புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Poll_c10மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Poll_m10மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Poll_c10மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Poll_m10மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:21 pm

First topic message reminder :

வெளியீடு :
இயக்குநர்,
செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 600 009.
பதிப்புரை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தையிலும் எழுத்திலும் பேச்சிலும் ஒளிர்ந்த கருத்துமணிகளைத் தொகுத்து “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்” எனும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் இந்த அழகிய சிறு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

மொழி, கல்வி, இலக்கியம், ஆன்மீகம், பொருளாதாரம், மகளிர் மேம்பாடு, அரசியல் போன்றவை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தனைப் பூங்காவில் மலர்ந்த வாசமிகு மலர்கள், இந்நூலை வாசிக்கும் வாசகர்களின் நெஞ்சங்களிலெல்லாம் நறுமணம் பரப்பும் என்பதில் ஐயமில்லை.

மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் கருத்துச் செல்வங்களை, அவர்கள் ஆற்றிய பல்வேறு உரைகளிலிருந்து எடுத்து,  சீரிய முறையில் தொகுத்து,
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்”
என்ற தலைப்பில்  நூலாக வழங்கியுள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு. மகேசன் காசிராஜன், இஆப அவர்களையும் இப்பணிக்கு உறுதுணை புரிந்த செய்தித்துறை அலுவலர்களையும் பாராட்டுகிறேன்.  

நவில்தொறும் நயம் படைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கருத்துச் செல்வங்களைத் தமிழக மக்கள் கருத்தூன்றிப்  படித்துப் பயன்பெற்றிட அன்புடன் விழைகின்றேன்.

மூ. இராசாராம், இஆப
அரசுச் செயலாளர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:31 pm

சக்தியே பெண்
™
பெண்ணைச் “சக்தி” என்று அழைக்கிறோம். அவள் சக்தியின் பிறப்பிடம் - சக்தியின் இருப்பிடம் - சக்தியின் சிறப்பிடம்!.

கல்லாதவர்கள் இல்லாத தமிழகம்
™
கல்லாதவர்களே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதே எனது கோட்பாடாகவும் எனது அரசின் குறிக்கோளாகவும் அமைந்துள்ளது.

இந்தியரின் கடமை
™
பெற்ற சுதந்திரத்திற்குத் தன்னை முற்றிலும் தகுதியாக்கிக் கொள்ள வேண்டியது இன்றைய இந்தியர் ஒவ்வொருவரது கடமையாகும். ஏழ்மை கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே! என்று நாம் மகிழ்ச்சிப் பண்பாட வேண்டும்! அந்த நாள் வர வேண்டும்!.

கடமை செய்வதே சுதந்திரம்
™
“சுதந்திரம்” என்னும் சொல்லை ‘உரிமை’ என்று அர்த்தப்படுத்திக் கொள்வதை விட, ‘கடமை’ என்று பொருள்படுத்திக் கொண்டால்தான் பெற்ற சுதந்திரத்துக்குப் பெருமை! அதைப் பெற்றுத் தந்தவர்களுக்கும் மரியாதை!

இடையூறுகளைப் பொடியாக்குவோம்
™
தமிழக மக்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் தடையாக நிற்கும் எந்த இடையூறுகளையும் பொடிப் பொடியாக்கும் உறுதிப்பாடு என் உள்ளத்தில் எப்பொழுதும் உண்டு.

சாதிப்பதே செயல்
™
தேவையை நிறைவேற்றுவதே என் நோக்கம். அதைச் சாதிப்பதே என் செயலாகும். அந்த வழிக்கு வாருங்கள். இந்தக் கடின வேலையை எளிதாக, விரைவாகச் செய்வதற்கு தகவல் தொழில் நுட்பம் அவசியத் தேவையாகும்.

திடமான முடிவெடுப்போம்
™
எதிலும் ஆக்கப்பூர்வமான சிந்தனை ஒன்றே தாரக மந்திரமாக இருக்க வேண்டும். எதையும் பெரிதாக எண்ணுங்கள். எடுக்கும் முடிவில் திடமாக இருங்கள்.

பல்லுயிர் ஓம்புதல்
™
பல்வேறு உயிரினங்கள் சமச்சீரான நிலையில் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக வாழ்ந்து “இயற்கைச் சமன் நிலையைக்” காத்து வருகின்றன. இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:32 pm

இயற்கைச் சூழல் பேணுவோம்
™
“உணவுச் சங்கிலி” (Food Chain) என்ற அற்புத நிகழ்வின் மூலம் தாவரங்களும், விலங்குகளும் ஒன்றையொன்று சார்ந்து மனித வாழ்விற்கு அடித்தளமாக அமைகின்றன. எனவே, இயற்கைச் சூழலை நாளைய தலைமுறையினருக்காகப் பேணிக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் இன்றைய தலைமுறையினருக்கு உள்ளது.

ஊரகப் பொருளாதார மேம்பாடு
™
ஊரகப் பகுதிகளில் வேளாண் சார்ந்த சிறுதொழில்கள் தொடங்கப்பட வேண்டும்; அதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள மூலப் பொருட்களின் மதிப்பு கூட்டப்பட வேண்டும்; ஊரக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு ஊரகப் பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதே எனது இலட்சியம்.

ஊரகப் பகுதிகளை நகரங்களுக்கு இணையாக்குவோம்

™ நகர்ப்புரங்களுக்கு இணையாக ஊரகப் பகுதிகள் வளர்ச்சி அடைய வேண்டும்; ஊரகப் பகுதி மக்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பது எனது எண்ணம்.

நல்ல அரசின் இலக்கணம்
™
ஒளிவு மறைவற்ற, திறமை மிக்க மற்றும் பொறுப்புள்ள நிருவாகத்தை அளிப்பதுதான் ஒரு நல்ல அரசின் இலக்கணம் என்பது எனது எண்ணமாகும்.

மனித வளர்ப்புப் பணி
™
மலர்ச்செடிகளை ஓராண்டிலும், மரங்களைப் பத்தாண்டிலும் வளர்த்திடலாம். ஆனால், மனித வளர்ப்புப் பணி என்பது அப்படிக் குறுகிய காலத்தில் முடிந்து விடுகிற பணி அல்ல. என்றும், என்றென்றும் தொடரப்பட வேண்டிய பணி.

சிந்தனையும் செயல்பாடும் மக்களை மையப்படுத்தியே!
™
என் எண்ணங்கள் மக்களைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. என்னுடைய செயல்பாடுகள் மக்களை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றன.

இணையில்லா மக்கள் சக்தி

™ “உங்கள் அன்பும், உங்கள் பாசமும் ஒரு கோடி தடைகளை உடைத்தெறிகின்ற வல்லமையை எனக்குத் தருகின்றன. சக்தி என்பது மக்கள் சக்தி தானே? மின் சக்தி என்றாலும், காந்த சக்தி என்றாலும், சக்தி என்றாலும் அவை எல்லாம் மக்கள் சக்திக்கு அப்புறம்தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:32 pm

ஏழைகள் நிலை உயர்த்துவோம்
™
ஏழைகள், ஏழைகளாகவே இருந்துவிடக் கூடாது. அவர்களது நிலை உயர வேண்டும்! அதற்காகவே அல்லும் பகலும் நான் உழைத்து வருகிறேன்.

உழைப்பில் இருக்கிறது வெற்றி
™
நம்முடைய உழைப்பால் நாம் உருவாக்கும் எந்தச் சொத்துக்கும் உரிய மதிப்பை நாம் அளிக்கத் தவறுவதே இல்லை. எனவே, நம்முடைய முன்னோருடைய சொத்து நமக்கு எவ்வளவு கிடைத்தாலும் நம்முடைய சொந்த உழைப்பின் பயனாக நாம் உருவாக்கும் சொத்தின் மதிப்பு நமக்கு மிக அதிகமானதாகவே தெரியும். எனவே, நமது வெற்றி, வியர்வையைச் சிந்தி உழைப்பதில்தான் இருக்கிறது.

உண்மையான மனநிறைவு
™
உழைப்புக்கு என்றும் உயர்வு உண்டு, பிறர் உழைப்பில் கிடைக்கும் பொருளை அனுபவிப்பதில் உள்ள இன்பத்தை விட சொந்த உழைப்பின் உயர்வில்தான் உண்மையான மன நிறைவு கிடைக்கும் என்பதை உணர்ந்து நம்பிக்கையோடு கடமைகளை நிறைவேற்றுங்கள். வெற்றி உங்களுக்கு!

தன்னை நம்பு! வெற்றி உனது!
™
தன் மீது நம்பிக்கை இல்லாத மனிதர்களுக்கு எவர் மீதும் நம்பிக்கை இருக்காது. இது தான் உளவியல் உண்மை! தன்னை நம்பும் மனிதர்கள்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும்.

ஆக்கப்பூர்வ சிந்தனை வேண்டும்
™
எப்போதுமே ஆக்கப் பூர்வமாக சிந்திக்க வேண்டும். சிந்தித்து நம்பிக்கையோடு இருந்தால் தீமையிலும் நன்மை விளையும், சோதனைகளைக் கடந்து, எத்தகைய சூழ்நிலையிலும், நாம் வெற்றி கொள்ள முடியும்.

வெற்றி நிச்சயம்
™
எதையும் முழுமையான ஈடுபாட்டோடு செய்தால் வெற்றி நிச்சயம். அதை, ஒரு சமூக அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால் அது தான் தேச சேவை!

பெண்கள் நினைத்தால்...
™
பெண்கள் நினைத்தால், தங்கள் தலை எழுத்தை மட்டுமல்ல, மற்றவர்களின் தலை எழுத்தையும் மாற்ற முடியும். அவர்களுக்குத் தேவை, வாய்ப்புகள்! அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதே, எனது லட்சியம்!

மனித உள்ளாற்றல்
™
மனிதர்களின் வெற்றி தோல்விகளை அவர்களுடைய நிறம் நிர்ணயிப்பதில்லை - அவர்களின் உள்ளாற்றல் தான் தீர்மானிக்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:33 pm

புதிய உத்திகள் தேவை
™
எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய முறைகள் தேவை! புதிய வழிகள் தேவை! புதிய உத்திகள் தேவை! புதிய அணுகுமுறைகள் தேவை!

உழைப்புக்கு மரியாதை
™
உழைப்புக்கு மரியாதை தருகின்ற மனப்பான்மை நம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். சோம்பல் என்பது வீட்டுக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கும் கேடு. ஊக்கம் வேண்டும் உழைக்க வேண்டும் ™ நம் நாட்டு மக்களுக்கு என்ன குறை? அறிவில் குறையா? இல்லை! ஆற்றலில் குறையா? இல்லவே இல்லை! அப்புறம் என்ன குறை? ஊக்கம் இல்லை என்பது குறை! உழைப்பு போதாது என்பது குறை!

பத்தாம் பசலிப் பாதையில் போக வேண்டாம்

™ பத்தாம் பசலித்தனமான பாதைகளிலேயே சென்று கொண்டிருந்தால் நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்!

நேரம் பார்க்காத உழைப்பு
™
வளர்கின்ற நாடுகளில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளிலும் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உழைப்புக்கு மரியாதை கொடுக்கிறது அந்தச் சமுதாயம்! அங்கே பணக்காரர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். தொழில் அதிபர்களும் நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள்.

உழைப்பு மட்டுமே உயர்வு தரும்

™ வளர்ந்த நாடுகளின் வெற்றிக்குக் காரணம் உழைப்பு தான்! உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள், கசப்பாக இருக்கலாம்; ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை. உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கிறேன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இலட்சியப் பயணம்
™
இந்தியாவிலேயே முதன் மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும்! அந்த லட்சியத்தை நோக்கிய பயணத்தில் நாம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்!

மாபெரும் வெற்றி
™
மாபெரும் வெற்றி என்பது, ஒரே நாளில் படைக்கிற அற்புதம் அல்ல! அது, சிறு சிறு வெற்றிகளின் கூட்டுத் தொகை!

வெற்றி ஒரு தொடர் பயணம்

™ வெற்றி என்பது, ஒரே நாளில் அடைந்து, மறு நாளில் மறந்து போகிற இலக்கு அல்ல! அது ஒரு தொடர் பயணம்!

இருநிலை மேம்பாடு
™
ஏழை, எளிய மக்களுக்கு ஒரு புறம் சலுகைகளை வழங்குவதும்; மறுபுறம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அவர்களே வாங்கிக் கொள்ளும் வகையில், அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்துவதும் ஆகிய இரு வேறு நிலைகளில், பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு மேற்கொண்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:34 pm

நன்றி மனப்பான்மை
™
மனித உறவுகளை மேம்படுத்துவதில் நன்றி மனப்பான்மை மிகவும் முக்கியமானது. பொருளாதாரம் மேம்பட ™ செவ்விய முறையில் திட்டமிடல், மின்சாரம், சாலைகள், நகர்ப்புர வசதிகள், இருமடங்கு ஆதரவுக் கொள்கையுடனான வீட்டுவசதிகள் ஆகியவற்றின் உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியவை பொருளாதார மேம்பாட்டிற்கு மிக முக்கியமானவையாகும்.

ஊரகப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்
™
நகரங்களைச் சுற்றிலும், தொழிலகங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவற்றைப் பரவலாக்க வேண்டுமெனில் ஊரகப்பகுதிகளில் அதற்கான உள் கட்டமைப்பு வசதி இருப்பது தேவையானதாகும்.

தியாகச் செம்மல்கள் நிறைந்த தமிழகம்
™
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழகம். வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமையும் பெற்றது நம் தமிழகம்.

உறுதியான நடவடிக்கை
™
உண்மையான மக்கள் அரசு, சமூக நீதியை நிலை நாட்ட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உண்மையான சுதந்திரம்
™
அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து, வறுமையில் வாடுவோர் வளம் பெற்று, அனைத்துத் தரப்பு மக்களும் அச்சமின்றி வாழ்வதுதான் உண்மையான சுதந்திரம்.

சிறந்த மக்களாட்சி

™ எல்லோரும், எல்லாமும் பெற்று, வாழ்வில் வளம் பெறும் வகையிலான ஆட்சி அமைவதே சிறந்த மக்களாட்சி ஆகும். இவ்வாறான மக்களாட்சியில்தான், ஏழைகளும், வசதி படைத்தோருக்கு இணையான வசதிகளைப் பெற இயலும்.

சிறந்த பொருளாதாரக் கோட்பாடு
™
வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளில் அனைத்து தரப்பு மக்களும் தன்னிறைவு பெறுவது ஒரு சிறந்த பொருளாதாரக் கோட்பாடாகும்.

மக்களரசின் கடமை
™
ஏழைகள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டுமெனில், ஏழை, எளிய மக்களைப் பொருளாதார நடவடிக்iகைளில் ஈடுபடச் செய்து, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது மக்கள் அரசின் கடமை ஆகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:35 pm

தரமான கல்வியை உறுதி செய்வோம்
™
அறிவுசார் மனிதவளம் மேம்பாடு அடைய வேண்டுமெனில், அனைவருக்கும் தங்கு தடையின்றித் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

மனிதவளம் வளர்ச்சிக்கு அடித்தளம்

™ நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது மனிதவளம் தான். மனிதவள மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுவது கல்வி. கல்வியில் மேம்பட்ட சமுதாயத்தால்தான் வளர்ச்சிக் குறியீடுகளை எளிதாக அடைய இயலும்.

மக்கள் நல அரசின் கடமை
™
மாற்றத்தைத் தந்திட்ட தமிழக மக்களுக்கு ஏற்றத்தைத் தரும் வகையில், சீரிய முறையில் திட்டங்களைத் தீட்டி, சிறப்பான முறையில் செயல்படுத்துவதுதான், உண்மையான, மக்கள் நலன் நாடும் அரசின் கடமை ஆகும்.

பொருளாதார வளர்ச்சியே மாநில வளர்ச்சி

™ ஒரு மாநிலம், வளர்ச்சி பெற வேண்டும் எனில்; அந்த மாநிலத்தின் மக்கள் வளம் பெற வேண்டும் எனில்; மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும்.

மனிதவள மேம்பாடு காண...
™
மாணவ மாணவியருக்குச் சிறப்பான கல்வி அளிப்பதாலும்; மக்களின் உடல் நலம் பேணி பாதுகாக்கப்படுவதாலும்; மனிதவளம் மேம்பாடு அடையும். மனித வளம் மேம்பட்டால் அந்த மாநிலத்தில் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

அமைதிச் சூழலே வளர்ச்சிக்கு அடிப்படை
™
ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் எனில், அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் போது, அங்கே பொருளாதார வளர்ச்சிக்கு இடம் இருக்காது.

தனி மனித முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணி

™ அமைதி குன்றிய சூழ்நிலையில் தங்களைத் தற்காத்துக் கொள்வதிலேயே மக்கள் தங்களின் காலத்தையும், ஆற்றலையும் செலவிட நேர்வதால் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட இயலாது. எனவே தான், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தனி மனிதனின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியக் காரணியாக விளங்குவது அமைதியான சூழல்.

சட்டம்
™
தனது உரிமைகளை, உடைமைகளை வேறு எவரும் பறித்துக் கொள்வார்கள் என்ற அச்ச உணர்வின்றி; தன்னுடைய வளர்ச்சிக்குத் தேவையானவற்றை சமூகச் சூழலில் பெறுவதற்காக மனிதனால் ஏற்படுத்தப்பட்டதே சட்டம் ஆகும்.

சட்ட திட்டங்களை மதித்து நடப்போம்
™
ஒரு குறிப்பிட்ட சமுதாயம், தனது வளர்ச்சிக்கு அடிப்படையாக எவை எவை தேவை எனக் கருதுகின்றதோ, அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான சட்ட திட்டங்களை வகுத்துக் கொள்கிறது. அந்த சட்ட திட்டங்களை அந்த சமுதாயத்தில் உள்ள அனைவருமே மதித்து நடந்தால் அங்கே காவலருக்கோ, நீதிமன்றத்திற்கோ எந்த வித வேலையும் இல்லை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:36 pm

காவலர்களின் இரண்டு பக்கங்கள்

™ சட்ட திட்டத்தை மதிப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும்; சட்டத்தையும், மற்றவர்களின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடிய எதிரியாகவும் காவலர் விளங்க வேண்டும். அதாவது, காவலர் என்பவர் நாணயத்தின் இரு பக்கம் போன்றவர். சட்டப்படி நடப்பவருக்கு நண்பர் எனும் பக்கம் தெரிய வேண்டும். சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிரி என்ற பக்கம் தான் தெரிய வேண்டும்.

மாநிலத்தின் மேன்மை

™ தொழில் துறையில் மாநிலம் முன்னேற்றம் அடைய வேண்டும் எனில், அந்த மாநிலத்தில் உள்ள தொழில்முனைவோர் மட்டும் அல்லாமல், பிற மாநிலங்களைச் சார்ந்தவர்களும், பிற நாட்டினரும் விரும்பி வந்து தொழில் தொடங்கும் இடமாக அந்த மாநிலம் அமைய வேண்டும்.

குறுக்கீடு இல்லா காவல் பணி
™
காவலர்கள் சமூக விரோதிகளைக் கண்டு அஞ்சாமல் இருப்பது மட்டும் அல்லாமல், தங்கள் பணிகளில் எந்த விதமான இடையூறோ; அல்லது எவரிடமிருந்தோ, அதாவது, உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்று எவரிடமிருந்தும் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் தங்கள் பணிகளை நியாயமாகவும், நேர்மையாகவும் மேற்கொண்டால்தான், சட்டத்தின் மாட்சிமை காக்கப்பட்டு; பொதுமக்களுக்கான நியாயம் வழங்கப்பட்டு; சட்டத்தின் மீதும், அரசின் மீதும் பொதுமக்கள் நம்பிக்கை வைப்பார்கள்.

சட்டத்தின் தேவை
™
ஒரு நாட்டிலே, ஒரு சட்டம் இயற்றப்படுகிறது என்றால், அந்தச் சட்டம், அந்த நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும்; அல்லது, இது போன்ற சட்டம் தேவை என்று மக்கள் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், அந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

திடமான கருத்து
™
காவல்துறை, ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் சொற்படி எல்லாம் கேட்கின்ற துறை அல்ல. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசியல் கட்சிக்கு ஏற்றவாறு கொள்கைகளோ, கோட்பாடுகளோ, நோக்கங்களோ மாறக் கூடியது அல்ல. எனவேதான், காவல் துறை என்பது ஆட்சி அதிகாரத்திலே இருப்பவர்களுக்குக் கட்டுப்பட்டத் துறை அல்ல ; அது, நீதிக்கும், நேர்மைக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்ட துறை. காவல்துறையின் பணிகளில் குறுக்கீடு செய்ய யாருக்குமே அதிகாரம் இல்லை என்பதுதான் எனது திடமான கருத்தாகும்.

சாலை உள்கட்டமைப்பின் முக்கியப் பங்கு
™
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் பல்வேறு உள்கட்டமைப்புகளில் சாலை உள்கட்டமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில், சாலைப் போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளின் வேகமான வளர்ச்சிக்குச் சாலைக் கட்டமைப்பின் வளர்ச்சி அடிப்படையாக உள்ளது. ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் சாலை இணைப்பு வசதி முக்கியமான ஒன்றாக அமைகிறது. ஒரு மாநிலத்தில் உள்ள ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பினைக் கொண்டே அம்மாநிலத்தின் வளர்ச்சியைக் கணிக்க இயலும்.

பேறு பெற்றோர் ஆசிரியப் பெருமக்கள்
™
ஒரு பிறப்பில், தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவரது ஏழு பிறப்பிலும் உதவிடும் என்று வள்ளுவப் பெருமான் போற்றிப் புகழும் கல்விச் செல்வத்தைப் போதிக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள் ஆவார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:36 pm

ஆசிரியர் சமுதாயத்தின் அரும் கடமை
™
நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்தம் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைபடுத்தி, அவர்களை நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்ததாகும்.

நம்பிக்கை நட்சத்திரங்கள்
™
இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவர். சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை எவ்வித இடர்ப்பாடும் இன்றி பெற்று மகிழ்ச்சி நிறைந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளே வளமான மற்றும் வலிமையான தலைமுறையினராக உருவாகின்றனர்.

தீவிரவாதத்தை ஒடுக்கிட உறுதி
™
தீவிரவாதத்தை திறமையாக ஒடுக்குவதிலும் சமுதாயத்தைப் பிரித்தாளும் போக்கு வளர்ப்பதைத் தடுப்பதிலும் நான் எப்போதும் உறுதி பூண்டுள்ளேன்.

நல்லரசின் கடமை
™
நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளையும்; சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டியதும்; அவர்களது பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியதும் ஒரு நல்லரசின் கடமையாகும்.

அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக்கும் திறன்
™
மேல்நிலை வகுப்புகள் மற்றும் இளங்கலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக் கணினிகள் வழங்குகின்ற திட்டமானது, கணினி அறிவை மேம்படுத்துவதற்கும் மாணவர்கள் அவர்களுடைய பொருளாதார பின்னணிக்கு சற்றும் தொடர்பில்லாமல் கணினி அறிவு பெற்று, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குகின்ற திறன் பெற்றிருக்கின்றனர் என்பதை உறுதி செய்வதற்குமான பெருத்த முயற்சியாகும்.

அழிவு சக்திகளைக் கட்டுப்படுத்துவதே முதல் தேவை
™
தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் விரைவுபடுத்த முதல் தேவை அழிவு சக்திகளைக் கட்டுப்படுத்துவதே ஆகும். சட்டத்தை அமலாக்கும்போது சிறு சம்பவங்களைக் கூட நாம் குறைந்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அத்தகைய சிறு சம்பவங்கள் கூட வகுப்பு அல்லது சாதிப் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

™ தமிழ்நாட்டிலுள்ள எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எனது கனவாகும்.

மருத்துவப்பணி
™
அரசு மருத்துவமனைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதையும் மருத்துவர்களும் ஏனைய சுகாதார பணியாளர்களும் தன்னலமற்ற சேவை புரிவதையும் உறுதிப்படுத்துவதே நமது பொதுவான நோக்கமாகும்.

உந்துசக்தி
™
மக்களுடைய எதிர்பார்ப்புகளே இந்த அரசின் உந்துசக்தியாக செயல்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:37 pm

மக்கள் சேவை
™
மக்கள் சேவை என்பது நேர்மை, மனசாட்சிப்படி நடத்தல், கருணை ஆகிய அடிப்படையில் சிறந்த பயிற்சிக்கு பின் வழங்கும் சேவையேயாகும்.

தமிழ்நாடு முதன்மை மாநிலம்
™
நிருவாகம் மற்றும் மேம்பாடு தொடர்பாக அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக ஆக்குவதே எப்போதும் என்னுடைய நோக்கமாகும்.

குழந்தைகளுக்குப் போதிய கல்வி
™
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வளர்ச்சியே எனது தனிப்பட்ட விருப்பமாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் போதுமான அளவு கல்வி கற்கும் வாய்ப்பு, உடல் ஆரோக்கியம், அழகான குழந்தைப் பருவம் ஆகியவற்றை அளித்தாக வேண்டும். ஒவ்வொரு குழந்தையையும் மதிப்புள்ளவர்களாக மாற்றி அவர்களைச் சமுதாயத்தின் சொத்தாக்க வேண்டும்.

பெண்கள் சிறாருக்கு ஆதரவு
™
பெண்களும், சிறார்களும் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். அவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் நாம் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடுகள் மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே என் நோக்கமாகும்.

சமூக விரோத சிந்தனையை முறியடிக்க தொடர் கண்காணிப்பு

™ தொடர்ச்சியான கண்காணிப்பு, சமூக விரோத சிந்தனைகளை முறியடித்துவிடும்; கவனிப்பாரற்ற நிலங்கள், குடிசைப்பகுதி உருவாவதற்கு காரணமாக இருப்பதோடு மட்டுமின்றி, வளர்ச்சித் திட்டங்களை பின்னடையச் செய்துவிடும்.

காவல்துறை
™
காவல்துறை என்பது மாநிலத்தினுடைய அதிகாரத்தின் கண்கூடாகக் தெரிகிற ஓர் அடையாளம் ஆகும். காவல்துறையினர் மீது பாமர மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பதை உறுதி செய்வது நமது அனைவரின் ஒருமித்த முயற்சியாகும்.

சிறந்த ஆரோக்கியம்

™ சிறந்த ஆரோக்கியம் என்பது சமுதாயத்தின் அனைத்துக் கட்ட வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காகும். ஆரோக்கியமான மக்கள்தான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உண்மையாகப் பங்காற்ற இயலும்.

அறிவுசார் மூலதனம்
™
வளர்ச்சியடைந்த உலகம் முழுவதிலும் நாம் மனித ஆற்றலிலிருந்து அறிவாற்றலுக்கு மாறியுள்ளோம். நாம் நம் உடல் தசைப் பயன்பாட்டிலிருந்து மூளையின் பயன்பாட்டிற்கு மாறியுள்ளோம். அறிவைப் பயன்படுத்தும்போது சக்தியாக மாறுகிறது. அறிவுசார் மூலதனம் என்பது உற்பத்தியின் அனைத்துக் கூறுகளிலும் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:38 pm

அறிவாற்றல்
™
உலகில் ஒரு நாட்டின் இடத்தை உண்மையில் தீர்மானிப்பது படைபலமோ அல்லது பொருளாதார வலிமையோ அல்ல. அதை அறிவாற்றல்தான் தீர்மானிக்கிறது. அறிவாற்றல் ஒரு நாட்டின் தகவல் தொழில்நுட்பம் என்பது மனிதனின் அறிவாற்றலுக்குச் சமமான ஒன்று. இதுதான் இந்தியாவை முதல் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தின் சிறப்பு
™
இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது பன்முகங்களைக் கொண்டது. இந்தியாவால் முடியுமா என்ற ஐயப்பாட்டைத் தகவல் தொழில்நுட்பம் தகர்த்துள்ளது. உலகத்தரமுள்ள பொருட்களை உருவாக்குதலிலும், உலக முன்னணி நிறுவனங்களுடன் சரி சமமாக நின்று போட்டியிட இயலும் என்ற பெயரே இன்று உலக அளவில் உள்ள முதலீட்டாளர்களின் மனதில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் -சென்னை

™ சென்னை ஒரு பழைமை வாய்ந்த நகரம் என்ற கருத்திலிருந்து இன்று தொலைதூரம் வந்துவிட்டது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்று கூறுகின்ற வகையில் வாரம் ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டு வருகிறது. மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளைச் சென்னையில் திறந்துள்ளனர். மற்ற நிறுவனங்களும் சென்னையில் வணிகத்தைத் தொடங்க விரும்புகின்றனர்.

முதலீட்டாளர்களின் விருப்பம் - தமிழகம்
™
இன்று தமிழ்நாடு, முதலீட்டாளர்கள் விரும்பி முதலீடு செய்கிற இடமாக உருவெடுத்துள்ளது. பல்வேறு தனிப்பட்ட ஆய்வுகள், மாநிலத்தின் முதலீட்டு நிலையினை உயர்த்தி மதிப்பிட்டுள்ளது. எனவே, இந்தியாவில் பெருமளவில் அன்னிய முதலீடுகள் ஈர்ப்பதில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்து வருகிறது.

எனது இலக்கு
™
தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற ஒரு முதன்மை மாநிலமாக உருவாக்குவதே என்னுடைய குறிக்கோள் அல்லது கனவாகும். அதனைச் செயல்படுத்துகின்ற போது கனவுகள் உண்மையாகும். முறையாகத் திட்டமிடப்பட்டால் அதுவே பாதி இலக்கை அடைந்தது போல் ஆகும்.

சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை
™
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பெற்றது சட்டமன்றம். மக்களின் ஆசைகள் மற்றும் விருப்பங்களை சட்டமன்றத்தில் எடுத்துக் கூறுபவர்களாக இருப்பவர்களே சட்டமன்ற உறுப்பினர்கள். மக்களின் தேவைகள் என்ன. நாட்டின் தேவைகள் என்ன, நாட்டின் வளர்ச்சி என்பது எவ்வாறு அமையப்பெற வேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இவைகளையெல்லாம் எவ்வாறு நிறைவேற்றி வருகிறது, என்பதை எல்லாம், ஆட்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது தான் சட்டமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.

பணி செய்வதே என் கடமை
™
யார் போற்றினாலும், தூற்றினாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே. தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழக மக்களின் வளர்ச்சி தான் என்னுடைய வளர்ச்சி என்ற முறையில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின்  அமுத மொழிகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக