புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
prajai
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
417 Posts - 48%
heezulia
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
28 Posts - 3%
prajai
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உறவுகள் வேண்டும்! Poll_c10உறவுகள் வேண்டும்! Poll_m10உறவுகள் வேண்டும்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள் வேண்டும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:14 pm

நீண்ட நாட்களுக்குப் பின், கடைவீதியில் தன் பழைய நண்பன் ராசுவைப் பார்த்தார் பாண்டி.
''என்ன பாண்டி எப்படி இருக்க... பாத்து ரொம்ப நாளாச்சு,'' என்று ராசு தான் முதலில் ஆரம்பித்தார்.
''நல்லா இருக்கேன் ராசு, நீ எப்படி இருக்க...''

''நானும் நல்லா இருக்கேன்; பிள்ளைங்கள்லாம் என்ன செய்யுது... உன் மூத்த மகனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டயா...''

''இல்ல ராசு... கல்யாணப் பேச்ச எடுத்தாலே வேணாங்கிறான்; அதான், ஒரே கவலையா இருக்கு.''
''பாத்து பாண்டி... இப்படித்தான், எங்க பக்கத்து வீட்டுப் பையன் கல்யாணம் வேணாம்ன்னு பிடிவாதமா சொல்லிட்டு இருந்தான். கடைசில பாத்தா, சென்னையில யாரோ ஒரு பொண்ணு கூட குடும்பம் நடத்திட்டு இருந்துருக்கான். அப்பறம் வேற வழியில்லாம காதும் காதும் வெச்சமாதிரி, கல்யாணத்த செஞ்சு வச்சாங்க.

''நம்மூர்ல இருக்கற வரைக்கும்தான் பசங்க நல்லவங்களா இருக்காங்க; சென்னை தண்ணி குடிச்சதும் மொத்தமா மாறிடறாங்க. அந்த மாதிரி, நம்ம ரமேசு செய்யாதுன்னாலும் சீக்கிரமா கல்யாணம் செய்து வச்சிரு; அதுதான் நல்லது,''என்றார்.

நண்பன் சொன்னதில் இருந்து இனம் புரியாத பயம், பாண்டியின் மனதை ஆக்ரமித்தது. 'ரமேஷ், சென்னையில் வீடு பிடித்து தங்கிய போது போனது. அதன்பின், அவன்தான் இங்கே வந்திருக்கிறானே தவிர, நாம போனது இல்ல. ஒருவேளை, ரமேஷ் கல்யாணம் வேணாம்ன்னு சொல்றதுக்கு, ராசு சொல்வது போன்ற காரணம் இருக்குமோ...' என, பாண்டிக்கு மனதில் ஏதேதோ சிந்தனைகள் ஓடியதில் தலை வலித்தது.

'வேண்டாம்... இந்தக் குழப்பத்தை நீடிக்க விடக்கூடாது; உடனே சென்னைக்கு போயி பாத்துட வேண்டியது தான்...' என, முடிவு செய்தவர், நேராக ரயில் நிலையம் சென்று, டிக்கெட் பதிவு செய்து விட்டு வந்தார்.

மகன் ரமேஷ் பற்றிய மனக்குழப்பத்தில் இரண்டு நாட்களை கழித்தவர், சென்னைக்கு போறேன் என்று சொன்னால், மனைவியும் தன்னுடன் புறப்பட்டு விடுவாள் என நினைத்து, ''கன்னியாகுமரியில ஓய்வூதியம் பெறுவோரின் சங்க மீட்டிங் இருக்கு; போயிட்டு நாளை காலையில வந்துருவேன்...'' கூறி ரயில் நிலையம் நோக்கிச் சென்றார்.

சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறான் ரமேஷ். மாதம் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்பி விடுவான். ஆனால், திருமணப் பேச்சு எடுத்தால் மட்டும், 'அதுக்கு என்ன அவசரம், இன்னும் இரண்டு ஆண்டு போகட்டுமே...' எனக் கூறி மறுத்து விடுவான்.

சென்னை, நங்கநல்லூரில் ஒரு அபார்ட்மென்டில் தங்கியிருந்தான் ரமேஷ். தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயில் பிடித்து பழவந்தாங்கலில் இறங்கினார். அண்டர்கிரவுண்ட் வழியாக வெளியே வந்ததும், ஒரு ஆட்டோவில் ஏறி ரமேஷின் அபார்ட்மென்ட் வாசலில் இறங்கினார்.

முதல் மாடிக்குச் சென்று, காலிங்பெல் அழுத்தியதும், 'கமிங்' என்று பெண் குரல் கேட்டது. உச்சியில் இருந்து, உள்ளங்கால் வரை ஒரு அதிர்ச்சி பரவுவதை உணர்ந்தார் பாண்டி.
..........................

கதவைத் திறந்த பெண்ணைப் பார்த்ததும், அவருக்கு மயக்கமே வரும் போல இருந்தது. அந்தப் பெண் முகத்திலும் அதிர்ச்சி... ''வா... வாங்க...'' என்று கதவைத் திறந்து விட்டவள், தன் அறைக்குள் ஓடினாள். அதற்குள் குளியலறையில் இருந்து, ''யாரு வந்துருக்கா...'' என்று கேட்டபடி வந்த, ஒரு பையனைப் பார்த்ததும், பாண்டிக்கு மேலும் அதிர்ச்சியானது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:17 pm

'அடப்பாவிகளா...' என்று உள் மனது கூக்குரலிட்டது. அடுத்த அறையில் இருந்து வெளியே வந்த ரமேஷ், அப்பாவைப் பார்த்து லேசாக அதிர்ந்தாலும், அடுத்த விநாடியே, ''வாங்கப்பா... என்னப்பா திடீர்ன்னு,'' என்றான்.

''திடீர்ன்னு வந்ததுனால தானே... இந்தக் கூத்தயெல்லாம் பாக்க முடிஞ்சது,'' என்றார் கோபத்துடன் பாண்டி.

''அப்பா... அதைப் பற்றி அப்புறம் பேசலாம்; முதல்ல காபி குடிங்க,'' என்ற ரமேஷ், உள்ளே நோக்கி குரல் கொடுத்தான். அதற்குள் அந்தப்பெண் காபி கொண்டு வந்து வைத்தாள். 'வேண்டாம்' என மறுக்க நினைத்தபோதே காபியில் இருந்து வந்த மணம் பாண்டியை கட்டிப்போட்டது. ஒன்றும் சொல்லாமல் காபியை குடித்தார்.

''ராஜா... நீ ஷைலுவ காலேஜில விட்டுட்டு, உன் காலேஜுக்கு போ... நான் இன்னிக்கு லீவு போட்டுட்டு அப்பாவோட இருக்கேன்,'' என்றான் ரமேஷ்.
பரபரப்பாக இருவரும் கிளம்பினர். அதுவரை டீபாயில் கிடந்த, நாளிதழை படித்துக் கொண்டிருந்தார் பாண்டி.

புறப்படும்போது, ''பெரியப்பா...'' என்றனர் இருவரும். பேப்பரை கீழே இறக்கி, 'என்ன...' என்பது போல் பார்த்தார் பாண்டி.

''நாங்க காலேஜுக்கு போய்ட்டு வரோம்,'' என்று கூறி, பாண்டியின் காலில் விழுந்து வணங்கினர்.
''நல்லபடியா போயிட்டு வாங்கப்பா...'' தன்னையறியாமல் பாண்டியிடமிருந்து வார்த்தைகள் வந்தன.
''பெரியப்பா... பொரியல், சாம்பார் எல்லாம் செஞ்சு வெச்சிருக்கேன். காலைல இட்லி சாப்பிடுங்க; மத்தியானத்துக்கு சாதம் மட்டும் வைக்கணும்; ரமேஷ் அண்ணா சாதம் வெச்சிடுவான்; வெளில சாப்பிடாதீங்க... சாயந்தரம் நாங்க வந்துடுவோம்,''பயம் குறைந்தவளாய் சகஜமாக பேசினாள் ஷைலஜா.
பாண்டியும் எந்த ரியாக் ஷனும் காட்டாமல், ''சரிம்மா,'' என்றார்.

அவர்கள் சென்ற அடுத்த நொடி, ''என்னடா நினைச்சுட்டு இருக்க... ஆடு பகை குட்டி உறவா உனக்கு... அவங்கப்பன்கள் முடிஞ்சவர என்னய அசிங்கப்படுத்திட்டு இருக்கானுங்க. இங்க என்னடான்னா... அண்ணன், தம்பி, தங்கைன்னு எல்லாம் உறவு கொண்டாடிட்டு இருக்கீங்க... என்ன நடக்குது இங்க,'' என்றார் ஆத்திரத்துடன்.

''அப்பா... எங்களப் பொறுத்தவரை, ஆடு மட்டுமல்ல, குட்டியும் உறவுதான். உங்களுக்கு, உங்க தம்பிக வேண்டாதவங்களா இருக்கலாம்; ஆனா, எங்களுக்கு வேணும்ப்பா. உங்களுக்குள்ள என்னப்பா பெரிய பிரச்னை... முறையா கூப்பிடலை, வெத்தல பாக்கு வெக்கலன்னு, ஒண்ணுக்கும் உருப்படாத காரணமா சொல்றீங்க. ஆனா, அது இல்லன்னு, உங்க மனசாட்சிக்கு நல்லா தெரியும். காசு பணம் இல்லாதப்ப உங்க உறவு நல்லா தானேப்பா இருந்துச்சு...

''சித்தப்பா உங்களவிட அதிகம் சம்பாதிச்சு, கொஞ்சம் வசதியானதும் தான், உங்களுக்கு அவர் மேல பகை வந்துச்சு. அவர் பொண்ணு, நம்ம குடும்பத்து மூத்த பெண் வாரிசு. அவ கல்யாணத்துக்கு நீங்க மட்டும் தானேப்பா போனீங்க. அதுவும் வேத்து மனுஷங்க மாதிரி, கரெக்டா முகூர்த்த நேரத்துல போயிட்டு, சாப்பிடக்கூட இல்லாம திரும்பினீங்களே...'' என்றான் குற்றம் சாட்டுவது போல!

''ஆமாடா... அவன் பொண்ணு கல்யாண ஏற்பாடு பத்தி, குடும்பத்துல மூத்தவன் என்கிட்ட ஏதாச்சும் சொன்னானா... மாப்பிள்ளை வீடு பாக்கப்போறோம்ன்னு தகவல் சொன்னானே தவிர, நீயும் வான்னு என்னய கூப்பிட்டானா... அப்புறம் எப்படிடா அவன்கிட்ட உறவாட முடியும்...''

''அப்பா... அவர் கூப்பிடாததுக்கு பல காரணம் இருக்கலாம். 'ஏன்டா... எப்போ போகணும்'ன்னு நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே... அவர் உங்ககிட்ட அப்படி எதிர்பாத்திருக்கலாம்ல... இப்படி உப்புச்சப்பில்லாத காரணங்களால நீங்க எல்லார்கிட்டயும் பகை பாராட்டிட்டு இருக்கீங்க.

''நீங்க மட்டும் ரெண்டு தம்பி, ரெண்டு தங்கைன்னு பெரிய சொந்தங்களோட வாழ்ந்தீங்க. ஆனா, எங்களப் பாருங்க... நம்ம வீட்ல நானும், என் தம்பியும் மட்டுந்தான். பெரிய சித்தப்பா வீட்டுல ஷைலஜாவும், அவ அக்காவும், கடைசி சித்தப்பா வீட்டுல ராஜாவும், அவன் தம்பியும்ன்னு நாங்க எல்லாரும் ரெண்டு ரெண்டு பேரா, நேரடி அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இல்லாம இருக்கோம்.

''நாளைக்கு, என் கல்யாணத்துக்கு தாலி முடியற நாத்தனார் யாரு... இப்ப ஷைலஜாவோட அக்கா முழுகாம இருக்கா. நாளைக்கு, அவ குழந்தைய யார் மடில உக்கார வச்சு முடியிறக்குறது... நீங்க எல்லாம் நல்லா உறவுகளோட சந்தோஷமா இருந்தீங்க. ஆனா, நாங்க மட்டும் ஒத்தக்கோண்டா நிக்கணுமா... காலம் மாறிடுச்சுப்பா. பணவசதி இல்லாம இருந்தப்ப அடுத்த வீட்ல செய்யுற பலகாரம், நம்ம வீட்டுக்கு வரும்; பக்கத்து வீட்டுக்கு எதிர்பாராத விருந்தாளிங்க வந்தா, நம்ம வீட்ல என்ன இருக்கோ அது போகும்.

ஆனா, அதெல்லாம் இப்ப மறந்துட்டு கூடப்பொறந்த தம்பிகளோட சண்டை போட்டுட்டு இருக்கீங்க; என்னால அப்படி இருக்க முடியாதுப்பா.

''சித்தப்பா மக கல்யாணத்துக்கு நீங்க போன அழகைப் பாத்ததும் தான், எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு முடிவு செஞ்சேன்; எனக்கு கல்யாணம்ன்னா... அதுல சித்தப்பாக்கள், அத்தைகள் எல்லாரும் இருக்கணும்.

''குடும்பத்துக்கு மூத்தவர் நீங்க. உங்களுக்கு மட்டுமில்ல, நம்ம அடுத்த தலைமுறைக்கும் நான் தான் மூத்தவன். எனக்குன்னு சில பொறுப்பு இருக்கு; ஷைலஜா நல்ல மார்க் வாங்கினா, அண்ணா பல்கலைக்கழகத்துல சீட் கிடைச்சுது... அவள ஹாஸ்டல்ல விட தான் சித்தப்பா முடிவு செய்தாரு. நான்தான் நம்ம வீட்ல தங்கச் சொன்னேன். ராஜாவுக்கும் சென்னைல, ஒரு நல்ல கல்லூரியில சீட் கிடைச்சுது. அதுனால நாங்க மூணு பேரும், இங்க தங்கியிருக்கோம். மூணு பேருமே, நம்ம குடும்பத்து அடுத்த தலைமுறை.

''ஷைலஜாவோட அக்கா மயிலாப்பூர்ல இருக்கா. அவ, குழந்தை உண்டாகியிருக்காளாம்; அதனால, அவள பாக்க இன்னக்கி சாயங்காலம் போகலாம்ன்னு இருக்கோம். வரதா இருந்தா வாங்க. பாழாய்ப்போன உங்க வறட்டு கவுரவம் தான் முக்கியம்ன்னா நீங்க வீட்ல இருங்க. நாங்க மூணு பேரும் போயிட்டு வறோம்,''என்று பொரிந்து தள்ளிய மகனைப் பார்த்ததும், வாயடைத்துப் போனார் பாண்டி.

கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தவர், பின் மகனைப் பார்த்து, ''வீட்ல தேங்கா, வெல்லம், மைதா மாவு இருக்காடா,'' என்றார்.

அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தவாறு, ''வெல்லம் மட்டும் இல்லப்பா; மற்றதெல்லாம் இருக்கு. எதுக்குப்பா கேட்குறீங்க...'' என்றான்.

''சாரதாவுக்கு போளி ரொம்ப பிடிக்கும்; புள்ளதாச்சிப் பொண்ணு. அத செஞ்சு கொண்டு போலாம்ன்னுதான்...''என்று அவர் கூறி முடிக்கும் முன், ''அப்பான்னா அப்பாதான்,'' என்று குழந்தைபோல், தந்தையைக் கட்டிக்கொண்டான் ரமேஷ்.

கே.ஸ்ரீவித்யா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 16, 2015 6:52 pm

சூப்பர்




விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Mar 16, 2015 7:19 pm

கதையை படித்ததும் கண்கள் கலங்கிவிட்டன. என்ன சொல்வதென்று தெரியவில்லை

விஸ்வாஜீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விஸ்வாஜீ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 8:29 pm

நன்றி இனியவன்...........நன்றி விஸ்வா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 18, 2015 4:04 pm

கதை அருமைமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக