புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
26 Posts - 39%
prajai
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
2 Posts - 3%
Jenila
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
6 Posts - 5%
prajai
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
5 Posts - 4%
Jenila
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_m10கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Aug 25, 2015 1:03 am




கீதை 17 : இயல்பூக்க வளர்ச்சி யோகம் 0702_arjunkrishna

தவங்களின் வகைகள் மற்றும் விளைவுகள் :

1) சத்வகுண தவம்

கீதை 17 : 14 இறைவனை நோக்கி நம்மை உந்தித்தள்ளும் குருமார்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் மதிப்பளித்தல் ; இறை வழிபாடு ; தூய்மை ; எளிமை ; இறை சட்டங்களான வேதங்களை கடைபிடித்தல் ; அஹிம்சை ; இவையே சரீரத்தின் தவங்களாம்

கீதை 17 : 15 உடனடியாக கொப்பளிக்கும் வார்த்தைகளை தவிர்க்கும் நிதானம் ; முடிந்தளவுக்கு நன்மையை விளைவிப்பதும் நல்லினக்கமானதுமான இறைசித்தமான வாக்கை பேசுதல் ; எல்லா வேதங்களையும் முறையாக அப்பியாசித்து உணர்ந்து அவற்றின் மேன்மைகளை கலந்துரைடல் ; இவையே வாக்கின் தவங்களாம்

கீதை 17 : 16 எப்போதும் மனச்சமநிலை ; மன நிறைவு ; பிறர்மீது வஞ்சகம் தவிர்த்த சாந்தம் ; அமைதி ; சகல பாவ சிந்தனைகளையும் உள்ளத்திலும் சுத்தி செய்து ஆத்ம சுத்தி அடைய முயற்சித்தல் ; இவையே மனதின் தவங்களாம்

கீதை 17 : 17 பரத்தை அடையும் இலக்கில் ; பலன் விளைவில் பற்றை கலைந்த மனிதர்களால் மேற்கண்ட மூன்று தவங்களும் சிரத்தையோடு அப்பியாசிக்கப்படுவதே சத்வகுண தவங்களாகும்

இப்போது நாம் இருக்கும் நிலையில் யார் நம்மை இறைவனை நோக்கி உந்தித்தள்ளும் படி இறைவனால் பயன்படுத்தப்படுகிறார்களோ அந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு அணுக்கமாக முடிந்தளவு தொண்டு செய்தல் ; நமது தாய் தந்தை உள்ளிட்ட பெரியோர்களுக்கு மதிப்பளித்தல் ; சரீரத்தால் இறைவனுக்கு பூஜை செய்தல் ; தியானம் செய்தல் ; வேதங்களை வாசித்தல் ; உபதேசங்களை கேட்டல் ; பக்தி சுவை செறிந்த பாடல்களை கேட்டல் முதலிய வழிபாடுகளில் நேரத்தை செலவிடுதல் ; ஆடை ஆபரணங்களில் எளிமை மற்றும் தூய்மை ; பிறருக்கு முடிந்தளவு துன்பம் தராத வாழ்க்கை என்பவை உடலால் செய்யப்படும் தவங்கள் என்கிறார் ஸ்ரீகிரிஷ்ணர் . இவற்றை சரியை என்றும் சொல்வார்கள் . உடலைக்கொண்டு செய்யப்படும் இறைவழிபாடு சரியை .

சந்தர்ப்ப சூழ்நிலைகளில் உணர்வு வயப்பட்டு சட்டு சட்டென்று பேசும் படியான வார்த்தைகள் எல்லா மனிதருக்கும் கொப்பளிப்பது இயல்பு . உணர்வு வயப்பட்ட நிலையில் அவை அவசியமானதுபோல தோன்றும் . ஆனால் மனித சுய முயற்சியால் நமது நலன்களை நாமே காத்துக்கொள்ள போராடுவது என்ற தாழ்ந்த படி நிலைமை இது . கடவுளோடு இயைந்து வாழ பழகும்போது ; உடனடியாக செயல்படாது இப்பிரச்சினைகளை இறைவன் சமூகத்தில் வைத்து விட்டு அவர் செயல்படட்டும் என்று இருக்கும் போது எல்லா பிரச்சினைகளையும் இறைவன் சுமூகமாகவும் எளிமையாகவும் அதிகம் பேசாமலும் மன உளைச்சல் இல்லாமலும் யாருக்கும் நட்டம் இன்றியும் தீர்த்து வைப்பதை அனுபவத்தில் காண முடியும்
ஆரம்பத்தில் இறைவன் செயல்பாடு நமக்கு பிடிபடாதது போல தோன்றினாலும் நாம் அவருக்காக காத்திருக்க காத்திருக்க அவர் விரைவாகவே செயல்படுவது நமக்கு பிடிபடும் . அப்போது மட்டுமே அவரை உண்மையாகவே சார்ந்து வாழ நம்மால் கற்றுக்கொள்ள முடியும்

சகலரையும் போஷித்து வளர்க்கும் பிதாவானவர் எல்லோருக்கும் நன்மையாக ஒவ்வொரு காரியத்தையும் எப்படி நடத்துகிறார் என்பது பிடிபடும்போது மட்டுமே இறை சித்தத்திற்கு ஏதுவான வார்த்தைகளை மட்டும் பேசும் இயல்பும் நமக்குள்ளாக வளரும்

இவைகளில் தொடர்ந்து நிலைத்திருக்க இறைவனால் தனது வாயாக பயன்படுத்தப்பட்ட அனைத்து மத இறைமனிதர்களின் வார்த்தைகளையும் வேதங்களையும் நாம் இடைவிடாது வாசித்து வாசித்து நம்மை செழுமைப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்

எல்லா வேதங்களிலும் பகுதி பகுதியாக சூழ்நிலைக்கு ஏற்ப வெளியாகியுள்ள வேதங்களின் மேன்மைகளை நாம் உணர்ந்து அவற்றை பகிர்ந்து கொள்ளுகிற பாத்திரமாக நம்மை இறைவன் பயன்படுத்தும் நற்பேறு கிடைக்க வேண்டும் இவை மனத்தால் செய்யப்படும் தவங்களாம் . இதுவே கிரியை எனப்படுகிறது .

அன்றாட வாழ்வில் நாம் இறைவனின் பாடத்தை கற்றுக்கொள்வதும் ; இறைவன் பிறருக்கு கொடுக்கும் பாடத்திற்கு பயன்படுவதும் ஆகிய ஆன்மீக வாழ்வு ; இறை அன்பு நமக்குள் விளையும்போது எப்போதும் மனச்சமநிலை நமக்கு சித்திக்கும் . எதற்கும் பிறர்மீது வஞ்சம் இல்லாத சாந்தம் ; பேரானந்தத்தால் நிறைந்த மனம் ; அமைதி இவற்றொரு உள்மனதில் உறைந்துள்ள பாவ சிந்தனைகளையும் இனம் கண்டு அவற்றை கடந்து ஆத்ம சுத்தி அடைதல் ; இதன் மூலமாக நாளும் நாளும் பரத்தை நோக்கி உயரும் வளர்ச்சி – இவையே மனதின் தவங்களாகும் . உண்மையில் மன சுத்தியே யோகம் . ஆத்மா சுத்தியடைய சுத்தியடைய யோகம் கைகூடும் .

சரியை ; கிரியை ; யோகம் என்ற மூன்று முறையாலும் ஒரு ஆத்மா பரத்தை அடையும் இலக்கு என்பதற்காக வாழும் போது ; பலன் விளைவுகள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து விட்டு அவரால் வழங்கப்படும் மரணமில்லா பெருவாழ்வு , ஒளி சரீரம் . பரலோக அனுமதி இவற்றிற்காக உழைக்கும்போது வாழ்வே சத்வ குண வகைப்பட்ட தவமாக பரிணமிக்கிறது

ஆனால் இவ்வாறில்லாமல் ரஜோகுண வகைப்பட்ட ஆன்மீக வாழ்வும் தமோகுண வகைப்பட்ட ஆன்மீக வாழ்வும் உலகத்தில் உள்ளது

இவர்களும் இறைவனின் தொடர்பில் இருந்தாலும் பகுதி இறைவனுக்கும் பகுதி அசுரனுக்கும் இடம் கொடுத்து விட்டு வாயிலே மட்டும் இறைவன் என்று இறைவனுக்காக வாழ்வதாகவும் நம்பிக்கொள்கிறார்கள்

இவர்கள் பல பிறவிகள் எடுத்து அடி உதை பட்டு தாழ்மையடையாமல் கற்றுக்கொள்ளமாட்டார்கள் . ஆனாலும் ஆன்மீக முன்னேற்றம் என்பதை இவர்கள் ருசி பார்க்காமலேயே பல பிறவிகள் கழிந்து விட வாய்ப்பு உள்ளது

இவர்களைப்பற்றிய எச்சரிக்கையையும் ஸ்ரீகிரிஷ்ணர் அடுத்து வழங்கியுள்ளார்

2)ரஜோகுண தவம்

கீதை 17 : 18 தற்பொழிவு ; சுயதிருப்தி ; புகழ் உண்டாவதால் ஈர்க்கப்பட்டு தற்பெருமையோடு செய்யப்படும் தவங்கள் ரஜோகுணத்தில் வெளிப்படுபவையாகும் . இவற்றால் சஞ்சலங்கள் உண்டாகி தவங்கள் தடைபட்டுபோம்

யோகங்கள் செய்வதால் உடல் நிலை சீராகவும் அறிவுகூர்மையும் அடைந்து இன்னும் சிறப்பாக வாழ்வில் வெற்றிகளை ஈட்ட முடியும் என்பதை இன்று யோகா வியாபாரிகள் பிரபலபடுத்தி வருகின்றனர் . இது ஓரளவு உண்மையும் பலனும் கொடுப்பவையே . தமோகுண வகைப்பட்டு உடலின் தேவைகளுக்காக மட்டுமே சாப்பிட்டேன் தூங்கினேன் சினிமா பார்த்தேன் டாஸ்மார்க் போனேன் என வாழும் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு தன் மன நிலையை ஓரளவு கட்டுப்படுத்தி அறிவை சீர் செய்து ஒரு தரமான தன்மான வாழ்வு வாழ யோககலைகள் நிறையவே பலன் கொடுக்கின்றன . ஆனால் இவை சுயமுன்னேற்றம் ; சுய நம்பிக்கை என்பதையே சார்ந்து இருப்பதால் மனித முயற்சிக்கும் அப்பற்றபட்ட ஊழ்வினைகளை இறைவனால் மட்டுமே சரி செய்யமுடியும் என்பதை மறைக்கின்றன . இவைகள் பக்தி ; தாழ்மை என்பதை கற்றுக்கொடுக்காமல் இயற்கை மனித முயற்சி சமூக சீர் திருத்தம் என்பதாக நவீன நாத்திக வாதமாக தடம் பிரளுவதே பிரச்சினையை உருவாக்குகிறது

இந்த நவீன நாத்திகவாதிகளால் ஒருவர் ஓரளவு ஆன்ம வாழ்வில் தேரியபிறகு அவரை அவரது ஊழ்வினைகள் அழுத்துபோது அவர்கள் சஞ்சலத்தில் விழுவது தவிர்க்கமுடியாததாகிறது . அப்போது தன்னம்பிக்கை விழித்தெழு உலகை திருத்து என்பதெல்லாம் அடங்கி ஒடுங்கி விடுகிறார்கள் . அப்போது சிறிது காலம் யோககலைகள் ; தியான பயிற்சிகள் தடைபட்டு போனாலும் அவர்கள் தாழ்மையடைந்து பக்திக்குள்ளாவார்கள் . அந்த பக்தியில் ; பிரார்த்தனையில் இந்த தியான பயிற்சிகள் ஒரு புதிய பரிணாமத்தில் வெளிப்படும்

தியானப்பயிற்சி இல்லாதவர்கள் பிரார்திப்பதற்கும் ; தியானப்பயிற்சி உள்ளவர்கள் பிரார்திப்பதற்கும் நிறைய வேறுபாடுகளை இறைவன் காட்டியே வருகிறார் .

சுயநம்பிக்கை ; யோகம் மட்டுமே முக்தியை கொடுத்துவிடும் குண்டலினியை ஏத்தினால் போதும் உச்சியில் நிறுத்தினால்போதும் என்ற ரஜோகுண வகைப்பட்ட தவங்கள் ; இறைவனை கொஞ்சம் ஓரந்தள்ளியவை என்ற குறைபாட்டை தவிர அதை இறைவன் சரியான திசைக்கு கொண்டுவந்து சேர்ப்பார் என்ற ஆறுதலும் அதில் உள்ளது . ஏனென்றால் இவை தன்னை சீர்திருத்துதல் என்ற இயல்பில் தன்னை உணர்தல் என்ற பயிற்சிக்கு மிகவும் உதவியாகவும் இருப்பவை ; இவைகளைவிட மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் தவங்களும் உள்ளன ; அவையே தமோகுண வகைப்பட்ட தவங்களாகும் .

3)தமோகுண தவம்

கீதை 17 : 19 தன்னை வருத்தி ஆத்மாவை துன்புறுத்தி சித்திகளை அடையும் தவங்கள் தமோகுண வகைப்பட்டவையாம் . முட்டாள்தனமான இத்தகைய தவங்கள் தனக்கும் பிறருக்கும் அழிவையே விளைவிப்பவை .

சித்திகளை அடைய வேண்டி மிக கடும் தவங்கள் செய்யப்பட்டால் ; அவையும் சிலகாலம் சித்திக்கும் . ஆனால் அந்த சித்திகள் பலன் விரும்பி பயன்படுத்தப்படும்போது பிறருக்கு பல கேடுகள் உண்டாகி பாவத்தையே சம்பாதிக்கும் . உலக நன்மைக்காகவே பயன்படுத்துகிறேன் என்றாலும் அது எப்படியாயினும் சிலருக்கு கேடுகளை துன்பங்களை கொடுப்பதை தவிர்க்கவே முடியாது

இறைவன் சொல்லாமல் ஒரு நபருக்கு உதவுவது என்பது கூட அந்த ஆத்மாவை பக்குவப்படுத்தும் இறைவனின் நோக்கத்திற்கு நாம் இடைஞ்சல் செய்ததாக ஆகி விடும்

ஆகவேதான் இந்த சித்திகள் எதற்கும் ஆகாதவை என்பதாக ஞானிகள் சொல்கிறார்கள் . சித்திகளை விரும்பி கொடூரமான தவங்களில் ஈடுபடுவதை முட்டாள்தனமானது என்றே யுகபுருஷன் ஸ்ரீகிரிஷ்ணர் கண்டிக்கிறார் . ராஜயோகம் சித்தித்தவர்கள் கூட எவ்வளவோ சித்திகள் இருந்தும் அதை பயன்படுத்தாமல் இறைவனிடம் சரணாகதி ஒன்றையே குறிக்கோளாக வைத்து வாழ்ந்தார்கள் என்பதற்கு உதாரணங்கள் நிறைய உள்ளன .

அவர்கள் எவ்வளவோ இருந்தும் ஒன்றும் இல்லாதவர்களின் மன நிலையிலேயே இருந்தார்கள் . வள்ளலார் ; ராமகிருஷ்ண பரஹம்சர் , முகமதுநபி போன்ற எண்ணிறந்த ஞானிகள் சமீபத்திய உதாரணங்கள் . எந்த நிமிடமும் பின்னே விழுந்து பிறவிகள் நீண்டு விடுமோ ; மரணமில்லா பெரு வாழ்வு என்ற தகுதி பெற்று பரலோகத்தில் தேவதூதானாக நுழைய முடியாமல் போய் விடுமோ என கடைசி நேரம் வரையிலும் அவர்கள் இறைவனிடம் அஞ்சிக்கொண்டுதான் இருந்தார்கள் .

அப்படியில்லாமல் சித்திகளை உலகத்தில் செயல்படுத்தி விழுந்துபோனவர்களின் பட்டியல் இரண்யன் ; இராவணன் என்று நீண்டுகொண்டே உள்ளது . இப்படிப்பட்டவர்கள் மிகுந்த தமோகுணத்தில் வீழ்ந்து ; கீழான குணங்கள் நிரம்பிய நபர்களின் மத்தியில் பிறவியெடுத்து பல இடறல்களை அனுபவித்தே மீண்டும் வளரமுடியும் .

ஆகவேதான் இறை அச்சமும் ; தாழ்மையுமே மேன்மையானது என்று சகல வேதங்களும் சொல்கின்றன .

குரான் : 39:20. ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும்.

98:8. அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன்இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

தானத்தின் வகைகள் :

கீதை 17 :2௦ எது கொடுக்கத்தக்கதோ அத்தகையவை உரிய நேரத்தில் உரிய இடத்தில் உரிய நபருக்கு பிரதி பலன் எதிர்பார்க்காமல் தானமாக வழங்கப்பட்டு அது இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டால் ; அத்தகைய தானங்கள் சத்வகுணமுள்ள தானமாக கருதப்படும்

கீதை எதைச்செய்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணம் என்ற மன நிலையிலேயே செய்ய வேண்டும் என திரும்ப திரும்ப வற்புருத்துகிறது .

குரானும் கூட மாஷா அல்லா – எல்லா புகழும் இறைவனுக்கே என்று மொழிகிறது . அல்லாஹு அக்பர் – இறைவனே மிகப்பெரியவன் என்று புகழ் பாடுகிறது .

இந்த வார்த்தைகள் ஸ்டைலாக நுனி நாக்கில் உச்சரிக்கத்தக்கதல்ல . அது உள்ளார்ந்து இதயத்திலிருந்து விளைந்து வரவேண்டும்

ஏசாயா 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது..

எதையும் ஒரு ஸ்டைலாக நுனி நாக்கில் உச்சரித்து விட்டு அதற்காக பெருமையும் பாராட்டிக்கொள்கிற பழக்கம் மனிதர்களுக்கு நிறையவே உள்ளது . ஒவ்வொரு மார்க்கத்தாரும் இப்படி ஏதாவது ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் .

இதை உருவாக்கிய ஞானிகள் இப்படி பல முறை வாயிலாவது சொல்லும்போது கொஞ்சம் சொரணை வந்து அதை கடைப்பிடித்து விட மாட்டார்களா என்றுதான் அவைகளை உருவாக்குகிறார்கள்

ஆனாலும் இறைவனது ஆதங்கம் வாயினாலும் உதடுகளினாலும் கனம் பண்ணும் அளவு உள்ளார்ந்து இதயத்தில் பலர் இறைவனை கனம் பண்ணுவது இல்லை என்பதுதான் .

அப்படித்தான் இந்த தானங்கள் ; தொண்டுகள் ; இறைபணி ; ஊழியங்கள் எல்லாமே இருக்கின்றன . அவைகள் பல தினுஷுகளில் பல ரகங்களில் பூமியில் இருக்கின்றன . இறைவனுக்காக என்று ஆரம்பித்து செய்கையில் அவை அர்ப்பணம் என்பதற்கு பதிலாக பிழைப்புவாதங்கலாக மாறிவிடுகின்றன . இத்தகைய திசை திருப்புதல்களில் அசுர ஆவிகளின் கைங்கர்யம் நிறையவே இருக்கிறது

வெளியே இருந்து எதிர்க்கும் எதிரியைக்காட்டிலும் உள்ளிருந்து ஒத்துப்பாடி திசை திருப்பும் வேலை அதிக பலன் கொடுப்பது என்பது அசுரர்களுக்கு நன்றாகவே தெரியும்

இறைவனது வார்த்தைகளில் மெல்ல தங்கள் வார்த்தைகளை கலப்பதை அசுரர்கள் காலம்காலமாக செய்து அவைகளை கலக்கி குழப்பி விடுகிறார்கள் . குரானையும் கூட தங்கள் நாவுகளை கொஞ்சம் சுழற்றி ஓதி நீட்டி குறைத்து ஓதி அவைகளின் அர்த்தத்தை மாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு குரானிலேயே உள்ளது

சர்வ வல்லமை உள்ள இறைவன் யாரை எப்போது திருத்துவது என்பதை நன்றாகவே அறிவார் . ஆனால் இறைவனையும் அவனது மார்க்கத்தையும் காக்க பிற மனிதர்களின் மீது பலாத்காரத்தை பிரயோகப்படுத்துகிறேன் ; ஆயுதம் ஏந்துகிறேன் என்பது இறைவனை மனிதர்கள் காப்பாற்ற வேண்டிய அளவு கையாலாகதவர் என்பதாகும்

இறைவனை சார்ந்து வாழ்வது என்பது வேறு இறைவனுக்காக நான் இதை செய்கிறேன் அதனால் இறைவன் சொர்க்கத்தை எனக்கு கொடுப்பார் என பலன் எதிர்பார்ப்பது என்பது வேறு ,

ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்கிறது தமிழ் முதுமொழி

இறைவன் எனக்கு சொரக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்த்து இறைவனுக்கும் தொண்டு செய்யாதே ; நிச்சயம் அது தவறாகவே முடியும்

இறைவனை சார்ந்து அவருக்கு பயந்து வாழ்வதும் எதை செய்தாலும் அதை அர்ப்பணம் என்று செய்வதும் மட்டுமே சரியானதாகும் யுக புருஷன் இயேசுவின் வார்த்தைகளை கேளுங்கள் :

மத்தேயு 6
1. மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

2. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;

4. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

ஆனால் அப்படியில்லாமல் பலன் எதிர்பார்த்து பிரபலப்படுத்திக்கொண்டோ அல்லது பிரபலம் இல்லாமலும் கூட தர்மங்கள் ; தொண்டுகள் ; இறைபணிகள் பல செய்யப்படுகின்றன . இவை சுயம் என்ற ரஜோகுணத்தின் வெளிப்பாடுகளே ஆகும்

கீதை 17 :21 எந்த விதமான பிரதி உபகாரத்தை எதிர்பார்த்தோ அல்லது திரும்ப பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலோ செய்யப்படும் தானங்கள் ரஜோகுண தானங்கள் எனப்படுகின்றன .

எல்லா வேதங்களும் இறைவனுக்கு அடியவனாக மாறுவதே முக்தி அல்லது முழுமை என்கின்றன . அந்த அடியவனாகுதல் என்பது சகலவற்றையும் கடந்து அவர் கரத்தில் ஒரு கருவியாக மட்டுமே இருக்கும் ஒரு நிலை . சும்மாயிரு என்பதுவே உபதேசம் . செயலில் செயலின்மையையும் ; செயலின்மையில் செயலையும் அடைகிறவனே முழுமை எய்தியவன் . மன சமநிலை எய்தி இறைவன் கரத்தில் கருவியாக இருக்க அவனால் மட்டுமே முடியும் .

இவைகளுக்கு அப்பாற்பட்டு உலக மாந்தர்களால் குடி கூத்துகளிலும் அற்ப சந்தோசம் ; அடிமைகள் அல்லக்கைகளை உருவாக்க ஊக்குவிக்க தானங்கள் பல செய்யப்படுகின்றன . இவைகள் தரம் தாழ்ந்த தானங்கள் ஆகும்

கீதை 17 :22 தூய்மை அற்ற இடங்களில் ; தூய்மை அற்ற செயல்களில் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக மனிதர்களை நடத்தி கொடுக்கப்படும் தானங்கள் தமோகுண வகைப்பட்டவையாம் .

நவீன நாத்திகவாதம் நீடித்த பலன் தராது

கீதை 17 :23 ஓம் தத் சத் என்ற நித்தியமான வார்த்தை மூன்று வகையில் உணரப்படவேண்டும் .அது ஞானிகளாலும் யோகிகளாலும் பூசாரிகளாலும் பூசைகளின் போதும் வேள்விகளின் போதும் தவங்களின் போதும் வேதமந்திரங்கள் உச்சரிக்கும் முன்பு கடவுளை குறிக்க ஆதியில் பயன்படுத்தப்பட்டு வந்தது

ஸ்ரீகிரிஷ்ணர் ஆதி வழக்கத்தை – ஆதி இசுலாத்தை ஞாபகப்படுத்துகிறார் . எந்த ஆன்மீக பணிக்கு முன்பும் கடவுளை குறிக்க ஓம் தத் சத் என்ற வாசகம் உச்சரிக்கப்படவேண்டும் .
அது மூன்று அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படவேண்டும்

ஓம் – ஓரிறைவனையே துதிக்கிறோம்
தத் – அவரே
சத் – என்றென்றும் நித்தியமானவர்

ஓம் – ஓரிறைவனையே துதிக்கிறோம்
தத் – அவரே
சத் – எங்கெங்கும் நிறைந்திருப்பவர்

ஓம் – ஓரிறைவனையே துதிக்கிறோம்
தத் – அவரே
சத் – உனக்குள்ளும் இருப்பவர்

இப்படி மூன்று விதமாக உச்சரிக்கப்பட்டே சகல உபன்யாசங்களையும் யாகங்களையும் பூசைகளையும் செய்விக்கப்படவேண்டும் என்ற ஆதி வழக்கம் காலப்போக்கில் மறைந்து விட்டது

கீதை 17 :24 ஆனாலும் உண்மையை உணர்ந்த ஆன்மீகிகள் கடவுளை அடைய யாகம் ; தானம் ; தவம் ; அன்றாட செயல்களை மேற்கொள்ளும்போது சாஸ்திர விதிகளுக்கு ஏற்ப ஓம் தத் சத் என்றே துவங்குவர் .

எப்பணியை செய்தாலும் ஓம் – ஓரிறைவனையே துதிக்கிறோம் என்று அருவ ஏக இறைவனை துதித்தே தொடரவேண்டும் . அந்த கடவுள் இவர்தான் அவர்தான் என்று சிற்றறிவை கொண்டு தர்க்கம் செய்யலாகாது .

கீதை 17 :25 இப்படி பரிபூர்ணத்துடன் ஒத்திசையும் மனதுடன் யாகம் ; தவம் ; செயல்கள் செய்து பலனை கடவுளுக்கே அர்ப்பணம் செய்துவிட்டால் நமது பல்வகையான செயல்களும் நம்மை உன்னதத்தை நோக்கி உயர்த்தும் .

கீதை 17 :26 சத் என்னும் சத்தம் பிரயோகப்படுத்தப்பட்டு பரத்தைப்பற்றிய உணர்வுடன் செயல்கள் செய்யப்படுவதால் பக்தர்களின் இயல்பில் பரமனின் இயல்பு பிரயோகமாகும் . இதனால் பார்த்தா அச்செயல்கள் பரத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாக பரிணமிக்கும்

கீதை 17 :27 இவ்வாறு கடவுளின் உணர்வில் நிலைத்து செய்யப்படும் யாகங்களும் ; யோகங்களும் ; தானங்களும் அனைத்து கர்மங்களும் கடவுளால் செய்யப்பட்டதாகவே கருதப்படும் .

கீதை 17 :28 கடவுளின் மீது நிலைக்காமல் அர்ப்பணிக்கப்படும் யாகப்பொருட்களாலும் ; நோர்க்கப்படும் யோகாப்பியாசங்களாலும் ; அசத் எனப்பட்ட நிலையற்றவைகளே விளையும் . அவைகளால் பூமிக்குரிய பலன்கள் சில கிடைக்குமே அன்றி பரத்தை அடைய பலன் கொடுக்காது .

இன்றைக்கு நாத்திகவாதம் எடுபடாமல் போய்விட்டது . அதை பிரபலப்படுத்தியோர் தங்களின் பிழைப்புவாதம் சுயநலம் விளம்பரம் ஆடம்பரத்தால் கேவலப்பட்டு இழிவு பட்டு விட்டனர்

அதனால் தங்களின் அறிவை ; சுயத்தை மெச்சிக்கொள்ளும் அறிவுஜீவிகளான நாத்திகவாதிகள் நாத்திகம் என்று தங்களை காட்டிக்கொள்வதை மறைத்து ஆன்மீகவாதிகளாக காட்டிக்கொள்ளும் ஒரு ஆன்மீகத்தை கண்டுபிடித்து விட்டனர் .

அதற்கு அவர்களுக்கு கிடைத்த ஒரு கூடாரம் சித்தர்கள் நெறி . சித்தர்களில் பாதிக்கு பாதி பக்தியும் மறுமையையும் பரப்பியவர்கள் . மரணமில்லாபெருவாழ்வு ஒளி சரீரம் அடைய இறைவனை நாடியவர்கள் . பாதி கடவுள் நம்பிக்கையை ஒதுக்கி சாதகம் செய்தால் நாமும் கடவுளாகலாம் என்றவர்கள்

கடவுளை புறக்கணித்து யோகம் செய்தால் போதும் குண்டலினியை ஏற்றி இறக்கினால்போதும் சித்து செய்தால் போதும் வைத்தியம் மூலிகை காயகல்பம் முப்பு என்றலைந்து அதிகபட்சம் பூமியில் ஜீவசமாதியடைந்து உலகை இவர்கள்தான் கட்டிக்காப்பதாக அலட்டிக்கொள்ளும் ஒரு கூட்டம் இன்று பெருத்து விட்டது . பெரிய பெரிய யோகா வியாபாரிகள் வந்து அறிவை நம்பு யோகம் செய் உலகில் சிறப்பாக வாழலாம் என்று சக்கை போடு போடுகின்றனர்

உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை புறப்படவேண்டிய தமிழ் சமூகத்தை இந்த நவீனநாத்திகவாதிகள் ஆன்மீக போர்வையில் வளர விடாமல் தடுத்துக்கொண்டுள்ளனர் .

கடவுள் நம்பிக்கையும் பக்தியும் இல்லாத யோகாப்பியாசங்களால் உடலையும் மனதையும் சீர் செய்து பூமியில் கொஞ்சம் லெகுவாக வாழலாமே ஒழிய நிலையான பலன் நிம்மதி வரவே வராது .

பக்தியால் கீழ்படிதலும் கடவுளின் மீது நிலைத்த உணர்வுடன் அவனுக்கு அர்ப்பணமாக செயல்கள் அனைத்தையும் செய்கிற மனநிலையோடு யோகாப்பியசத்தையும் தியானத்தையும் பிரார்த்தனையையும் கடைபிடிக்கிறவனே முழுமை அடைவான் ; பரத்தை அடைவான் .

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக