புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
81 Posts - 64%
heezulia
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
5 Posts - 4%
eraeravi
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
19 Posts - 3%
prajai
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_m10அழகியும் அன்பான அரக்கணும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகியும் அன்பான அரக்கணும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:06 am

அழகியும் அன்பான அரக்கணும்! E_1441258698
வெகுகாலத்துக்கு முன் சிறிய நகரத்தில் ஒரு பெரிய பணக்காரன் வசித்து வந்தான். அவனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந் தனர். பெரிய பணக்காரனாக வாழ்ந்த அவன், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஏழை யாகி விட்டான். தான் சகல வசதிகளோடு வாழ்ந்த பெரிய மாளிகையை விற்று விட்டு, நகரத்துக்கு வடக்கே, ஒரு சிறிய வீட்டைக் கட்டி, அதில் தன் மூன்று குழந்தைகளோடு குடியேறினான்.

பணக்காரனின் மூன்று பெண் குழந்தை களின் முதல் இரண்டு பெண் குழந்தைகள், எப்போதும் ஏதாவது முணுமுணுத்துக் கொண்டிருப்பர். அவர்கள் தன் தந்தை யிடம் தங்களுக்கு நகை வேண்டும், நல்ல துணிமணி வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பர். கடைசி பெண் மிகவும் சாதுவானவள். அவள் ஒரு போதும் தன் தந்தையிடம் தனக்கு நகை வேண்டும், துணி வேண்டும் என்று கேட்டதில்லை. பணக்காரன் தன் கடைசி பெண்ணை மற்ற இரு பெண்களை விட அதிகமாக நேசித்தான்.

ஒருநாள், பணக்காரன் வேலை தேடி, பக்கத்தில் இருந்த நகரத்துக்கு புறப்பட்டான். புறப்படும் முன் அவன் தன் மூன்று மகள் களையும் அழைத்து, அவன் திரும்பி வரும் போது அவர்களுக்கு என்ன பொருள் வாங்கி வர வேண்டும் என்று கேட்டான். முதல் பெண் தனக்கு விலையுயர்ந்த ஆடைகள் வாங்கி வரும்படி கூறினாள்.

இரண்டாவது பெண், தனக்கு ஒரு தங்க செயின் வாங்கி வரும்படி கூறினாள். கடைக் குட்டி பெண் தனக்கு எதுவும் தேவையில்லை என்று கூறினாள். பணக்காரன் தன் கடைக்குட்டி மகளை பார்த்து, அவள் விரும்பும் ஏதாவது ஒரு பொருளை கேட்கச் சொன்னான். தன் தந்தை வற்புறுத்தி கேட்டதால் மூன்றாவது பெண், தன் தந்தையிடம், "ஒரே ஒரு சிகப்பு ரோஜாவை வாங்கி,' வரும்படி கூறினாள்.

பணக்காரன் தன் மகளை பார்த்து, ""இந்த பனிக்காலத்தில் சிகப்பு ரோஜா எங்கும் கிடைக்காதே!'' என்றார்.

""அப்பா! நான் கேட்ட சிகப்பு ரோஜா கிடைக்காவிட்டால், அது குறித்து நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் பத்திரமாக வீட்டிற்கு வந்து விடுங்கள். உங்களை நம்பித்தான் உங்கள் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளோம்,'' என்று கூறினாள்.

பணக்காரன் தன் மூன்று பெண் குழந்தை களையும் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு வேலைதேடி அடுத்த நகரத்துக்கு புறப்பட்டு சென்றான். பல மாதங்கள் அடுத்த நகரத்தில் தங்கி பல கடினமான வேலைகள் செய்து சிறிது பணம் சேர்த்துக் கொண்டு தன் குழந்தைகளை பார்க்க தன் நகரத்தை நோக்கி வந்தான். வரும் வழியில் தன் முதல் இரண்டு பெண்களுக்கும் இனிப்பு பொட்டலங்களை வாங்கிக் கொண்டான் பணக்காரன். தன் மூன்றாவது பெண் கேட்ட சிகப்பு ரோஜா எங்கு தேடியும் அவனுக்கு கிடைக்கவில்லை. தன் குழந்தைகளை பார்க்க வேகமாக நடந்து வந்துக் கொண்டிருந்த பணக் காரன், வழியில் ஒரு பெரும் புயலில் சிக்கிக் கொண்டான். புய லோடு சேர்ந்து கன மழையும் பிடித்துக் கொண்டது. அவனால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. அவன் தன் நகரத்துக்கு செல்லும் பாதையையும் தவறவிட்டு விட்டான்.

மழையில் முழுமையாக நனைந்து விட்ட பணக்காரன் தங்குவதற்கு இடம் தேடினான். அப்போது அவன் கண்களில் ஒரு பெரிய இரும்பு கதவு தென்பட்டது. இரும்புக் கதவை திறந்துக் கொண்டு <உள்ளே சென்றான். அங்கே அவன் ஒரு பெரிய மாளிகையை பார்த்தான். மாளிகைக்கு உள்ளே சென்ற பணக்காரன், அங்கே இருந்த ஒரு பெரிய அறையில் ஒரு மேஜை இருப்பதை பார்த்தான். மேஜைக்கு அருகில் சென்றவன், மேஜை மீது விதவிதமான பலகாரங்கள் இருப்பதையும் பார்த்தான். பலத்த காற்றால் அலைக்கழிப்பட்டு, கன மழையில் நனைந்த பணக்காரனை பசி வாட்டியது. அவன் தன் பசிக்கு கடவுள்தான் உணவை காண் பித்துள்ளார் என்று எண்ணியபடி, மேஜை மீது இருந்த உணவை வேகமாக உண்டு முடித்து விட்டான்.

பணக்காரனின் பசி அடங்கியவுடன் அவன் தான் நின்றுக் கொண்டிருந்த அறையை சுற்றிப் பார்த்தான். அறையின் ஒரு மூலையில் வெள்ளி யால் ஆன குறுகிய வடிவில் ஒரு ஜாடியும், ஜாடியின் மேலே ஒரு அழகிய சிகப்பு ரோஜாவும் இருப்பதை பார்த்தான்.

உடனே அவனுக்கு தன் கடைசி மகள் நினைவுக்கு வந்து ரோஜாவை எடுக்க போனான். அப்போது அவன் அருகே இடி யோசை கேட்டது. திரும்பிப் பார்த்தவனுக்கு தன் அருகே ஒரு உயரமான உருவம் மனித வடிவில் இருந்தாலும், அதன் தலைப்பாகம் மிருகத்தின் தலைபோல் இருந்தது. அதன் உடல் முழுவதும் ரோமங்கள் நிறைந்திருந்தது. ஜாடியில் இருந்த சிகப்பு ரோஜாவை கையில் எடுத்த பணக்காரனை பார்த்த உயரமான உருவம், ""இந்த ரோஜாவை எடுக்காதே!'' என்று இடிபோல் முழங்கியது.

பணக்காரனும் தைரியத்தை தன்னுள் வர வழைத்துக் கொண்டு, ""ஐயா! இந்த சிகப்பு ரோஜா என் செல்லப் பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சிகப்பு ரோஜாவை என் செல்ல மகளுக்கு அளிக்க அனுமதி வழங்குங் கள்,'' என்று மிகவும் பணிவாக கேட்டான்.

உயரமான மனிதனும், பணக்காரனை பார்த்து, ""நீ சிகப்பு ரோஜாவை உன் செல்ல மகளிடம் தாராளமாக கொடு. அப்படி கொடுத்தால், நீ உன் செல்ல மகளை என் மாளிகைக்கு அனுப்ப வேண்டும்!'' என்று நிபந்தனை போட்டான்.

""தனக்கு சிகப்பு ரோஜா வேண்டாம்!'' என்று கூறி விட்டான் பணக்காரன்.

""உனக்கு இந்த சிகப்பு ரோஜா தேவைப் பட்டாலும், படாவிட்டாலும் உன் செல்ல மகளை என் மாளிகைக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும்... அப்படி அனுப்பா விட்டால் உன்னை ஒரே அடியில் கொன்று தின்று விடுவேன்,'' என்று பயமுறுத்தினான் உயரமான மனிதன்.

அதே நேரத்தில் உயரமான மனிதன் பணக் காரனிடம், ""உன் செல்ல மகளுக்கு நான் எந்த வித தொல்லையோ, கெடுதலோ இழைக்க மாட்டேன். அவளை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்,'' என்று நம்பிக்கையான வார்த்தைகளால் பணக்காரனின் பயத்தை போக்கினான்.

உயரமான மனிதன் ஒரு மாய மோதிரத்தை பணக்காரனிடம் கொடுத்து இந்த மோதிரத்தை உன் செல்ல மகள் அணிந்து கொண்டால், இந்த மோதிரம் அவள் என் மாளிகைக்கு வர வழி காட்டும் என்று கூறினான். உயரமான மனிதனிடம் இருந்து மோதிரத்தை பெற்றுக் கொண்ட பணக்காரன் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்கு வந்த பணக்காரன் தன் கடைசி மகளை அழைத்து, ""அம்மா! நான் என் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பும் போது பலத்த சூறாவளி காற்றிலும், கனத்த மழையிலும் மாட்டிக் கொண்டேன். தங்க இடம் தேடியபோது அருகில் ஒரு மாளிகை தென்பட்டு அதன் உள்ளே சென்றேன். அங்கே நீ கேட்ட சிகப்பு ரோஜா இருந்தது. ரோஜாவை எடுக்க சென்ற போது அந்த மாளிகைக்கு உள்ளே ஒரு உயரமான மிருகத்தலையும், மனித உடலும் கொண்ட ஒருவன் என்னை நெருங்கி "உனக் குப் ரோஜாப் பூ தேவைப்பட்டால், இதை எடுத்துக்கொள். ஆனால், அதற்கு பதில் நீ உன் மகளை இந்த மாளிகைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினான்.

""நான் ரோஜா வேண்டாம் என்று கூறவும், அவன் மிகுந்த கோபம் கொண்டு, நீ உன் மகளை என் மாளிகைக்கு அனுப்பா விட்டால், உன்னை அடித்து கொன்று தின்று விடுவேன் என்று கூறினான். நானும் என் உயிருக்கு பயந்து உன்னை அந்த உயரமான மனிதனின் மாளிகைக்கு அனுப்புவதாக கூறிவிட்டு வந்து விட்டேன். நீ அவன் மாளிகைக்கு செல்ல மறுத்தால் நான் நிச்சயம் உயரமான மனிதனால் கொல்லப் படுவேன்.

""அம்மா! நீ அவன் வீட்டில் இருக்கும் போது, உனக்கு அவன் எந்தவிதமான தீங்கும் செய்ய மாட்டான். ஆகவே, நீ பயப்படாமல் செல்,'' என்று கூறினான் பணக்காரன்.

""தந்தையின் உயிரை காப்பது மகளின் கடமை. ஆகவே, உங்கள் உயிரை காப்பாற்ற நான் உயரமான மனிதனின் மாளிகைக்கு செல்கிறேன்'' என்று கூறியபடி மாய மோதிரத்தை கையில் அணிந்தவாறு உயரமான மனிதனின் மாளிகைக்கு சென்றாள்.

மாளிகையின் வாசலுக்கு சென்று கதவை திறந்த உடன், வாயிற் கதவருகில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி ஒன்று, அவளுக்கு வழி காட்டியபடி அழைத்துச் சென்றது. மெழுகுவர்த்தி காட்டிய வழியில் சென்றவள், ஒரு பெரிய அறையையும், அங்கே இருந்த ஒரு மேஜையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பல காரங்களையும் பார்த்தாள். உடனே மேஜைக்கு அருகில் சென்று, மேஜை மேல் இருந்த உணவை ருசித்து சாப்பிட்டாள். உணவு உண்டவுடன் தூக்கம் கண்களை தழுவ, அருகில் கிடந்த கட்டிலில் படுத்து உறங்கி விட்டாள்.

உண்பதும், உறங்குவதுமாக மூன்று நான்கு நாட்கள் சென்றதும் பணக்காரனின் மூன்றாவது மகள், ஒருநாள் மாளிகைக்கு அருகில் இருந்த தோட்டத்திற்கு உலாவ சென்றாள். திடீர் என்று தன் எதிரே உயரமான மனிதன் நிற்பதை பார்த்தாள். அவள் ஒரு வினாடி பயந்தாலும் மறு வினாடி தனக்குள் இருந்த பயத்தை போக்கி தன் எதிரே இருக்கும் மனிதனை பார்த்தாள்.

உயரமான மனிதன் தன் தந்தையிடம் கூறிய நம்பிக்கையான வார்த்தைகளை நினைத்துக் கொண்டாள்.

உயரமான மனிதனும், பணக்காரனின் மகளை பார்த்து, "பயப்படாதே! நான் உன் தந்தையிடம் கூறியது போல் உனக்கு எந்த தீமையும் செய்ய மாட்டேன். நீ இந்த தோட்டத்திலும், மாளிகையிலும் தாராளமாக உலாவலாம்,'' என்று கூறினான்.

உயரமான மனிதன் கூறிய வார்த்தைகளை கேட்ட பணக்காரனின் மகள், உயரமான மனிதனோடு ஒரு நண்பனைப் போல் பழக ஆரம்பித்தாள். சில வாரங்களுக்குப் பிறகு உயரமான மனிதன் பணக்காரனின் மகளை பார்த்து, "என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?'' என்று கேட்டான்.

பணக்காரனின் மகளும், உயரமான மனிதனை பார்த்து பயம் ஏதும் இல்லாமல், "நாம் இப்போதுதான் நண்பர்களாக பழக ஆரம்பித்துள்ளோம். உங்களை பற்றிய முழு விவரம் எனக்கு தெரியாது. நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு திருமணத்தைப் பற்றி பேசலாம்!'' என்று கூறினாள்.

உயரமான மனிதனும், தனக்கு பணக்காரனின் மகளுடன் பேசக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் திருமணத்தைப் பற்றி பேசுவான். அவள் சாமர்த்தியமாக பேச்சை மாற்றி வேறு பேச்சு பேசுவாள்.

ஒருநாள்-

பணக்காரனின் மகள் தோட்டத்து மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த உயரமான மனிதன் அழுவதற்கான காரணம் கேட்டான்.

"நான் நீண்ட நாட்களாக என் தந்தையையும், என் சகோதரிகளையும் பார்க்கவில்லை. அவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு விரைவில் வந்து விடுகிறேன். தயவு செய்து எனக்கு அனுமதி கொடு,'' என்று கூறினாள்.

பணக்காரனின் மகள் மீது அளவுக் கதிகமான அன்பு வைத்திருந்த உயரமான மனிதன், அவள் தந்தையையும், சகோதரிகளையும் பார்த்து விட்டு திரும்ப அனுமதி அளித்தான்.

பணக்காரனின் மகளும், உயரமான மனிதன் தனக்கு அளிந்திருந்த மாய மோதிரத்தால் தந்தையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே தன் தந்தையையும், சகோதரிகளையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள். தன் தந்தையுடனும், சகோதரிகளுடனும் இன்பமாக பேசி பொழுதை போக்கிக் கொண்டிருந்ததால் உயரமான மனிதனின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை மறந்து விட்டாள். அவள் தன் மாளிகையில் இருந்து சென்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் உயரமான மனிதன், பணக்காரனின் மகளை தேடி அவள் வீட்டு ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டான்.

ஜன்னல் அருகில் நின்று கொண்டிருந்த உயரமான மனிதனை பார்த்த பணக்காரனின் மகள் சற்று கடுமையாக அவனை பார்த்து, ""நான் உன்னிடம் திரும்பி வருவதற்குள் ஏன் என்னை தேடி வந்தாய் என்று கூறி விட்டு, நான் கண்டிப்பாக உன் மாளிகைக்கு வருவேன் நீ போ,'' என்று விரட்டி விட்டாள்.

அவன் சென்ற மறுநாளே, பணக்காரனின் மகள், தன்னிடம் இருந்த மாய மோதிரத்தின் உதவியால் உயரமான மனிதனின் மாளிகைக்கு திரும்ப சென்றாள். மாளிகையின் வாசலில் உயரமான மனிதன் பணக்காரனின் மகளுக்காக சோகமாக காத்திருந்தான்.

பணக்காரரின் மகள், உயரமான மனிதனின் மெல்லிய தோற்றத்தை கண்டு, தன்னையறியாமல் கண்ணீர் விட்டாள். அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் உயரமான மனிதனின் உடம்பில் பட்டதும் அவன் உடம்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இதுவரை மிருகத்தின் தலையோடு இருந்தவன், ஒரு அழகிய ராஜகுமாரனின் உருவத்தை அடைந்து, பணக்காரனின் மகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்தான்.

ராஜகுமாரனின் உருவத்தை அடைந்த உயரமான மனிதன், பணக்காரனின் மகளை பார்த்து, ""நீ சிந்திய உண்மையான அன்பின் கண்ணீர்தான் என்னை பழைய உருவத்துக்கு மாற்றியது. நான் ஒரு நாட்டு இளவரசன். என் நாட்டில் இருந்த ஒரு சூனியக்காரி அவளது மந்திர சக்தியால் என்னை மிருக தலையும், மனித உடலும் கொண்ட ஒரு உயரமான மனிதனாக மாற்றி விட்டாள். என்னசெய்வது என்று தெரியாமல் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த நான் ஒரு நாள் ஒரு முனிவரை சந்தித்து என் சோகக் கதையை கூறினேன். முனிவரும் என் மீது இரக்கப்பட்டு, யாராவது ஒருவர் உன் மீது இரக்கப்பட்டு உன்னை அன்பாக நேசித்து, உன்னுடைய இந்த நிலைக்கு கண்ணீர் சிந்தும் போது அந்த கண்ணீர் உன் உடம்பில் பட்டால் நீ பழைய நிலைக்கு மாறி விடுவாய் என்று கூறினார்.

"முனிவர் கூறியது போல், நீ என் மீது உண்மையான அன்போடு இரக்கப்பட்டு கண்ணீர் சிந்தினாய். அந்த கண்ணீர் என் மீது பட்டு நான் என் பழைய உருவத்துக்கு மாறி இப்போது ஒரு அழகிய ராஜகுமாரனாக உன் முன்னால் நிற்கிறேன். இப்போது என்னை மணந்துக் கொள்ள சம்மதம் தானே,'' என்று கேட்டான்.

பணக்காரனின் மகள், தன் தலையை அசைத்து சம்மதத்தை தெரிவித்தாள். இளவரசன் பணக்காரனின் மகளை, தன் நாட்டுக்கு அழைத்துச் சென்று, தன் தாய் தந்தையின் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டான். பணக்காரனின் மகள் தன் கணவன் இளவரசனின் அனுமதி பெற்று, தன் தந்தையையும், சகோதரிகளையும் தன் அரண்மனையிலேயே தங்க வைத்துக் கொண்டாள். அவர்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

சிறுவர் மலர்




அழகியும் அன்பான அரக்கணும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 09, 2015 1:08 pm

நல்லா இருக்கு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Sep 09, 2015 8:21 pm

இது "beauty அண்ட் தி beast " fairy tale .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக