புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
2 Posts - 17%
heezulia
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
2 Posts - 17%
Ammu Swarnalatha
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
372 Posts - 49%
heezulia
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
238 Posts - 31%
Dr.S.Soundarapandian
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
25 Posts - 3%
prajai
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு யுத்தம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 22, 2014 7:42 am

ஜூனியர் விகடன் இதழில் வெளியாகும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதும் தொடர் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:-

எனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள பன்னாட்டு உணவகம் ஒன்றுக்குப்போயிருந்தேன். விடுமுறை நாள் என்பதால் காத்திருந்து இடம்பிடித்துச் சாப்பிட உட்கார்ந்தோம். மெனுகார்டு கைக்கு வந்தது. புரட்டிபுரட்டிப் பார்த்தேன்.

எனக்குத்தெரிந்த ஒரு உணவின் பெயர்கூட அதில் இல்லை. ஸ்பெகட்டி, சரமுரா, அல்பஸ்தா, க்ரோகுயிட், பேகட் என மாத்திரைப் பெயர்களைப்போல உணவின் பெயர்கள் பயமுறுத்தின. இதில் எந்த உணவைச் சாப்பிடுவது எனத்தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது பிள்ளைகள் அவர்களாக சில உணவுகளைத் தேர்வு செய்தனர்.

இதை எல்லாம் எங்கே சாப்பிடப்பழகினார்கள்? யார் இவர்களுக்கு அறிமுகம் செய்தனர்? என்னைப்போலவே அன்றாடம் வீட்டில் இட்லியும் பொங்கலும் சோறும் சாம்பாரும்தானே சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு இதையெல்லாம் யார் அறிமுகப்படுத்தியது என்று வியப்போடு அவர்களைப்பார்த்தபடி, ‘எப்படித்தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டேன். ‘டிவி விளம்பரத்தில் காட்டுவார்கள்; என்றனர். நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதை டிவி முடிவு செய்கிறது. இதுதான் காலக்கொடுமை.

பிள்ளைகளிடம் உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டேன். இப்போதுதான் நாங்களும் முதன்முறையாகச் சாப்பிடுகிறோம். என்னவோ போல் இருக்கிறது என்றார்கள். அதற்கு அர்த்தம் பிடித்திருக்க்வும் இல்லை; பிடிக்காமல் போகவும் இல்லை.

நான்கு பேர் சாப்பிட்ட இரவு உணவுக்கு 6500 ரூபாய். அந்த பில்லை உற்றுப்பார்த்தபடி இருந்தேன். கணக்குப்பார்க்காதே என்பது போல் பிள்ளைகள் திரும்பி பார்த்தார்கள். உணவகத்தில் பில்லை சரிபார்ப்பது அநாகரிகமான் செயல் என இந்தத் தலைமுறையினர் ஏன் நினைக்கிறார்கள்.

6500 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு. அடித்தட்டுக்குடும்பம் ஒன்று ஒரு மாதம் சாப்பிடுவதற்கான தொகை இது. உணவின் பெயரால் நடக்கும் கொள்ளையை ஏன் அனுமதிக்கிறேன் என்று மனச்சாட்சி கேட்டுக்கொண்டேயிருந்தது.
(தொடரும்)


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 22, 2014 3:56 pm

6500 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு. அடித்தட்டுக்குடும்பம் ஒன்று ஒரு மாதம் சாப்பிடுவதற்கான தொகை இது. உணவின் பெயரால் நடக்கும் கொள்ளையை ஏன் அனுமதிக்கிறேன் என்று மனச்சாட்சி கேட்டுக்கொண்டேயிருந்தது. wrote:

நல்ல பதிவு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 3:58 pm

அதுலயும் அத்தோ,மொய்மொ குய்மொன்னு என்னென்னமோ பேர்ல எப்டித்தான் தின்றாங்களோ?..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 5:04 pm

ரா.ரா3275 wrote:[link="/t110417-topic#1065228"]அதுலயும் அத்தோ,மொய்மொ குய்மொன்னு என்னென்னமோ பேர்ல எப்டித்தான் தின்றாங்களோ?..

சும்மா ஒரு பெருமைக்குத்தான் சேகரன், எதுக்கு பன்னாட்டு உணவகத்துக்கு போகணும் கரேன்? அது வெளிநாட்டவா இங்கு வரும்போது சாப்பிடத்தானே ? இங்கிருந்து அமெரிக்க போனாலும் நம் சாப்பாட்டை தேடித்தேடி சாப்பிடும் நம் ஆட்கள் இங்கு எதுக்கு அங்கெல்லாம் போகணும்? சொல்லுங்கோ ? புன்னகை

போவானேன் அப்புறம் அவாளை குத்தம் சொல்வானேன் ? அங்கு போக 'dress code ' குட இருக்குமே? அத சொல்லலியே அவர் புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 22, 2014 6:30 pm

டை கட்டி
மெனு நீட்டி
பணம் அள்ளும் கூட்டம்
- கையேந்தி பவனே துணை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 22, 2014 10:34 pm

krishnaamma wrote:சும்மா ஒரு பெருமைக்குத்தான் சேகரன், எதுக்கு பன்னாட்டு உணவகத்துக்கு போகணும் கரேன்? அது வெளிநாட்டவா இங்கு வரும்போது சாப்பிடத்தானே ?

பன்னாட்டு உணவகத்துல மட்டும் இல்ல...உள்நாட்டு உணவகத்துலயும் இதே கதைதான். நம்ம ஆளுங்களுக்கு நம்ம மொழியில சொன்னா எதுவும் பிடிக்காது.

சாம்பார் சாதம் தயிர் சாதம்னு சொன்னா பிடிக்காது...பிஸிபேலாபாத் பகாளாபாத்னு சொல்லிப்பாருங்க. நல்லாயிருக்கும்னு சொல்லுவான்.
உலகிலேயே 'தன்பெருமை தெரியாத அறிவிலிகள்' தமிழர்கள் மட்டும்தான்.


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 10:38 pm

சாமி wrote:[link="/t110417-topic#1065274"]
krishnaamma wrote:சும்மா ஒரு பெருமைக்குத்தான் சேகரன், எதுக்கு பன்னாட்டு உணவகத்துக்கு போகணும் கரேன்? அது வெளிநாட்டவா இங்கு வரும்போது சாப்பிடத்தானே ?

பன்னாட்டு உணவகத்துல மட்டும் இல்ல...உள்நாட்டு உணவகத்துலயும் இதே கதைதான். நம்ம ஆளுங்களுக்கு நம்ம மொழியில சொன்னா எதுவும் பிடிக்காது.

சாம்பார் சாதம் தயிர் சாதம்னு சொன்னா பிடிக்காது...பிஸிபேலாபாத் பகாளாபாத்னு சொல்லிப்பாருங்க. நல்லாயிருக்கும்னு சொல்லுவான்.
உலகிலேயே 'தன்பெருமை தெரியாத அறிவிலிகள்' தமிழர்கள் மட்டும்தான்.

சரியான சவுக்கு சொடுக்கு இது சாமி...

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 23, 2014 6:00 am

2. உணவு யுத்தம்! LTJlFnZRhiiAJw4MZHIG+ht2093

வீட்டுக்குப்போய் பழைய சோறும் தயிரும் ஊறுகாயும் சாப்பிடவேண்டும் என்று பசி இழுத்துக் கொன்டிருந்தது. வீட்டுக்கு வந்து சோறும் தயிறும் சாப்பிட்ட போது பிள்ளைகள், “உங்களை எல்லாம் பன்னாட்டு உணவகத்துக்கு அழைத்துப்போனது வீண். நீங்கள் இட்லி சாப்பிடத்தான் லாயக்கு” என்று கேலி செய்து சிரித்தார்கள்.

இட்லி சாப்பிடுகிற மனிதன் ஏன் இளக்காரமாகப் பார்க்கப்படுகிறான். இட்லி, சோறு, களி, கம்பங்கூழ், குதிரைவாலிச்சோறு என்று அவரவர் வாழ்விடத்தில் கிடைத்த உணவுகள் ஏன் இன்று பரிகசிக்கப்படும் உணவாக மாறிப்போய்விட்டன?

சோறு என்ற சொல்லை சென்னையில் பெரும்பாலும் பயன்படுத்துவதே இல்லை. ரைஸ் என்றுதான் கேட்கிறார்கள். சாப்பிடுகிற சோறை சொல்வதற்கு கூசுகிற மனிதனை எப்படிப்புரிந்து கொள்வது?
சோறு என்பதற்கு
அடிசில்,
கூழ்,
அழினி,
அவிழ்,
கொன்றி,
நிமிரல்,
புழுங்கல்,
பொம்மன்,
மிதவை

எனப்பல சொற்கள் தமிழில் உள்ளன.

நீர்கலந்த சோற்றுப்பருக்கையை கஞ்சி என்கிறோம். கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் மூன்று வேறு சொற்களைக்கூறுகிறது பிங்கல நிகண்டு. ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, மெல்லடை, கும்மாயம், ஊன்துவை அடிசில், புளியங்கூழ் என பழந்தமிழ் மக்கள் சாப்பிட்ட உணவுகள் என்னவென்று கூட இன்றைய தமிழருக்குத் தெரியாது.

உணவு யுத்தம்! Y79aVcHwTpCSKijpeoEn+idli

இட்லி சாப்பிடுவதால் உள்ள நன்மை இளந்தலைமுறைக்குத் தெரியாது. அது ஆவியில் வேகும் எளிமையான உணவு. அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து அரைத்து, மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இதனால் உடலுக்குத்தேவையான தாது உப்புகளும் அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன.

திசுக்களைப்புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரக செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் 10 மடங்கும் அதிகரிக்கின்றன. உலகின் மிகச்சிறந்த காலை உணவில் இட்லி சிறந்த ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இன்று கடைகளில் உடனடி இட்லி, தோசை மாவு விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் சில நிறுவனங்கள் மாவு புளித்துப்போகாமல் இருக்க போரிக் ஆசிட் மற்றும் ஆரூட் மாவு கலக்கிறார்கள்.

உணவுப்பழக்கம் தானாக மாறவில்லை. அதைத்திட்டமிட்டு மாற்றுகிறார்கள். உணவுச்சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிப்பதற்காக புதிய உணவு ரகங்களை அதன் நன்மை தீமை பற்றி எவ்விதமான கவலையும் இன்று விற்றுத்தள்ளுகிறார்கள். காலனி ஆதிக்கம் தொடங்கி வைத்த இந்த மோசடி இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

இன்று உணவு வெறும் சாப்பாட்டு விசயம் இல்லை. அது பெரிய சந்தை. கோடி கோடியாக பணம் புரளும் பன்னாட்டு விற்பனைக்களம். நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதை அமெரிக்காவில் உட்கார்ந்து தீர்மானிக்கிறான். உணவு குறித்து விதவிதமான பொய்களைப் பரப்புகிறார்கள். நகரம், கிராமம் என பேதமில்லாமல் ஜங்க்ஃபுட் எனப்படும் சக்கை உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.

உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் ஏமாற்றப்படுகிறோம்.

(தொடரும்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 24, 2014 12:53 pm

உணவு யுத்தம்! 103459460 உணவு யுத்தம்! 1571444738 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக