புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia

Balaurushya

2 Posts - 3%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

T.N.Balasubramanian

1 Post - 1%
Saravananj

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 5:22 pm

First topic message reminder :

Posted Date : 13:02 (04/09/2014)Last updated : 13:09 (04/09/2014)
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Jaya%205(29)
நீதிபதி முடிகவுடரின் கண்டிப்பு!

18 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்திலும் ஏக எதிர்பார்ப்பு. அந்த நீண்ட நெடிய வழக்கை ஆரம்பத்தில் இருந்து அலசுவோமா..?

21.6.96 ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1.7.91 முதல் 30.4.96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபி-யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க ஆணையிட்டார். அந்த விசாரணைக்குப் பிறகு, ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Sasi,%20ilavarasi
2004 தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வர் ஆனார். இதனையடுத்து தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, 2004 ல் இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பெங்களூரிலும் பல நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டனர்.

எனவே அந்த காலக்கட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டு இந்த வழக்கின் 7 ஆவது நீதிபதியாக முடிகவுடர் நியமனத்துக்குப் பிறகு நடந்தவற்றை சற்று விரிவாக பார்க்கலாம்...

2013 அக்டோபர் 2 ஆம் தேதி வழக்கை விசாரிக்க ஆரம்பித்த முடிகவுடர், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாதது குறித்து கேள்வி எழுப்பினார். ‘‘இது என்னுடைய நீதிமன்றம். இந்த வழக்கை விசாரிக்க முழு அதிகாரத்தையும் கர்நாடக உயர் நீதிமன்றம் எனக்குக் கொடுத்திருக்கிறது. இதுநாள் வரை இந்த வழக்கு எப்படி நடந்தது என்று எனக்கு ஆட்பேசணை இல்லை. இனி என்னுடைய ஒவ்வொரு வாய்தாவுக்கும் இந்த வழக்கின் குற்றவாளிகள் (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) நான்கு பேரும் ஆஜராக வேண்டும். மீண்டும் 30 ஆம் தேதிக்கு வாய்தா போடுகிறேன். அன்று நான்கு பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் இல்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன்’’ என்று கண்டிப்பு காட்டினார்.

இது ஜெயலலிதா தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. உச்ச நீதிமன்றத்தை அணுகி, ‘நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் நடந்திருக்கிறது. கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் எங்கள் அனைவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘முடிகவுடர் நியமனத்தில் என்ன விதிமீறல்கள் இருக்கிறது? அதற்கு சான்று ஏதாவது வைத்திருக்கிறீர்களா? வெறும் ஊகத்தின் அடிப்படையில் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது’’ என்றவர்கள், தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தால், ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும் 30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டனர்.

30 ஆம் தேதி வாய்தாவுக்கு சசிகலா, இளவரசி, சுதாகர் கோர்ட்டுக்கு வருவது உறுதியானதால், அ.தி.மு.க வக்கீல்கள் காலையிலேயே கோர்ட்டில் குவிந்திருந்தனர். சரியாக 10.30 மணிக்கு ஒயிட் அண்ட் ஒயிட் ஜிப்பாவில் சுதாகரன் வந்தார். 10 நிமிடங்கள் கழித்து ஒரே காரில் இளவரசியும் சசிகலாவும் கோர்ட் வளாகத்துக்குள் வந்திறங்கினார்கள். 6 ஆவது மாடியில் வழக்கு நடைபெறுவதால், ஜெ. தரப்பு வழக்கறிஞர்கள் ஒவ்வொரு மாடியிலும் லிப்ட் அருகே நின்று சசிகலா லிஃப்டில் செல்ல யாரும் இடையூறாக இருந்திடக் கூடாது என்று பாதுகாத்து அழைத்துச் சென்றனர்.

சசிகலா வழக்கத்துக்கு மாறாக மிகவும் வருத்தத்தோடு காணப்பட்டார். கழுத்தில் நகைகள் எதுவும் இல்லை. சிம்பிளாக இருந்தார். நேராக கோர்ட்டுக்குள் சென்று மூவரும் கூண்டுக்குள் ஏறி நின்று கைகளைக் கட்டி நீதிபதி முடிகவுடரைப் பார்த்து வணக்கம் வைத்தனர். முடிகவுடர் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமரச் சொன்னார். கூண்டுக்குள்ளேயே பெஞ்ச் போடப்பட்டிருந்தது. வலது பக்கத்தில் சசிகலாவும், இடது பக்கத்தில் இளவரசியும், நடுவில் சுதாகரனும் நீதிபதியை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள்.

நீதிபதி முடிகவுடர்: ‘‘இன்னும் எத்தனை நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது?’’

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார்: ‘‘தெரியவில்லை.’’

நீதிபதி முடிகவுடர்: ‘‘இந்த வழக்கை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி போடுகிறேன்’’

குமார்: ‘‘உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் இருப்பதாகவும், கோர்ட்டில் ஆஜராவதில் நான்கு பேருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று வழக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இந்த வழக்கை நான்கு வார காலத்துக்கு தள்ளிப்போட வேண்டும். குறைந்தது மூன்று வார காலத்துக்காவது தள்ளிப்போட வேண்டும்.’’

நீதிபதி முடிகவுடர், ‘‘இதை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்களா?’’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கிடம் கேட்டதற்கு அவர், ‘‘நான் ஆட்சேபிக்கவில்லை’’ என்றதால், நீதிபதி முடிகவுடர் வழக்கை நவம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளிப்போடுவதாக சொன்னார்.

வழக்கு முடிந்ததும், வந்ததைப் போலவே சுதாகரன் தனி காரிலும், சசிகலா, இளவரசி இருவரும் தனி காரிலும் சென்றனர்.

- வி.கே. ரமேஷ்

புதிய நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வருகையும், அதைத் தொடர்ந்த பரபரப்புகளும் நாளை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 12:17 am

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... ( மினி தொடர்: பகுதி - 7)

ஜெயலலிதாவின் 248 செலவுப் பட்டியல்!

மே 15 ஆம் தேதியோடு அரசு தரப்பு இறுதி வாதம் முடிந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சிக்னோரா உட்பட ஏழு நிறுவனங்கள், ‘’எங்களுடைய ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். எங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொண்டு மீண்டும் மூல வழக்கை விசாரிக்க வேண்டும். அதுவரை மூல வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்‘’ என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணைக்காக, அரசு வழக்கறிஞர் பவானி சிங் கர்நாடக உயர் நீதிமன்றம் சென்றுவிட்டதால், ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு நடக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா மாலை 4 மணி வரை காத்திருந்தார். அடுத்த நாள் 16 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் என்பதைக்கூட பொருட்படுத்தாமல், அரசு தரப்பு இறுதி வாதத்தைத் தொடர ஆணையிட்டார்.

இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில், ‘’இந்த வழக்கில் பல சந்தர்ப்பங்களில் உண்மையை மறைத்து விசாரணையைத் திசைதிருப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கத்தில் பிரதிவாதிகள் செயல்படும்போது அதற்கு சரியான பதில் கொடுக்காமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செயல்படுவதாகத் தெரிகிறது. இது சரியானதல்ல. இது கண்டனத்துக்கு உரியது. உண்மையை மறைக்கும் முயற்சியும் குற்றமே. நீதிமன்றத்தை ஏமாற்றுபவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது தீர்ப்பின்போது பிரதிபலிக்கும்‘’ என்று கூறியதோடு, மூல வழக்கு விசாரணைக்குத் தடைகோரிய மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாராயணசாமி தள்ளுபடி செய்து 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு நிலம் கொடுத்தவர்களான, திருநெல்வேலி கருங்குளம், வெள்ளக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பாஸ்கரன், ஜெயராமன், வீராசாமி, ஸ்ரீதர், சமுத்திரபாண்டி, பிச்சைக்கனி நாடார், அருணாசலம் ஆகியோர் சாட்சியளித்தனர். அவர்களிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி குறுக்கு விசாரணை நடத்தினார்.

இடையிடையே நீதிபதி குன்ஹா சாட்சிகளிடம் தமிழில் சந்தேகங்களைக் கேட்டு அசத்தினார்.

வீராசாமி, பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அனைத்து கேள்விக்கும் தெரியாது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் வீராசாமி. ‘’இந்த கோர்ட்டில் என்ன கேஸ் நடந்துட்டு இருக்குன்னாவது தெரியுமா?’’ என்று வக்கீல் கேட்டார். ‘’அம்மா கேஸ்’’ என்று சொன்னார் வீராசாமி.

இதேபோன்று மற்றவர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. ‘ஒரு ஏக்கர் என்ன விலைக்குக் கொடுத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘2,000 ரூபாய்க்கு’ என்றும், ‘உங்க சொத்தை யார் வாங்கியது தெரியுமா?’ என்றதற்கு ‘தெரியாது’ என்றும், ‘எதற்காக நிலத்தைக் கொடுத்தீர்கள்?’ என்றதற்கு சிலர் ‘கஷ்டத்துக்காக’ என்றும், சிலர் ‘கிராமத்தில் உள்ள எல்லோரும் கொடுத்தாங்க. நாங்களும் கொடுத்துட்டோம்’ என்றும் பதிலளித்தனர்.

இந்த சாட்சிகளின் விசாரணை முடித்து, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணி முதல் 4.30 மணி வரை இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் அவர்கள் நேர்முக, மறைமுக பங்குதாரர்களாக இருக்கும் 32 நிறுவனங்களின் பெயர்களில் 1991 முதல் 1996 வரை சேர்த்த 306 சொத்துகள் பட்டியலை கடந்த 9 ஆம் தேதி வாசித்ததைப்போல 1991 முதல் 1996 வரை செய்த 248 செலவுப் பட்டியல்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி வாசித்தார்.

மராடி வாசித்த செலவுப் பட்டியலில் இருந்து...

சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியில் ஜெயா பப்ளிகேஷன் வாங்கிய 1.5 கோடிக்கு கடனுக்குச் செலுத்திய வட்டி ரூ.50,93,921. இதே வங்கியில் சசி என்டர்பிரைசஸ் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய தொகை ரூ.18,32,683. இதே கிளையில் லெக்ஸ் ப்ராபர்ட்டீஸ் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது ரூ.17,52,069.
ஆர்.பி.எஃப் நிதி நிறுவனத்தில் இளவரசி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது ரூ.4,41,569. மயிலாப்பூர் கனரா வங்கியில் இருந்து சேலம் ஸ்டோர்ஸுக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.12,73,642.

இதே வங்கியில் இருந்து பி.பி.எல். கேலரிக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.1,28,530. இதே வங்கியில் இருந்து கே.கே.வேணுகோபால் அவர்களுக்கு ஜெயலலிதா கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.5,95,000. இதே வங்கியில் இருந்து மதுரை காமராஜர் யுனிவர்சிட்டிக்கு ரூ.5,00,000. மௌலி அட்வர்டைஸுக்கு ரூ.11,00,000- ம் ஜெயலலிதா கணக்கில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

1987 - 88 ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2,50,445; 1988 - 89 ஆம் ஆண்டுக்கு ரூ.5,63,482; 1989- 90 ஆம் ஆண்டுக்கு ரூ.8,18,161; 1990 - 91 ஆம் ஆண்டுக்கு ரூ.30,61,549... இப்படி ஜெயலலிதா 1997 வரை வருமான வரி கட்டியுள்ளார். 88- 89 ஆண்டுக்கு ரூ.89,619; 1989 - 90 ஆண்டுக்கு ரூ.2,68,475; 92- 93 ஆம் ஆண்டுக்கு ரூ.13,51,590 என சொத்து வரி கட்டியுள்ளார்.

இதேபோல் சசிகலா 91-ல் இருந்துதான் வருமான வரி கட்டுகிறார். 91- 92 ஆம் ஆண்டுக்கு ரூ.2,23,750; 92 - 93 ஆம் ஆண்டுக்கு ரூ.3,00,550; 93 - 94 ஆம் ஆண்டுக்கு ரூ.7,62,151 என வருமான வரி கட்டியுள்ளார். 91- 92 ஆம் ஆண்டுக்கு ரூ.14,240; 92 - 93 ஆம் ஆண்டுக்கு ரூ.1,17,955 என சொத்து வரி கட்டியுள்ளார்.

ஐந்தாண்டில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வேலைபார்த்த ஆட்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவு ரூ.16,15,500. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் - சத்தியலட்சுமி திருமணச் செலவு ரூ.6,45,04,222. கொடநாடு பங்களா கட்டிய செலவு ரூ.12,20,310. மன்னார்குடியில் செங்கமலம் தாயார் நினைவு மகளிர் கல்லூரிக்கு டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் வாங்க சசிகலா கொடுத்த தொகை ரூ.10,82,420.

ஜெயா பப்ளிகேஷன் கட்டிய மின்சாரக் கட்டணம் ரூ.2,69,102. 1993 முதல் 96 வரை ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் கட்டிய மின்சாரக் கட்டணம் ரூ.7,38,433. குமரன் சில்க்ஸுக்கு ரூ.4,84,712, ஜேம்ஸ் ஃபிரெட்ரிக் -ரூ.30,00,000. இப்படி 1991 முதல் 1996 வரை செலவுசெய்த மொத்த செலவு தொகை ரூ.12,00,59,338.

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 10, 2014 12:20 am

இப்ப என்ன மதிப்புங்கோ - அதையும் சொல்லிபோடுங்க சாமியோவ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 12:33 am

யினியவன் wrote:இப்ப என்ன மதிப்புங்கோ - அதையும் சொல்லிபோடுங்க சாமியோவ்

இதைப் பற்றிக் கேட்டால் நாங்கள் உங்கள் மீது அவதூறு வழக்கு போடுவோம்! அப்புறம் உங்க மேலே பாம் போடுவோம்!

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 10, 2014 12:43 am

நீங்க தான் அல் கொய்தா கிளை மலேஷியாவா பாஸ் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 12:47 am

யினியவன் wrote:நீங்க தான் அல் கொய்தா கிளை மலேஷியாவா பாஸ் புன்னகை

அல்கொய்தா இல்லை தல, அம்மா அடியாட்கள் சங்கம்!

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 10, 2014 12:55 am

சிவா wrote:அல்கொய்தா இல்லை தல, அம்மா அடியாட்கள் சங்கம்!
ஒ அந்த கூன் விழுந்த கூனர் கூட்டமா புன்னகை வரகூன பாண்டியர்கள் புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 11:48 am

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 11:10 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... தீர்ப்புக்கு இன்னும் 9 நாட்கள்! ( மினி தொடர்: பகுதி - 8 )
அன்பழகன் தரப்பின் வாதம்!
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Anbazhagan(2)
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், மே 19 ஆம் தேதி ஒருவழியாக அரசு தரப்பு இறுதி வாதத்தை நிறைவுசெய்தார். இந்த வழக்கில் தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பு மூன்றாம் தரப்பு வாதி என்பதால், இறுதி வாதத்தை நேரடியாக வாதிட முடியாது. அதனால், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் குமரேசன், சரவணன், நடேசன் ஆகியோர் நீதிபதி முன்பு 428 பக்க எழுத்துபூர்வமான ஆவணத்தைச் சமர்ப்பித்தனர்.

அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஆவணத்தின் சாராம்சம்...

‘’இந்த வழக்கின் ஏ1 ஆக இருக்கும் ஜெயலலிதா 1984 - 89 வரை எம்.பி-யாகவும் 1989 - 91 வரை எம்.எல்.ஏ-வாகவும் 1991-96 வரை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.
இந்த வழக்கின் ஏ2 ஆக இருக்கும் சசிகலா, கேசட் கடை நடத்தி வந்தார். அவரது கணவர் நடராஜன் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் அதிகாரியாக இருந்து 1991 ல் அந்தப் பணியை ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கின் 3ஆவது குற்றவாளியாக சேர்க்கப்​ட்டுள்ள சுதாதரன், சசிகலாவின் சகோதரி மகன். இவரை ஜெயலலிதா தன் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்.

இந்த வழக்கின் 4ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இளவரசி, 2 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி. 1996 ல் ஜெயராமன், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, ஆந்திராவில் உள்ள திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் சொந்த வீடான போயஸ் கார்டனுக்கு இளவரசி வந்துவிட்டார்.

ஜெயலலிதா 1964 - 72 வரை திரைத் துறையில் நடிகையாக இருந்தார். அவரது அம்மா சந்தியா 1971 ல் காலமானார். அப்போது அவருக்கு நாட்டிய கலாநிகேதன் என்ற இசைப் பள்ளியும் போயஸ் கார்டனில் வீடும், ஆந்திரா மாநிலத்தில் ஸ்ரீநகரில் ஒரு வீடும், ரங்காரெட்டி தாலுக்காவில் 10.20 ஏக்கரில் திராட்சைத் தோட்ட பண்ணை வீடும், பஷீராபாத்தில் 3.25 ஏக்கர் நிலமும் மட்டுமே இருந்தது. அவை ஜெயலலிதாவின் பெயருக்கு மாற்றப்பட்டது.

1987 ல் ஜெயலலிதாவின் மொத்த அசையா சொத்துகள் 7.5 லட்சமும், வங்கி இருப்பு ஒரு லட்சமும் மட்டுமே இருந்தன. 1989 ல் எம்.பி-யாக இருந்தபோது நான்கு கார்கள் (மதிப்பு ரூ9,12,129) ஒரு ஜீப் (மதிப்பு ரூ.1,04,000) வாங்கி இருக்கிறார். இதுவே வருமானத்துக்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. 1988 முதல் 1990 வரை ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர் என்ற கம்பெனிகளைத் தொடங்கி நடத்திவந்தாலும் வரவு, செலவுகள் செய்யாமல் வருமானம் இல்லாமல் இருந்தது. 1991 வரை ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2,01,83,957 ஆக இருந்தது.

1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நலிந்த நிறுவனங்களான மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக் ஷன், நமச்சிவாயா கன்ஸ்ட்ரக் ஷன், சக்தி கன்ஸ்ட்ரக் ஷன், மார்பிள் அண்ட் மார்பிள்ஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகளை வாங்கி, அதில் நேரடி மற்றும் மறைமுக பங்குதாரர்களாக நுழைந்து, புதியதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, 1991-96 வரை ஐந்து வருடங்கள் இந்த 32 நிறுவனங்களில் 898 முறை பணம் டெபாசிட் மட்டுமே செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கு இன்கம் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் எதுவும் கிடையாது. இந்த நிறுவனங்களின் பெயரில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலம், கட்டடம், விளைநிலங்களை வாங்கி வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள்.

1991 ல் ரூ.2,01,83,957- ஆக இருந்த ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, 1996 ல் 66,44,73,573 ஆக உயர்ந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு எந்த வருமானமும் இல்லை. முதல்வராக இருந்ததற்குக்கூட சம்பளம் வாங்காமல் மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 60 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார். பொதுச் சேவையில் இருந்துகொண்டு வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கியுள்ளனர்.

இவை அரசுத் துறை சாட்சியங்கள், ஆவணங்கள், நேரடியாக கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து நிரூபிக்கப்பட்டதால் இவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டம் 2டி பிரிவில் இந்தியத் தண்டனை சட்டம் 109 (குற்றவாளிக்கு உடந்தையாக செயல்படுதல்) மற்றும் 120 பி ( கூட்டுச் சதி ) ஆகிய பிரிவுகளில் தண்டனை வழங்க வேண்டும்’’ - இவ்வாறு தி.மு.க தனது இறுதி வாதத்தை சமர்ப்பித்தனர்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், ‘’ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்துவிட்டதால், எங்களுடைய இறுதி வாதத்துக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்‘’ என்று கேட்டிருந்தனர்.

அதையடுத்து நீதிபதி, ‘’ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் இறுதி வாதத்தை 2.6.2014 அன்று தொடங்கலாம் என்றும், மற்ற ஏ2 சசிகலா, ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி மூவரும் நாளையில் இருந்து தங்களது இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டும்‘’ என்றும் கூறினார்.

அதையடுத்து ஏ2, ஏ3, ஏ4 மூவரும் 21 ஆம் தேதி மீண்டும் நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். அதில் ‘‘ஏ1 பொதுத் துறையில் இருப்பதால் அவருடைய இறுதி வாதம் நிறைவடைந்த பிறகுதான் நாங்கள் இறுதி வாதத்தைத் தொடங்க முடியும். அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஸ்டேட்மென்ட்டைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்காக எங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்‘’ என்று கூறப்பட்டிருக்கிறது.

நீதிபதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, ‘நாளை முதல் இறுதி வாதத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

-வீ.கே.ரமேஷ்

படம்: ரமேஷ் கந்தசாமி

நாளை... கோர்ட்டுக்கு வந்த சசிகலா, இளவரசி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 11, 2014 8:33 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... தீர்ப்புக்கு இன்னும் 8 நாட்கள்! ( மினி தொடர்: பகுதி - 9 )

குன்ஹாவின் கண்டிப்பு!
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Cunha(4)
மே 23 ஆம் தேதி...அன்றே ஜெயலலிதா தரப்பு இறுதி வாதத்தைத் தொடங்க உத்தரவிட்டார் நீதிபதி குன்ஹா. ஆனால், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்துவிட்டதால், எங்கள் தரப்பு இறுதி வாதத்தைத் தொடங்க முடியாது என்று நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். ‘சரி... ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கட்டும். அதற்கு முன்பு சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு இறுதி வாதத்தைத் தொடங்குங்கள்’ என்று நீதிபதி சொன்னார்.

அதைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் மூன்றாவது முறையாக நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். ‘‘தி.மு.க கொடுத்த 428 பக்க இறுதிவாத ஸ்டேட்மென்ட்டைப் படிக்க கால அவகாசம் தேவை. இந்த வழக்கில் ஏ1 குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் பொதுசேவையில் இருப்பதால், அவருடைய இறுதி வாதம் முடிந்த பிறகுதான் நாங்கள் வாதத்தைத் தொடங்க முடியும். இந்த வழக்கில் கம்பெனிகள் தரப்பு விசாரணை, எங்களுக்குச் சாதகமாக நடைபெற்று வருவதால், அந்த வழக்குகள் நிறைவடைந்த பிறகுதான் எங்களுடைய இறுதி வாதத்தைத் தொடங்க முடியும். எனவே, 309 ஆவது விதிப்படி எங்களுக்குக் கட்டாயம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

மனுவை பார்த்த நீதிபதி, ‘‘இனியும் இந்த வழக்கை தாமதப்படுத்த முடியாது. நன்றாக யோசித்து ஒரு மணிக்கு உங்கள் வாதத்தைத் தொடங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்களும், வாதாட முடியாது என்று சொல்லி அமர்ந்திருந்தனர்.

சரியாக ஒரு மணிக்கு நீதிபதி, ‘‘வாதாடுகிறீர்களா?’’ என்று கேட்டார். ‘‘முடியாது...’’ என்று வழக்கறிஞர்கள் சொல்ல... ‘‘மதிய உணவை முடித்துவிட்டு 3 மணிக்கு வாருங்கள்!’’ என்று சொன்னார் நீதிபதி.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 Sasi,%20ilavarasi(1)
பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி வந்ததும், ‘‘வாதாடுகிறீர்களா..?’’ என்றார். ‘‘முடியாது’’ என்று சொல்லி, காலையில் கொடுத்த மனுவை திரும்பவும் நீதிபதியிடம் கொடுத்தார்கள். ‘‘மனு மீதான விசாரணை 4.30 மணிக்கு நடக்கும்’’ என்று சொன்னார் நீதிபதி.

4.30 மணிக்கு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ‘‘சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேருக்கும் தலா 3,000 வீதம் மொத்தம் 9,000 அபராதம் விதிக்கிறேன். அத்துடன் இனி வரும் ஒவ்வொரு இறுதி வாதத்தின்போதும் கட்டாயம் சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

26 ஆம் தேதி காலை சசிகலாவும் இளவரசியும் ஒரே காரில் பெங்களூரு கோர்ட்டுக்கு வந்தனர். இருக்கைக்கு நீதிபதி வந்து அமர்ந்ததும் சுதாகரன் வழக்கறிஞர் அன்புக்கரசு, ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதாகரன் கோர்ட்டுக்கு வருவதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இரவு அவருக்கு கடுமையான ஜுரம் என்பதால், வர முடியவில்லை. விமான டிக்கெட்டை விடியற்காலை 3.15 மணிக்கு கேன்சல் செய்துவிட்டோம். அதற்கான ஆதாரம் இது!’’ என்று சொன்னார். அதை எழுத்துப்பூர்வமாக எழுதித்தருமாறு நீதிபதி கேட்டார்.

அடுத்து சசிகலா பெயரை அழைத்ததும், அவர் நீதிபதி முன் வந்து நின்றார். ‘‘உங்கள் வழக்கறிஞர் எங்கே?’’ என்று கேட்டார். நீதிபதி சொன்னதை சசிகலாவிடம் மொழிபெயர்ப்பாளர் தமிழில் சொன்னார்.

அதற்குப் பதிலளித்த சசிகலா, ‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் கம்பெனிகளின் சொத்துகள் எங்கள் மீது சேர்க்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு அதிக சொத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. அந்த வழக்கில் இருந்து கம்பெனிகளை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தோம். அது தொடர்பான விசாரணைக்காக என்னுடைய வழக்கறிஞர் மணிசங்கர் சுப்ரீம் கோர்ட் போய்விட்டார்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிக்கும், சசிகலாவுக்கும் இடையே நடந்த உரையாடல் அப்படியே...

நீதிபதி: ‘‘கோர்ட் நடவடிக்கையைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’’
சசிகலா: ‘‘கோர்ட்டை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் போனதால்தான் வாதாட முடியவில்லை.’’

நீதிபதி குறுக்கிட்டு... ‘‘சத்தமாகப் பேசுங்கள். எல்லோருக்கும் கேட்கட்டும்.’’
சசிகலா (சத்தமாக): ‘’சரி.’’

நீதிபதி: ‘‘அப்போ நீங்கள் வாதாடுகிறீகளா?’’
சசிகலா: ‘‘இல்லை.’’

நீதிபதி: ‘‘பிறகு எப்போது வாதாடப்போகிறீர்கள்?’’
சசிகலா: ‘‘ஜூன் 2-ம் தேதி.’’

நீதிபதி: ‘‘அப்போது நீங்கள் வாதாடுவீர்களா? இல்லை, உங்க வழக்கறிஞர் வாதாடுவாரா?’’
சசிகலா: ‘‘என் வழக்கறிஞர்தான் வாதாடுவார்.’’

நீதிபதி: ‘‘ஏன் நாளை உங்கள் வழக்கறிஞர் இங்கே வந்து வாதாட மாட்டாரா?’’
சசிகலா: ‘‘இன்னும் அவர் தயாராகவில்லை.’’

அடுத்து இளவரசி அழைக்கப்பட்டார்.

நீதிபதி: ‘‘நீங்கள் எப்போது வாதாடப்போகிறீர்கள்?’’
இளவரசி: ‘‘ஜூன் 2-ம் தேதி.’’

நீதிபதி: ‘‘உங்கள் வழக்கறிஞர் அசோகன் இருக்கிறாரே... அவர் வாதாட மாட்டாரா?’’ என்றவர், ‘‘கண்டிப்பாக இன்று ஏ4 (இளவரசி) இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டும். ஏ2 நாளை இறுதி வாதத்தை தொடங்க வேண்டும். கோர்ட்டுக்குள் அமர்ந்து நீங்களே யோசியுங்கள். மாலை தீர்ப்பு சொல்கிறேன்’’ என்று முடித்தார்.

இந்த நேரத்தில்தான் சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சொத்துக்குவிப்பு வழக்கை ஜூன் 6 ஆம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், பெங்களூரு நீதிமன்றத்துக்கு அந்த உத்தரவு நகல் வந்து சேராததால், ‘நாளைக்கு ஒத்திவைக்கிறேன்!’ என்று எழுந்துகொண்டார்.

- வீ.கே.ரமேஷ்

படம்: ரமேஷ் கந்தசாமி

ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் நாளை...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 11, 2014 8:45 pm

கூட்டு சதி பிரிவை நீக்கும் வழக்கு:
கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெ. தாக்கல்
செய்த மனு திடீர் வாபஸ்!
-

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 2 U6MvEeE5Sow3JZvzVNCm+11-jayalalitha-142-600

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக