புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 18%
heezulia
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
372 Posts - 49%
heezulia
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
25 Posts - 3%
prajai
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாழ்க்கை இன் ரகசியம்' by Krishnaamma :)


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 11:31 am

இது எனது 3 வது கதை புன்னகை...............இதுவும் ஒரு ஊடகத்தின்  செய்தியால் வந்த தாக்கம் தான் நண்பர்களே ! புன்னகை

காலை இல் கணவன் அருண் மற்றும் மகன் வருண் ஆபீஸ் மற்றும் பள்ளிக்கு சென்றதும் வந்து 'ஹாய்' யாக சோபாவில் அமர்ந்தாள் உமா மகேஸ்வரி.  சிலமாதங்கள் முன்பு வரை கூடவே   இருந்த மாமியார் மாமனார் இப்போது இல்லாதிருப்பது  கொஞ்சம் நிம்மதி போல உணர்ந்தாள். ஆனால் அருண் தான் எதையோ பறி கொடுத்தாற் போல இருக்கான், இந்த வருணும் எப்பவும் பாட்டி எப்பவருவா, தாத்தா எப்ப வருவா என்று கேட்டுக்கொண்டே இருக்கான்.

அன்று அவர்களை ஹோமில் சென்று பார்த்துவிட்டு வந்ததும், " அம்மா, அவங்க ஏன் இங்கே இருக்காங்க, நம்ப வீட்டில் இல்லை ?....அவங்க பாத்ரூம் நல்லாவே இல்லம்மா" ..............என்றெல்லாம் சொன்னான்...........

" இங்கே பக்கத்தில் தானே இருக்காங்க, எப்போவேண்டுமானாலும் நாம் வந்து பார்க்கலாம், பேசாமல் வா வருண் " என்று தான் போட்ட மிரட்டலால் தான் பேசாமல் வந்தான்............இதெல்லாம் கொஞ்ச நாட்கள் தான், பிறகு இருவரும் சகஜமாகி விடுவார்கள் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

இப்படி யோசித்துக்கொண்டே டிவி பார்கையில்  போன் மணி ஒலித்தது. மறுமுனை யில் ஒரு ஆண் குரல்,

" ஹலோ, இது மிஸ்டர். அருண் வீடு தானே? "

"ஆமாம், நீங்க யாரு, நான் அருண் மனைவி தான் பேசறேன்" .....

" ஓ... குட் மோர்னிங் மேடம், நான் சங்கர், உங்கள் மகன் வருண் பள்ளியிலிருந்து   பேசுகிறேன்".............

உடனே உமா கொஞ்சம் பதட்டத்துடன், " என்ன சார் , வருணுக்கு என்ன? " ....என்றாள்

" அடடா........வருணுக்கு ஒன்றும் இல்லை , நாங்கள் ஆபீஸ் லிருந்து பேசுகிறோம் மேடம்" என்றான்.......

பிறகு தொடர்ந்து, " எங்கள் பள்ளி 40 வது வருடத்தை  கொண்டாட இருப்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும், அதற்காக ஒரு வருட புத்தகம் வெளி இடலாம் என்று எண்ணுகிறோம். அதன் ஒரு பகுதியாக, இந்த பள்ளி யில் படித்த முன்னாள் மாணவன் அல்லது மாணவியின் குழந்தைகள்  இப்போது இங்கு படிப்பவர்களாக இருக்கும் பக்ஷத்தில், அவர்களிடம் பேசி, அவர்களின் போடோவுடன் புத்தகத்தில் போடலாம் என்று முடிவு   எடுத்திருக்கிறர்கள்; அது தொடர்பாக பேசுகிறேன்" என்று முச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

" ஒ...அப்ப சரி" என்றாள் உமா .

உடனே அவன், இவர்களின் வீட்டு விலாசம், அருண் மற்றும் இவளின்  பெயர், வருண் படிக்கும்  வகுப்பு...என்று பலதும் சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டான். இவர்களின் பேச்சு புத்தகத்தில் போட தகுதியானால், பிறகு போட்டோ வாங்கிக்கொள்வதாக சொன்னான். மேலும், இவர்களின் பேச்சை தான் ரெகார்ட் செய்து கொள்வதாகவும், ஒரு 10 நிமிடங்கள் தனக்காக ஒதுக்கும் பதியும் கேட்டுக்கொண்டான். உமாவும் எல்லாவற்றிக்கும் சரி  என்று சொன்னாள்.

கேள்விகளை ஆரம்பித்தான், "முதலில், நீங்கள் ஏன் எங்கள் பள்ளி யை தேர்ந்து எடுத்திர்கள்? "...

" உங்கள் பள்ளியில் நல்ல கல்வியைத் தவிர , நல் ஒழுக்கங்களும், பெரியவர்களை மதித்து நடக்கும் முறையும், மனிதாபிமானமும் கற்றுத்தருகிரீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் ஆக்குகிறீர்கள்  .......... ஏன், என்  கணவரையே எடுத்துக்கொள்ளுங்கள், நல்ல பழக்க வழக்கங்கள்  நிறைந்தவர், எவ்வளவு கொட்டிக்கொடுத்தாலும் என் படிப்பு என் தாய் நாட்டுக்குத்தான் உதவணும் என்று பிடிவாதமாய் இங்கேயே இருப்பவர். ... அவசியம் என்று அவர் ஆபீஸ் யில் நினைத்தால், வெளிநாடு  போய் வருவாரே அல்லாது அங்கு செட்டில் ஆக விரும்ப  மாட்டார்".. ...............என்றாள்.

மறுமுனையில் "அவ்வளவு தானா ?" ...என்றதும்,

" அது என் கணவர் படித்த பள்ளி என்பதாலும் தான் "...." என் மகனும் இதுபோலவே இருக்கணும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றாள் .

" புரியவில்லையே மேடம்".... அதாவது, எங்கள் வருண் எங்களை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வாழ்க்கை நடத்துவது எங்களுக்கு பிடிக்காது, அவன் எப்போதும் எங்களுடனே, எங்கள்  கண் முன்னே இருப்பது தான் எங்களுக்கு சந்தோஷம்.......குழந்தைகளை பெற்று கஷ்டப்பட்டு வளர்ப்பது, , அவர்கள் பெரியவர்கள் ஆனதும் கஷ்டப்படாமல் சுகமாய் இருக்கத்தானே?............அதை நாம் கண்குளிர கண்டால் தானே நாம் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்....சொல்லுங்கள்"...என்றாள்......எப்படியும் பேசி அசத்தி, வருட புத்தகத்தில் தங்கள் போட்டோ வரும்படி செய்யணும் என்கிற வேகம் இருந்தது அவள் பேச்சில்.

" ரொம்ப சரி...நீங்கள் இப்படி நினைக்கிறீர்கள்  ஆனால் வருண்?....உங்கள் மகனிடம் எப்போதாவது இது பற்றி பேசி இருகிறீர்களா? ".........

" அவன் கண்டிப்பாக எங்களை விட்டு பிரிந்து இருக்க சம்மதிக்கவே மாட்டான்".............என்றாள்

" ஒருவேளை ..ஒருவேளை அவன் அப்படி போய் விட்டால்.........அவன் உங்களிடம், "நான் உங்களுக்கு தேவையான பணம் அனுப்புகிறேன், உங்களுக்கு இங்கு ஒரு குறைவும் வராது" என்று சொன்னால்.............அப்போது உங்கள் நிலை என்ன, என்ன சொல்வீர்கள் அவனிடம்? "...............

" ஏன் இப்படி மறுபடி மறுபடி கேட்கிறீர்கள்  ?............அவன் பணம் அனுப்பினால் மட்டும் நாங்க இங்கே சந்தோஷமாய் இருந்துவிட முடியுமா மிஸ்டர். சங்கர்? ...கூட இருந்தால் தானே நல்லா இருக்கும், வெறும் பணமும் சௌகர்யங்களுமா  முக்கியம்? ...........மகன், மருமகள் பேரன் பேத்தி என்று எல்லோர்  கூடவும்  இருப்பது தானே வயதான காலத்தில் சந்தோஷம்?...அவன் சுகமாய் வாழுவதை பார்க்க கொடுத்து வைத்திருக்கணுமே?"...........என்றாள்

" நீங்கள் என்ன சொன்னாலும் அவன் கேட்கவில்லை என்றால்?.............தான் வெளி நாட்டில் செட்டில் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால்? "

நிதானம் இழந்த உமா, கொஞ்சம் குரலை உயர்த்தி "என்ன மிஸ்டர். சங்கர், ஏதோ கேள்வி பதில் என்று பார்த்தால், தேவை இல்லாமல் பேசரீங்க? .....கேட்க வந்ததை கேளுங்க அனாவசிய  பேச்சு வேண்டாம்............என்றாலும் சொல்கிறேன் எங்க வருண் அப்படி செய்ய மாட்ட ன், நாங்க எங்கள் தேவைகள் சிலவற்றை அவனுக்காக குறைத்துக்கொண்டு அவனுடைய வளமான  எதிர்கலத்துக்காக பாடுபடுகிறோம் என்று அவனுக்கு நன்கு தெரியும் " என்றாள் காட்டமாக..

" கோபிக்க வேண்டாம் மேடம், உங்களின் மன நிலையை அறியவே அப்படி கேட்டேன்.............பேச்சு வளர்ந்து விட்டது, இதற்கு மட்டும் பதில் சொல்லிவிடுங்கள் போதும்....வேறு யாருடைய வற்புறுத்தலுக்காகவோ  அவன் உங்களை கை விட்டு விட்டால்.....அப்போ உங்களின் மன நிலை எப்படி இருக்கும்? ".................." அத்துடன், உள்நாட்டில் அல்லது உள்ளுரில் இருக்கும் மகன்கள் எல்லோருமே தங்களின் தாய் தகப்பனை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்கள் வாதமா? "......................

யாரோ மண்டையில் 'சம்மட்டி' யால் அடித்தது போல உணர்ந்தாள் உமா. கொஞ்சம்  முன்பு குரலை உயர்த்தியவளுக்கு இப்போது நாக்கு எழவே  இல்லை ....பேச முயாமல் தொண்டையை அடைத்தது....மாமனாரும் மாமியாரும் ஒரு கணம் மனக்கண்ணில் வந்து போனார்கள்.... அப்படி தானும் ஆகிவிடுவோமே????? என்கிற எண்ணமே மனம் வலித்தது.....கொஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்த்தது...............

" என்ன மேடம் , பதிலே இல்லை? "..............ஹல்லோ, லைன் யில் இருக்கீங்களா?.............மிஸஸ் . அருண்?"......

thodarum........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 12:04 pm

" என்ன மேடம் , பதிலே இல்லை? "..............ஹல்லோ, லைன் யில் இருக்கீங்களா?.............மிஸஸ் . அருண்?"......

கம்மிய  குரலில் பதில் அளித்தாள்...."ம்ம்ம்....இருக்கேன்.........வந்து..............என்று கொஞ்சம் அழுகையுடன் ஆரம்பித்தவளை எதிர்புறத்திலிருந்து  வந்த மென்மையான  குரல் அடக்கியது..............

" மன்னிக்கணும், மிஸஸ்.அருண், நான் பள்ளி இலிருந்து பேசலை...............வெயிட் வெயிட்............போன் ஐ கட் செய்து விடாதீர்கள்..............நான் அருண்னின் நண்பன்...............onsite க்கு சென்று போனவாரம் தான் வந்தேன், பார்த்த போது அருண்  ஏதோ பறி கொடுத்தது போல இருந்தான், கேட்டால் ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டான், என்றாலும் நான் எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்களிடம் விசாரித்ததில்  அவன் மனமே இல்லாமல் , மன்னிக்கணும், உங்கள் வற்புறுத்தலுக்காக மட்டுமே பெற்றவர்களை ஹோம் மில் விட்ட விஷயம் தெரிந்து கொண்டேன்................அது தான் இந்த நாடகம்................

மீண்டும் மன்னிக்கணும், நான் ஒரு பேச்சுக்கு சொன்னபோதே உங்களால் தாங்க முடியவில்லையே, அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்திர்களா ? ...அவர்களும் உங்களைப்போலவே   தன் தேவைகளை குறைத்துக்கொண்டு தானே  அருணை வளர்த்திருப்பார்கள்?..............அவர்களுக்கும் தன் மகன், மருமகள் பேரனுடன் தங்களின் கடைசி காலத்தை கழிக்கும் எண்ணம் இருந்து இருக்கும்?..........ப்ளீஸ்,  அழாதீர்கள் உமா, நான் உங்கள் குடும்ப நலனுக்காகத்தான் பேசுகிறேன்............அருணை அப்படி சோகமாய் பார்க்க முடியவில்லை என்னால்...................

இது எங்கு கொண்டுபோய் விடுமோ அவனை..............தன் கவலைகளை உங்களுடன் பகிரமுடியாமல்,  நண்பர்களிடமும் பகிராமல் மனதிலேயே வைத்து  வருந்துவதால்  உடல் நலம் குன்றலாம்............ அல்லது இவ்வளவு நாள் இல்லாத  சில கெட்ட பழக்கங்களுக்கு  அடிமையாகலாம்...............எதற்கு  இப்படி எல்லோரும் வருந்தணும்?......

மகன் வருத்தப்படுவதை எந்த பெற்றோராலும்  பார்த்துக்கொண்டு இருக்க முடியாது...............அதுவும் தங்களால் அவன் கஷ்டப்படுவான்னானால், அவர்கள்  தாங்களாகவே  ஒதுங்கிவிடுவார்கள்..............ஒடுங்கி விடுவார்கள் உமா, அது தான் உங்கள் விஷயத்தில் நடந்திருக்கு, அருண் உங்களுக்கும் சொல்ல முடியாமல் பெற்றவர்களுக்கும் சொல்லமுடியாமல் படும் அவஸ்த்தையை பார்க்க சகிக்காமல் தான் அவர்கள் ஹோமில் இருக்கிறார்கள்..............என்றாலும் அவர்களும் வருத்தத்துடன் தான் இருக்கிறார்கள்............." "....உமா, இருகீங்களா? "....................

" ம்...இருக்கேன் சங்கர்"..என்றாள்

" இதற்கும் ஒரு சாரி, ஏன் பெயர் சங்கர் இல்லை...சும்மா சொன்னேன்....நான் யார் என்றே உங்களுக்கு தெரியவேண்டாம், எப்பவாவது  என்னை நீங்கள் பார்க்க நேர்ந்தால்....உங்களுக்கு ரொம்ப 'எம்பரசிங்' ஆக இருக்கும்..............சரியா? "................." நீங்கள் கேட்பதாக இருந்தால் இன்னும் ஒன்று சொல்லணும்"....என்று இழுத்தான்..................

" ம்...சொல்லுங்கள்".............என்றாள் கொஞ்சம் தெளிந்த மனதுடன்.

" அருண் தன் தாத்தா பாட்டியுடன் வளர்ந்ததால் தன் மகனும் அப்படி வளரணும் என்று விரும்புகிறான், ஆனால் வருண் நிலைமையை கொஞ்சம்  யோசியுங்கள்..................அவன் பாட்டி தத்தா ஹோமில் இருப்பதை பார்த்து வளர்ந்தால்................????நாளை உங்களை ஹோமில் விடும்போது அருண் மாதிரி பதட்டம் கூட இருக்காது அவனிடம், அப்பா செய்ததைத்தானே  தானும் செய்கிறோம்................ இதில் வருத்தப்பட  என்ன இருக்கு என்று உங்களையே  கேட்பான், அது தான் தங்கள் பழக்கம் என்று அவன் நினைத்து  விடும் அபாயமும் இருக்கே?......"என்றான்

மேலும் தொடர்ந்து சொன்னான் ..." பழைய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் உமா, ஒருவன் தன் அப்பா இறந்ததும் அவருக்கு உணவு கொடுத்த அலுமினிய தட்டை தூக்கி போட போனானாம்  , அதற்கு அவனுடைய மகன் சொன்னானாம், வெச்சிருப்பா நாளைக்கு உனக்கு வேண்டுமே என்று"...........நாளை அது போல த்தானே ஆகும் உங்கள் நிலைமையும் ?..............."

" உமா, நாம் எதை விதைக்கிறோமோ அது தான் அறுவடைக்கு வரும், அவர்கள் செய்வது சொல்வது எல்லாம் சரி என்று நான் சொல்லவரலை, நீங்கள் மட்டுமே குற்றவாளி என்றும் நான் சொல்லவரவில்லை, அவர்கள் வயது போனவர்கள், அவ்வளவு சீக்கிரமாக தங்களை மாற்றிக்கொள்ள முடியாது.........நாம் இளைஞர்கள் , கொஞ்சம் வளைந்து கொடுத்தல் தான் என்ன ?.............."

" நீங்க என்ன சொன்னாலும், இன்று அருண் இருக்கும் இருப்பு அவர்கள் உருவாக்கியது தானே, அதற்காகவும் அவர்களின் வயதுக்கும் கொஞ்சம் கிரெடிட் அவங்களுக்கும் கொடுங்களேன்.............'முதலே' அவர்களுடையது தானே?.....அதற்கான  லாபத்தில் கொஞ்சம் பங்கு அவர்களுக்கும் கொடுங்களேன்  "......." என்ன சரியா?" என்றான் சிரிப்புடன்.

மேலும் சொன்னான்...." நீங்க அருணின் நிகழ் காலம், அப்பா அம்மா இறந்த காலம், மகன் வரும்காலம்.......எல்லாம் பின்னி பிணைந்தது தானே வாழ்க்கை.....ஒன்றில்லாமல் மற்றது எப்படி உமா? "

தொடர்ந்து .........."ஆபீஸ்சில் சில சமையம் ஒன்றுமே தெரியாத மானேஜரிடம் மாட்டிக்கொண்டு , திட்டு வாங்குவது இல்லையா.........கை கட்டி சம்பளம் வாங்குகிறோம் தான்...... ஆனால் மானேஜர் ஏதோ தன் பாக்கெட் லிருந்து தருவது போல அலட்டுவார்..........இந்த கம்பனியை விட்டு விட்டால் நாம் யாரோ அவர் யாரோ..............என்றாலும் அவர் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயந்து, அட்ஜஸ்ட் செய்து  தானே வேலை செய்கிறோம்......................அது ஏன் வீட்டில் வருவது இல்லை?..............அதுவும் இது தொடரும் பந்தம் இல்லையா?..............நீங்க புத்திசாலி.....புரிந்துகொண்டு அருணுடன் பேசி, ஆவன செய்வீர்கள்  என்று நம்புகிறேன்.............."  என்று முடித்தான் .

மழை பெய்து ஓய்ந்தது போலவும்  ....சூறாவளி அடித்தது போல உணர்ந்தாள் உமா...........மனம் தெளிவானது...............குரலை செருமிக்கொண்டு பேசத் துவங்கினாள்......." மிக்க நன்றி உங்களுக்கு, என் அருணுக்கு இப்படி ஒரு நண்பர் கிடைக்க அவர் கொடுத்து வைத்திருக்கணும்..............உங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  இவ்வளவு  பெரிய நன்மையை எங்களுக்கு செய்ததற்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்கு தெரியலை" ..............என்று விம்மினாள்...........

பிறகு கொஞ்சம் தேறி,  " இதற்கு அருண் வரணும் என்று இல்லை நண்பரே, இதோ உங்களுடன் பேசியதும் நானே போய் மாமனாரையும் மாமியாரையும் ஹோமிலிருந்து அழைத்துக்கொண்டு  வந்து விடுகிறேன்..................மாலை அருணும் வருணும் வரும்போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும்.............நீங்கள் அவரிடம் எதுவும் சொல்லவேண்டாம்......சரியா?"...................என்று கேட்டுக்கொண்டாள்.

பரஸ்பரம் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொண்டார்கள் ................அவன் ஆல் தி பெஸ்ட் என்றும் சொன்னான்............ஆமாம் இனி எல்லாம் சுகமே என்று நினைத்தாள் உமா.................... கார்  சாவியை எடுத்துக்கொண்டு அவர்களை கூடி வர சந்தோஷமாய் கிளம்பினாள்...............கணவனின் பூரித்தமுகம் இப்போதே மனக்கணில் வந்தது.

முன்பெல்லாம் சொல்வார்கள், கணவனின் மனதை  பிடிக்க அல்லது  அவனுடைய பரிபூரண அன்பைப்பெற நன்றாக சமைத்து போடணும், வயிறு தான் மனதை அணுக எளிய வழி என்று ஆனால் அதைவிட சுலபமானது எது தெரியுமா?.............அவன் யாரிடம் அன்பை அதிகமாக செலுத்துகிறானோ அவர்களிடம் வந்தவள் அதிக அன்பு செலுத்தினால் போதும்............... அவனுக்கு அவர்களைப்பற்றிய கவலை இல்லாமல் இவளிடமே
' சரண்டர் '  ஆகிவிடுவான்...........அது போதாதா அமைதியான, இனிமையான வாழ்க்கைக்கு? .......இப்போது உமாவுக்கு 'வாழ்க்கை  இன் ரகசியம்'  புரிந்து விட்டது.

கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 27, 2015 12:32 pm

ஒரே மூச்சில் முழு கதையையும் படித்து முடித்தேன்
இது சிறு கதை அல்ல பெருங்கதை.  எதையும் புரியும் விதமாக எடுத்துச் சொன்னால் பல விடயங்களுக்கு  தீர்வு கண்டு விடலாம் இதன் வழி வாழ்க்கை ருசிக்கும், இனிக்கும்.
அற்புதமாக கதையை பின்னி சிறப்பான கருத்தையும் உடன் வைத்து விட்டீர்கள் அக்கா. இப்பொழுதெல்லாம் பெற்ற பிள்ளைகளே பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் போது,  இந்த  மருமகள் செய்த தவற்றை உணரந்து நல்ல முடிவு எடுத்த தங்க மகள் உமா மகேஸ்வரிக்கு எனது வாழ்த்துகள். நாட்டில் இன்னும் பல உமா மகேஸ்வரிகள் பிறக்க வேண்டும், முதியோர் இல்லங்கள் மூடப்பட வேண்டும்.  உண்மையான நண்பர்கள் என்பதற்கு அருணும், சங்கரும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நல்ல  சீர் திருத்த கதை, தொடருங்கள் அக்கா. நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 27, 2015 1:43 pm

மூன்றாவதும் முத்தாகவே இருக்கிறது .
அடுத்தடுத்து இடைவெளி இல்லா மூன்று பிரசவம் !
வாழ்த்துக்கள் .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sundarr.sa
sundarr.sa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 27/01/2015

Postsundarr.sa Tue Jan 27, 2015 1:48 pm

அருமையான நடை. சில வரிகள் கண்களில் நீர் ததும்ப வைக்கின்றன. உங்களிடம் நல்ல திறமை உள்ளது. மென்மேலும் நிறைய எழுத எனது வாழ்த்துக்கள். சூப்பர் புன்னகை

சுந்தர்

sundarr.sa
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sundarr.sa

Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

PostAarthi Krishna Tue Jan 27, 2015 2:00 pm

கதை மிகவும் அருமை .உறவுகளின் அன்பு ,அக்கறை ,முக்கியதுவம்......அனைத்தையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் அம்மா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 27, 2015 3:35 pm

sundarr.sa wrote:அருமையான நடை. சில வரிகள் கண்களில் நீர் ததும்ப வைக்கின்றன. உங்களிடம் நல்ல திறமை உள்ளது. மென்மேலும் நிறைய எழுத எனது வாழ்த்துக்கள். சூப்பர் புன்னகை

சுந்தர்
வாருங்கள் சுந்தர் அவர்களே , முதலில் ஈகரை அறிமுக திரியில் உங்களை அறிமுகம் செய்துகொங்களேன் புன்னகை புன்னகை

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jan 27, 2015 3:53 pm

திரு. ராஜா அவர்களின் பதிவின்படி தங்களை அறிமுகம் செய்துகொள்ளவும்...........

sundarr.sa
sundarr.sa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 27/01/2015

Postsundarr.sa Tue Jan 27, 2015 4:35 pm

நான் சுந்தர் ராமஸ்வாமி. திருமதி. க்ரிஷ்ணாம்மா வின் கணவன். இன்று நான் அந்த லிங்கின் மூலம் என் மனைவி எழுதிய சிறு கதையை படித்ததும் இங்கு அங்கத்தினராகி அவரை வாழ்த்தினேன்.

பொதுவாக நான் ஈகரை பதிப்புகள் பற்றி எனது மனைவியின் முலமே தெரிந்து கொள்கிறேன். இங்கு அடிக்கடி வந்து பதிவிடுவது எனக்கு கடினம்.

நன்றி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 27, 2015 4:58 pm

sundarr.sa wrote:நான் சுந்தர் ராமஸ்வாமி. திருமதி. க்ரிஷ்ணாம்மா வின் கணவன். இன்று நான் அந்த லிங்கின் மூலம் என் மனைவி எழுதிய சிறு கதையை படித்ததும் இங்கு அங்கத்தினராகி அவரை வாழ்த்தினேன்.

பொதுவாக நான் ஈகரை பதிப்புகள் பற்றி  எனது மனைவியின் முலமே தெரிந்து கொள்கிறேன். இங்கு அடிக்கடி வந்து பதிவிடுவது எனக்கு கடினம்.


 

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1117416

நல்வரவு ,சுந்தர் !
கிருஷ்ணாவின் திருமணத்தில் சந்தித்தோம்  !
(க்ரிஷ்ணாம்மா , போட்டோவை காண்பிக்கவும் )
வேலையின் கடுமை தவிர்க்க , ஓய்வு வேண்டுமெனில் , வரமுடிந்தால்,வாருங்களேன் .
மாற்றமொன்று கிடைக்கும் .மனம் மகிழலாம் .  
ரமணியன்

(கதை உலகில் ,சுந்தர ராமசாமி ---சிறந்த எழுத்தாளர் .
இங்கோ சுந்தர் ராமசாமியின் மனைவி சிறந்த எழுத்தாளர் .
ஜன்ம நக்ஷத்திரத்தில் எழுத ஆரம்பித்து , சக்கை போடு போடுகிறார் .)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக