புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Poll_c10மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Poll_m10மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Poll_c10மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Poll_m10மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:21 pm

First topic message reminder :

வெளியீடு :
இயக்குநர்,
செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 600 009.
பதிப்புரை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தையிலும் எழுத்திலும் பேச்சிலும் ஒளிர்ந்த கருத்துமணிகளைத் தொகுத்து “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்” எனும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் இந்த அழகிய சிறு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

மொழி, கல்வி, இலக்கியம், ஆன்மீகம், பொருளாதாரம், மகளிர் மேம்பாடு, அரசியல் போன்றவை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தனைப் பூங்காவில் மலர்ந்த வாசமிகு மலர்கள், இந்நூலை வாசிக்கும் வாசகர்களின் நெஞ்சங்களிலெல்லாம் நறுமணம் பரப்பும் என்பதில் ஐயமில்லை.

மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் கருத்துச் செல்வங்களை, அவர்கள் ஆற்றிய பல்வேறு உரைகளிலிருந்து எடுத்து,  சீரிய முறையில் தொகுத்து,
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்”
என்ற தலைப்பில்  நூலாக வழங்கியுள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு. மகேசன் காசிராஜன், இஆப அவர்களையும் இப்பணிக்கு உறுதுணை புரிந்த செய்தித்துறை அலுவலர்களையும் பாராட்டுகிறேன்.  

நவில்தொறும் நயம் படைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கருத்துச் செல்வங்களைத் தமிழக மக்கள் கருத்தூன்றிப்  படித்துப் பயன்பெற்றிட அன்புடன் விழைகின்றேன்.

மூ. இராசாராம், இஆப
அரசுச் செயலாளர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:48 pm

தொழிலும், தொண்டும்
™
தொழில் தொண்டாகலாம். தொண்டு தொழில் ஆகிவிடக்கூடாது.

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகம் !
™
தமிழ்நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெற்று எழுச்சி பெறும் வகையிலும்; நேர்முக மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினை பெருக்கும் வகையிலும்; மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையிலும்; இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும்.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு

மத்திய அரசிதழில் ஏன் வெளியிட வேண்டும்? இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான ஒரு நதிநீர் தாவாவை விசாரிக்க ஒரு நடுவர் மன்றத்தை அமைக்கிற போது அந்த நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கினாலும் சரி, இறுதித் தீர்ப்பை வழங்கினாலும் சரி, அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால், அது செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்றால், அதை மத்திய அரசு, தனது அரசிதழில்-மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்.

இளைஞர்கள் சிறந்து விளங்க...
™
நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய வழிகாட்டி சுவாமி விவேகானந்தர். தீயைப்போன்ற சூடான அவரது கருத்துக்களை, தன்னலமற்ற சேவையை, திடமான மன உறுதியை இளைஞர்களாகிய நீங்கள் பின்பற்றினால், நீங்களும் சிறந்து விளங்கலாம்; இந்த நாடும் சிறந்து விளங்கும்.

இளைஞர் தம் ஆற்றலை வெளிக்கொணரும் விளையாட்டு
™
உடல் உறுப்புகளின் பணிகளை ஒழுங்கு படுத்துவதற்கும், நினைவாற்றலை பலப்படுத்து வதற்கும், இளைஞர்களின் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதற்கும், ஆற்றல்களை வெளிக் கொணருவதற்கும், உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கும், நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றல் உலகெங்கும் பரவுவதற்கும் இன்றியமையாததாக விளங்குவது விளையாட்டு.

தமிழர்தம் உரிமை; சமரசம் என்பதே இல்லை
™
தமிழர்களின் உரிமைகளைப் பொறுத்தவரையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கொடை கொடுக்க செல்வம் மட்டும் போதுமா? ™ கொடை கொடுக்க செல்வம் மட்டும் இருந்தால் போதாது. கொடை உள்ளமும் கூர்த்த அறிவும் வேண்டும்.

ஆற்றல் வாய்ந்த ஜனநாயக நாடு இந்தியா
™
நமது ஜனநாயக அரசுக்கு அடித்தளமாகத் திகழும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த நமது அரும்பெரும் தலைவர்களின் தொலைநோக்கு மற்றும் வளர்ச்சிக்கு வழிகாட்டும் கண்ணோட்டம் காரணமாக, துடிதுடிப்பு ஆற்றல் வாய்ந்த ஒரு ஜனநாயக நாடாக இன்று இந்தியா செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசியல் அமைப்பின் 3 தூண்கள்
™
சட்டமன்றம், நிருவாகம் மற்றும் நீதித்துறை ஆகிய 3 தூண்களின் மீது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆயினும், ஒவ்வொரு தூணும் தனித்து இயங்காமல் ஒன்றிணைந்து செயல்படுகின்றது. இந்த ஒன்றிணைந்த செயல்பாடு, அரசியல் அமைப்புச்சட்ட அடிப்படையிலான, நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் கிடைக்கச் செய்வதை உறுதி செய்கிறது.

உலகின் வேறு எந்த நாட்டுக்கும் சளைத்தது அல்ல நமது நீதித்துறை

™ நம்பகத்தன்மை, ஒளிவுமறைவற்றதன்மை, உரிய நேரத்தில் நீதிகிடைப்பது என்ற அடிப்படையில், நமது நீதித்துறை அமைப்பு, உலகின் வேறு எந்த நாட்டுக்கும் சளைத்தது அல்ல என்பதை உறுதிப்படுத்துவது, நமது புனிதமான கடமையாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:49 pm

பெண்கள் அச்சமின்றி வாழும் மாநிலம் தமிழகம்
™
சட்டத்தின் முன், ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமமானவர்கள் என்ற இலக்கை எட்டுவதில் இன்று நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக முத்திரைபதித்து, பெண்கள் பாதுகாப்பு உணர்வுடன் அச்சமின்றி வாழும் மாநிலமாகவும் திகழ்கிறது.

தமிழ் மொழியை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக ஆக்க வேண்டும்
™
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். நீதித்துறை நிருவாகத்தின் பலன்கள் உண்மையிலேயே மக்களுக்குச் சுலபமாக கிடைக்க வேண்டும் என்றால், உயர்நீதிமன்றத்தில் மாநில மொழிதான் பயன்படுத்தப்பட வேண்டும்.

தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்
™
மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தெய்வமாக வாழ்பவர், மக்களின் மகத்தான சக்தி பெற்றவர்; வள்ளல் என அனைவராலும் போற்றப்பட்டவர்; தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர்; அன்புக்கு அடிமையாய்; ஆணவத்திற்கு அடிபணியாதவராய் விளங்கியவர் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கு வரவேற்பு, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு கடும் எதிர்ப்பு

நிறை, குறைகள் மிகைபடாமல் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு தூய நோக்கத்துடன் எடுத்துரைக்கும் ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை நான் வரவேற்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் என்னிடம் உண்டு. அதே சமயத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, உண்மைக்கு புறம்பானவற்றை சொல்வது, சிறிய விஷயத்தைக் கூட பூதாகரமாக்கிச் சொல்வது, நிறைகளை இருட்டடிப்புச் செய்வது போன்ற விமர்சனங்களை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

வளர்ச்சிக்கு வழி
™
வசவுகள் நீடித்து நிலைக்காதவை. விருப்பு, வெறுப்பற்ற கருத்துகளே வளர்ச்சிக்கு வழி வகுக்கும்

நா காக்க... அளந்து பேசுக,..!

பொதுவாழ்வில் உள்ளவர்கள், அரசியலில் ஈடுபடுபவர்கள், அதுவும் ஒரு கட்சிக்குத் தலைவர் என்ற மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் நா காக்க வேண்டும். எங்கே பேசினாலும், எப்போது பேசினாலும், என்ன பேசுகிறோம் என்பதை அளந்து ஒவ்வொரு வார்த்தையையும் பேச வேண்டும்.

பொது வாழ்வின் தேவை
நிதானம்-ஒழுங்கு-கட்டுப்பாடு

™ பொது வாழ்வில் ஒரு நிதானம் இருக்க வேண்டும், ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும், ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

மாநிலத்தின் முதல் கடமை

™ ஒவ்வொரு மாநிலத்தின் முதல் மற்றும் முக்கிய பணி யாதெனில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதும், சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்டுவதும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதுமே ஆகும்.

சமூகப் பொருளாதார வளர்ச்சி
™
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு, அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, சூழலோடு இணைந்த ஒன்றாகும். அமைதியான சூழ்நிலை இருந்தாலன்றி, மற்றபடி, நாம் சமூகப்பொருளாதார வளர்ச்சியை எய்த இயலாது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:50 pm

மத்திய அரசும் மாநிலங்களும் சமபங்கு கூட்டாளிகள்
™
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கு, மாநிலங்களின் ஒருங்கிணைந்த உழைப்பும், மத்திய மாநில அரசுகளுக்கிடையே புரிதல் நிலையும் இருப்பது அவசியம் என்பதோடு, உள்நாட்டு சச்சரவுகளிலிருந்து தேசத்தைப் பாதுகாப்பதில், மத்திய அரசுடன் மாநிலங்களும் சமபங்கு வகிக்கும் கூட்டாளிகள் என்ற அடிப்படையில் ஒரு நல்லுறவு இருப்பதும் இன்றியமையாததாகும்.

நலமான மாநிலம்-வளமான மாநிலம்

™ நலமான மாநிலமே வளமான மாநிலம் ஆகும்.

மகிழ்ச்சியும் பெருமிதமும் தந்திடும் சுதந்திரம் என்னும் சொல்! ™

சுதந்திரம் என்ற வார்த்தையே நமது மனங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது.

சுதந்திரத்தின் பல்வேறு பரிமாணங்கள்

™ சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம்.

தமிழகமே எனது குடும்பம்
™
தமிழகமே எனது குடும்பம்; தமிழ்நாட்டு மக்களே என் பிள்ளைகள்; தமிழக மக்களின் நலனே என் நலன்

மகிழ்ச்சி கொண்டாடும் தருணம்

™ பட்டமளிப்பு விழா நிகழ்வு என்பது, ஆண்டு முழுவதும் இரவு, பகல் பாராமல் மேற்கொண்ட கடின உழைப்பு பளிச்சிடுவதைக் குறிப்பதாகும். நீங்கள் மாறி வரும் காலத்திற்கு ஏற்ப ஆற்றலுடனும், அச்சமின்றியும் உங்களது சக்திகளை முறைப்படுத்தி சமூகத்தில் பூரணத்துவத்துடன் முன்னேறிச் செல்வதற்கு தயாராக இருக்கிறீர்கள். மாணவர்களும், இத்தகைய நிலையை அடைவதற்காகக் கடின உழைப்பினை மேற்கொண்ட அவர்களது பெற்றோரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணம் இதுவாகும். ஆசிரியர்களுக்கு அவர்களது கடின உழைப்புக்கான அங்கீகாரமாகும்.

அறிவுலகின் கோயில்கள்
™
பல்கலைக்கழகங்கள் அறிவுலகின் கோயில்கள். இங்கு மாணவர்கள் அறிவின் ஆழத்தை அறிந்து கொள்ள வழிகாட்டப்படுகிறார்கள். இவைகள்தான் சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சியின் முக்கியமான அமைப்புகளாகத் தொடர்ந்து கருதப்பட்டு வருகின்றது.

கல்வியாளர்களின் சமூக உறுதி
™
தனிப்பட்ட நிபுணத்துவத்தை அடைவதற்கு மட்டுமல்லாது, நாட்டின் சாதனையையும், முயற்சியையும் உயர்த்திக் கொள்வதற்குப் பல்கலைக்கழக மேம்பாடு அவசியம். கற்றுக்கொள்வது இருவழி நடைமுறையாக இருத்தல் வேண்டும். மாணவர்கள்-பேராசிரியர்கள் தங்கள் மனங்களில் முழுவதுமாக ஈடுபாட்டுடன் கல்வி இருக்க வேண்டும். கல்வியாளர்களின் சமூக உறுதி புறக்கணிக்கப்படக்கூடாது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:51 pm

சமத்துவத்தையும் பரிவுணர்வையும் கைவிடலாகாது
™
துரிதமாக நியாயம் வழங்க வேண்டும் என்பதற்காக சமத்துவத்தையும், பரிவுணர்வையும் கைவிட்டு விடக் கூடாது.

பெண்களுக்கு அர்த்தமுள்ள சமூக நீதி
™
புறக்கணிக்கப்பட்ட பெண்கள் சமூகத்தை, தலைமைப் பொறுப்புக்குத் தயார் செய்வது மிகவும் ஒரு கடினமான செயல். அவர்களது வாழ்வைப் பாதிக்கக் கூடிய, அவர்களோடு இணைந்த பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக, சட்டம் மற்றும் கொள்கை மாற்றங்களில் நேரடிப் பங்களிப்பு அளித்து பெண்களின் உரிமையை நிலைநிறுத்துவதன் மூலம்தான் அர்த்தமுள்ள சமூக நீதியை அடைய முடியும்.

சவால்தான் சாதனைக்கு வழிவகுக்கும்
™
வாழ்விலும், பணியிலும் முன்னேற தேவையானது சவால். தடைகள் ஏற்படும் போது தான் உத்வேகம் பிறக்கும். தடைகளை தகர்த்தெறிய முனையும் போது தான் புதிய வழிகள் பிறக்கும். சவால் தான் சாதனைக்கு வழி வகுக்கும்.

தன்னம்பிக்கையின் மறு பெயர்
™
பணியில் ஏற்படுகின்ற சவால்களை எதிர்கொள்ள தேவை துணிச்சல். துணிச்சல் என்பது தன்னம்பிக்கைக்கு மறு பெயர். அந்த துணிச்சல் இல்லையென்றால் சமயத்தில் உயிரையே காப்பாற்றிக் கொள்ள இயலாமல் போய்விடும்.

செய்யும் தொழில் இனிமையாகும்

™ செய்யும் தொழிலில் நாம் ஒன்றிப்போய் விடும் போது அந்தத் தொழில் முழுமை பெறுகிறது. அந்தத் தொழிலில் உள்ள சுமை சுமையற்றதாகி அதுவே இனிமையானதாகி விடுகிறது.

மனிதனின் உன்னத கலைப்படைப்பு சினிமா;
™
மனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளிலேயே உன்னதமான கலைப் படைப்பு சினிமாஎன்று சொன்னால் அது மிகையாகாது.

மக்களை ஈர்க்கும் வலிமை மிக்க திரைப்படம்

சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, இசை, இலக்கியம், ஓவியம், நாட்டியம், நாடகம் என, பல கலைகள் மக்களின் மனதை மகிழ்விக்கவும், வளப்படுத்தவும், பலப்படுத்தவும் பயன்பட்டன. இந்தக் கலைகளோடு, அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் நவீன அறிவியல் யுக்திகள் மற்றும் கலைகளும் சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தான், வேறு எந்தக் கலை வடிவத்தையும் விட எளிதாக மக்களை ஈர்க்கும் வலிமை திரைப்படத்திற்கு இருக்கிறது.

பல்வகையிலும் உதவிடும் திரைப்படங்கள்
™
உலகின் நெடுந்தூரம் சென்று காண முடியாத அற்புதங்களை, இருந்த இடத்திலிருந்து காண திரைப்படம் வழி வகுத்துள்ளது. பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உறுதுணையாக திரைப்படத் துறை உள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, பல்வேறு துறைகளில் திரைப்படம் உதவி செய்கிறது. அரசின் நிகழ்ச்சிகளை, ஆக்கப்பணிகளை, மக்கள் நலத் திட்டங்களை, மக்களிடையே எடுத்துச் செல்ல திரைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன.

மக்களை நல்வழிப்படுத்தவே திரைப்படங்கள்

™ திரைப்படங்கள் மக்களை நல் வழிப்படுத்து வதற்காகவே அமைய வேண்டும்.

தமிழ்த் திரைப்படத்துறையினர் அடுத்தவரும் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள்

™ வந்தாரை வாழ வைக்கும் பூமி தமிழ்நாடு. இன்று கூட, பல்வேறு மொழி பேசும் நடிகர், நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணியில் இருக்கிறார்கள். தானும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:52 pm

வாழும் வகை இரண்டு

™ இந்த உலகத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் உண்டு. தானும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களும் உண்டு.

அடுத்தவரை அழிக்கும் அழுக்கு எண்ணம்
™
எப்படியாவது தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள், எப்போதும் அவர்களுடைய வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறவர்களை மட்டும் அல்லாமல், தனக்குப் போட்டியாக இருப்பவர் எனக் கருதப்படுபவரையும் அழித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.

திரைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும்?
™
திரைப்படம் என்பது, பல்வேறு கலைஞர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றாலும், நல்ல கருத்துகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும், எண்ணங்களையும், இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துச் செல்லும் வகையிலும்; சாதி மற்றும் மத ரீதியிலான வகையில், பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும்; வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்தும் படங்களை எடுக்க வேண்டும்.

மாநில அரசுகளின் தலையாய கடமை
™
சமுதாயத்தில் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் குடிமக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே மாநில அரசுகளின் முதல் மற்றும் தலையாய கடமை.

மக்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்குமே உயர் முன்னுரிமை
™
மாநில மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு அவற்றிற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை. அடித்தட்டு மக்களின் உணர்வுகளையும் அறிந்து,உள்ளாட்சி நிருவாகம் அமைய வேண்டியது அவசியம்.

நவீன இந்தியா - பாரம்பரிய இந்தியா
™
நிறம், மொழி, சாதி, இனம் மற்றும் கலாச்சார ரீதியில் பிரிந்து காணப்பட்டாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை உலகிற்கு பறைசாற்றுவதுடன், நமது தேசிய பெருமையை வலுப்படுத்தி, நவீன மற்றும் பாரம்பரிய இந்தியா, ஒரே நாடு என்னும் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

சக்தி வாய்ந்த மக்கள் ஊடகம்
™
கலாச்சாரம், கல்வி, பொழுதுபோக்கு, பிரச்சாரம் ஆகியவற்றுக்கான தவிர்க்கமுடியாத சாதனமாக சினிமா திகழ்கிறது. உலகில், சினிமா அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து, சக்திவாய்ந்த மக்கள் ஊடகமாக அது திகழ்கிறது.

போக்குவரத்து வாகனங்களின் அதி முக்கியம்
™
மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து வாகனங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:52 pm

நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சாதனை

™ இயற்கை நமக்குப் பல சக்திகளை வாரி வழங்கி இருந்தாலும், அவற்றில் மிகப் பெரிய அளவில் மக்களுக்குப் பயன்படுவதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாகவும் விளங்குவது மின் சக்தி என்று சொன்னால் அது மிகையாகாது.

இயற்கை வளங்களை முறைப்படி பயன்படுத்துவோம்

™ ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இயற்கை வளங்களான கனிம வளம், நீர் வளம், நில வளம், எரிபொருள் வளம், வன வளம் ஆகியவற்றை முறைப்படி பயன்படுத்திக் கொள்வதைப் பொருத்து அமையும்.

குழந்தைகளை புத்திசாலிகள் ஆக்கும் சதுரங்கம்

™ சதுரங்க விளையாட்டு குழந்தைகளை புத்திசாலிகளாக உருவாக்குகிறது. இது ஒருமுகத்தன்மை, அமைதி, விடாமுயற்சி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதுடன், ஆக்கத்திறன், மன எழுச்சி மற்றும் ஞாபகத்திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

சதுரங்க விளையாட்டின் தனிச் சிறப்பம்சங்கள்
™
நுட்பமான சிந்தனைகளையும், விரைவாகப் புரிந்து கொள்ளுதலையும், உடனடி வெளிப்படுத்தும் திறனையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்வது சதுரங்க விளையாட்டின் சிறப்பு அம்சங்களாகும்.

புதிய கண்டுபிடிப்புகளின் புகலிடம்
™
பல்கலைக்கழகங்கள் என்பது புதிய கண்டுபிடிப்பு களின் புகலிடம். இங்கு புதிய சிந்தனைகள் தொழில் ரீதியான கண்டுபிடிப்புகளாக மாறி வணிக ரீதியாக வெற்றிபெற்று அந்தப் பகுதி வளர்ச்சியடைய உதவுகிறது.

அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு அடிப்படை
™
பல்கலைக்கழகங்கள் ஒரு நாட்டின் சிறந்த திறமையை வளர்க்கும் மையமாகவும், அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு அடிப்படையாகவும் விளங்குகிறது.

பல்கலைக்கழகங்களின் கடமை
™
பல்கலைக்கழகங்களின் கட்டாயக் கடமையான கல்வி வழங்குதல், அதன் மூலம் சிறந்த சிந்தனையை மாணவர்களிடம் வளர்த்தல், மாணவர்களின் திறனை மேம்படுத்துதல், அவர்களை வல்லுநர்களாக்குதல் ஆகியவை இப்போதும் மாறவில்லை. அதேவேளையில், மாணவர்களை பண்பாட்டு அடையாளங்களாக உருவாக்கி, அவர்கள் பெற்ற பல்கலைக்கழகக் கல்வியை சமூகத்துக்குப் பயன்படுத்தவும், சமூகத்தின் அறிவுசார்ந்த நிலையை உயர்த்தவும், பல்கலைக்கழகங்கள் தவறக்கூடாது.

கல்வியும் பண்பாடும்
™
வெறும் கல்வி என்பது தேடலுக்கு மட்டும் விடையளிக்கும். ஆனால், பண்பாடு மனிதத்துவத்தை மேலும் வளர்த்தெடுக்கும்.

சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த.....

™ சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதும், மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் ஒரு அரசின் தலையாய கடமை ஆகும். மக்களின் முக்கியப் பிரச்சினைகளையும், அவர்களின் உணர்வுகளையும், நியாயமான எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொள்ளும் தன்மையே நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைக்கச் செய்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:53 pm

காவல்துறையின் விரிவான பணிகள்
™
சட்டம்-ஒழுங்கு என்பது முக்கியமான விஷயம் என்ற போதிலும், இந்த அம்சம் காவல்துறையினரின் கடமைகளில் ஒரு பகுதிதான். குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல், குற்றங்களைக் கண்டுபிடித்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், முக்கியமான அமைப்புகளுக்குப் பாதுகாப்பு வழங்குதல், இயற்கைச் சீற்றங்களைச் சமாளித்தல், பல்வேறு சமூக சட்ட விதிகளைச் செயல்படுத்துதல் போன்ற விரிவான பணிகள் காவல்துறையினருக்கு இருக்கிறது.

காவலர்களின் மூன்று முக்கிய பணிகள்

™ காவலர், பெண் காவலர் ஆகியோருக்கு 3 முக்கியப் பணிகள் இருக்கின்றன. முதலாவதாக, சமூகத்தின் பாதுகாவலர் என்ற வகையில், பயங்கர குற்றவாளிகளிடமிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் அரணாக அவர்கள் விளங்க வேண்டும். இரண்டாவதாக, சட்டத்தின் அங்கம் என்ற வகையில், சமுதாயச் செயல்பாடுகளில் ஒழுங்கை ஏற்படுத்த காவலர்கள் சட்ட விதிகளை நடுநிலையோடு செயல்படுத்தும் நடுவராகவும் செயலாற்ற வேண்டும். மூன்றாவதாக, ஒரு அரசு ஊழியர் என்ற முறையில் சட்டத்திற்கு அப்பாற்பட்டும் கூட காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பது, நடுவழியில் நின்றுபோன காரைத் தள்ளிவிடுவது போன்ற நட்பு முறையிலான பணிகளையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஒரே சிந்தனை...

பொதுமக்களுக்கு நன்மை செய்வதே பொதுமக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ, அந்த வழிகளைப் பற்றியே நான் சதா சர்வ காலமும் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.

பொது நலம் போற்றி முத்தமிடப்படும் சுயநலம் உதைபட்டு வதைபடும்
™
பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங்குழல் முத்தமிடப்படுகின்றது. கால்பந்து காலால் உதைக்கப்படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்குக் கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப்படுகிறது.

போற்றப்படும் பொது நலம் - புறக்கணிக்கப்படும் சுய நலம்
™
சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரே நலம் தான் இருக்கிறது. அது தமிழக மக்களின் நலம். அதனால் தான் என் அன்புக்குரிய மக்களாகிய நீங்கள் எப்பொழுதும் என் பக்கம் இருக்கிறீர்கள். நானும் உங்கள் பக்கம் இருக்கிறேன்.

இளைஞர்களுக்கு வேண்டிய சிந்தனையும் நோக்கமும்
™
நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கமும், தொலைநோக்கு சிந்தனையும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் சவால்களைச் சந்தித்து, நம்முடைய மனஉறுதியையும், செயலாற்றலையும் மென்மேலும் வலிமைப்படுத்திக் கொள்ளலாம்.

திறன் பெருக்கும் விளையாட்டுப் போட்டிகள்

™ பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டுத் திறன் போட்டிகள், பங்கேற்போரின் வலிமையைப் பறைசாற்றுவதோடு, திறமையை மென்மேலும் பெருக்கி, வெற்றி பெற உதவுகின்றன.

விளையாட்டுப் போட்டிகள் அமைத்துத் தரும் தளம்

™ ஒழுக்க நெறிகள், நம்பிக்கை, தலைமைப் பண்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, அனைவரையும் மதித்தல் உள்ளிட்ட அம்சங்களை வலிமைப்படுத்தவும், பல்வேறு திறன்களை மேம்படுத்தவும், விளையாட்டுத் திறன் போட்டிகள் தளம் அமைத்துத் தருகின்றன.

விளையாட்டுப் போட்டிகள் கற்றுத்தரும் பாடம்
™
முயற்சியின் மதிப்பை வெளிப்படுத்துவதோடு, வெற்றியையும், தோல்வியையும் எதிர் கொள்வது எப்படி என்பதையும் விளையாட்டுத் திறன் போட்டிகள் கற்றுத் தருகின்றன.

விளையாட்டுப் போட்டிகள் வெளிப்படுத்தும் நற்குணங்கள்
™
ஒட்டுமொத்த வளர்ச்சி, அமைதி, சமாதானம், பரஸ்பர ஒத்துழைப்பு, எதிர் அணியில் இருப்போரையும் மதித்து நடந்து கொள்வது ஆகிய பல்வேறு அம்சங்கள் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:54 pm

விளையாட்டுப் போட்டிகள் கற்பிக்கும் வாழ்க்கைத் திறன்கள்
™
விளையாட்டுத்திறன் போட்டிகள் மூலமாகக் கற்றுக் கொள்ளப்படும் வாழ்க்கைத் திறன்கள், தனிப்பட்ட நபர்களின் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதற்கும், ஆளுமைத் திறனைப் பெருக்கிக் கொள்வதற்கும், மற்றவர்கள் உடனான உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் உதவுகின்றன.

பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க வேண்டும் காவல்துறை
™
காவல் துறையினர்தான் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய மிக அத்தியாவசியமான சேவையில் அதிக அளவில் ஈடுபடுபவர்கள், அனைவருக்கும் வெளிப் படையாக தெரியக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, கமாண்டோப் படையினரின் எதிர்தாக்குதல் திறன்களின் மேம்பாடு என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை ஈடுகொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

அதீத உறுதியும் தனித்திறனும் கொண்ட சேவை

™ கமாண்டோ படை வீரர்களே! உங்களுடைய சேவை என்பது, அதீத உறுதியுடன் எல்லா நேரங்களிலும், தனித் திறமையுடன் விளங்குவதாகும். நீங்கள், உங்கள் பணியை நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் உயர்த்திக் கொள்வதன் மூலம், பொதுமக்களின் உயர்ந்த நம்பிக்கையையும், அவர்களின் மரியாதையைப் பெறுபவர்களாகவும் இருப்பீர்கள்.

சவால்களே சிறந்த அதிகாரிகளை வடித்தெடுக்கும்
™
எப்படி நெருப்பு உலோகத்தைச் சுத்தப்படுத்துகிறதோ, அதேபோல சவால்கள்தான் உங்களை மிகச் சிறந்த அதிகாரிகளாக வடித்தெடுக்கும்.

மக்களுக்கு நன்மை என்பதே ஒரே நோக்கு
™
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் திட்டங்களை தீட்டுகிறோம். அவ்வாறு தீட்டப்பட்ட திட்டங்கள் மக்களை சென்றடைகின்றன. திட்டங்களிலே ஒரு சில குறைகள் இருக்கலாம். திட்டங்கள் மக்களைச் சென்றடைவதிலே சில இடங்களில் சில குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டினால், அவற்றை சரிசெய்ய நாங்கள் தயங்க மாட்டோம். அதற்காக ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நல்லதும் கெட்டதும் அவரவர் மனம் பொறுத்ததே!
™
எந்த திட்டம் ஆனாலும் எந்த செயல் ஆனாலும் நல்லதைக் காண்பதென்றாலும் காணலாம். கெட்டதைக் காண்பதென்றாலும் காணலாம். நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது தான் ஒவ்வொரு செயலிலும் நல்லதும் கெட்டதும். அவரவர்களுடைய மனதைப் பொறுத்து நல்லதும் கெட்டதும் தெரியும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்கள் மக்களின் எதிரிகள்

™ மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வரும் எனது தலைமையிலான அரசின் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புழுதிவாரி இறைக்கின்றவர்கள் பக்கம் மக்கள் இல்லை. அவர்களும் மக்கள் பக்கம் இல்லை.

எங்கள் பக்கம் மக்கள் - மக்கள் பக்கம் நாங்கள்
™
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகின்ற எங்கள் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் பக்கம் நாங்கள் இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் திறன் மிகு மனிதவளம்
™
தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த, திறன்மிக்க மனிதவளம் ஏராளமாக உள்ள நிலையில், அறிவுசார் பொருளாதார சக்தியாக தமிழகம் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் சாதகமாக அமைந்துள்ளன. பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுதல் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதே, பொருளாதார வளர்ச்சித் தூண்டலை உறுதி செய்யும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:57 pm

இந்திய அளவில் பள்ளி முதல் கல்லூரிவரை அம்மாவின் அமுதமொழிகள் பாடமாக இணைக்கப்பட வேண்டும்.

MB, MLA அனைவரும் இவற்றைப் படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும், அப்பொழுதுதான் அவர்களால் மக்களுக்கு நல்லாட்சி வழங்க முடியும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக