புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
107 Posts - 49%
heezulia
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
7 Posts - 3%
prajai
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
234 Posts - 52%
heezulia
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
18 Posts - 4%
prajai
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
2 Posts - 0%
Barushree
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_m10சில உறவுகள்... சில கனவுகள்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில உறவுகள்... சில கனவுகள்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 11:37 am

அந்த மிகப்பெரிய மாலில், இருந்த கடையில் பில்லிங் செக் ஷனில், சீதாவை நான் துளியும் எதிர்பார்க்கவில்லை.
அதே கனிவான முகமும், சிரிப்புடன், பதினெட்டு ஆண்டிற்கு முன்பிருந்தது போலவே இருந்தாள். கூட்டத்திற்கு நடுவே நிமிர்ந்து பார்த்தவள், உடனே என்னை அடையாளம் கண்டு, ''நீங்க, திவாகர்தானே... எப்படி இருக்கீங்க... அம்மா எப்படி இருக்காங்க?'' என்று ஆர்வமாய் கேட்டாள்.

''நல்லா இருக்கேன்; நீங்க எப்படி இருக்கீங்க,''என்றேன்.மாற்று சிப்பந்தியிடம் தன்னுடைய பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு எழுந்து வந்தாள் சீதா.''நல்லா இருக்கேன் திவாகர்; பட்டுகோட்டையில இருந்து இங்க எப்போ வந்தீங்க?''கூட்ட இரைச்சலில், அவளுடைய வார்த்தைகள், விண்டு விண்டு விழுந்தது. ஷாப்பிங் மாலில் இருந்த ரெஸ்டாரன்டில், இருவரும் சென்று, தனியான இடம் தேடி அமர்ந்தனர்.''எப்பவும் இங்கே திருவிழாக் கூட்டம் தான்; டெய்லி குறைஞ்சது பத்தாயிரம் முகங்களையாவது பாக்கிறேன்,'' என்று சொல்லி சிரித்தாள் சீதா.

''இத்தனை முகங்களை பார்த்தும், என்னுடைய முகம் இன்னும் மறக்கலையேன்னு நினைச்சா ஆச்சர்யமாய் இருக்கு சீதா,'' நெகிழ்வாய் சொன்னான் திவாகர்.''ஆமா... திவாகர், நீங்க சென்னையிலா இருக்கிங்க...''''பேங்குல மேனேஜர் ப்ரமோஷன்ல சென்னை வந்து, ஒரு வருஷம் ஆச்சு.''அவளுடைய வேலை குறித்து, விசாரித்து அறிந்தவனாக அந்த வேலை அவனுடைய மனதில் அத்தனை பெரிய அபிப்பிராயம் இல்லை என்று தெரிந்தது. ஆனால், அதற்கு வருத்தப்படும் ரகமா சீதா!

''வேலைகள்ல என்ன இருக்கு மிஸ்டர் திவாகர்... நம்முடைய மனசுக்குள்ள, இந்தந்த வேலைகளை பாக்க இது தகுதின்னு கட்சி பிரிச்சு வச்சுக்கிறோம், அவ்வளவுதான். எல்லா வேலைகளையும் எல்லாரும், பாக்கலாம். மரியாதை வேலைக்கு அல்ல, நடத்தைக்குத்தான்,'' என்றவள், தனக்கே உரித்தான புன்சிரிப்புடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். திவாகர் மனம், சாரட் வண்டியில் ஏறி, பழைய காலத்தை நோக்கி, போய்க் கொண்டிருந்தது.
பட்டுக்கோட்டையில் போக்குவரத்து கழகத்தில், திவாகரின் அப்பாவும், சீதாவின் அப்பாவும் ஒன்றாக பணியாற்றினர். அந்த அடிப்படையில், இரு குடும்பத்திற்கும் நல்ல நெருக்கம் இருந்தது.

சீதாவின் அறிவும், அழகும் ஆச்சர்யபடவைக்கும் பேச்சும், திவாகரின் அப்பாவிற்கு மிகவும் பிடித்து போனது. அவளை, எப்படியும் தன்வீட்டின் மருமகளாக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். ஜாதிய சிந்தனையில் ஊறிக் கிடந்த திவாகரின் அம்மா சாந்திக்கு, இதில் துளியும் உடன்பாடில்லை.

அப்பாவின் விருப்பத்திற்கும், அம்மாவின் வெறுப்பிற்கும் நடுவே திவாகர் திண்டாடினான். அவனுக்கும் சீதாவை பிடித்து இருந்தது. கணவனின் வற்புறுத்தலால், சீதாவை பெண்பார்க்க வர சம்மதித்தாள் சாந்தி. அன்று சீதாவின் வீட்டில், சாந்தி செய்த ஆர்ப்பாட்டமும், அலப்பரையும், ஆணவமும், வார்த்தையில் வடிக்க முடியாது.
சாந்தியின் செயலால் கூனி குறுகி, நட்பின் முகம் நாடி அமைதியாய் இருந்தார் சீதாவின் அப்பா.
அத்தனை குழப்பத்திலும், அன்று அழகாய் பேசியவள் இருபது வயது நிரம்பாத சீதாதான்.
'ஆன்ட்டி, அப்பாவும் மாமாவும் நட்பை உறவாக்கணும்ன்னு நினைச்சாங்க. ஆனா, நட்பு கண்ணுக்கு தெரியாத வேர் மாதிரி, அதுதான் பலம். ஆனா, உறவுங்கிறது கிளையில தொங்குற பழம் மாதிரி, சரியான பதத்துல பறிக்காட்டி ருசிக்காது. எனக்கென்னவோ, வேர் போதும்ன்னு தோணுது...' அவளுடைய களையான முகத்திற்கு புன்சிரிப்பு, அத்தனை அழகாய் இருந்தது.பெரியவர்கள் சின்னத்தனமாய் நடந்து கொண்டபோது, சிறியவளின் பெருந்தன்மையான பேச்சு, பிரச்னையை லேசாக்கியது. அந்த சம்பந்தம் நின்று போனது.

கொஞ்ச நாளில், சீத்தாவுடைய அப்பாவிற்கு மாற்றல் வர, குடும்பம் இடம் பெயர்ந்தது. ஆனாலும், இன்றளவும் சீதாவை மணக்க முடியவில்லையே என்ற வலி, திவாகருக்கு மனசுக்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
''அப்பறம் சொல்லுங்க திவாகர், வாழ்க்கை எப்படி போய்ட்டிருக்கு,'' கோப்பையில் உதடுபடாமல், காப்பியை உறிஞ்சியபடி கேட்டாள் சீதா.

''நல்லாருக்கேன் சீதா. ஒய்ப் பேரு மைதிலி; ஹோம் மேக்கர்; ரொம்ப அமைதி. ஐ மீன் ரிசர்வுடு டைப்! பையன் டென்த் படிக்கிறான்; பொண்ணு ஆறாவது படிக்கிறா. நார்மலா லைப் போய்ட்ருக்கு. அப்பா தவறிட்டார்; உங்க அப்பாவும் இறந்துட்டதா கேள்விபட்டேன். ஐயம் சாரி... இவ்வளவுயேன் அட்ரஸ் தரேன்... இதோ இருக்கு கோடம்பாக்கம், ஒரு நாள் வீட்டுக்கு வாயேன்,'' என்றான்.

''கண்டிப்பா வர்றேன்,'' என்று சொன்னாள் சீதா.சீதாவை பார்த்ததாக மகன் சொன்னதில் இருந்தே சாந்தியின் மனதில், இனம்புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது. அன்று சரியாய் தோன்றிய தன் செயல்கள், இன்று வெறுமையாய் தோன்றியது.
'சீதா அன்பானவள், அறிவானவள், இந்த குடும்பத்தை இன்னும் அலங்கரித்து, அணிகலனாக்கி வைத்திருப்பாள்...' என்று நினைத்து, மன வேதனைப்பட்டாள் சாந்தி.

சொன்னது போலவே, அந்த வார ஞாயிற்றுக் கிழமை திவாகர் வீட்டிற்கு வந்து நின்றாள் சீதா.''ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க?'' புன்னகையோடு சீதா வந்து நின்றபோது, தன்னை அறியாமல், சாந்திக்கு கண்கள் பனித்தன. கைகளை பற்றி தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டாள்.''இருக்கேன் சீதா... எவ்வளவு நாளச்சு உன்னை பார்ததது...''
''சொல்லுங்க ஆன்ட்டி... எல்லாம் எப்படி போயிட்டிருக்கு,'' என்றாள் இதமாக.

''எதுவும் நல்லா போகல சீதா, உங்க அங்கிள் தவறின பின், நான் ரொம்ப தனிமைப் பட்டுட்டேன். யாரும் என்னை மதிக்கறதில்லை; இன்னும் என்னை கொண்டு போகாம, அந்த பகவான் எதுக்கு காக்க வச்சுக்கிட்டு இருக்கானோ தெரியல...'' என்று அம்மா புலம்ப தொடங்க, திவாகரையே புன்முறுவலாய் பார்த்தாள் சீதா.

''ஆன்ட்டி முதுமையை பிணின்னு நினைச்சா பிணிதான்; வரம்ன்னு நினைச்சாத்தான் அத கொண்டாட முடியும். எங்க அப்பா, அம்மா, அங்கிள் எல்லாரும் முதுமையை உணராமலேயே இறந்து போய்ட்டாங்க. உங்களுக்கு மட்டும்தான், அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு; சந்தோஷமா இருங்க.''''அதான் சீதா, பிரச்னையே... சரி விடு; நீயெப்படி இருக்க, குழந்தைக இருக்கா?''''ஒரு பையன்; செவன்த் படிக்கிறான்,'' என்றாள்.மைதிலி, அவர்களுக்கு பலகாரம் கொண்டு வந்து வைத்துவிட்டு உள்ளே போனாள். அவள் அங்கிருந்து நகர்ந்ததும், சாந்தி குரல் தாழ்த்திச் சொன்னாள்...

''பார்த்தியா... வராதவ வந்திருக்க, உங்கிட்ட உட்கார்ந்து நாலுவார்த்தை பேசுவோமான்னு இருக்காளா பாரு... வீட்டிற்கு யார் வந்தாலும், போனாலும் எந்நேரமும் ஒரு நைட்டியை மாட்டிட்டுத்தான் திரியறா. யார்ட்டயும் மனசுவிட்டு, ஒரு வார்த்தை பேசறதில்லே. நீ வர்றேன்னு திவாகர் சொன்னதும், கொஞ்ச நேரம் நிம்மதியா பேசலாம்ன்னு இருந்தது; எல்லாம் உன்னை நிராகரிச்ச பாவம்,''என்ற சாந்தியின் உதடுகளில், தன் விரல்களை வைத்து, 'அதைப் பத்தி பேச வேண்டாம்' என்பது போல், மறுப்பாக தலையாட்டினாள்.

''எல்லாம் மனப்பிரமை ஆன்ட்டி. ஒவ்வொருவரும் அவரவர் இயல்போடதான் இருப்பாங்க. இதுல வருத்தப்பட எதுவுமில்ல. எங்கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்ன்னு உங்களுக்கு தோணுது. ஆனா, நான் அதிகமா பேசுறதா சொல்லி, என்னுடைய கணவர் வீட்டினருக்கும், அவருக்கும் பிடிக்கலை. அதற்காக வருத்தப்பட்டுட்டு இருக்க முடியுமா?
அவள் வாழ்க்கையின் இன்னொரு பக்கம், மிகுந்த வலியானது என்று தோன்ற, திவாகர் அமைதியாய் நிலம் பார்த்து அமர்ந்திருந்தான்.

பழைய கதைகளும், புது கதைகளுமாய் எல்லா விஷயங்களையும் தனக்கே உரித்தான வேகத்துடன் பேசி முடித்து, கிளம்ப ஆயத்தமானாள் சீதா.''சீதா, நீ வந்தது ரொம்ப ஆறுதலா இருக்கு; உனக்கு நேரம் கிடைச்சா அடிக்கடி வந்து போம்மா. எனக்கென்னவோ உன்னை பார்த்தது ரொம்ப ஆறுதலா இருக்கு,''என்றாள் சாந்தி.

''இல்ல ஆன்ட்டி; நான் அடிக்கடி வர்றேன்னு சொல்லி, உங்களை ஏமாற்ற விரும்பல. நம்முடையது ரயில் சினேகம் மாதிரி. இது தொடர முடியாது; தொடரவும் கூடாது,'' குரலில் கணம் ஏற்றாமல், புன்னகை மாறாமல், அன்பாய் சொன்னாள் சீதா.
''ஏன் சீதா அப்படிச் சொல்ற... உங்கப்பாவும், அங்கிளும் எத்தனை நட்பாய் இருந்தாங்க. எல்லாமும் சட்டுன்னு நீர்க்குமிழி மாதிரி உடைஞ்சு போயிடுச்சு. இப்போ, இந்த வயசுல, நம்ப பக்கத்து மனுசங்களை பார்த்தா மனசு ரொம்ப நெகிழுது. ஒரு அன்யோன்யத்திற்கும், ஆதரவிற்கும் மனசு தடுமாறி ஓடுது. எந்த விஷயத்திற்கும், என்னுடைய மகன் குறை வைக்கல. இருந்தாலும், ஏதோ இல்லைன்னு என் மனசு தவிக்குதுமா,'' என்றாள்.

சாந்தியின் அருகில் வந்து அமர்ந்த சீதா, மென்மையாய் அவளுடைய தலையை வருடினாள். அந்தக்காட்சி, திவாகரின் மனசில், இனம் புரியாத உணர்வை உண்டாக்கியது. அம்மாவிடம் முகம் கொடுத்து பேசாத, மைதிலி நிழலாடினாள்.
''ஆன்ட்டி... எனக்கும், இந்த பழைய நட்பும், அன்பும் நிரம்ப பிடிச்சிருக்கு; பரஸ்பரம், நம்ம எல்லாருக்கும் பிடிச்சதாலத்தான் நான், இது எதுவும் வேணாம்ன்னு நினைக்கிறேன்,''என்றாள்.

அவள் பேசுவது புரியாமல் அவளையே பார்த்தனர் சாந்தியும், திவாகரும்.''மனசு, எல்லா மிருகங்களும் வந்து தங்குற கூடாரம். எப்பவுமே, இக்கரைக்கு அக்கரை பச்சைதான். காலப்போக்கில், என்னுடைய நட்பு, உங்களுடைய மனசில் சில ஒப்பீடுகளையும், உங்களுடைய நட்பு என்னுடைய மனசில், சில ஒப்பீடுகளையும் ஏற்படுத்தும்.

''எப்பவும் வானத்துக்கும், பூமிக்கும் நடுவில நாசூக்காய் பறக்குற பறவை மாதிரி, எந்த ஒப்பீட்டிற்கும் உட்படாத தெளிவான நட்பாலயும், உறவாலயும் மட்டும்தான் வாழ்க்கை, பிரச்னை இல்லாம இருக்கும்ன்னு தோணுது.''
வெகு நாசூக்காக சொன்னாள் சீதா. ''சீதா... என்னம்மா சொல்ற?''

''ஆன்ட்டி... அன்றைக்கு நம்முடைய உறவு சாத்தியப்படாதுன்னு நீங்க சொன்னதையே தான், இன்னைக்கு நான் நம்முடைய நட்புக்கு சாத்தியப்படாதுன்னு சொல்றேன். இது பழிவாங்கல் இல்ல; இதுதான் நடைமுறை. அது தான், எல்லாருடைய மன நிம்மதிக்கும் நல்லது. எப்பவும் கிடைக்காத விஷயம் தான், நமக்கு பெருசாத் தெரியும். தன் கூடவே பயணிக்கிற தண்டவாளத்த வெறும் இரும்புதான்னு அதன் மேல் பயணிக்கிற ரயில்கள் உணர்றதேயில்ல. சேர்ந்தே இருந்தும், பிரிந்தே வாழறதா ஏங்கிகிட்டே இருக்கிறதா கவிஞர்கள் எழுதுறாங்க. நிஜமோ பொய்யோ, அப்படியொரு சிந்தனை எல்லாருக்கும் இருக்குதானே.

''காலம் அனுமதிச்சா இன்றைக்கு போலவே, என்றைக்காவது மறுபடியும் நாம சந்திக்கலாம். நான் வரட்டுமா,'' என்று கூறி, விடுவிடுவென இறங்கி, தெருவில் நடந்தாள்.சாந்திக்கு பெருங்குரெலடுத்து அழ வேண்டும் போலிருந்தது. திவாகருக்கு இத்தனை நுணுக்கமும், அறிவும் உள்ள மனுஷியை, ஒரு தோழியாகக் கூட பெற முடிய வில்லையே, என்ற கழிவிரக்கம் தோன்றியது.

என்.பர்வின் பானு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 22, 2014 1:16 pm

அருமையான கதைமா பகிர்வுக்கு நன்றிமா அருமையிருக்கு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 23, 2014 2:00 am

தத்துவம் நிறைந்த கதை .மகிழ்ச்சி
ரமணியன்

(பர்வீன் பானு ,நம்ம ஜாகிதா பானு உறவினரோ ? )

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 23, 2014 2:09 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110421-topic#1065286"]தத்துவம் நிறைந்த கதை .மகிழ்ச்சி
ரமணியன்

(பர்வீன் பானு ,நம்ம ஜாகிதா பானு உறவினரோ ? )

இல்லை ஐயாபுன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக