புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம குலதெய்வம்


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 10:24 am

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம்

குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.


நம்ம குலதெய்வம் - Page 2 ZY2OAceRhVkPZGSxlVjg+659px-isakki

காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 23, 2015 2:10 pm

மிக சரியாக உள்ளது என் ராசி படி ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 2:18 pm

ராஜா wrote:
சரவணன் wrote:உங்க குல தெய்வம் பேரு சொல்லுங்க ராஜா அண்ணா! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147200
அரியலூர் / பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயல்பாடி என்ற சிற்றூரில் உள்ள
"வைகைக்கரை ஆண்டவர் - அய்யனார் " , "பச்சையம்மாள்" "கருப்பு" இவர்கள் தான் எங்கள் குலதெய்வங்கள் புன்னகை
எங்க மாமா குல தெய்வம் கங்கை கொண்ட சோழபுரம் பாப்பாத்தி அம்மன், சலப்பை என்ற ஊரில் உள்ளது, உங்களுக்கும் அதுவா இருக்கும்னு கேட்டேன்.. புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 2:27 pm

ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:குலதெய்வம் அறியாதவர்கள் இப்படி செய்யலாம் என்று கூறுகிறார்கள்..

குலதெய்வத்தை கண்டுபிடிக்க,
மேற்கோள் செய்த பதிவு: 1147195

அருமை அருமை தமிழ்நேசன் , இந்த தகவல்கள் எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள்.

எனது நண்பர்கள் சிலர் குலதெய்வம் யாரென்று தெரியாமல் திருப்பதி வேங்கடஜலபதியை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1147198

குலதெய்வம் என்று கூகுளில் தேடியபோது கிடைத்த தகவல்கள்தான் அண்ணா.. குலதெய்வம் அறியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடலாம் என்றும் கூறுகிறார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 2:30 pm

தமிழ்நேசன்1981 wrote:
ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:குலதெய்வம் அறியாதவர்கள் இப்படி செய்யலாம் என்று கூறுகிறார்கள்..

குலதெய்வத்தை கண்டுபிடிக்க,
மேற்கோள் செய்த பதிவு: 1147195

அருமை அருமை தமிழ்நேசன் , இந்த தகவல்கள் எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள்.

எனது நண்பர்கள் சிலர் குலதெய்வம் யாரென்று தெரியாமல் திருப்பதி வேங்கடஜலபதியை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1147198

குலதெய்வம் என்று கூகுளில் தேடியபோது கிடைத்த தகவல்கள்தான் அண்ணா.. குலதெய்வம் அறியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடலாம் என்றும் கூறுகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1147209

நன்றி தமிழ்நேசன் ,

நீங்கள் கூறியமுறைகள் குலதெய்வம் யாரென்று தெரிந்தவர்கள் கூட வருடம் ஒருமுறையோ அல்லது புதுவீடு / வாடகை வீடு மாறும்போது கூட செய்யலாம் போல இருக்கு அவ்வளவு அருமையான முறை.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 2:37 pm

மற்றும் ஒரு குலதெய்வம் பற்றிய கட்டுரை...

குலதெய்வம் – குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர்.  தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வ அருள் இல்லாமல் நமது வாழ்க்கையில் ஒரு நொடி கூட வாழ இயலாது.  எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.

குலதெய்வம் என்பது நமது குலத்தில் அதாவது பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வரும் தெய்வம் ஆகும்.  இத்தகைய தெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும்.  மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.  குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.  ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது.  சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.  எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள்.  அவ்வாறு செய்வது தவறில்லை.  குலதெய்வ வழிபாடு செய்யும் பலர் வேறொரு தெய்வத்தையோ அல்லது தெய்வங்களையோ வழிபாடு செய்வார்கள்.  அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது.  அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும்.  இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார்.  மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.  மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு.  அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.  எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.  குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.  யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது.  அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி.  ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்து விடும்.  தங்களுக்கு வசதியான நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்.  இது மிகவும் தவறு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  குலம் தெரியாமல் கூட இருக்கலாம்.  ஆனால் குலதெய்வம் தெரியாமல் ஒருவர் இருக்கக்கூடாது.  குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.  குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

ஆனால் தற்காலத்தில் இத்தகைய கூட்டு வழிபாடு குறைந்து போய் விட்டது.  மக்களும் அவரவர் சொந்த பந்தங்கள் மற்றும் பூர்வீக வசிப்பிடத்தினை விட்டு புலம் பெயர்ந்து போய்விட்டார்கள்.  பலர் தங்களின் செல்வ செழிப்பில் குலதெய்வத்தினை மறந்து விட்டார்கள்.  விளைவு வாழ்க்கையில் கண்டங்கள் மற்றும் கஷ்டங்கள்.  அது மட்டுமல்லாமல் குலமே தழைக்காமல் போனதும் உண்டு.

எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று.  உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள்.  ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.

குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும்.  அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும்.  காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.  இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.

குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்

மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.  இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார்.  யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம்  அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.

மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும்.  அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.  அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 2:38 pm

சரவணன் wrote:
ராஜா wrote:
சரவணன் wrote:உங்க குல தெய்வம் பேரு சொல்லுங்க ராஜா அண்ணா! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147200
அரியலூர் / பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயல்பாடி என்ற சிற்றூரில் உள்ள
"வைகைக்கரை ஆண்டவர் - அய்யனார் " , "பச்சையம்மாள்" "கருப்பு" இவர்கள் தான் எங்கள் குலதெய்வங்கள் புன்னகை
எங்க மாமா குல தெய்வம் கங்கை கொண்ட சோழபுரம் பாப்பாத்தி அம்மன், சலப்பை என்ற ஊரில் உள்ளது, உங்களுக்கும் அதுவா இருக்கும்னு கேட்டேன்.. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147208

அந்தபக்கம் தான் நமக்கு நிறைய புன்னகை கோவில்கள் இருக்கு.

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 2:42 pm

நல்ல பதிவு

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 2:55 pm

ராஜா wrote:
அந்தபக்கம் தான் நமக்கு நிறைய புன்னகை கோவில்கள் இருக்கு.

உங்க ஊர்ல உள்ளவங்களுக்கு நிறைய பேருக்கு அந்த பக்கம் தான் பூர்வீகம்.....
எல்லாரும் தேங்கா மாங்காய திறடி அடி வாங்கிட்டு ஊற விட்டு வந்துருக்கீங்க...... அய்யோ, நான் இல்லை .....சிப்பு வருது

எங்க குல தெய்வம் எங்க ஊர்லே இருக்குப்பா! ரிலாக்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 3:00 pm

சரவணன் wrote:
ராஜா wrote:
அந்தபக்கம் தான் நமக்கு நிறைய புன்னகை கோவில்கள் இருக்கு.

உங்க ஊர்ல உள்ளவங்களுக்கு நிறைய பேருக்கு அந்த பக்கம் தான் பூர்வீகம்.....
எல்லாரும் தேங்கா மாங்காய திறடி அடி வாங்கிட்டு ஊற விட்டு வந்துருக்கீங்க...... அய்யோ, நான் இல்லை .....சிப்பு வருது

எங்க குல தெய்வம் எங்க ஊர்லே இருக்குப்பா! ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1147218ஹா ஹா ஹா

எங்கள போல நல்லவங்க பல இடங்களிலும் பரவி இருந்தால் தான் நாடு நல்லா இருக்கும்னு எங்கள எல்லா ஊருக்கும் அனுப்பி வச்சாங்க புன்னகை


ஆமா உங்களை எல்லாம் ஏன் ஒரே ஊருல அடிச்சு வச்சுருக்காங்க தம்பி சிரி சிரி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 3:03 pm

கெட்டு நாசமா போனது எங்க ஊரா மட்டும் இருக்கட்டும், மத்த ஊராச்சும் நல்ல இருக்கனும்னுதான்.. புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக