புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஜூலை

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 29, 2015 11:14 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 ArMXjrehTpO6qYc6jQh1+July-0

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2015 5:38 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 QVBlXFewT2y7fB5UAuX2+July-5

1954 – ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் , ஜூலை 5, 1954, ஆந்திர மாநில சட்டம் , 1953 ன் படி, இந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீதி இருக்கை மாநிலத் தலைநகரான ஐதராபாத்தில் , ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையாக 39 பேர்களுடன் செயல்படுகின்றது.

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2015 5:41 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 NbhSggZnQIWgjMJ4bURU+July-6

1935 - சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் முரசு சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையாகும். இது 1935 ஆம் ஆண்டு ஜூலை 6 இல் தமிழவேள் கோ. சாரங்கபாணியால் ஆரம்பிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் 16 பத்திரிகைகளில் இதுவும் ஒன்று. ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது ஆகப்பழமையான பத்திரிகை இது.

குடும்பப் பத்திரிகையாக இருந்த தமிழ் முரசை சிங்கப்பூரின் அனைத்து மொழி நாளிதழ்களையும் வெளியிடும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் 1995 ஆம் ஆண்டில் ஏற்று நடத்த முன் வந்தது.

தமிழ் முரசு இந்திய சமூகத்தைப் பற்றிய செய்திகளை வழங்கி வருகின்றது. இது மாத்திரம் அன்றி பல விடயங்களை உள்ளூர் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுக்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை பிரசுரிக்கப் படுகின்றன. இப்பத்திரிகையானது சிங்கப்பூர்த் தமிழ் சமூகத்தின் குரலாகத் திகழ்கின்றது.

உள்ளூர்ச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுச்செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை தமிழ் முரசில் வெளியிடப்படுகின்றன. மேலும் உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளூர் எழுத்தாளர்களின் கவிதைகளும் கதைகளும் ஞாயிறுதோறும் தமிழ் முரசில் வெளியிடப்படுகிறது. திங்கட்கிழமைகளில் மாணவர்களுக்காக மாணவர் முரசு வெளியிடப்படுகிறது. மாணவர் முரசில் தொடக்கப்பள்ளி முதல் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் வரை தங்கள் கட்டுரைகளைப் படைப்பர். வியாழக்கிழமைகளில் இளையர்களுக்கென இளையர் முரசு வெளியிடப்படுகிறது. இந்தப் பக்கத்தில் இளையர்களின் சாதனைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்ற செய்திகளைக் காணலாம். மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தமிழ்த் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதை இலக்காகக் கொண்டு நாள்தோறும் தமிழ்ப் பயிற்சிப் பாடங்கள் வெளியிடப்படுகிறது.

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2015 5:52 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 LicyGs6qToCbIfTITZow+July-7

1978 - சொலமன் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

சொலமன் தீவுகள் (Solomon Islands) மெலனீசியாவில் பப்புவா நியூ கினிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 28,400 சதுர கிமீ (10,965 சதுர மைல்) ஆகும். இதன் தலைநகர் ஹொனியோரா குவாடல்கனால் தீவில் உள்ளது.

சொலமன் தீவுகளில் மெலெனீசிய மக்கள் பல்லாரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறியதாக நம்பப்படுகிறது. 1890களில் ஐக்கிய இராச்சியம் இத்தீவுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தது. இரண்டாம் உலகப் போரின் போது 1942-1945 காலப்பகுதியில் இங்கு குவாடல்கனால் போர் உட்படப் பல குறிப்பிடத்தக்க சமர்கள் இடம்பெற்றன. 1976 இல் இங்கு தன்னாட்சி நிறுவப்பட்டு இரண்டாண்டுகளின் பின்னர் விடுதலை பெற்றது.

வடக்கு சொலமன் தீவுகள் இரு பகுதிகளாக ஒன்று விடுதலை பெற்ற சொலமன் தீவுகள், மற்றையது பப்புவா நியூ கினியின் பூகன்வீல் மாகாணம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2015 5:55 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 CmegBEQTSOisYyyN7hdi+July-8

1497 - வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.

1483 இல், டீகோ காவோ போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ் ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. ஒரு கதைப் படி, ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். (அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில்). பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அந்த பொறுப்பு வாஸ்கோ ட காமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நன்நம்பிக்கை முனையை 1497 இல் அடைந்தார் வாஸ்கோ ட காமா. பின்னர் அங்கிருந்து, ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைந்தார்.

மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் அறிவுச்சுரங்கமாக - அதன் வணிகக் காற்றையும், அதன் வீச்சையும் நன்கறிந்த மாலுமியான அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெறுகிறார் வாஸ்கோடகாமா. 1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு துரிதம் சாத்தியமாயிற்று.வாஸ்கோடகாமா 1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இந்தியாவில் உள்ள கோழிக்கூடு என்ற பகுதியினை வந்தடைந்தார். கோழிக்கூடு பகுதியினை ஆண்ட சாமரின் மன்னர் அவரை வரவேற்றார். வாஸ்கோடகாமா அவரிடம் சில சலுகைகளைப் பெற்றார். வாஸ்கோடகாமா இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். அவர் திரும்பிச்செல்கையில் பல விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு சென்றார். இதனால் கவரப்பட்ட மற்ற ஐரோப்பிய வணிகர்கள் இந்தியா வர விரும்பினர். வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர் திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. வாஸ்கோடகாமா 1501-ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக இந்தியா வந்தார். அப்போது இந்தியாவில் கண்ணனூர் என்ற இடத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தலம் ஒன்றை நிறுவினார். இப்படியாக, இந்தியாவிற்கான இன்னொரு மார்கத்தினை சாத்தியப்படுத்திக் காட்டினார் காமா.

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 6:02 pm

pending clearance ஆ ?
ஆடி கழிவா !!
லீவ் லெட்டெர் கொடுப்பதில்லையா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2015 6:21 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 20, 2015 9:24 pm

வாவ் ! சூப்பர் விமந்தனி.................உடல் நலம் தேவலாமா? புன்னகை ....மெள்ள படிக்கிறேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2015 10:29 pm

..மெள்ள படிக்கிறேன் !
-
சரி...மெல்ல படியுங்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2015 10:54 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 Ol0V7E6RNlrtNpmjt0aA+July-9

1816 - ஆர்ஜென்டீனா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

அர்கெந்தீனா அல்லது அர்ஜெந்தீனா (அர்ஜென்டினா, Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன.

இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது.

எசுப்பானிய மொழி நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, ஐக்கிய நாடுகள் அவை, "மெர்கோசுர்" எனப்படும் தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம், ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு, உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் 15 நாடுகள் குழு (ஜி-15), 20 முக்கிய பொருளாதாரங்கள் குழு ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேச வல்லரசும், இடைத்தர வல்லரசுமான ஆர்கெந்தீனா, இலத்தீன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம்.[9] மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது.

இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், மிகக்கூடிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர வளரும் பொருளாதாரம் என வகைப்படுத்துகின்றனர்.

"ஆர்கெந்தீனா" என்னும் சொல், வெள்ளி என்னும் பொருள் தரும் ஆர்கென்டும் (argentum) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. லா பிளாட்டா வடிநிலம் எனப்படும் இப்பகுதியில் வெள்ளிக்கான மூலங்கள் எதுவும் கிடையா. ஆனால், இங்கே வெள்ளி மலை உள்ளது என்னும் வதந்தியை நம்பியே முதன் முதலில் எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இவ்வதந்தியே இப்பெயர் ஏற்படக் காரணமாயிற்று.

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2015 10:58 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 LpdsM9q7QRWmVOUPMeJe+July-10

1806 - வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.

1805 இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்திய துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளஙளை போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணயிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியை போட்டு அதில் தோல் பட்டையை போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்த கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது. இதற்கிடையில், வேலூரில் சிறை வைக்கப் பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் துருப்புக்களுக்கு ஆரவாரம் கொடுத்து தூண்டி விட்டதாக சொல்லப் படுகிறது.

10-7-1806 அதிகாலையில் பல ஆங்லேய அதிகாரிகள் அவர்கள் படுக்கையில் கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில், 100 பேர் கொல்லப் பட்டனர். ஆனால் இந்த கலகம் அரசியல், ராணுவ குறிக்கோள்களுடன் எழவில்லை. அதனால், இந்திய துருப்புக்களை, அதிகாரிகளை கொன்று களித்து வந்தனர். அவர்கள் வேலூர் கோட்டையின் கதவைக் கூட மூடவில்லை. இரண்டு நாட்களில், ஆர்காட்டிலிருந்த 19ம் சிறிய குதிரைப் படை (19த் லைட் ட்ரகூன்ஸ்) வேலூர் நோக்கி பாய்ந்து, வேலூர் கோட்டையை கைப்பற்றியது. அந்த சண்டையில் 350 துருப்புகள் உயிர் துறந்தன; அந்த அளவு காயமடைந்தனர். மற்ற இந்திய துருப்புக்களும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்ட துருப்புகள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப் பட்டு, பீரங்கி சுட்டு, கொல்லப் பட்டனர்.

இக்கலகம், 1857 பெரும் கலகத்திற்க்கு முன்னோடியாகும். இந்நிகழ்வின் ஞாபகமாக, இந்திய அரசு ஜூலை 2006ல், அஞ்சல் தலை வெளியிட்டது.

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக