புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
32 Posts - 42%
ayyasamy ram
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
1 Post - 1%
jothi64
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
398 Posts - 49%
heezulia
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
26 Posts - 3%
prajai
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_m10தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!


   
   

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :




தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 23, 2023 10:56 pm



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 24, 2023 12:01 am

பிரதமர் மோடிக்கு விருதுகள் வழங்கி பசிபிக் நாடுகள் கவுரவம்


போர்ட் மோர்ஸ்பி,- பிஜி, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள், தங்களது நாட்டின் உயரிய விருதுகளை, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவித்தன.

'தெற்கு உலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமையில், அணி திரள்வோம்' என்றும் பசிபிக் நாடுகள் உறுதி அளித்துள்ளன.



ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலாவதாக, கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு சென்ற பிரதமர் மோடி, 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்றார். அங்கு, அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.

இந்த பயணத்தை முடித்த பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு, இந்திய - -பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு முதன் முறையாக சென்றார்.

அங்கு அவரை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரோப், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கினார்.

இந்நிலையில், நேற்று நடந்த இந்திய - -பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தியா - 14 பசிபிக் தீவு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் மேம்படுத்துவது குறித்து அவர் ஆலோசனைநடத்தினார்.

இதில், பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மாரோப் பேசியதாவது:

வலிமையான குரல்


தெற்கு உலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமையில், நாங்கள் அணி திரள்வோம். ஜி - 20, ஜி - 7 போன்ற சர்வதேச அமைப்புகளில், சிறிய நாடுகளுக்கான வலிமையான குரலாக இந்தியா ஒலிக்க வேண்டும்.

பசிபிக் தீவு நாடுகள் சிறியதாகவும், எண்ணிக்கையில் குறைந்ததாகவும் இருக்கலாம். ஆனால், பசிபிக் பிராந்தியத்தில் நாங்கள் பெரிய நாடுகள். வர்த்தகம், சுற்றுலா போன்றவற்றுக்காக உலகம் எங்களை பயன்படுத்திக் கொள்கிறது.

தெற்கு உலகின் தலைவராக இந்திய பிரதமர் மோடி இருக்கிறார். சர்வதேச விவகாரங்களில்அவரது தலைமையை ஏற்று பின்தொடருவோம். பசிபிக் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தெற்கு உலகின் தலைவரான பிரதமர் மோடி ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, அரசு மாளிகையில் நடந்த விழாவில், பப்புவா நியூ கினியா கவர்னர் ஜெனரல் சர் பாப் தாடே, அந்நாட்டின் உயரிய விருதான, 'கிராண்ட் கம்பானியன் ஆப் ஆர்டர் ஆப் லோகோஹு' விருதை, பிரதமர் மோடிக்குவழங்கினார்.

பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்கான காரணத்திற்காகவும், உலகளாவிய தெற்கின் காரணத்தை முன்னெடுத்து சென்றதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டதாக பப்புவா நியூ கினியா அரசு தெரிவித்தது. அமெரிக்க முன்னாள்அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட ஒரு சிலரே இந்த விருதை பெற்றுள்ளனர்.

வரவேற்பு


முன்னதாக, பிஜி நாட்டின் உயரிய விருதான, 'கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி' விருதை, அந்நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகா, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

பப்புவா நியூ கினியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி, சிறப்பு விமானம் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பேனிஸ் வரவேற்றார்.

மேலும், பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 8:14 pm

தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 SFrKKsW

46 வருடங்களாக தில்லியில் வசிக்கும் ஒரு தமிழன் கூறுகிறேன்.

ஒரு தமிழன் பிரதமராக இருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி இருக்கமாட்டான்.

எங்கும் தமிழ்....

எதிலும் தமிழ்...

வர்ணனையிலும் #தமிழ்

வார்த்தைகளும் தமிழ்....

வாத்தியமும் தமிழ்...

வேதமும் தமிழ்....

மொத்த தில்லியும்..... தமிழ்..

நாடு முழுவதும்... ஏன் உலகம் முழுவதும் #செங்கோல் #தமிழ்...

தென்னாடுய சிவனே போற்றி...

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

என்ற வானம் அதிர எழுந்த கோஷம்..

அங்கு திடீர் என்று ஒரு கோஷம் எழுந்தது பாருங்கள்...

அது என்ன தெரியுமா????

நம் #தமிழின் செல்ல பிள்ளை..

"வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" "கோஷமே ஆகும்.

பாரத் மாதா கி ஜெய்...

வந்தே மாதரம்...

ஜெய் பாரத்.....

ஜெய் ஹிந்த்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 8:17 pm


"இந்த தேசத்தின் அதிபதியான காசி விஸ்வநாதனுக்காக இந்த ஆலயத்தை நிர்மானித்திருக்கின்றேன்

ராஜ்ஜியங்கள் மாறும், ஆலயங்களை பராமரிப்பதும் சுலபம் அல்ல‌

யார் இந்த தேசத்தையும் இந்த மண்ணையும் இந்த மதத்தையும் மிகவும் நேசித்து வாழ்ந்து, காலத்தால் இந்த ஆலயமும் நாடும் பாழ்படுமாயின் அதை சீரமைப்பானோ அவன் காலில் நான் விழுந்து வணங்குகின்றேன்"

தென்காசி கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியன் தன் வாக்குமூலமாக அங்கே வைத்திருக்கும் கல்வெட்டு

அந்த காட்சிகளெல்லாம் நினைவுக்கு வரும் நேரம், இந்த ஆதீனங்களும் அந்த செங்கோலும் அந்த தேவாரமும் ராஜராஜ்சோழன் படத்தில் கவிஞர் எழுதிய அற்புதமான பாடலை நினைவுபடுத்துகின்றது

டெல்லியில் தேவாரம் முழங்கும் நேரம் தில்லையில் நடந்த அந்த காட்சியும் அந்த பாடலும் ஆயிரமாயிரம் நினைவுகளை கிளறுகின்றன

டெல்லிக்கும் தில்லைக்குமான பெருந்தொடர்பை திருமூலர் வடக்கே காஷ்மீரில் இருந்து வந்து திருவாவடுதுறையில் சமாதியானதை , அப்படியே தமிழக குமரகுருபரரும் கோரக்கரும் வடக்கே சென்று மடம் அமைத்ததை கண்முன் காட்டுகின்றன‌

கவிஞரின் பாடல் டெல்லியில் இன்று நடந்த அந்த மாபெரும் வரலாற்று நிகழ்வுக்கு, தமிழ் ஆயிரமாண்டு கழிந்து அங்கே அரங்கேறிய பெருமைக்கு, தேவாரம் கம்பீரமாக ஒலித்த அந்த நிகழ்வுக்கு பெரிதும் பொருந்தும்

"ஏடு தந்தானடி தில்லையிலே – அதை
பாட வந்தேன் அவன் எல்லையிலே

இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட

ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் – அந்த
பாட்டையும் அவனே பாட வைத்தான்
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் – அவன்
நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் – ஒரு
தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை

அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே – திரு
அருளுடன் பாடிய தேவாரமே
இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை
செப்பிடும் சோழரின் பெருங்குலம"

மனம் அப்படியே சிலிர்த்து உருகி இந்த காட்சியினை விட்டு வரமறுக்கின்றது, ஆயிரம் ஆண்டுகாலம் அடக்கி வைக்கபட்ட காவேரி அணைகடந்து ஆர்பரிக்கும் நேரமிது

அது கண்களில் பெரும் ஆனந்தத்தோடு கொட்டும் நேரமிது, அதை தவிர ஏதும் சிந்தைக்கும் செயலுக்கும் வரமுடியாத நேரம், ஆனந்தத்தில் அழுதே தீரவேண்டிய புண்ணிய காலம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 8:53 pm

எமர்ஜென்சி: ``நமது வரலாற்றில் மறக்க முடியாத காலம்!" - பிரதமர் மோடி



எமர்ஜென்சி அறிவித்த தினத்தை உத்தரபிரதேச மாநில பா.ஜ.க அரசு கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. அரசுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எமர்ஜென்சி காலத்தில் சிறைவாசம் அனுபவித்தனர். சிறையில் கொடுமைகளை எதிர்கொண்டனர். எமர்ஜென்சி அறிவித்த தினத்தை உத்தரபிரதேச மாநில பா.ஜ.க அரசு கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.

இந்த நிலையில், எமர்ஜென்சி காலத்தில் நடந்தவைகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, "அந்தக் காலத்தை மறக்கவே முடியாது” என தெரிவித்திருக்கிறார். இது குறித்தது தனது ட்வீட்டர் பக்கத்தில், "எமர்ஜென்சியை எதிர்த்து நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்த உழைத்த துணிச்சல் மிக்க அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன். எமர்ஜென்சியின் இருண்ட நாள்கள் நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. எமர்ஜென்சி நமது அரசியலமைப்பு சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 8:54 pm

பிரதமர் மோடியை சந்தித்த சுந்தர் பிச்சை..! சிறிது நேரத்தில் வெளியான அறிவிப்பு!



அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசிய சில மணி நேரங்களில் முக்கிய அறிவிப்பை வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் சந்தித்து பேசி வருகின்றனர். முன்னதாக உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியரான கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தார். அப்போது கூகிள் இந்தியாவில் முதலீடு செய்வது மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து பின்னர் பேட்டியளித்த சுந்தர் பிச்சை, இந்தியாவில் கூகிளின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 28 ஆயிரம் கோடி) முதலீடு செய்ய உள்ளதாக பிரதமரிடம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் கிஃப்ட் தொழில்நுட்ப நகரத்தில் கூகிள் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனம் அமைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூகிள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்ப்புகளை முற்றிலும் இந்தியாவிலிருந்து செயல்படுத்த திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 9:10 pm

பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் வாங்க போட்டி போட்ட அமெரிக்க எம்பிக்கள்..!



பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அங்கு பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மோடி அமெரிக்க சென்றுள்ளார் என்பதும், அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் அமெரிக்காவில் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசிய பின்னர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டனர். பிரதமர் மோடி பொறுமையாக அனைத்து எம்பிகளுக்கும் கையெழுத்து போட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இதுவரை எந்த இந்திய பிரதமருக்கும் இல்லாத வகையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியதை அந்நாட்டு ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 9:12 pm

அமெரிக்காவில் ‘நாட்டு நாட்டு’, இந்தியாவில் ‘ஸ்பைடர்மேன்’: பிரதமர் மோடியின் கலகல பேச்சு..!



அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் நாட்டு நாட்டு பாடலை பாடுகின்றனர் என்றும் இந்தியாவில் உள்ள ஒரு இளைஞர்கள் ஸ்பைடர் மேன் படத்தை பார்த்து ரசிக்கின்றனர் என்றும் அமெரிக்கா சென்று உள்ள பிரதமர் மோடி கலகலப்பாக பேசி உள்ளார்.

இதில் இருந்து இந்தியா அமெரிக்கா இடையே கலாச்சார பரிமாற்றம் உள்ளது என்பது தெரிய வருகிறது என்றும் அமெரிக்க அரசு நடத்திய விருந்து நிகழ்வில் பிரதமர் மோடி பேசினார்.

மேலும் ஜனநாயக உணர்வின் பரிணாம வளர்ச்சியில், இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, சமத்துவம், கண்ணியத்தை ஜனநாயகம் அங்கீகரிக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகள் உள்ளன, பல்வேறு மாநிலங்களில் சுமார் 20 வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன, இந்தியாவில் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கிளைமொழிகள் உள்ளன, இருப்பினும் நாங்கள் ஒரே குரலில் பேசுகிறோம் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசினார்,.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 9:49 pm

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘ஆர்டர் ஆஃப் நைல்’ விருது: எகிப்து கௌரவம்



தமிழின் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 12 Msid-101258972,imgsize-678797

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு கெய்ரோவில் இருந்து புது தில்லிக்கு புறப்பட்டார்.
இருதரப்பு கூட்டுறவை மேம்படுத்தும் நோக்கில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியும் மோடிக்கு நாட்டின் உயரிய அரச விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.

முன்னதாக, எகிப்து சென்றுள்ள மோடியை எல்-சிசி ஜனாதிபதி மாளிகையில் வரவேற்றார், அங்கு இரு தலைவர்களும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசினர். இந்தியாவின் தாவூதி போஹ்ரா சமூகத்தின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்ட கெய்ரோவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 11ஆம் நூற்றாண்டின் அல்-ஹக்கிம் மசூதியையும் மோடி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

பின்னர் கெய்ரோவின் ஹெலியோபோலிஸ் போர் கல்லறையில் எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

26 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் இருதரப்புப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். மோடி தனது முதல் எகிப்து பயணத்தின்போது, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பூலியுடன் கலந்துரையாடினார்.

மோடியுடனான சந்திப்பில் மட்பூலி தலைமையிலான 7 எகிப்திய அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவுடனான உறவை மேலும் மேம்படுத்துவதற்காக மார்ச் மாதம் ஜனாதிபதி எல்-சிசியால் அமைக்கப்பட்ட உயர்மட்ட அமைச்சர்கள் குழுவான இந்திய யூனிட்டுடனான சந்திப்பு இதுவாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 9:57 pm

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை-யில் தமிழ் இருக்கை: பிரதமர் மோடி அறிவிப்பு



அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு நிதியுதவி உடன் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக, அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். இரு நாட்டு உறவு மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- மோடி இருவரும் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தானது.

மோடியின் இந்த அமெரிக்க பயணம் மிகவும் முக்கியமானது. இது ஒரு மைல்கல் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி நேற்று பேசுகையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும். மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்றார்.

மேலும், இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு நன்றி. இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை ஜோ பைடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்த செல்ல முயல்கிறார். இந்தியர்களின் பணிக்காக வழங்கப்படும் எச்1 பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என்று கூறினார்.

இந்தியா- அமெரிக்கா கூட்டறிக்கையில் பிரதமர் மோடி கூறுகையில், “இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். இந்தியாவில் கூகுளின் ஏ.ஐ ஆராய்ச்சி மையம் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகிறது. இந்திய அரசின் உதவியுடன், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும் என்றார்.

இந்தியாவில் முடிந்தவரை முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். இந்தியாவில் கூகுளின் AI ஆராய்ச்சி மையம் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வேலை செய்யும். இந்திய அரசின் உதவியுடன், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் பிரதமர் மோடி பேசுகையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றார்.

மேலும், ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலை மேம்படுத்த சிகாகோ பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் இருக்கை மீண்டும் நிறுவப்படும் என்றும் கூறினார்.

Sponsored content

PostSponsored content



Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக