புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
53 Posts - 41%
heezulia
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
304 Posts - 50%
heezulia
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் செய்திகள்


   
   

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:16 pm

First topic message reminder :

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

தமிழக அரசியல் செய்திகள் - Page 8 201505192025138979_traffic-ramaswamy-challenge-jayalalitha-acquittal_SECVPF
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.

அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 22, 2023 11:19 pm

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத் துறை இருக்காது - மாநிலத் தலைவர் அண்ணாமலை



சென்னை: தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை என்ற ஒரு துறையே இருக்காது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைத் துறையை கண்டித்தும், கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க கோரியும் தமிழக பாஜகவின் ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் எம்.நாச்சியப்பன் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மாலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத்தை முடித்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

பக்தர்கள் காணிக்கையாக போடும் உண்டியல் பணத்தை எடுத்து அதிகாரிகளின் உணவு செலவுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல, பல்வேறு பணிகளுக்கு அரசு செலவு செய்யாமல், கோயில் உண்டியல் பணத்தை எடுத்து செலவு செய்துள்ளனர்.

கோயில் பணம் சரியாக செலவு செய்யப்படுகிறதா என்பதற்காக தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால், தணிக்கை செய்வதற்கான செலவையே அதிகமாக பெற்றுள்ளனர். அந்தவகையில் 2018-19-ம் ஆண்டில் அரசு கோயில்களில் தணிக்கை செய்தததற்காக ரூ.19 கோடியும், 2019-20-ல் ரூ.20 கோடியும், 2020-21-ல் ரூ.21 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு தணிக்கை செலவு என கோயில்களின் இருந்து 2018-19-ல் ரூ.92 கோடி, 2019-20-ல் ரூ.87 கோடி, 2020-21-ல் ரூ.70 கோடி பெற்றுள்ளது. தணிக்கைக்கு ஆன செலவை விட 4 மடங்கு அதிகமான பணத்தை கோயில்களில் இருந்து எடுத்துள்ளனர்.

தமிழகத்துக்கு தேவையில்லாத ஒரு துறையாக இந்து சமய அறநிலையத் துறை உள்ளது. தமிழக கோயில்களில் இருந்து ரூ.1,000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். ஆனால், வெறும் ரூ.100 கோடி அளவில் தான் தமிழக அரசு வருமானத்தை காட்டுகிறது. இதற்கு ஒரே முடிவு கோயில்களின் நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும்.

பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை தேவையில்லை என்பது எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும். தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள், கோயில் சம்பந்தப்பட்ட பொருட்கள் மட்டும் 50 ஆயிரத்தை தாண்டும் என 1989-ல் யுனெஸ்கோ கூறியது. தற்போது வரை தமிழகம் மீட்டெடுத்த சிலை மற்றும் பொருட்கள் வெறும் 241 மட்டும் தான். மோடி ஆட்சியில் மட்டும் 228 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 முறை ஆட்சியில் இருந்த திமுக ஒரு சிலையையாவது மீட்டு கொண்டுவந்ததற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 22, 2023 11:22 pm

தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த எந்தவொரு திட்டத்தையும் திமுக இதுவரை செயல்படுத்தவில்லை: செல்லூர் ராஜூ பேச்சு



#திமுக விடியல் ஆட்சி தருகிறேன் என்று சொல்லிவிட்டு விடியா ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. வாக்குறுதி கொடுத்த பென்ஷன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. வாக்களித்த மக்களுக்கு பரிசாக மின்சார கட்டண உயர்வை தந்துள்ளது என மதுரை மீனாம்பள்புரம் பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பொதுக்கூட்டத்தில் #செல்லூர்_ராஜூ பேச்சு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். மடிக்கணினி, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொடுத்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக நிகழ்த்தினார் ஜெயலலிதா.

மதுரை இன்று வளர்ந்த மாவட்டமாக இருப்பதற்கு காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள். அதை திறன்பட செய்து காட்டியவர் முன்னாள் முதல்வர் #எடப்பாடி_பழனிச்சாமி.

வெறும் செல்லூர் ராஜூ என்னும் என்னை உலகறிய செய்தவர் முன்னாள் முதல்வர் #ஜெயலலிதா. என்னை பெற்றெடுத்தாத தாய் அவர்.

கூட்டுறவுத் துறையை என்னிடம் ஒப்படைத்த பொழுது சேவை செய்ய வேண்டும், ஏழை எளிய மக்களுக்கான துறை இந்த துறை என்று சொல்லிக் கொடுத்தார். இதுவரை நான் மக்களுக்காக மட்டுமே பாடுபட்டுள்ளேன். கடுகளவு கூட எவனிடமும் நான் கை நீட்டியது கிடையாது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு என எந்தவித திட்டங்களையும் கொண்டு வளரவில்லை. நம்முடைய திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறார் #ஸ்டாலின்.

இங்கே இருக்கும் இரு அமைச்சர்களும் எந்தவித திட்டங்களையும் கொண்டு வரவில்லை மதுரை மக்களுக்கு என தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த ஆயிரம் ரூபாய் பென்ஷன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் திமுக இதுவரை செயல்படுத்தவில்லை.

விடியல் ஆட்சி தருகிறேன் என சொல்லிவிட்டு ஸ்டாலின் விடியா ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். மின்சார கட்டணத்தை பல மடங்கி உயர்த்தி சாதனை படைத்துள்ளது திமுக என தெரிவித்தார்.



தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 22, 2023 11:24 pm

''அரசியல்வாதி போன்று செயல்படுவதை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்க்கவேண்டும்'': திருச்சி சிவா



#திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில், ‘அரசியலமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும்‘ எனும் தலைப்பில் சட்டத்துறை கருத்தரங்கம் மதுரையில் இன்று நடைபெற்றது. இதற்கு, திமுக சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ எம்பி தலைமை வகித்தார். இதில், பேசிய ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி, "விக்டோரியா மகாராணி ஆட்சி செய்த காலத்தில் அவர்களது ஏஜெண்டுகளாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். #ஆளுநர் நாட்டுக்கு தேவையா என்பது இப்போது புதிது அல்ல. ஆளுநர்கள் நியமிக்கப்பட்டது முதலே இந்த விவாதம் இருக்கிறது. பிரிட்டிஷ் கால நடை முறையை ஏன் தொடரவேண்டும் என பலரும் அப்போதே எதிர்த்துள்ளனர். இதையடுத்தே, ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்ற வரையறைகளுடன் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். எனவே, ஆளுநர், மாநில அரசின் நிர்வாகத்தையொட்டி செயல்படவேண்டும்" என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய #திருச்சி_சிவா, "தற்போதைய சூழலில் இது போன்ற கருத்தரங்கம் அவசியம். நாடு இக்கட்டான நிலையை சந்திக்கும்போது முன்னணியில் நிற்பவர்கள் வழக்கறிஞர்கள். தமிழ்நாடு ஆளுநரில் அண்மைக்கால செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் இதுபோன்ற நிலை தொடர்கிறது. இது ஏற்புடையதல்ல. அரசியல் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த முடியாத சூழலில் ஆளுநர்கள், மாநில அரசுக்கு எதிராக இதுபோன்று செயல்படுகின்றனர். திமுகவின் வழக்கறிஞர் அணி மட்டுமின்றி மாணவரணி, இளைஞரணி ஆகிய அணிகளும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான கருத்தரங்குகளை நடத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெயரளவுக்கு மாநில கூட்டாட்சி தத்துவம் உள்ளது. நமது அரசியலமைப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, அன்றைக்கே அண்ணா வலியுறுத்தினார்.

#தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி வந்தபிறகு ஏதோ புரட்சி நடப்பது போன்று பரப்புகின்றனர். அவருக்குரிய கடமையை முறையாக செய்யவேண்டும். தேவையற்றதை மக்களிடம் பேசி அவர் குழப்பம் செய்கிறார். கவுரவமிக்க ஆளுநர் பதவியை அவர் காப்பாற்றவேண்டும். அரசியல்வாதி போன்று செயல்படுவதை தவிக்கவேண்டும்.

தமிழ்நாடு சட்டபேரவை கொண்டு வந்த 20 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். மாநில அரசின் முடிவை அவர் தடுப்பது மக்களை அவமதிக்கும் செயல். அமைச்சரவை தயாரித்த உரையிலுள்ள தகவல்களை வாசிக்க தவிர்த்ததால் அவருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் அண்ணா வழியில் வந்தவர். அப்படிதான் எதிர்வினையாற்றுவார். நாங்கள் தயாரித்த உரை பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு இங்கு வேலையில்லை. தேர்ந்தெடுத்த அரசுக்கு துணை நிற்கவே வந்துள்ளீர்கள்.

சட்டசபையில் ஆளுநர் வெளியேறிய சம்பவம் எல்லா மாநிலங்களிலும் பேசப்படுகிறது. தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற நீங்கள் யார்? ஆளுநரை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கவேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களிடம் பேசிய ஆளுநர், மத்திய - மாநில அரசுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால் மத்திய அரசு பக்கமே இருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறார். இவருக்கு முன் இருந்த ஆளுநர்கள் அமைதியாக சென்றனர். ஆளுநர் ஆர்என். ரவி நிதானமாக செயல்படவேண்டும்." என தெரிவித்தார். அமைச்சர் பி. மூர்த்தி, மாநகர மாவட்ட செயலர் கோ. தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேல், முன்னாள் எல்எல்ஏ வேலுச்சாமி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், அரசு வழக்கறிஞர்கள் என, ஏராளமானோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.



தமிழக அரசியல் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 23, 2023 10:23 am

தமிழக அரசியல் செய்திகள் - Page 8 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2023 9:56 am

பிற மொழிகளை அழிக்கிறது பாஜக: மு.க. ஸ்டாலின்


ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்கப்பார்ப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொழிப்போர் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மொழிப்போர் தியாகிகள் பாடங்களாக இருந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இருமொழி கொள்கையே காரணமாக உள்ளது. மத்திய பாஜக ஹிந்தி மொழியை திணிப்பதை தனது வழக்கமாக கொண்டுள்ளது. திமுக தோன்றியது முதலே மொழி காப்பு இயக்கமாக இருந்து வருகிறது. இதனால், ஹிந்தி மொழிக்கு எதிரான போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2023 9:59 am

தமிழ் இருக்க ஹிந்தி எதற்கு? டிரெண்டிங் ஹேஷ்டேக்


மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி தமிழ் இருக்க ஹிந்தி எதற்கு என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி தமிழ் இருக்க ஹிந்தி எதற்கு என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொழித்திணிப்பு தீவிரமாகி வரும் நிலையில், மொழிப் பற்று குறித்த வாசகங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீரவணக்க நாள் தினத்தையொட்டி மொழிக் காவலர்களின் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் நடைபெறும் மொழிப்போர் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இந்நிலையில், மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வகையிலும், மொழித்திணிப்பை எதிர்க்கும் வகையிலும் தமிழ் இருக்க ஹிந்தி எதற்கு என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 27, 2023 12:05 pm

சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 11:36 am

கொள்ளை அடிப்பதற்காக கோவில்களை இடித்தாரா? டி.ஆர்.பாலு மீது போலீசில் பெண் வழக்கறிஞர் புகார்!


'மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, நுாறு ஆண்டுகள் பழமையான கோவில்களை இடித்திருக்கிறேன்' என, மதுரையில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய தி.மு.க., -- எம்.பி., டி.ஆர்.பாலு மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம், சைதாப்பேட்டை வழக்கறிஞர் ராஜாத்தி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பழைய தஞ்சாவூர் மாவட்டம், திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு சொந்தமாக, திருமங்கலக்குடி சிவன் கோவில் உள்ளது. 1968ல் தி.மு.க., முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததும், இந்த கோவில் நிலங்கள் மீது கவனம் செலுத்தினர். கோவிலுக்குச் சொந்தமான, 20 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி, அதை வீட்டு மனைகளாக மாற்றி, பலருக்கும் விற்பனை செய்தனர். இதை எதிர்த்து, அதீன மடத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

குற்றச்சாட்டு



ஆனாலும், அதிகாரத்தை பயன்படுத்தி, கோர்ட் உத்தரவை செயல்படுத்த விடாமல் செய்து விட்டனர். இன்றளவிலும், குறிப்பிட்ட நிலத்தில் வீடு கட்டி பலரும் இருந்து வருகின்றனர். அதேபோல, தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஹிந்து கோவில் நிலத்துக்குச் சொந்தமான அந்த கிராம நிலங்களையும் கையகப்படுத்தினார்.

கடந்த 1980ல், திருச்செந்துார் முருகன் கோவிலில் நகை மதிப்பீட்டாளராக இருந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவர் கொல்லப்பட்டார். அதற்கு காரணம், தி.மு.க.,தான் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தணிக்கை ஆய்வாளராக இருந்த வெங்கடாசலம் என்பவர், 1983ல் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது மர்ம மரணத்துக்கு பின்னணியிலும், தி.மு.க.,வினர் இருப்பதாக கூறப்பட்டது.

பெரும் அதிருப்தி



இப்படி பல விஷயங்களை ஆதாரங்களுடன் கூறலாம். அதாவது, ஹிந்து கோவில் நிலங்களை அபகரிப்பது, கோவில் சொத்துக்கள் மீது ஆசைப்படுவது, கோவில் நிர்வாகத்தில் தலையிடுவது என தி.மு.க.,வினர் மீது தமிழகம் முழுக்க புகார்கள் உள்ளன. இதனால், ஹிந்து மக்கள் பெரும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்நிலையில்தான், 'நுாறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஹிந்து கோவில்களை இடித்துள்ளேன்' என, வெளிப்படையாகவும், ஆணவத்தோடும், டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

வணங்குவதற்குரிய இடங்களான கோவில்களை பாதுகாக்கும் சட்டம் 1991ல், நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் படி, நாட்டு சுதந்திரத்துக்கு முன்னதாக கட்டப்பட்ட எந்த கோவிலையும் இடிக்கவோ, அப்புறப்படுத்தவோ முடியாது.

நடவடிக்கை



'நுாறு ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவில்களை இடித்துள்ளேன்' என, டி.ஆர்.பாலு பேசியிருப்பது, குறிப்பிட்ட சட்டத்துக்கு எதிரானது. எனவேதான், டி.ஆர்.பாலு மீது வழக்கு போட்டு, அவரை கைது செய்ய வேண்டும் என, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளேன். ஹிந்து கோவில்களை இடித்துள்ளதாக டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால், அக்கோவில்களில் இருந்த நகை மற்றும் பொருட்கள் எங்கே? அவற்றை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே கோவில்களை இடித்துள்ளார் என சந்தேகப்படுகிறேன்.

பார்லிமென்ட் உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க, ஒழுங்கு நடவடிக்கை குழு உள்ளது. அந்த குழுவிலும், டி.ஆர். பாலு மீது புகார் அளிக்க உள்ளேன். டி.ஆர்.பாலு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போலீசை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராஜாத்தி கூறினார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 12:01 pm

“எனக்கு நீங்கள் ஓட்டுப் போடும் நாள் வரும். இல்லையென்றால்...” - சீமான் எச்சரிக்கை


“எனக்கு நீங்கள் ஓட்டுப் போடுவீர்கள். அந்த நாள் வரும். இல்லையென்றால், வட இந்தியர்கள் உங்களைத் தாக்குவார்கள்” என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த புலவர் தமிழ் கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், ”உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. அவரின் பேரன் நான் வந்தால் அவருக்கு மிகப்பெரிய கோயிலை கட்டி தமிழில் ஓதுவார்களை வைத்து தமிழில் குடமுழுக்கு நடத்துவேன்.

ஒரேநாள் இரவில் மொத்த சிலைகளையும் சாக்கில் கட்டி நடுக்கடலில் வீசுவேன். அப்போது இங்கிருந்த சிலையை காணவில்லை சமாதியை காணவில்லை என போராட்டம் நடைபெறும்.

நீங்கள் எனக்கு ஓட்டுப் போடுவீர்கள். அந்த நாள் வரும். இல்லையென்றால், வட இந்தியர்கள் உங்களைத் தாக்குவார்கள். வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள். அப்போது சீமானை தேடுவீர்கள். இது நடக்கும்.

சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும். முக்குலத்தோருக்கு மூன்று அமைச்சரை கொடுத்தீர்கள். அப்படி கொடுக்காமல் கள்ளர் எத்தனை பேர், மறவர் எத்தனை பேர், அகமுடையார் எத்தனை பேர் என எண்ணி வலிமைக்கேற்ப அமைச்சரவை கொடுக்க வேண்டும். கோனார் சமுதாயத்திற்கு இரண்டு அமைச்சர் கொடுத்துள்ளீர்கள். உங்கள் வீட்டிலேயே இரண்டு அமைச்சர்களை வைத்துள்ளீர்கள். இது என்ன இட ஒதுக்கீடு, சமூக நீதி? எடுத்துக் கொடுக்காமல் எண்ணி கொடுக்க வேண்டும்" என்று சீமான் பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 7:40 pm

நீ பேனா சிலையை வெச்சினா நான் வந்து உடைப்பேன்! – சீமான் எச்சரிக்கை!



மெரினா கடற்கரையில் கடல் பகுதியில் பேனா சிலை அமைப்பத்தால் உடைப்பேன் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை பெரிய அளவில் மெரினா கடற்கரை பகுதியை ஒட்டிய கடல்பகுதியில் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேனா சிலை அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவ அமைப்புகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். கழிமுக பகுதியில் பேனா சிலை அமைப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரமும், மீன் வளமும் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரிய ஆமைகளான பங்குனி ஆமைகள் எனப்படும் ஆலிவர் ரிட்லி ஆமைகள் வாழிடமாகவும், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளது.

இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “நினைவு சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை கடலுக்குள் வைப்பதைதான் எதிர்க்கிறோம். அண்ணா அறிவாலயத்திலோ, கலைஞர் நினைவிடத்திலோ பேனாவை வைத்துக் கொள்ளலாமே! கடலுக்குள்தான் வைக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவ்வாறு கடலுக்குள் வைப்பதால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் என அவர் பேசியபோது கீழிருந்து சிலர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டலிட்டதால் சலசலப்பு எழுந்தது. அப்போது சிலையை வைத்தே தீருவோம் என்று கீழிருந்து ஒருவர் கூட்டலிடவே, “நீ சிலையை வைத்தால் நான் பேனா சிலையை உடைப்பேன்” என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக