புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
-
சென்னை:
முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
-
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது.
-
இலக்கிய உலகின் மிக உயரிய, 'ஞான பீடம்' விருது பெற்ற, ஜெயகாந்தன், சென்னை கே.கே.நகரில், குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு அவர் இறந்தார். ஜெயகாந்தனுக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயகாந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அவரின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காலணி கடையில் துவங்கிய எழுத்துப் பயணம்: விழுப்புரத்தில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்த போது அவருக்கு பொதுவுடமைக் கோட்பாடுகளும், பாரதியின் எழுத்துகளும் அறிமுகமாகின. பின் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனியார் அச்சகத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் தஞ்சையில் காலணி விற்கும் கடையில் பணிக்கு சேர்ந்தார்.
-
இங்கு தான் அவரது எழுத்து பயணம் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. 20ம் நூற்றாண்டில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக போற்றப்பட்டார். இவரது நாவல்களில் "உன்னைப் போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள்' ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சாகித்ய அகாடமி விருது, ஞான பீட விருது, பத்ம பூஷன், ரஷ்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
எழுத்துலக பிதாமகன் ஜெயகாந்தன் உடல் நலக் குறைவால் நேற்று மரணமடைந்தார். இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. ஜெயகாந்தன் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா!
ஜெயகாந்தன் மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டவர் இளையராஜா. வாய்ப்பு கிடைக்கும்போது, தானே ஜெயகாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசுவது இளையராஜா வழக்கம்.
ஜெயகாந்தன் மரணம் இளையராஜாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அவர் மரணத்துக்கு இன்று புகழஞ்சலி செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் இன்று மாலை 6 மணிக்கு, ஜெயகாந்தனின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுகிறார் இளையராஜா.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மகால தமிழ் எழுத்தை தலைநிமிர வைத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு, வாசகர்கள் ட்விட்டரில் கம்பீரமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயகாந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட #ஜெயகாந்தன் ஹாஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
ஞானபீடம் விருது பெற்றவரும், தனது கதைகளாலும் கட்டுரைகளாலும் தமிழ் வாசக நெஞ்சங்களில் கம்பீரமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தவருமான ஜெயகாந்தன் புதன்கிழமை இரவு மறைந்தார். | விரிவான செய்திக்கு - இலக்கிய பிதாமகனை இழந்தோம்! |
தமிழ் சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஜெயகாந்தனின் மறைவுக்கு ட்விட்டரில், அவரது வாசகர்கள் இரங்கல் தெரிவித்து, அவரை கம்பீரமாக நினைவுகூரும் குறும்பதிவுகளை பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
ஜெயகாந்தன் புகழ்பாடும் குறும்பதிவுகள் #ஜெயகாந்தன் எனும் ஹாஷ்டேகுடன் பகிரப்பட்டு வருகின்றன. அந்தக் குறும்பதிவுகளில் சில:
ட்விட்டர்MGR @RavikumarMGR - உயிர் எழுத்து இறந்துவிட்டது.
Nagarajan @nagakadhir - ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்தது. அந்த சிங்கத்தின் பெயர் ஜெயகாந்தன்.
கர்ணாசக்தி @karna_sakthi - மீசை வைத்த சிங்கத்தின் ஆத்மா சாந்தியடையட்டும்...
தன லட்சுமி @DHANALA09046794 - எழுத்துலகின் சிம்மம் சாய்ந்தது.
மணிமைந்தன் @ManiMaindhan - சமகால தமிழ் இலக்கியத்தின் ஆளுமை #ஜெயகாந்தன் ஆத்மா சாந்தியடையட்டும்.
நிலாவன் @nilaavan - சிங்கம்னு சொல்றதுக்கான சரியான பிம்பம்... @nilaavan
புகழ் @mekalapugazh - பேராண்மை...எழுத்தும் உருவமும் #ஜெயகாந்தன்
The Stallion @StallionMano - சில நேரங்களில் சில மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மனிதன்.
Karthik Venkatesan @kartik_void - இலக்கிய சிங்கம் மறைந்தது.
கரிகாலன் @appanasivam - சமூக அவலங்களை முகத்திலறைந்த அவரின் கதைகள் காலக்கண்ணாடி. ஆழமும் விரிவும் மிக்க சிறுகதைகளின் முன்னோடி. தமிழ் உள்ளவரை நீர் வாழ்வீர் #ஜெயகாந்தன்
rafidr @rafidr1982 - அவர் எழுதவில்லை 25 ஆண்டுகளாக , அவள் குழந்தை பெற்று ஆனது 25 ஆண்டுகள், அவர் மாபெரும் எழுத்தாளர்தான், அவள் அன்பான அம்மாதான். #ஜெயகாந்தன்
அலெர்ட் ஆறுமுகம் @6_mugam - எழுத்து ஒரு பக்கம் இருந்தாலும் முறுக்கு மீசை முன் உதாரண மனிதர்களின் இழப்பு ஒரு வித வருத்தத்தையே தருகின்றது #ஜெயகாந்தன்

ஜெ.கே. என்றால் துணிச்சல்!
