புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
29 Posts - 60%
heezulia
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
194 Posts - 73%
heezulia
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
8 Posts - 3%
prajai
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_m10பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 06, 2014 10:02 pm

பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட்
நீரை.மகேந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்,
படங்கள்: வீ.நாகமணி, எம்.புண்ணியமூர்த்தி


இதுவரை இந்தியாவில் நடந்ததிலேயே பிரமாண்டமான நிதி மோசடி இதுதான்’ என்கிறார்கள். 'ஐந்து கோடி இந்தியர்களிடம் இருந்து சுமார் 49,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது’ என்றும் சொல்கிறார்கள். 'அரசாங்க அனுமதியோ, கண்காணிப்போ இல்லாமல் இத்தனை பெரிய தொகை எப்படி வசூலிக்கப்பட்டது?’ எனப் பொருளாதார நிபுணர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். இந்தியா முழுக்க அதிர்வு அலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது 'பி.ஏ.சி.எல்’!

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்ட 'பேர்ல்ஸ் கோல்டன் ஃபாரஸ்ட்’ (Pearls Golden Forest) என்ற நிறுவனம், ரியல் எஸ்டேட் மீது முழுக் கவனத்தைப் பதித்தது. குறைந்தபட்சம் 160 ரூபாய் முதல் லட்சக்கணக்கில் ரூபாய் கட்டி, எதிர்காலத்தில் வீட்டு மனைகளைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என வாக்குறுதி கொடுத்ததால், லட்சக்கணக்கான மக்கள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டினர். நிறுவனத்தின் சார்பில் தரப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்டன. இதனால் நிறுவனத்தின் நம்பகத்தன்மையும் அதிகரித்தது. இதன் அதிவேக வளர்ச்சியைச் சந்தேகித்த செபி (The Securities and Exchange Board of India), 'பி.ஜி.எஃப், ஒரு சட்டவிரோத நிறுவனம்’ என்று அறிவித்து, 1997-ல் தடையும் செய்தது. நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டுக்குச் சென்று சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். செபி, உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டுக்குப் போனது. அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே 'பேர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (Pearls Agrotech Corporation Limited - P.A.C.L) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பி.ஜி.எஃப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அப்படியே இங்கு மடைமாற்றினார்கள். இதற்கு இடையில் உச்ச நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது. சி.பி.ஐ, கடந்த மார்ச் மாதம் பி.ஏ.சி.எல் நிறுவன இயக்குநர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றைச் சோதனை யிட்டு, ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றது. மேலும், நிறுவனத்தின் சுமார் 1,000 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

மக்களிடம் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டி தொழில் செய்யும் எந்த நிறுவனமும், பங்குச்சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான 'செபி’யில் அனுமதி வாங்க வேண்டும். ஆயிரக்கணக்கான கோடிகள் நிதி திரட்டியும்கூட பி.ஏ.சி.எல் நிறுவனம், 'செபி’யில் அனுமதி வாங்கவில்லை. இது தொடர்பான விவகாரத்தில், ''பி.ஏ.சி.எல்’ வசூலித்த ஒரு ரூபாய்கூட முறையான வழியில் திரட்டப்படவில்லை. முழுப் பணத்தையும் முதலீட்டாளர்களிடமே திருப்பித் தர வேண்டும்’ என உத்தரவிட்டது செபி. ஆனால், இப்போது வரை மக்கள் பணம் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்; பி.ஏ.சி.எல் நிறுவனமும் வாங்கிக்கொண்டே இருக்கிறது. பி.ஏ.சி.எல்-க்கு தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் வாடிக்கையாளர்கள் நிறைந்திருக்கின்றனர். தென் இந்தியாதான் இதன் முக்கியமான மார்க்கெட்.

இந்த நிறுவனத்தின் மோசடி முகம் அரசல்புரசலாக வெளிவரத் தொடங்கியதுமே, சென்னை உள்பட பல ஊர்களிலும் மக்கள் திரண்டு சென்று, கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்டனர். ஆனால், அது பெரிய அளவில் சிக்கலை உருவாக்கவில்லை. இதற்கும் வலுவான ஒரு காரணம் இருக்கிறது. பி.ஏ.சி.எல் என்ற சாம்ராஜ்யத்தின் ஆணிவேராக இருப்பவர்கள் ஏஜென்ட்கள். இந்தியா முழுக்க ஏஜென்ட் மட்டுமே சுமார் 33 லட்சம் பேர் இருக்கிறார்கள். 'கட்டிய பணம் திரும்பக் கிடைக்கும்’ என்று இவர்கள்தான், இப்போதும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துத் தேக்கி வைத்திருக்கின்றனர். அதற்குக் காரணம், கை நிறையக் கிடைக்கும் கமிஷன். பி.ஏ.சி.எல் ஏஜென்ட்களுக்கு சம்பளம் கிடையாது. அதற்குப் பதிலாக, ஒரு புதிய வாடிக்கையாளரைச் சேர்த்துவிட்டால் 12 சதவிகிதம் கமிஷன் கிடைக்கும். அவர் மூலமாகச் சேர்ந்தவர் மேலும் புதியவர்களைச் சேர்த்துவிடும்போது 2 சதவிகிதம் கூடுதல் கமிஷன் கிடைக்கும். எம்.எல்.எம் கான்செப்ட்தான். உங்களுக்கு கீழே உள்ளவர் ஆட்களைச் சேர்க்க, சேர்க்க உங்களுக்குப் பணம் கொட்டும். ஒரு பி.ஏ.சி.எல் வாடிக்கையாளர் கட்டும் தொகையில், ஏஜென்ட்களுக்கு கமிஷனாக மட்டுமே 40 சதவிகிதம் போய்விடுகிறது.

'எல்.ஐ.சி-யில் பணத்தைப் போடுவதைவிட இதில் லாபம் அதிகம். இதில், ஐந்தரை வருடங்களில் நீங்கள் போட்ட பணம் இரண்டு மடங்கு ஆகும். விபத்துக் காப்பீடு இலவசம்’ என்றெல்லாம் ஏஜென்ட்கள் கவர்ச்சி வாக்கியங்கள் உதிர்க்கிறார்கள். ஆனால், கடந்த ஒரு வருட காலமாக பி.ஏ.சி.எல் சரியான நேரத்தில் முதிர்வுத் தொகையைத் தரவில்லை. அப்படி முதிர்வுத் தொகை கேட்டு பிரச்னை செய்தவர்களுக்கு மட்டும், பணத்தைக் கொடுத்து செட்டில் செய்துள்ளனர்.

ஆந்திராவில் இப்படி பி.ஏ.சி.எல் மீது மோசடிப் புகார் எழுந்தபோது, கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்டு பெரும் கும்பலாகத் திரண்டனர் வாடிக்கையாளர்கள். உடனே வேறு மாநிலங்களில் வசூலான பணத்தை ஆந்திர முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது பி.ஏ.சி.எல் நிர்வாகம். இதனால் பணம் கட்டியவர்கள், 'நல்ல நிறுவனத்தைத் தப்பா நினைச்சுட்டோமே’ என மீண்டும் பணத்தைக் கொண்டுவந்து கொட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். பிரச்னை வரும்போது இதுமாதிரி 'அடேங்கப்பா’ வியூகங்களால் சமாளித்து வருகிறது பி.ஏ.சி.எல்.

'வசூலிக்கும் பணத்துக்கு ஏற்ப, வீட்டுமனை ஒதுக்கப்படும்’ என்பார்கள். மனை என்றதும் அரை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் என நினைக்க வேண்டாம். அது 200 ச.அடி, 250 ச.அடி என மிகமிகக் குறைவானதாகவே இருக்கும். அதேபோல் தமிழ்நாட்டில் பணம் கட்டியவர்களுக்கு ஏதாவது ஒரு வட இந்திய மாநிலத்திலும், அங்கு கட்டியவர்களுக்கு இங்கு ஏதாவது ஓர் ஊரிலும் நிலம் ஒதுக்கியிருப்பதாகப் பத்திரம் தருவார்கள். அது என்ன ஊர், எங்கு இருக்கிறது என எதுவும் தெரியாது. இதை யாரும் மெனக்கெட்டு நேரில் சென்று பார்க்கப்போவதும் இல்லை. இதனால் பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் கரங்கள் எங்கெங்கும் பரவிவிட்டன. பல ஆண்டுகளாக சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து தொடர்ந்து தப்பித்தவர்களை, சமீபத்திய கூடுதல் அதிகாரத்தால் மேலும் இறுக்கியிருக்கிறது செபி!

பி.ஏ.சி.எல் நிறுவனத் தரப்பில் விளக்கம் பெற முயற்சித்தோம். அதன் சென்னைக் கிளை நிர்வாகிகள் உள்பட தலைமைப் பொறுப்பில் உள்ள அனைவரும் 'தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே’ இருக்கிறார்கள். நிறுவனத்தின் தரப்பில் இருந்து பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், 'எங்கள் நிறுவனம் சட்டபூர்வமாக இயங்குகிறது. 'செபி’யின் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதை நம்மிடம் அந்த நிறுவனத் தரப்பில் எவரும் விளக்க முன்வரவில்லை!

இப்போதும் பி.ஏ.சி.எல்-லின் செயல்பாடுகள் குறித்த சந்தேகங்களை விளக்கும் திருப்திகரமான பதில்களை அந்த நிறுவனத்தினர் அளிக்க முன்வந்தால், அதைப் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்!

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

- வ.நாகப்பன், பங்குச்சந்தை ஆலோசகர்.
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் P80e
''இதுபோன்ற நிறுவனங்களில் பணம் கட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 10 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும் எனச் சொல்லும் எந்தத் திட்டமும் ஏமாற்றுவதாக இருக்கலாம். 40 சதவிகிதம் வரை ஏஜென்டுக்கு கமிஷனாகக் கொடுத்துவிட்டால் முதலீட்டாளருடைய பணம் திரும்ப எப்படிக் கிடைக்கும் என்பதை யோசிக்க வேண்டும். ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை... போன்ற அரசு கட்டுப்படுத்தும் நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். இதுபோன்ற மோசடிகளை பொருளாதாரக் குற்றமாக மட்டும் அல்ல, கிரிமினல் குற்றமாகவும் கருதி, அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்!''

பணம் கட்டியவர்கள் என்ன சொல்கிறார்கள்?

''நான் கட்டுன 2 லட்ச ரூபாய்க்கு முதிர்வு காலம் முடிஞ்சு, ஒரு வருஷம் ஆகிடுச்சு. இதுவரை பணம் தரலை. பதில் சொல்லக்கூட ஆபீஸ்ல ஆள் இல்லை. என்னைச் சேர்த்துவிட்ட ஏஜென்ட், இப்போ அங்கே வேலை பார்க்கலை!''
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் P80
- ராஜ்குமார், உத்திரமேரூர்.

''பிரச்னைனு சொல்றாங்க. ஆனா, 'நீங்க தைரியமா பணம் கட்டுங்க. நம்பிக்கையான நிறுவனம்’னு ஏஜென்ட்டுங்க எல்லாரும் சொல்றாங்க. இங்கே இருக்குற ஆபீஸை மூடுறதும் திறக்குறதுமா இருக்குறாங்க. என்ன பண்றது, யாரைக் கேட்குறதுனு தெரியலை!''
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் P80a
- முனிராஜ் மலைச்சிந்து, கிருஷ்ணகிரி.

''எனக்கு வரவேண்டிய பணத்தைக் கேட்டு ஒரு வருஷமா அலைஞ்சுட்டிருக்கேன். முன்னாடி, 'சீக்கிரம் தந்துடுவோம்’னு சொன்னாங்க. இப்போ, 'கம்பெனி மேல கேஸ் இருக்கு. லேட் ஆகும்’னு சொல்றாங்க!''
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் P80b
- சின்னராஜ், காவேரிப்பட்டினம்.

ஏஜென்ட்கள் என்ன சொல்கிறார்கள்?


''ஆறு வருஷம் ஏஜென்ட்டா இருந்தேன். நான் மட்டுமே 40 லட்சம் வசூலிச்சுக் கட்டியிருக்கேன். மோசடினு செய்திகளைப் படிச்சப் பிறகு, கடந்த ஆறு மாசமா புது பாலிசி எதுவும் எடுக்கிறது இல்லை. 'கட்டுன வரைக்கும் பணத்தைத் திரும்பத் தரணும்’னு கேட்டுக்கிட்டே இருந்தேன். உடனே என்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க. என் மூலமா பணம் கட்டுனவங்க பணத்தைக் கேட்டு, வீட்டுக்கு வந்து என்னை நெருக்குறாங்க. எனக்கு என்ன பண்றதுனு தெரியலை!''
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் P80c
- பி. ராஜமாணிக்கம், வேலாண்டிபாளையம், கோவை.

''நான், என் கணவர்... ரெண்டு பேருமே ஏஜென்ட்களா இருக்கோம். நான் 2 லட்சம் ரூபாய் கட்டியிருக்கேன். 6 லட்சம் ரூபாய் வசூலிச்சுக் கொடுத்திருக்கேன். பிரச்னையான பிறகு ஆபீஸ்ல பதில் சொல்லக்கூட ஆள் இல்லை. சீனியர் ஏஜென்ட்கள் போன் நம்பர் எல்லாம் சுவிட்ச் ஆஃப்னு வருது!''
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் P80d
பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் - சுமதி, சென்னை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 06, 2014 10:38 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Tue Oct 07, 2014 10:57 am

இதுவும் விகடனில் வந்ததுதான்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 07, 2014 12:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எங்கள் மருத்துவ மனை பணியாளர்களும் ஏஜெண்டுகளாக உள்ளனர். பல பேர் பணம் கட்டியுள்ளனர் ..
இந்த உண்மை அவர்களுக்கு தெரியுமா என்றே தெரியவில்லை....






கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக