புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
26 Posts - 39%
prajai
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Jenila
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
6 Posts - 5%
prajai
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Rutu
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Jenila
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
viyasan
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_m10வசூல் ராஜா MBBS !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசூல் ராஜா MBBS !!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 24, 2015 4:30 pm

First topic message reminder :

வசூல் ராஜா MBBS !!! - Page 3 WOTmplpESlud4S0pLOKo+doc

நல்லா சொன்னாங்க நம்ம பெரியவங்க.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று.. ஒவ்வொரு வீட்டிலும் பிரேம் போட்டு மாட்டவேண்டிய வாசகம் இது. இந்த வாழ்வு வாழ்வதற்கு நம்ம தாத்தாக்கள் ... திருவள்ளுவர், திருமூலர் போன்றவர்கள் பல சொல்லியிருந்தாலும் நம்ம விதி... இந்த அல்லோலகலப்பட வைக்கும் அலோபதியிடம்தானே மாட்டிக்கொள்ளும்படி நேரிடுகிறது.

அலோபதி டாக்டர்களிடம் போய் மாட்டிக்கொள்ளாத "புண்ணியவான்களே" நமது ஊரில் இருக்க முடியாது. "ரமணா" படம் எல்லாம் சும்மாதான். அந்தப்படம் கோலிக்குண்டு அளவுதான்; நிசம் இமயமலையைவிட பெரிசு.

என் அனுபவத்தில் இப்படி நான் மாட்டிக்கொண்ட நிஜக்கதைகள் ஏராளம். அதைப்பற்றி சொல்லத்தான் இந்தத்திரி. உறவுகள் நீங்களும் நிச்சயமாக மாட்டியிருப்பீர்கள். அதையும் இந்தத் திரியில் வெளியிடுங்கள். மேலே சொன்ன புண்ணியவான்களை உருவாக்க முடியுமா என்று பார்ப்போம்.

முதல் கதை:- "ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!

(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 26, 2015 11:09 pm

krishnaamma wrote:ஆமாம் நீங்க மறுபடி அந்த கம்பெனி டாக்டரை போய் பார்க்கலையா? ....என்ன ஒரு அநியாயம்?................... ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1122773

... போய்ப்பார்த்து கடிதத்தைக்காட்டி, அங்கேயே வெற்றிகரமாக வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். அந்த நிறுவன வரலாற்றிலேயே 'மெடிகல் செக்கப்பில்' ஃபெயிலாகி வேலைக்குச்சேர்ந்தது நான் மட்டும்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

பின்நிகழ்வுகள்:-
1) இப்படி நடந்திருந்தாலும் அந்த நிறுவனத்தில்தான் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டது. அது ஒரு பல்கலைக்கழகம் போல. என்னை வாழவைத்தது அந்த நிறுவனம்தான். அதற்கு நன்றிக்கடன்பட்டவன் நான்.

பின்னர் அங்கிருந்து வி.எஸ்.எஸ் வாங்கிக்கொண்டு வெளியில் வந்து சுயதொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறேன். அதற்குக்காரணம் அந்த நிறுவனமும்... அங்கு கற்றுக்கொண்ட பாடமும்தான்.

2) ரிஜெக்ட் செய்யப்பட்ட எனது பெரிய அண்ணன் 'ஜிண்டால்' நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ளார்.

3) ரிஜெக்ட் செய்யப்பட்ட எனது சின்ன அண்ணன் 'தமிழ்நாடு மின்சார வாரியத்தில்' நல்ல பதவியில் உள்ளார்.

4) நான் 'வி.எஸ்.எஸ்' வாங்கும்போது என் தந்தை வருத்தப்பட்டார். "எத்தனை பேர் காலில் விழுந்து இந்த வேலையை வாங்கிக் கொடுத்தேன். இப்படி விட்டுவிட்டு வந்துட்டானே" என்று மற்றவர்களிடம் கூறி வருத்தப்பட்டார். வேலையை விடப்போகிறேன் என்று அவரிடம் முன்கூட்டியே சொல்லவும் இல்லை (வளர்ந்த உடன் லார்டு லபக்குதாஸ் ஆயிடறமே நாம....! எப்படி சொல்லுவோம்!!!)

5) அவர் வருத்தப்பட்டதற்குக்காரணம் இரண்டு.
ஒன்று... நல்ல வேலை போய்விட்டது என்று...
இரண்டாவது... நம்பக்கூடாதவர்களை நம்பி நல்லவேலையை விட்டுவிட்டானே என்று...
இரண்டாவதாக அவர் நினைத்தது மிகச்சரியாக போய்விட்டது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 27, 2015 12:52 am

//.. போய்ப்பார்த்து கடிதத்தைக்காட்டி, அங்கேயே வெற்றிகரமாக வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். அந்த நிறுவன வரலாற்றிலேயே 'மெடிகல் செக்கப்பில்' ஃபெயிலாகி வேலைக்குச்சேர்ந்தது நான் மட்டும்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

பின்நிகழ்வுகள்:-
1) இப்படி நடந்திருந்தாலும் அந்த நிறுவனத்தில்தான் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டது. அது ஒரு பல்கலைக்கழகம் போல. என்னை வாழவைத்தது அந்த நிறுவனம்தான். அதற்கு நன்றிக்கடன்பட்டவன் நான்.//

'அது'............ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க .சூப்பர் சாமி புன்னகை.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 28, 2015 1:07 pm

வசூல் ராஜா MBBS !!! - Page 3 UTCdkpicSDytIrN7SpPX+Skeleton-Copy

"ஒரு நாள் நோயாளி"யை "வாழ்நாள் நோயாளி"யாக்கி வருமானம் பார்க்கும் கில்லாடி டாக்டர்

எனக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருந்த சமயம் அது. இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் என முடிவாகியது. இது நடந்து ஓரிரு மாதங்களில் வலது தோள்பட்டை ஓரமாக லேசான வலி எனக்கு ஏற்பட்டு அது தொடர்ந்து இருந்து கொண்டு இருந்தது.

அருகில் உள்ள கிளினிக்கில் பார்த்தேன். மருந்துகள் சாப்பிட்டேன். அந்த வலி ஒன்றும் குறையவில்லை. என்னுடைய வீட்டில் இருந்தவர்களுக்கு பயம். திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது இப்ப போய் உடலில் பிரச்சினையா என. லேசான வலி நாளடைவில் பெரிய பிரச்சைனைக்கு கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது என எல்லோருக்கும் பயம்.

என்னுடைய அண்ணன் அவருக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்து ஒரு டாக்டரைக் கண்டுபிடித்தார். அவர் ஒரு  நரம்பியல் நிபுணர். ந.நி இராமமூர்த்திக்கு அடுத்த நிலையில் உள்ளவர் எனச் சொன்னார்கள்.

அவருடைய 'கிளினிக்கிற்குச்' சென்றேன். இடம் சென்னை அண்ணாநகர் சிந்தாமணி அருகில். டாக்டரைப்பார்ப்பதற்கு அப்படி ஒரு கூட்டம். க்யூ வரிசையில் உட்கார்ந்தேன். கூட்டத்தைப் பார்த்தபோதே எங்களுக்கு ஒரு நம்பிக்கை ; என்னுடைய பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழப்போகிறது என. ஆனால் அது முற்றுப்புள்ளி அல்ல கால்புள்ளி(கமா) என அப்போது எனக்குத் தெரியவில்லை.

நேரம் போவதற்கு க்யூவில் இருந்த மற்ற நோயாளிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது டாக்டரின் வீரப்பிரதாபங்கள் எல்லாம் தெரியவந்தது. கைராசியான டாக்டராம். ஒருவர் சொன்னார் நான் 10 வருடமாக வந்து கொண்டிருக்கிறேன். மற்றொருவர் சொன்னார் 15 வருடம் என்று.. இப்படி பலப்பல விசயங்கள். அவர்கள் சொல்லச் சொல்ல டாக்டரின் மீது உள்ள நம்பிக்கை ஏறிக்கொண்டே வந்தது.

இது போதாது என மருத்துவமனை ஊழியர்கள் வேறு. டாக்டர் எல்லாப் பாடத்திலும் 200க்கு 200 மார்க் வாங்கியவராம். அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராம். இதைக்கேட்டு, நம்பிக்கை "கிராப்" மேலும் மேலும் ஏறிக்கொண்டே வந்தது.

என்னை உள்ளே வரசொன்னார்கள். போனேன். எல்லா செக்கப்களையும் செய்து முடித்தார் டாக்டர். இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கி இருக்கு. அரை மணி நேரம் காத்திருங்கள் எனச் சொன்னார். அரைமணி நேரம் கழித்து உள்ளே சென்றவுடன் ஒரு 'பெட்'டில் என்னை படுக்கச் சொன்னார்கள். சூட்கேஸிலிருந்து ஒரு கருவியை எடுத்தார் டாக்டர். பல ஒயர்கள் அதில் இருந்தது. வலது கையை தள்ளி வைக்கச் சொன்னார்கள். வைத்தேன். அந்த ஒயர்களையெல்லாம் உடம்பில் பல இடங்களில் வைத்துவிட்டு இரண்டு 'நாப்களை' எடுத்து என்னுடைய வலது கையில் இரண்டு இடத்தில் வைத்தார் டாக்டர். அலறி... துடித்துப்...போய் விட்டேன். என்னுடைய வலது கை என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் துள்ளி விழுந்தது. அந்த இரண்டு 'நாப்களின்' மூலமாக சில 'மில்லிவோல்ட்' அளவு கரண்ட்டை வைத்து செக் செய்துள்ளார் அந்த டாக்டர். இது அவரே கண்டுபிடித்த கருவியாம். இப்படி வலதுகையின் நரம்புகளில் பல இடங்களில் வைத்து செக் செய்தார். கைகழுவிக்கொண்டார். எல்லாவற்றையும் எடுத்துவிட்டு... ரூமிற்குள் வரச்சொன்னார்.

ரூமில், "உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி வந்துள்ளது (அப்போது எனக்கு 24 வயதுதான்), ட்ரீட்மென்ட் தொடர்ந்து எடுக்கணும். நாளைக் காலையில் இருந்து ட்ரீட்மெண்ட்க்கு வந்துடுங்க" என்றார்.

(தொடரும்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 28, 2015 10:17 pm

பயம் பயம் பயம் ......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 28, 2015 10:31 pm

மாணிக்கம் நடேசன் wrote:"ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!

ஒரு வேளை அதிலேயே எஸ்ரே கருவி பொருத்தப்படிருக்குமோ?   அத வச்சித்தான்  டாக்டர்  ஈசியா ஓட்டைய கண்டுபிடிச்சிட்டாரு.

அவர் முன்பு பிளம்பராக இருந்தவர் அய்யா - நம்ம சாமி டெஸ்டுக்கு முன்னாடி தண்ணி குடிச்சிருப்பாறு, அது கொஞ்சம் சட்டையில் சிந்தியதில், நம்மாளு லீக்கை கண்டுபிடிச்சுட்டாரு - நல்ல வேளை எம்சீல் வெச்சு அடைக்காம போனாரு புன்னகை




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 03, 2015 5:58 pm

"ஒரு நாள் நோயாளி"யை "வாழ்நாள் நோயாளி"யாக்கி வருமானம் பார்க்கும் கில்லாடி டாக்டர் -தொடர்ச்சி...
வசூல் ராஜா MBBS !!! - Page 3 1MJvAZETQD2Y4d9NxShX+download

காலையில் மருத்துவமனைக்குச் சென்றேன். பெட்டில் படுக்கச்சொன்னார்கள். TRACTION முறைப்படி (படம் பார்க்க) கையையும் காலையும் கட்டி விட்டு ஊசி மற்றும் மருந்து (சலைன் போல) ஏற்றினார்கள். ஏற்கனவே சொன்ன 'கரண்ட்' டெஸ்ட் வேறு முதலில் செய்தார்கள். 'டங்குவார்' கழன்று விட்டது என்று பேச்சுவழக்கில் சொல்வார்களே அது இதுதான் போலிருக்கிறது. அசதி என்றால் அப்படி ஒரு அசதி. வேலைக்கே போகமுடியாத நிலை.

இந்த 'ட்ரீட்மெண்ட்' காலை ஒரு வேளை மட்டுமல்ல. ஒரு நாளில் காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் இந்த மருத்துவம் தொடர்ந்தது.

இதைத் தொடர்ந்து மாத்திரைகள். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.... ஒரு வேளைக்கு 13 காப்ஸ்யூல் மாத்திரைகள். விதவிதமான நிறங்கள். அந்த டாக்டருடைய மனைவிதான் 'மெடிக்கல் ஷாப்' இன்சார்ஜ். என்னைப்போலவே பலரும் இப்படி மூட்டை மூட்டையாக கலர் கலராக மருந்து வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு தடவை  TRACTION முறைப்படி ட்ரீட்மென்ட் செய்வதற்கு 300 ரூபாய். ஒருநாளைக்கு 900 ரூபாய் TRACTION க்கு மட்டும். இது மட்டுமல்லாமல் மாத்திரை மருந்து செலவுகள் வேறு.

மூன்று வேளை TRACTION  மற்றும் ஒரு வேளைக்கு 13 மாத்திரைகள் விழுங்கினால் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள். மாத்திரைகளை விழுங்கும்போது எனக்கு 'விக்கல்' வந்துவிடும். இந்தக் கொடுமை ஒரு வாரம் தொடர்ந்தது.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 04, 2015 11:34 pm

"ஒரு நாள் நோயாளி"யை "வாழ்நாள் நோயாளி"யாக்கி வருமானம் பார்க்கும் கில்லாடி டாக்டர்" - தொடர்ச்சி...(பாகம்-3)

அதற்கு அடுத்த வாரம் காலை மாலை என இருவேளை வரச் சொன்னார். மாத்திரைகள் குறையவில்லை. TRACTION போட்டு ஊசி குத்தி மருந்து ஏற்றி...இப்படியே மருத்துவம் தொடர்ந்தது ஒரு மாதம் வரை (இப்படி மருந்து ஏற்றினால்தான் நரம்புக்கு நேரடியாகச் செல்லுமாம் !?!?!?!)

அதற்கு அடுத்த மாதம் சாயந்தரம் ஒரு வேளை எனத் தொடர்ந்தது. மருந்து குறையவில்லை. "ரொம்ப லென்த்தியா போய்க்கிட்டே இருக்கே" எப்ப முடியும் என டாக்டரைக் கேட்டால் புன்னகையை மட்டும் சிந்தி தலையை லேசாக முன்னும் பின்னும் அசைப்பார் (அவரே ஒரு நாள் சொல்லுவாராம்... அல்லக்கைகள் சொல்லியது).

இதற்குள் திருமண நாளும் நெருங்கிவிட்டது. ட்ரீட்மெண்ட் நடக்கும்போதே பெண்வீட்டாரிடம் சொல்லச் சொல்லிவிட்டேன். நாளைக்கு ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார்கள் எனச் சொல்லக்கூடாது என்று.

டாக்டரிடம் சென்று திருமணம் அடுத்தவாரம், ட்ரீட்மெண்ட் எப்படி செய்வது? என எங்களுடைய சந்தேகங்களைக் கேட்டோம். அதிசயமாக இரண்டு வாரம் 'லீவ்' கொடுத்துவிட்டார் டாக்டர். மருந்தை மட்டும் தொடருங்கள் எனச் சொல்லிவிட்டார். அதற்குப்புறம் வந்து பாருங்கள் என்றார்.

திருமணம் முடிந்து வந்து டாக்டரிடம் காட்டினேன். வரவேற்றவர் நாளையிலிருந்து 3 வேளையும் வந்து TRACTION போட்டுக்கொள்ளுங்கள் (மறுபடியும் முதல்ல இருந்தா?...) என்றார். ஒரு வாரம் தொடர்ந்தேன்.

"இப்படியே போய்க்கொண்டே இருந்தால் எப்படி" எனத்தோன்ற ஒட்டுமொத்த ரெக்கார்டுகளையும் கொண்டுபோய் புதிய ஆவடி சாலை, பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள எம்.என்.ஆர்த்தோபீடியாக்  மருத்துவமனைக்குச் சென்று காட்டினேன். அந்த டாக்டரின் பெயர் நடராசன். முதியவர். எழுந்து நிற்கச் சொன்னார். இரண்டு உடற்பயிற்சிகள் செய்யச்சொன்னார். (கையையும் தோளையும் குலுக்குவது கைகளை நீட்டுவது என்று). இது போதும் என்று சொல்லிவிட்டார்.

அதன்பின்னர் இன்றுவரை எனக்கு அந்த வலி இல்லை.

அந்த நரம்பியல் நிபுணரிடம் நான் செலவு செய்தது 50 ஆயிரம் ரூபாய்க்கும்மேல் இருக்கும். நான் சொல்லும் காலகட்டத்தில் யமஹா 125 சிசி பைக் (பழைய யமஹா) வெறும் 35 ஆயிரம் மட்டும்தான். அவரிடம் நான் வைத்தியத்தை தொடர்ந்திருந்தால் இன்று வரை சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்திருப்பேன். இப்படித்தான் பலரும் அவரிடம் வந்துக்கொண்டிருந்தார்கள் (வந்து கொண்டிருப்பார்கள்!!!)  

முதலில் ஒரு நாளில் மூன்று வேளை... அடுத்து இரண்டு... ஒன்று... வாரத்திற்கு ஒரு தடவை.... பிறகு மாதத்திற்கு ஒரு தடவை... இப்படியாக அந்த புண்ணியவான் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் பாவத்தை!!!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 15, 2015 11:36 pm

(பாகம்-4)
டாக்டர்..........!?!?!?!?!?!?!?!?!?!?!?!?  

தொழில்ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். இது நடந்தது 2007 இருக்கும் என நினைக்கிறேன். சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சென்னையிலிருந்து அந்த ஊருக்கு புறப்படத்தயாராக இருந்தது ரயில். ஓடோடிச் சென்று ஏசி மூன்றாம் வகுப்பில் உட்கார்ந்தேன். ஏசி வகுப்பு என்பதால் பயணம் செய்பவர்கள் அளவாகத்தான் பேசிக்கொள்வார்கள். சாப்பிடும்போது கூட வாய் அதிகமாக அசையாது. பயணம் செய்வது என்னவோ நம்மூர் முனியாண்டிகளும் கண்ணம்மாக்களும்தான்... ஆனால் பெரும்பாலும் ஆங்கிலம்தான் பேசிக்கொள்வார்கள்.

வழக்கம்போல் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துப் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய பக்கம் இரண்டு பேரும் எதிரில் 2 பேரும் உட்கார்ந்திருந்தனர். எதிரில் ஒரு சீட் காலியாக இருந்தது. ரயில் புறப்படும் சமயம் ஒரு பெண் அவசரம் அவசரமாக வந்து எதிரில் உட்கார்ந்தார்.

அந்தப்பெண் எதேச்சையாக பக்கத்தில் உட்கார்ந்தவரை திரும்பிப்பார்க்க... உரையாடல் ஆரபித்தது.
பெண்: சார் நீங்களா? வணக்கம் சார்! (55 வயதுக்கும் மேற்பட்ட அவர் காலை தொட்டுக்கும்பிட்டார். இந்தப்பெண்ணுக்கு வயது சுமார் 35 க்குள் இருக்கும்.)

அவர்: எப்படிம்மா இருக்கீங்க? வீட்டில எல்லாரும் செளக்கியமா?
பெண்: நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?
அவர்: நல்லா இருக்கேன். வேலை எப்படிப்போகுது.
பெண்: என்ன இருந்தாலும் உங்ககிட்ட வேலை பார்த்தமாதிரி கிடையாது சார். என்ன ஒரு அன்பு உங்களுக்கு எங்ககிட்ட எல்லாம். இப்பல்லாம் அப்படி இல்ல சார். இன்னக்கி வரைக்கும் காலேஜ்ல உங்கபேரு சொன்னா தனி மரியாதைதான் சார்.

இப்படியாக அவர்கள் இருவர் பேச்சும் போய்க்கொண்டிருந்தது. நான் சாப்பிட்டு முடித்து விட்டேன். அவர்கள் இருவரும் அவ்வளவு அன்னியோன்னியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப்பெண் தான் கொண்டு வந்திருந்த டிபனை அவருக்குக் கொடுக்க அவர் இந்தப்பெண்ணுக்கு தான் கொண்டு வந்ததை கொடுத்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்பொழுது அவர் ஒரு சீனியர் டாக்டர் எனவும், இந்தப்பெண் அவரிடம் பணிபுரிந்த ஸ்டாஃப் எனவும் தெரிந்தது. கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. அப்படி ஒரு நெகிழ்ச்சியான பேச்சு.

டிக்கெட் பரிசோதகர் வந்து செக் செய்துவிட்டுப்போன பிறகும் பேச்சு தொடர்ந்தது. அவர் அன்பாக, தன்னுடைய வீட்டுக்கு வாங்கி வைத்திருந்த திண்பண்டங்களில் சில எடுத்துக்கொடுத்து குழந்தைகளுக்குக் கொடுங்கள் என்றார். அந்த வருட டைரிகல் சிலவற்றையும் கொடுத்தார். இந்தப்பெண்மணி மறுக்க அவர் கட்டாயப்படுத்திக்கொடுத்தார். என்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு பாசமான BOSS – STAFF  நான் பார்த்ததில்லை.

ரயில் மேல்மருவத்தூர் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. எனக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்ற UPPER BERTH இல் படுத்துக் கொண்டேன். மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்க “கடமையே கண்ணாக” கண் அயர்ந்தேன்.

நடு இரவு. விழிப்பு வந்து விட்டது. ஏசி அல்லவா? சிறுநீர் போய்விட்டு வந்துவிடலாம் என இறங்க எத்தணிப்பதற்குள்....எதிரே பார்த்தால்....எதிர் சீட் டாக்டரும் பெண்மணியும் தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தனர். (அவர்களுடைய சீட் LOWER BIRTH & MIDDLE BIRTH).  அட... இன்னமுமா பேசிக்கொண்டிருக்கிறார்கள் என யோசித்தேன். எழுந்திருக்காமல் கண்ணை மட்டும் சுழற்றிப்பார்த்தால்... அடச்சே...... இரண்டு சனியன்களும் அசிங்கம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். மங்கலான வெளிச்சமும் ஏசி என்பதால் மற்றவர்கள் அனைவரும் இழுத்துப் போர்த்திக் கொண்டிருப்பதும் இந்த நாய்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இதுக்குதான் அவ்வளவு பில்டப்பா? எனக்குப்புரியாம போச்சே!

எனக்கு அந்த ஏசியிலும் வேர்த்துக்கொட்டியது. நான் பார்த்தது அவர்களுக்குத் தெரிந்து என்மீது அபாண்டமாக பழி ஏதாவது போட்டுவிட்டால்...? ஆகக் கண்ணை மூடிக்கொண்டு வந்த இயற்கை அழைப்பையும் பொறுத்துக்கொண்டு தூங்கி விட்டேன்.

காலை 5 மணி அந்தப்பெண்மணி இறங்கவேண்டிய ஸ்டேசனில் அவள் இறங்கிக்கொள்ள இவன் டாட்டா காட்டினான். இவன் இரவில் செய்த அட்டூழியத்தை எத்தனை பேர் என்னைப்போல் பார்த்தார்களோ... தெரியவில்லை. அதற்கு அடுத்த ஸ்டேசன்  நான் இறங்கவேண்டிய ஸ்டேசன். இறங்கினேன்.

என்னை இறங்கவிடாமல் கீழேயிருந்த ஒரு அரசாங்க டவாலி ஒருவன் “இருங்க.. இருங்க.. ஐயா எங்கே... ஐயா எங்கே... என உள்ளே ஓடினான். நான் கீழே இறங்கிவிட்டு வேடிக்கைப்பார்த்தேன். யாரைக் கூட்டிவர இப்படி ஓடினான் என்று. உள்ளேயிருந்து அந்த டாக்டர் இறங்கிக் கொண்டிருந்தான். இந்த டவாலி கூட்டத்தை அப்புறப்படுத்தி அந்த டாக்டரை வெளியே கூட்டிச் சென்றான். கூட்டத்தில் சிலர் அந்த டாக்டரைப்பார்த்து கும்பிட்டார்கள். அந்த டாக்டர் நெஞ்சை நிமிர்த்தி இரண்டு கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தான்.

கும்பிட்ட ஒருவரைப்பார்த்து கேட்டேன்.
“யார் சார் அவர்?”
“அவர்தான் இந்த ....................... ...........................க்கல்லூரியின் டீன்”
?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?
(மனதுக்குள்) அடப்பாவி! டீனா? நீயெல்லாம் மருத்துவம் சொல்லிக்கொடுத்து நாடு உருப்படுமா? உங்கிட்ட படிக்கிற மாணவிகளை நீ எப்படிப்பார்ப்ப....? உங்கிட்ட மருத்துவம் பார்க்க வர பெண்கள்கிட்ட நீ எப்படி நடந்துப்ப....? கடவுளே....கடவுளே...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 15, 2015 11:51 pm

ஆஹா........2 ...3 படிக்கணும் நான்.......வந்து படித்து பதிவு போடுகிறேன் சாமி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 16, 2015 5:13 pm

ஹிப்போக்றேடிஸ்  பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்களா தற்காலத்திய மருத்துவர்கள் ? சந்தேகம் தான் .
எடுத்துக்கொண்டாலும் அதன் படி நடந்து கொள்கிறார்களா என்பது வேறு விஷயம் .
தற்காலத்தில் கற்பு என்பதற்கு அர்த்தம் என்ன என்று தெரியவில்லை .
பெண்களும் /மனைவிகளும் கவலை படுவதில்லை -கணவன்மார்கள் கண்டு கொள்வதே இல்லை .
10 பேர்களுடன் படுக்கை பகிர்ந்து கொண்ட நடிகைகளை , மணம்  புரிந்து வாழ்க்கை நடத்துவதால் ,
அந்த நடிக நடிகைகளை தெய்வமென  மதிக்கும் இளம் தலை முறையினர் அவர்களை பின்பற்றுவதால் தான் இந்த அசிங்கமெல்லாம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக