புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
15 Posts - 75%
heezulia
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 10%
Barushree
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
heezulia
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Oct 09, 2014 2:10 pm

First topic message reminder :

மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து அவன் மிருகங்களைப்போல காடுகளில் சுற்றித்திரிந்து, கையில் கிடைத்ததை சாப்பிட்டு, கண்ட இடங்களில் படுத்துத்தூங்கி வாழ்ந்த காலத்தில்கூட, தன் மானத்தை மறைக்க இலை தழைகளாலும், மரப்பட்டைகளாலும் ஆடையாக அணிந்து இருக்கிறார்கள்.

நாகரீகம் வளர, வளர அதன் வெளிப்பாடு ஆடைகளிலும் எதிரொலித்தது. பிற்காலங்களில் சில குறிப்பிட்ட பணிகளுக்கென தனி ஆடைகள் நிர்ணயிக்கப்பட்டன. அந்த வகையில்தான் ராணுவம், போலீஸ், தீயணைக்கும் படை, வனத்துறை, ரெயில்வே, தபால் துறை, நர்சுகள், துப்புரவு பணியாளர்கள் போன்ற இன்னபிற பணிகளுக்கெனவும் தனித்தனியாக சீருடைகள் வகுக்கப்பட்டன.

மக்கள் அணியும் உடைகளும் அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்பட்டே இருந்தது. ஆடைகள்தான் ஒருவரின் தோற்றத்துக்கு முக்கியம் என்பதால்தான் ஆள் பாதி, ஆடை பாதி என்ற வழக்குமொழி தமிழிலும், தையல்காரர்தான் ஒருவரை உருவாக்குகிறார் என்று ஆங்கிலத்திலும் கூறப்பட்டு வருகிறது. ஆண்களும், பெண்களும் அணியும் ஆடைகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண் குழந்தைகள் என்றால் அரைக்கால் சட்டை, பெண் குழந்தைகள் என்றால் முதலில் கவுன், பிறகு பாவாடை சட்டை என்றுதான் இருந்தது. வாலிப வயதில் ஆண்கள் என்றால் வேட்டி–சட்டை, பெண்கள் என்றால் தாவணி, பிறகு சேலை என்றுதான் இருந்தது. முதலில் படித்தவர்கள், வேலை பார்ப்பவர்கள் மட்டுமே அணியும் ஆடையாக இருந்தது பேண்ட். மாற்றம் ஒன்றுதான் உலகில் நிரந்தரமானது என்பதற்கேற்ப, ஆடைகள் அப்படியே மாறிவிட்டது. எது தங்களுக்கு வசதியாக இருக்கிறதோ, அதுதான் ஆடை, அதுதான் நாகரீகம் என்ற நிலை உருவாகிவிட்டது. பெண்களுக்கு சுடிதார் வந்தபிறகு, கிராமங்களில்கூட இளம் பெண்களின் ஆடை என்றால் அது நைட்டியும், சுடிதாரும்தான் என்றாகிவிட்டது.

தாவணி போட்ட பெண்களைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. பள்ளிக்கூடங்களில் இலவச சீருடை வழங்கும்போதுகூட இப்போது சுடிதார்தான் வழங்குகிறார்கள். அதுபோல, பெரிய வகுப்புகளில் படிக்கும் பையன்களுக்கு பேண்ட்தான் சீருடையாக வழங்கப்படுகிறது. சமீபகாலங்களில் இளம் பெண்களை சேலையில் பார்ப்பது திருமணத்தன்றோ, தீபாவளி, பொங்கலன்றோதான் முடியும் என்றாகிவிட்டது. இந்த சூழ்நிலையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் வந்துவிட்டது. இந்த உடைகள் தங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அயர்ன் பண்ண வேண்டிய தேவையில்லை என்று இன்றைய இளைய உலகம் கூறுகிறது.

ஆனால், சில கல்லூரிகளில் இந்த ஆடை அணிந்துவரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரபல பாடகர் ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் ஒரு இசைக்கல்லூரியில் பேசும்போது, ‘எதை மூடவேண்டுமோ, அதை மூடவேண்டும், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பெண்கள் மற்றவர்களை சங்கடப்படுத்தக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருக்கும்போது விரும்பத்தகாத செயலைச் செய்ய தூண்டிவிடுகிறது. ஒரு பெண்ணின் அழகு என்பது அவளது அடக்கத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோல கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார். இந்த கருத்து இந்தியா முழுவதும் பெரிய எதிர்ப்பு அலையை உருவாக்கிவிட்டது. ஒரு பெண்ணின் பாதுகாப்போ, அவளிடம் விரும்பத்தகாத செயலை மேற்கொள்ள செய்வதோ, அவள் அணிந்துள்ள ஆடையில் இல்லை, பார்ப்பவர்களின் மனதில்தான் இருக்கிறது, கொடூரனுக்கு உடை ஒரு பொருட்டல்ல, பச்சிளம் குழந்தை முதல், குடு குடு கிழவி வரை கற்பழிக்கப்படுகிறார்களே, இதுபோன்ற ஜீன்ஸ் ஆடையை அணிந்தே இராத, ஏன் பார்த்தே இராத ஆதிவாசி பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்களே அதற்கு என்ன பதில்? ஒரு பெண் கிண்டல் செய்யப்பட்டாலோ, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாலோ, கற்பழிக்கப்பட்டாலோ அதற்கு பெண்ணின் உடையை குறை சொல்லாமல், ஆண்களின் மனோபாவத்தை, பார்வையை மாற்ற சமுதாயம் முயற்சிக்கவேண்டும் என்பதுதான் பெண்களின் கருத்து. கருத்து சுதந்திரம் என்ற வகையில் பாடகர் ஜேசுதாசுக்கு தன் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது என்றாலும், அதே நேரத்தில் ஜீன்ஸ் போன்ற ஆடை அணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை, அதுகுறித்து இதுபோன்ற கருத்துக்களை கூறுவது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும்.

Nandri:dailythanthi


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 09, 2014 5:23 pm

T.N.Balasubramanian wrote:இது விஷயமாக ஒரு ஜோக் .
வயதுக்கு வந்த பெண்ணிடம் , தாய் சில அறிவுரை கூறி இருந்தார் .
பையன்கள் , மேலே கை வைத்தால் "Don ' t " என்று சொல்லணும்
இடுப்பு கீழ் கை வைத்தால் "ஸ்டாப்" என்று சொல்லணும் என்று அனுப்பிவைத்தார் .
ஒரு நாள் பெண் , அலங்கோலமாக வந்தார் . நான் சொன்ன வார்த்தைகளை
சொன்னய இல்லையா என்று அம்மா கேட்க , சொன்னேம்மா ,
ஒரே சமயத்துலே ரெண்டு இடத்துலே கை .
அப்பவும் நீ சொல்லிகொடுத்ததை சொன்னேன் .

ரமணியன்

ஹா ஹா ஹா...!!!! சூப்பர் ஜோக்!



ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 5:48 pm

ஆடை அணிவதில்தால் சுதந்திரம் இருக்க வேண்டும்...சுதந்திரம் என்கிற பெயரில் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் வண்ணமோ அல்லது எச்சில் ஒழுகும் வண்ணமோ உடை அணிவது எதற்காக...அழகை வெளிப்படுத்துவதற்காகவா..காட்டுவதற்காகவா.. அழகை வெளிப்படுத்துவதற்கும் காட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது அல்லவா..கண்ட உடைகளை அணிந்தால் நல்ல எண்ணம் கொண்ட ஆண்கள் முகம் சுளிப்பார்கள்..வக்கிரபுத்தி உடையவர்கள்.................................. இந்த செயல் இரண்டுக்கும் யார் காரணம்..பெண்கள் தீபமாக இருக்கும் வரை வணங்கத்தோன்றும்..காட்டுத்தீயாக மாறினால் அனைவருக்கும் அழிவுதான்...இதில் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த சமுதாயம்..ஆண்.பெண் என்ற பாகுபாடு இல்லை...

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Oct 09, 2014 6:27 pm

ஆர். நந்தகோபல் (I .A.S) அவர்களின் வளையாத பனைகள் என்ற சிறுகதை தொகுதியிலிருந்து ஒரு பகுதி இது.
“பெண்ணின் உடையைப் பார்த்து அதிர்ந்து போனார் கிருஷ்ணசாமி. மேலே கையில்லாமல் ஒரு ஜாக்கெட், தொப்புள் வெளியில் தெரிந்தது. அதற்குக் கீழ் ஒரு பாவாடை. ஜாக்கெட்டிற்கும், பாவாடைக்கும் நடுவில் இரண்டங்குலம் இடைவெளி இருந்தது. பெண் நல்ல சிவப்பு. சற்று புஷ்டியான உடம்பு, துப்பட்டா மாதிரி ஏதோ பள, பளப்பான சரிசை வேலைப்பாடுகள் நிறைந்த துணியைக் கையில் சுற்றி இருந்தது. அதைத்தோளில் போடலாம். அல்லது மார்பில் குறுக்காகப் போடலாம். ஏன் கையில் சுற்றியிருந்தது என்று தெரியவில்லை. கையில்லாத ரவிக்கை, பாவாடையுடன் நின்றுகொண்டு இருந்த மாதிரி இருந்தது. சினிமாவில் தான் இதையெல்லாம் பார்க்க முடியும். ஏதாவது சீனில் ஹீரோயினை இப்படிப் பாவாடை சட்டையில் அரை நிமிடம் காட்டுவார்கள். இங்கே மணப்பெண் இப்படி நிற்கிறது கிருஷ்ணசாமிக்கு என்னவோ போல் இருந்தது. அது என்ன கலாச்சாரமோ தெரியவில்லை. மாப்பிள்ளை முழு கோட் சூட்டோடு இருக்கிறார். ஆங்கிலப் படங்களில் ஆண்கள் கோட், சூட்டோடு இருப்பார்கள். பெண்கள் மார்பகங்களை பாதி காட்டிக்கொண்டு அரை, குறை ஆடைகளுடன் வருவார்கள். அதுமாதிரியே இங்கேயும் இருக்கிறதே என்று அவருக்குத் தோன்றியது.
கல்யாணத்தில் இப்படி அரை, குறை ஆடையுடன் பெண்ணை நிறுத்தி இருதரப்பு, அப்பா அம்மாக்களும் கூச்சம் இல்லாமல் போஸ் கொடுக்கிறார்கள். பெண்ணும், மாப்பிள்ளையும் சிரித்தபடி போஸ் கொடுக்கிறார்கள். இது என்ன கலாச்சாரம்....? கிருஷ்ணசாமிக்குக் கோபமாக வந்தது. பெண்ணை அரை நிர்வாணமாக நிறுத்தி போஸ் கொடுக்கும் அழகை என்ன சொல்வது? அதற்குப் பெண்ணும் எந்தக் கூச்சமும் இல்லாமல் காட்சிப் பொருள் மாதிரி நின்று சிரித்துக் கொண்டிருந்தது.” (பக்.122-123)
“அடுத்து ட்ரெஸ், லவ் பண்றபோது ரொம்ப நாகரிகமா உடுத்தறதை ரெண்டு பேருமே பெருமையாக நினைப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு அது அவனுக்குப் பிடிக்கவில்லைன்னு சொல்றான். இதுவும் நடந்திருக்கும் என்றே நினைக்கிறேன். மனைவியை மற்றவர்கள் ரசிக்க்க் கூடாது என்கிறது எல்லா ஆண்கள் மனோபாவம். அதையும் ரெண்டுபேரும் புரிஞ்சுக்கல்ல. இது உனக்குப் பெரிய குறையா தெரியுது. நீ உடுத்தறது அவனுக்குப் பெரிய குறை. உடுத்தாம இருக்கிறது உனக்குப் பெரிய குறை... சரி தானே...” (பக்.166-167)





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 6:46 pm

//“அடுத்து ட்ரெஸ், லவ் பண்றபோது ரொம்ப நாகரிகமா உடுத்தறதை ரெண்டு பேருமே பெருமையாக நினைப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு அது அவனுக்குப் பிடிக்கவில்லைன்னு சொல்றான். இதுவும் நடந்திருக்கும் என்றே நினைக்கிறேன். மனைவியை மற்றவர்கள் ரசிக்க்க் கூடாது என்கிறது எல்லா ஆண்கள் மனோபாவம். //

புன்னகை ரொம்ப சரி ரமேஷ் ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Oct 09, 2014 7:47 pm

ஆடைஅணிவது அவரவர் விருப்பம் என்றாலும் மற்றவர்கள் பார்வைக்கு விகாரமாய் அணிந்தால் அப்போது.....!!! டாக்டருக்கு என்ற உடை. வழக்கறிஞ்சருக்கென்றுஓர்உடை, ககாவலருக்கென்று ஓர் உடை, துறவிக்கென்று ஓர்உடை, செவிலியருக்கென்றுஓர்உடை, கோமாளிக்கென்று ஓர்உடை என உடைகளை அணிந்து செயலாற்றுவது சமுதாயத்தில் மதிப்பைதருகிறது. உடையை வைத்தே பணியை அறியமுடிகிறது. லேடீஸ் டைலர், ஜென்ஸ் டைலர் என உடைதைப்பதிலும் வேறு வேறு டைலர்இருந்தனர்...ஆனால் தற்போது ஆடவர்உடை, மகளிர்உடை எனபிரித்துபார்க்க முடியாத நாகரிக உடை யால் ..... இன்னலேஅன்றி வேரொன்றுமில்லை .....இன்னும் என்னென்ன மாற்றம் வரப்போகிறதோ பார்க்கலாம். ஒருவரை அளவிட நடை உடை பாவனை வைத்தே அறியனும் அதுவே அவருக்கு உகந்த நல்ல உடையாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 09, 2014 9:10 pm

பெண்கள் ஜீன்ஸ்அணிவது , அவர்களுக்கு உடல் ரீதியாக நல்லது இல்லை என்று எங்கோ படித்த நினைவு .
எவ்வளவு தூரம் இதில் உண்மை உள்ளது தெரியாது .அதே சமயம் , பைஜாமா அணிவதால் கெடுதல் இல்லையாம் .
இது விஷயம் அறிந்தவர்கள் ,விரிவு படுத்தலாம் /தெளிவு படுத்தலாம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 9:23 pm

T.N.Balasubramanian wrote: பெண்கள் ஜீன்ஸ்அணிவது , அவர்களுக்கு உடல் ரீதியாக நல்லது இல்லை என்று எங்கோ படித்த நினைவு .
எவ்வளவு தூரம் இதில் உண்மை உள்ளது தெரியாது .அதே சமயம் , பைஜாமா அணிவதால் கெடுதல் இல்லையாம் .
இது விஷயம் அறிந்தவர்கள் ,விரிவு படுத்தலாம் /தெளிவு படுத்தலாம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094325

ஜீன்ஸ் அணிவது பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் உகந்த செயல் அல்ல..காரணம் நம்நாட்டின் தட்பவெப்ப நிலைதான்..இறுக்கமான ஆடை உடல் சூட்டை மேலும் அதிகப்படுத்தி அப்புறம் நம்மை படுத்திவிடும்...இருபாலருக்கும் மலட்டுத்தன்மை உண்டாக்குவதில் இந்த ஆடைக்கு கணிசமான பங்கு உண்டு என்று கணித்துள்ளார்கள்..

பைஜாமா தொள தொள ஆடை..காற்றோட்டம் இதில் உண்டு...எனவே தடையில்லை..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 9:55 pm

T.N.Balasubramanian wrote: பெண்கள் ஜீன்ஸ்அணிவது , அவர்களுக்கு உடல் ரீதியாக நல்லது இல்லை என்று எங்கோ படித்த நினைவு .
எவ்வளவு தூரம் இதில் உண்மை உள்ளது தெரியாது .அதே சமயம் , பைஜாமா அணிவதால் கெடுதல் இல்லையாம் .
இது விஷயம் அறிந்தவர்கள் ,விரிவு படுத்தலாம் /தெளிவு படுத்தலாம் .
ரமணியன்

அது பெண்களுக்கு மட்டும் அல்லது ஆண்களுக்கும் நல்லது இல்லை ஐயா புன்னகை நேசன் சொன்னது போல , நம் நாட்டு தட்ப வெட்பத்துக்கு அது உகந்தது இல்லை....ஒரு படத்தில் ரஜினி சொல்வாரே, அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது........"மெட்ராஸ் வெயில இத போட்டுண்டு மவுண்ட் ரோடிலே போனா எல்லாம் வெந்துடும் ".....என்பார்................

அது தான் ரொம்ப சரி..................இருபாலருக்கும் மலட்டுத்தன்மை உண்டாக்குவதில் இந்த ஆடைக்கு கணிசமான பங்கு உண்டு என்று கணித்துள்ளார்கள்....என்பது தான் ரொம்ப சரியான செய்தி...மேலும் வடநாட்டவர்களை நீங்கள் பார்த்திருபீர் கள் ...............சாயங்காலம் ஆனால் பைஜாமா வும் ஜிப்பாவும் தான் போடுவார்கள்.....இரவு உடை அது அவர்களுக்கு......................உள்ளாடை கள் இல்லாமல் அதை அணிவார்கள், அதனால் தான் மேலே ஜிப்பா பெரியதாக இருக்கு................அது எதனால் என்றால்.....காற்றோட்டமாக இருப்பதற்காக................

நாமும் அந்த காலத்தில் வேஷ்டி, கைலி என அணிந்தோம்.....இப்போ..............ஜீன்ஸ் டிராயரை வயசு வித்தியாசமோ நேர வித்தியாசமோ 'பால் ' வித்தியாசமோ ..............பார்க்காமல் அணிகிறோம்...............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக