புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
79 Posts - 68%
heezulia
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
prajai
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
nahoor
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
133 Posts - 75%
heezulia
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 4%
prajai
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
Barushree
காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_m10காஞ்சனா 2 - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சனா 2 - திரை விமர்சனம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:37 am

கொஞ்சம் திகில், கொஞ் சம் காமெடி கலந்து பேய்கள் ஆட முயற்சி செய்திருக்கும் அதிரடி ஆட்டம்தான் ‘காஞ்சனா 2’.

வழக்கம்போல, பேய் என்றால் பயம் தொற்றிக்கொள்ளும் பேர் வழி ராகவா லாரன்ஸ் (ராகவா). இவர் கிரீன் டிவி சேனலில் கேமராமேனாக வேலை பார்க் கிறார். நாயகி தாப்ஸி (நந்தினி) அதே சேனலில் நிகழ்ச்சி இயக்குநர். முதல் இடத்தில் இருந்த இந்த சேனல் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகிறது. காரணம், போட்டி சேனலில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி. கடவுளை மையமாகக் கொண்ட அந்த நிகழ்ச்சியின் வெற்றியை முறியடிக்க பேயைப் பின்னணி யாகக் கொண்ட ஒரு நிகழ்ச்சியை வழங்கும் யோசனை உருவா கிறது. தாப்ஸி, ராகவா உள் ளிட்ட குழு மாமல்லபுரத்தில் உள்ள பாழடைந்த பங்களாவை நோக்கிப் புறப்படுகிறது. அங்கு பேய் நிகழ்ச்சியைப் படமாக் கும்போது நடக்கும் திகில் சம்பவங்களை ஒட்டி நகர்வது தான் படத்தின் மீதிக் கதை.

பேய் என்றால் எந்த அளவுக்கு லாரன்ஸுக்குப் பயம் என்பதை கோவை சரளா விவரிக்கும் காட்சிகள் கலகலப்பான தொடக் கம். படப்பிடிப்பு பங்களாவில் வெளிப்படும் மர்மங்கள், கடற் கரை மணலில் கண்டெடுக்கப் படும் தாலி, படப்பிடிப்புக் குழு வினரைப் பீதிக்குள்ளாக் கும் சம்பவங்கள் என்று தொடரும் காட்சிகள் படத்தை விறுவிறுவென நகர்த்திச் செல் கின்றன.

மர்மங்களுக்கான காரணத் தைச் சொல்லவேண்டும் என்ற அவசியம் இரண்டாம் பாதியில் ஏற்படும்போது, ஓட்டத்தின் வேகம் குறைகிறது. பேய்களின் நோக்கத்தைச் சொல்வதற்கு முன்பு, பேய்களின் ஆட்டத்தைக் காட்ட அதிகமான காட்சிகளை எடுத்துக்கொள்கிறார் இயக்கு நர். இந்தக் காட்சிகளில் புதுமையை விடவும் இரைச்சலே அதிகம். இதையெல்லாம் தாண்டிப் பின்னணிக் கதையைச் சொல்லி பழிவாங்கும் படலத்தைக் காட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

பின்பாதி கதை சற்றும் கவர வில்லை என்பது ஒருபுறம் இருக்க, பேயின் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சண்டைகள் ஆகியவையும் பழைய சரக்கு களாகவே உள்ளன. ஒரே மாதிரி காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது அலுப்பூட்டுகிறது.

ஒவ்வொரு திகில் காட்சியிலும் மறக்காமல் நகைச்சுவையைக் கலந்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். பேய்களின் ஆட்டத் துக்கு மத்தியில் முன்பாதியிலும் பின்பாதியிலும் வரும் காதல் காட்சிகளும் மாறுபட்ட உணர் வைக் கொடுக்கின்றன. ஆனால், இந்த மென்மையெல் லாம் இரைச்சலின் உக்கிரத் தில் அடித்துச் செல்லப்படு கின்றன.

