by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
தமிழக அரசியல் செய்திகள்
Page 7 of 13 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.
அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி ஜன. 13ல் போராட்டம்: விசிக
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியறுத்தி விசிக சார்பில் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க உரையில், தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிப்பதைத் தவிர்த்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மேலும், முக்கிய தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே ஆளுநர், பேரவையைவிட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த செயல்பாட்டுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. மேலும் பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்தன. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியறுத்தி விசிக சார்பில் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் சதி! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் சட்டப்பேரவை & தேசிய கீதத்தையும் ஆளுநர் அவமதித்துள்ளார்! ஆளுநர் பதவியில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார்! அவரைத் திரும்பபெற வலியுறுத்தி சன-13 ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!' என்று பதிவிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
"ஆளுநர் உரை: தெலங்கானா வழி!...
மாநிலத்தின் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதலில் பேரவையில் ஆளுநர் உரையாற்றுவதையே தவிர்த்திருக்கிறார்கள் தெலங்கானாவும் அதன் முதல்வர் சந்திரசேகர ராவும்!
நாட்டில் பாஜக ஆட்சி செய்யாத பெரும்பாலான மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல்கள் தொடர்கின்றன. தில்லி, மேற்கு வங்கம், தெலங்கானா, கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுடன் தமிழ்நாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆளுநர் ஆர்.என். ரவி பதவியேற்றதில் இருந்தே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நீண்ட நாள்களாகக் காத்திருக்கின்றன. பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதும் மசோதாவுக்கு எதிராகப் பேசி வருவதும் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் மசோதா காலாவதியாகிவிட்டதும் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது.
அவ்வப்போது திமுக அரசை விமர்சித்தும் தமிழ்நாடு மக்களின் செயல்பாட்டுக்கு எதிராகவும் பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில், ஆளுநர் மாளிகையின் நிகழ்வொன்றில், தமிழ்நாடு என அழைப்பதைவிட தமிழகம் என அழைப்பதுதான் சரியாக இருக்கும்என்று கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஆளுநரும் தமிழ்நாடுஎன்றே உச்சரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் தொடக்க உரை கடும் கொந்தளிப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசு தயாரித்து அளித்த உரையில் உள்ள தமிழ்நாடுஎன்ற வார்த்தையை உச்சரிப்பதைத் தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு மக்கள் போற்றும் முக்கிய தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை. திராவிட மாடல் என்ற வார்த்தையையும் அவர் உரையில் தவிர்த்துவிட்டார்.உடனே, சட்டப்பேரவையிலேயே இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநர் பாதியிலேயே சட்டப்பேரவையை விட்டு வெளியேறியுள்ளார்.
இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா வழி!மேற்குறிப்பிட்டபடி, தமிழ்நாட்டில் மட்டுமின்றி பாஜக அல்லாத பெரும்பாலான மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இதே நிலையே நீடித்து வரும் நிலையில் தெலங்கானா முதல்வரோ அதிரடியாக ஆளுநர் உரையையே தவிர்த்தார்.தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. கடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை தவிர்த்து கூட்டத்தை நடத்தியிருக்கிறார் முதல்வர் கேசிஆர், நாட்டில் ஆளுநர் உரை அல்லாத முதல் கூட்டம் இதுதான் எனலாம்.
தொடர்ந்து அரசின் பல்வேறு நிகழ்வுகளில் தொடர்ந்து ஆளுநரைத் தவிர்த்து வருகிறார் கேசிஆர்.கடந்த ஆண்டு அந்த மாநில முக்கிய விழாவொன்றில் ஆளுநருக்கு மாநில அரசு மரியாதை அளிக்கவில்லை என்பது பேசுபொருளானது.
அதுபோல, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தெலங்கானா அமைச்சர்கள் கலந்துகொள்ளாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுக்கும் எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் இவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.கேரளத்திலும்?கேரள ஆளுநராக ஆரிஃப் முகமது கான் பொறுப்பேற்றத்தில் இருந்தே முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுடன் கடும் மோதல் இருந்து வருகிறது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதலின் எதிரொலியாக, சட்டப்பேரவை கூட்டத்தில், கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் உரையைப் புறக்கணிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாஜக அல்லாத மாநிலங்களில் தங்கள் வரம்புக்கு மீறி ஆளுநர்கள் செயல்பட்டு வருவதாக பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
அதற்கேற்பவே இதுபோன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படுவது அந்த மாநில மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவே கருதப்படுகிறது. அதிலும் தமிழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் மக்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாடா? தமிழகமா? என்ற சர்ச்சை தொடர்ந்து நிலவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் #எல்.முருகன் அளித்துள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி ‘#தமிழ்நாடு’ என்று அழைப்பதை விட மாநிலத்தை ‘#தமிழகம்’ என்று அழைப்பதே பொருத்தமானது என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்துக்கு திமுக மற்றும் தோழமை கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ட்விட்டரில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த பல அரசியல், கலை உலக பிரமுகர்களும் தமிழ்நாடு என்று அழைப்பதே சரி என தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள முன்னாள் #பாஜக தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சரியானது என்றும், சங்க இலக்கிய தமிழ் நூல்களிலும் கூட தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லாமல் தமிழகம் என்ற வார்த்தையே உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்தை மறுத்துள்ள சிலர் சமூக வலைதளங்களில் தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளை மேற்கோள் காட்டி பேசி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியுள்ளது. ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
ஆளுநர் உரையாற்றும்போது அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
இந்நிலையில், இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசின் சார்பில் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட உரை குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆளுநர் உரை என்றால், வருங்காலத்தில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்க வேண்டும்; அந்தக் கனவை நனவாக்கும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும்; தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை, திமுக ஆட்சியின் ஆளுமைத் திறமையின்மையை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆளுநர் உரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலமைச்சர் அயராத உழைப்புடன் அக்கறையுடன் அரசை வழிநடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலை என்னவென்றால் தமிழ்நாட்டு மக்களை வீழ்ச்சியை நோக்கி திமுக அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது
மக்களைத் தேடிக் மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்கள் பெயரளவிற்கு உள்ளதே தவிர சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் எல்லோரின் கருத்தாக இருக்கிறது. பொதுமக்களின் மீது அக்கறை இல்லாத, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கக் கூடிய, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு வழிவகுக்கின்ற, வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்காத திமுக ஆட்சியின் ஆளுமைத் திறமையின்மையை படம்பிடித்துக் காட்டும் உப்பு சப்பில்லாத உரையாக அமைந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆளுநர் உரையில் சமூகநீதி குறித்த அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றும், அதே வேளையில் புதிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவும் #பாமக நிறுவனர் #ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “#தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுனர் #ஆர்.என்.ரவி இன்று ஆற்றிய உரையில் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கும் சமூகநீதிக் கொள்கை குறித்து உறுதிபட தெரிவிக்கப்பட்டிருப்பதும், போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவை மரபுகளின்படி கூட்டத்தொடரை தொடங்கி வைத்து ஆளுனர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக அமைந்துவிடும் என்பதால் அதை செயல்படுத்த முடியாது என்றும், தற்போது மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையே தொடரும் என்றும் ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் மிகப்பெரிய சிக்கலாக உருவாகி வருகிறது. வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் எண்ணங்களை எதிரொலிக்கும் வகையில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பதும் மனநிறைவளிக்கிறது. போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்துகிறது.
தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டும்; மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்; பெண்ணையாற்று பிரச்சினைக்கு தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் ஆளுனர் வலியுறுத்தியிருப்பதும் சரியானதே.
பொதுவாக #ஆளுனர் உரை என்பது ஒரு மாநில அரசு அடுத்து வரும் ஓராண்டில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தப் போகிறது என்பது குறித்த முன்னறிவிப்பு ஆவணம் ஆகும். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவை குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுனர் உரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.
இவை அனைத்தையும் கடந்து ஆளுனர் உரையின் போது அவையில் நடந்த நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன. தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட உரையில் சில சொற்களையும், இரு பத்திகளையும் ஆளுனர் புறக்கணித்திருக்கிறார். அவரால் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட உரையையே ஆளுனர் முழுமையாக படிக்காததும் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் வலிமை சேர்க்காது. அதேபோல், அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை முழுமையாக அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் #மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து படிக்கும் போது, அவை மரபுகளுக்கு மாறாக, ஆளுனர் வெளியேறியதும் சட்டப்பேரவை மரபுகள் மற்றும் நாகரிகத்துக்கு எதிரானது ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரின் ட்விட்டர் பக்கத்தில், “#சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை” என்றும் பதிவிட்டிருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தது ஏன்? என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
6 அம்சங்களை சுட்டிக்காட்டி இந்த தகவல் அமைந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கவர்னருக்கு அவமானம் கவர்னர் உரையை நீக்குகிறேன் என அவர் அழகாக தமிழில் மேற்கோள் காட்டிய அவ்வையாரின் "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்" என்கிற வரிகளையும், பாரதியாரின் வாழிய பாரத மணித்திரு நாடு என்கிற கவிதை வரிகளையும், நாட்டுமக்களுக்கு கவர்னர் தமிழில் சொன்ன ஆங்கில புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளையும் நீக்கியுள்ளனர்.
கவர்னர் உரையை ஜனவரி 6-ந் தேதி அன்று அரசு அனுப்பி வைத்தது. அதில் உள்ள ஆட்சேபகரமான விஷயங்களை கவர்னர் குறிப்பிட்டு கேட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்னபோது அச்சுக்கு போய்விட்டது. நீங்கள் பேசும்போது தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லியுள்ளனர். (அது ஆவணபூர்வமாக பதிவாகியுள்ளது.)
ஆனால் கவர்னர் சபையில் அதை நீக்கி வாசித்தபோது உடனடியாக சேனல்களுக்கு அதை அனுப்பி வைத்தும், கவர்னர் இருக்கும்போதே கவர்னர் உரைக்குப்பின் சபை முடித்து வைக்கப்பட வேண்டும் என்கிற சபை மரபை மீறி தீர்மானம் கொண்டு வரப்பட்டு கவர்னர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
கண்டபடி புகழ்ச்சி எதை, எதை கவர்னர் ஆட்சேபித்தார் ஏன் என்பதை பார்ப்போம்.
ஜனவரி 12-ந் தேதி சுவாமி விவேகானந்தரை நினைவுக்கூரும் இளைஞர் தினம். அந்த தினத்தை குறிப்பிட்டு சேர்த்து பேசியுள்ளார். இது அவை மரபை மீறிய செயல் அல்ல. கவர்னர் ஆட்சேபித்த மற்றும் தவிர்க்கப்பட்ட பகுதிகள் அரசாங்கத்தைப் கண்டபடி பெரிதும் புகழ்ந்த பகுதிகள். நடைமுறை வேறாக இருந்ததால் ஆட்சேபித்தார், பேசும்போது தவிர்க்கலாம் என்று சொன்னதால் தவிர்த்தார்.
"இந்த அரசாங்கம் வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் தொடரும்" இதை கவர்னர் சொல்ல முடியாது. முதல்-அமைச்சர் அவர் உரையில் பேச வேண்டியது. கொள்கை, செய்யவேண்டியதை மட்டும் கவர்னர் உரையில் வைப்பார்கள். இதுபோன்ற அதீத புகழ்ச்சிகளை தவிர்ப்பேன்' என்று கவர்னர் சொல்லிவிட்டார்.
அமைதியின் சொர்க்கமா?
இந்த மாநிலம் அமைதி மற்றும் அமைதியின் சொர்க்கமாக தொடர்கிறது, வன்முறையிலிருந்து விடுபட்டுள்ளது என்று இல்லாத ஒன்றை பதிய வைப்பதை தவிர்த்தார்.
தினசரி செய்தி சேனல்கள், நாளிதழ்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை அடுக்காக புகாராக சொல்லும்போது இந்த மாநிலம் அமைதியின் சொர்க்கமாக இருக்கிறது என்பது யதார்த்தம் அல்ல (சமீபத்தில் பொதுகூட்டத்தில் பெண் காவலருக்கு நடந்த பாலியல் சீண்டலில் குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதுகாத்ததும், பின்னர் எதிர்ப்பு கிளம்பியபின் கைது செய்ததும் நடந்தது)
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக உள்ள வரிகளை எப்படி ஏற்க முடியும். அது சர்வதேச பிரச்சினை மத்திய அரசின் தலையீடு இல்லாமல் எப்படி நடக்க முடியும் என்பதால் ஒன்றிய அரசின் முயற்சி என்கிற வார்த்தையை சேர்த்து படித்தது தவறா?
பிழையான ஒன்று பல இடங்களில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதியின் சொர்க்கமாக மாநிலம் திகழ்கிறது என்கிற வார்த்தைகள் முதல்-அமைச்சர் மற்றும் டி.ஜி.பி.யை போற்றும் வகையில் இருந்தது. இந்த வார்த்தைகள் கவர்னரால் தவிர்க்கப்பட்டது.
தொழில் முதலீடு குறித்து மிகைப்படுத்தப்பட்ட செய்தி. கடந்த 1½ ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்பது ஜனவரி 7-ந் தேதி கவர்னர் உரையில் இருந்தது.
இதை கவர்னர் சுட்டிக்காட்டி மாற்றச்சொன்னார். அதை அப்படியே இருந்ததால் தவிர்த்தார். உண்மை என்ன? கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக அரசு ஈர்த்த அந்நிய முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள் என பெருமையாக பதிவிடப்பட்டுள்ளது.
ஆனால் இதே காலக்கட்டத்தில் மராட்டியம் - 28 பில்லியன் டாலர்கள் மற்றும் கர்நாடகா 25 பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது.
இதில் 10-ல் ஒருபங்கை ஈர்த்துவிட்டு பெருமையடைவது பிழையான ஒன்று என்பதால் தவிர்த்தார்.
சபாநாயகர் வேடிக்கை பார்த்தார்
சட்டசபை உறுப்பினர்கள் கவர்னரை சுற்றி நின்று உரையை வாசிக்க விடாமல் கோஷமிட்டு கெரோ செய்தனர். இது இதற்கு முன் நடக்காத ஒன்று. கவர்னர் பேச்சுக்கு எதிராக கெரோ செய்து கோஷம் எழுப்பும் போது சபாநாயகர் தடுக்காமல் அவர்களை வேடிக்கை பார்த்தார்.
கவர்னர் இருக்கையில் இருக்கும்போது, கவர்னர் உரையின் தமிழாக்க சபாநாயகர் உரைக்கு பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அமர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும். ஆனால் சபை மரபை மீறி முதல்-அமைச்சர் கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது சபை விதிகளின்படி இல்லை, அவை மரபை மீறிய செயல்.
சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக உள்ள கவர்னரின் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்குவது என்பது சட்ட வல்லுனர்கள் முன் உள்ள தீவிர விவாதப் பொருளாகும். இவ்வாறு கவர்னர் மாளிகை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
-
-தினத்தந்தி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அக்கட்சியின் தலைவர்கள் டெல்லிக்கு சென்று குடியரசு தலைவரிடம் புகாரை ஒரு உறையில் இட்டு கொடுத்ததாகவும், அவர் "நான் பார்க்கின்றேன்" என சொன்னதாகவும் சொல்லிவிட்டார்கள்
இன்று கவர்னர் டெல்லிக்கு சென்று விளக்கம் அளிக்க உள்ளார், இது தமிழக பத்திரிகைகளில் விளக்கம் என உருட்டபட்டாலும் உண்மையில் நடக்க இருப்பது தமிழக ஆளுநரிடம் தமிழக அரசை பற்றிய விசாரணை
தமிழக ஆளுநர் இங்கு வெறுமனே இருப்பதில்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தமிழக நிகழ்வுகளையும் அவர் அறிக்கையாக அனுப்பிகொண்டேதான் இருப்பார், அவரின் பணி அது
அதனால் தமிழக அரசின் நிலவரம் டெல்லிக்கு தெரியாதது அல்ல, முழுக்க என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிந்தேதான் இருப்பார்கள்
இதனால் இது திமுகவுக்குத்தான் பதற்றத்தை ஏற்படுத்துமே தவிர வேறு யாருக்கும் அல்ல
நடந்தது ஆளுநர் மாண்புக்கும் அதிகாரத்துக்குமான இடையூறு , குடியரசுதலைவர் பார்வையிலும் சட்டத்தின் பார்வையிலும் அதுதான் நடந்தது, சட்டத்தின் முன் திமுகவின் திராவிடம் அய்யா ராம்சாமி எல்லாம் நிற்க முடியாது
இன்னும் நடந்த எல்லா காட்சிகளும் வீடியோவாகவும் ஆவணபடுத்தபட்டுள்ளது, ஒவ்வொரு அமைச்சர்களின் அங்க சேட்டை தலையாட்டும் சேட்டை எல்லாமே ஆவணமாக கையில் இருக்கின்றது
இதனால் புதிதாக அறியபட ஒன்றுமில்லை
நடந்த பதற்றத்தை தணிக்க டெல்லியில் ஒரு சமாதான நிகழ்வினை செய்துகொண்டிருக்கின்றது திமுக, வாய்ப்புக்காக எதிர்பார்த்திருந்த உச்சபீடமும் சரியாக களமிறங்குகின்றது
சுருக்கமாக சொன்னால் தேவையற்ற சர்ச்சைகளை செய்து தங்களுக்கு தாங்களே ஒரு சிக்கலை உருவாக்கியிருக்கின்றார்கள் , அது சில நாட்களில் தெரியலாம்
குடியரசு தலைவரின் "நான் பார்த்து கொள்கின்றேன்" எனும் ஒற்றை பதில்தான் கிளாசிக், ஆம், யாரை பார்த்து கொள்கின்றேன் என அவர் சொல்லவே இல்லை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜனாதிபதி/பிரதமர் மற்றும் அமீத் ஷாதெரியாமலா இருக்கும்.?
கவர்னர் பதவி --constitutional post --யாரும் சட்டசபையில் சட்டம் இயற்றி அவரை நீக்கமுடியாது.
ஜனாதிபதி --தான் முடிவெடுக்க வேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
குடியரசு தலைவரின் "நான் பார்த்து கொள்கின்றேன்" எனும் ஒற்றை பதில்தான் கிளாசிக், ஆம், யாரை பார்த்து கொள்கின்றேன் என அவர் சொல்லவே இல்லை
will be looked after --பார்த்துக்கொள்ளப்படும்.--
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 7 of 13 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்