தமிழ் இலக்கிய உலகில் வேறு எந்த எழுத்தாளரும் செய்யாத சாதனையை எழுத்தாளர் ஜெயகாந்தன் செய்தார். உலகில் வேறு எந்த எழுத்தாளரும் செய்திராத சாதனை என்று இதை நான் நினைக்கிறேன்.
'நான் இனிமேல் எழுதப் போவதில்லை' என்று ஜெ.கே. அறிவித்தார். சுமார் கால் நூற்றாண்டுகளாக எந்தப் படைப்பிலக்கியத்தையும் அவர் செய்யவில்லை. ஆனாலும், தமிழ் எழுத்தாளர்களின் அடையாளமாக இன்றுவரை அவர்தான் இருந்தார்... இருக்கிறார். அவர் எத்தனை ஆண்டுகாலம் தீவிரமாக எழுதினாரோ, அத்தனை ஆண்டுகாலம் தீவிரமாக எழுதாமலும் இருந்தார். அவர் எழுதாத அந்தக் காலத்திலும் கூட மக்களால் எழுத்து சிங்கமாகப் போற்றப்பட்டவர் அவர் ஒருவர்தான்.
எழுத்துத் துறையில் மட்டுமல்ல; மேடைப் பேச்சுகளிலும் உண்மையின் ஒளி பிரகாசிக்கும். பெரியார் அமர்ந்திருக்கும் மேடையிலேயே பெரியாருக்கு இலக்கியம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்று கேட்டவர் ஜெ. கே. அண்ணா அமர்ந்திருக்கும் மேடையிலேயே 'எனக்கு அண்ணாவையும் பிடிக்காது; அவருடைய எழுத்துக்களையும் பிடிக்காது' என்று கர்ஜித்தவர். எம்.ஜி.ஆர். முதல்வராக பொறுப்புக்கு வந்த நேரத்தில் 'எம்.ஜி.ஆர் தமிழரா' என விவாதித்தவர். அவருடைய சத்துணவுத் திட்டத்தை விமர்சித்தவர்.
ஆனால் பெரியாரும், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் ஒருபோதும் ஜெ.கே.வை விமர்சித்தது இல்லை. மாறாகப் போற்றினார்கள். மதித்தார்கள். அதுதான் உண்மையான எழுத்தாளனுக்குக் கிடைத்த மரியாதை. மரியாதைக்குரிய எல்லோராலும் மதிக்கப்பட்டவர் ஜெ.கே. காமராசர், கண்ணதாசன், ப.ஜீவானந்தம் என அவருடைய மதிப்பு வட்டம் மகத்தானது. சாதாரண அச்சகத் தொழிலாளியாக இருந்து மாபெரும் எழுத்தாளனாக, அறச்சீற்றம் மிக்க அரிய மனிதனாக ஜெ.கே. உயர்ந்தார். அவருடைய கால கட்டத்தில் தமிழ் எழுத்து கம்பீரமாக உலா வந்தது.
புதிய வார்ப்புகள், தரிசனங்கள், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, உண்மை சுடும், பிரளயம், அக்னி பிரவேசம், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், ரிஷிமூலம்... என அவருடைய படைப்புகளுக்கு அவர் வைத்தப் பெயர்களே அன்று தமிழைப் புரட்டிப் போட்டன. சரஸ்வதியில் எழுத ஆரம்பித்து ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என அனைத்து இதழ்களிலும் எழுதினார். எழுதினார் என்பது இலக்கணக் சுருதி. கொடிகட்டிப் பறந்தார் என்பதே சரி.
சாகித்திய அகாதமி, ஞான பீடம் என இலக்கியத்துக்காக இந்திய அரசு வழங்கும் அனைத்து விருதுகளையும் அந்த விருதுகளைப் பெற்றவர்களைக்காட்டிலும் இளைய வயதில் பெற்றவர்.
அவருடைய வீட்டின் மாடியில் அப்போது ஓர் ஓலைக் குடிசை இருக்கும். அதிலே மாலை வேளைகளில் பலரும் கூடுவார்கள். பெரிய எழுத்தாளர்கள், டாக்டர்கள் முதல் ரிக்ஷா தொழிலாளி வரை அந்தச் சபையிலே இருப்பார்கள். கஞ்சா குடிப்பார்கள். அதை அவர் மறுத்ததில்லை.
நீங்கள் கஞ்சா குடிப்பீர்களா என கேட்டபோது, பகவான் ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் மகாகவி பாரதியும் கஞ்சா அடித்தவர்கள்தான். அந்த வரிசையில் நானும் அடிக்கிறேன் என்றார். வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாகச் சொல்லியும் கைது செய்யப்படாதவர் அவர்... இத்தனைக்கும் அவரால் விமர்சிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பலரும் அப்போது இருந்தார்கள். அவர்களின் இயக்கங்கள் ஆட்சியில் இருந்தன. ஓர் மாபெரும் எழுத்தாளன் மீது அரசாங்கம் வைத்த பயபக்தியின் அடையாளம் அது.
சினிமா, திரைப் பாடல், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றிலும் அவருடைய எழுத்துக்கள் பிரகாசித்தன. பத்திரிகையாளராகவும் பொதுவுடமை அரசியல்வாதியாகவும் திரைப்படக் கலைஞராகவும் எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர். இன்று இல்லை என்பது அந்த அத்தனைத் துறைக்குமே இழப்பு.
ஒரு கலகக்காரன்... காலத்தின் நாயகன்... கண் மூடினான்.
-தமிழ்மகன்

எழுத்துலக வேந்தன் ஜெயகாந்தன்: கருணாநிதி புகழாரம்
சென்னை: இலக்கிய உலகில் புகழ்க்கொடி நாட்டியதோடு, திரையுலகிலும் முத்திரை பதித்தவர் அருமை நண்பர் ஜெயகாந்தன் என்று திமுக தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துக்கள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. அவரை இழந்து வாடும் அவருடைய இல்லத்தாருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய உலகத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் இலக்கிய உலகத்தில் "ஜே.கே." என்று அன்பொழுக அழைக்கப்பட்ட - எழுத்துலகச் சிற்பி, அருமை நண்பர் ஜெயகாந்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிச்சியுற்றேன். "துயரம் தனித்து வருவதில்லை" என்பது எவ்வளவு உண்மை! நேற்றிரவு இசைமுரசு நாகூர் அனீபா மறைந்த செய்தியைத் தொடர்ந்து ஜெயகாந்தனின் மறைவுச் செய்தி இன்று அதிகாலையில் கிடைத்தது.
தொடக்கத்தில் திராவிட இயக்கத்தின்மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு காலப் போக்கில் மாறியது; அவருடைய அணுகுமுறையும் மாறிற்று. என்மீது பாசத்தைப் பொழியத் தொடங்கினார். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தன் "இசபெல்லா" மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியினை அறிந்து, என் மனைவி ராஜாத்தியும், என் மகள் கனி மொழியும் அவரை நேரில் சென்று பார்த்து விட்டுவந்து என்னிடம் கூறியதும், அப்போது முதலமைச்சராக இருந்த நான் உடனடியாக அவரை "அப்பல்லோ" மருத்துவமனையில் சேர்க்கச் செய்து, சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கச் செய்தேன்.
உடல் நலம் அப்போது தேர்ச்சியடைந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறிய போது கூட, தஞ்சைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மா.ராஜேந்திரனிடம் "நான் வீட்டிற்குச் செல்லும்முன் கலைஞரைப் பார்த்து நன்றி கூறி விட்டுத் தான் செல்வேன்" என்று பிடிவாதமாகக் கூறி, நேரில் என்னை வந்து சந்தித்து, "என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்" என்ற ஜெயகாந்தனின் சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.
மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்றவர் - பத்ம பூஷண் விருதைப் பெற்றவர் - சாகித்ய அகாடமியின் விருதைப் பெற்றவர் - "முரசொலி" அறக்கட்டளை சார்பில் இலக்கியத்திற்கான விருதைப் பெற்றவர். பெருந்தலைவர் காமராசருடன் நெருங்கிப் பழகியவர். என்னிடம் மாறாத அன்பு கொண்டவர். பல நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து கலந்து கொண்டவர்.
இலக்கிய உலகில் புகழ்க்கொடி நாட்டியதோடு, திரையுலகிலும் முத்திரை பதித்தவர் அருமை நண்பர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துக்கள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. அவரை இழந்து வாடும் அவருடைய இல்லத்தாருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய உலகத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஜெயகாந்தன் மறைவிற்கு ட்விட்டரில் பிரணாப் முகர்ஜி புகழஞ்சலி!
ஞானபீட பரிசு வென்ற தமிழ் படைப்பாளி ஜெயகாந்தன் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் பதிவிட்டுள்ளது: “நம்மிடையே வாழ்ந்த படைப்பு மேதை ஜெயகாந்தன். அவர்களின் துன்பகரமான மறைவினால் தமிழ் இலக்கிய உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்த ஒரு படைப்பு மேதையை நாம் இழந்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் எழுத்தாளர் ஜெயகாந்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81. ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் விழுப்புரத்தில் அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அங்கு அவருக்கு பொதுவுடைமைக் கோட்பாடுகளும் பாரதியாரின் எழுத்துகளுக்கும் அறிமுகமாயின. பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
jayakanthan2அங்கு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான ஜனசக்தி அச்சகத்தில் பணிபுரிந்தா. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்ட போது தஞ்சையில் கடை ஒன்றில் பணிபுரிந்தார். அப்போது முதல் ஏராளமான படைப்புகளை உருவாகினார்.
பின்னர் ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்து ஒதுங்கிய அவர் தீவிர எழுத்துப்பணியில் ஈடுபட்டார். 1950-ல் அவரது இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. தொடர்ந்து சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாகின.
இவரது படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார்.
சில படைப்புகள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன. “உன்னைப் போல் ஒருவன்” சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசு தலைவர் விருதைப் இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தகவலுக்கு நன்றி.........
அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
நந்தவனத்திலோர் ஆண்டி
பதிவர் Ariaravelan Kanagasabapathy பகுப்பு அம்ருதா, ஆளுமை, கட்டுரை, [url=http://ariaravelan.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D %E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D]கண்டதும் கேட்டதும்[/url], ஜெயகாந்தன்
நன்றி: ஓவியர் ஜீவா |
“இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் . . . அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது” என 1969ஆம் ஆண்டில் கா. ந. அண்ணாதுரை மறைந்த பொழுது அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கண்ணதாசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற் பேசியவர் ஜெயகாந்தன். எனவே தனிமனிதராகிய அவரது மரணத்தின் பொருட்டு அவரைப் பற்றிய அவரது படைப்புகளையும் சிந்தனைகளையும் பற்றிய எதிர்நிலைக் கருத்துகளை, ‘நாகரிகம்’ கருதி நம் மனதிற்குள் புதைத்துக்கொண்டு, அவரது தோளில் புரளும் தலைமுடியையும் முறுக்கிவிடப்பட்ட மீசையையும் சட்டைபோடாமல் வெற்றுடம்புடன் தன்வீட்டு மொட்டைமாடியின் கீற்றுக் கொட்டகைக்குள் தான் கூட்டிய சபையின் நடுவில் அவர் அமர்ந்து ‘சிலுப்பி’யை ஒயிலாய்ப் பிடித்து கஞ்சாப்புகையை உள்ளிழுத்து மெல்ல மெல்ல விடுகின்ற அழகை(?)யும் விதந்தோதி ‘அக்காட்சியைக் கண்டதே தனது பிறப்பின் பேறு’ எனப் பிதற்றுவது ‘இலக்கியத் தரம்’ அற்ற ‘அநாகரிகம்’ என்பதனால் அவரது வாழ்க்கையையும் படைப்புகளையும் சிந்தனைகளையும் அவரது மரணத்தின் பொருட்டு ஒரு பறவைப் பார்வையேனும் பார்த்து, அவற்றிலிருந்து இந்தக் குமுகம் எதனையேனும் கற்றுக்கொண்டு தன்னை உன்னதப்படுத்திக் கொள்ள இயலுமா என ஆராய்வதே அவருக்குச் செலுத்தும் பொருத்தமான நினைவஞ்சலியாக இருக்கும் என நம்பியதன் விளைவே இக்கட்டுரை.
60'களின் தொடக்கத்தில் ஜெயகாந்தன் |
கெடில நதிக்கரையில் அமைந்துள்ள கடலூர் மஞ்சக்கொல்லையில் 1934-ஏப்ரல் 24ஆம் நாள் த. முருகேசனாகப் பிறந்து, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்று, விழுப்புரத்தில் இருந்த பொதுவுடைமைக் குமியத்தில் (கம்யூன்) வாழ்ந்த தன் மாமாவின் அரவணைப்பில் சில காலம் இருந்து, 1946 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியின் அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த குமியத்தில் வளர்ந்த ஜெயகாந்தனின் முதற் சிறுகதை, கடலூர் காந்தன் என்னும் புனைப்பெயரில் 1950ஆம் ஆண்டில் செளபாக்கியம் இதழில் வெளிவந்தது. அவர் 1952ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து 1964ஆம் ஆண்டில் அவருடைய கருத்துகளையும் அவருடைய போக்குகளையும் அவருடைய சிந்தனைகளையும் பார்த்த அவர்தம் பொதுவுடைமை நண்பர்கள், அவர் வெளியே இருந்தால், நண்பராகவே இருந்து நல்லுதவி செய்ய முடியும் என்று அவருக்குச் சொன்ன ஆலோசனையின் பேரில் அவர் அந்தக் கட்சியைவிட்டு வெளியேறினார். அந்தப் பதினைந்து ஆண்டு காலத்தில் (1950-1964) எந்தவோர் இலக்கியத்தின், இலக்கியவாணரின் தாக்கமும் இல்லாமல் அப்பொழுது அன்றாடம் காச்சியாக வாழ்ந்த ஜெயகாந்தன் தன்னைச் சுற்றியும் தன்னோடும் வாழ்ந்த அன்றாடம் காச்சிகளின் வாழ்க்கையை, இருக்க கை அகல இடமும் உடுக்க கிழியாத உடையும் உண்ண போதிய உணவும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவற்றின் சிடுக்குகளை எந்த வண்ணப்பூச்சுமின்றி தனது படைப்புகளாக வார்த்தெடுத்தார்.
அரசகுலத்தவரும் நிலவுடைமையாளரும் மேட்டுக்குடியினரும் செல்வந்தர்களும் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தமிழிலக்கியப் படைப்புவெளிக்குள் புதுமைப்பித்தனின் எழுத்துகள் வழியாக உள்நுழைந்து, விந்தனின் எழுத்துகளில் வளர்ந்த விளிம்புநிலை மாந்தர்களான நடைபாதையில் வாழ்வோர், பாலியல் தொழிலாளிகள், இழுவண்டிக்காரர்கள், பிச்சைக்காரர்கள், உடலுழைப்புத் தொழிலாளிகள், உளநோயாளிகள், தொழுநோயாளிகள் ஜெயகாந்தனின் சிறுகதைகளிலும் குறும்புதினங்களிலும் புதினங்களிலும் குருதியும் சதையுமாக வாழ்ந்தார்கள். அவர்களது வாழ்க்கையின் இன்பமும் துன்பமும், நெகிழ்வும் நெருக்கடியும், உயர்வும் தாழ்வும், மேன்மையும் கீழ்மையும் அப்படைப்புகளின் பாடுபொருளாக அமைந்தன. அப்படைப்புகள் தம்மைப் படிப்பவர்களின் மனதைப் பிசைந்து, சிந்தையைப் பிறாண்டி, குற்றவுணர்வைத் தூண்டி, தூக்கத்தைக் கெடுத்தன; ‘நம்முடைய ஆசைகளையும் பேராசைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் நாளும் சந்திக்கிற இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை நம்மை அறியாமலேயே நாம் சுரண்டுகிறமா?’ என அவர்களை அகத்தாய்வு செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தின.
1965ஆம் ஆண்டிற்கு சற்று முன்னோ பின்னோ, ‘பிடிசோறு’ என்னும் ஜெயகாந்தனின் மூன்றாவது சிறுகதைத் தொகுதியில் உள்ள சிறுகதைப் படித்த அந்நாளைய ஆனந்த விகடனின் துணையாசிரியரான இதயம் பேசுகிறது மணியன் ஆனந்த விகடனில் தொடர்ந்து சிறுகதைகள் எழுத ஜெயகாந்தனை அழைத்தார். அவ்வழைப்பைத் தொடர்ந்து அவர் எழுதிய பல சிறுகதைகள் அவ்விதழில் முத்திரைக் கதைகளாக வெளிவந்தன. மெல்ல மெல்ல, கொள்கை சார்ந்த சிற்றிதழ்களில் இருந்து வணிகம் சார்ந்த இதழ்களை நோக்கி அவரது படைப்புகள் நகர்ந்தன. அப்படைப்புகளில் விளிம்புநிலை மாந்தர்களுக்கு இடம் கிடைக்கவில்லை; அல்லது மிகக் குறைவாகவே இடம் கிடைத்தன. மாறாக, அந்த இதழ்களின் வாடிக்கையாளர்களாக இருந்த நடுத்தட்டு மக்கள், ஜெயகாந்தனது படைப்புலக மாந்தர்களாக மாறினர். அன்றாடம் காய்ச்சியாக இருந்து அன்றாடம் காய்ச்சிகளைப் பற்றி எழுதிய ஜெயகாந்தன், நடுத்தட்டு மாந்தராக மாறி நடுத்தட்டு மாந்தர்களைப் பற்றி எழுதத் தொடங்கினார். குமுகாயப் பொறுப்புடைய ஓர் எழுத்தாளர் தான் வாழும் குமுகாயத்தின் ஒரு கூறான நடுத்தட்டு மாந்தர்களின் வாழ்க்கையை, அவர்களின் அன்றாட வாழ்வுச் சிக்கல்களையும் அதன் காரணிகளையும் அச்சிக்கல்களை அவிழ்ப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து தானறிந்த முடிவுகளை தனது படைப்புகளின் வழியாக வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால், ஜெயகாந்தன் இக்காலகட்டப் படைப்புகளில் அந்தப் பணியை ஆற்றவில்லை; மாறாக நடுத்தட்டு மக்களின் தனிமனித வாழ்க்கைநெறிப் பிறழ்வுகளை, உள்ளப் பிறழ்வுகளை, பாலுறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். இவற்றைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தபொழுது, “எனக்குத் தெரிந்த வாழ்க்கைகளை வைத்து மட்டுமே நான் எழுத முடியும். அந்த வாழ்க்கையின் மீது எனக்கிருக்கும் பிடிப்பு – பரிவின் காரணமாகவே நான் எழுதுகிறேன்’ என 1966ஆம் ஆண்டில் சுயதரிசனம் நூலின் முன்னுரையில் வாதிட்டார். ஆக 1965ஆம் ஆண்டிற்கு முன்னர் அவர் அறிந்திருந்த, பிடிப்பும் பரிவும் கொண்டிருந்த வாழ்க்கைகள் அதற்குப் பின்னர் அவர் அறியாத பிடிப்பும் பரிவும் கொள்ளாத, கொள்ள முடியாத வாழ்க்கைகளாக மாறிவிட்டன.
அவரது இந்த நிலைமாற்றத்தால் அவருக்குள் ஏற்பட்ட குணமாற்றம் அவரது படைப்புகளின் வழியாக பொங்கித் வழியத் தொடங்கின. முன்னர் தான் நாளும் சந்தித்த மாந்தர்களை தனது படைப்புகளில் உலவவிட்ட ஜெயகாந்தன், இக்கால கட்டத்திலோ, தால்த்தாய் எழுதிய அன்னகரீனாவின் தாக்கத்தில் ‘பாரிஸூக்கு போ’ புதினத்தின் மாந்தர்களான சாரங்கன் – லலிதா – மகாலிங்கம் ஆகியோருக்கு இடையிலான உறவையும் இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசனின் கருத்துகளைகொண்டு சாரங்கன் என்னும் கதைமந்தனையும் துர்கனேவ் எழுதிய புதினம் ஒன்றின் கதைத்தலைவி எழுதும் கடிதத்தின் தாக்கத்தில் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ கதைத்தலைவி எழுதும் கடிதத்தையும் டென்னஸி வில்லியம்ஸின் தாக்கத்தில் ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’ என்னும் குறும்புதினத்தின் கட்டமைப்பையும் படைப்பவராக மாறிப்போனார். ஆனால், ‘அவற்றின் தாக்கத்தால்தான் இவற்றைப் படைத்தேன்’ என அவரே நேர்மையாக எடுத்துரைத்தார்; வேறு பல எழுத்தாளர்களைப் போல அவற்றை மறைக்கவோ, மறுக்கவோ இல்லை.
இவ்வாறு, 1960ஆம் ஆண்டுகளிலிருந்து மெல்ல மெல்ல அவரது குரல் மாறத் தொடங்கியது. பதின்மூன்று வயதிலேயே பொதுவுடைமை குமுமியத்தில் தன் மாமாவோடு சேர்ந்து வாழக் கிடைத்த வாய்ப்பால் பொதுவுடைமையாளர்கள் பலரோடு பழகும் வாய்ப்பையும் அவர்கள் தமக்குள் நடத்திய அறிவாடல்களையும் கேட்கும் வாய்ப்பை ஜெயகாந்தன் பெற்றார். இந்திய விடுதலைவுணர்வு பெருநெருப்பாய் எங்கெங்கும் பரவியிருந்த வேளையில், ‘இந்திய தேசத்திலிருந்து தென்னிந்தியாவைப் பிரித்து, பிரிட்டிசாரின் நேரடிப் பார்வையில் திராவிட நாடாக அது இயங்க வேண்டும்; இல்லையென்றால் பார்ப்பனியம் ஆட்சியே ஏற்படும்’ என ஈ.வெ.இராமசாமி பெரியார் பேசிக்கொண்டு இருந்தார். மேலும், ‘இந்திய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரமும் சைவத் தமிழ்க் காப்பியமான பெரியபுராணமும் மூடநம்பிகையை வளர்க்கவும் பாதுகாக்கவும் செய்கின்றன. எனவே அவற்றை எரிக்க வேண்டும்’ எனக் கூறி இயக்கம் நடத்திக்கொண்டு இருந்தார். அக்கருத்துகளை பரப்புரை செய்யும் படைப்புகள் பலவற்றை சுயமரியாதை இயக்க, திராவிடர் கழக எழுத்தாளர்களும் புலவர்களும் உருவாக்கினர். அப்படைப்புகளை தி. க. சிவசங்கரன் போன்ற பொதுவுடைமை இயக்கத் திறனாய்வாளர்கள் நச்சிலக்கியம் எனக்கூறி விமர்சித்தனர். ப. ஜீவானந்தம் போன்றவர்கள் கம்பராமயாணத்தில் பொதுவுடைமைக் கூறுகளைத் தேடியெடுத்து மேடைகளில் முழங்கத் தொடங்கினர். எஸ். இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கம்பனை மில்டனோடு ஒப்பிட்டு எழுதினர். ப. ஜீவானந்தம், தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் சுப்பிரமணிய பாரதியாரை உலக கவி எனவும் அவர் குறிப்பிடும் ஆரிய நாடே தாம் காண விரும்பும் பொதுவுடைமை உலகம் எனவும் பேசியும் எழுதியும் வந்தார்கள். தனது இளமைக் காலத்தில் இக்கருத்துச் சூழலில் வளர்ந்த, சிந்திக்கப் பழகிய ஜெயகாந்தனின் ஆழ்மனதில் திராவிட இயக்கம் ஒரு நச்சியக்கம் எனவும் திராவிட இயக்கப் படைப்புகள் நச்சுப்படைப்புகள் எனவும் திராவிட இயக்கக் கொள்கைகள் நச்சுக்கொள்கைகள் எனவும் பதிந்துவிட்டன. எனவே, அக்கால கட்டத்தில் வீறோடு இருந்த திராவிடக் கழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கை அவருக்கு வறட்டு கொள்கையாகவும் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கை அவருக்கு இனவெறுப்புக் கொள்கையாகவும் விரைந்து வளர்ந்த அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழடையாள மீட்டுருவாக்கம் அவருக்கு பழமை போற்றலாகவும் தென்பட்டன. அடுக்குத் தொடர்களாலான ஒப்பனை மிகுந்த அவர்களது மேடைப் பேச்சுகள் அவருக்கு எரிச்சல் மூட்டின. எனவே, அந்த இயக்கங்களின் எதிர்ப்பாளராக தன்னை அறிவித்துக் கொண்ட ஜெயகாந்தன், அவற்றின் கொள்கைகளை திறனாய்ந்து தனது மாற்றுக் கருத்துகளை எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த(?) முயலவில்லை. மாறாக, அவர்களது விமர்சனத்திற்கு உள்ளான பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக மாறிப்போனார். வேதாந்த பார்ப்பனியத்தின் புதிய தூதராக தன்னைத் தானே நியமித்துக்கொண்டார்; வறட்டு வேதாந்தத்தை தனது படைப்புகளில் பரப்புரை செய்யத் தொடங்கினார்.
இதன் விளைவாக, பொருளாதார (வர்க்க) வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் பொதுவுடைமை பேராளிகளின் காலடியில் வளர்ந்த ஜெயகாந்தன் சாதிய (வர்ண) வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் திராவிட இயக்கப் போராளிகளை நச்சுகள் எனத் திட்டி, அவர்களது சிந்தனையை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, ‘வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’ என மனம்பேதலித்தவரைப் போல பேசுகிற நிலைக்கு ஆளானார்.
நன்றி அம்ருதா |
திராவிட இயக்கத்தின் களப்பணிகளை அறிந்து, அவற்றின் விளைவுகளை ஆய்ந்து விமர்சனம் செய்வதற்கு மாறாக, திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளை ‘படித்த மேல்வர்க்கத்து முதலியார்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் நடந்த சண்டை’ எனப் புறந் தள்ளினார். தனக்கென ஒரு சிறப்புப் பட்டம் சூட்டிக் கொள்வதற்கு தான் விரும்பினால் ‘ஜெயகாந்தன் பிள்ளை’ என வைத்துக்கொள்வேன் எனக் கூறினார். கல்பனா இதழுக்காக மு. கருணாநிதியைப் பேட்டி எடுத்தபொழுது, கருணாநிதி தம் தந்தை பெயரை முத்துவேலர் என சாதிய அடையாளமற்றுக் கூறியபொழுது, இடைமறித்து, ‘முத்துவேல் பிள்ளை’ எனக் கூறுங்கள் என்றார். பரந்துபட்ட உலகத்தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடிகொண்டிருக்கிறது என்பதனை எடுத்துரைக்கும் நோக்கத்தோடு தன்னால் படைக்கப்பட்டவன்தான் ‘ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்’ புதினத்தின் கதைத்தலைவனான ஹென்றி எனவும் போரில் வீடிழிந்து பிழைப்பிழந்து பர்மாவிலிருந்து ஓடி வந்த சபாபதி பிள்ளையாலும் அவர்தம் நண்பருக்கு மனைவியாலும் வழியில் கண்டெடுக்கப்பட்ட அக்குழந்தைக்கு, அவனால் தன் தகப்பன் என நினைக்கப்பட்ட சபாபதிப் பிள்ளை அவன் தகப்பன் இல்லை; தாய் என நினைக்கப்பட்டவள் அவன் தாய் அல்லள்; அவர்கள் இருவரும் கணவன், மனைவியும் அல்லர்; அவன் பெற்றோர் எந்த நாட்டவர் எந்த இனத்தவர் என்பது யாருக்கும் தெரியாது; அன்பும் அபிமானமும் ஒன்றுபட்ட சூழ்நிலையில் வாழ்ந்த, அந்நியத்தன்மை அற்ற ஞாலமாந்தன் (யுனிவர்சல் மேன்) எனவும் கூறிவிட்டு, அவனை ‘ஹென்றி பிள்ளை’ என மாற்றினார். ஆக ஜெயகாந்தன் விரும்பிய உலகத்தில் வாழும் வாய்ப்புபெறும் எவரும், அவர் ஞாலமாந்தரே ஆனாலும், சாதியற்று இருக்க முடியாது என்றார். அவ்வாறு அவர் கூறியதற்கு, அவரிடமிருந்த திராவிட இயக்க ஒவ்வாமையைத் தாண்டி, மாந்தர்களை நான்கு வர்ணங்களாகப் பிரிக்கிற, வர்ணங்களுக்கு அப்பால் வாழ்பவர்களை மாந்தர்களாகக் கூடக் கருதாத ‘இந்து இசம்’ அவரது பார்வையில் “ஒரு மதமன்று; ஒரு பண்பாடு; ஒரு வாழ்க்கை முறை” என இருந்ததும் காரணமாக இருக்கலாம். எனவேதான், அரசியல் செல்வாக்கோடு இருந்த இந்து மடத் தலைவர் ஒருவரை, ஒரு கொலை வழக்கில் உசாவலுக்காக காவல் துறையினர் கைது செய்தபொழுது வெகுநாளாக திறக்காதிருந்த தனது பேனாவைத் திறந்து குறும்புதினம் (?) ஒன்றை எழுதி, ‘ஒரு நம்பிக்கை – ஒரு ஆழமான நம்பிக்கை – வீழ்த்தப்படும்போது தன்னால் சந்தோஷப்பட முடியாது’ என்றார். இங்ஙனம் சாதி, மத வளையத்திற்குள் ஜெயகாந்தன் மீண்டும் மீண்டும் சென்று நின்றதற்கு அவருடைய திராவிட இயக்க ஒவ்வாமை நோய் மட்டும்தான் காரணமா அல்லது அவரின் ஆழ்மனத்திற்குள் கெல்லியெடுக்கப்படாமல் புதைந்துகிடந்த இடைநிலைச் சாதியச் சிந்தனையின் எச்சமும் காரணமா என்பதை உளப்பகுப்பாய்வு செய்து அறிய வேண்டும். ஒருவேளை அவ்வாய்வின் முடிவு, இன்றைய நிலையில் மேலெழுந்து வருகிற சாதி சார்ந்த கூக்குரல்களில் இன்றைய எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின் வகிபாகத்தை அளவிட்டு அறிய உதவக்கூடும்.
நிறைவாக, ஜெயகாந்தனின் மறைவையொட்டி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் பொருட்டு, அவரது படைப்புகளின் வழியே அவரது சிந்தனைப்போக்கை நோக்குகையில், இந்திய விடுதலைக்கும் பொருளாதாரச் சமத்துவதற்கும் சலியாது போரிட்ட அந்நாளைய பொதுவுடைமைப் போராளிகளின் கண்பார்வையில் வளர்ந்து தான் பெற்ற ஞானத்தோண்டியை, திராவிட இயக்க ஒவ்வாமை நோய்க்கு ஆட்பட்டு தன் வாழ்நாள் முழுக்க கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்த நந்தவனத்து ஆண்டியாகவே அவர் தோற்றம் தருகிறார்.
நன்றி தோழர் அரிஅரவேலன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2