முந்தைய காஞ்சனாவில் திருநங்கைகளின் நிலையை அழுத்தமாகப் பதிவுசெய்த லாரன்ஸ், இந்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிப் பேசுகிறார். திருநங்கைகள் பற்றிய பொது மக்களின் பார்வையையே மாற்றக்கூடிய அளவுக்கு அந்த காஞ்சனா வில் அந்த உணர்வு அழுத்த மாகச் சொல்லப்பட்டிருந்தது. அந்த வலு இந்தப் படத்தில் இல்லை.

நடிப்பைப் பொறுத்தவரை ராகவா லாரன்ஸ் செய்வதற்கு புதிதாக எதுவும் இல்லை. முன் பாதியில் காஞ்சனாவில் பார்த்த அதே நடிப்பு. பின் பாதியில் வரும் மொட்டை சிவா, வழக்கமான மசாலா பட நாயகனின் பாத்திரம்தான்.

இதுவரை அழகுப் பதுமை யாக மட்டுமே வந்துபோன தாப்ஸிக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு. அழகு தேவதை யாகக் கவரும் தாப்ஸி, பேயைக் கண்டு மிரள்வதிலும் பேயாக மிரட்டுவதிலும் பிரகாசிக்கிறார். மாற்றுத்திறன் பெண்ணாக வரும் நித்யா மேனன் அனுதாபத்தை அள்ளுகிறார். கோபத்தில் சீறும்போது அசரவைக்கிறார்.

கோவை சரளா, லாரன்ஸ் சந்திக்கும் இடங்கள் சிரிக்க வைத்தாலும் காஞ்சனா முதல் பாகத்தை நினைவுபடுத்து கின்றன. மனோபாலா, மன், பூஜா உள்ளிட்டவர் களின் காமெடியும், நடிப்பும் படத்தை நகர்த்திச் செல்ல உதவுகின்றன.

எஸ்.எஸ்.தமன், லியோன் ஜேம்ஸ், சி.சத்யா, அஸ்வமித்ரா ஆகிய நால்வர் இசை! பாடல்களில் வித்தியாசம் காட்டியிருந்தாலும் படத்தில் அதை முழுவதுமாக உணர முடியவில்லை. பின்னணி இசையில் பல இடங்களில் சத்தமே பிரதான இடம் வகிக் கிறது.

ஒளிப்பதிவு ராஜவேல் ஒளி வீரன். பேருக்கு ஏற்றாற்போல திறம்பட வேலை பார்த்திருக் கிறார். சமீபத்தில் மறைந்த கிஷோரின் எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் உழைப்பு தெரிகிறது.

படத்தின் முதல் பாதி ஈர்ப்பை, இரண்டாம் பாதி யும் தக்கவைத்திருந்தால் ‘காஞ்சனா 2’வைப் பயந்து ரசித்திருக்கலாம்.

இந்து டாக்கீஸ் குழு

காஞ்சனா 2 - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:52 am

காஞ்சனா 2 - படம் எப்படி?

பழிவாங்கும் பேய்கள் கூட்டத்திற்கு துடுப்பு சீட்டு லாரன்ஸ், இதுதான் ‘காஞ்சனா - 2’

க்ரீன் டிவி கேமரா மேன் ராகவா லாரன்ஸ். அதே டிவியில் இயக்குநராக டாப்சி. ராகவா லாரன்ஸ் டாப்சி வழக்கம் போல் லவ், பத்திகிச்சு ,சாப்டர் ஓவர்.

பிறகு டிவியோட ரேட்டிங் ஏறணும் , நம்பர் 1 இடத்திற்கு கொண்டு போக வேண்டும் என ஒரு பேய் ஆராய்ச்சி ஷோவுக்காக பாழடைந்த , கடற்கரை வீடு தேர்வாகிறது. அங்கே போகும் கலாட்டா டிவி டீம் தலைவி டாப்சி கையில ஒரு தாலி கிடைக்கிறது. டாப்சியும் அசால்டாக தாலியை லபக்கிக் கொண்டு வர ஆட்டம் ஆரம்பம் , யார் துரத்துகிறார்கள், பின்னனி என்ன என்பதே மீதி கதை.

லாரன்ஸ் 7 வயது குழந்தையாக ‘கட கடவென’ பாடல் பாடுகிறார். 70 வயது பாட்டியாக வந்து தள்ளாடிக் கொண்டே மிரட்டுகிறார். புடவை கட்டிக் கொண்டு ஒய்யாரமான பெண்ணாக நிற்கிறார். இப்படி கமல் டைப்பில் அத்தனையும் லாரன்ஸ் மயம். சீன் பை சீன் மொட்ட சிவா கெட்ட சிவா என முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் இன்னமும் மெருகு தெரிகிறது.

டாப்சி வெள்ளை பொண்ணு பால்கோவா கலரில் ரோமான்டிக் லுக் கொடுத்து விட்டு பின் அட இந்த பொண்ணு இப்படியெல்லாம் நடிப்பாங்களா என காலை மடக்கி ஒடுக்கி ‘முழு கங்கா இப்ப ஓகே’ வா எனக் கேட்கும் போதும் , அலாக்காக வீட்டின் மேல் பாக்கத்தில் நின்று கொண்டு லுக் விடுவதும் என டாப்சி டாப்.

‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நித்யா மேனனை பார்த்துவிட்டு இந்த படத்தில் அதே நித்யாவை பார்த்தால் இன்னும் சிறப்பு. என்ன ஒரு கெட்டப் சேஞ்ச். அந்த ஜிலீர் பொண்ணு இந்த படத்தில் நம்மையே ஜிலீர்னு உறைய வைக்குறாங்க.வழக்கமான ஸ்ரீமன், கோவை சரளா, மனோ பாலா என பேய் பயத்தில் உறைய வைக்கும் பாத்திரங்கள். என்ன தேவதர்ஷினி இல்லையே பாஸ் மொமெண்ட் கொஞ்சம் தோன்றுகிறது.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என லாரன்ஸ் ஒரு காட்டு காட்டியிருக்கிறார். எனினும் ஏன் படம் முழுக்க ஹரி பட பாணியில் ’டேய், நீ மாஸ்’னா நான் பக்கா மாஸ்’ , ‘மொட்ட சிவா , கெட்ட சிவாடா’ என அலறல்கள் தெரியவில்லை. பாடல்கள் சுமார் ரகம். ’சண்டி முனி’ கண்டிப்பாக இதய நோயாளிகள் ஜாக்கிரதை ஸ்டைல் பாடல். ’மொட மொட’ குழந்தை பாடல் வித்யாசமான ஸ்டைல். பின்னனி இசையாக இல்லாமல் அவ்வளவும் ஸ்பெஷல் எஃபெக்டாகவே பயன் படுத்திய முறை தான் படத்திற்கு பலம் எனலாம்.

முதல் பாதியில் சடார் , சடார் என திகில் காட்டிய பேய்கள் , இரண்டாம் பாதியில் சற்றே மறந்து விட்டன. கடைசியில் சண்டை காட்சிகளும் கிராபிக்ஸ் செயற்கையாக தெரிந்ததை குறைத்திருக்கலாம். காஞ்சனா அளவிற்கு கதை பலமும் குறைவு. காமெடிகளும் சில இடங்களில் அம்மாவை செருப்பு பிஞ்சுடும் ,போடி வாடி என திட்டுவதும் குழந்தைகளை கவர நினைக்கும் லார்ன்ஸ்இதையெல்லாம் தவிர்த்திருக்க வேண்டும்.

விடுமுறை என நினைத்து குழந்தைகள் சகிதமாக சென்றால் அல்ர்ட். முதல் பாதி முழுக்க கொஞ்சம் அரட்டி எடுக்கிறார்கள்.

சரி பார்க்கலாமா? ஜாலியாக ஒரு பயங்கர படம் எனில் கண்டிப்பாக பார்க்கலாம். நாங்க ‘ க்ரட்ஜ்’ பேய் பார்த்தே அசராத ஆட்கள் என்றால் இதுவும் கடந்து போகும்.

- சினிமா விகடன் குழு -

காஞ்சனா 2 - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 1:08 am

இந்த படம் பார்க்கவேண்டும். அதிலும் அந்த மோட, மோட... பாட்டு தூள்... எப்போ போலாம்னு என் பொண்ணு கேட்டுட்டே இருக்கா..

காஞ்சனா 2 - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாஞ்சனா 2 - திரை விமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காஞ்சனா 2 - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 22, 2015 2:47 pm

ஒரே மாவையே அரைத்து இருக்கிறார் லாரன்ஸ்.. போட்டிக்கு படம் இல்லாததால், வேறு வழியின்றி போகலாம்.. எனினும் அம்மாவை (நான் கோவை சரளாவை சொன்னேனுங்க) அவர் பேசும் விதம் முகம் சுழிக்க வைக்கிறது. மற்றபடி ஜாலியா ஒரு பேய் படம்..... பயமெல்லாம் கொஞ்சம் கம்மியா ஒரு பேய் படம்........

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 6:41 pm

ஓ... படம் பார்த்தாச்சா செந்தில்?

குட்டி 'லோக்' ஈகரைக்கு வந்துட்டானே... வருக, வருக லோக்நாத் இளவரசே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

காஞ்சனா 2 - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாஞ்சனா 2 - திரை விமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காஞ்சனா 2 - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 22, 2015 7:15 pm

விடாது முயற்சிக்கும் ஆஸ்கர் நாயகனை அப்புறப் படுத்திய நம் குடும்ப நாயகனாச்சே இளவரசன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 7:18 pm

யினியவன் wrote:விடாது முயற்சிக்கும் ஆஸ்கர் நாயகனை அப்புறப் படுத்திய நம் குடும்ப நாயகனாச்சே இளவரசன்
ஆமாம்.. ஆமாம்.. இந்த குட்டிக்கு முன்பு உலகநாயகன் எல்லாம் எம்மாத்திரம்.? புன்னகை

காஞ்சனா 2 - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாஞ்சனா 2 - திரை விமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காஞ்சனா 2 - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Apr 23, 2015 1:11 pm

விமந்தனி wrote:ஓ... படம் பார்த்தாச்சா செந்தில்?

குட்டி 'லோக்' ஈகரைக்கு வந்துட்டானே... வருக, வருக லோக்நாத் இளவரசே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1132206

சி.டி. யில் பார்த்தேன் அக்கா... படம் சுமார்தான்... இருப்பினும் ஒருமுறை பார்க்கலாம்.

குட்டி லோக், நம் குடும்ப நபர்கள் காண வேண்டாமா,. அதான் அழைத்து வந்து விட்டேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Apr 23, 2015 1:13 pm

யினியவன் wrote:விடாது முயற்சிக்கும் ஆஸ்கர் நாயகனை அப்புறப் படுத்திய நம் குடும்ப நாயகனாச்சே இளவரசன்
மேற்கோள் செய்த பதிவு: 1132221

உலக நாயகன் கமல் என் மனதிற்கு பிடத்தவர், லோகநாத் என்ற இளவரசன் என் இதயம்...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Apr 23, 2015 1:14 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:விடாது முயற்சிக்கும் ஆஸ்கர் நாயகனை அப்புறப் படுத்திய நம் குடும்ப நாயகனாச்சே இளவரசன்
ஆமாம்.. ஆமாம்.. இந்த குட்டிக்கு முன்பு உலகநாயகன் எல்லாம் எம்மாத்திரம்.? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1132225

உண்மையே, என் குட்டியும் அந்த உலக நாயகன் போல பன்முக திறனுடன் வளர்ந்தால் மகிழ்வேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக