடம் விவாதிக்க விரும்புவதாக எழுதுகிறார். பிற்பாடாக அரசுத் தலைமையகத்திற்கு பிடலைச் சந்திக்கவென நேரம் கேட்டு தொலைபேசி அழைப்புவிடுக்கிறார். அவரது முயற்சி உடனடியாகக் கைகூடுவதில்லை. கண்ணாடிக் கதவுகள் திறந்து மறுபடி திறந்து மூட, மனித முகங்களும் வாகனங்களும் தெருக்களில் விரைய, தேநீர்விடுதியின் மேசையில் பொழுதைக் காத்திருத்தலுடன் கழிக்கிறார் ஜென்னியர். பிடலிடம் இருந்து அவருக்கு அழைப்பு வருவதில்லை. ‘கமாண்டர் மிகவும் பணிநெருக்கடி மிகுந்தவர். அவருக்கு நேரம் கிடைப்பது அரிது’ எனத் தனக்குத் தானே சமாதானமும் செய்து கொள்கிறார் அவர்.

ஆவணப்படத்தின் இறுதிக் காட்சியில் சே குவேரா நினைவகத்தில் நுழைகிறார் ஜென்னியர். சே குவேராவின் பிரம்மாண்டமான முகுஅச்சு சுவரில் செதுக்கப்பட்டிருக்கிறது. ‘தான் பார்த்த மெழுகு அச்சு போன்று, இது இல்லை’ என்கிறார் விக்டர் ஜென்னியர். ‘எனது வாழ்நாளில் மறக்கமுடியாத நொடி இது’ என்கிறார். ‘எனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை நான் நிறைவேற்றிவிட்டேன் என்ற நிம்மதி எனக்கு இருக்கிறது’ என்கிறார். விக்டர் ஜென்னியரின் முகத்திலிருந்து நகரும் காமெரா சேகுவேராவின் சுவர்முக அச்சில் பதிந்து, கொழுந்துவிட்டெறியும் நினைவுத் தீச்சுடரில் நிலைக்கிறது. தீ கொழுந்துவிட்டு தகதகவென நீள்கிறது. திரையின் இறுதிப் பிம்பமாக சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் ஒரு செய்திப் பத்திரிக்கையின் மீது விரல்கள் விரிக்கப்பட்ட நிலையில், குவிவதற்கான அடுத்த நிலையில் இருக்கிறது.

‘பல்வேறுவிதமான வியாக்யானங்களுக்கு இடையில் புதைந்திருக்கிறது நிஜம்’ எனும் வாக்கியம் படத்தின் ஆரம்பத்தில் போடப்படுகிறது. இந்த ஆவணப்படும் முன்வைக்கும் வியாக்யானங்கள் எது? மிகமுக்கியமான வியாக்யானங்கள் இருவருடையது. பொலிவிய கம்யூனிஸ்ட்டான ஜூவானும், கைகளை கியூபா கொண்டு சேர்த்த விக்டரும்தான் அந்த இருவர். ‘கைகளைத் தாம் கைப்பையில் மாஸ்க்கோ கொண்டு சென்றோம்’ என்கிறார் ஜூவான். ‘இல்லை, முன்பேயே திட்டமிட்டபடி ரஸ்ய தூதரகத் தபாலில்தான் கைகள் மாஸ்க்கோவை வந்தடைந்தன’ என்கிறார் விக்டர். காரணமாக குவேராவின் மரணத்தை உறுதிப்படுத்துவதில் ரஸ்ய அரசுக்கிருந்த அரசியல் நோக்கத்தைச் சொல்கிறார் விக்டர்.

நிஜம் என்னவென்பது இவர்கள் இருவர் அல்லாமல் எவருக்கும் தெரியாது. எனினும் இருவரும் ஒருமித்து ஒரு உண்மையைச் சொல்கிறார்கள். அந்த உண்மை இதுதான் : ஜூவானும் விக்டரும் ரஸ்யா சென்றார்கள். ரஸ்யாவிலிருந்து விக்டர்தான் கைகளை கியூபா எடுத்துச் சென்று பிடலிடம் சேர்த்தார். பல்வேறு சாட்சியங்களின் வழியிலும் நமக்குத் திட்டவட்டமாகத் தெரியும் உண்மைகள் இவைகள்தான் :  சே குவேராவின் கைகள் துண்டிக்கப்பட்டன. அவரது மெழுகுமுக அச்சு செய்யப்பட்டது. பிற்பாடு அவைகளை அழிக்க வேண்டும் எனவும் பொலிவிய அரசு ஆணையிட்டது. சே குவேரவாவின் துண்டிக்கப்பட்ட கைகளை உயிரைப் பணயம் வைத்து பொலிவியக் கம்யூனிஸ்ட்டுகள் கியூபாவுக்குக் கொண்டு சேர்த்தனர். அக்கைகளை பொதுமக்களுக்கென பார்வைக்கு வைக்கவும் கியூப அரசினால் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அது பிற்பாடு செயல்வடிவம் பெறவில்லை. அதற்கான காரணத்தை எவரும் அறிவிக்கவில்லை, அதனால் எவருக்கும் அதுபற்றித் தெரியாது. சே குவேராவின் துண்டிக்கப்பட்ட கைகள் இன்னும் கியூபாவில் இருக்கிறது. இனி ஒரு போதும் அது காட்சிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எவருக்கும் இல்லை. இதுவே ஆவணப்படம் திட்டவட்டமாகத் தெரிவிக்கும் இறுதிச் செய்தி.

சே குவேரா புன்னகையுடனும் வெட்கத்துடனும் திரையில் தோன்றுகிறார். தனது தலைமுடியைக் கோதியபடி ‘நான் இப்போது ஒரு கவிதைச் சொல்லப் போகிறேன், பயப்படவேண்டாம், இது நான் உருவாக்கிய கவிதை இல்லை’ என மீளவும் புன்னகைக்கிறார், அவரது பிம்பம் மெதுமெதுவாக அசைகிறது. கருந்திரையில் ‘சேகுவேரா 1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி பொலிவியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்’ எனும் செய்தி விரிகிறது. சே குவேராவின் வாழ்வும் மரணமும் ஆன அமரகவிதை பற்றிய ஆவணப்படம் துவங்கிவிட்டது.

நன்றி --இணையம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 2:01 pm

இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் - Page 3 ZTi3YD8BSquxFSWw8Qzs+Sergei_Eisenstein_02

செர்கெய் ஐசன்ஸ்டீன். ருஷ்ய திரைப்பட இயக்குனர்

‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்

மௌனப் பட வரலாற்றில் ஐசன்ஸ்டீன் இயக்கிய ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்’ ரசிகர்களின் நினைவுகளில் என்றும் நீந்திக்கொண்டிருக்கும் கடல் காவியம். உலகிற்கு மாண்டேஜ் எனும் புது வகைக் காட்சித் துளிகளை அறிமுகப்படுத்திய படம்
உலகில் வெளிவந்துள்ள திரைப்படங்களில் மிகச் சிறந்த மூன்று திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் கவுரவிக்கப்படும் படம் ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்.


சோவியத் யூனியன் நாட்டில் 1917இல் சோஷலிசப் புரட்சி நடைபெற்றது. இது இரண்டு கட்டமானது; முதல் புரட்சி 1905 இல் நடைபெற்றது. இதில் பொட்டம்கின் என்ற கடற்படைக் கப்பலில் வெடித்த புரட்சி முக்கியமாகும். இக்கப்பல்படைப் புரட்சி அலைகள் நாடு முழுவதும் சிதறின. புரட்சிக்குப் பின் அமைந்த சோஷலிச அரசில் 1905 புரட்சியின் 20 ஆம் ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டதையொட்டி ஒரு திரைப்படம் தயாரிக்க ஐன்ஸ்டீனுக்குப் பணிக்கப்பட்டது. அவர் பொட்டம்கின் போர்க்கப்பல் எழுச்சியை எடுத்துக் கொண்டு படத்தை உருவாக்கினார்.

ரஷ்யாவின் ஜார் அரசனுக்குச் சொந்தமான போர்க்கப்பல் பொட்டம்கினில் மாலுமிகளுக்காகத் தயாரிக்கப்படும் சூப்பிற்கான இறைச்சியில் புழுக்கள் நெளிகின்றன. தங்கள் எதிர்ப்பையும் மீறித் தயாரிக்கப்படும் சூப்பை அருந்த மாலுமிகள் மறுக்கிறார்கள். அதிகாரிகளின் எச்சரிக்கைக் கொக்கரிப்புகள், மிரட்டல்கள் பலனற்றுப் போக, சில மாலுமிகள் தார்ப்பாயால் மூடப்பட்டு அவர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடப்படுகிறது. துப்பாக்கிக் குதிரைகளைத் தட்டிவிடும் நொடியில் ‘சகோதரர்களே’ என்ற குரல் கேட்கிறது. சகமாலுமிகளுக்கு ஆதரவாக வீரர்கள் அவர்களைச் சுட மறுக்கிறார்கள். கப்பலில் கலகம் வெடிக்கிறது. போராடும் மாலுமிகள் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், இந்தப் போராட்டத்துக்கு வித்திட்ட வக்குலின் சுக் என்ற மாலுமி போர்க் கப்பல் தளபதியால் கொல்லப்பட்டு விடுகிறார்.

மாலுமி வக்குலின் சுக் உடல் ஒடேசா துறைமுகத்துக்கு எடுத்து வரப்படுகிறது. ஒரு கூடாரத்தில் வக்குலின் சுக் உடல் வைக்கப்பட்டு மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்த அந்த வீரனின் கையில் மெழுகுவத்தி உருகி எரியும் ஒளியில் ஒடேசா நகரம் மங்கலாகத் தெரிகிறது. ஒடேசா நகரப் போராளிகளும், தொழிலாளிகளும், மக்களும், ஆண்களும், பெண்களுமாக உயிர்த் தியாகம் செய்த மாலுமிக்கு அஞ்சலி செலுத்தத் துறைமுகம் நோக்கி விரைகிறார்கள். துறைமுகம் முழுவதும் மக்கள் ஆதரவுக் கரங்கள் உயர்கின்றன. பொட்டம்கின் கப்பலில் செங்கொடி ஏறுகிறது.





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக