புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:47 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
7 Posts - 4%
prajai
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
17 Posts - 4%
prajai
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_m10அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 01, 2010 1:04 am

அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! 200px-Emily_Dickinson_daguerreotype
எமிலி டிக்கின்சன்

கவிதைத் துறையை எடுத்துக் கொண்டால் பெண் கவிஞைகள் இயற்றிய கவிதைகள் பற்றியும் அவற்றின் ஆளுமை பற்றியும் தமிழில் மட்டுமன்றி மொழிபெயர்ப்புக்களின் ஊடாகவும் அறிந்து கொள்ளலாம். பெண் என்ற தளத்தில் நின்று கொண்டு தமது அனுபவம், ஆற்றல், ஆளுமை போன்றவற்றையும் தமது சுயம், இருப்பு ஆகிய விடயங்களையும் கவிதையினூடாக வெளிப்படுத்தும் விதம் இயல்பானதாக அமைந்து விடுகிறது. பெண்கள் தங்களைப் பற்றித் தாங்களே கூறுகின்ற போது வெளிப்படுகின்ற சொற்களில் ஆழமும் உயிர்ப்புத் தன்மையும் உணர்வு ரீதியான கனத்தைக் கொடுக்கிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து கவிதை எழுதிய பெண்கள் பற்றியும் அவர்களது படைப்புக்கள் பற்றியும் பார்க்கின்ற போது அமெரிக்க நாட்டுப் பெண் கவிஞையான எமிலி டிக்கின்சன் (Emily Dickinson) குறிப்பிடத்தக்கவர். அமெரிக்கப் பெண் கவிஞைகள் வரிசையில் இவரை முன்னோடிகளில் ஒருவராகக் கொள்ளலாம்.

எமிலி டிக்கின்சன் 1830 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அமெரிக்காவில் மாசசூசெட்சில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் என்ற செல்வாக்குப் பெற்ற குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியின் வழக்கறிஞராகவும், பொருளாளராகவும் இருந்தார். இவரது தாய் எமிலி நார்க்ராஸ் அமைதியானவர். தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்தார். இவருக்கு ஆஸ்டின் என்றழைக்கப்பட்ட வில்லியம் ஆஸ்டின் டிக்கின்சன் மூத்த சகோதரனாகவும் வின்னி என்பவர் இளைய சகோதரியாகவும் விளங்கினார். அவரே எமிலி இறந்த பின்னர் அவருடைய கவிதைகளைத் தொகுத்து வெளியிடக் காரணமானவர். எமிலியின் பெரும்பாலான கவிதைகள் அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த கால கட்டத்தில் எழுதப்பட்டவை. எமிலியின் கவிதையில் காணப்பட்ட பதற்றமான உணர்வுக்கு இந்தப் போரே காரணம் என்பர் சிலர். எமிலி தனது கவிதைகளை வெளியிட எண்ணி ஹிக்கின்சன் என்பவரிடம் அறிவுரை கேட்டதாக அறிய முடிகிறது. அதே போல் மந்த்லியில் (The Atlantic Monthly) என்பவரது கட்டுரை ஒன்றைப் படித்து விட்டு அவரிடம் தனது கவிதைகள் தொடர்பாகப் பேச விரும்பிய எமிலி ‘எனது கவிதை உயிர்ப்புடன் இருக்கிறதா என்பதைச் சொல்ல உங்களுக்கு நேரமிருக்கிறதா? என் மனம் அவற்றிற்க்கு நெருக்கமாக இருப்பதால் என்னால் பகுத்துப் பார்க்க முடியவில்லை. கேட்பதற்க்கு வேறு யாருமில்லை. அது உயிர்ப்புடன் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதைச் சொல்லும் அவகாசமும் உங்களுக்கு இருந்தால் நான் உடனே நன்றி கூறுவேன்” எனக் கடிதம் எழுதினார்.

(கண்ணாடியில் மிதக்கும் பிம்பம், பக்-108)

ஆயினும் எமிலி உயிரோடு இருந்த காலத்தில் அவர் எழுதிய 1175 கவிதைகளில் ஏழு கவிதைகள் மட்டுமே பத்திரிகையில் வெளியாகி இருந்தன. தனது கவிதையில் பிறர் திருத்தங்கள் செய்து வெளியிட முனைந்தமை எமிலிக்குப் பிடிக்கவில்லை. இதுவே பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளிவராமைக்கான காரணமாகும் என சிலர் கூறுவர். எமிலியின் இறப்புக்குப் பின் வெளிவந்த அவரது கவிதைத் தொகுப்புக்களின் மூலம் முதன் முதலில் பரவலாக அவரைப் பற்றி அறியப்பட்டதோடு உடனடியான வாசகர் வட்டமும் உருவாகியது. 1890 முதல் 1892 வரை எமிலியின் கவிதைகள் பிரபலமாயின. 1890,1891,1896 ஆம் ஆண்டுகளில் எமிலியின் கவிதைகள் மூன்று தொகுப்புக்களாக வெளியாகின. அதன் பின் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எமிலியின் மருமகளான மார்த்தா டிக்கின்சன் பியான்சி ((Martha Dickinson Bianchi) மேலும் சில கவிதைகளைத் தொகுப்புக்களாக வெளியிட்டார். 1914 இல் ஒற்றை வேட்டை நாய் (the Single Hound) 1924 இல் எமிலி டிக்கின்சனின் வாழ்வும் கடிதங்களும் ( The Life and Letters Of Emily) 1929 இல் எமிலி டிக்கின்சனின் மேலும் சில கவிதைகள் என்பன (Further Poems Of Emily Dickinson) வெளிவந்தன.

எமிலி டிக்கின்சனின் கவிதைகள் பற்றி நோக்குகின்ற போது அவருடைய எழுத்து, ஆற்றல், கற்பனைத்திறன், சொற்திறன் போன்றவை குறிப்பிடப்படக் கூடியவை. மிகவும் விசாலமான பரந்த நோக்கையும் வாழ்க்கை, காதல், இயற்கை\ போன்றவற்றின் மீது ஆழமான பற்றையும் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. எமிலியின் கவிதைகளில் ஆழம் மிகுந்த சொந்தக் கருத்துக்களும் துணிச்சலும் வெளிப்படுவதைக் காணலாம்.

'ஆராய்ந்து பார்க்கும் கண்ணுக்கு
அந்தப் பத்து தெய்வீகப் பொருன்மையுடையது
மிதமிஞ்சிய பித்தோ அதிகப் பொருன்மையுடையது
இதுவே பெரும்பாண்மை
இந்த அதிகாரத்தின் கீழ் அனைவரையும் போல
இதனை ஏற்றுக் கொண்டால் நீங்கள்
புத்தித் தெளிவுள்ளவர்
மறுத்தாலே அபாயமானவர்
உடனே சங்கிலியால் பிணைக்கப்படுவீர்கள்'

எமிலியின் கவிதைகளில் காதல் உணர்வு வெகு சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தியாகம் செய்யப்பட்ட காதலும், அதன் உணர்வும், அதன் வலியும் அவற்றினூடாகப் புலப்படும்.

'உடைந்த உள்ளத்தோடு
நான் இருக்கிறேன்
ஆனால்
அதை உடைத்தவர் தாங்களல்ல.
அந்த வேதனையை நான்
பொறுமையுடன் தாங்கி வருகிறேன்.
நீங்கள் கிடைத்த பின்
அந்த வேதனையையும் மறந்து விட்டேன்."

காதலின் ஆழத்தைக் கூறும் போது பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்.

'நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது
அது தான் வாழ்க்கை
என் வாழ்வே உன்னோடு தான்
காதலிக்கப்படுவோர் மரிப்பதில்லை
காரணம் காதல் அழிவற்றது
அன்றேல் அது ஆராதிக்கப்படுகிறது.
காதலிப்போரும் மரிப்பதில்லை
காரணம் காதல் உயிராற்றலை
இறையம்சமாய் உருமாற்றுகிறது"

எமிலியின் கவிதைகளில் ஒரு பெண் எப்படியெல்லாம் தன் காதலை தியாகம் செய்கிறாள் என்ற தன்மை மேலோங்கிக் காணப்படுகிறது.

'இருந்தும் நான் உன்னோடு
வாழ முடியாது
ஏன் என்றால்
உன் முகம் ஏசுவை மறைத்துவிடும்"
'என் அன்பே
நாம் ஒருவரை ஒருவர் வணங்குவதிலிருந்து
என்னைக் காப்பாற்று.
இல்லை என்றால்
அது நம் இருவரையுமே அழித்துவிடும்"

இயற்கையில் தன்னைப் பறி கொடுத்த எமிலியின் கவிதை வரிகள் அவர் இயற்கையை எந்த அளவிற்க்கு இரசித்தார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

'பல ஸ்வரங்களைக் கொண்டது பூமி
மெல்லிசை இல்லாத பிரதேசம்
இன்னும் கண்டறியப்படாத தீப கற்பம்
அழகு என்பது இயற்கையின் நிதர்சனம்
நிலத்தில் பார்த்தாலும்
நீரில் பார்த்தாலும்
சில் வண்டின் ரீங்காரமே எனக்கு
பூமி இசைக்கும் ஆகச் சிறந்த இரங்கற்பா"

எமிலி காதல், இயற்கை போன்றவற்றை எந்த அளவிற்க்கு நேசித்தாரோ அதே போல நம்பிக்கை மீதான ஆழத்தை, உறுதியை அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை. ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் அவன் நம்பிக்கை மீது கொள்ள வேண்டிய பிடிப்பை, வைராக்கியத்தை இவரது கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

'ஒருவரின் நம்பிக்கையை இழப்பது
செல்வத்தின் இழப்பையும் மிஞ்சி விடும்
ஏனெனில்
இழந்த சொத்துக்களை மீட்டுக் கொள்ளலாம்
நம்பிக்கையையோ மீட்க முடியாது
வாழ்க்கையுடன் ஒரு முறை
மரபுரிமையாய்ப் பெறுவது நம்பிக்கை"

ஆண்டவனைப் பற்றிய கருத்துக்களையும் இவரது கவிதைகள் கொண்டுள்ளன.

' சிலர் நல்ல நாளில் கோவிலுக்குச்
செல்லும் பழக்கம் கொண்டுள்ளனர்
நான் வீட்டில் இருந்தே
அதைக் கண்டு பிடிக்கின்றேன்"

எமிலியின் இறப்புப் பற்றிய கருத்துக்களைப் பார்த்தால் அவற்றினூடான இறப்பின் வலிமை, நியதி என்பன தெளிவுபடுத்தப்படுகின்றன.

'இரவில் இறப்பு
அடுத்த நாட் காலை வீட்டில் பரபரப்பு
இப் புவியில் இயங்கிடும்
கம்பீரமான நல்ல தொழில்கள்"

தனது இறப்புப் பற்றி எமிலி வடித்த கவிதையில் மரணத்தின் அழியாமை பற்றி வெகுவாக விளக்குகிறார்.

'நான் மரணத்தை வரவேற்று
அதிகம் காத்திருக்க முடியவில்லை
மரணம் தான் என்னை நோக்கி
அன்போடு வந்து தடுத்தது.
நமக்காக காத்திருந்த வண்டியும்
தடு;த்து நிறுத்தப்பட்டது.
அதுவே அழிவு இல்லை என்பதற்க்கு ஆதாரம்"

தன் தாயின் இறப்பைப் பற்றியும் அன்பு வைத்த ஒருவர் பிரியும் போது ஏற்படுகின்ற துயரத்தைப் பற்றியும் எமிலி குறிப்பிடும் போது

'இதயத்தில் இடம் பெற்றிருந்த
அன்பை முழுமையாக
இழப்பது மிகவும் கொடுமையானது
அந்த அன்பும,;
இதயமும் மீண்டும் வருவது ஏது"

என மரணம் ஏற்படுத்துகின்ற வலியை தாயின் மரணத்தினூடாக எடுத்துக் காட்டுகிறார். எமிலி தன்னை வெளி உலகத்திடம் இருந்து தனிமைப்படுத்தினார் என்ற கருத்தும் நிலவுகிறது.

தாய், தன் வீடு, தன் வளர்ப்பு நாய் என தன்னை ஒரு குறுகிய வட்டத்துள் சிறைப்படுத்தியதாக சிலர் கூறுவர். ஆனால் அவ்வாறு கூற முடியாத நிகழ்வுகளும் சில உள்ளன. ஏனெனில் தன் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விழாக்களுக்கு சுவையான குளிர்பதனம் செய்யப்பட்ட இனிப்பு ரொட்டியும், அழகான குவளையில் மது இரசமும் வைத்து இவற்றுடன் தன் கவிதை ஒன்றையும் அன்பளிப்பாகக் கொடுப்பதில் எமிலி தவறியதில்லை. தன்னிடம் நட்புக் கொண்டவர்கள் பிணியால் பீடிக்கும் போது ஆறுதல் அளிக்கும் வகையில் கவிதை நடையில் எமிலி தன் நல்ல உள்ளத்தை வெளியிடுவாள். அவள் ஏராளமான கடிதங்களை எழுதியதில் இருந்து தான் வாழும் உலகை அவள் மறந்து விட்டாள் என்று எவரும் கூற முடியாது.
- (நல்லிசைப் புலமை மெல்லியலார், பக்கம் - 29)

எமிலி தொடர்பான தகவல்களை மொழி பெயர்புக்களின் மூலமே தமிழில் பெற்றுக் கொள்ளக் கூடியதான நிலை காணப்படுவதால் அவரது வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிகழ்வுகள் சில ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. எமிலி பிறப்பு முதல் இறப்பு வரை ஆம்ஹெர்ஸ்டிலேயே வாழ்ந்தாள். தாம் வாழ்ந்த காலத்தில் பிரபலமடையாத ஒரு கவிஞையாகவே இவர் காணப்பட்டார். 1858 - 1862 கால கட்டத்தில் அவரது படைப்பாளுமை உச்சத்தை எட்டியது. காதல் தோல்வியால் அவர் உலகத்தை விட்டு ஒதுங்கி வாழ்ந்தவராகவே பேசப்பட்டார். தனது கவலைகளுக்கு வடிகாலாகவே இவர் கவிதைகளை எழுதினாரோ எனத் தோன்றுகின்றது? எவ்வாறாயினும் 19ஆம் நூற்றா-ண்டின் சிறந்த பெண் கவிஞைகளின் வரிசையில் இன்று வரை அனைவராலும் கவனத்திற் கொள்ளப்படுகின்ற ஒருவராக எமிலி டிக்கின்சன் விளங்குகிறார்.

அமெரிக்க கவிஞை எமிலி டிக்கின்சன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக