புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) - Page 2 Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) - Page 2 Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) - Page 2 Poll_c10 
48 Posts - 43%
heezulia

46 Posts - 41%
T.N.Balasubramanian

3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) - Page 2 Poll_c10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) - Page 2 Poll_m10ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) - Page 2 Poll_c10 
414 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1)

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Oct 13, 2014 9:13 pm

First topic message reminder :

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு தீபாவளி பண்டிகைக்குள் ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான் தற்போதைய சூடான விவாதம்.

18 ஆண்டுகளாக ஆமைநடை போட்ட சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் வழங்கி, குற்றவாளி அதை செலுத்தத் தவறும்படசத்தில் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை பெற நேரிடும் என அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா.

இந்த வழக்கில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஜெயலலிதா நடத்திய தடபுடலான ஆடம்பர திருமணமும் முக்கிய ஆதாரமாக வைக்கப்பட்டிருந்தது. 1995-ல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தமிழர்கள் வாய்பிளக்கும் வகையில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு திருமணம் என்னும் திருவிழாவை நடத்திக் காட்டினார். அப்படி ஒரு பிரம்மாண்டம். 19 வருடங்களுக்கு முன்பு (8.9.95) நடைபெற்ற சுதாகரனின் பிரமாண்ட திருமணத்தை தற்போதைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக சின்ன ஃப்ளாஷ்பேக்.

செப்டம்பர் 10, 1995 ஜூனியர் விகடன் இதழில் இருந்து...

‘‘ஒரு முதல்வரின் மகனுக்குத் திருமணம் எப்படி நடக்குமோ அப்படித்தான் இந்தத் திருமணமும் நடக்கும். அதுபற்றி யாரும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!’’ - தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் பற்றி பத்திரிகைகள் எழுதத் துவங்கியதுமே பொங்கியெழுந்து முதல்வர் ஜெயலலிதா விட்ட அறிக்கை இது!

‘எப்படியெல்லாம் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும்!’ என்று அமைச்சர்களிடம் தன் விருப்பத்தை முதல்வர் விவரிக்க...விவரிக்க வாயடைத்துப் போனார்கள் மந்திரிகள்!

‘கற்பனைக்கும் எட்டாத ஆடம்பரத்துடன் இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா’ என்று திகைப்பு ஒருபுறம் இருக்க...‘அந்த அளவுக்குத் தேவையா’ என்ற தயக்கமான கேள்வியைத் தட்டுத் தடுமாறி ஓர் அமைச்சர் எழுப்பினாராம். ‘‘ஏன்.. யார் என்ன சொல்லிவிட முடியும்! நான் சொல்கிற அளவுக்கு உங்களால் செய்ய முடியுமா என்பதுதான் பேச்சு! இது திருமணமே அல்ல... கட்சியின் மாபெரும் மாநாடு என்று நினைத்துக்கொண்டு செயல்படுங்கள்!’’ என்றாராம் முதல்வர்.

அவ்வளவுதான்!

மின்கம்பங்களில் கரண்ட் எடுப்பது.. ரோடு முழுக்கப் பள்ளம் தோண்டி அலங்கார வளைவு அமைப்பது, நிதி வசூல், காவல் துறை குவிப்பு என்று புகுந்து விளையாடத் துவங்கினார்கள் அமைச்சர்கள்!

நான்காம் தேதி இரவு மணி பதினொன்றரை! வழக்கமான அணிவகுப்பு ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், முன்னும் பின்னும் ஓரிரு கார்கள் தொடர போயஸ் தோட்டத்தில் இருந்து கிளம்பினார் முதல்வர். அவருடன் தோழி சசிகலா இல்லை!

அடையாறு சிக்னல் வரை சென்று அங்கிருந்து கடற்கரையில் கண்ணகி சிலை வரை அதிவேகமாக ஒரு முறை சென்றது முதல்வரின் கார்! வரிசையாகச் செய்யப்பட்டிருந்த வண்ண வண்ண சீரியல் செட் அலங்காரங்கள், அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் வைத்திருந்த கட் - அவுட்கள், சாலை நெடுக அமைந்திருந்த அலங்கார வரவேற்பு மேடைகள் ஆகியவற்றைப் பார்த்து திருப்தியடைந்தார் முதல்வர்.

அடுத்து, திருமணம் நடக்கும் எம்.ஆர்.சி. நகருக்கு விரைந்தார். வழக்கமான வேட்டி, சட்டை, தோள் துண்டு இல்லாமல் அத்தனை அமைச்சர்களும் பாண்ட் அணிந்து மிடுக்குடன் காத்திருந்தது வித்தியாசமான காட்சி! அதிலும் மூத்த அமைச்சர் எஸ்.டி.எஸ். லூஸான வெள்ளைச் சட்டையும் க்ரே கலர் பேன்ட்டும் அணிந்து ‘துறுதுறு’ப்புடன் நின்ற காட்சியைப் பார்க்க சக அமைச்சர்களுக்கேகூட ஜாலியாகத்தான் இருந்தது!

நாவலர், இந்திரகுமாரி, மதுசூதனன் தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் அங்கிருந்தனர்.

முதல்வரின் கார் வந்ததும் அதன் பின்னே ஓடித் திருமணம் நடக்கப் போகும் மாபெரும் மைதானத்துக்குள் சென்றார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துத்தான் முதல்வர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். உள்ளே என்ன நடந்தது?

அமைச்சர் ஒருவரின் உதவியாளரும், சில போலீஸ் அதிகாரிகளும் நமக்குச் சொன்ன தகவல் திகைப்பை உண்டாக்கியது!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி ஐயர் உள்ளே முதல்வருக்காக காத்திருந்தார். அவர் பெரிய மாந்திரீகர்!

முன்னாள் பிரதமர் சந்திரசேகர், கவர்னர் சென்னாரெட்டி ஆகியோர் பயபக்தியுடன் வணங்கும் திருவக்கரை வக்கிர காளியம்மன் கோயிலில் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ பூஜை நடந்ததாம். மாந்திரீக வார்த்தைகளும் குறிகள் போட்ட அகலமான தங்கத்தகடுகளை அந்தக் கோயிலில் வைத்து விசேஷ பூஜை செய்தார் ராமமூர்த்தி ஐயர். அவற்றைத்தான் திருமணப் பந்தலுக்குக் கொண்டுவந்திருந்தார்!

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், பிறர் பொறாமைப்படும் வண்ணமாக ஏதாவது நிகழ்ச்சி நடத்தும்போது, திருஷ்டிபடாமல் இருக்க சில பரிகாரங்கள் செய்வதுண்டாம்! அதில் மிக மிக ‘காஸ்ட்லி’யான ஒரு பரிகாரத்தைச் செய்யத்தான் அந்த மாந்திரீகர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

திருவக்கரை கோயிலில் வைத்து மந்திரிக்கப்பட்ட தங்கத் தகடுகளை, மணவிழாப் பந்தலின் எட்டுத் திக்குகளிலும் புதைத்தார்கள். அத்துடன் வைர வைடூரியன் உட்பட நவமணிகளையும் போட்டுப் புதைத்துச் சாணத்தால் மெழுகியிருக்கிறார்கள்!

கூடவே, ராஜ கம்பீரமாக மிகப்பெரிய தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள மணமேடையிலும் ஒவ்வொரு அடி இடைவெளிட்டு மந்திர வார்த்தைகள் பொறித்த தங்கத் தகடுகள் புதைக்கப்பட்டதாம்!

இந்தியா முழுவதும் இருந்து வி.ஐ.பி-க்கள் முதல் சாதாரண கட்சித் தொண்டர் வரை வரப்போகிற இந்தத் திருமணத்தில் யாராவது ஏதாவது ஆபத்து உண்டாக்கிவிடக்கூடும் என்ற கவலை இருக்கிறது! அப்படி அபாயம் உண்டாக்க வருபவரின் மனத்தை மாற்றி, எதிர்ப்புக் குணத்தைப் போக்கி திருப்பியனுப்பிவிடக்கூடிய ‘வசிய சக்தி’ இந்தத் தகடுகளுக்கு இருப்பதாக மேலிடம் வரை நம்புகிறார்கள்!

மந்திர வார்த்தைகள் பொறித்த தகடுகள் புதைக்கப்படுவதை முதல்வர் உட்பட அமைச்சர்கள் பயபக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தனராம்! எல்லாம் முடிந்து திருப்தியுடன் முதல்வர் கிளம்பிப் போன பிறகு, மூத்த அமைச்சர் எஸ்.டி.எஸ் அடித்த கமென்ட்தான் மற்றவர்களைத் திகைப்படைய வைத்தது! ‘‘மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் எந்தப் பிரச்னையும் அரசியல் ரீதியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், நம்ம அம்மா எதையும் மாந்திரீக ரீதியாக அணுகறாங்க. அதான் வெற்றிமேல் வெற்றி கிடைக்குது!’’ என்றார் எஸ்.டி.எஸ்!

போலீஸ் படையையும் முதல்வர் நம்பத்தான் செய்கிறார். திருமணம் நடக்கும் இடம் கடலோரம் என்பதால் கடல் வழியாகத் சந்தேகத்துக்கிடமான ஆட்கள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் கப்பலில் ஏறி, போலீஸ் கடலில் சுற்றி ரோந்து வர ஆரம்பித்துவிட்டது!

இது தவிர, பந்தலை ஒட்டியுள்ள பகுதியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களில் இருந்தும் படை படையாக வேன்களில் வந்து குவிந்திருக்கும் போலீஸாருக்கென மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே சென்னை நகரின் பல திருமண மண்டபங்கள் ஒழித்துத் தயார் செய்யப்பட்டுவிட்டன!

திருமணம் நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான பந்தல்களில் உள்புறமிருந்து பார்த்தால் ஓலையே தெரியாது! பல லட்ச ரூபாய் செலவில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் போட்டு அலங்கார வேலைகள் செய்யப்பட்டுள்ளன.

மணமேடை ஒரு அரண்மனையின் ராஜதர்பார் போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறம் இருந்து பார்த்தால் ‘கண்’பட்டுவிடும் என்பதால் அதற்குத் தனியாக ஓர் ஓலைத்தடுப்புப் போட்டு மறைத்திருக்கிறார்கள். திருமணத்தன்று ஓலைத்தடுப்பு பிரிக்கப்படும்போது, அந்த மணமேடையின் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ள விலைமதிப்புள்ள கற்களும், அலங்கார அமைப்பும் அனைவரையும் வாய்பிளக்க வைக்கப் போகிறது!

திருமண வளாகத்துக்கு உள்ளே மூன்று விதமான பங்களாக்கள் அசுரவேகத்தில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன!

ஒன்று - முதல்வர் தங்கியிருப்பதற்கான (சகல வசதிகளும் கொண்ட) ஏ.ஸி. மாளிகை! இன்னொன்று சசிகலாவின் மிக நெருங்கிய உறவினர்கள் தங்குவதற்கு! மூன்றாவது, சிவாஜி குடும்பத்தினருக்கு! இந்த மூன்று மாளிகைகளையும் இப்போதே போலீஸ் சூழ்ந்து நிற்கிறது! கடுமையான பாதுகாப்பு!

எம்.ஆர்.சி.நகர்ப் பகுதியில் உள்ள பல வீடுகளுக்குள் கடந்த திங்கட்கிழமை போலீஸும் முக்கிய அதிகாரிகளும் புகுந்தனர். ‘‘நீங்களெல்லாம் வெளியேறிவிடுங்கள்! திருமணத்துக்கு முன்தினமும், திருமண தினத்தன்றும் இந்த ஏரியவுக்குள் லட்ச லட்சமாக ஆட்கள் ஆக்கிரமித்துவிடுவார்கள். அப்போது உங்களால் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாது. எனவே, நீங்களெல்லாம், உங்களுக்கு விருப்பப்படும் ஓட்டல்களுக்குப் போய்க் குடும்பத்தோடு தங்கிக் கொள்ளுங்கள். பிறகு ஓட்டல் ‘பில்’லைக் கொடுத்தால் பணத்தைக் கொடுத்துவிடுகிறோம்!’’ என்றார்கள்.

எதிர்த்துப் பேசத் திராணியற்று மூன்று தெருக்களில் வசித்த குடும்பங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டன. ‘‘ஓட்டல் பில்’’லை யாரிடம் கொடுத்து எப்படிப் பணம் வாங்குவது? அது நடக்காத காரியம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்!’’ என்று புலம்பியபடியேதான் கிளம்பினர் அவர்கள்.

வேறு பலர் வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள். அதை எந்த ஓட்டலில் தங்க அனுமதிப்பார்கள். அதேபோல் இடம்பெயர முடியாமல் உள்ள பல நோயாளிகளும் அங்குள்ள சில வீடுகளில் உள்ளனர். அந்தக் குடும்பங்கள் வீட்டை காலி செய்ய முடியாது என்று சொன்னதால், பலத்த மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர்! இவர்களுக்கெல்லாம் போலீஸ் அடையாள அட்டை அளித்துள்ளது. அதைக் காட்டினால்தான் தெருவை விட்டுப்போக முடியும் திரும்ப முடியும். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வை.கோ. கட்சிப் பிரமுகருமான அழகு. திருநாவுக்கரசு வீட்டுக்கும் அடையாள அட்டை தரப்பட்டுள்ளது!

திருமணத்துக்கு வருபவர்கள் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி குடும்பத்துக்குச் சொந்தமான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்! வருகிற 11 ஆம் தேதியன்று அங்கு கால்வருடப் பரீட்சை! ஆயிரக்கணக்கில் பந்தல் அமைப்பாளர்களும் பொதுப் பணித்துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போலீஸும் அந்தப் பகுதியைச் சூழ்ந்துவிட்டதால் கடந்த ஒன்றாம் தேதி முதல் செயல்பட முடியாமல் விடுமுறையில்தான் உள்ளது பள்ளி!

பாடங்களைச் சரிவர நடத்தி முடிக்காததால் பரீட்சை எப்படி எழுதப் போகிறோம் என்று புரியாமல் தவித்தபடி உள்ளனர் குழந்தைகள்! வி.ஐ.பி.க்கள் உட்காரும் இடம் என தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் இடைஞ்சலாக இருந்ததால் கிட்டத்தட்ட நாற்பது மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன!

தனது வளர்ப்பு மகன் திருமணத்துக்கு வரும் வெளி மாநில வி.ஐ.பி.க்கள் எந்த சிரமும் இன்றி, குழப்பம் இன்றித் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சென்று அமர வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்!

இந்தப் பிரச்னையை அழகாகத் தீர்த்து வைக்க முன்வந்தது கல்வித் துறை! தமிழகத்தின் முக்கியமான சில கல்லூரிகளுக்கு அவசரச் செய்தி சென்றது! ஒவ்வொரு கல்லூரியும் தங்களிடம் பயிலும் மிக அழகான பத்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து சென்னை முன்கூட்டி அனுப்புகின்றன! மணமகன் வீட்டுச் செலவிலேயே விலை உயர்ந்த பட்டுச் சேலை ஜாக்கெட் தைத்து அளிக்கிறார்கள்! இந்த மாணவிகள்தான் வரவேற்பு கமிட்டி! புன்னகைத்த முகத்துடன் வி.ஐ.பி-க்களை வரவேற்று அழைத்துச் சென்று அவரவர் இடங்களில் அமர்த்த வேண்டும்! திருமணம் முடிந்த பிறகு தலைக்குப் பத்தாயிரம் ரூபாய் இந்த மாணவிகளுக்கு அளிக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்!

ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் சென்னை நகரின் பியூட்டி பார்லர்கள் (அழகுநிலையங்கள்) பெரும்பாலும் புக்’ செய்யப்பட்டுவிட்டன. சசிகலா குடும்பத்துப் பெண்களின் விசேஷ அலங்காரத்துக்காக?

தனது திருமண நிகழ்ச்சி பற்றி அநாவசியமான விமரிசனங்கள் பத்திரிகைகளில் வருவதை வளர்ப்பு மகன் சுதாகர் விரும்பவில்லையாம். இதனால் திருமணத்துக்கு நிருபர்கள் வர அனுமதியில்லை! பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு நிச்சயம் அனுமதியில்லை! ஆளுங்கட்சிக்கு வேண்டிய மிகச் சில பத்திர்கை ஆசிரியர்கள் மற்றும் சில இந்ருபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது!

என்.டி.ஆர்., தேவகௌடா, லல்லு பிரசாத் யாதவ், பைரான்சிங் ஷெகாவத்,பிஜுபட்நாயக் ஆகியோர் முதல்வர் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல் வி.ஐ.பி-க்கள்!

இத்தனை திருமண ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையில் மிகுந்த கவலையுடன் இருப்பவர்கள் மூன்று அமைச்சர்கள்! கண்ணப்பன், எஸ்.டி.எஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகிய மூவர்தான் இவர்கள்!

‘அன்பளிப்புகளைத் தவிர்க்கவும்’ என்று திருமண அழைப்பிதழில் அச்சிட்டிருந்தாலும் அதற்கு நேர் எதிரான ‘பாலிஸி’தான் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணத்துக்குத் தேதி குறிக்கப்பட்ட தினத்திலிருந்தே பணமாகவும் பொருளகவும் வசூல் தொடங்கிவிட்டது அனைவரும் அறிந்த சேதி!

ஆனால், திருமணத்தன்று வருகிற கட்சி முக்கியஸ்தர்களிடமும் தொழிலதிபர்களிடமும் கண்டிப்புடன் திருமணப் பரிசுகளை வாங்க வேண்டியது மேற்சொன்ன மூன்று அமைச்சர்களின் பணிதான்! பரிசுப் பொருட்கள் மற்றும் செக், டிராஃப்ட், சூட்கேஸ் எதுவானாலும் திருமண வளாகத்துக்குக் கொண்டு வரக்கூடாது என்பது முன்கூட்டியே சொல்லப்பட்டுவிட்டது! அதை இந்த மூன்று அமைச்சர்களின் வீடுகளுக்கே கொண்டுசென்று கொடுத்துவிட வேண்டும்! லட்சம், கோடி எல்லாம் சாதாரணமாக ‘டீல்’ செய்யும் இந்த அமைச்சர்களே மிரண்டுபோயிருக்கிறார்களாம்.

பரிசுப் பொருட்களைப் பெற்று, சரியாக கணக்கு சொல்லி அவற்றைப் பத்திரமாக ஒப்படைக்கும் வரை இவர்களுக்கு நிம்மதி கிடையாது! பல கோடி செலவு செய்து நடக்கும் இந்தத் திருமணத்துக்கு என்னென்ன பரிசுப் பொருட்கள் வரப்போகிறது என்று மத்திய அரசு அதிகாரிகளும் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதுதான் அமைச்சர்களின் கவலைக்கு முக்கிய காரணம்!

இத்தனைக்கும் மத்தியில் தேர்ந்த ஜோதிடர்கள் சொன்ன ஒரு கருத்து திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து சம்பந்தப்பட்டவர்களை வாட்டுகிறது! ஜோதிடர்கள் சொன்னது -‘‘திருமணத்துக்குக் குறித்த தேதி சரியில்லை! செப்டம்பர் ஏழாம் தேதி சனி- செவ்வாயைப் பார்க்கிறான். அதுவும் வக்கிரப் பார்வை! பெரும் தீவிபத்துகளும் ரயில் விபத்துகளும் நடந்தது இந்தக் கிரக நிலையில்தான்!’’

இன்னொரு பக்கம், இந்தியாவிலேயே இதுவரை நடக்காத இந்தப் பிரமாண்ட திருமணத்தல் மணமகளுக்குத் திருஷ்டிபடுமோ என்ற கவலையும் இருக்கிறது. திருமணம் முடிந்த கையோடு, அந்தப் பகுதியில் ஏதாவது பந்தலை வலியக் கொளுத்தி திருஷ்டிகழிக்கலாமா எனவும் யோசிக்கப்படுகிறது!

நன்றி:ஜினியர்விகடன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 9:20 pm

//தாலி கட்டிய மூன்றாவது நிமிடமே மிச்சம் மீதி இருந்த வாழை மரங்கள் கந்தல் கந்தலாகிவிட்டன! நரசிம்மவதாரம் எடுத்த பொதுமக்கள், வாழை மரங்களைப் பிய்த்துக் குதறி உள்ளே இருந்த வாழைத்தண்டை எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.//

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:21 pm

krishnaamma wrote:ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) - Page 2 Vztv3IPXRm651tVJ4H3g+sudakaranmarriageoct14_2

இந்த போட்டோ வில் ஜெ., தலை இல் கிரீடம் போல இருக்கு பாருங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096371

அட...ஆமாம்...தோழியார் சிறிது அம்மாவுக்கு நெருக்கமாக நகர்ந்து நின்றிருந்தால் அவருக்கு ஒரு கிரீடம் கிடைத்திருக்கும்... புன்னகை

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Oct 15, 2014 3:28 pm

என்ன செய்வது...
எல்லாம் முடிந்துவிட்டது...
என எண்ணுவாரோ இப்போது

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 3:31 pm

M.Saranya wrote:என்ன செய்வது...
எல்லாம் முடிந்துவிட்டது...
என எண்ணுவாரோ இப்போது
மேற்கோள் செய்த பதிவு: 1096473
இவர் திருந்துகிற வகை அல்ல
மேலும் ஆக்ரோஷத்துடன் பழி வாங்கும்
படலத்தை ஜாமீனில் வந்தவுடன் தொடங்குவார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 15, 2014 4:07 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 15, 2014 5:15 pm

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) - Page 2 10702034_764628940260089_4838496400207806070_n

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed Oct 15, 2014 8:57 pm

1995 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் மேற்கண்ட ஆடம்பரத் திருமணத்தை விவரித்துவிட்டு, "இவ்வளவிற்கும் ஒரே ஒரு ஆறுதல் சிவாஜி கணேசன் கதர் வேட்டி கதர்ச்சட்டையுடன் கலந்து கொண்டதுதான்" என்றும் கூறியிருந்தது.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Oct 15, 2014 9:07 pm

நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான்... நான்... நான்...

செப்டம்பர் 13, 1995 தேதியிட்ட ஜூ.வி. இதழில் இருந்து...

‘‘உலகிலேயே இதுவரை நடக்காத அளவுக்கு மிக மிக காஸ்ட்லியான ஒரு மொய் விருந்து நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர்! வளர்ப்பு மகனுக்குத் திருமணம் என்ற பெயரில் பல ரூபத்திலும் வந்த பரிசுப் பொருட்களை, ஏழாம் தேதி இரவே கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தார்கள்! தாராளமாக இருநூறு கோடி ரூபாய் தேறும் என்று தெரிந்து சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்!’’

- முதல்வருக்கு மிக நெருங்கிய அமைச்சர் ஒருவரே தனது நண்பர்களிடம் தாங்க முடியாமல் சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை.

‘இப்படி ஒரு திருமணம் நடத்துவதற்காகவே வளர்ப்பு மகனைத் ‘தத்து’ எடுத்தாரா அல்லது வளர்ப்பு மகனாகச் சுதாகரனை எடுத்ததால் இந்த ஆடம்பரத் திருமணமா?" என்ற சஸ்பென்ஸுக்குச் சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை. எப்படியோ... ‘சுமார் இரண்டு மாத காலமாக பத்திரிகைகளும், எதிர்கட்சித் தலைவர்களும் கிளப்பிய ஏராளமான விமர்சனங்கள் என்னைத் துளியும் பாதிக்கவில்லை. எல்லா தடைகளையும் மீறி நான் நினைத்ததைச் சாதித்துக்கொண்டிருக்கிறேன்’ என்ற எண்ணமும் பெருமையும், மணமேடையில் ஓடியாடிக்கொண்டிருந்த முதல்வர் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது!

‘‘பண ரீதியாக முதல்வர் தான் நினைத்ததைச் சாதித்திருக்கலாம்! ஆனால், அரசியல் ரீதியாக மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டார். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க-வுக்கென்று இருந்த அசைக்க முடியாத வோட்டு வங்கிக்கு, தானே வெடி வைத்துக்கொண்டுவிட்டார் முதல்வர்!’’

- திருமணம் முடிந்த கையோடு கூடிப் பேசிய மூன்று அமைச்சர்களின் ‘கமென்ட் இது’ பலரிடமும் தீர விசாரித்த போது தெரியவந்தது இதுதான் -

‘‘நம் முதல்வர் வீட்டுத் திருமணம் என்ற ஒட்டுதலுடன் திருமணத்துக்கு வந்திருந்த அடிமட்ட தொண்டர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட இனத்து மக்கள்தான். அதை நீங்களே பார்த்திருப்பீர்கள்! அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத பலம் - தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு. தங்களை ஆண்டு வழிநடத்தும் முதல்வர் ஒரு பிராமணப் பெண்மணி என்ற எண்ணமோ, நெருடலோ அவர்களுக்கு இதுவரை வந்ததில்லை. ஏழைகளுக்குக் குரல் கொடுக்கிற, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் வந்த ஒரு தலைவி என்ற கண்ணோட்டத்துடன்தான் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், முக்குலத்தோர் இனத்தில், கள்ளர் பிரிவைச் சேர்ந்த சசிகலாவின் குடும்பத்தில், முழுக்க முழுக்கத் தானும் ஒருவர் என்று காட்டிக் கொள்ளும் விதமாகத்தான் இந்தத் திருமண விழாவில் முதல்வர் நடந்துகொண்டார்.

திருமண அழைப்பிதழ் அடித்ததில் இருந்து, மாப்பிள்ளை அழைப்பு, திருமண சம்பிரதாயங்கள் அனைத்துமே கள்ளர் சமுதாயத்துப் பாணியில் பின்பற்றப்பட்டதை, வந்திருந்த தொண்டர்கள் ஊன்றிக் கவனித்தனர். மணமேடையில் சசிகலா சொல்லிக் கொடுத்துக்கொண்டே வர... அந்த சம்பிரதாயங்களைப் பயபக்தியுடன் முதல்வர் மேற்கொள்வதையும் பார்த்தனர்’’ என்று நம்மிடம் சொன்னார் அ.தி.மு.க-வின் மூத்த பிரமுகர் ஒருவர்.

தஞ்சை மாவட்டத்துக்காரரான அவர் தொடர்ந்து சொன்னார் - ‘சுருக்கமாகச் சொல்வதானால், மக்கள் தலைவி, ஏழைகளின் தலைவி என்ற பார்வையை மாற்றி ‘தேவர் வீட்டுப் பொண்ணு’ என்று முதல்வரை பார்க்கத் துவங்கிவிட்டனர் தாழ்த்தப்பட்ட மக்கள்!

சரி... அதனால் என்ன?

‘‘சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ள தொகுதிகளில் இதன் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் இனத்து மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட இனத்து மக்களுக்கும் நிலவி வரும் பகைக்கு நீண்ட வரலாறு உண்டு!

இரண்டு சமுதாயங்களையும் சேர்ந்த மக்களை இந்த விஷயத்தில் துளிகூடக் குறை சொல்ல முடியாது. இரு தரப்பிலும் உள்ள ஒரு சிலர் அரசியல் லாபங்களுக்காக இந்த பகையைத் தொடர்ந்து ஊதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அதன் விளைவு, தேவர் பெருமகனாருக்கு முதல்வர் சிலை திறப்பு நடத்தியபோதே தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சலசலப்பு உருவாக்கப்பட்டது! சசிகலா குடும்பத்தின் தூண்டுதல்தான் முதல்வர் ஒரு சார்பாக இப்படிச் செய்யக் காரணம் என்ற பேச்சு கிளம்பியது. அப்போதும் தாழ்த்தப்பட்ட மக்கள், முதல்வர் மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்தனர். ஆனால், அந்த நம்பிக்கையை இந்த வளர்ப்பு மகன் திருமணம் பொய்யாக்கிவிட்டது!’’ என்பதுதான் தரப்படும் விளக்கம்!

‘‘இன்னொரு புறமும் முதல்வருக்கு மிஞ்சுவது நஷ்டக் கணக்குதான்! சசிகலா குடும்பம் சேர்ந்துள்ள முக்குலத்தோர் இனத்து மக்களின் ஆதரவும் முதல்வருக்குக் கிடைக்கப் போவதில்லை’’ என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த சிலர்.

முக்குலத்தோர் இனத்து மக்கள் எளிமைக்குப் பேர்போனவர்கள். நீதிக்கும் நேர்மைக்கும் தலைவணங்குகிற மனப்பக்குவம் மிகுந்தவர்கள். பாரம்பரியம்மிக்க தங்கள் பண்பாடுகளைக் கம்பீரமாகப் போற்றிக் காப்பவர்கள். குறிப்பாக, ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். இந்தத் திருமணத்துக்கு வந்த முக்குலத்தோர் இனத்தினர் பலரேகூட ‘மன்னர் பாணி’யில் நடந்த இந்தத் திருமணத்தைக் கண்டு முகம் சுளித்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

மூத்த அமைச்சர் ஒருவர் இன்னொரு விஷயமும் தன் ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறாராம் -

‘‘தமிழகத்தில் இதுவரை ஆண்ட முதல்வர்களில் கடைசிவரை மாறாத மக்கள் செல்வாக்குடன் இருந்தவர்கள் மூவர். பெருந்தலைவர் காமராஜ், அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். இந்த மூவருக்குமே ரத்த பந்தமான வாரிசுகள் கிடையாது. ‘யாருக்காக இவர்கள் பணம் சேர்க்க வேண்டும்.’ இந்தத் தலைவர்கள் ஊழல் செய்யவே மாட்டார்கள்!’ என்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை மக்களுக்கு இவர்கள்மேல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் கூட வளர்ப்பு மகன்கள் உண்டு. ஆனால், எந்தத் தருணத்திலும் அந்த வளர்ப்புப் பிள்ளைகளுக்கு செய்திகளில் அடிபடும் அளவுக்கு முக்கியத்துவம் தந்தது கிடையாது!

வாரிசு யாரும் இல்லாத ஜெயலலிதா மீதும் ஆரம்பத்தில் எங்களுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது உண்மைதான். ஆனால், சசிகலா குடும்பம் வந்து அவருடன் ஒட்டியதும் அந்த ‘இமேஜ்’ உடையத் துவங்கியது! இன்று அதே குடும்பத்தில் இருந்து வளர்ந்து ஆளான ஒரு இளைஞரை, வளர்ப்பு மகன் என்று எடுத்து மாநிலமே திகைத்து, புழுங்கும் அளவுக்குத் திருமணமும் நடத்திக் காட்டியதன் மூலம் ‘இந்த வாரிசு’க்காக நான் எதையும் செய்வேன்! எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் முதல்வர். முதல்வரின் இந்தப் பற்றுதல் மாநிலம் தழுவிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதுவும் வரும் தேர்தலில் அ.தி.மு.க-வின் வோட்டுகளைப் பெருமளவில் பாதிக்கும்!’’ - மூத்த அமைச்சர் அலசியது இப்படித்தான்.

முக்கியமான வேறொரு பாதிப்பையும் இந்தத் திருமண விழா உண்டாக்கியிருக்கிறது. அந்தப் பாதிப்பின் மையக் கரு - அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் தேடலில் இருக்கும் தினகரன்! சசிகலாவின் சகோதரரான தினகரன் பற்றிய பலவிதமான திடுக்கிடும் குற்றச்சாட்டுகளும் வதந்திகளும் உள்ள நிலையில் அவர் இந்தத் திருமண மேடையில் மிடுக்கான உடையில் சர்வ சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தது தொண்டர்களைப் பாதித்துவிட்டது.

‘‘கோடிக்கணக்கில் ஊழல்கள் நடப்பதை ஒப்புக்கொள்ளும் தொண்டர்களில் பலர்கூட, ‘அதற்கு முதல்வர் காரணம் இல்லை. அவரைச் சுற்றியிருப்பவர்கள்தான், முதல்வருக்கே தெரியாமல் இதையெல்லாம் செய்கிறார்கள்’ என இதுவரை நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், ‘தினகரனைத் திருமண மேடையில் நிறுத்தி வைத்ததோடு நில்லாமல், முதல்வரே அவரிடம் வலியப் போய்ப் பேசிக்கொண்டிருந்ததும், மணமக்களை வாழ்த்த வந்த அரசியல் புள்ளிகளுக்குத் தினகரனை அறிமுகம் செய்து வைத்ததையும் கண்டு முக்கியமானவர்களே அதிர்ந்தது உண்மை!

மற்றொரு விஷயமும் மிக வேதனையுடன் சுட்டிக் காட்டப்படுகிறது. சிவாஜி குடும்பத்துக்கு இந்தத் திருமண விழாவில் நேர்ந்த அனுபவம்தான் அது.

மேடைக்கு வந்த பல அரசியல் புள்ளிகளுக்கு வணக்கம் சொல்லிச் சிரித்த முதல்வர், உலகப் புகழ்பெற்ற நடிகரான சிவாஜி கணேசனை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனையவில்லை. முதல் சில நிமிடங்களுக்கு மணமக்களின் இன்னொரு புறம் நின்று பார்த்த சிவாஜி, பிறகு தளர்வுடன் நடந்து தன் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

திருமண சம்பிரதாயங்கள் முடிந்தன. இனி தங்களுக்கு வேலை இல்லை என்று புரிந்ததுமே, சிவாஜி கையசைத்து தன் மனைவியிடம் ஏதோ சொல்ல... ‘பர பர’வென்று மேடையிலிருந்து இறங்கி கீழே வந்துவிட்டது சிவாஜி குடும்பம்.

சரி... இந்த ‘பல கோடி ப்ராஜெக்ட்’டினால் அகில இந்திய அளவில் முதல்வர் சம்பாதித்துக் கொண்ட செல்வாக்கு என்ன?

கேட்டால். அ.தி.மு.க-விலேயே சிரிக்கிறார்கள்!

ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க-வை ஆதரிக்கும் மத்திய அமைச்சர்களான தங்கபாலுவையும் சீதாராம் கேசரியையும் விட்டுவிடலாம். மற்றபடி காங்கிரஸ் தரப்பில் இருந்து செல்வாக்கு மிக்க தலைவர்களோ வேறு யாருமோ கலந்துகொள்ளாமல் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தது கவனிக்க வேண்டிய விஷயம்.

முதல்வரே நேரில் சென்று அழைத்தும் கவர்னர் புறக்கணித்துவிட்டார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய வீட்டுத் திருமணம் என்பது, நிருபர்களுக்கும் புகைப்படக்காரர்களுக்கும் நிறைய தீனி போடும் அளவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கும்.

ஆனால், இந்தத் திருமணத்தைத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டனர். பல தலைவர்களுக்குப் பத்திரிகை போகவில்லை என்பதும் தனிக்கதை.

மற்ற மாநிலங்களிலிருந்து வந்த ஒரு சில அரசியல் தலைவர்களில்கூடப் பெரிய அளவுக்கு உள்ளவர்கள் யாருமில்லை.

ஏன்... தனது கட்சி அமைச்சர்களுக்கேகூட இந்த விழாவில் முதல்வர் முக்கியத்துவம் தரவில்லை.

‘இது என் குடும்ப விவகாரம்’ என்பதுபோல்தான் நடந்துகொண்டார். அவரை அப்படி ஒரு கட்டுப்பாட்டுக்குள் மற்றவர்கள் வைத்திருப்பதும் நன்கு தெரிந்தது.

மொத்தத்தில், வெற்றிகரமாக ‘தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு மட்டுமே சொந்தம்’ என்று தான் நினைத்ததை மணமேடையிலேயே சசிகலா குடும்பம் அதிரடியாக நிரூபித்துக் காட்டிவிட்டது.

மக்களிடமிருந்து மேலும் ஒரு படி தனிமைப்பட்டுவிட்டர் முதல்வர்.

அதுதான் இந்தத் திருமணத்தின் விளைவு!

நிறைவுற்றது.

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 6:47 pm

யினியவன் wrote:
M.Saranya wrote:என்ன செய்வது...
எல்லாம் முடிந்துவிட்டது...
என எண்ணுவாரோ இப்போது
மேற்கோள் செய்த பதிவு: 1096473
இவர் திருந்துகிற வகை அல்ல
மேலும் ஆக்ரோஷத்துடன் பழி வாங்கும்
படலத்தை ஜாமீனில் வந்தவுடன் தொடங்குவார்

ம்...ரொம்ப சரி இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 6:53 pm

நல்ல பகிர்வு ராஜ் புன்னகை நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக