புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Page 10 of 26 •
Page 10 of 26 • 1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !

மேற்கோள் செய்த பதிவு: 1080556ராஜா wrote:அன்புள்ள டாக்டர் சாந்தாராம் ஐயா அவர்களுக்கு , மிக அருமையான ஒரு பொக்கிஷத்தை எங்களுக்கு வாரி வழங்கி கொண்டு உள்ளீர் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. தொடர்ந்து இது போல உங்களின் சிறப்பான பதிவுகள் ஈகரையை அலங்கரிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
-ராஜா
அன்புள்ள திரு .ராஜா அவர்களுக்கு ,
வணக்கம் !
எனக்கு நன்றி சொல்லவேண்டாம் , ராஜா சார் !
தொடர்ந்து படியுங்கள் !
அது போதும் எனக்கு !
தமிழ்த்திரைப்பட உலகம் ஒரு கடல் !
அதில் இருந்து சில துளிகள் தான் நான் தருகிறேன் ,
இன்னும் பல வருடங்கள் எழுதினாலும்
'இந்த கடல் '
வற்றாது !
என்ன, எழூதுவதற்கு எனக்கு ஆயுசு மற்றும் " தாவு " தேவை !
( " தாவு " = சக்தி ! )
உங்கள் மடலுக்கு நன்றி , ராஜா சார் !
எம்கேஆர்சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அன்பு நிறைந்த டாக்டர் சாந்தாராம் அவர்களே, உங்களுது இத்தொடர் அப்படியே நிற்கிறது, தயவு செய்து தொடருங்கள். நல்ல தகவல்கள் தொடர வேண்டும் உங்களது விருப்பமும் அதுதானே. தொடருங்கள், நன்றியுடன் காத்திருக்கிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1085037மாணிக்கம் நடேசன் wrote:அன்பு நிறைந்த டாக்டர் சாந்தாராம் அவர்களே, உங்களுது இத்தொடர் அப்படியே நிற்கிறது, தயவு செய்து தொடருங்கள். நல்ல தகவல்கள் தொடர வேண்டும் உங்களது விருப்பமும் அதுதானே. தொடருங்கள், நன்றியுடன் காத்திருக்கிறோம்.
ஆமாம் ஐயா , தொடருங்கள் இது எங்களின் அன்பு கட்டளை
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1080701ஜாஹீதாபானு wrote:அருமையான தகவல்கள் சாந்தாராம் அண்ணா... தொடர்ந்து இது போல அரிய தகவல்களை பதிவு செய்யுங்கள்.
சகோதரி ஜாஹிதா பானு அவர்களுக்கு ,
தங்களின் மடலுக்கு நன்றி !
எனது அடுத்த கட்டுரை இன்று மாலைக்குள் !
நன்றியுடன் !
எம்கே ஆர் சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1080703ஸ்ரீரங்கா wrote:
மிக்க நன்றி ,
திரு. ஸ்ரீ ரங்கா அவர்களே.
எம்கே ஆர்சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1080721Dr.S.Soundarapandian wrote:காணக் கிடைக்காத புகைப்படங்கள் , கேட்டறியாத வரலாறுகள் , இளைய தலைமுறை அறிய வேண்டிய சமுதாய நுட்பங்கள் , இப்படிப் பலகோணங்களில் பயனுள்ளவை சாந்தாராம் அவர்களுடைய பதிவுகள் !
இன்னும் தாருங்கள் சாந்தாராம் அவர்களே !
அன்புள்ள டாக்டர் . செளந்தர பாண்டியன் அவர்களுக்கு,
உங்களின் மடலுக்கு மிக்க நன்றி !
நீங்களும் என்னுடைய கட்டுரையை படித்து வருவது
எனக்கு பெருமையாக உள்ளது !
உங்களின் விருப்பம் போலவே நான் தொடர்ந்து எழுதுவேன் !
தொடர்ந்து படித்து உங்களின் எண்ணங்களை எழுதினால்
மகிழ்ச்சி அடைவேன் !
நன்றியுடன்,
எம்கே ஆர்சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1085214ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085037மாணிக்கம் நடேசன் wrote:அன்பு நிறைந்த டாக்டர் சாந்தாராம் அவர்களே, உங்களுது இத்தொடர் அப்படியே நிற்கிறது, தயவு செய்து தொடருங்கள். நல்ல தகவல்கள் தொடர வேண்டும் உங்களது விருப்பமும் அதுதானே. தொடருங்கள், நன்றியுடன் காத்திருக்கிறோம்.
ஆமாம் ஐயா , தொடருங்கள் இது எங்களின் அன்பு கட்டளை
திரு . மாணிக்கம் நடேசன் ,
மற்றும்
திரு . ராஜா அவர்களுக்கு ,
" சாந்தி " - " யார் அந்த நிலவு " கட்டுரை சற்று
நீளமானவை .....
எனவே நேரம் அதிகம் எடுத்துக்கொண்டேன் !
தாமதம் செய்ததற்கு மன்னிக்கவும் !
இதோ இன்று மாலை .....
நன்றி !
எம்கே ஆர் சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
தொகுப்பு - 5
எனக்குப் பிடித்த
திரைப்படப் பாடல் :
" யார் அந்த நிலவு ,
என் இந்த கனவு ? "
( படம் : " சாந்தி " ( 1965 ) )
திரைப்படப் பாடல் :
" யார் அந்த நிலவு ,
என் இந்த கனவு ? "
( படம் : " சாந்தி " ( 1965 ) )
தமிழ்த் திரைப்படங்களில் - சரியாக சொல்ல
முடியாவிட்டாலும் - ' குத்து' ( ! ) மதிப்பாக - கிட்டதட்ட :
60, 000 பாடல்களாவது தேறும் !
.....அவைகளில்.....
" யார் அந்த நிலவு - ஏன் இந்த கனவு ? "
பாடலை மட்டும் - அதுவும் ஒரே ஒரு பாடலாக நான் தேர்வு
செய்ய என்ன காரணம் ?
சொல்கிறேன் .....சொல்வதற்குத் தானே இந்த தலைப்பைப்
போட்டு எழுதி உள்ளேன் !
இப்போது தமிழ்த் திரைப்படங்களில் வரும் பாடல்கள்
அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாகத்தான்
வருகின்றன !
அதுவும் பாடல்களில் :
இனிமை - மற்றும் - ' மெலடி' போன்ற என்றும் நிலைக்கும்
'ஐட்டங்களை' புறக்கணித்துவிட்டு :
" இந்த நடிகை பாடினால்......ஹி....ஹி ...மன்னிக்கவும் ...
வாயத் திறந்தால் போதும் ! "
' அந்த நடிகர் இந்த படத்தில் ஒரு பாடலைப் பாடலைப்
பாடுவது போல் " நடித்தாலே" போதும் ! "
என்று நினைத்து செயல்படும் அளவுக்கு பாடல்களை
இசையமைக்கின்றார்கள் !
சில வருடங்களுக்கு முன்பு வந்த " கந்தசாமி " என்கிற படத்தில்
அனைத்துப் பாடல்களை பாடியவர் :
நடிகர் விக்ரம் !
( ' மிஸ். கந்தசாமி ' - விக்ரம் ! )
நீங்களே சொல்லுங்கள் : ' நடிகர் விக்ரம் அவர்களின் நடிப்பை
நாம் ரசிக்க முடியும் - ஆனால் அவர் பாடினால் - அதுவும் - அனைத்துப்
பாடல்களையும் - ரசிக்கவா முடிகிறது ! ?
( " கந்தசாமி " படத்தைக் கூட எங்களால் ரசிக்க
முடியலையே, ஐயா ! "
என்று நீங்கள் அங்கலாய்ப்பத எனக்கு கேட்கிறது - அது வேறு கதை ! )
ஆனால் , அந்த காலத்தில் ?
அது வேறு 'கனாக் காலம் ! '
அந்த காலத்தில் பாடல்களை வடிவமைப்பதில் ஓர்
ஆரோக்கியமான போட்டியே
இருந்தது !
" ஆரோக்கியமான போட்டி " என்றால் என்ன ?
சொல்கிறேன் !
%%%%%%%%%%%%%%%%%%%
பாடல்கள் படத்தில் சிறப்பாக
வருவதில் , அந்த பாடலில் பங்கு கொண்டவர்கள் எந்த வித:
தியாகமும்
செய்யத் தயாராக இருந்தார்கள் !
எடுத்துக்காட்டுக்கள் !
1. " புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே !
தங்கச்சி கண்ணே ! "
- அண்ணன் , தங்கையை அறிவுரை சொல்லும் பாசமிகு பாடல்,
" பானை பிடித்தவள் பாக்கியசாலி " படத்தில்.
திருச்சி லோகநாதன் பாடிய இந்த பாடல் அவருக்கு பெரும் புகழைத்
தந்து.
இதே திருச்சி லோகநாதனை
( திருச்சி லோகநாதன் )
இதே படத்தில் இன்னொரு பாடலான
" சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது "
என்கிற பாடலை பி சுசீலாவுடன் இணைந்து பாட மறுத்து விட்டார் !
காரணம் கேட்டபோது அவர் சொன்ன பதில் :
" தங்கைக்கு அண்ணன் அறிவுரை கூறும் என் குரலை
அதே படத்தில் அந்த தங்கையின் காதலனுக்கு குரல்
கொடுத்தால் அது தவறு, எனவே இந்த பாடலை வேறு
பாடகரை வைத்து இசையமைத்துக் கொள்ளுங்கள் ! "
என்றாராம் !
( " பானை பிடித்தவள் பாக்கியசாலி " படத்தில்
அண்ணன் : டி எஸ் துரைராஜ் - அவரது சொந்தப் படம்.
தங்கை : நடிகைய்ர் திலகம் சாவித்திரி .
காதலன் : கே . பாலாஜி .
காதலனுக்கு குரல் கொடுத்தவர் : சீர்காழி கோவிந்தரராஜன் ! )

**********************
2. " பதி பக்தி " - இந்த படத்தில் முதலில் அனைத்துப்
பாடல்களை எழுத ஒப்பந்தம் ஆனவர் : கவிஞர் மருத காசி !
ஆனால் , படத்தின் கதை சூழலைக் கேட்ட மருத காசி என்ன
சொன்னார் தெரியுமா ?
( கவிஞர் . மருத காசி )
" இந்த ' பதி பக்தி ' படக் கதைக்கு பாடல்களை எழுத
பொருத்தமானவர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்
பொருத்தமானவர், எனவே அவரையே படல்களை எழுதச்
சொல்லுங்கள் ! "
ஆமாம், ' பதி பக்தி ' படத்தின் அனைத்துப் பாடல்களையும்
' பாட்டுக் கோட்டையார்' தான் எழுதினார் !
&&&&&&&&&&&&&&&&&
3. " மன்னாதி மன்னன் " - இந்த படம் ,
கவிஞர் கண்ணதாசனின் சொந்தப் படம் .
அவர் நினைத்திருந்தால் இந்த படத்தில் இடம் பெற்ற
அனைத்துப் பாடல்களையும் அவரே எழுதி இருக்கலாம்,
ஆனால் , இந்த படத்தில் இடம் பெற்ற எம்ஜிஆர் - பத்மினி
போட்டி நடனப் பாடலை
தான் எழுதுவதை விட கவிஞர் மருதகாசியை
விட்டு எழுதினால் அந்த பாடல் எடுபடும் என்று கண்ணதாசன்
எண்ணினார்......ஆமாம் :
" ஆடாத மனமும் உண்டோ ! "
டி எம் எஸ் - எம் எல் வசந்தகுமாரி இணைந்து பாடிய ஒரே
'டூயட்' பாடலை எழுதியவர் : கவிஞர் மருத காசிதான் !

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
4. " பாகப் பிரிவினை " திரைப்படம் :
நடிகர் திலகம் நடித்தது. இந்த படத்தில் ஒரு சோகமான
தாலாட்டுப் பாட்டை படத்தில் நடிகர் திலகம் பாடவேண்டும்.
பாட்டுக்கோட்டையாரை அணுகினார் இயக்குனர் ஏ . பீம்சிங்.
பாட்டுக்கோட்டையார் அவரிடம் என்ன சொன்னார் தெரியுமா !
" தாலாட்டுப் பாடல் - அதுவும் சோகமாதாலாட்டுப் பாடல்
தாலாட்டுப் பாடலுக்கு கவிஞர் கண்ணதாசன் தான் தகுதியானவர் !
எனவே இந்த பாடலை எழுத அவரையே கூப்பிட்டிக்கொள்ளுங்கள் ! "
என்றாராம் !
இந்த காலத்தில் இது மாதிரி நடக்குமா, என்ன !
அப்படி கண்ணதாசன் எழுதிய பாடல்தான் :
" ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாய் ! "

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
5. " சிங்கார வேலனே , தேவா ! "
இந்த பாடலை உங்களால் ......சே ! .... சே ! என்னையும் சேர்த்துக்
கொள்ளுங்கள் !
இந்த பாடலை நம்மால் மறக்க முடியுமா, என்ன !
காருகுரிச்சி அருணாசலத்தின் இனிய நாதாஸ்வர இசையுடன்
" கொஞ்சம் சலங்கை " படப் பாடல் !
இந்த பாடலை முதலில் பிரபல இந்தித்திரைப்பட பாடகி :
லதா மங்கேஷ்கரை வைத்து பாட வடிவேலு சொல்வது போல
" ப்ளான்.......ப்ளான் " பண்ணினார் எஸ் . எம் . எஸ் - அத்தான் -
இந்த ' கொஞ்சும் சலங்கை ' இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா
நாய்டு !
" ஹம்கோ யெ கானா பஹுத் முஷ்கில் ஹை ! "
புரியலை ? ....
" எனக்கு இந்த பாடலைப் பாட மிகவும் கடினம் ! "
என்று லதாஜி கை விரிக்க , பின்னர் மெல்லிசை மன்னரின்
குருநாதர் - அத்தான் - எஸ் . எம் . எஸ் , பிரபல பாடகி
பி .லீலா வை வைத்து பாட ' வடிவேலு ' பண்ணினார் !
பி. லீலா என்ன சொன்னார் தெரியுமா ?
( ' அட என்னய்யா ! இது தெரிந்தால் நான் ஏன்யா உன் கட்டுரையை
நாங்களபடிக்கப் போகிறோம் ! சொல்லித் தொலையும் , அய்யா ! "
என்கிறீர்களா ! சர்த்தான் ! )

( பி . லீலா )
பி. லீலா :
" இந்த பாடலைப் பாடுவதற்கு முற்றிலும் தகுதியானவர் ,
எஸ். ஜானகி தான் ! எனவே அவரையே நீங்கள் வரவழைத்து
பாடவைக்கவும் ! "
இப்போதெல்லாம் இது மாதிரி நடக்குமா !
" இந்த பாடலைப் பாடுவதற்கு முற்றிலும் தகுதியானவர் ,
எஸ். ஜானகி தான் ! எனவே அவரையே நீங்கள் வரவழைத்து
பாடவைக்கவும் ! "
இப்போதெல்லாம் இது மாதிரி நடக்குமா !
#################################
6. பிரபல வீணை வித்வான் எஸ். பாலசந்தர்
படங்களில் பாடுவதிலிலும் திறமை உள்ளவர். அவர் பல படங்களில்
அவர் நடிப்புக்கு அவரே பாடியுள்ளார். ( ' இது நிஜமா' , ' கைதி ' )
ஆனால் , அவர் நடிகர் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த
" பெண் " படத்தில் இடம் பெற்ற " கல்யாணம் ...வேண்டும் வாழ்விலே
கல்யாணம் ! " என்கிற பாடலை அவர் நினைத்தால் அவரே பாடி
இருக்கமுடியும் , ஆனால் அந்த பாடலின் அழகுக்காக தானே
பாடாமல் , பிரபல நடிகர் ஜே. பி . சந்திரபாபுவை வைத்து பாட
வைத்தார் !
( இளமைக் கால ' வீணை' எஸ். பாலசந்தர் - 1950 )
( சந்திரபாபு பாடுவதற்கு முன்னர் இந்த பாடலை இசையமைப்பாளர்
ஆர். சுதர்சனம் முதலில் பாடவைத்த பாடகர் : டி எம் எஸ் ! )/b]

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
7.சரி, இசையமைப்பாளர்கள் எப்படி,
பாடல்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் ?
சர்த்தான் ! நீங்களும் அழகழகாய் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டீர்கள் !
சொல்றேன் !
" திருடாதே " படம், இசை எஸ் எம் சுப்பய்யா நாய்டு !
இந்த படத்தில் ஓர் அழகான 'டூயட்' பாட்டு,
" என் அருகே நீ இருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன் ! "
பி பி எஸ் - சுசீலா பாடிய இந்த பாடலை இசையமைத்தவர்
எஸ் எம் சுப்பய்யா நாய்டு இல்லை !
( இசையமைப்பாளர் எஸ் எம் எஸ் - எஸ் . எம். சுப்பையா நாய்டு ! )
பின்னே ?
மெல்லிசை மன்னர்கள் !
இந்த விஷயத்தை யாரும் , ஏன் , மெல்லிசை மன்னர்களே வாயைத்
திறந்து சொன்னதில்லை......எல்லாம் எங்களைப் போன்ற
' ஆராய்ச்சியாளர்கள் ' ( ! )
கண்டுபிடித்தது !

************************************
8. " மரகதம் " - இந்த பெயரில் நடிகர் திலகம் நடித்த
படம். இந்த படத்தின் இசை : எஸ் எம் சுப்பய்யா நாய்டு.
இந்த படத்தில் இருந்து ஒரு புகழ் பெற்ற பாடல் :
" குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவே, கண்மணி உன்னை கண்டதும்
இன்பம் பொங்குது தன்னாலே ! "
ஜே பி சந்திரபாபுவுடன் கே ஜமுனாராணி பாடும் இந்த பாடலை
அதே நடிகர் திலகர் நடித்த " சபாஷ் மீனா " படத்திற்காக பிரபல
இசையமைப்பாளர் டி .சலபதி ராவ் இசையமைத்து வைத்திருந்தார் !
( மாலையுடன் கண்டசாலா ! அவரை ரசிப்பவர்தான் :
டி. சலபதி ராவ் - ஸ்ரீதரின் ' மீண்ட சொர்க்கம் ' படத்தின் இசையும்
இவர்தான் ! )
இந்த பாடலை நிஜமாகவே ( ! ) சந்திரபாபு , களவாடிச் சென்று ' மரகதம் "
படத்திற்காக எஸ். எம் . எஸ் விடம் கொடுத்து பாடினாராம் !
இது பற்றி சலபதி ராவ் ஒரு சொல் கூட யாரையும் திட்டிப் பேசவில்லை !
தனது பாடல் ஏதோ ஒரு படத்தில் 'ஹிட்' ஆனால் போதும் என்கிற
நல்ல எண்னம்தான் அவருக்கு !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
9. " கூண்டுக்கிளி " - நடிகர் திலகமும்,
மக்கள் திலகமும் இணைந்து நடித்த ஒரே படம் !
இந்த படத்தின் இசை : ' மாமா ' கே. வி . மகாதேவன்.
இந்த படத்தில் இருந்து மகாதேவன் ஒரே ஒரு 'டூயட்' பாடலை
இசையமைத்தார். அந்த பாடலைக் கேட்டதும் எம் ஜி ஆர் உம்
சிவாஜியும் , ' திருவிளையாடல் ' படத்தில் முருகனும் , விநாயகரும்
" பழம் எனக்கு " என்று அடித்துக்கொள்வதைப் போல
" இந்த 'டூயட்' பாட்டு படத்தில் எனக்காக பாடி படமாக்கவேண்டும் ! "
என்று இருவரும் ' அடித்துக்கொள்ளாத ' குறை !
பார்த்தார் ' கூண்டுக்கிளி ' இயக்குனர் டி . ஆர். ராமண்ணா!
" பழம்......ஹி...ஹி..... பாடல் யாருக்கும் இல்லேப்பா ! "
என்று சொல்லி பாடலை தூக்கி 'கடாசி' விட்டார் !
சிவாஜியும் எம்ஜிஆரும் 'கம்' என்று ஆகிவிட்டனர் !
ராண்ணாவி அடுத்த படம் : ' குலேபகாவலி'
எம்ஜிஆர், இந்த படத்தில் 'ஹீரோ' !
எம்ஜிஆர், ராமண்னாவுடம் சென்று 'கூண்டுக்கிளி'
டூயட் பாடலை இந்த படத்தில் தனக்கு வேண்டும் என்று
சொல்ல , காதும் காதும் வைத்தாற்போல ராமண்னா இந்த
பாடலை எம்ஜிஆர் - ஜி. வரலட்சுமி ஜோடிக்கு தாரை வார்த்துக்
கொடுத்தார் !
அந்த பாடல்தான் :
" மயக்கும் மாலை பொழுதே போ போ !
இனிக்கும் இன்ப இரவே வா ! "
ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேனே !
" குலேபகாவலி ' படத்தின் இசை :
மெல்லிசை மன்னர்கள் !
இதைப் பற்றி ' மாமா ' கண்டுகொள்ளவே இல்லை !

( கே . வ. மகாதேவன் )
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
10 . ' எதிர் நீசல் ' ( 1968 ) - நாகேஷ்
நடித்து பாசந்தர் இயக்கிய படம். இசை வி. குமார் !
இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் :
" என்னம்மா பொன்னம்மா பக்கம் வா வா வ வா ! "
நாகேஷ், நாடகம் ஒன்றுக்கு பாடும் பாட்டு !
டி எம் எஸ் - சுசீலா பாடியது !
ஆனால் இந்த பாடலுக்கு இசை : வி . குமார் அல்ல !
பின் யார் ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்னும் சொல்வதற்கு நிறைய
உள்ளன !
ஆக மொத்தம் பாடல்கள் என்றும் நிலைக்க வேண்டும்
என்று அவர்கள் நினைத்ததால்தானே !
இதனால்தான் பழைய பாடல்கள்
என்றும் நம்மிடையே இன்றும்
வாழ்கின்றன !
பழய பாடல்கள் என்றும் வாழும் !
உள்ளன !
ஆக மொத்தம் பாடல்கள் என்றும் நிலைக்க வேண்டும்
என்று அவர்கள் நினைத்ததால்தானே !
இதனால்தான் பழைய பாடல்கள்
என்றும் நம்மிடையே இன்றும்
வாழ்கின்றன !
பழய பாடல்கள் என்றும் வாழும் !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இனி விஷயத்திற்கு
செல்வோமா !
செல்வோமா !
தொடரும்...
எம்கேஆர்சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
" சாந்தி " ' யார் அந்த
நிலவு " ........................தொட்ர்ச்சி !
சரி, " யார் இந்த நிலவு ? "
பாடலின் சிறப்பம்சங்கள் என்ன ? "
என்றா கேட்கிறீர்கள் ?
அந்த சிறப்பம்சங்கள்ளை நான் பட்டியலிடும்
முன்னர் , இந்த பாடல் , ' சாந்தி ' படத்தில் இடம் பெற்ற கதையின்
சூழ்நிலையை ( SITIUATION ) உங்களுக்குத் தெரியவேண்டும் !
அதற்கு.......
" சாந்தி" திரைப்படத்தின் கதையையும் ஓரளவு
தெரிந்து வைத்திருந்தால் நலம் !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%
" சாந்தி "
கதை சுருக்கம் :
நடிகர் திலகமும் , எஸ் . எஸ் . ஆரும் இணை பிரியாத நண்பர்கள் !
" வாழ்ந்து பார்க்கவேண்டும் , அறிவில் மனிதன்
ஆகவேண்டும் ! " என்கிற பாடலை அவர்கள் பாடி மகிழ்கிறார்கள் !
அந்த பாடலை அவர்கள் கல்லூரி நாட்களில்
பாடி மகிகிறார்கள் !
அப்போது......
ஊரில் , எஸ் எஸ் ஆருக்கு திருமண ஏற்பாடு நடக்கின்றது !
அந்த ஊரில் தோழிகள் இருவர் :
தேவிகா - விஜயகுமாரி !
இந்த இருவரில் விஜயகுமாரி இரு விழிகளை இழந்தவர்.
" தனக்கும் திருமணம் நடக்குமா ? " என்று ஏங்கும்
தன்னுடைய பார்வை இல்லாத தோழியான தேவிக ,
விஜயகுமாரிக்கு ஆறுதல்
சொல்லி பாடுகிறார் :
" ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் !
வீடெங்கும் மாவிலைத் தோரணம் ! "
தேவிகா பாடும் பாட்டு !
விஜயகுமாரியின் சித்தப்பாவாக வரும்
' சூபர்' வில்லன் ( ! ) எம் . ஆர் . ராதா, அவர் விழிகளை இழந்தவர் என்கிற
உண்மையைச் சொல்லாமல் , எஸ் . எஸ் . ஆருக்கு பெண் கொடுக்கிறார் !
சரி, அப்போ தேவிகா ' செட் அப் ' யாரூ ? "
என்றா கேட்கிறீர்கள் !
வேறு யார் , நம்ம நடிகர் திலகம்தான் !
" நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் !
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் ! "
பாடலை தேவிகா பாட , அதற்கு ' விசில்' அடிக்கிறார் நடிகர் திலகம் !
தான் மணக்கப் போகும் பெண் இரு விழிகளை
இழந்தவர் என்கிற உண்மையை அறியாத எஸ் . எஸ் . ஆர், தான் பார்க்காத
எதிர்கால மனைவுக்கு.....' காதல் கோட்டை ' - அஜித் - தேவயானை
' ஸ்டைலில்' கடிதங்களில் கவிதைகளை எழுதி மகிழ்கிறார் !
" செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் ! " பாடலை அங்கே எஸ் எஸ் ஆர் பாடுவார்,
அதற்கு 'எசப் பாட்டு' விஜயகுமாரி இங்கே பாடுவார் !
தன் மனைவிக்கு விழிகள் இரண்டும் இல்லை
என்று எஸ் எஸ் ஆர் க்கு தெரியாமல் எம் ஆர் ராதாவின் சூழ்ச்சியால்
திருமணம் நடந்து விடுகிறது.
விஷயம் பின்பு அதாவது , திருமணம் ஆனபிறகு , அறிந்து கொண்ட
எஸ் எஸ் ஆர் கோபம் கொள்கிறார், தான் ஏமாற்றப்பட்டதை
அறிந்து மனைவியை ஏறிட்டும் பார்க்காமல் அவரது ஒரே பொழுது போக்கான
காட்டில் மிருகங்களை வேட்டையாட வெளியேறுகிறார்.

" செந்தூர் முருகன் கோவிலிலே "
சோகப் பாடலை விஜயகுமாரி பாடுகிறார் !
விஷயம் அறிந்த நடிகர் திலகம் , காட்டுக்குள்
சென்று எஸ் எஸ் ஆரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.
எப்படி ?
" உனக்கு திருமணம் ஆன பிறகு உன் மனைவிக்கு கண்களை
இழந்திருந்தால் உன்னால் என்ன செய்ய முடியும் ? அப்படி
நினைத்து நீ இந்த பெண்ணுக்கு வாழ்வு கொடு ! "
என்கிறார் சிவாஜி.
ஆனால் இந்த அறிவுரையை எஸ் எஸ் ஆர் கேட்கவில்லை, தொடர்ந்து
காட்டிலேயே தங்கிவிடுகிறார் !
இந்த சமயத்தில் விஜயகுமாரிக்கு கண் ஆபெரேஷ நடக்கிறது !
ஆபெரேஷன் வெற்றி !
விஜயகுமாரிக்கு பார்வை வந்துவிட்டது !
தன் கணவனைப் பார்க்க மிகவும் விரும்புகிறார் , விஜயகுமாரி !
இந்த நேரத்தில்.......
புலி ஒன்று தாக்கி எஸ் எஸ் ஆரை இழுத்துச் சென்றுவிட்டது அந்த
களீபரத்தில் எஸ் எஸ் ஆர் இறந்து விட்டார் என்கிற சேதி ஊரில்
அடிபடுகிறது !
" எஸ் எஸ் ஆர் மரணத்திற்கு சிவாஜிதான் காரணம் ! " என்கிற
செய்தியை ஊரில் பரப்புகிறார் எம் ஆர் ராதா !
மேற்படி செய்தியை பயன்படுத்தி :
' சிவாஜியை, விஜயகுமாரியின் கணவனாக நடிக்க வேண்டும்,
இல்லையென்றால் எஸ் எஸ் ஆர் மரணத்திற்கு சிவாஜிதான் காரணம்
என்று சிவாஜியை பயமுறுத்து கிறார், ராதா !
வேறு வழி இன்றி தன் நண்பனின் மனவிக்காக , கணவன் மாதிரி
நடிக்க ஆரம்பிக்கிறார் நடிகர் திலகம் !
சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?
இந்த சூழலில் விஜயகுமாரியின் உண்மையான கணவன்
ஆன எஸ் எஸ் ஆர் உயிருடன் ஊருக்கு திரும்புகிறார்!
தன் மனைவிவுடன் தன் உயிர் நண்பன் " குடும்பம் " நடத்துவதை
அறிந்து மனம் வருந்துகிறார் !
இந்த சேதியை சிவாஜி அறிந்து கொண்டு மனம் வருந்துகிறார் !
சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?
இந்த ' கண்ணராவி' யை தேவிகாவும் காண்கிறார் !
தேவிகா அறிந்து விட்டதை சிவாஜி அறிந்து மனம்
வருந்துகிறார் !
சிவாஜியின் மன நிலை எப்படி இருக்கும் ?
" யார் அந்த நிலவு "
பாடல் இந்த சூழலில்தான் நடிகர் திலகம்
பாடுகிறார் !
இப்போது, ' யார் இந்த நிலவு '
பாடல் படத்தில் இடம் பெற வேண்டுமான, சும்மா கானா பாலா
மாதிரி ஒருவரை அழைத்து வந்து ' கெக்கே - பிக்கே ' என்று
' துள்ளல் இசை ' என்று படு நாகரீகமாக சொல்லிக்
கொள்ளும் ' டப்பாங்குத்து ' பாடலைப் போட்டால் அது
நன்றாகவா இருக்கும் !
கதையின் இந்த சூழ்நிலைக்கு , நடிகர் திலகம் ஏற்றிருக்கும்
கதாபாத்திரத்தின் மன நிலையை அந்த பாடல்
வெளிப்படுத்தவேண்டும்......
சரி, அந்த கதாபாத்திரத்தின் மனநிலை என்ன ?
சொல்றேன்!
1. தன் நண்பனின் மனைவுக்கு கணவன் ஆக , நிர்பந்த சூநிலையில்
நடிக்க வேண்டும்....
அது :
குற்ற உணர்வு ( GUILTY CONSCIOUS )
2. தான் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையை தான் காதலிக்கும்
பெண்ணுக்கு தெரியவந்தால் அதனால் ஏற்பட்ட :
அச்சம் - பய உணர்வு .
3. தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்கிற
சோகம் .
4. அதனால் ஏற்படும்
விரக்தி
5. தன் நண்பனுக்கு விஷயம் தெரிந்தால் தன்னை தவறாக
எண்ணுவானே என்கிற :
ஆதங்கம்
6. ஆக மொத்தத்தில் , ' தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே ,
இன்னும் இதைவிட என்ன ஆகணும் ! '
என்கிற :
அலட்சியம் !
இந்த மாதிரியான
உணர்ச்சிக் கலவை யை அந்த பாடலில்
வெளிப்படுத்த வேண்டும் !
இயக்குனர் ஏ பீம்சிங் க்கு அந்த பாடலை
தான் நினைத்தபடி வெளிக்கொண்டு வர நினைத்தார்.
அதில் வெற்றி கண்டாரா ?
வெற்றி கண்டார், பாடலும் வெற்றி !
ஆனால் , தான் நினைத்தவாறு ஒரு பாடலைத்
தர அவர் மட்டும் எண்ணிவிட்டால் அது நடக்காது.....
பாடலை உருவாக்கும் :
" தாய்மார்கள் " ( ! )
அத்தான்,
1. பாடலாசிரியர்
2. இசையமைப் பாளர்
3. பாடகர்
4. மற்றும்
பாடல் காட்சியில் நடிப்பவர் !
மேற்கண்டவர்கள் :
அதாவது :
1. பாடலாசிரியர் : கண்ணதாசன்,
2. இசையமைப்பாளர்கள் : மெல்லிசை மன்னர்கள்
3. பாடகர் : டி எம் எஸ்
4. நடிகர் : நடிகர் திலகம் .....
இவர்களின் ' ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத.....
ஆனால்.....ஆரோக்கியமான பொறாமை இல்லாத
போட்டியால் பாடல் வெற்றி பெற்றது !
எப்படி ?
சொல்றேன்
" யார் அந்த நிலவு "
பாடலை எழுதிய : கவிஞர்
கண்னதாசன் :
" படகோட்டி " பாடல்களுக்குப் பிறகு எம்ஜிஆர் இன்
அனைத்துப் படங்களுக்கும் பாடல்களை எழுதியர் :கவிஞர் வாலி !
( தேவர் மற்றும் ஜி என் வேலுமணி படங்களுக்கு மட்டும் இதற்கு
விதிவிலக்கு ! கண்ணதாசன் தான் பாட்டு எழுதுவார் ! )
எனவே, கண்னதாசன் நிறைய சிவாஜி படங்களுக்கும் மற்ற
நடிகர்கள் படங்களுக்கும் பாடல்களை எழுதி குவித்தார் !
அதிலும் சிவாஜி படங்களுக்கு - அதிலும் - " ப' பட இயக்குனர்
பீம்சிங் இயக்கும் படங்களுக்கு அதிக கவனம் செலுத்தி பாடல்
களை எழுதி குவித்தார் !
" சாந்தி " படத்தில் " யார் அந்த நிலவு " பாடலுக்கான
சூழ்நிலையை இயக்குமர் பீம்சிங் இடம் இருந்து கேட்டு அறிந்து
பின்னர் அழகு தமிழில் சொற்களை அமைத்து பாடலை
எழுதினார் !
ஒண்ணும் வாணாம் ! ( சென்னை தமிழ் ! )
படத்தைப் பார்க்கவேண்டாம் !
பாடகரின் குரல் வளத்தில் கவனம் செலுத்த வேண்டாம் !
இசையமைப்பில் கவனம் செலுத்த வேண்டாம் !
வெறும் பாடல் வரிகளை மட்டும் கேட்டாலே போதும் ,
'சாந்தி ' படத்தின் கதையமைப்பை நீங்கள் புரிந்து
கொள்ளமுடியும் !
எடுத்துக்காட்டுக்கள் :
" மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை "
இந்த வரிகளைப் படித்தாலே 'சாந்தி ' படத்தின்
கதை போக்கை ஓரளவு நாம் புரிந்து கொள்ளமுடியும் !
" காலம் செய்த கோலாம் இங்கு நான் வந்த வரவு ! "
மேற்கண்ட வரிகளைப் படித்தாலே படத்தில்
நடிகர் திலகத்தின் சூழ்நிலை புரிய வரும் !
" உன் கோவிலின் தீபம் மாறியதை நீ அறிவாயோ ! "
" தீபம் மாறியது " என்பது எதனைக் குறிக்கின்றது என்பது உங்களுக்கு
புரியும் !
இப்படி வெறும் வார்த்தைகளால்நாகரீகமாக எளிதாக சொல்ல முடியாத
" கணவன் - மனைவி " சமாச்சாரத்தை பாடல் வரிகளைக்
கொண்டே மிக அழகாக விளக்கிய பெருமை கவியரசர்
கண்ணதாசனையே சாரும் !
' யார் இந்த நிலவு '
பாடலுக்கு இசை : மெல்லிசை மன்னர்கள் :
மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்கும் மற்ற இசையமைப்
பாளர்களின் பாடல்களுக்கும் இருக்கும் :
ஒரே ஒரு வித்தியாசம்
என்ன தெரியுமா ?
சொல்றேன் !
" மெல்லிசை மன்னர்களின் ஒவ்வொரு பாடலும் அவர்கள் இசையமைத்த
வேறு எந்த பாடல்களுடன் ஒப்பிடாமல்
தனித்து
விளங்குவது தான் அந்த வித்தியாசம் !
( இந்த 'மேட்டரை' பின்னர் வேறு சமயத்தில் விரிவாக
சொல்கிறேன் ! )
" யார் இந்த நிலவு " பாடலும் இப்படித்தான், அவர்களின் ஏனைய
பாடல்களையும் தனித்தும் இணை இல்லாததாகவும்
சிறந்து விளங்குகிறது !
முதலில் இந்த பாடல் இடம் பெறும் ' சிடுவேஷன்' ஐ கூர்ந்து கவனித்த
இசையமைப்பாளர்கள் , இந்த பாடலுக்கு இசையமைக்க
மேலை நாட்டு இசை பாணியை பின்பற்றி இசையமைத்தால்
நல்லது என்று முடிவு எடுத்தார்கள் !
சரியாரைப் பாட வைப்பது ?
இதில் என்ன குழப்பம் , ஸ்வாமி !
அந்த கால கட்டத்தில் நடிகர் திலகத்திற்கு பின்ணனி கொடுப்பவர் :
டி எம் எஸ் தானே !
அதில்தானே குழப்பம் , ஸ்வாமி !
' என்னய்யா அந்த குழப்பம் ' ?
என்கிறீர்களா ?
" டி எம் எஸ் அவர்களுக்கு மேற்கத்திய பாணியில் பாட இயலுமா ? "
என்பதுதான் மெல்லிசை மன்னர்களுக்கு
குழப்பம் !
எனினும் வேறு பாடகரை வைத்து , தாங்கள் நினைப்பது போல்
மேற்கத்திய பாணியில் இந்த பாடலை தங்களால் பாட
வைத்து பாடலை வெற்றி பெற முடியும் !
ஆனால்.......நடிகர் திலகம் அதற்கு உடன்படாவிட்டால் ?
" விச்சு ! திரைப்படங்களில் என் பாடலுக்கு டி எம் எஸ் பாடினால்தான்
அது நான் பாடுவதாக நம் ரசிகர்கள் எண்னுவார்கள் !
அப்படி டி எம் எஸ் பாடாமல் வேறு ஒருவரை வைத்து பாடினால்,
படத்தைப் பார்க்கும் போது அந்த பாடலை நான் பாடுவதாகவே
ரசிகர்கள் நினைக்கமாட்டார்கள் , மாறாக அந்த பாடகர் பாடுவதாகவே
ரசிகர்கள் நினைப்பார்கள் ! "
சொன்னவர் நடிகர் திலகம் !
" ஒரு நாளிலே உறவானதே ! "
டி எம் எஸ் - சுசீலா பாடிய ' சிவந்த மண் ' படப் பாடலை மெல்லிசை
மன்னர் முதலில் சுசீலாவுடன் பாடவைத்த பாடகர் :
பால முரளி கிருஷ்ணா !
மேற்கண்ட பாடகர் பாடிய பாடலைக் கேட்டுத்தான் நடிகர் திலகம்
மேற்கண்ட வசனங்களை மெல்லிசை மன்னரிடம் நடிகர் திலகம்
சொன்னாராம் !
மெல்லிசை மன்னர் ரொம்ப ரொம்ப கடுப்பாகித்தான் பால முரளி
கிருஷ்ணாவை நீக்கி விட்டு டி எம் எஸ் வைத்து பாடவைத்தாராம் !
" சர்த்தான் ஸ்வாமி ! அந்த பாடல் ' சிவந்த மண் ' படம் - 1970
வெளிய்யீடு ! ' சாந்தி ' படம் - 1965 படம் தானே ! "
என்கிறீர்களா ?
சொல்றேன் !
" சபாஷ் மீனா " படம் . சந்திரபாபு அந்த படத்தில் இரட்டை வேடங்களில்
பின்னிப் ' பெடல் ' எடுத்துக்கொண்டிருந்தார்..... சிவாஜி கணேசனுக்கு
அந்த படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரையும் கொடுக்கும்
சந்தர்ப்பம் இல்லை !
இதனை இந்த படத்தின் இசையமைப்பாளரிடம் ( டி . சலபதி ராவ் )
சொல்லிப் புலம்பினார்,
நடிகர் திலகம் !
" இந்த படத்தில் உங்களுக்கு பேர் வாங்கித் தரும் அளவுக்கு ஓர்
அழகான ' டூயட் ' பாடலைத் தரப் போகிறேன், ஆனால் பாடலைப்
பாடப் போகிறவர் டி எம் எஸ் இல்லை, வேறு பாடகரை தேர்வு செய்ய
நீங்கள் எனக்கு சுதந்திரம் தரவேண்டும், சம்மதமா ? "
சிவாஜியிடம் கேட்டவர் டி . சலபதி ராவ் !
" சரி ! "
வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டினார் நடிகர் திலகம் !
அந்த பாடல்தான் :
" காணா இன்பம் கனிந்தது ஏனோ ! "
சுசீலாவுடன் சிவாஜிக்கு குரல் கொடுத்த பாடகர் :
டி . ஏ. மோதி !
பாடல் சூபர் ஹிட் !
இன்னொன்று :
" குங்குமம் " படத்தில் " சின்னஞ்சிறிய வண்னப் பறவை எண்ணத்தை
சொல்லுதம்மா ! "
பாடல் ! இந்த பாடலை எஸ். ஜானகியுடன் பாடியவர் :
சீர்காழி கோவிந்தர ராஜன் !
ஆனால் நடிகர் திலகம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை !
டி எம் எஸ் ஐ பாடச் சொல்லி இசையமைப்பாளர் கே . வி .
மகாதேவனிடம் சொல்லிவிட்டார் !
வேறு வழி !
சீர்காழி யை விலக்கி விட்டு டி எம் எஸ் ஐ பாட வைத்தார்கள் !
சீர்காழிக்கு , சிவாஜி மேல் செம கடுப்பு !
" ஐயா ! நீங்கள் எல்லோருக்கும் உணவு பறிமாருங்கள் !
ஆனால் எச்சில் உணவைப் பறிமாற வேண்டாம் ! "
நடிகர் திலகத்திடம் , சீர்காழியார் சொன்ன வார்த்தை !
நடிகர் திலகம் அவரை சமாதானப் படுத்த பெரும்
சிரமப் பட்டாராம் !
' கதை ' இப்படி இருக்க , மெல்லிசை மன்னர்கள் எப்படி
டி எம் எஸ் ஐ மாற்ற துணிவார்கள் !
அழகான, இனிய பியோனா இசையுடன் .....வேகமாகவும்
இல்லாமலும், அதே சமயத்தில் மிகவும் மந்தமான கதியில்
இல்லாமலும்......துன்பமான பாடலும் இல்லாமலும் அதே சமயத்தில்
சோகம் மற்றும் தத்துவப் பாடலும் ஆக இல்லாமலும்,
பாடகர் சிரிக்காமலும் , அழாமலும் .....அதே சமயத்தில் ரசிகர்கள்
' டம் ' அடிக்க தியேடரை விட்டு வெளியே போகாமலும்....
மிகுந்த ' மெலடி' வுடன் பாடலை மிகவும் நேர்த்திவுடன்
இசையமைத்தார்கள் !
இந்த பாடல் இன்றும் வாழ்கிறது !
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
' யார் இந்த நிலவு ! '
பாடலைப் பாடிய
டி எம் எஸ் !
பாடலைப் பாடிய
டி எம் எஸ் !
சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ
எனக்குத் தெரியாது.....
டி எம் எஸ் முதலில் திரைப்படப் பாடல்களை பாட வரும் போது
அவர் ' காமடி ' - நகைச் சுவை பாடல்களை மட்டும் பாடுவதறு
அழைத்தார்களாம் !
பின்னர் " தூக்கு தூக்கி " படம் மூலமாக கிராமியப் பாடல்களைப்
பாடுவதில் வல்லவர் என்று அறியப்பட்டார் !
அப்புறம் ?
" அம்பிகாதி " படம் மூலம் டி எம் எஸ் மிகச் சிறந்த கர்நாடக இசைப்
பாடகர் என்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டார் !
இந்த நிலையில் " பாவ மன்னிப்பு " படத்தில் " வந்த நாள் முதல் "
பாடலைப் பாட யாரைப் போட்டு பாடவைக்கலாம் என்று மெல்லிசை
மன்னர்கள் மண்டையை போட்டு குடைந்து கொண்டார்கள் !
முதலில் ஜி. கே. வெங்கடேஷ் ஐ வைத்துப் பாட வைத்தார்கள் !
" சரி , இந்த ஆள் நம்ம சிஷ்யன் , படத்தில் சோகப் பாடலுக்கு
இவர் பாடியதை வைத்துக் கொள்ளலாம், ஆனால்
குழந்தையை சைக்கிளில் வைத்து சிவாஜி பாடும் பாட்டை
யாரை வைத்துப் பாட வைப்பது ? "
மீண்டும் மண்டை + குடைச்சல் + கொண்டார்கள் !
பின்னர் வந்தார் டி . ஏ . மோதி !
பாடினால்....' வந்த நாள் முதல் '....
" ச்....ச் ... செ....ச் " - அத்தான் " உச் " கொட்டினார்கள் அனைவரும் !
" அண்ணே ! நீங்க யார் யாரையோ வைத்து பாட வைக்கிறீர்கள் !
எனக்கு இந்த பாடலைப் பாடுவதற்கு 'சான்ஸ்' கொடுங்கள் !
ஊதித் தள்லிவிடுகிறேன் ! "
சொன்னவர் டி எம் எஸ் - மெல்லிசை மன்னரிடம் !
" ஐயா ! இந்த " வந்த நாள் முதல் " பாட்டு மேற்கத்திய பாணி !
இது உங்களுக்கு பாட வருமா என்று எங்களுக்கு தயக்கம்.....
அத்தான்.... ! "
சற்று தடுமாற்றத்துடன் டி எம் எஸ் விடம் சொன்னார் மெல்லிசை
மன்னர் !
" ' சான்ஸ்' ஐ எனக்கு கொடுத்துப் பாருங்கள் , அண்ணே ! "
---- டி எம் எஸ் !
டி எம் எஸ் பாடினார் !
" வந்த நாள் முதல் ",........... !
பாடல் சூபர் ஹிட் !
டி எம் எஸ் ஆவர்களின் புகழ் இப்படி பரவி இருக்க ...
" யார் இந்த நிலவு " பாடலை டி எம் எஸ் தவிர வேறு எவர்
நன்றாக பாடியிருக்க முடியும்...
சொல்லுங்கய்யா !
தொடரும் ....
எம்கே ஆர் சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
டாக்டர் ஐயா, உங்களது இந்த தொகுப்பு நன்றாகவே சூசூசூசூடு பிடிகிறது, படித்து முடித்து, பதிவும் செய்துக் கொண்டேன். மிக்க நன்றி டாக்டர் ஐயா. அருமையான இத்தொடரை தொடருங்கள்.
- Sponsored content
Page 10 of 26 • 1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 26