புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 07, 2014 6:23 pm

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை: குழந்தைகளுக்கான 17 படைப்புகளை வெளியிட்டுள்ள காஸ் விநியோக ஊழியர்
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Untitled_2190709h
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த காஸ் சிலிண்டர் விநியோக ஊழியர் ஒருவர், குழந்தைகளுக்கான 17 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் பொது நூலகங்களில் இவர் எழுதிய படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இச்சாதனைக்கு சொந்தக்காரர் நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தைச் சேர்ந்த குழந்தை எழுத் தாளர் கோதை சிவகண்ணன். கிராமம் கிராமமாக வீடுகளுக்கு காஸ் விநியோகம் செய்யும் பணி அவருக்கு.
காஸ் சிலிண்டரை தோளில் சுமந்து கொண்டே பேசத் தொடங்கினார்.
‘`என்னோட இயற்பெயர் லட்சு மணன். மிகவும் ஏழ்மையான குடும்பத் தில் பிறந்தேன். அப்பா கூலித் தொழிலாளி. உடல் நலமின்மையால் அவரால் வேலைக்குப் போக முடியாத நிலை. எனக்கு 2 தங்கை, ஒரு தம்பி. ஏழ்மை காரணமாக 5-ம் வகுப்பு படிக்கும்போதே விடுமுறை நாள்களில் நெசவுக்கு செல்வேன்.
குடும்ப சூழலின் அழுத்தத்தால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை. அத்துடன் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு லோடுமேன் வேலைக்கு வந்துவிட்டேன். கோட்டாறு கடைவீதியில் கடைகளுக்கு சரக்குகள் எடுத்துவரும் வேலை பார்த்தேன். இப்போது ஹெச்.பி. நிறுவனத்தில் காஸ் விநியோக ஊழியராக இருக்கி றேன்.
படிக்க முடியாத வேதனை ஒரு கட்டத்தில் எனக்குள் ஏக்கமாக மாறிப் போயிருந்தது. அதன் பின் வாசிப்பதற்காக நூலகங்களுக்கு செல்லத் தொடங்கினேன். ராமலிங்க அடிகளார், கண்ணதாசன், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா ஆகியோரின் எழுத்துகள் என்னை மிகவும் ஈர்த்தன. தமிழ் மொழியின் மீது என் நாட்டம் கூடியது.
தமிழ் என்பது வெறும் மொழி மட்டு மல்ல. அது அன்பின், நம் பண்பாட்டின் அடையாளம். ஆனால் குழந்தைகளை தமிழ் வழியில் சேர்ப்பதே அவமானம் என்று பெற்றோர் நினைப்பதை என்னவென்று சொல்வது?
`குழந்தைகளை தமிழ் வழி பள்ளியில் சேருங்கள்’ என நண்பர்களிடம் கூறிய போது, `பைத்தியம்’ என்றார்கள். அப்படியானால் குழந்தைகளிடத்தில் நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும் தாய் மொழியில் கொண்டு சேர்ப்பது எப்படி என்ற தாகம் என்னை எழுதத் தூண்டியது.
கண்மணிகளுக்கான கருத்து கதைகள், குழந்தைகளுக்கான குரு சிஷ்ய கதைகள், விலங்குகள் கூறும் விசித்திர கதைகள், நல்ல நல்ல நெடுங்கதைகள் உள்பட 17 கதை தொகுப்புகளை குழந்தைகளுக்காக எழுதி வெளியிட்டுள்ளேன். ஆரம்பத் தில் கோதை சிவக்கண்ணன் என்ற பெயரில் எழுதி வந்தேன்.
புனைப்பெயரில்
எனக்கு தோளோடு தோள் கொடுத்து, என் முயற்சிக்கு வலு சேர்த்தது என் மனைவி உலகம்மாள். அதனால் `உலகம்மா’ என்ற புனைப்பெயரில் தற்போது எழுதி வருகிறேன்.
தினசரி காலை 7 மணிக்கு காஸ் சிலிண்டரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு லைனுக்கு வந்து விடுவேன். பணி முடித்து ஏஜென்சிக்கு சென்று பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பும்போது இரவு 7 மணி தாண்டிவிடும். அதன் பின் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பேன். இரண்டு மணி நேரம் எழுதுவேன்.
பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த நான் இன்று எழுதும் புத்தகங்களை பிறர் பாராட்டும்போது மனதுக்கு நிறைவு தருகிறது. இன்று பிறந்தநாள் காணும் குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவைப்போல் சிறந்த குழந்தை எழுத்தாளர் என பெயர் எடுப்பதுதான் லட்சியம்.
அந்த தீபத்தை ஏந்தி ஓடுவது ஒரு பக்கம் இருந்தாலும், வாழ்க்கைக்காக லோடு டெலிவரிமேனாகவும் விரும்பியே ஓடிக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.


நன்றி தமிழ் ஹிந்து 

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 25, 2015 3:53 pm

சமூகப் பொறுப்பைத் தோளில் சுமக்கும் சிவகண்ணன் வாழ்க!
இதனை நெஞ்சில் சுமந்த டி.என்.பாலசுப்ரமணியனுக்கு நன்றி !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 25, 2015 4:42 pm

230 அன்பர்கள் இப்பக்கத்தை படித்திருக்கின்றனர் .எண்ணிக்கை கூறுகிறது ,
தங்களின் இனிய பின்னூட்டத்தை திரு சிவகண்ணன் அவர்களின் சேவைக்கே
அர்பணிக்கிறேன் .நன்றி
சிவகண்ணன் போன்றோர் நல்லிதயங்கள் நீண்டு வாழ்க !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 25, 2015 5:34 pm

அருமை அருமை , வெயிலில் நிற்பவருக்கு தான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள் அதுபோல தான் இவரும்.

வாழ்த்துகள் உலகம்மா சிவகண்ணன் அவர்களே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 25, 2015 10:57 pm

ஜனங்களுக்கு , குறிப்பாக குழந்தைகளுக்கு --நாளைய பாரதத்திற்கு --இவர் செய்கிற சேவை
அளவுகோல் கொண்டு அளக்கமுடியாது . ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பதே போல் ,
இளங்குழந்தைகளுக்கு நன்னெறி கதைகளை எழுதுவது மிகவும் சிறந்த சேவையே !
வாழ்த்தபடவேண்டியவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 26, 2015 3:42 am

நல்லபண்பு,சேவை,ஊக்கம்,ஆக்கம்....அன்பரை பாராட்டலாம். மகிழ்ச்சி

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jan 26, 2015 7:17 pm

திறமையும் நல்ல மனமும் எவரிடம் இருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியதே.
பாராட்டுக்கள்.



நேர்மையே பலம்
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக