புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_c10 
2 Posts - 6%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டச் செய்திகள்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 18, 2014 12:52 am

First topic message reminder :

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 -2-26-10

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2018 2:18 pm



காரைக்குடி:அழகப்ப செட்டியார் மகள் உமையாள் ராமனாதன் 90-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ரோட்டரி பியர்ல் சங்கமம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் காரைக்குடியில் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.

சப்-கலெக்டர் ஆஷா அஜீத், அழகப்பா பள்ளி குழும தலைவர் ராமனாதன் வைரவன், தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி சத்திய மூர்த்தி, டி.எஸ்.பி.கார்த்திகேயன், காரைக்குடி நகராட்சி தலைவர் சுந்தராம்பாள், ரோட்டரி துணை ஆளுனர் முத்துக்குமார், பியர்ல் சங்கமம் பட்டய தலைவர் நாச்சியப்பன், தலைவர் நாவுக்கரசு, செயலாளர் சாந்தகுமார், இயக்குனர் சங்க சேவையாளர் சரவணக்குமார், தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா, மகரிஷி பள்ளி தாளாளர் சேதுராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விழிப்புணர்வு ஊர்வலத்தில் பல்வேறு பள்ளியை சேர்ந்த 5,700 பேர் பங்கேற்றனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2018 2:20 pm



காளையார்கோவில்: காளையார்கோவில் _- பரமக்குடி செல்லும் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே ஜலகண்ட அய்யனார்கோயில் கண்மாய் உள்ளது.

இக்கண்மாயின் அருகில் விறகு லாரிகள், சரக்கு வேன்கள் நிறுத்தப்படுகின்றன. கோடை காலத்திலும் வற்றாத இக்கண்மாய் தண்ணீரில் வாகனங்களை டிரைவர்கள் கழுவுவது வழக்கம். கடந்தாண்டு ஏற்பட்ட கோடை வெப்பத்தால் வறண்டு விட்ட இக்கண்மாயில், கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த கண்மாயையும், அதன் கரைப்பகுதியையும் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மேலும், கண்மாய்க்குள் தேங்கியுள்ள சிறிதளவு தண்ணீரையும் அசுத்தம் செய்து வருகின்றனர். கோழிக்கடைகளில் தேங்கும் கழிவுகள், மருத்துவமனை கழிவுகள், டீக்கடைகளின் பிளாஸ்டிக் கப்புகள், எச்சில் இலைகள், பழைய துணிகள் ஆகியவை இங்கு கொட்டப்படுகிறது.

தற்போது பெய்து வரும் சிறு மழையால் குப்பை, கழிவுகளில் இருந்து துர்நாற்றம் பரவி வருகிறது. இக்கண்மாய் அருகில் உள்ள 150 க்கும் அதிகமான வீடுகளில் வசிப்பவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.

இக்கண்மாயை சுற்றிலும் கம்பிவேலி அமைத்து, குப்பை கொட்டப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2018 2:21 pm



சிவகங்கை:காரில் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட நெல்லை வாலிபருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.நாட்டரசன்கோட்டை அருகே 2010 செப்., 9 ல் சிவகங்கை தாலுகா போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். காரில் வாள், பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் சென்ற மூன்று பேரை போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், ' மூவரும் நெல்லை வையாபுரிநகரைச் சேர்ந்த அய்யப்பன், சிதம்பரம், கீழ்ஆம்பூரைச் சேர்ந்த சங்கர், 31 என்பது தெரியவந்தது. மேலும் கூலிப்படையைச் சேர்ந்த மூவரும் நெல்லையில் கவுன்சிலர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக சென்னையில் வாடகை காரை எடுத்து வந்து, நாட்டரசன்கோட்டையில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தனர்,' என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு சிவகங்கை முதன்மைக் குற்றவியல் நடுவர்மன்றத்தில் நடந்தது. ஏற்கனவே இவ்வழக்கில் அய்யப்பனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிதம்பரம் இறந்துவிட்டார்.நேற்று சங்கருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை, 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2018 2:21 pm



தேவகோட்டை: தேவகோட்டை வள்ளியப்பச்செட்டியார் ஊரணி வடகிழக்குப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் இரண்டு வருடமாக சாய்ந்துள்ளது.மின்கம்பமும் சேதமடைந்த நிலையில் உள்ளது. ரோட்டின் அருகேயே மின்கம்பம் உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் இந்த கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2018 5:18 am



காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் டெலி போன் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 31). இவர் கடந்த 22-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்ல தயாரானார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் முத்துக்குமார் (21) என்பவர் மதில் சுவர் ஏறிக்குதித்து உமா மகேஸ்வரியை மானபங்கப்படுத்த முயன்றார்.

உமா மகேஸ்வரி சத்தம் போடவே அவரை தள்ளி விட்டு விட்டு ஓடிவிட்டார்.

அவர் தப்பிச் செல்லும் போது இங்கு நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

இது குறித்து உமா மகேஸ்வரி குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் போது மணி வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2018 5:19 am



தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டை நோட்டம் பார்த்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து அந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மானாமதுரை சப்-இன்ஸ்பெக்டர் முகமதுதாரிக் தலைமையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மானாமதுரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த வழியில் நின்றுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சிவகங்கை, கல்லல், மானாமதுரை, சிப்காட் பகுதி, நாச்சியார்புரம், குன்றக்குடி, மணக்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் மானாமதுரையை அடுத்த கீழக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகநாதன்(வயது24), முருகப்பாஞ்சான் கிராமத்தை சேர்ந்த மணிக்காளை(25) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2018 5:21 am



சிவகங்கை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தன.

அப்போது 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்த சிறிய அரிவாளை எடுத்துக் கொண்டு அங்கிருந்தவர்களை மிரட்டும் தொனியில் பேசினார். மேலும் சிலரை விரட்டிச் சென்றுள்ளார்.

தொடர்ந்து தலைமை குற்றவியல் நீதிபதி அறைக்குச் சென்ற அந்த வாலிபர் நீதிபதி இருக்கையில் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாலிபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நீதிபதி இருக்கையில் அமர்ந்து ரகளை செய்தது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த முனியசாமி (வயது 24) என தெரிய வந்தது.

இவர் ஒரு வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட கோர்ட்டுக்கு கையெழுத்திட வந்துள்ளார். அப்போது தான் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

முனியசாமிக்கு மனநல பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகிறார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2018 2:56 am



சிவகங்கை நகராட்சியில் ஷெட்யூல் ரேட் பட்டியல் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்ததையடுத்து, 2 கோடி ரூபாய்க்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. நகராட்சி 9 வார்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் 2018-19 ல் 2 கோடி ரூபாய்க்கு சாலை, கால்வாய் பணிகள் நடக்க உள்ளன. இதற்கான 'டெண்டர்' இன்று (அக்., 9) அறிவிக்கப்பட்டிருந்தது. ஒப்பந்ததாரர்களுக்கு ஷெட்யூல் ரேட் (பணி மதிப்பீட்டு விலை) பட்டியல் வழங்க நகராட்சி அதிகாரிகள் மறுத்தனர். இதனால் டெண்டர் போட முடியாமல் ஒப்பந்ததாரர்கள் தவித்தனர்.

இதுகுறித்து தி.மு.க., நகரச் செயலாளர் துரைஆனந்த் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகியிடம் புகார் தெரிவித்தார். மேலும் 'குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ெஷட்யூல் ரேட் பட்டியல் வழங்குவதாக,' தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து இன்று நடக்கவிருந்த டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டது.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ஒத்தி வைக்கப்படுகிறது,' என்றனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2018 2:57 am

காரைக்குடி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா கூட்டம் காரைக்குடியில் நடந்தது.மாவட்ட துணை தலைவர் மணிகண்ட பிரபு தலைமை வகித்தார். செயலாளர் தென்னரசு துவக்கி வைத்தார். முன்னாள் தாலுகா செயலாளர் கணேசன், மாநில இணைச் செயலாளர் பாலசந்திரபோஸ் பேசினர்.

தாலுகா தலைவராக உதயசூரியன், செயலாளராக மணிகண்ட பிரபு, பொருளாளராக லெனின், துணை தலைவராக செந்தில்நாதன், துணை செயலாளராக ேஷக்முகம்மது தேர்வு செய்யப்பட்டனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:28 pm



மருதுபாண்டியர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கலெக்டர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர முழக்கமிட்டதுடன், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள் மருது பாண்டியர். மருதுபாண்டியரின் மணிமண்டபம் திருப்பத்தூரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 24-ந்தேதி மருதுபாண்டியர் நினைவு தினம் குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அரசு சார்பில் குருபூஜை விழா நடைபெற உள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது.

மருது பாண்டியர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் பாதுகாப்புடன் மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று(நேற்று) முதல் வருகிற 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடவோ, பேசவோ கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக