புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
107 Posts - 49%
heezulia
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
9 Posts - 4%
prajai
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
234 Posts - 52%
heezulia
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
18 Posts - 4%
prajai
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
2 Posts - 0%
Barushree
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_m10மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 2:40 pm

இரண்டாம் சரபோஜி (கி.பி. 1798-1832)

மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  3Rnr56QlSD6S97PMKhgu+a0313604

துல்ஜாஜி கி.பி.1787இல் வாரிசு இன்றி மறைந்தார். இவர் தாம் இறக்கும் முன்பு சரபோஜி என்பவரைத் தத்து எடுத்துக் கொண்டார். சரபோஜி இளம்வயதினராக இருந்ததால், துல்ஜாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் அமர்சிங் என்பவர் அவருக்குக் காப்பாளராக இருந்து கி.பி.1787 முதல் 1798 வரை தஞ்சையை அரசாண்டு வந்தார். அமர்சிங் சுதந்திரத் தன்னாட்சி வேட்கை கொண்டவர். எனவே இவர் ஆங்கிலேயர்களைத் தஞ்சைப் பகுதியிலிருந்து விரட்ட விரும்பினார். அதனால் இவர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர் இவருக்குத் தொல்லைகள் பல கொடுத்தனர். இறுதியில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் இவர் மீது குற்றங்கள் பல சாட்டி இவரைப் பதவிநீக்கம் செய்து, தஞ்சை அரியணையில் துல்ஜாஜியால் தத்து எடுக்கப்பட்ட சரபோஜியைக் கி.பி.1798இல் அமர்த்தினர். இவரே இரண்டாம் சரபோஜி என்று அழைக்கப்படுகிறார்.

மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  XlbzYRunTqzqARlZy1CM+a0313605

இரண்டாம் சரபோஜி ஸ்வார்ட்ஸ் பாதிரியார் என்பவரால் வளர்க்கப்பட்டு அவர் மூலம் ஆங்கிலத்தை நன்கு கற்றறிந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, உருது, வடமொழி, பிரெஞ்சு, ஜெர்மன், டேனிஷ், கிரேக்கம், லத்தீன், டச்சு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.

இரண்டாம் சரபோஜி கி.பி.1798 முதல் 1832 வரை தஞ்சையை ஆட்சி புரிந்தார். ஆங்கிலேயருடன் நல்லுறவு வைத்திருந்தார். இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு (கி.பி.1798-1805) என்பவருடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி தான் வாழ்ந்து வந்த தஞ்சைக் கோட்டையையும், அதைச்சூழ்ந்த சில பகுதிகளையும் மட்டும் தான் வைத்துக் கொண்டு ஏனைய தஞ்சை மராட்டிய நாடு முழுவதையும் ஆங்கிலேயர்க்கு அளித்துவிட்டார்.

இரண்டாம் சரபோஜி தஞ்சை மராட்டிய மரபின் பழைய வரலாற்றையும், கி.பி. 1803ஆம் ஆண்டுவரை தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் ஆண்டு, தேதி வாரியாக எழுதி அவற்றைத் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் தெற்கில் உள்ள மீக நீளமான கல்சுவர் முழுவதிலும் வெட்டச் செய்தார். இதுவே உலகில் உள்ள மீக நீளமான கல்வெட்டு என்று கருதப்படுகிறது.

உலகின் தலைசிறந்த சிற்பி பிளாக்ஸ்மேன் (Flaksman) என்பவரைக் கொண்டு தம் உருவச் சிலையையும், சுவார்ட்ஸ் பாதிரியாருக்கு நினைவுச் சின்னத்தையும் வெண்பளிங்குக் கற்களில் செதுக்குமாறு செய்தார். சிற்ப உலகில் சிறந்து விளங்கும் அச்சிற்பங்கள் தஞ்சையில் இன்றும் நின்று நிலவிக் காண்போர் கருத்துக்கும் கண்களுக்கும் நல்ல விருந்தாக அமைந்துள்ளன.

மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !  8Is6mHVTKqjGKhI5kxUd+a0313606


தஞ்சாவூரில் மராட்டிய மன்னர்களால் தொடங்கப்பட்ட சரசுவதிமகால் நூலகத்தில் இரண்டாம் சரபோஜியும், ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் வடமொழி, தெலுங்கு, தமிழ் ஆகிய பல்வேறு மொழிகளில் இலக்கியம், இசை, மருத்துவம் போன்ற துறைகளைச் சார்ந்த ஓலைச்சுவடிகள், அச்சில் இடப்பட்ட நூல்கள் ஆகியவற்றை இடம்பெறச் செய்தனர். மேலும் இரண்டாம் சரபோஜி உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து ஏறத்தாழ 4000 புத்தகங்களை வாங்கிச் சரசுவதி மகால் நூலகத்தில் இடம்பெறச் செய்தார்.

இரண்டாம் சரபோஜி தமிழ்ப் புலவர்கள் பலரைத் தம் அவையில் உரிய சிறப்புகள் செய்து ஆதரித்தார். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் இவருடைய அவையில் தலைமைப் புலவராக வீற்றிருந்தார். இப்புலவர் பெருமான் இரண்டாம் சரபோஜி மீது சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்னும் நூலைப் பாடியுள்ளார். தமிழில் உள்ள குறவஞ்சி நூல்களில் திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்தபடியாக, சிறந்து விளங்குவது சரபேந்திர பூபாலக் குறவஞ்சியாகும்.இவரது காலத்தில் தன அபிராமி பட்டர் எழுதிய புகழ் பெற்ற அபிராமி அந்தாதி எழுதப்பெற்றது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 2:45 pm

தமிழகத்தின் உணவுக் களஞ்சியமான தஞ்சாவூருக்கு செல்பவர்கள் அங்குள்ள புகழ் பெற்ற பெருவுடையார்(சமற்கிருதத்தில் பிரகதீஸ்வரர்) கோயிலையும், மன்னர் சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்தையும் பார்க்காமல் வரமாட்டார்கள். தமிழகத்தின் மிளப்பெரிய வரலாற்று சான்றாக விளங்கும் இந்த நூலகம் 12-ம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டாலும், முழுமையான வளர்சியில்லாமல் பெயரளவில் இன்றுள்ள அரசு நூலகங்களை போலவே கவனிப்பார் இல்லாமல் இருந்துள்ளது. இதை மாற்றியமைத்து முழுமையான நூலகமாகவும், ஆராய்ச்சி மையமாகவும் மாற்றியர் மன்னர் இரண்டாம் சரபோஜி ஆவார்.

சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி மொழிகளில் இருந்த நூல்களை மட்டுமே வைத்துக்கொண்டிருந்த அந்த நூகலகத்தில் தமிழ் எப்படி உள்ளே வந்தது. பண்டைய தமிழ் அறிஞர்கள் எழுதிவைத்திருந்த ஓலைச் சுவடிகள் எப்படி சரஸ்வதி மகால் நூலகத்துக்கு வந்து சேர்ந்தது என்பது பற்றியும், மானார் சரபோஜியை பற்றியும் சில வரலாறுகளை பார்போம்.

தஞ்சை ஆண்டு வந்த மராட்டிய வம்சத்து போன்சுலே பரம்பரையில், ஐந்தாவதாக வந்தவர் இரண்டாம் சரபோஜி(கி.பி-1777-1832 ). இவரது இயற்பெயர் சரபோஜி ராசா போன்சுலே சத்ரபதி என்பதாகும். இவர் தஞ்சை இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் மன்னராக இருந்து மக்கள் பணி செய்யாமல் போனாலும், தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்ததன் மூலம் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களுள் முக்கியமான ஒரு இடத்தை பெற்றுள்ளார்.

மராத்திய வம்சாவளி அரசர் துளஜாஜி வாரிசின்றி இருந்ததால், அவர் இறக்கும் முன் அவருடைய தத்துப் பிள்ளையான சரபோஜி பட்டம் பெறவும், அம்மகனுக்கு காப்பாளராக அமரசிங் என்பவரும், சுவார்ட்சு பாதிரியார் (Rev.Schwartz) என்பவரையும் நியமித்து சிறுவனான சரபோஜிக்கு கல்வி கற்பித்து வளர்க்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், அமரசிங் தனக்கே பட்டம் கிடைக்க வேண்டுமென்று சூழ்ச்சியில் ஆங்கிலேய அரசிடம் பேரம் பேசினார். தாங்களின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ள அமர்சிங் சம்மதம் தெரிவித்தால், அமரசிங்கை தஞ்சையின் அரசராக்க பிரிட்டிஷார் சம்மதம் தெரிவிதனர். அப்படியே செய்தார் அமர்சிங். ஆங்கிலேயரின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த அமரசிங் பிரிட்டிஷ் அரசிடம் வாக்குறுதி கொடுத்தது போல நடக்காமல், சரபோஜியையும், அரசகுடும்பத்து தேவிமார்கள் மீதும் பொய்க் குற்றம் சுமத்தி அவர்களை சிறையில் அடைத்து துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில், தன்னிடம் இருக்கும் பதவி போகாமல் இருக்க அவர்களைக் கொல்லவும் திட்டமிட்டுள்ளார்.

இதைத் தெரிந்துகொண்ட சுவார்ட்சு பாதிரியார் ஆபத்திலிருந்து சரபோஜியை காப்பாற்ற முடிவு செய்த தன்னுடைய அதிகாரகத்தை பயண்படுத்தி சரபோஜிக்கு அரசுரிமையை வாங்கிக்கொடுத்துள்ளார். 1798-ல் சரபோஜிக்கு தஞ்சையின் மன்னர் என்ற பட்டத்தை வழங்கிய பிரிட்டிஷ் அரசு மன்னருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் முக்கிய சாரம் இதுதான்.

தஞ்சை நகரமும்,அதன் அருகிலுள்ள வல்லமும் சரபோஜியிடம் இருக்கும். தஞ்சாவூர் சமஸ்தானத்தின் பிற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்படும். இதற்கு கைமாறாக ஆங்கில அரசாங்கம், சரபோசிக்கு ஆண்டுதோறும் ஒரு இலட்சம் வராகனும், எஞ்சிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கும் கொடுக்கும். இவ்வாறாக அரசியல் ஆட்சி நிலையை அவர் இழந்தாலும், தன் ஆட்சி எல்லையில் தனக்கென ஒரு தனி காவல் படையை வைத்துக் கொள்ள சரபோஜிக்கு இவ்வொப்பந்தம் வழிவகுத்தது. மன்னரின் ராஜ்ஜியம் என்று சொல்லக்கூடிய பகுதிகளை ஆங்கில அரசின் பிரதிநிதிகளாக ரிசிவர், ரெசிடென்ட் என்ற பெயரில் இருந்தவர்கள் நிர்வாகத்தை கவனித்து வந்தனர்.

ஆங்கிலேயரின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு பெயரளவில் மன்னர் என்ற பெருமையோடு ஆட்சி நடத்தாமலே ஆண்டுகொண்டிருந்த இரண்டாம் சரபோசி 1820-ஆம் தன்னுடைய அரமண்மனை அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் 300-பேருடன் வட இந்திய சுற்றுப்பயணம் கிளம்பியுள்ளார். சுற்றுப்பயணம் என்றால், சாதாரணமானது இல்லை. இவர் தஞ்சையிலிருந்து சென்று வர மூன்று ஆண்டுகள் பிடித்துள்ளது.

சரபோஜியின் இந்த பயணத்தின் நோக்கம், வட இந்தியாவில் இருக்கும் இடங்களையெல்லாம் தான் கண்டு களிப்படைவதுடன், அவற்றை எல்லாம் தன்னுடைய நாட்டு மக்களும் காணும் வகையில், அந்த காட்சிகளை ஓவியமாக வரைந்து கொண்டுவர ஒரு ஓவியர் குழுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்றிருந்தார். முதலில் காசிக்கு சென்றவர், அங்குள்ள படித்துறைகள் 64-யும், புகழ் பெற்ற இந்து மத வழிபாட்டு ஆலயங்களையும், கங்கை ஆற்றையும், அதிலுள்ள பாலங்களையும் படமாக வரைந்துள்ளனர். தஞ்சை அரண்மனை வழக்கத்திலுள்ள சரஸ்வதி மகால் நூலகத்துக்கு ஏராளமான சமற்கிருத நூல்களை அங்கிருந்து வாங்கிக்கொண்டார்.

அடுத்து, டில்லியில் உள்ள ஜும்மா மசூதி, ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் போன்ற புகழ் பெற்ற இடங்களையெல்லாம் தன்னுடைய நாட்டிலுள்ள மக்கள் காண வழிவகை செய்யும் விதமாக படமாக வரைந்து எடுதுக்கொண்டதுடன், புகழ் பெற்ற கல்கத்தா காளி கோயிலை கண்டு இரசிக்கவும், கோயிலை படமாக வரையவும் கல்கத்தா சென்று தன்னுடைய சகாக்களுடன் முகாமிட்டு தங்கியுள்ளார்.

கல்கத்தாவிலிருக்கும் காளிகோவிளுக்கு தஞ்சை மன்னர் சரபோஜி வருவது குறித்து கல்கத்தாவில் கவர்னர் ஜெனரலாக இருந்த மெக்கனஸ் பிரபு 1st Marquess of Hastings என்பவருக்கு சென்னை கவர்னராகா இருந்த தாமஸ் மன்றோ என்பவர் ஒரு விரிவான கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழகத்திலிருந்து வந்துள்ள மன்னருக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும்படியும் கேட்டிருந்தார்.

காளி கோயில் அருகிலிருந்த ஒரு மாளிகையில் மன்னர் சரபோஜி தங்கியிருந்த போது, ஒரு நாள் இரவு கவர்னர் ஜெனரல் மெக்கனஸ் பிரபு தமது அதிகாரிகள் படைசூழ வந்துள்ளார். அந்த கால கட்டத்தில் ஆங்கிலேய கவர்னைர்களை நம் நாட்டு மன்னர்கள் தான் நேரில் சென்று சந்திப்பது வழக்கம். மன்னர்களை கவர்னர் சந்திக்கவேண்டும் என்று விரும்பினால், தங்களின் பிரதிநிதிகளைத்தான் அனுப்பித்தான் அதிகாரமில்லாத நம் நாட்டு மனர்களை சந்தித்துப் பேசுவார்கள்.

இப்படிப்பட்ட நேரத்தில், தன்னை சந்திக்க கவர்னரே வந்துள்ளது கண்டு மிகுந்த மகிழ்சி கொண்ட சரபோசி, கவர்னர் தன்னை சந்திக்க வந்தது குறித்து கேட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து நீங்கள் வருவது குறித்து எனக்கு மதராஸ் ஸ்டேட் கவர்னரிடமிருந்து ஏற்கனவே கடிதம் வந்துள்ளது. மூப்பனார் தேசத்திலிருந்து வந்துள்ள உங்களிடம் தமிழ் நூலான திருக்குறளின் பெருமைகளையும், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பற்றியும், திருக்குறளை போல தமிழில் உள்ள சிறந்த நூல்கள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் தான் நான் உங்களை காண வந்துள்ளேன். தமிழ் புலவர்கள் பற்றியும், தமிழில் உள்ள நூல்கள் பற்றியும் உங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று பல நாட்களாக உங்கள் வரவுக்காக காத்திருந்தேன் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்ட மன்னர் சரபோசிக்கு பெரிய அதிர்ச்சி... ஏனென்றால் மராத்திய வம்சத்தில் வந்த இவருக்கு தமிழும் தெரியாது, திருக்குறளும் தெரியாது. எதோ தஞ்சை மக்களிடம் பேசுவதற்காக தமிழில் உள்ள சில வார்த்தைகள் மட்டுமே மன்னருக்கு தெரியும். மற்றபடி இவருக்கு தெரிந்ததெல்லாம் தாய்மொழியான மராத்தி தான். இதை ஆங்கில கவர்னரிடம் சொல்ல முடியாத மன்னர் உள்ளே சென்று தனது உதவியாளர்களிடம் திருக்குறள் என்றால் என்ன..? என்று கேட்டுள்ளார்.

அங்கிருந்த அலுவலர்கள் திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் தங்களுக்கு தெரிந்த சில தகவல்களை மன்னருக்கு சொல்லியுள்ளனர். சரி சரி இதையெல்லாம் வந்து நீயே கவர்னரிடம் சொல்லு என்று அந்த அலுவலரை கூப்பிட்டிள்ளார் மன்னர் சரபோஜி.

மன்னிக்கவேண்டும் மகாராஜா...! திருக்குறளைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டு உங்களை சந்திக்க வந்திருக்கும் இந்த ஆங்கிலேய கவர்னர் சாதாரனமானவராக இருக்க முடியாது. பல நூல்களை கற்றறிந்த அறிஞராக இருப்பார். திருக்குறளைப்பற்றி எனக்குத் தெரிந்ததை விடவும் அவருக்கு அதிகம் தெரிந்திருக்கும். இவரிடம் நாம் வாயை குடுத்து மாட்டிக்கக் கூடாது, அப்படி மாட்டிகொண்டால் அது உங்களுக்கு பெரிய அவமானம் என்று சொல்லிவிட்டார்.

உனக்கு திருக்குறளை பத்தி தெரியுமா..? உனக்கு திருக்குறளை பத்தி தெரியுமா..? என்று தன்னுடன் வந்திருந்த முன்னூறு பேரிடமும் கேட்டுவிட்டார் சரபோஜி. எல்லோரும் ஒரே மாதிரி உதட்டை பிதுக்கி விட்டனர். (23-ம் புலிக்கேசி வடிவேலு) போல சிக்கிக்கொண்ட மன்னர், தன்னுடைய உண்மை நிலையை சொல்லி ஆங்கில கவர்னரிடம் சிக்கிக்கொள்ள விரும்பாமல் ஒரு தந்திரம் செய்துள்ளார்.

thodarum......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 2:46 pm

மன்னிக்கவேண்டும் கவர்னர் ஜெனரல் அவர்களே...? திருக்குறளைப் பற்றி நான் சொல்லுவதை காட்டிலும், திருக்குறளையும், மற்ற தமிழ் நூல்களையும் நன்கு கற்றறிந்த தமிழ் பண்டிதர்கள் உங்களுக்கு எடுத்துச் சொல்வதுதான் சிறப்பாக இருக்கும். இப்போது, என்னுடன் வந்துள்ள பண்டிதர்களை காட்டிலும், முழுமையாக தமிழ் நூல்களை தரவாக கற்ற பண்டிதர்கள் என்னுடைய அரண்மனையில் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் என்னுடைய நாட்டுக்கு சென்றதும், அவர்களை இங்கே அனுப்பி, உங்களுக்கு திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளில் உள்ள கருத்துகளையும் உங்களுக்கு தெளிவாக சொல்ல ஏற்பாடு செய்வது என்னுடைய பொறுப்பு. நான் அனுப்பும் தமிழ் பண்டிதர் சிலகாலம் உங்களுடைய ஊரில் தங்கியிருந்து திருக்குறளை பற்றியும், தமிழ் நூல்கள் பற்றியும் உங்களுக்கு விரிவாக எடுத்து சொல்வார்கள். அதுதான் சரியாக இருக்கும் என்று ஒரு வழியாக சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.

இதைக்கேட்டு ஏமாற்றம் கொண்ட கவர்னர். திருக்குறளை பற்றி தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், திருக்குறள் நூலை இயற்றிய தமிழ் மண்ணிலிருந்து வந்துள்ள உங்களை சந்தித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியை தருகிறது என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

கவர்னர் சென்ற பிறகு, தனது அலுவலர்களை கூப்பிட்டு என்னய்யா திருக்குறள் ? இருபதாயிரம் மைலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் வெள்ளைக்காரனுக்கு தெரிஞ்ச விசியம் எனக்கு தெரியாமப் போய்விட்டதே என்று வருந்தியவர். தஞ்சைக்கு திரும்பியதும் முதல் வேலையாக அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதிமகால் நூலகத்திற்கு சென்று திருக்குறள் பற்றி கேட்டுள்ளார். சோழ மன்னர்கள் ஆட்சிக்காலம் முதல் நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் என எல்லோரின் ஆட்சியிலும் தஞ்சை அரண்மனையில் ஆரியர்களின் “கை” மேலோங்கி இருந்ததால், அவர்கள் தமிழை புறந்தள்ளி சமஸ்கிருதத்தை அரியணையில் ஏற்றி உட்காரவைத்திருந்தனர்.

ஆரியர்களின் மேலாண்மையில் இருந்த சரஸ்வதிமகால் நூலகத்தில் இராமாயானம், மகாபாரதம் போன்ற வடமொழி இதிகாச நூல்களும், சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தியில் உள்ள புராண கடவுள் கதைகூறும் நூல்களே அதிகமாக இருந்துள்ளது. அதுபோலவே, கடவுள்களின் கதைகளை சொல்லும் சில தமிழ் நூல்கள் மட்டுமே அப்போது நூலகத்தில் இருந்துள்ளது.

தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்க்கை முறை போன்ற வரலாறுகளை சொல்லும் எந்த ஓலை சுவடிகளும், நூல்களும் சரஸ்வதி மகால் நூலகத்தில் இல்லை. முறையாக தமிழ் பயின்று தமிழ்த்தொண்டு செய்துவரும் பலரும் அருகிலுள்ள சில மடங்களில் தங்கியிருப்பதாக கேள்விப்பட்டு அந்த தமிழ் புலவர்களை காணச்சென்றுள்ளார்.

அவர்களை சந்தித்து கேட்டபோதுதான், நாடாளும் மன்னன் முதல் தெருவில் திரியும் பிச்சைக்காரன் வரை நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் எப்படி வாழவேண்டும், எப்படி நடக்கவேண்டும் என்பது குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ள வாழ்விலக்கணம் பற்றி எடுத்துச்சொல்லியுள்ளனர். மன்னர், கடவுள், தலைவர் என்று யாரைப்பற்றியும் புகழ்ந்து தனியாக குறிப்பிடாமல் ஒழுக்கும், வீரம், நேர்மையே மனித வாழ்வின் மேன்மை என்று சொல்லப்பட்ட திருக்குறளின் மீது மன்னர் சரபோஜிக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பபட்டுள்ளது. அதோடு விடாமல், தமிழ் மொழியில் உள்ள சிறந்த பல நூல்களைப்பற்றியும் மன்னர் சரபோஜிக்கு விசாரித்து தெரிந்துகொண்டார்.

இந்த நிகழ்வின் மூலகமாக தமிழ் நூல்களின் பெருமைகளை தெரிந்துகொண்ட மன்னர் சரபோஜி தன்னுடைய அலுவலக அதிகாரிகளை கூப்பிட்டு தமிழ் நூல்கள், ஓலைச சுவடிகள் எங்கெங்கு இருக்கிறது என்ற விபரங்களை சேகரிக்க தொடங்கினார். நல்ல தமிழ் சுவடிகளுக்கு விலை கொடுத்தும் வாங்கிக்கொண்டுவந்து சரஸ்வதி மகால் நூலகத்தில் சேர்த்தார். கிராமங்களில் உள்ள சத்திரம், சாவடிகள், கோவில்கள், வறுமையில் வாடும் புலவர்கள் என எல்லோரிடமும் இருந்த ஓலைச்சுவடிகளை விலை கொடுத்து வாங்கியுள்ளார். வங்கியவற்றை கொண்டுவந்து நவீன முறையில் மறு(படி)பதிப்பு செய்துள்ளார்.

தங்களிடம் உள்ள தமிழ் நூல்கள், ஓலைச் சுவடிகளை கொண்டுவந்து கொடுத்தால் அதற்கு தக்கபடி பரிசளிக்கப்டும் என்று அறிவிப்பு செய்தார். இதைக்கேட்டு நெடுந்தொலைவில் இருந்து ஒருவர் ஒரு ஓலை சுவடியை கொண்டுவந்து மனரிடம் கொடுத்துள்ளார். அபோது, சுவடி கொண்டுவந்தவருக்கு கொடுக்க பணம் இல்லாமல் இருந்ததால் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பட்டத்தை கழட்டி அந்த மனிதனுக்கு கொடுத்துள்ளார்.

இப்படி வந்த பல சுவடிகள் நைந்து கிடந்து கிடந்தது. அப்படிக்கிடந்த பல தமிழ் சுவடிகளை புதுப்பித்தது எழுதவும் முயற்சி மேற்கொண்டார். தமிழுக்கென தனியாக பண்டிதர்களை நியமனம் செய்தார். பிறமொழி நூல்களை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதியதை நிறுத்திவிட்டு தமிழ் நூல்களை வடமொழியில் மொழிபெயர்த்து எழுதி தமிழ் நூல்களின் சிறப்புகளை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளார். தனியாக ஒரு அச்சுகூடத்தியும் துவங்கினார். தன்னுடைய ஓய்வு நேரங்களை தமிழ் நூல்கள் சேகரிப்புக்கு ஒதுக்கினார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஏற்ப மேல் நாடு அறிஞர்கள் வந்து எங்கே தங்கி தமிழ் கற்க வழிவகை செய்யும் விதமாக இவர் காலத்தில், மேனாட்டு மொழியிலான 5000-அச்சுப்புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் நூலகத்திக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன.

மன்னரின் மறைவுக்கு பிறகு ஆங்கிலேயர்கள் பொறுப்புக்கு வந்ததும், இந்நூலகம் சரபோஜி சரசுவதி மகால் நூல்நிலையம் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்நூலகத்திற்கு வெளியே கொலுமண்டபமாக இருந்த ஒரு மண்டபத்தில் சரபோசி மன்னரின் உருவச்சிலையை வைத்த ஆங்கில அரசு 1871-ல், சரபோஜி சரஸ்வதி மகால் நூல் நிலையத்திலுள்ள நூல்களின் பட்டியொன்றை தயாரிக்குமாறு டாக்டர் A.C.பர்னெல் என்னும் நீதிபதிக்குப் பணித்தனர்.

தொடரும்.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 2:46 pm

அவர் இந்த நூல் நிலையமே உலக முழுவதிலும் மிகப் பெரியதும் மிக முக்கியமானதுமாகும் என்று தனது அறிக்கையில் கூரியதுடன், மொத்தம் 29,000-சுவடிகளும், நூல்களும் உள்ளதாக அவற்றிக்கு பட்டியலிட்டு எண் கொடுத்தது வரிசைப்படுத்தியுள்ளார். அதன்பின் ஜம்புநாதபட் லாண்டகே, காகல்கர், பதங்க அவதூதர் முதலிய வடமொழி அறிஞர்களின் பரம்பரையிலிருந்து ஏராளமான நூற்றொகுதிகள் இந்நூலகத்தில் சேர்க்கப்பட்டன. இப்பொழுது தமிழ்நாடு அரசால் மேலாண்மை செய்யப்படுகிறது.

இந்த நூலகத்தில், ஏறத்தாழ 25,000 சமற்கிருத நூல்கள் உள்ளிட்ட பதினொரு இந்திய மொழி நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுப் புகழ்வாய்ந்த கையெழுத்தாலான பிரிட்டிஷ் அரசியார மற்றும் ஆட்சியாளர்களின் அஞ்சல் மடல்களும், அவற்றுடன் படங்களும், இருக்கின்றன.

400-ஆண்டுகளுக்கு முன்னிருந்த நந்திநாகரி என்னும் எழுத்தில் உள்ள ஓலைசசுவடிகள் உள்ளன.

300-ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்களும் வைத்து பாதுகாக்கபடுகிறது.

கி.பி.1476-ல், காகிதச் சுவடிகளில் எழுதப்பட்டட சமற்கிருத நூலும், கி.பி. 1703-ல் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி காப்பியமும் பாதுகாப்பாக உள்ளது.

Dr.Johnson’ எழுதிய தமிழ்-ஆங்கில அகராதி 1784-பதிப்பு இரு தொகுதிகள். 1749-முதல் 1785-வரை ஜார்ஜ் போபன் எழுதிய பூமியின் இயற்கை வரலாறு என்ற ஆங்கில நூல் 36-தொகுதிகள் பாதுகாக்கபடுக்கிறது.

இலண்டன், பாரில், தேம்ஸ் நதியின் பாலம் உள்ளிட்ட பல ஐரோப்பா நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படமும், வட இந்தியாவில் உள்ள பல நகரங்களின் படங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்களின் ஆய்வுக்கு பயன்படும் மனித உடற்கூறு குறித்த படங்கள், தாவரம், விலங்குகள் முதலிய கலைக்களுக்குரிய பல நிறப்படங்களும் சிறந்த ஓவியங்களும் இங்கு உள்ளன.

மகாராட்டிர அரசர்கள் அலுவலகங்களில் பயன்படுத்திய 'மோடி' எழுத்துக்களாலான கையெழுத்துப் பிரதிகளும், பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட சாமுத்திரிகா என்ற அரியநூல் ஒன்றும் உள்ளது. இது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

இந்திய மருத்துவ முறைக குறித்தும், இயற்கை மருத்துவ முறைகள் குறித்தும் ஏராளமான தகவல்கள் இங்குள்ள நூலகத்தில் படங்களாகவும், எழுத்து வடிவிலும் உள்ளது.

குறிப்பாக சிறுநீர் குடி சோதனை என்ற சோதனை முறையில் நோயாளியின் சிறுநீரை குடித்து என்ன நோய் இவருக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியும் முறையும் இருந்துள்ளது. சமைக்கப்பட்ட உணவின் மீதும், மண் பாத்திரத்திலும் நோயாளியின் சிறுநீரை கொட்டி சோதனை செய்யும் முறையும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளது.

33-தொகுதிகளாக கொண்ட பனை ஓலை மூலமாக எழுதப்பட ஒரு சைன மொழி திருக்குறள் உள்ளது.

குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்பதை சார்லஸ் டார்வின் 1859-ல் வெளியிட்டார். ஆனால், அதற்கு முந்தைய காலத்தில் வரையப்பட்ட சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓவியங்களில் குரங்கு, குதிரை, சிங்கம், கரடி, சிறுத்தை, முயல், மான், மாடு, கிளி, கழுகு போன்ற உயிரினங்களில் தோன்றிய மனிதனின் முக அமைப்பு எப்படி இருக்கும் என்பதனை காட்டும் வகையில் ஓவியங்களில் வரைந்து வைத்துள்ளனர்.

1805-ல் வெளியிடப்பட்ட தமிழ்-ஆங்கில அகராதி, 2400-பாடல்கள் கொண்ட கிராந்தகத்தில் எழுதிய இராமாயணம்.

1476-ம் ஆண்டு வெளியான பாமதி, 1719-ல் பதிப்பிக்கப்பட்ட வாசுதேவரின் இராமாயணம், 1787-எழுதப்பட்ட பஞ்சாங்கம், 1808-இலண்டன் நகரத்து வரைபடம், 1781-ல் வெளியிடப்பட்ட உலக வரைபடம்.(ATLAS) இப்படி பல அறிய கட்சிகளுடன் மன்னர் சரபோஜி 1832-ல் மறந்த போது 47,334 நூல்களை இந்த நூலகத்திற்கு சேர்த்துவிட்டு சென்றுள்ளார்.

இந்திய சுதந்தரத்திற்கு பிறகு தஞ்சை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கொடுத்த ஓலைச சுவடிகள் 7200-மும் புதிதாக சேர்க்கப்பட்டு இப்போது 67,233 புதிய நூல்களுடன் நூல் ஆய்வு மையமும் செயல்பட்டு வருகிறது. இப்போது, வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், மதம், தத்துவம் முதலிய பலகலைகளில் சிறந்த நூல்கள் உள்ளன.

தமிழ் மொழியின், தமிழகத்தின் வரலாறுகளை எதிர்கால சமுதாயம் அறிந்துகொள்ள வழிவகை செய்யும் இந்த நூலகத்தை அமைக்க மன்னர் சரபோஜிக்கு தூண்டுதலாக இருந்த திருக்குறளும், கவர்னர் ஜெனரலாக இருந்த மெகன்னஸ் பிரபு அவர்களுக்கும் சேர்த்து நன்றி சொல்வோம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்
நன்றி: சிவசுப்பிரமணியம் (நக்கீரன்)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக