ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ebook download
by B Bhaskar Today at 6:58 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm

» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm

» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

5 posters

best பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by krishnaamma Wed Sep 03, 2014 9:37 pm

First topic message reminder :

நமக்கு ரொம்ப பழக்கமான பச்சடி வகைகளை இங்கு பார்ப்போம்.

'டாங்கர்'

இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி.

தேவையானவை:

சிவக்க வறுத்து அரைத்த  உளுத்தம் பொடி 1/2 கப்
திக்கான மோர்  - ஒரு கப்
மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது  எதானாலும் பரவாஇல்லை  4- 6
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
அவ்வளவுதான் 'டாங்கர் பச்சடி' தயார் புன்னகை
எல்லா காரமான துவயல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
நாங்க இதில் சாதம் போட்டுக் கூட  சாப்பிட்டுவிடுவோம்.
ரொம்ப அருமையாக இருக்கும் .

Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 12:28 pm; edited 3 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best நார்த்தங்காய் பச்சடி !

Post by krishnaamma Wed Nov 28, 2018 12:40 pm

நார்த்தங்காய் பச்சடி ! 

தேவையானவை:

நாரத்தை 1 (பொடியாக நறுக்கியது) 
உப்பு – தேவைக்கேற்ப
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் 1/2டீஸ்பூன்
துருவிய வெல்லம் – 1/4கப்
கடுகு – 1/4டீஸ்பூன்
நறுக்கிய பச்சைமிளகாய் – 3
வெந்தய பொடி 1 /4   டீ ஸ்பூன்  
மிளகாய் பொடி 1 /4   டீ ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்து, புளிக்கரைசலில் சேர்க்கவும்.
அத்துடன், பொடியாக நறுக்கிய நாரத்தங்காய்,மஞ்சள் பொடி சேர்க்கவும்.
நார்த்தங்காய் நன்கு வெந்ததும், உப்பு வெல்லம் சேர்க்கவும்.
எல்லாமாக சேர்ந்துகொண்டு வரும்போது, கொஞ்சம் வெந்தய பொடி மற்றும் மிளகாய் பொடி போடவும்.
இன்னும் கொதித்து இறுகினதும், இறக்கவும். 

குறிப்பு: புளி கரைசலுக்கு பதிலாக ஒரு வேளை நீங்கள் புளி பேஸ்ட் உபயோகித்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்போது தான் நாரத்தங்காய் வேகும்.புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best காரட் பச்சடி !

Post by krishnaamma Wed Nov 28, 2018 12:46 pm

காரட் பச்சடி !

தேவையானவை : 

காரட் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
2 கப் குழப்பின கெட்டி தயிர் 
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை 
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும் 
உப்பு 

தாளிக்க :

அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
அரை ஸ்பூன் எண்ணெய்

செய்முறை :

ஒரு பேசினில் , துருவிய காரட், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
அவ்வளவுதான், சுவையான காரட் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

குறிப்பு: சிலர் காரட்டை துருவாமல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.பச்சடி வகைகள் - தக்காளி  பச்சடி ! - Page 2 Icon_smile  http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best பீட்ரூட் பச்சடி !

Post by krishnaamma Wed Nov 28, 2018 12:48 pm

பீட்ரூட் பச்சடி !

தேவையானவை : 

2 பீட்ரூட் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
2 கப் குழப்பின கெட்டி தயிர் 
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை 
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும் 
உப்பு 

தாளிக்க :

அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
அரை ஸ்பூன் எண்ணெய்

செய்முறை :

ஒரு பேசினில் , துருவிய பீட்ரூட்,  தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
அவ்வளவுதான், சுவையான பீட்ரூட் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

நல்ல கலராக இருப்பதால் குழந்தைகள் இதை பெரிதும் விரும்புவார்கள். 

குறிப்பு: சிலர் பீட்ரூட்டைத்   துருவாமல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.பச்சடி வகைகள் - தக்காளி  பச்சடி ! - Page 2 Icon_smile  

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best பூந்தி ராய்த்தா / பச்சடி !

Post by krishnaamma Wed Nov 28, 2018 12:54 pm

பூந்தி ராய்த்தா / பச்சடி !

தேவையானவை:

புளிக்காத கெட்டித்தயிர் – 1கப்
காரா பூந்தி –2கப்
உடைத்து வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
நெய் இல் வறுத்த முந்திரிபருப்பு – 5  - 6  (உடைத்து வைத்துக் கொள்ளவும் ) 
பச்சைமிளகாய் – 2
சர்க்கரை – 1 டீஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சைமிளகாய், கொத்து மல்லித்தழை, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். 
அரைத்த விழுதுடன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, உப்பு சேர்த்துத் தயிருடன் கலக்கவும்.
பரிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பூந்தி யைத் தயிருடன் கலந்து  மேலே முந்திரி தூவி பரிமாறவும்.

Last edited by krishnaamma on Wed Nov 28, 2018 1:24 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best வெங்காயப் பச்சடி !

Post by krishnaamma Wed Nov 28, 2018 1:00 pm

வெங்காயப் பச்சடி !
தேவையானவை : 

வெங்காயம்  - பொடியாக நறுக்கி வைக்கவும் 
2 கப் குழப்பின கெட்டி தயிர் 
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை 
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும் 
உப்பு 

தாளிக்க :
அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
அரை ஸ்பூன் எண்ணெய்

செய்முறை :

தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
இதன் மேல் கொட்டவும்.
அவ்வளவுதான், சுவையான வெங்காயப் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

குறிப்பு: சிலர் வெங்காயத்தை பச்சையாகவே நறுக்கி செய்வார்கள். அப்படி செய்யும்போது, சாப்பிட்டபின் வாய் நாற்றம் அடிக்கும். இதுவும் அப்படி ஆகும் என்றாலும், கொஞ்சம் குறைவாக உணரலாம். புன்னகை  

சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். ஒருவேளை மதியம் புலவுடன், வெங்காய பச்சடி வைக்க வேண்டும் என்றால், வெங்காயம் ஆறினதும், தயிர் மட்டும் விட்டு, உப்பு போடாமல் கொடுத்து அனுப்பவும். சாப்பிடும்போது உப்பை போட்டு கலந்து உபயோகிக்கட்டும். புன்னகை 

Last edited by krishnaamma on Wed Nov 28, 2018 1:12 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best ஜவ்வரிசி, வெங்காயப் பச்சடி !

Post by krishnaamma Wed Nov 28, 2018 1:08 pm

ஜவ்வரிசி, வெங்காயப் பச்சடி !

தேவையானவை : 

2 வெங்காயம்  - பொடியாக நறுக்கி வைக்கவும் 

1 கப் ஜவ்வரிசி 
2 கப் குழப்பின கெட்டி தயிர் 
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை 
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும் 
உப்பு 

தாளிக்க :

அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
இரண்டு  ஸ்பூன் எண்ணெய்

செய்முறை :

வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.  

தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.

ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
பரிமாறுவதற்கு முன், நன்றாக ஊறி உள்ள ஜவ்வரிசி பச்சடி மேல் கொட்டவும்.
நன்கு கலக்கி பரிமாறவும்.
அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி, வெங்காயப் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.குறிப்பு: சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். அதனால் ஆறினதும் சேர்க்கவும் . அப்படி உடனே போடும் பட்ஷத்தில் கூட உள்ள ஜவ்வரிசி அந்த நீரை உறிஞ்சிவிடும். பச்சடி கெட்டியாக இருக்கும்.  புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best ஜவ்வரிசி பச்சடி !

Post by krishnaamma Wed Nov 28, 2018 1:15 pm

ஜவ்வரிசி பச்சடி !

தேவையானவை : 

1 கப் ஜவ்வரிசி 
2 கப் குழப்பின கெட்டி தயிர் 
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை 
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும் 
உப்பு 

தாளிக்க :
அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
இரண்டு  ஸ்பூன் எண்ணெய்

செய்முறை :
வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.  

தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் போட்டு தாளித்து பச்சடி மேல் கொட்டவும்.

அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best தக்காளி பச்சடி !

Post by krishnaamma Wed Nov 28, 2018 1:18 pm

தக்காளி  பச்சடி !

தேவையானவை  :

2 தக்காளி - கெட்டியானதாகவும், பெங்களுர் தக்காளியாகவும் இருக்க வேண்டும்.
'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
பச்சை மிளகாய் - 4 -6 
இஞ்சி 2 -3 இன்ச் அளவு 
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன் 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
எண்ணெய் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை ஒரு ஆர்க் 

செய்முறை:

பச்சைமிளகா, இஞ்சி,உப்பு  சேர்த்து அரைக்கவும்.
அரைத்த  விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
கொஞ்சமும் தண்ணீர் சேர்க்கவேண்டாம். 
பொடியாக நறுக்கின தக்காளியை அதில் போட்டு நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ். 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by ANUBAMA KARTHIK Sat Dec 01, 2018 11:59 pm

krishnaamma wrote:
மாங்காய் இஞ்சி பச்சடி!

தேவையானவை:

புளிப்பில்லாத தயிர் – 2கப்

நறுக்கிய மாங்காய் இஞ்சி – 11/2டீஸ்பூன்
மிகவும் நன்றாக இருந்தது அக்கா 

தேங்காய்த் துருவல் – 4டேபிள்ஸ்பூன்

சீரகம் 1 /2  டீஸ்பூன் 

கடுகு – 1/4டீஸ்பூன்

கொத்துமல்லி இலைகள்  – சிறிதளவு.

பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

தேங்காய், சீரகம், மாங்காய் இஞ்சி முதலியவற்றை விழுதாக அரைக்கவும். 

தயிரில் அரைத்தவிழுது, உப்பு போட்டுக் கலந்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்துமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.

மேற்கோள் செய்த பதிவு: ௧௨௮௭௩௮௨
மிகவும் நன்றாக இருந்தது

Last edited by ANUBAMA KARTHIK on Sun Dec 02, 2018 12:00 am; edited 1 time in total (Reason for editing : type error)
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

best Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 5:09 am

தக்காளி பச்சடி அருமை அம்மா...
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

best Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 5:19 am

Code:

பச்சைமிளகாய், கொத்து மல்லித்தழை, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, உப்பு சேர்த்துத் தயிருடன் கலக்கவும்.
பரிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பூந்தி யைத் தயிருடன் கலந்து  மேலே முந்திரி தூவி பரிமாறவும்.இந்த. பூந்தி ராய்த்தா வடநாட்டு பதார்த்தம்
இதை நார்த் இந்தியன் வீட்டில் சாப்பிட்டு
இருக்கிறேன்.
அருமையான பதிவு
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

best Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by SK Sun Dec 02, 2018 1:59 pm

krishnaamma wrote:வெங்காயப் பச்சடி !
தேவையானவை : 

வெங்காயம்  - பொடியாக நறுக்கி வைக்கவும் 
2 கப் குழப்பின கெட்டி தயிர் 
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை 
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும் 
உப்பு 

தாளிக்க :
அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
அரை ஸ்பூன் எண்ணெய்

செய்முறை :

தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
இதன் மேல் கொட்டவும்.
அவ்வளவுதான், சுவையான வெங்காயப் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

குறிப்பு: சிலர் வெங்காயத்தை பச்சையாகவே நறுக்கி செய்வார்கள். அப்படி செய்யும்போது, சாப்பிட்டபின் வாய் நாற்றம் அடிக்கும். இதுவும் அப்படி ஆகும் என்றாலும், கொஞ்சம் குறைவாக உணரலாம். புன்னகை  

சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். ஒருவேளை மதியம் புலவுடன், வெங்காய பச்சடி வைக்க வேண்டும் என்றால், வெங்காயம் ஆறினதும், தயிர் மட்டும் விட்டு, உப்பு போடாமல் கொடுத்து அனுப்பவும். சாப்பிடும்போது உப்பை போட்டு கலந்து உபயோகிக்கட்டும். புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1287388

நறுக்கிய வெங்காயத்தை 2 நிமிடம் உப்பு நீரில் போட்டு எடுத்தால் பச்சை வாடை நீங்கி விடும் காரமும் இருக்காது
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

best Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by krishnaamma Tue Dec 25, 2018 10:41 am

ANUBAMA KARTHIK wrote:
krishnaamma wrote:
மாங்காய் இஞ்சி பச்சடி!

தேவையானவை:

புளிப்பில்லாத தயிர் – 2கப்

நறுக்கிய மாங்காய் இஞ்சி – 11/2டீஸ்பூன்
மிகவும் நன்றாக இருந்தது அக்கா 

தேங்காய்த் துருவல் – 4டேபிள்ஸ்பூன்

சீரகம் 1 /2  டீஸ்பூன் 

கடுகு – 1/4டீஸ்பூன்

கொத்துமல்லி இலைகள்  – சிறிதளவு.

பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

தேங்காய், சீரகம், மாங்காய் இஞ்சி முதலியவற்றை விழுதாக அரைக்கவும். 

தயிரில் அரைத்தவிழுது, உப்பு போட்டுக் கலந்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்துமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.

மேற்கோள் செய்த பதிவு: ௧௨௮௭௩௮௨
மிகவும் நன்றாக இருந்தது

மிக்க நன்றி அனுபமா...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by krishnaamma Tue Dec 25, 2018 10:41 am

பழ.முத்துராமலிங்கம் wrote:தக்காளி பச்சடி அருமை அம்மா...

நன்றி ஐயா, இரும்பு சத்து மிகுந்த பச்சடி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by krishnaamma Tue Dec 25, 2018 10:43 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

பச்சைமிளகாய், கொத்து மல்லித்தழை, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, உப்பு சேர்த்துத் தயிருடன் கலக்கவும்.
பரிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பூந்தி யைத் தயிருடன் கலந்து  மேலே முந்திரி தூவி பரிமாறவும்.

இந்த. பூந்தி ராய்த்தா வடநாட்டு பதார்த்தம்
இதை நார்த் இந்தியன் வீட்டில் சாப்பிட்டு
இருக்கிறேன்.
அருமையான பதிவு
நன்றி அம்மா

ஆமாம் ஐயா, இது வட இந்தியர்களின் பக்குவம், புலவுகளுக்கு மிகவும் நன்றாகஇருக்கும் புன்னகை

Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 12:27 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை